COD - பாகம் 3 கேள்விகளும் பதில்களும் COD# 12 59-12-23 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா 1. பிரசங்கிப்பதற்கு எதாவது உங்களிடம் உள்ளதா? (யாரோ ஒருவர் “இல்லை ஐயா'' என்கிறார்- ஆசி) அங்கே சகோதரன் பீலர் அவர்களைக் குறித்தென்ன? (“அவரைக் குறித்து எனக்குத் தெரியாது'') சகோதரன் பீலர், இன்றிரவிற்கான செய்தியை நீங்கள் ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்களா? (சகோதரன் பீலர், ''இல்லை ஐயா” என்கிறார்) எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாக உள்ளது. இன்னும் சில கேள்விகள் என்னிடமாக உள்ளன. அவைகள் தாமே. இச்சகோதரர்களில் யாராவதொருவர் பிரசங்கிக்கச் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இப்பொழுது, மெய்சிலிர்ந்து போகாதீர்கள். இது ஒரு... அல்ல. இது ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்படவிருக்கின்ற சில ஜெப துணிகள். இவை ஜெபத்துணிகளாக வெட்டப்படவிருக்கின்றன, இதற்கும் சில உறைகள் நிறைய உள்ளவற்றிக்கும் நான் ஜெபம் ஏறெடுக்க வேண்டுமென அவர்கள் கூறினர். இவை எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று நான் எண்ணினேன். நான் ஆப்பிரிக்காவிற்கு சென்றடையும் முன்னர் இவையெல்லாம் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். இந்த பெரிய துணியில் எவ்வளவு ஜெபத்துணிகள் வெட்டப்பட்டு வருமென்று உங்களுக்கு தெரியுமா, ஆயிரக்கணக்கான துணிகள். முன்பொரு நாளில் சகோதரன் ஃபிரட் ஒரு சிறிய பையில் 800 துணிகள் கொண்டு வந்தார். அப்படியானால் இந்த உறைகளில் எவ்வளவு வருமென்று நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஆகவே நாம். சிறிது நேரம், நாம் இதன் பேரில் ஜெபிக்கலாம். 2. இப்பொழுது, எனக்கு சிறிது தொண்டை கரகரப்பாக உள்ளது, ஆனால் என்னால் முடிந்த வரை சிறந்த அளவில் இந்த கேள்விகளின் சிலவற்றிற்கு பதிலளிக்க நான் திரும்ப வருவேன் என்று நான் கூறியிருந்தேன். ஆகவே இப்பொழுது, எப்பொழுதுமே இந்த எழுப்புதல்களானது வருகையில், ஒரு சிறு அசைவை அது ஆரம்பித்து விடுகிறது. ஆகவே இதுவும் சபையோடு பொருந்தும் என்று எண்ணினேன்- விரும்புகிறேன், ஏனெனில் சபை புரிந்து கொள்ளாத அளவிற்கு சில சமயங்களில் ஏதோ ஒன்று கூறப்பட்டிருக்கும். ஆகவே இப்பொழுது உங்களுடைய சொந்த கேள்வியை நீங்களே எழுதத்தக்கதாக உங்களுக்கு ஒரு வாய்ப்பை அவர்கள் அளித்துள்ளனர். என்னிடம் இருப்பவைகளை நான் உங்களுக்குத் தருகிறேன்; பிறகு அதைப் போன்று ஒன்று உங்களிடம் இருக்கிறதென்றால், நீங்கள் அதை எழுத வேண்டியிருக்காது. ஆகவே அவைகளில் ஒன்றானது: தயவுகூர்ந்து ரோமர் 7:25ஐ விளக்கவும். அடுத்தது: ஒரு நபர் தேவனுடன் மிக நெருங்கி அவன் பாவமே செய்யாத அளவிற்கு ஜீவிக்கலாம் என்று நீங்கள் கூறினீர்களே. உயிர்த்தெழுதலில் நாம் எந்த சாயலில் இருப்போம்? சகோதரன் பிரன்ஹாமே, நீர் போதித்த எல்லா கட்டளைகளையும் ஒரு நபர் பின்பற்றி விட்டு என்ன செய்ய வேண்டும்: பிறகு பரிசுத்த ஆவியைப் பெறுவது எப்படி? தயவு கூர்ந்து எபிரெயர் 6:4ஐ விளக்கி அதை எபிரெயர் 10:26 உடன் ஒப்பிடவும். பிறகு: உலகத்தோற்றத்திற்கு முன் முன்குறித்தல் என்பதற்கு அர்த்தம் என்ன; அதைப் போன்ற ஒன்றை வேதாகமத்தில் எங்கேயிருந்து நீங்கள் எடுக்கிறீர்கள்? 3. ஆகவே சகோதரி மெக்... இல்லை, அது - அது ஒரு ஜெப விண்ணப்பமாகும். 4. இப்பொழுது, இன்றிரவு நமக்கிருக்கும் கேள்விகள் இவை தாம். இங்கே சிறிது ஆரம்ப நிலையாக நாங்கள் பதிலளிக்கையில் உங்களிடம் வேறு கேள்வி இருந்தால், நல்லது, நீங்கள் அதை எடுத்து வரலாம், நாம் சற்று முயற்சி செய்வோம்.... இப்பொழுது, இங்கே சபையின் சிந்தையில் எந்த காரியத்தைக் குறித்தாவது ஒரு கேள்வி இருக்குமானால், நாங்கள் கொண்டிருப்பதைக் குறித்தும் இருந்தால், எங்களுக்குத் தெரிந்த வரையில் சிறந்த முறையில் உங்களுக்கு உதவ எங்களுக்கு விருப்பம். பாருங்கள்-? 5. ஆகவே நீங்கள் எப்பொழுதுமே நினைவில் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புவதென்னவெனில், நான் கூறுவது தான் அழுத்தமான சத்தியம் என்று நான் சொல்வதில்லை. அது நான் அறிந்துள்ள மிகச்சிறந்த அழுத்தமான சத்தியமாய் இருக்கும்படியான ஒன்றாகும். நான் - மற்ற மனிதரைப்போல நானும் தவறாய் இருக்கக்கூடும். ஆனால் - சகோதரன் ஜாக்சன்- சரியானது என்று நான் சிந்திக்கும் விதத்தில் அதை விளக்கிக் கூறுகின்றேன். (நீங்கள் பாருங்கள்?) சகோ. மைக், அது வேதத்திலுள்ளபடி நான் பார்த்து ... இவைகளை நான் படிக்கையில், நான் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வதில்லை. நான் - அதை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையில், வேத வாயிலாக அதை முழுமையாகச் கொண்டு வருகிறேன். 6. அப்பொழுது, நீங்கள் அந்த பொருளை நீங்கள் விளக்கலாம். ஆனால் இதில் இருக்கின்ற எல்லாவற்றோடும், வேத வசனம் எல்லாவற்றோடும் அது முழுவதுமாக பொருந்தவில்லையெனில், எப்படியிருந்தாலும் சரி இது தவறாகத் தான் இருக்கும். உங்களுக்கு புரிகின்றதா? ஆகவே வேத வசனங்கள் எல்லாமும் சரியாக வைக்கப்படுமானால் அது சரியாக ஒன்றோடு ஒன்று பொருந்தும், இல்லையெனில் அது ஒரு புதிர்போன்றிருக்கும். நான் அப்படி கூற வரவில்லை... நான் தவறாகக் கூறுவேனானால் தேவன் என்னை மன்னிப்பாராக. வேதாகமம் என்பது ஒரு புதிர் போன்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. அது... அது எல்லாம் கூறாக உடைக்கப்பட்டு ஒரு பெட்டியில் கலந்து வைக்கப்பட்ட ஒன்றாகும், அதை சரியாக ஒன்று கூட்டி சேர்க்க பரிசுத்த ஆவியானவரால் தான் முடியும். பாருங்கள்? ஆகவே - ஆகவே நம்மால் அதைச் செய்யமுடியாது. இப்பொழுது, வேதாகமத்திற்கு 969 விதமான வியாக்கியானங்கள் கிடையாது, ஏனெனில் வேதவசனமானது சுய விளக்கத்திற்குரிய ஒன்றல்ல என்று வேதம் கூறுகின்றது. அது எழுதப்பட்ட விதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் நம்புகிறோம் அது... (சகோதரன் பாட், உமக்கு நன்றி). நாம்... வேதாகமத்தில் எவ்விதமாக எழுதப்பட்டு உள்ளதோ அதே விதமாகத்தான் அது இருக்க வேண்டும்; அதே விதமாகவே தான் நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதைப் போன்றே. காரியத்தை இங்கே அது கூறுகிறது. பாருங்கள், நாம் - நாம் வேத வசனமானது தனக்குத்தானே இங்கே பதிலளித்துக் கொள்ளவும், தனக்குத் தானே இங்கே பதிலளித்துக் கொள்ளும் விதத்திலே நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், ஒவ்வொரு வசனமும் சரியாக அதனுடைய இடத்தைச் சென்றடைந்து எல்லாம் வேதாகமத்தை ஒரு சேர ஒன்றாக ஆக்க வேண்டும். 7. ஆகவே இப்பொழுது, நான் எண்ணினது ஒருக்கால்... இன்றிரவு நான் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்துள்ளோம் என்ற தலைப்பில் பேசுவேன் என்று கூறியிருந்தேன்; ஆனால் அதை பிரசங்கம் செய்ய எனக்கு போதுமான அளவிற்கு பேச முடியவில்லை. ஒரு நாள் இரவு இங்கே எனக்கு உடல் வெப்பநிலை அதிகமானது, அப்பொழுது நான் வெளியே சென்றேன். நான் காரில் உட்கார்ந்த போது எனக்கு மிகவுமாக வெப்பம் அதிகரித்தது, உடல் வெப்பமானது அப்படியே வாய் வழியாக வெளியே வந்தது. நான் காரின் ஜன்னலை கீழறக்கி வீட்டிற்குச் சென்றேன். பிறகு அது ஒரு வியாழன் அல்லது வெள்ளி இரவு என்று நான் நினைக்கிறேன். அடுத்த இரவே எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாகத் துவங்கினது, ஒரு விதமான... ஓ, அது.... எனக்கு, வியாதியில்லை, காய்ச்சல் இல்லை, பெலவீனமில்லை, ஜலதோஷம் இல்லை, ஆனால் அது மிக கடினமாக பிரசங்கித்ததினால் தொண்டை சேதமடைந்து குரல்வளை அழற்சி போன்று உண்டாகி, பிறகு - சளி பிடித்துக் கொண்டது. ஆனால் அது இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாளில் ஒருக்கால் ஞாயிற்றுக்கிழமைக்குள் சரியாகி விடும். சகோதரனுக்கு உதவி செய்யத்தக்கதாக மறுபடியுமாக நான் வருவேன். அவர் தன்னுடைய பிரசங்கத்தை முடித்த பிறகு, மீதமாக என்ன விடப்பட்டிருக்கின்றது என்று நான் தேடிப்பார்ப்பேன். 8. ஆகவே பிறகு- ஆகவே பிறகு சபையார் முழுவதுமாக பரிசுத்த ஆவியைப் பெற நான் விரும்புகிறேன். இப்பொழுது, எனது மருமகள் இங்கே அமர்ந்திருக்கிறாள். லாய்ஸ், இவள் என்னுடைய மருமகள் என்பதனால் அல்ல, இவள் இங்கிருக் கின்றாள் என்றல்ல, நான் அறிந்த பெண் பிள்ளைகளில் இவள் அருமையான பெண்களில் ஒருவளாவாள்; இவள் மிகச் சிறந்த ஒரு இளம் பெண்ணாவாள். இவளுடைய பின்னணியானது, இவள் பெரிய காரியங்களிலிருந்து வெளியே வந்துள்ளாள், தேவனை வழிபடாத ஒரு குடும்பத்திலிருந்து இவள் வெளியே வந்தாள். அவள் வெளியே வரவேண்டியிருந்தது, அதற்காக இப்பிள்ளையின் நிலையைக் கண்டு வருத்தப்படுகிறேன். ஆகவே இப்பொழுது, இவள் பரிசுத்த ஆவியை பெறும்படிக்கு காத்திருக்கிறாள், பரிசுத்த ஆவி வேண்டுமென ஜெபித்து உபவாசித்துக் கொண்டு இருந்தாள், இவளால் நிற்க்கக்கூட முடியாத அளவிற்கு உபவாசித்திருந்தாள். 9. என் சகோதரி டோலரேஸ், அவள் "பில், என்னால்... சபையானது - சபையில் வல்லமை இருந்த போது, நான் அப்படியே பறந்து விடுவது போல எனக்கு இருந்தது. அப்பொழுது, எல்லோரும் - பரிசுத்த ஆவியானது மக்களின் மீது விழ ஆரம்பித்த போது, நான் அங்கே உட்கார்ந்து சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன்” என்றாள். பாருங்கள்? நல்லது, பாருங்கள், அதைக் குறித்து அந்த கேள்வியானது இங்கே இருக்கின்றது. ஆதலால் சபை பெற்றுக் கொள்ளத்தக்கதாக அது ஒருக்கால் உதவியாக இருக்கும் என்றெண்ணினேன். ஆகவே இப்பொழுது, புதன் இரவு ஜெப கூட்டத்தை வேறு விதமாக மாற்றிப் போட எனக்கு விருப்பமில்லை, ஆனால் சபையானது கட்டாயமாக இந்தக் காரியங்களை முழுவதுமாக புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்று நான் விரும்புகிறேன் (உங்களுக்கு புரிகின்றதா?), அதற்கு முன்னர்... 10. ஞாயிற்றுக்கிழமையன்று நான் இங்கே சபையின் பின்புறத்தில் இங்கே சபையின் பின்புறத்தில் ஒரு மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு மருத்துவர் ஆவார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக (தேவனுடைய சபை ஸ்தாபனத்தில் தலைமை அலுவலகம் எங்குள்ளது-?) அவர் மஸ்ஸோரியிலுள்ள, ஸ்பிரிங்ஃபீல்ட் இடத்திலிருந்து இவ்வளவு தூரமாக காரோட்டி வந்தார். அவர் கூறினார், "சகோதரன் பிரன்ஹாம்...''(இப்பொழுது அந்த ஸ்தாபனத்தின் தலைமை இடத்திலிருந்து வருபவர்.) அவர் ''என்னுடைய வாழ் நாள் முழுவதுமாக அதைக் குறித்து நான் புரியாமல் எனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். என் வாழ் நாளில் இப்பொழுது தான் முதன் முறையாக அதைக் குறித்து நான் தெளிவானேன்'' என்று கூறினார். அவர் ஒரு மருத்துவர், அங்கே பின்புறத்தில் என் அறையில் என்னை சந்தித்தார். 11. ஆகவே - ஆகவே அங்கே சகோதரன் மெர்சர் மற்றும் சகோதரன் ஜீன் கோட் ஒலி நாடாக்களுடன்... (கூட்டத்தில் நல்ல பயனடைந்ததாக) சகோதரன் மெர்சர் இப்பொழுது தான் கூறினார் - அந்த கூட்டத்தில் நான் அதை விவரித்த போது பரிசுத்த ஆவியானவர் கூட்டத்திற்குள் வந்து தம்மைத்தாமே பிரித்து ஊற்றினார், நம்முடைய ஜனங்களின் மத்தியில் தேவன், தம்மைத் தாமே பகிர்ந்தளித்து கொடுத்தல். அதைத்தான் அது செய்கின்றது. ஆகவே அப்படியானால், தேவனுடைய மக்கள் மறுபடியுமாக ஒன்று சேர ஆரம்பிக்கையில், அங்கே ஒற்றுமை உண்டு, அங்கே வல்லமை இருக்கின்றது. பாருங்கள்? தேவன் எப்பொழுதெல்லாம் மக்கள் முழுவதுமாக ஒன்று சேரச் செய்கின்றாரோ, அப்பொழுது உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அதை ஒன்று சேர்க்கத் துவங்கும் போது எடுக்கப்படுதலின் நேரமாக அது இருக்கும், அவர்கள் ஒரு சிறு கூட்டமாகத்தான் இருப்பார்கள், ஆனால், ஒரு மகத்தான ஒன்றுகூடுதல் ஒன்று இருக்கும். 12. இப்பொழுது, அனுப்பப்பட்டுள்ள இந்த ஜெபத் துணிகள், சுகமளித்தலின் சத்தம்... கர்த்தருக்கு சித்தமானால், வருட முதலில், நான் சரியாக உடனே, நான் ஜமாய்க்கா வில்லுள்ள, கிங்ஸ்டன் நகரிற்கு சென்று, அங்கிருந்து ஹாய்தி தீவிற்கு சென்று, பிறகு அங்கிருந்து... ஹாய்தியின் ஜனாதிபதி தங்கள் முழு இராணுவப் பாதுகாப்பை அளிப்பதாக கூறி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்கே ஒரு கலகம் ஏற்பட்டிருக் கின்றது. அது என்னவாயிருந்தாலும் சரி, கடந்த ஆண்டு அவர் சான் ஜீவானில் இருந்த போது அவர் கேட்ட, இந்த விதமான ஊழியத்துடன் நாம் அவரிடம் வர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய நாட்டைக் காப்பாற்ற இந்த ஒரே ஓரு காரியம் தான் உண்டு என்று அவர் எண்ணினார். பாருங்கள்? 13. இப்பொழுது கத்தோலிக்க நண்பர் யாராவது இங்கே அமர்ந்து இருப்பாரானால், உங்களை புண்படுத்தவோ அல்லது ஏதாவது செய்யவோ நான் இதைக் கூறவில்லை; அந்த விதமாகக் கூற நான் விழையவில்லை. ஆனால் ஹாய்தியை கத்தோலிக்க சபையானது தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது (பாருங்கள்?); ஆகவே அதை காப்பாற்றக் கூடிய ஒரேயொரு காரியம் என்ன என்றால், சரியாக இப்பொழுதே ஒரு பிராடெஸ்டெண்டு, எழுப்புதல் அவசியம். குலுக்குகின்ற எழுப்புதலாகும். பாருங்கள்? ஆகவே அது உண்மையாகவே அருமையானதாகும், நான் அதை மெச்சுகிறேன். ஆகவே கிறிஸ்துமஸ் வாரத்தின் போதும் இன்னும் சில நாட்களில், நாளை கழித்து, நான் உபவாசம் செய்து ஜெபித்து எந்த விதத்தில் கர்த்தர் நம்மை நடத்தப் போகிறார் என்று பார்க்கப் போவதாக நான் அவரிடம் கூறினேன். 14. பிறகு தென் அமெரிக்கா... அதற்கு பிறகு நார்வே தேசத்திற்கு நிச்சயமாக செல்ல வேண்டும் என்ற நடத்தப்படுதலை என்னால் உணரமுடிகிறது. இந்த வருடம் நான் நார்வே செல்ல வேண்டும் என்று நிச்சயமாகவே நான் நடத்தப்படுகிறேன், பிறகு ஆப்பிரிக்காவிற்கும் கூட செல்ல வேண்டும். ஆகவே இவை சிறு ரிப்பன் துண்டுகளக வெட்டப்பட்டு கூட்டத்திற்கு முன்னால் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பபடவிருக்கின்றன. அது எத்தனை ஜனங்கள்... இங்கு வருவதை நீங்கள் கேள்விப்படுகையில் எத்தனைப் பேர்கள் ஜெபத் துணிகளுக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு பொதுவான ஒரு எண்ணிக்கையை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும், (பாருங்கள்?) மறுபடியுமாக தொடர்பை கொண்டிருத்தல். ஆகவே ஏற்கெனவே வெட்டப்பட்டு வெளியே பல மக்களுக்கு அனுப்பயிருக்கின்ற துணிகள் இவை. 15. இந்த மகத்தான ஜீவனுள்ள தேவனுடைய சபையோடு சேர்ந்து, சற்று நமது தலைகளை இப்பொழுது தாழ்த்துவோமாக. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் தேவன் இந்த துணிகளை அபிஷேகிக்கத்தக்கதாக ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது முதலாவதாக "பவுலினுடைய சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களையும் அல்லது கச்சைகளையும் கொண்டு வந்து, அவைகளை வியாதியஸ்தர் மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப்புறப்பட்டன. அவர்கள் சுகம் அடைந்தனர்.'' 16. கர்த்தாவே, இங்கே இவ்வளவு வருடங்களாக இருக்கின்ற இந்த சிறிய மேஜை- சுவிசேஷமானது தொடர்ந்து இதனைக் கடந்து சென்றது, எவ்வளவாக எங்களை மிகவுமாக நீர் ஆசீர்வதித்திருக்கிறீர்; மேலும்... இந்த சிறிய மேஜைக்கு கண்கள் இருந்து மற்றும் இதனால் பேசக்கூடுமானால், சரியாக இதன் முன்பாக நிகழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான மகத்தான அற்புதங்களைக் குறித்து முடமானோர், ஊனமுற்றவர், குருடர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுகமடைந்ததைக் குறித்து இது சொல்லும்: ஜீவனுள்ள தேவனுடைய வல்லமைகள் இந்த சிறிய கட்டிடத்திற்குள் தெரியப்பட்டிருக்கின்றது. பிதாவாகிய தேவனே, இந்த காரியங்களுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். 17. இப்பொழுது, சபையானது உம்மை ஆராதிக்க இன்றிரவு ஒன்றாகக் கூடியுள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத்தக்கதாக நாங்களும் வந்துள்ளோம். இம்மக்களுடைய இருதயங்களும் உத்தமுமான ஒன்றாகும். இந்த காரியங்கள் அவர்கள் மனதில் புரியாத புதிராக உள்ளது. கர்த்தாவே, ஏதாவதொரு காரியம் எங்களை திகைக்க வைக்குமானால், ஒரு கேள்வியானது எவ்வளவு காலமாக இருக்கின்றதோ, அதுவரை நாங்கள் விசுவாசத்தை கொண்டிருக்க முடியாது என்பதை நாங்கள் உணருகிறோம். ஆதலால் எங்களுக்கு எந்த கேள்விகளும் வேண்டாம். 18. கர்த்தாவே, எங்கள் மக்கள் மத்தியிலும் இந்த சபையின் மத்தியிலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் தேவையை நாங்கள் கேட்கிறோம். ஆகவே அவர்களுடைய மனதில் எந்த ஒரு கேள்விகளும் இல்லாமலிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அவையெல்லாம் தெளிவாக்கப்பட வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம், ஆதலால் அது வருகையில் அதென்னவென்று அவர்கள் அறிந்து கொண்டு, அது அவர்களுக்குத் தான் என்று அறிந்து கொள்வார்கள். 19. ஆகவே பிறகு, கடலைக் கடந்து, அங்கேயுள்ள அந்த இருண்ட காடுகளுக்குள் முரசுகள் (Drums) அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், மரத்தின் கீழாக மற்றும் எல்லா இடங்களிலும் குஷ்டரோகிகள் படுத்துக்கிடப்பார்கள், ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும், அவர்கள் கால்கள் வெட்டப்பட்டிருக்கும், அவர்களுடைய காதுகள் மற்றும் முகங்கள் குஷ்டரோகத்தினால் தின்னப்பட்டிருக்கும். கர்த்தாவே, அந்த கூட்டத்தினரைச் சேரும் முன்னரே துர்நாற்றம் வரும். அந்த பரிதாபமான சிறிய பிள்ளை உணவு, ஆடைகள் இல்லாமல்... கர்த்தாவே, அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையானது அவர்களில் அநேகரை சுகமாக்கின பிறகு அவர்கள் ஊழியத்தை விசுவாசிக்கின்றனர். அங்கே உள்ள அந்த பயங்கரமான சூழ்நிலையில், மற்றும் மந்திரவாத சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பரிதாபத்திற்குரிய, சோர்வுற்ற மக்களின் நிலையை அறிந்தவனாக, நான் ஆப்பிரிக்காவை விட்ட நாள் முதற்கொண்டு என் ஆவியில் அமைதியில்லாதவனாக நானிருக்கிறேன். அந்த மந்திரவாதி, தன்னுடைய விரல்களில் மனித எலும்புகளை வைத்து அடித்து தீய ஆவிகளை அழைத்துக் கொண்டிருப்பான், ஓ, இங்கே அமெரிக்காவில் அருமையான சபைகள், பெரிய இடங்களைப் பார்க்கையில், அந்த இடங்கள் எப்படிப்பட்டவையாயிருக்கின்றன. ஆகவே, தேவனே, அந்த தேவையுள்ள பரிதாபத்திற்குரிய ஜனங்கள், உம்மை அறிந்துள்ளதாக வரும் யாரோ ஒருவர் பேசும் சில வார்த்தைகளை கேட்க முயற்சித்துக் கொண்டிருக்கிற அவர்கள் அங்கேயே படுத்து மரித்துப்போவர். அப்பொழுது செய்தியும் மற்றும் கடிதங்கள் ஆப்பிரிக்கா முழுவதுமாக வேகமாக பரவிக் கொண்டு செல்கையில் கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்ற. அக்கினிகள் மறுபடியுமாக கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து உள்ளது போல காணப்படுகிறது. 20. ஒரு மகத்தான சபையாக காணப்பட்ட அங்கேயிருந்த உம்முடைய மகத்தான சபை அநேக துண்டுகளாக உடைந்து போனது, ஓ தேவனே, குளிர்ந்து போய் சடங்காச்சாரமாக இருக்கின்றதற்குள் ஒரு பிரிவு சென்று விட்டது, மற்றவைகள் சத்தியத்தையும் ஆவியானவரையும் பற்றிக் கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன. ஆகவே இப்பொழுது, ஆயிரக்கணக்கானோர் அனுப்பிக் கொண்டிடு இக்கின்றனர்; நான் ஜெபம் ஏறெடுத்த ஜெபத் துணிகளை சீக்கிரமாகக் கொடுக்க அவர்கள் கேட்கின்றனர். இந்த சிறிய உறைகளில் ஜெப விண்ணப்பங்களும் தேவையுள்ளோருக்காக அனுப்பப்பட இருக்கின்ற ஜெபத்துணிகளடங்கிய சிறு மூட்டைகள் உள்ளன. ஓ, வானங்களையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனே, இந்த மூட்டைகளில் உள்ள ஒவ்வொரு நூலையுங்கூட நீர் தாமே பரிசுத்தப் படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தினாலே உம்மிடம் ஜெபிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவி தாமே இந்த துணிகளின் ஒவ்வொரு நூலிலும் செல்லட்டும் கர்த்தாவே. இந்த துணி பிணியாளிகள் மற்றும் வியாதியஸ்தர் மீது வைக்கப்படுகையில் தீய ஆவிகள் தாமே அவர்களை விட்டுச் செல்வதாக. 21. அங்கே காடுகளுக்குள் இருக்கின்ற பிசாசையுங்கூட வழிபடுகின்ற அவர்கள் அநேகருக்கு இந்த துணிகள் செல்வதை நினைத்துப் பார்த்தால், தேவனே, அவன் நிற்கத்தக்கதாக ஒரு இடம் கூட அவனுக்கு இராமல் அவன் கூடாரங்களை விட்டு ஓடிவிடவும், அப்பொழுது அம்மக்கள் கர்த்தராகிய இயேசுவைக் குறித்த அறிதலுக்குள் அவர்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும் கர்த்தாவே, அவர்களுடைய வியாதிகள் சுகமாக்கப்படுவதாக, அவர்களுடைய பிரச்சனைகள் சரிசெய்யப்படுவதாக, தேவனுடைய வல்லமை தாமே முதன்மையான உயர்ந்த இடத்தைப் பெறுவதாக. பிதாவே, இதை அருளும். இந்த சரக்குகளின் ஒவ்வொரு தையலையும் ஒரே அளவைக் கூறாக நாங்கள் அனுப்புகிறோம். அக்கினியின் அநேகக் கூறுகள் இங்கே இன்றிரவு உள்ளது, கர்த்தாவே, இது யாரின் மீது வைக்கப்படுகிறதோ அந்த ஒவ்வொரு நபரும் சுகமாக்கப்படுவார்களாக என்று இதன் சார்பாக நாங்கள் ஒன்றாக எங்களுடைய ஜெபங்களை உம்மிடம் அனுப்புகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 22. இப்பொழுது, அங்கே பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா, இப்பொழுது இன்றிரவு அங்கே பின்புறமாக இருக்கிறவர்களுக்கு? அது அருமை ஆனது. இங்கே இன்னொரு சபையானது நமக்கு கிடைக்கும் போது நாம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம் என்று நினைக்கிறேன், ஏனெனில் இந்த சில காரியங்கள், உங்கள் சத்தத்தை மறைக்கின்றன. அதனால் உங்களால் கேட்க முடியாமல் போகின்றது. 23. இப்பொழுது, நான் மறுபடியுமாக உணர்கிறேன், இன்றிரவு நான் - நான்... சகோதரன் உட் - அதை நான் மறப்பதற்கு முன், - அந்த கைக்குட்டையை நான் வைத்து இருக்கிறேன். யாரோ ஒருவருக்காக ஒரு கைக்குட்டையை என்னிடம் நீங்கள் கொடுத்தீர்கள் அல்லவா? அல்லது அது நீங்கள் கொடுத்ததா? என் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள யாரோ ஒருவர் என்னிடம் ஒரு கைக்குட்டையை அளித்தார், கூட்டம் ஆரம்பித்த முதற்கொண்டு அதை நான் வைத்திருக்கிறேன். அதைக் கொடுத்தது யார் என்று எனக்குத் தெரியாது. ''இந்த கைக்குட்டையை சட்டைப் பையில் வைத்திருங்கள்” என்று கூறினது நீங்கள் தான் என நினைத்திருந்தேன். யாரோ... (இந்த கைக்குட்டையைக் குறித்து சகோதரன் நெவில் சகோதரன் பிரன்ஹாமிடம் விவரிக்கிறார்- ஆசி) அப்படியா? சகோதரன் ஜாக்சன், ஒருவருக்காக ஒரு கைக்குட்டையை நீங்கள் வைத்திருந்தீர்களா? இது தான். சரி. இது... நல்லது, சகோதரன் ஜாக்சன், உமக்கு அது விருப்பமானால் சரியாக இது இங்கே இருக்கும். ஆகவே இப்பொழுது, யாரோ ஒருவர் என்னிடம் கொடுத்து, ''அதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவும்'' என்று கூறினது எனக்குத் தெரியும். அப்பொழுது நான் அதை என்னுடைய கோட்டில் வைத்து அதைக் குறித்து மறந்து போனேன். 24. இப்பொழுது, அந்த... இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், என் தொண்டை சரியாயிருக்குமானால், ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவு ஒன்றில் கர்த்தருக்கு சித்தமானால் உங்களுக்கு நான் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் செய்தியாக: அந்த தவறாத அடையாளம் என்பதின் பேரில் நான் பேச விரும்புகிறேன். சரி தானே-? நான் இன்னுமாக... நான் அதை ஞாயிறு காலை என்று தீர்மானித்திருந்தேன், அப்பொழுது ஏதோ ஒன்று என் இருதயத்தில் கொழுந்து விட்டெரியச் செய்தது. அதை நான் மறுபடியுமாக செய்தியோடு கூட எடுக்க இயலாதிருந்தது. ஆகவே அதை நான் கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவன்று எடுக்க விரும்புகிறேன். ஆகவே சகோதரன் நெவிலும் நானும் அந்த நேரத்தில் ஒன்றாக இருப்போம். 25. இப்பொழுது, சகோதரன் நெவில் கூறின விதமாக, உங்களது வாழ்த்து அட்டைகள் மற்றும் கிறிஸ்துமஸ் நினைவு கூறுதலுக்காக நானும் கூட உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். சகோதரன் மற்றும் சகோதரி ஸ்பென்சர், உங்களுடைய வாழ்த்து அட்டைகள் எனக்குக் கிடைத்தது. இங்கே சுற்றும் முற்றும் உள்ளவர்கள் எனக்கு அனுப்பின வாழ்த்து செய்தி அட்டைகள் மற்றும் எனக்கு அனுப்பின வெகுமதிகள் மற்றும் காரியங்களை, நான் மெச்சுகிறேன். நிச்சயமாக அதை நாங்கள் மெச்சுகிறோம். என் மனைவியினிடமிருந்தும், மற்றும் நான் நாங்கள்- மற்றும் பிள்ளைகளிடமிருந்து, நாங்கள் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதியை எங்களால் அனுப்பக் கூடுமானால் அது எங்களுக்கு பிரியம் தான், ஆனால் ஒரு பிரசங்கிக்கு அவ்விதம் செய்வது ஒரு கடினமான ஒன்றாகும், அப்படித் தானே? நல்லது, ஒருக்கால் சுற்றும் முற்றும் உள்ளவர்களுக்கு செய்ய முடியலாம். ஆனால் அநேகர் உள்ளனர், என்னால் அதைச் செய்ய இயலாது. உங்களுக்கு புரிகின்றதா? என்னால்... கூடுமானால் சிறு பிள்ளைகளுக்கு, ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்றை செய்ய விருப்பம் தான், ஆனால் அது ஒரு ..... ஊழியக்காரர்களால் அவ்விதம் செய்ய இயலாது. பாருங்கள்? ஏனெனில் அநேகம் பேர்களுக்கு வாங்க வேண்டியுள்ளதால் அது இயலாத ஒன்றாகும். ஆனால் நாங்கள் எல்லாரும், நானும் மற்றவர்களும் கூட நிச்சயமாகவே நம்முடைய சபையாரை மெச்சுகிறோம். ஆகவே, இந்த வருடத்தில் நான் நினைப்பது என்னவென்றால் நீங்கள் செய்த மகத்தான காரியங்களில் ஒன்று, இங்கே உங்கள் மேய்ப்பர்களில் ஒருவனாகிய என் பேரில் நீங்கள் கொண்டுள்ள அன்பும் மற்றும் என்றும் மறையாத விசுவாசமும் தான். 26. என் அருமையான சகோதரனே, சகோதரன் நெவில், அது உங்களுக்கும் கூட பொருந்தும். சகோதரன் நெவில் எப்போதுமே அந்த மென்மையான ஆவியை உடையவராக ''இங்கே முன்னே வாரும் சகோதரன் பிரன்ஹாமே; இதோ பிரசங்க பீடம், இதை எடுத்துக்கொள்ளுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் உட்கார்ந்து கேட்கவே விரும்புகிறேன்” என்று கூறுவது போல... அது எனக்கு பிடிக்கும். சகோதரன் நெவில் கொண்டிருக்கின்ற அந்த தாழ்மையான, தன்னலமற்ற விதம் எனக்கு பிடித்தமான ஒன்று. 27. உங்கள் எல்லாருடைய விசுவாசம், மற்றும்... உங்களால் எனக்கு செய்ய இயலுகின்ற நன்மை என்னவென்றால், எனக்காக நீங்கள் ஜெபம் செய்வதேயாகும். இப்பொழுது பெரிய நிகழ்ச்சி நிரலானது ஆரம்பிக்கும் முன்னர் ஆங்காங்கே சில கூட்டங்களை நான் நடத்தப் போகிறேன். அவைகள் கிலாஸ்கோ, கெண்டக்கியைச் சுற்றிலும் நடத்தப்படவிருக்கிறது என்று நினைக்கிறேன். அங்கே ஒரு இரவு நடத்துவேன். ஒருக்கால் கெண்டக்கியிலுள்ள காம்பெல்ஸ்வில்லில் ஒரு நாள் இரவு நடத்துவேன். அங்கே கெண்டக்கியில் இன்னும் வேறு சில இடங்களில் வில்லோ ஷேட் இடத்தில் ஒரு இரவு இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில்.... அதே போன்று வரவிருக்கின்ற அந்த கூட்டங்களைக் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நான் ஊழியத்திற்கு செல்லும் வரைக்கும் சிறிய கூட்டங்களாக நடத்தப்படுகின்ற இவைகள் சரியாக தீர்மானிக்கப்பட்டவுடன் நான் உங்களுக்கு தெரியப்படுத்துவேன். 28. முன்னொரு இரவு தேவனிடம் புதிதாக, என்னைத் தானே மறுபடியுமாக அர்ப்பணித்தேன். ஆகவே தேவனுடைய உதவியால் மற்றும் தேவனுடைய கிருபையால் நான் மரிக்கும் வரைக்கும் ஆயுதம் தரித்திருக்கிறவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். பாருங்கள்-? அதை நான் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அதைச் செய்தேன். ஆகவே நான்... என்னால் இயலுகின்ற அளவிற்கு மேல் செல்வதால் சில சமயங்களில் எனக்கு களைப்பு உண்டாகிறது. இன்னுமாக என்னால் செல்ல முடியாத ஒரு கட்டத்திற்கு நான் வந்து விடுகிறேன். நீங்களெல்லாரும் அதை இங்கு மாத்திரமே காண்கிறீர்கள். ஆனால் அது அங்கே எப்படியாக இருக்கும் என்று நீங்கள் உணர்வதில்லை. ஒரு நகரத்திலிருந்துகூட, இல்லை; ஒரு பிரதேசத்திலிருந்து கூட, இல்லை; அமெரிக்காவில் கூட கிடையாது; ஆனால் உலகத்தில் (பாருங்கள்?), உலகம் முழுவதுமாக. பாருங்கள்? இன்றிரவு கூட அநேகர் தொடர்பு கொள்கின்றனர், நான் சந்தித்ததோ அல்லது தொடர்பு கொண்டதோ ஆயிரக்கணக்கானோர் மாத்திரமல்ல, இலட்ச... இலட்சகணக்கான மக்களுடன். பாருங்கள்? அவர்களில் எத்தனைப் பேர் வியாதியஸ்தராயிருந்தார்கள் என்பதைக் குறித்து நீங்கள் வியப்படைவீர்கள். பாருங்கள்? இன்னுமாக அவர்கள் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்; அது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்குகின்றது. 29. ஆகவே உங்களெல்லாருடைய ஜெபங்களையும் நான் மெச்சுகிறேன். தேவனுடைய ஒத்தாசையாலும் கிருபையாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அருமையான மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் இருப்பதாக. இது சாண்டா கிளாஸாகிய கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல, இது இயேசுவுக்குத் தான் என்னும் என் கருத்தை நினைவில் கொள்ளுங்கள். சரியா-? கிறிஸ்துமஸ் என்றால் ''கிறிஸ்து” என்பதே. நாங்கள் கடந்த இரவு பிரயாணம் செய்கையில், எல்லா வீடுகளும் மற்றவைகளும் ஜோடிக்கப் பட்டுருந்ததை பிள்ளைகளுக்கு காண்பித்தோம், அது அருமையாக இருந்தது. அப்பொழுது நான் நினைத்துக் கொண்டது, என் வீட்டின் மீது ஏதாவது எழுத வேண்டுமென்று விரும்பினால் அது: உங்கள் கிறிஸ்துமஸில் கிறிஸ்து இருப்பார் என நம்புகிறேன் என ஒரு செவ்வொளி விளக்கில் இருக்க வேண்டும் என்பதே. அது சரி. கிறிஸ்துமஸில் கிறிஸ்துவை வைத்தல். 30. இப்பொழுது, தேவனாகிய பிதாவே, கேள்விகளை இப்பொழுது நாங்கள் அணுகுகிறோம். நாங்கள் மிக மிக உத்தமமாக வருகிறோம். கர்த்தாவே, இந்த விலையேறப் பெற்ற மக்கள், தங்கள் இருதயங்களில் கொண்டிருந்த இந்த கேள்விகளை இங்கே வைத்துள்ளனர், ஒருக்கால் கட்டிடத்தில் இன்னும் அதிகமாக இருக்கலாம்; என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய அவர்கள் ஆவலுடன் உள்ளனர். பிதாவே, நான்- நான் ஒரு ஒன்றும் இயலாத ஒரு பதிலாக (substitute) உமக்காக இங்கிருக்கிறேன், உம்முடைய வார்த்தையை அறிந்து கொள்ள நீர் தாமே எனக்குதவுமாறு ஜெபிக்கிறேன், அது தாமே ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு திருப்திகரமான பங்கை கொண்டு வரும். இதை இப்பொழுது உம்முடைய கரங்களில் விடுகிறோம், உம்முடைய நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 31. இப்பொழுது இங்கே உள்ள சகோதரன் பாட் அவர்களின் கேள்வி மிக மிக அருமையான ஒன்றாகும். சகோதரன் பாட், இதன் பேரில் நான் அப்படியே பேச ஆரம்பித்து விடலாம். உங்களில் யாருக்காவது ஒரு கேள்வி இருக்குமானால், நீங்கள் அதை எழுதி இங்கே வைத்து விடுங்கள், அல்லது - அல்லது உங்களிடம் காகிதத் துண்டுகள் இல்லையனில் சகோ. பாட் அதை உங்களிடம் கொண்டு வருவார். என்னால் முடிந்த வரையில் சிறந்த விதத்தில் பதிலளிக்க எனக்கு மகிழ்ச்சி தான். இப்பொழுது, சகோதரன் பாட், இது ஒரு அருமையான கேள்வி. இது ஒரு நகைச் சுவையான கேள்வி போல இருக்கும், ஆனால் இது ஒரு கேள்வியாகும். 101. பன்றிக்குள் சென்ற அந்த ஆவிகள் இப்பொழுது எங்கே இருக்கின்றன? அந்த பித்து பிடித்த வெறியனிலிருந்து இயேசுவால் வெளியே விரட்டப்பட்டு அந்த நாளிலே பன்றிக் கூட்டத்திற்குள் சென்ற ஆவிகள் எங்கேயுள்ளன-? 32. நல்லது, சகோதரன் பாட், எனக்குத் தெரிந்த வரையில்... இப்பொழுது, நாம் பிசாசியலில் ஆரம்பிக்க உள்ளோம். இப்பொழுது, பிசாசியல் ஒரு மகத்தான காரியமாகும். (இப்பொழுது, உங்களில் சிலர் கடிகாரத்தை கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரே கேள்வியின் பேரில் நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதபடிக்கு பாருங்கள்). ஆனால் அந்த பிசாசின் வல்லமைகள், லேகியோன் என்றழைக்கப்பட்ட அந்த மனிதனில் இருந்த அந்த ஆவிகள். அது சரி தானே? அவனுடைய பெயர் லேகியோன். ஏனெனில் எபிரெய மொழியில் லேகியோன், என்பதற்கு 'அநேகம்'' என்று அர்த்தம். பாருங்கள்-? அந்த ஆவிகள் அநேகம் அங்கே இருந்தன. 33. அந்த அருமையான மனிதனுக்குள் இருந்த அந்த ஆவிகள் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவனாக ஆக்கியது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை கண்டிருந்தாலோ அல்லது அவர்களோடு ஏதாவது செய்திருந்தாலோ, அவர்களுடைய பலம் அதிக அதிகமாக இருப்பது தெரியும். ஏனெனில் அவர்கள் பிசாசினால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியமான மனிதனை அடக்க முயற்சித்திருப்பீர்களானால், ஓ, அவனை அடக்க அநேக பலசாலி மனிதர்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியம் பிடித்த மனிதருக்கு தங்கள் பலத்தைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு பலம் இருக்கும். 34. இப்பொழுது, ஒரு மனிதன் முடமாயிருந்து பரிசுத்த ஆவியானவர் அவர்களைதம் கட்டுக்குள் எடுத்துக் கொள்கையில் - ஒரு மனிதனுக்கு அவனுடைய மனித பலத்தை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக்க பிசாசானவனுக்கு அப்படிப்பட்ட ஒரு வல்லமை இருக்குமானால் - தேவனாலே ஒரு மனிதனுக்குள் எவ்வளவாக வல்லமையை வைக்க முடியும் என்றறிவீர்களா-? பாருங்கள்-? அவன் அநேக வருடங்களாக முடமாக்கப்பட்டு படுத்துக்கிடக்கையில் அவனை தேவ பலத்தில் நடக்க செய்வது, அவன் மீது வருகின்ற தேவ வல்லமையே. அவனுடைய எலும்புகள் நேராகின்றன; அவனுடைய கைகள் நேராகின்றன; அவன் ஒரு புதிதான வாலிப மனிதனைப் போன்று நடக்கிறான், ஏனெனில் பரிசுத்த ஆவியின் வல்லமை அவன் மீது இருப்பதால் தான். 35. இப்பொழுது, இவைகள் மிகவுமாக தீய ஆவிகளாக இருந்ததினால் அந்த மனிதனை அவர்கள் சங்கிலிகளினால் கட்ட வேண்டியதாயிருந்தது, ஆனால் அவனோ அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப் போடுவான். அவன் அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப் போட்டு விடுவான் என்று அவர்கள் கூறினர். அவனை எதைக் கொண்டும் கட்டிப் போட முடியவில்லை. அவனுடைய நிலையானது மிக மிக மோசமான ஒரு நிலையாயிருந்தது, ஏனெனில் அவனுக்குள் பிசாசுகளான லேகியோன் இருந்தது. அப்பொழுது அவன். இயேசு கடலைக் கடந்து கதரேனருடைய நாட்டுக்குள் வந்து கல்லறைகளின் வழியாக நடக்கத்துவங்கின போது. ஆகவே அவன் மிகவும் தீயவன் ஆவான், அந்த மனிதன் அல்ல (பாருங்கள்?), அந்த மனிதன் சரியாகத் தான் இருந்தான். 36. அந்த மனிதன் செய்ததல்ல. அவ்விதமாகக் காணப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் காண்பீர்களானால், அந்த மனிதன் தான் அவ்வாறு நடந்து கொள்ளுகிறான் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்; அவ்வாறு செய்வது அந்த மனிதனுக்குள் இருக் பிசாசு தான். இப்பொழுது, ஓரேகான் என்ற இடத்தில் அன்றொரு இரவில் என்னைக் கொல்ல மேடையின் மீது வந்த அந்த வெறிப் பிடித்த மனிதன். அந்த மனிதன், நான் - ஏறக்குறைய பத்தாயிரம் மக்களிற்கு முன்பாக அவன் என்னிடமாக வந்து என் முகத்தில் எச்சியைத் துப்பிக் கொண்டு "புல்லுக்குள் மறைந்து கிடக்கும் பாம்பு” என என்னை அழைத்து கொண்டிருந்த அந்த மனிதன், இல்லை, அது அதுவல்ல, அந்த மனிதன் அவ்வாறே செய்யவில்லை. என்னைப் போல அல்லது உங்களைப் போலவே, உணவு உண்டு, குடித்து உறங்கி, ஒருக்கால் ஒரு குடும்பத்துடன் இருந்து அன்பாயிருக்கின்ற ஒரு மனிதன் தான் அவன். ஆனால் அவனுக்குள்ளிருந்த அந்த பிசாசு தான் அதைச் செய்து கொண்டிருந்தது. புரிகின்றதா-? 37. ஒரு தவறான நோக்கத்தைக் கொண்டு ஒரு பிசாசை நீங்கள் வெளியே துரத்த முடியாது. அன்பைக் கொண்டு தான் அதை செய்ய முடியும். உலகத்தில் இருக்கின்ற எல்லா சக்தியைக் காட்டிலும் மிக வல்லமையுள்ள ஒரு சக்தி அன்பு தான். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால் பகைப்பது, வெறுப்பது எப்பொழுதுமே பிசாசின் காரியமாகும். பகைத்தல், வெறுத்தல் பிசாசினால் உண்டாகின்ற ஒன்று. மக்கள் யாரையாவது கடுமையாக வெறுத்தால், நினைவில் கொள்ளுங்கள், இழிவாகக் கருதுதல் அல்லது கடும் வெறுப்பை காண்பித்தால் அது ஒரு மோசமான பிசாசாகும். நீங்கள் அவ்வாறு செய்யவே கூடாது., 38. நீங்கள் நினைவு கொள்ளுங்கள் அந்த - அந்த... இயேசு தம்முடைய பிரசங்கத்தில் கூறினது, நீங்கள் ஜெபம் செய்கையில், ''எங்கள் பரலோகப் பிதாவே, '' .... அப்பொழுது அவர் கீழே வந்த போது, அவர், ''ஒவ்வொரு மனுஷனுடைய தப்பிதத்தை உன்னுடைய முழு இருதயத்துடனே நீ அவனுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பரம பிதா உங்கள் தப்பிதங்களில் இருந்து உங்களை மன்னியாதிருப்பார்'' என்று கூறினார். பாருங்கள்? நீங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. 39. ஆனால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற வல்லமையை பிசாசு உருவாக்கி (பாருங்கள்?) மேடையின் மீது ஓடச் செய்து என்னைக் கொல்லப் பார்த்தான், சரீரப்பி ரகாரமாக அந்த மனிதனால் செய்ய முடியும், அவன் அநேக மடங்கு பலம் வாய்ந்தவனாக... அவன் என்னை அப்படியே தன்னுடைய இரண்டு விரல்களால் அந்த பெல்ட்டை தூக்குவது போல் என்னை உயரத் தூக்கியிருக்கலாம், ஏனெனில் அவன் 260 அல்லது 270 பவுண்ட் எடையுள்ளவனாக இருந்தான்; அவன் ஆறறை அடி அல்லது ஏழு அடி உயரமிருந்தான், ஒரு மகத்தான பெரிய ஆள். அவன் அப்படியே... தெருவில் ஒரு பிரசங்கியை தன் கையின் முட்டியால் அடித்து கழுத்துப்பட்டை எலும்பையும் தாடையெலும்பையும் உடைத்து அந்த பிரசங்கியை காயப்படுத்தினான், அவர் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அவன் பிரசங்கிகளை வெறுத்தான். ஆகவே அப்பொழுது சரியாக அந்த இடத்திலேயே என்னைக் கொன்று போட ஓடி வந்தான். பாருங்கள்-? 40. இப்பொழுது, கதரேனருடைய நாட்டில் பன்றிக்குள் அனுப்பப்பட்ட இந்த ஆவிகளில் சில அந்த மனிதனுக்குள் இருந்தன. அப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய மக்களில் சிலர் இங்கே அந்த மனநலக் காப்பகத்தில், தங்கள் தலைகளை சிறு அறைகளிலும் மோதிக் கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள், பிசாசுகள் மரிக்காது. பிசாசுகள் எப்பொழுதும் வாழும், ஆனால் பிசாசுகள் கட்டாயம் மரிக்க வேண்டிய ஒரு சமயமானது இருக்கப்போகின்றது. அவைகள் முழுவதுமாக அடியோடு நிர்மூலம் ஆக்கப்படும். ஆனால் இப்பொழுது அவை உயிரோடிருந்து மானிடர்களில் அநேக சந்ததிகளாக கிரியை செய்து வருகின்றன. அவைகளில் சில புற்று நோய் வியாதியின் உருவில் வரும்; சில காச நோயாகவும் வரும். அவை சரீரத்தில் புகுந்து கொள்ளும், அவை ஒரு நபருக்குள் புகுந்து கொள்ளும் வரைக்கும் வல்லமையற்ற வைகளாக இருக்கின்றன. அவைகளால் ஒரு நபரின் மூலமாகத் தான் கிரியை செய்ய முடியும், இது நமக்கு மற்றொரு சிந்தனையை அளிக்கிறது, அது பரிசுத்த ஆவியைக் குறித்ததாகும். அது பூமியை மூடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அது உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் வரும் வரை ஏறக்குறைய உதவியற்றதாக அது காணப்படுகிறது. 41. தேவன் உங்கள் பேரிலும் என் பேரிலும் முழுவதும் சார்ந்திருக்கிறார். பாருங்கள்-? பரிசுத்த ஆவியானவர். பூமி முழுவதும் தேவனுடைய ஆவியால் நிரம்பியுள்ளது, அது ஊற்றப்பட்டுள்ளது. ஆனால் அது நமக்குள்ளாக, மானிடப் பிறவிகளாகிய நமக்குள் வரும் வரைக்கும் அதனால் - அதனால் கிரியை செய்ய முடியாது. 42. ஆகவே நாம் அவனுக்கு கீழாக கிரியை செய்யத்தக்கதாக பிசாசானவன் நம்மை ஆட்கொள்ள விரும்புகிறான். ஆகவே அவன் மிருதுவான முறையில் அவன் செயலாற்றத் தொடங்குகையில், அவன் பாவத்தில் ஆரம்பிக்கின்றான். அவன் அவைகளை ஒரு நீதியான மனிதனுக்குள் வைக்கத் துவங்குகையில், ஒரு அருமை யான மனிதன், அவனை அப்படியே நல்லவனாகவே இருக்க முயற்சி செய்ய வைத்து விடுவான்; கூடுமானால் அவன் மரிக்கும் வரைக்கும் அவன் அப்படியே நல்லவனாகவே இருக்கும்படிக்குச் செய்து விடுவான், அவ்விதமாகவே செய்ய அவன் விரும்புகிறான். அவன் இந்த மனிதனை ஆட்கொள்வான், ஏனெனில் நீ எவ்வளவாக நீதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு ஒழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு சுத்தமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல, நீ மறுபடியும் பிறக்காவிட்டால் உன்னால் பரலோகத்தை அடைய முடியாது. இயேசு அவ்விதம் கூறினார். ஆகவே... அது... நீ மறுபடியும் பிறக்கத்தான் வேண்டும், உனக்கு புது பிறப்பளிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் நீ பரலோகத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது - அல்லது கிறிஸ்துவினிடம் வரவோ உலகத்தில் எந்த ஒரு வழியும் கிடையாது. 43. இப்பொழுது, நான் சற்று முன்னர் நான் கூறினது, உங்களுடைய சிந்தனையில் மற்றுமொரு கேள்வியைத் தோன்றச் செய்யும், நான் உங்களுக்கு போதித்தது, அது இன்னுமாக... நான் விசுவாசிப்பதில்லை. ஒரு நித்திய... ஒரு நித்திய எரிகின்ற நரகம் உண்டென்று வேதாகமம் போதிக்கிறதென்று நான் விசுவாசிப்பதில்லை. அவ்வாறு அது போதிப்பதில்லை, ஏனெனில் நரகமானது நித்தியமானதாக இருக்குமானால் அங்கே செல்கின்ற மக்கள் நித்தியமாக தண்டிக்கப்பட முடிகின்ற ஒரே வழி அவர்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரேயொரு விதமான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவனுக்குள் இருக்கின்ற ஒன்று மாத்திரமே. புரிகின்றதா-? ஆகவே அவர்கள் அழிக்கப்பட வேண்டும் (பாருங்கள்?); அதாவது அவர்களுடைய சரீரப்பிரகாரமான பாகம் அழிக்கப்படும். அதற்கு பிறகு அவர்களு டைய ஆவிக்குரிய பங்கு அழிக்கப்பட்டுவிடும். அது முழுவதுமாக அழிக்கப்படும்; பிறகு அதைக் குறித்த எந்த ஒரு காரியமும் இருக்காது. ''வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும்'' என்று வேதம் கூறுகின்றது. அவை முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். 44. பிறகு, பரலோகத்தில் அளவு கோள்கள் உள்ளன என்றும் அவை எல்லாம் ஒரே விகிதத்தில் ஆக்கப்பட மாட்டாது என என்னால் நிரூபிக்கமுடியும், ஆனால் உங்களுக்கோ சரிசமமான நித்திய ஜீவன் உண்டு. ஆனால் பூமியில் ராஜாக்கள் தாங்கள் மகிமையையும் கனத்தையும் கொண்டு வருவார்கள் (வெளி-22) தங்களுடைய கனத்தையும் மகிமையையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருவார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே புதிய பூமியில் ராஜாக்கள் மற்றும் அதிபதிகள், இருப்பார்கள் என்று அது நிரூபிக்கின்றது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். அவர்கள், "எங்கள் தகப்பனையும் தாயையும் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின் பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்றார்கள். 45. அவர், ''அந்நாளிலே நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாக பன்னிரண்டு சிங்காசனங்கள் மேல் விற்றிருப்பீர்கள்” என்று கூறினார். பாருங்கள், அது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாக இருக்கப் போகின்ற ஒரு வரப்போகின்ற வேறொரு பூமிக்குரிய ஒழுங்காகும். அதில் பாவம் இருக்காது, ஆனாலும் நகரங்களில் அவர்களுக்கு அதிபதிகள் மற்றும் இன்னும் மற்றவர் உண்டு, அவை எல்லாமே நித்திய ஜீவனின் வழியிலேயே செய்யப்படும். 46. ஆனால் துன்மார்க்கர் சரீரத்தில் செய்த கிரியைகளுக்குத் தக்கதான தாங்கள் செய்த பாவங்களின்படியே தண்டிக்கப்படுவார்கள், பிறகு அவர்கள் முழுவதுமாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுப் போவார்கள். இப்பொழுது அதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள். எழுதி குறித்து வைத்துக் கொண்டிருப்பவர்களே, அதை நினைவில் கொள்ளுங்கள். 47. ஒரே ஒரு விதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றும் நாம் அதைத் தான் நாடித் தேடுகிறோம் என்று நான் கூறுவது ஆணித்தரமாக பதிவு செய்யுங்கள்; மேலும் தேவன் ஒருவரே நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார். இரண்டு விதமான நித்திய ஜீவன் என்பது கிடையாது, ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது மாத்திரமே ஜீவிக்கின்றது. மேலும் நினைவில் கொள்ளுங்கள், இதையும் கூட உங்கள் குறிப்பில் எழுதிக் கொள்ளுங்கள்: துவக்கம் என்பதைக் கொண்டதாக உள்ள உண்டாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கின்றது. துவக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு, துவக்கமே இல்லாத ஒரு காரியத்திற்கு முடிவே கிடையாது. ஒன்றிற்கு மாத்திரம் தான் துவக்கம் என்பதே கிடையாது, அது தான் தேவன் ஆகும். உயிர்த்தெழுதலில் எழுவதற்கான ஒரேயொரு வழி - உங்களுக்குள் அந்த நித்திய ஜீவன் இருக்கவேண்டும். பாருங்கள்? நீங்கள் திரும்பி மறுபடியுமாக வர ஏதுவான ஒரேயொரு வழி தான் உண்டு, அது துவக்கம் என்பது இல்லாத ஏதோ ஒன்று தான். ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் போது, ஒருபோதும் துவங்காதிருந்த மற்றும் முடிவைக் கொண்டிருக்க முடியாத ஒரு ஜீவன் உங்களுக்குள் வாசம் செய்யும்; நீங்கள் அந்த ஜீவனை உங்களுக்குள் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்கள், அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்று தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். பாருங்கள்? தேவனால் மரிக்க முடியாதிருப்பதைப் போலவே உங்களாலும் மரித்துப் போக முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக உள்ளீர்கள். 48. இங்கே முன்குறித்தலைக் குறித்த ஒரு கேள்வியை சற்று முன்னால் நாங்கள் கொண்டிருந்தோம், அது அந்த அதே காரியத்துடன் சரியாக இதைக் கொண்டு வருகின்றது. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள்; ஆகவே தேவன் தம்மைத் தாமே அந்த மகத்தான அக்கினிஸ்தம்பத்தில் பகிர்ந்து பிரித்துக் கொண்டு, அதில் ஒவ்வொன்றும் அந்த ஒவ்வொரு நபருக்குள்ளும் செல்லுமானால், இன்னும் இன்னுமாக அதே விதமாகத்தான் அது செய்கின்றது. நாம் அதை, நாம் கொண்டிருக் கின்ற அனுபவத்தின் மூலமாகவும், வேதாகம போதனைகளின் படியேயும், விஞ்ஞான ஆராய்ச்சியின்படியேயும், அதைக் காண்பிக்க ஏதுவான ஒரு புகைப்படத்தைக் கொண்டு தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் தம்மைப் பகிர்ந்தளிக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் என்று இயேசு கூறினார். நம்மால் மரிக்க முடியாது. ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது கிடையாது; "என் பேரில் விசுவாசம் கொண்டு இருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் (பாருங்கள்?)... மரிப்பதில்லை. 49. மரணம் என்கின்ற வார்த்தைக்கு "பிரிவினை'' என்று அர்த்தம். இப்பொழுது, சரீரப் பிரகாரமாக, நாம் நம்முடைய சரீரப்பிரகாரமான பார்வையிலிருந்து நாம் வேறு பிரிகிறோம், ஏனெனில் அது இன்னுமாக பாவத்தில் இருக்கின்றது, ஆனால் நம்முடைய ஆவியோ தேவனிடமிருந்து பிரிக்கப்பட முடியாதிருக்கின்ற தேவனுடைய ஆவியாகும், ஏனெனில் நாம் தேவனுடைய பாகமாக இருக்கின்றோம். நாம் - நாம் கொண்டு ...... தேவனுடைய அந்த சிந்தைக்குள்ளாக நாம் மறுபடியுமாக திரும்பக் கொண்டு வரப்படுகிறோம். தேவன் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் பரிபூரணமானதும் நித்தியமானதாகும். ஆகவே அவரைத் தொழுது கொள்ளப்போகும் ஒரு இராஜ்யத்தின் மக்கள் பேரிலேயே தேவனுடைய மெய் மூலமான சிந்தனைகள் சென்றன, அந்த மெய் மூலமான சிந்தனைகள் நித்தியமாகும். பாருங்கள்? அவர்களால் அழிந்து போகவே முடியாது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நித்தியமானதாகும். இயேசு, ''வானமும் பூமியும் ஒழிந்து போகும்; என் வார்த்தைகளோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை,'' என்றார். பாருங்கள்? அவைகள் தேவனோடு நித்தியமானதாக உள்ளன. ஆகவே, ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும்..." பாருங்கள்? நாம் அவருடைய வார்த்தையின் ஒரு பாகமாகிறோம், அவருடைய ஜீவனின் பாகமாகிறோம், ஏனெனில் நாம் அவருடைய மாம்சத்தின் மாம்சமாகவும், அவருடைய எலும்பின் எலும்பாகவும், அவருடைய ஜீவனின் ஜீவனாகவும் இருக்கிறோம். அப்படியானால் தேவனால் தம்மைத்தாமே அழிவிற்க்கு ஆளாக்கி கொள்ளமுடியாது. அதே போன்று நாமும் அழிந்து போகவே முடியாது. அப்படித்தான் பரிசுத்த ஆவியும் இருக்கின்றது. 50. ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள இந்த சிறிய நபர், சகோதரன் இவான்ஸ் - அவர் நாடு முழுவதும் எல்லா இடத்திற்கும் சென்று வந்துள்ளார். மேலும் இவர் என் அருமை நண்பராகிய ஓரல் ராபர்ட்ஸினுடைய தீவிர ஆதவராளரும் கூட; அவருடைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மற்றும் அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் இவர் ஆதரவளித்தவர். ஆனால் அன்றொரு நாள் அவர் என்னிடம் ''சகோதரன் பிரன்ஹாம், நான் சகோதரன் ஜாக்கருடைய கல்லூரிக்கு சென்றேன். நான் எல்லா இடத்துக்கும் சென்றேன்; அங்கே மூன்று மாதங்கள் நான் தங்கியிருந்தேன். நான் வேட்டைக்குச் சென்றேன்; அநேக இடங்களுக்குச் சென்றேன், அவை ஒவ்வொன்றும், அதே காரியத்திற்குத் தான் திரும்பவுமாக கொண்டு வந்தன. எந்த ஒரு நிச்சயமும் தருகின்ற ஒரு இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவே இல்லை (உங்களுக்கு புரிகின்றதா?) நான் இதைச் செய்வேனானால், அல்லது அதைச் செய்வேனானால், அல்லது இங்கே நான் என்ன செய்ய முடியும், அல்லது என்னால் முடியுமா, அல்லது என்னால் முடியாதா-? என்றிருந்தேன், உங்களுடைய போதனைகளை கேட்கும் முன்வரை அவ்விதமாக நான் இருந்தேன். கேட்ட பிறகு எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.'' என்றார். ஏனெனில் அவன் மரணத்திலிருந்து ஜீவனிற்குள் வந்து விட்டான். அவன் தனக்கு உள்ளாக நித்திய ஜீவன் வாசம் செய்ய பெற்றிருக்கிறான். ஆகவே தேவனே மரித்தாலொழிய அவனால் மரிக்க முடியாது. சரியாக அது வேதாகமப் பூர்வமானது ஆகும். பாருங்கள்? அவன் என்றென்றுமாக பாதுகாக்கப்படுகிறான், ஏனெனில் அவன் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறான். 51. இப்பொழுது, அப்படியென்றால் நீங்கள் பாவம் செய்து பிறகு அதை சரி செய்து கொள்ளலாம் என்றல்ல, ஏனெனில் நீங்கள் பாவம் செய்கையில் உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள். முற்றிலும் சரி. ஆனால் நித்திய ஜீவன் உங்களுக்குள்ளாக இருக்கிறதென்றால், நீங்கள் என்றென்றுமாக ஜீவிக்கிறீர்கள். இயேசு ''என்னுடைய வசனத்தைக் கேட்டு (பரி.யோவான்.5:24) - என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஒரு போதும் ஆக்கினைத்தீர்ப்புக்கு வருவதில்லை - ஆனால் அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,'' என்றார். பாருங்கள்? ''என் பிதா ஒருவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரான். என்னிடத்தில் வருகின்ற எல்லாரையும்... என் பிதாவினால் கொடுக்கப்பட்ட யாவும் என்னிடத்தில் வரும்.'' அது சரி. ''என் பிதாவினால் கொடுக்கப்பட்ட யாவும் என்னிடத்தில் வரும்; அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போவதில்லை. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்.'' (பரி. யோவான் 6) ஓ, எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம். பாருங்கள்? ஆகவே நீங்கள் மரணத்தைக் குறித்து திகிலடையவோ அல்லது அதிசயப்பட வேண்டிய அவசியம் என்பதோ உங்களுக்குத் தேவையில்லை. 52. நாம் அவருடைய பிள்ளைகள் என்கின்ற அந்த பரிபூரண நிச்சயத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். நீங்கள் உங்கள் பிள்ளைகளை திருத்துவது போல, நான் என் பிள்ளைகளை திருத்துவது போல, நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் அவர், நம்மைத்திருத்துகிறார். பிள்ளைகள் தவறு செய்யும் போது நாம் அவைகளைத் திருத்துகிறோம். என் பிள்ளைகள் தவறு செய்யும் போது ஒரு தகப்பன் என்கின்ற வகையில் அப்பொழுது அவர்களை திருத்துவது என் கடமையாய் இருக்கிறது. அப்படியானால், தேவனுடைய பிள்ளைகள் தவறு செய்வார்களானால், ஒரு தகப்பன், பிதா என்கின்ற வகையில் அவருக்கும் அது ஒரு கடமையாகும், ஆகவே அவர் உங்களை திருத்துவார். அதை நினைவில் மாத்திரம் கொள்ளுங்கள், நீங்கள் திருத்தப் படுவீர்கள். ஆகவே நீங்கள் அவருடைய பிள்ளையாயிருக்கும் வரையிலும் உலகம் உங்களைத் தொடாதிருப்பதாக (அது சரி!) ஏனெனில் அவர், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 53. இப்பொழுது, சகோதரன் பாட், உங்களுடைய கேள்விக்கு திரும்பவுமாக வருகின்றேன். அந்த மனிதனை பித்து பிடித்த வெறியனைப் போன்று ஆக்கி, அவனை விட்டு வெளியே சென்ற அந்த ஆவிகள் (பாருங்கள்?) இன்றைக்கும் மக்களுக்குள் அதே காரியத்தைச் செய்கின்றன. பாருங்கள்? அவைகள் அந்த ஆவிகள் தாம் - ஆயிரமாயிரக் கணக்கானவைகள். ஆகவே அந்த பிசாசு ஒரு சிறு அபினி போதை பொருளைப் போல (opium) உள்ளே வருகின்றான். ஒரு சிறு பள்ளி மாணவிக்கு அவர்கள் செய்வது போல; முதல் காரியமாக அவளை சிகரெட் புகைக்க வைப்பார்கள். பாருங்கள்? அந்த பழக்கம் அவளை ஆட்கொள்ளத் துவங்கும். அடுத்ததாக அது என்ன செய்யுமென்றால் இன்னும் கிளர்ச்சி ஊக்கமுடைய சிகரெட்டுகள் புகைக்கும்படிச் செய்யும். அதன் பிறகு, முதலாவது காரியத்திற்கு பிறகு அது கஞ்சா புகைப்பதில் வந்து நிற்கும்; அதற்கு பிறகு இன்னும் கடுமையான அபின், டோப், போதை பொருள் பழக்கத்திற்குள் கொண்டு சென்று விடும். பிறகு அது என்ன செய்யும்? அது அவர்களை பித்து பிடித்த நிலைக்கு கொண்டுச் சென்று விடும். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகின்றனர், பிசாசு அவர்களை பிடிக்கின்றன. புரிகின்றதா-? 54. ஆகவே பிசாசானவன் சிகரெட்டுகள் புகைப்பதில் இருக்கின்றான். அது அவனுடைய சிறிய சாதாரண மென்மையான வடிவமாகும். இப்பொழுது, அவன் உன்னை நாகரீகப்பாங்கில் முனைப்பான ஒருவன் என்றும் நீ அதைப் பிடித்துக் கொள்வாய் என்றும் அவன் கண்டறிந்துக் கொள்வானானால், அந்த பிசாசானவன் நீ சிகரெட்டுகளைத் தவிர வேறொன்றையுமே காணவிடமாட்டான். பாருங்கள்? எவ்வளவு காலம் சிகரெட்டு பிடிக்கிறீர்களோ அவ்வளவு காலம் தன் பிடியில் வைத்திருந்து உங்கள் ஜீவன் அறுந்து போகும் படிக்குச் செய்து விடுவான், ஏனெனில் தேவன் கூறுகின்ற வரையில் உங்களால் செல்ல முடியாது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் நீங்கள் பிரசங்கத்திற்கு மேல் பிரசங்கம், செய்திக்கு மேல் செய்தி, அதை குறித்த ஆணித்தரத்திற்கு மேல் ஆணித்தரமான செய்தி, அதைக் குறித்த எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கையை கேட்கலாம்; அவன் உங்களை புறம்பாக்கி, உங்கள் மனதை வேறெதின் மேலேயோ செலுத்தி விடலாம், நீங்கள் புகழ்பெற்ற ஒருவராக இருக்கிறீர்கள் என்பதின் பேரில் கூட, அல்லது நீங்கள் அந்த பழக்கத்தை கொண்டிருக்கத்தான் வேண்டும் அல்லது அதைப் போன்ற ஒரு எண்ணத்தை அளித்து, நீங்கள் மரித்துப் போகும் வரை உங்களை அதற்குள்ளாகவே வைத்திருப்பான். அல்லது அவன் உங்களை ஒரு சபைக்குள் சேர்ந்து கொள்ளும்படிக்குச் செய்து “நான் ஒரு நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன். நான் ஒரு நல்ல... நான் சபைக்குச் சென்று சபையை சேர்ந்து கொள்ளப் போகிறேன்'' என்று கூறும்படிக்குச் செய்வான். உங்களை அப்படியே அந்த சபைக்குள்ளாக இருக்கும்படிக்கு அவன் செய்வானென்றால், அவன் செய்ய வேண்டியது அவ்வளவே தான். உங்களை அவன் தன் கட்டுக்குள் வைத்துள்ளான், ஏனெனில் நீங்கள்... இயேசு, ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே (முற்றிலுமாகவே, முற்றிலுமாகவே) உனக்குச் சொல்லுகிறேன்,'' என்றார். மற்றொன்றை உங்களுக்கு நான் காண்பிக்கட்டும். இன்றிரவு நான் பேசத்தக்கதாக போதுமான அளவுக்கு தொண்டைக்கு ஓய்வு கொடுத்து, என் மனதிற்கு சற்று ஓய்வளிக்க, ஒரு பிரயாணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கையில்- பிற்பகல் வேளையில் ஒரு சகோதரனுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர் தான் சகோதரன் உட். 55. இப்பொழுது கவனியுங்கள்! நாம் தானியப் பயிரைக் குறித்து சற்று நாம் பார்க்கப் போகிறோம். அது நாட்டில் இருக்கின்ற தானிய பயிர்களிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப்பயிராக உள்ளது. இப்பொழுது நான்...? தானியம் அல்லது கதிர் என அழைக்கலாம், நீங்கள் அல்லது அதை எவ்விதமாகிலும் அழைக்கலாம். நான் - நான் இதை இங்கே கிளார்க் கோட்டப்பகுதி சந்தையில் கொண்டு செல்வேனானால் இந்த தானிய பயிருக்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். இருப்பதிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப்பயிராகும், அது யாருமே பார்த்திருக்க முடியாத மிக பூரணமான தானியமாகும். நான் இதற்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். நான் இதை பிளாய்ட் கோட்டப் பகுதிக்கு கொண்டுச் செல்வேன்; நான் இதை ஹாரிசன் கோட்ட பகுதிக்கு கொண்டு செல்வேன். நான் இதை மாநிலத்திற்கு கொண்டுச் செல்வேன், பிறகு நான் இதை தேசத்திற்கு கொண்டுச் செல்வேன். எல்லா இடத்திலும் இது நீல நிற ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் மிகவும் பரிபூரணமான தானிய பயிராயிருக்கிறது. ஆகவே விஞ்ஞானிகள் தங்களுடைய மகத்தான நுண்நோக்கி கண்ணாடிகளால் இதை உற்று நோக்கி, இதை ஆராய்வார்கள். பாருங்கள்? அந்த... இது சரியான அளவு சாம்பலுப்பு, சரியான அளவிலான சுண்ணாம்புச்சத்தும், மற்றும் - மற்றும் சரியான அளவிலான ஈரப்பதமும் கொண்டதாக உள்ளது. இந்த தானியப்பயிரில் காணப்படுகின்ற ஒவ்வொரு காரியமும் சரியாக மிகப் பரிபூரணமாக காணப்படுகிறது. இப்பொழுது நீங்கள், ''நான் இதை எடுத்து விதைத்து இதிலிருந்து வேறொரு சிறந்த தானியத்தை நான் பெறுவேன்” எனக் கூறலாம். ஆகவே நீங்கள் அதை எடுத்து நிலத்தில் விதைக்கின்றீர்கள். அந்த தானியமானது, அந்த பரிபூரண தானியமானது தனக்குள்ளாக ஜீவ அணுவைப் பெற்றிருக்காவிடில், அது நிலத்திலேயே கிடந்து அழுகிப் போகும், அதன் முடிவும் அதுதான். அது எவ்வளவு பூரணமான ஒன்றாக இருந்தாலும் சரி, அது திரும்பவுமாக முளைத்தெழும்பாது. அதற்குள்ளாக உள்ள ஒரு புதிய ஜீவனால் அன்றி அது ஒருபோதும் மறுபடியும் முளைத்தெழும்பாது. 56. நீங்கள் ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளலாம் ..... இப்பொழுது, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் இதை நான் கூறவில்லை, நான் .... இது சபை, இது என் கூடாரம், ஆதலால் நான் ஒரு பறவையைப் போல சுதந்திரம் கொண்டவனாக இருக்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, இந்த காரியத்தைக் குறித்ததை நீங்கள் நினைவில் வைத்திருக்க நான் விரும்புகிறேன், ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம்; அவன் தன்னுடைய தசமபாகங்களை செலுத்தலாம்; நேர்மையுள்ள வனாக இருக்கலாம்; விதவைகளுக்கு அவன் உதவி செய்யலாம்; அநாதைகளுக்கு அவன் உதவலாம்; ஒரு சபை அங்கத்தினனாக அவன் இருக்கலாம். அந்த மனிதனைக் குறித்த ஒரு சிறு குறைபாடும் கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் ஒரு காரியம் சம்பவிக்கும்போது அவன் தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிற்குள் கை விட்டு, அவனிடம் இருக்கின்ற கடைசி காசையும் எடுத்து ஏழைக்கு கொடுப்பவனாக இருப்பான். அவன் பல்வேறு தடங்கல்களுக் கிடையிலும் உன்னோடு கூட துணையாக அவன் இருப்பான். மற்றவர்கள் அநேகர் உன்னைப் புறம்பாக்கினாலும் உன்னைத்தாழத் தள்ளினாலும் அவன் உன்னோடு இருந்து உன் தோழனாகவும் இருக்கலாம்; ஆனாலும் நித்திய ஜீவனாகிய பரிசுத்த ஆவியால் அவன் நிரப்பப்படாத வரையில் அந்த மனிதன் இன்னுமாக தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே தான் அவன் இருக்கின்றான். அது சரியே-! இது எவ்வளவாக மிக முக்கியமானதாகும். 57. அதன் காரணமாகத் தான் என்னுடைய சபையானது இதைக் காணவேண்டுமென்று நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து கூர்மையான அறிவு எனக்கு இருக்கிறதென்று நான் காண்பித்துக் கொள்கிறேனென்று நீங்கள் எண்ண வேண்டாமென்று நான் - நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் - நான் உங்களுக்கு கூற முயற்சிப்பது என்னவென்றால், பிசாசானவன் மிக வஞ்சனை உள்ளவன், நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல நடந்து கொள்ளும்படிக்கு அவன் உங்களைச் செய்து மிகவுமாக வஞ்சித்து விடுவான். அவன் ஏதோ ஒன்றைச் செய்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடமும் கூட அவன் கிறிஸ்துவை பாவனைச் செய்து காட்டுவான். அது இரண்டும் மிக நெருக்கமாகக் காணப்படுமென்று வேதாகமம் கூறுகின்றது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள். நீங்கள் .... 58. இப்பொழுது இங்கே கவனியுங்கள், இதை ஆணித்தரமாக பார்க்க சில உதாரணங்களை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். இந்த ஆவிகளைக் குறித்து நாம் பார்க்கையில், வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் எதையெல்லாம் வைத்துக் காண்கிறீர்களோ அதன்படியே பார்ப்போமானால் யாக்கோபைக் காட்டிலும் ஏசா மிக நல்லவனாகக் காணப்பட்டான். இப்பொழுது, ஏசா (இந்த கருத்தை கூறுவதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக) அவன் ஒரு வஞ்சகமானவன் தான். அவ்வளவு தான். இப்பொழுது, நீங்கள் அவனை கவனிப்பீர்களானால், அவன் என்னவாயிருந்தான்? அவன் வம்பளப்பவனாகவும் கோள் சொல்பவனாகவும், ஒரு பெரிய பொய்யனாகவும் இருந்தான். இப்பொழுது, இதை நான் தவறாக சொல்கிறேனென்றால் தேவன் என்னை மன்னிப்பாராக, ஆனால் அவன் பொய் சொன்னான். மேலும் அவன் ஒரு ஏமாற்று பேர் வழியாக இருந்தான், அவனைப் போன்று யாருமே இருக்கவில்லை. அவன் புள்ளியுள்ள கொப்புகளை எடுத்து அவைகளை, ஆடுகளும் மாடுகளும் தண்ணீர் குடிக்க வரும் பொழுது தண்ணீரில் போட்டான். அவைகள் தண்ணீர் குடிக்க வரும் போது, பொலிவதுண்டு. ஆடுகள் மாடுகளும் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால் அவைகள் புள்ளியும் வரியுமுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. யாக்கோபு அவைகளைத் தனக்காகப் பிரித்துக் கொண்டான். அவன் என்ன செய்தான்-? அவன் ஏசாவின் வஸ்திரத்தை தன் மேல் உடுத்திக்கொண்டு ஒரு ஆட்டுத்தோலை தன் மீது போட்டுக் கொண்டு அங்கே சென்று தீர்க்கதரிசியான தன்னுடைய கண் பார்வையற்ற தகப்பன் முன்பாக நின்று ஏசாவைப் போல பாவனை செய்தான். அது சரி தானே-? அவன் ஒரு எத்தன். உண்மையாகவே அவன் அப்படித் தான் இருந்தான். ஆகவே ஏசா ... அந்த விதமாக நான் கூறியிருக்கக் கூடாது. பாருங்கள்? அந்த விதமாக நான் கூற விழையவில்லை. நான் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அவன் ஒரு - அவன் ஒரு ... எனக்குத் தெரியவில்லை; அவன் எந்த விதமாக இருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? நீங்கள் அதை உங்கள் சிந்தையில் சற்று சிந்தித்துப் பாருங்கள்; நான் .... அவன் தேவனுடைய மகத்தான மனிதனாக இருந்தான், அவனைக் குறித்து தீமையாக எதையும் நான் கூற விரும்பவில்லை (உங்களுக்கு புரிகின்றதா?) ஆனால் அவன் செய்த சிறு சிறு காரியங்களை நான் கூட்டிக்காட்ட விரும்புகிறேன். அவன் எவ்வளவாக வஞ்சித்தான் பார்த்தீர்களா. பொய்யன்-? நிச்சயமாக, அவன் அவ்வாறு இருந்தான், அவன் மோசமாக இருந்தான். ஆனால் அவன் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது என்ன-? 59. ஏசாவை கவனியுங்கள். இன்றைக்கு இருக்கின்ற நல்ல, ஒழுக்கமிக்க, சபை அங்கத்தினனைப் போல ஏசா ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் வேட்டைக்காரனாக இருந்தான். அவன் வெளியே சென்று... ஆம், அவர்கள் அப்படித்தான் தங்கள் ஜீவனத்தைச் செய்து கொண்டு இருந்தார்கள். அவன் தன் தகப்பனுடைய மந்தைகளை பராமரித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய தகப்பன் கண்பார்வை அற்றவனாக இருந்தான். ஒரு தீர்க்கதரிசி, கர்த்தருடைய தீர்க்கதரிசி கண்பார்வை அற்றவனாக இருந்து தன்னுடைய சொந்த குமாரனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி, ஈசாக்கு; அவன் மூலமாக கிறிஸ்து வந்தார். நீங்கள் அவனை ஒரு தீர்க்கதரிசி என அழைக்கலாம், அவன் அவ்வாறு தான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் கண்பார்வை இல்லாமல் இருந்தானா-? ஏன் அவன் தன்னை சொஸ்தமாக்கிக் கொள்ளவில்லை-? அது ஏசாவென்று - வந்துள்ளவன் என்று ஏன் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை? பாருங்கள்? தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிக்கு எல்லாவற்றையுமே கூறுவது கிடையாது ? அவர் விரும்புவதை மாத்திரமே அவர்களிடம் கூறுகின்றார். பாருங்கள்? 60. தேவன் அப்பொழுது ஒரு திட்டத்தை செயலாற்றிக் கொண்டிருந்தார், அவர் அதன் படியே தான் செயலாற்ற வேண்டியவராக இருந்தார். தேவன்... நீங்கள் உங்களையே தேவனிடம் ஒப்புக்கொடுத்தால், தேவன் உங்களை சரியாக அவருடைய திட்டத்தின் படியே உங்களை செயல்படுத்துவார். 61. இப்பொழுது, அவன் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள், இந்த நபர் என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். ஏசா சென்று தன்னுடைய பரிதாபத்திற்குரிய, வயதான, கண்பார்வையற்ற தகப்பனை கவனிக்க முயற்சிகள் மேற்கொண்டான், ஆனால் யாக்கோபோ, தன் தகப்பனுக்கு என்ன நேரிட்ட போதிலும் அதை குறித்து அக்கரையற்றவனாக இருந்தான். யாக்கோபு விரும்பின ஒரு காரியம் இருந்தது, அது தான் சேஷ்ட புத்திரபாகம். என்ன வந்தாலும் சரி, எந்த விதத்திலும் அதைப் பெற்றுக் கொண்டாலும் சரி, அதற்காக எந்தக் கட்டத்திற்கு அவன் செல்வதென்றாலும் சரி, அந்த சேஷ்ட புத்திரபாகத்தைக் குறித்து அக்கரைக் கொண்டிருந்தான். ஆனால் ஏசாவோ அதை அலட்சியம் பண்ணினான் என்று வேதம் கூறுகின்றது; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே வேதாகமம், "ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒரு வேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போட்ட ஏசாவைப் போல சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்,” என்று கூறுகின்றது. 62. இப்பொழுது; சேஷ்ட புத்திர- பாகம் என்றால் என்ன-? அது தான் அந்த உரிமையாகும். அதைத்தான் இப்பொழுது உங்களுக்கு நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பரிசுத்த ஆவிதான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகமாகும்; அது தான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகம். அது தான் தேவனால் உங்களுக்கு அளிக்கப்பெற்ற உங்களுடைய உரிமையாகும். இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு மக்கள், ''நான் சபைக்குச் செல்வேன். என்னுடைய அயலானைப் போல நானும் நல்லவன் தான். ஆனால் அந்த பரிசுத்த உருளையர்கள் போல நான் நடந்து கொள்ள வேண்டுமா-? என்னால் முடியாது'' என்று கூறுகின்றனர். ஓ நீ தான் ஏசா-! புரிகின்றதா-? சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் செய்வது போல - அதே விதமாகத்தான் அது காணப்படுகிறது. ஏன், அவன் அதை பயற்றங் கூழ் உணவுக்காக, அதை அவன் பண்டமாற்று கொடுத்து வாங்குதல் முறையில் கொடுத்தான். ஆகவே நீங்களும் அதை விற்கிறீர்கள்... இப்பொழுது, நான் உங்களைக் கூறவில்லை, ஆனால் உலகமோ அதைவிட சிறிய ஒன்றிற்கு அதை விற்றுப்போடுகிறது. 63. ஏசா பசியாயிருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், நல்ல குணத்தை நாம் எடுத்துக் கொள்வோமானால் ... யாராவது ... நாம் யாராவது அங்கு சென்று கூடாரத்தினருகே சில நாட்களுக்கு தங்குவோமானால், ஏசா எப்படிப்பட்டவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் .... நாம் ஏசாவைப் பற்றி பார்த்தோம். பாருங்கள்-? ஆனால் அவனுடைய இருதயத்திலேயோ அந்த சேஷ்ட புத்திர பாகம் வேண்டுமென்று விரும்பினான். எதைக் குறித்தும் அவன் அக்கரைக் கொள்ளவில்லை. அந்த சேஷ்ட புத்திர பாகமே அவனுக்கு தேவையாயிருந்தது. அது மட்டுமே அவனுக்கு வேண்டியதாயிருந்தது. 64. ஆனால் ஏசாவோ ஒரு நல்ல மனிதனாக இருந்து எல்லாவற்றையும் நன்றாக கவனித்து அக்கரை கொண்டு, எல்லாவற்றையும் நியாயமாக செய்து எல்லாவற்றையும் செய்ய அவன் விரும்பினான்... ஏசா ஒரு சிறந்த சட்டப்பூர்வமாக ஒழுங்காக செயல்படுகின்ற சட்டவாதியாவான். எல்லா காரியமும் நியாயமாக இருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் யாக்கோபிற்கோ ஒரேயொரு காரியம் தான் தேவையாயிருந்தது. அது தான் சேஷ்டபுத்திர பாகமாகும், அதைக் குறித்து தான் அவன் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். ஏசா... அந்த இரண்டு பையன்களுக்கும் என்ன சம்பவித்ததென்று பார்த்தீர்களா-? யாக்கோபிலிருந்து 12 கோத்திரப்பிதாக்கள் வந்தது. அவர்களிலிருந்து இஸ்ரவேலின் 12-கோத்திரங்கள் வந்தன, எல்லாம் யாக்கோபிலிருந்து வெளி வந்தவை. அவன் - தேவன், யாக்கோபை தன் சொந்த குமாரனென்று அழைத்தார். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களாலே காணமுடிகிறதா-? 65. உங்களுடைய கெளரவம், உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை, உங்களைச் சார்ந்த எதுவாயிருந்தாலும், உலகத்திலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் பரிசுத்த ஆவி தான் உங்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் அதைப்பெறும் வரையிலும் ஓயவே கூடாது. நீங்கள் அதைப் பெற்றுத் தானாக வேண்டும். அது தான் உங்களுடைய தலையாய .... நீங்கள், ''உம், என் வேலை ஸ்தலத்தில் அவர்கள் - எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாயிருக்கிறது. ஏனென்றால் என் கணவன், என்... '' எனலாம். பயப்படாதீர்கள்; முதலாவதாக அது இருக்கட்டும். மற்ற எல்லாவற்றையும் புறம்பே செல்லவிடுங்கள். அது முதலாவதாக இருக்கட்டும். ''நல்லது, நான் வருகின்ற நாட்களில் ஒன்றில் அதை பெற்றுக் கொள்வேன் என எதிர்ப்பார்க்கிறேன் சகோதரன் பிரன்ஹாம்'' எனலாம். வருகின்ற நாட்களில் அல்ல, இப்பொழுதே-! இது தான் நேரம். ''நான் மற்றவற்றை செய்யும் முன்னர் அது முதலாவதாக இருக்கட்டும். இப்பொழுதே அதை நான் பெற்றுக் கொள்வேனாக.'' பதறல் கொள்ளுங்கள்-! நம்முடைய கேள்விக்கு பதில் கூற அது உதவும். நீங்கள் - அதற்காக நீங்கள் பதறல் கொள்ள வேண்டும், உண்மையாகவே நீங்கள் அதைப் பெறவேண்டும் அல்லது மரிக்கவேண்டும். இன்று அதைப் பெற பதறல் கொள்வீர்களானால், (பாருங்கள்) அப்பொழுது தான் நீங்கள் அதைப் பெறப் போகிறீர்கள். 66. இங்கே பட்டினத்திலே ஒரு யூதன் வசித்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு அவரைத்தெரியுமா அல்லது இல்லையா என்று நானறியேன். புற்று நோயிலிருந்து அவர் சுகமாக்கப்பட்டார். அவர்கள் அவரை புறம்பாக்கிப் போட்டார்கள். அவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டபோது அவர்கள் அவரை வெளியே விரட்டி, அங்கே வெளியே முற்றத்தில் துரத்தி விட்டார்கள். ஆகவே அவர் சென்று மெதோடிஸ்ட் சபையில் சேர்ந்தார். அங்கே அவர்கள் இவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பதை கண்டு பிடித்த போது, அவர்கள் அவரை பூஜ்யம் சீதோஷ்ணத்தில் வெளியே அனுப்பி விட்டார்கள், ஓஹியோவில் பத்து டிகிரிக்கு கீழுள்ள சீதோஷ்ணத்தில் அங்கே அவருக்கு ஒரு படுக்கையை போட்டார்கள். (சகோதரன் பீரீமேன், நீங்கள் சகோதரன் இவான்ஸ் அவர்களை நினைவு கூறவேண்டும், அப்படித்தானே?) - அவரை அங்கே வெளியே வைத்து - அங்கே - அங்கே ஒரு நீரிறைக்கும் இயந்திரத்தை வைத்து ''இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படிக்கு போதுமான அளவு தண்ணீர் அங்கே இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 67. ஆனாலும், அவர் ஒரு முறை ஒரு சிறு சம்பவத்தை என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர் தன் மனைவியுடன் இந்த குறிப்பிட்ட மக்களுடன் தங்கி இருக்கையில் .... அவர் தன்னுடைய எல்லா பொருட்களையும் ஒரு பழைய உடைந்த வண்டியில் குவித்து ஏற்றிக் கொண்டு பட்டினத்தை விட்டு வெளியே கிளம்பிச் சென்றார். அவருடைய மனைவி அவரிடம், ''உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தை விட்டு புறப்படு முன்னர் சிறிது தண்ணீர் குடித்து விட்டு புறப்பட்டிருக்க வேண்டும். எனக்கு தாகமாயிருக்கிறது'' என்றார். அதற்கு அவர், ''தேனே, அங்கே ஒரு தண்ணீர் குழாய் உள்ளதே'' என்றார். ''சரி, இன்னும் ஒரு நல்ல இடத்தை பார்க்கும் வரை சென்று கொண்டேயிருங்கள்.” என்றாள். ஆகவே அவர் இன்னும் சிறிது தூரம் சென்றார், ''அதோ, மற்றொரு தண்ணீர் குழாய் இருக்கிறதே” என்றார். அவள் "உம், இன்னும் சென்று கொண்டேயிருங்கள்” என்றாள். நீங்கள் கவனிக்கிறீர்களா? 68. பிறகு அவர், ''பிறகு அவர் கிராமபுறமாக சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு தண்ணீர் குழாயும் இருக்கவில்லை,'' என்றார். அவள் சிறிது தண்ணீருக்காக போராடிக் கொண்டிருந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து அங்கே வயலில் ஒரு பழைய கிராம் தண்ணீர் குழாய் இருந்தது, நிலங்களின் மத்தியில், ஒரு கால் நடை மந்தையினுடாக செல்ல வேண்டும். அவள் அந்த கால் நடை கூட்டத்தை பார்த்து பயந்தாள், ஆனாலும் அவள், 'லேவி, நான் தண்ணீர் குடித்துத்தானாக வேண்டும்' என்றாள். ஆகவே அவர்கள் காரை நிறுத்தினர். இவர் காரை நிறுத்தும் முன்னரே அவள் வெளியே சென்று அந்த வேலியைக் கடந்து சென்றாள். அவளுக்கு தண்ணீர் தேவையாயிருந்தது. அதே போன்று தேவன் உங்களுக்கு நிஜமாகும் போது, அதைப் போன்ற தாகம் உங்களுக்கு இருக்குமானால், அதாவது ஒன்று தேவன் வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மரித்துப் போய் விடுவீர்கள் என்ற நிலை, இனியும் உங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை, அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது. அப்பொழுது நீங்கள் தேவனோடு அலுவலில் ஈடுபட வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதை எடுக்கும் போது அப்பொழுது அது சம்பவிக்கின்றது. 69. இப்பொழுது, இந்த தீய ஆவிகள் மக்களை வஞ்சிக்கின்றது. அந்த ஆவிகள் பல மடங்குகள் மிக பக்தியுள்ளவைகள் ஆகும். இப்பொழுது நீங்கள் "என்ன, தேவ பக்தியா?'' என்று கேட்கலாம். ஆம், ஐயா! வேத வசனங்கள், வேதாகமம் கூட அவ்வாறே போதிக்கின்றதே. நிச்சயமாகவே அவ்வாறு போதிக்கின்றது. 70. இப்பொழுது, கவனியுங்கள்! இயேசு பரிசுத்த ஆசாரியர்களாயிருந்த ஒரு கூட்டம் மனிதரிடம் வந்தார்; அவர்கள் நியாயப்பிரமாணங்களை ஒவ்வொரு எழுத்தின் படியேயும் கைக்கொண்டனர்; அவர்கள் மிக மிக பக்தியுள்ளவர்களாக இருந்தனர். இயேசு - யோவான் அவர்களை, "விரியன் பாம்புக் குட்டிகளே (அது பாம்புகள்) வருங் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?” என்று அழைத்தான். இயேசு அவர்களைக் கண்ட போது, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.” என்று கூறினார். தேவன் தாமே அதைக் கூறிக் கொண்டிருந்தார். அவர்களால் எவ்வளவு பக்தியாயிருக்க முடிந்ததோ அவ்வளவாக இருந்தனர். 71. நினைவில் கொள்ளுங்கள், பிசாசு அவனுடைய மனிதனை எடுக்கும் போது, அவனுடைய ஆவியையும் எடுப்பதில்லை. தேவன் தம்முடைய மனிதனை எடுக்கிறார் ஆனால் தம்முடைய ஆவியை ஒருபோதும் எடுப்பதில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வாழ்க்கையில் வந்து உங்களுடைய ஆவியை பரிசுத்தமாக்குகிறார், உங்கள் மூலமாக ஜீவிக்கின்றார், ஜீவிக்க உங்களுக்கு வல்லமையும் தருகின்றார். ஆனால் உங்களுடைய ஆவியானது சென்று கொண்டேயிருக்கும் போது, உங்களுடைய ஆவி தேவனோடே தொடர்ந்து தங்கி இருக்கிறது; ஆனால் உங்கள் மீதிருந்த பரிசுத்த ஆவி வேறொருவர் மீது வருகையில், வேறொருவர் மீது, வேறொருவர் ... 72. எலியாவின் மேலிருந்த இந்த ஆவியானது எலிசாவின் மீது வந்தது, ஆவியின் இரட்டிப்பான பாகம்; 700 வருடங்கள் அல்லது 800 வருடங்கள் கழித்து அது யோவான் ஸ்நானன் மீது வந்தது, அவனை ... எலியாவை கவனியுங்கள், எலியா எப்படி இருந்தான் என்று பாருங்கள்; பெரிய வயதான முழுவதும் மயிரைக் கொண்டவனாக, முகம் முழுவதுமாக தாடியுடனே; ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டிருந்தவனாக, சுருள்சுருளான புழு போன்று முழுவதுமாக மயிர் நிறைந்தவனாக காணப்பட்டான், அதன் மத்தியில் அவன் முகம் காணப்பட்டது, அந்த தோல் துண்டை சுற்றினவனாக பலமாய் மிதித்து நடந்து சென்று கொண்டிருந்தான், அவனுடைய அரையைச் சுற்றிலும் இதைப்போன்று கச்சைகள் காணப்பட்டன. நீங்கள் தானே ... அவன் உங்கள் வீட்டிற்கு நடந்து வந்துக்கொண்டிருக்கிறானென்றால், நீங்கள், ''ஊ, ஊ, என்னே! உடனே போலீசைக் கூப்பிடு, என் கதவண்டை இப்படிப்பட்ட ஒரு ஆள் நிற்கின்றானே'' என்பீர்கள். ஆனால், அவன் தான் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருந்தான். நிச்சயமாக அவ்வாறு தான்-! பிறகு, அவன் மரித்த போது, அவனுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு எலியா(சா)வின் மீது வந்தது; பிறகு 800 வருடங்கள் கழித்து யோவான் ஸ்நானன் மீது வந்தது. அதே விதமாக யோவானும் இருந்து நடந்து கொள்ளும்படிக்குச் செய்தது, ஏனென்றால் அது எலியாவின் ஆவியாக இருந்தது. 73. இப்பொழுது, யோவானின் மீதிருந்த எலியாவின் ஆவி யோவானை எலியாவைப் போன்றே நடந்துகொள்ளும் படிக்குச் செய்யுமானால், உங்கள் மீதிருக்கும் தேவனுடைய ஆவி இயேசுவைப் போலவே நீங்கள் நடந்து கொள்ளும் படிக்குச் செய்யும். இப்பொழுது, அங்கே தான் நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண முடியும். பாருங்கள்-? பரிசுத்த ஆவி அதைத்தான் செய்கின்றது. அது உங்களை சாந்தம் உள்ளவர்களாக செய்கிறது, தாழ்மையுள்ளவர்களாகச் செய்கிறது, மன்னிக்கிறவர் களாகச் செய்கிறது. 74. ஒரு கூட்டம் தேவ தூதர்களை அழைக்க உனக்கு வல்லமை இருந்து, உன் முகத்தில் தாடி இருந்தால் அவர்களால் அதைப்பிடுங்கி, உன் முகத்தில் துப்ப முடியுமா-? உன் முகத்தில் துப்பிக் கொண்டிருக்கிற மக்களுடைய அன்பிற்காக அதை நீ செய்வாயா-? உன்னால் அதைச் செய்ய முடியுமா-? யாரோ ஒருவன் உன்னிடம் வந்து, "ஏய், நீ ஒரு மாய்மாலக்காரன்-!” என்று கூறி உன்னுடைய கன்னத்தில் அறைந்தால் அவனுடைய மன்னிப்பிற்காக உன்னால் ஜெபிக்க முடியுமா-? இப்பொழுது, நீ பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றாயா அல்லது இல்லையா என்பதை நீ இதின் மூலமாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். பாருங்கள்? “என் நாமத்தினிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழி களையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப் பீர்கள். ''நீங்கள் அவர்களுக்குச் சமானமாய் நிற்பீர்களா-? ''சந்தோஷப்பட்டு, களி கூருங்கள்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப் படுத்தினார்களே.” 75. யாராவது உங்களைக் குறித்து தீமையாக பேசினால், அவர்களைக் குறித்து நல்லதையே பேசுங்கள். அவர்களைக் குறித்து நல்லதாக எதுவும் உங்களால் கூற முடியவில்லையெனில் அப்பொழுது எதையுமே பேசாதிருங்கள். அதைப் அப்படியே விட்டு விடுங்கள். புரிகின்றதா-? பிறகு, நீங்கள் தனிமையில் சென்ற பிறகு அவர்களுக்காக ஜெபியுங்கள். 76. அங்கே அந்த நாளில் பரிசுத்த ஆவி எனக்குள்ளாக வந்தது என்பதை நான் புரிந்து கொள்ள ஏதுவாயிருந்த ஒரு காரியமானது என் வாழ்நாளிலே இருக்கிறதென்றால் அது, அந்த காரியத்தால் தான். நான் முரட்டுத்தனமானவனாக, எளிதில் சீறி எழுகின்றவனாக இருந்தேன், நான் தாய் தந்தையின் வம்சவழியான ஐயர்லாந்து வம்சவழியைச் சார்ந்தவன். என்னால் உணவே உண்ண முடியாது, ஏனெனில் என் வாய் எப்பொழுதுமே யாராவது ஒருவரால் நொறுக்கப்பட்டிருக்கும், எதெற்கு எடுத்தாலும் தேவையில்லாமல் நான் திடீரென்று தாக்கி விடுவேன். என் பற்கள் சில உடைந்து போய் அதை இப்பொழுது சரி செய்து வைத்துள்ளேன், பேசக்கூடாத இடத்திலெல்லாம் நான் சத்தமிட்டு (பாருங்கள்?) கூறியுள்ளேன்... எப்பொழுதுமே தொல்லைக்குள் அகப்பட்டுக்கொள்வேன். ஆகவே நான் கூறினேன். யாரோ, பள்ளியிலுள்ள என் ஆசிரியை, அவர்கள் என்னிடம்... நான் அவர்களிடம், ''மதிப்பிற்குரியவரே, என்னால் - என்னால் திருந்த முடியவில்லை'' என்றேன். பாருங்கள், ''எல்லா நேரத்திலும் தொல்லையில் சிக்கிக்கொள்வேன்.'' “என்னால் முடியவில்லை'' என்றேன். பாவம் அந்த வயதான டேம்ப்பில் அம்மாள், அவர்கள் மகிமைக்கு சென்று விட்டார்கள். அப்பொழுது அவர்கள், ''சரி, தேனே இங்கே கவனி" என்றார்கள். அவர்கள் என்னை தங்களுடைய மடியின் மீது உட்காரவைத்து என்னை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட ஒரு அன்பை முதன் முறையாக என் மீது பொழியப் பட நான் கண்டேன், - ஒரு வயதான பெண்மணி. அவர்கள் எனக்காக அழுதார்கள். அவர்கள் “'பில்லி, நான் உனக்காக ஒன்றை நான் செய்யப் போகிறேன். தேனே, நான் உனக்கு ஒரு சிறிய மெல்லிய கயிறைத் தரப்போகிறேன், ''இனி மேல் அந்த பையன்களில் யாராவது ஒருவன் உன் மீது ...'' என்றார்கள். 77. அங்கே என்னை 'கிழிந்த கந்தைக் கீற்றுக் கொட்டை' என்று என்னை அழைப்பார்கள், ஏனெனில் நான் கெண்டக்கியைச் சார்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியும், என்னுடைய ஆடைகள் மிக மோசமாக இருக்கும். இப்பொழுதிருக்கிற தலைமுடி முழு அளவிற்கு முகம் முழுவதுமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். என் முடியை அவர்கள் பரியாசம் செய்வார்கள். உங்களுக்குத் தெரியுமா, ஒரு மிக மோசமான வேளையாக அது எனக்கிருந்தது. அவர்கள் என்னை அடிப்பார்கள், கன்னத்தில் அறைவார்கள். எப்பொழுதாவது யாராவது ஒருவருக்கு கோபம் வந்து விட்டால் அவர் சுற்றி சுற்றி நடந்து, என்னைக் கண்டு இறுகப் பிடித்து கன்னத்தில் அறைவார்கள். அப்பொழுது ஒரு சண்டை நடக்கும். எங்களுக்கு அடி விழும் - நாங்களும் அடி கொடுப்போம்... நான் கத்திச்சண்டைகள் மற்ற எல்லா சண்டைக ளையும் போட்டிருக்கிறேன். 78. நான் எழுந்திருக்கக் கூட முடியாத அளவிற்கு என்னை அடித்து நொறுக்கிய நான்கு அல்லது ஐந்து பையன்களை சுட்டுத் தள்ள ஒரு வின்செஸ்டர் ரக துப்பாக்கியை எடுத்துச் சென்று முயற்சி செய்திருக்கிறேன். தேவன் என்னைத் தடுத்திராவிட்டால் ஒவ்வொரு பையனையும் கொன்று போட்டிருப்பேன். கீழே இருந்த தோட்டாக்களை எடுத்து துப்பாக்கியினுள் போட்டேன்; சுடுவதற்கு சிறந்த தோட்டாக்களாக அவை இருந்தன. பாருங்கள்-? ஒருக்கால் ஐந்து மனிதரை அல்லது ஐந்து பையன்களை கொன்ற கொலைக்காரனாக நான் இருந்திருப்பேன். 79. எனக்கு 12 வயது தான் இருந்திருக்கும், ஆனால் கடும் கோபக்காரனாக இருந்தேன்! ஆகவே அந்த ஆசிரியை என்னிடம் ''பில்லி, இந்த மெல்லிய கயிற்றை எடுத்துக் கொள், உனக்கு கோபம் வரும் போதெல்லாம், நின்று, இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளைப் போடு. அப்படிச் செய்த பிறகு, அந்த கயிற்றை என்னிடம் கொண்டு வா - உன் கோபம் அடங்கி விடுவது நிச்சயம்” என்றார்கள். 80. நான், ''திருமதி.வேலன், நீங்கள் மிக அருமையானவர்கள். நான் - நான் அவ்வாறு செய்ய முயற்சி செய்யப் போகிறேன்” என்றேன். பாருங்கள்-? (ஓ, அது திருமதி டெம்ப்பில்; நான் திருமதி. வேலன் என்று கூறிக்கொண்டிருக்கிறேன். நான் திருமதி... அங்கே ஒரு சமயம் திரு.வேலன் ஆசிரியையாக இருந்தார்.) ஆகவே அந்த கயிற்றை என் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டேன். நான் வெளியே புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிடங்கள் கூட கடக்காத நிலையில் ஒருவன் என் மீது விழுந்து அடித்தான். அப்பொழுது நான் அதை செய்ய ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா. நான் கீழே குனிந்து என் கயிற்றை எடுத்தேன்; ஒரு முடிச்சு போட்டேன்; அந்த கயிற்றை கீழே எறிந்துச் சென்று விட்டேன். பாருங்கள்? என்னால் அதைச் செய்ய முடியவில்லை. பாருங்கள்? 81. ''ஒரு கிறிஸ்தவனாக என்னால் இருக்கவே முடியாது.'' என்றேன். ஆனால் ஒன்றை உங்களுக்கு கூறட்டும், அங்கே ஓஹியோ தெருவில் அந்த இரவில் ஆவியானவர் எனக்குள் வந்த போது என் கோப சுபாவத்தை நீக்கினது. அன்றோடு அது ஒழிந்தது. நான், "என்னால் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது, ஏனெனில் என்னால் அதை மேற்கொள்ள முடியாது. அது எனக்குள்ளாக பிறந்திருக்கின்ற ஒன்று. பையனே, என் அப்பா முரட்டுத்தனமானவர்; பாதி இந்தியரான என் தாயும் கூட, மதுவை கடைசித் துளிவரை விடாமல் குடிக்கும் குடிகாரனிடம் சண்டை போடும் அளவிற்கு கோப சுபாவம் கொண்டவர்களாயிற்றே. அப்படியிருக்க நானா-? ஓ, நான்... என்னிடம் சண்டைக்கு வருபவர்கள் கடும் உதை வாங்குவார்களே; அவ்வளவு தான். அவர்களை அடிக்க ஒரு ஏணியின் மீது ஏறிச் செல்ல வேண்டியிருந்தாலும்கூட நிச்சயமாக நான் எறிச் சென்று அடிப்பேனே'' என்றேன். 82. ஆனால் இப்பொழுதோ, நீங்கள் என்னை வெளியே தரதரவென்று முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று என்னை அடித்துப் போடுங்கள் ... பாருங்கள்-? ஏன்? நான் இல்லை? நான் இங்கே எதைக் கூற முயன்று கொண்டிருக்கிறேன்-? ஏதோ ஒன்று சம்பவித்தது. அந்த பழைய வலிமை, அந்த பழைய வில்லியம் பிரன்ஹாம் மரித்து விட்டார், ஒருவர் உள்ளே வந்துவிட்டார். ஆகவே அது என் விரோதிக்காக நான் வருத்தப்பட்டு மனமிறங்கச் செய்கிறது. யாராவது எனக்கு ஏதாவதொரு பொல்லாங்கு செய்தால், நான் அவர்களுக் கெதிராக ஜெபம் செய்வதில்லை, நான் அவர்களுக்காக ஜெபிப்பேன். இது சம்பவிப்பதற்கு முன்னர், நான் அன்றொரு இரவு, நியூ இங்கிலாந்தில் பரிசுத்த ஆவியானவர் அந்த சோதனையை எனக்களித்தார். அவர் எனக்கு வல்லமையை அளித்து அந்த மக்களை நோக்கி நீ என்ன கூற விரும்புகிறாயோ அதை அப்படியே பேசு'' என்று கூறினார். அவர்கள் நடந்து கொண்ட விதமானது... நான் அங்கே பார்த்து ''நான் உங்களை மன்னிக்கிறேன்'' என்று கூறினேன். சரியாக நான் அவ்விதமாகத் தான் கூற வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். பாருங்கள்-? உங்கள் விரோதியை மன்னியுங்கள். பாருங்கள்-? உங்களை பாவம் நிறைந்தவர்களாகச் செய்கிறவைகள் இந்த ஆவிகள் தாம். அந்த ஆவிகளை கவனியுங்கள். 83. இங்கே ஒருவன் வருகின்றான். அவன் அங்கே அந்த கல்லறையில் இருந்தான். யாராவது ஒருவர் அவ்வழியாய் வந்த போது, இவன் வெளியே ஓடிச் சென்று அவர்களை தாக்கி மேற்கொண்டு விடுவான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் மிகவும் கொடியவனாக இருந்தபடியால் அந்த வழியாக ஒருவனும் நடக்கக் கூடாதிருந்தது. ஆனால் ஒரு நாளிலே மிக அதிக வல்லமை பொருந்திய ஒன்று அந்த வழியாக நடந்து சென்றது. அவன் லேகியோனாகிய அந்த அநேகமான, வெறுப்பு, மனக்குரோதம், பகைமை, பிசாசு போன்றவற்றால் பிடிக்கப்பட்டு, அவன் அங்கே நடந்து கொண்டிருந்தான், அவன் பெரிய ஆளாக இருந்தான். அவர்கள் அங்கே சென்று, ஒரு படையாகச் சென்று அவனை சங்கிலிகளால் கட்டுவார்கள்; அவனோ அந்த சங்கிலிகளை முறித்துப் போடுவான். அந்த பிசாசு அவனுக்குள்ளாக இருந்தது. அங்கே அவன் இருந்தான். அவன்..? அவன் இங்கே ஜெபர்சன்வில்லில் போற்றுதலுக்குரிய நட்சத்திரமாக இருந்திருப்பான். நிச்சயமாக இருந்திருப்பான். அவன் அந்த பெரிய... சில வாலிப பருவ பையன்கள் “ஓ, அவன் பெரிய உருவ மனிதன்” என்றிருப்பார்கள். இரு நூறு பவுண்டுகள் எடை கொண்டு அதே நேரத்தில் ஒரு துளிகூட மனிதனாக இராத மனிதரை நான் கண்டிருக்கிறேன். அது மனிதத் தன்மையல்ல, அது மிருகத்தன்மை. பாருங்கள்-? 84. ஆனால் அங்கே மெலிந்த, தோள் சரிந்த ஒரு ஆள் ஒரு நாளிலே அந்த சாலையிலே வந்து கொண்டிருந்தார், தேகம் சிறிது வளைந்தவராக காணப்பட்டார் (நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது, அவருக்கு முப்பது வயது தான், ஆனால் ஐம்பது வயது போல் காணப்பட்டார் என்று வேதம் கூறுகிறது) ஒரு நாள் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆகவே இவன், "ஓ, அந்த சிறிய ஆளை பிடித்து சுழற்றி சுழற்றி வீசி அடிப்பேன்” என்றெண்ணி அவரை நோக்கி ஓடினான். ஆனால், ஓ, என்னே, அந்த ஒன்றை அவன் சந்தித்த போது, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவனை அந்த பிசாசுகள் பிடித்திருந்தன. இப்பொழுது கவனியுங்கள். அந்த நாளிலே... அவன் பிசாசினால் மிகவுமாக பிடிக்கப்பட்டிருந்தான் 85. இப்பொழுது இந்த, இதை நான் உங்களுக்கு ஆணித்தரமாக்க நான் விரும்புகிறேன். அவன் - அந்த பிசாசு அவன் நாவை உபயோகித்து பேசும் அளவிற்கு அந்த மனிதன் பிசாசிற்கு முழுவதுமாக எதிர்ப்பின்றி இணங்கிப் போயிருந்தான். இப்பொழுது, தேவன் உங்கள் நாவை உபயோகித்து பேசத்தக்கதாக நீங்கள் உங்களைத்தாமே முழுவதுமாக தேவனிடம் இணங்கி கீழ்ப்படிந்திருக்கலாமே, அது சரியே-! அதைத் தான் நான் வலியுறுத்தி கூறுகிறேன். நான் ஒரு பிரசங்கம் செய்து அது அர்த்தமுள்ளதாக இருக்குமானால், நான் என்னை தேவனிடம் இணங்கச் செய்ததால் தான், வில்லியம் பிரன்ஹாமை அகற்றி விட்டு, கிறிஸ்து தலைமை எடுத்து பேச ஆரம்பிப்பதால் தான். பாருங்கள்-? அவர் பாஷையில் பேச முடியும். 86. இப்பொழுது கவனியுங்கள். அந்த தீய ஆவி அவனை மிகவும் அதிகமாக பிடித்திருந்தது, ஏனென்றால் அந்த ஆவியானது அவனை மிக... தங்களுடைய நேரமானது வந்து விட்டதென்பதை அந்த பிசாசுகள் அறிந்திருந்தன, ஏனெனில் அவை அன்பை சந்தித்தன. பாருங்கள்-? ஆகவே அவைகள், ''அவனை சற்று தொல்லைக்கு உள்ளாக்குவோம்'' என்றன. அப்பொழுது அந்த எல்லா... இப்பொழுது என்ன சம்பவித்த தென்று சற்று கவனியுங்கள். அவன், "என்ன, நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சிறிய மெலிந்த சரீரத்தில், ஒரு சிறிய மெலிந்து காணப்படுகின்ற ஆளைப் போன்ற நீர் வரவேண்டும்?'' ''நீர் ஏன் இவ்விதமாக வருகின்றீர்,'' என்றான். மேலும், ''நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் தாம் இஸ்ரவேலின் பரிசுத்தராயிற்றே, அப்படியானால் ஏன் நீர்...? (இப்பொழுது கவனியுங்கள்-! வருங்காலத்தில் பிசாசுகளுக்கு வேதனை அளிக்கப்படப்போகிற ஒரு தருணம் உள்ளதென்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் இந்த பிசாசுகள் அறிக்கையிடுவதை சற்று கவனியுங்கள்) 'அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?'' (ஆங்கில வேதாகமத்தில் அந்த (The) உள்ளது - தமிழாக்கியோன்) வருங்காலத்தில் ஒரு வேதனையானது அவைகளுக்கு உண்டு என்பது அவைகளுக்குத் தெரியும். ''அந்த காலம் வருமுன்பே எங்களை வேதனைப் படுத்த இங்கே வந்தீரோ?” பாருங்கள். அப்பொழுது இயேசு, ''உன் பேர் என்ன?'' என்று கேட்டார். அந்த பெயர் அவருக்கு தெரியும்; ஆனால் அவைகள் அதை அறிக்கையிட வேண்டுமென அவர் விரும்பினார். ''நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் நாங்கள் லேகியோன் எனப்படுகிறோம்'' என்றான் அவன். மேலும் அவன் ''நீர் தாமே இந்த மனிதனை விட்டு எங்களை துரத்தப் போகிறீரென்றால் ...?,'' என்றான். 87. இயேசு அங்கே ஒரு சிறிய மெலிந்த ஆளாக நின்று கொண்டிருப்பதையும் (பாருங்கள்?) ஏறக்குறைய ஒரு முழு சேனையையும் அடித்துப்போட்டு தோற்கடிக்கக் கூடிய ஒரு மனிதனையும் கவனியுங்கள்; சங்கிலிகளும் கூட அவனைக் கட்டி அடக்க போதுமானதாக காணப்படவில்லை. பாருங்கள், அது மாம்ச பலத்தினால் அல்ல. மாம்சபலத்தினாலே அதைச் செய்ய முடியாது. உன்னுடைய ஜீவியத்தில் இருக்கின்ற பரிசுத்த ஆவியின் வல்லமை தான் அதைச் செய்யும். பாருங்கள்-? 88. அவன், ''அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த வேண்டாம்; நீர் எங்களை துரத்துவீரானால்.... (அவைகளின் கீழ்த்தரத்தைப் பாருங்கள், துஷ்டத்தனம்) நீர் எங்களைத் துரத்துவீரே ஆனால், எங்களை அப்படியே உலகத்திற்குள்ளாக கட்டவிழ்த்து விடவேண்டாம், ஏனெனில் வேறு யாருக்குள்ளாவது நாங்கள் செல்வோம் என்பதை உடனே தீர்மானிப்பது கடினம். நீர் எங்களை துரத்துவீரானால்... யாராவது ஒருவருக்குள் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இன்னும் அதிகமான கீழ்த்தரச் செயல்களை நாங்கள் செய்ய விரும்புகிறோம்'' என்று கூறினான். அது பிசாசாகும். ''அவனை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்.” (சகோ.பிரன்ஹாம் கீழ்த்தரச் செயலை முகபாவத்தில் தெரிவிக்கின்றார் - ஆசி) பாருங்கள்? அது பிசாசாகும். "நான் அவனை பழிக்கு பழி வாங்குவேன்.'' பாருங்கள்-? நினைவில் கொள்ளுங்கள், அங்கு நின்று கொண்டிருப்பது உங்கள் சகோதரனாகும், ஆனால் பிசாசானவன் அவன் மேல் இருக்கிறான். பாருங்கள்-? ''கீழ்த்தரமான ஏதாவதொன்றை நாம் செய்வோமாக. இந்த காரியத்தின் நிமித்தமாக நாம் இந்த கதரேனரை சற்று அவதிக்குள்ளாகும் படிக்குச் செய்வோம்'' என்று கூறி ... அவைகளின் தலைவன் “நாம் அந்த பன்றி கூட்டத்திற்குள்ளாக சென்று விடுவோம்'' என்று கூறினது. 89. இயேசு ''உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால் அவனை விட்டு வெளியே வாருங்கள்-!'' என்றார். ஓ, என்னே! அந்த விதமான சிறிதான மெல்லிய ஆள் அந்த பெரிய பிசாசுகளின் கூட்டமாகிய லேகியோனிடம் பேசுவதைப் பாருங்கள்... ''இவனை விட்டு புறப்பட்டுப் போங்கள்! உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். '' அப்பொழுது அவைகள் அந்த பன்றிகளுக்குள்ளாகச் சென்றன, அந்த பன்றிகள் திடீரென்று உடல் குலுங்கின, அந்த பன்றிகளுக்கு திடீரென்று குலுங்கி எழுச்சியுறச் செய்தன. ஆகவே அவைகள் நேராக ஆற்றண்டை சென்று, ஆற்றில் மூழ்கி, பாய்ந்து அமிழ்ந்து மாண்டது. அது சரி தானே-? 90. இப்பொழுது அவைகள்... ஆம், பிசாசுகள் அவைகளினின்று வெளியே சென்றன, ஏனெனில் பன்றிகள் மாண்டு போகும்படிக்குச் செய்து விட்டிருந்தன. அவைகளை திடீரென்று எழுச்சியடையச் செய்தன. மற்ற எவரைப் போன்றே அவைகளுக்கு திடீரெழுச்சியுண்டாயிற்று. கோபத்தினால் எழுச்சியுறுகிற ஒரு நபரை நீங்கள் கவனித்துப் பார்த்ததுண்டா-? ஆம், அது தான் - அதைப் போன்று தான் இதுவும். அது அந்த பிசாசுகள் காண்பீர்களானால், நீங்கள், "உம், கதரேனரிடத்தில் என்ன சம்பவித்தது என்பதை நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன்" என்று கூறுங்கள். பாருங்கள்-? அது முற்றிலுமாக சரியே. இன்னும் சில உள்ளே வந்து அவனை முற்றிலுமாக பைத்திய மாக்கி விடுகின்றன; ஏனெனில் பைத்தியம் பிடித்தலில் முதல் கட்டம் கோபமே என்று மருத்துவர் உங்களிடம் கூறுவார். பைத்தியம் பிடித்தலின் முதல் கட்டம் - மேயோ மருத்துவர்களும் அதைத் தான் கூறுகின்றனர். 91. சகோ.பாட், அது சற்று கல்வியறிவில்லாத கரடு முரடான பதிலாயிருந்திருக்கும். நான் அறிந்துள்ளதை மாத்திரமே உரைத்தேன், சற்று அது எதிர்ப்பாராத ஒன்று தான். 102. ரோமர் 7-வது அதிகாரம், 25-வது வசனம். 92. நான்... நான் மறந்து விட்டேன், அன்றொரு நாளிலே அதைப் பெற்ற போது நான் இதை பார்த்தேன், ஆனால் அது என்னவென்பதை நான் மறந்து விட்டேன். இந்த அருமையான நபரின் கேள்விக்கு கூடுமான வரை நாம் பதிலளிப்போமாக. ரோமர் 7:22, சரி. 25, என்னை மன்னியுங்கள். ரோமர் 7,... சமயத்தில் இரு பக்கங்களை புரட்டி விட்டேன். பாருங்கள்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமானத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியம் செய்கிறேன். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அதை சரியாக வாசிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமானத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியம் செய்கிறேன். 93. அது சரி. சரியாக அதைத்தான் பவுல் அநேக முறைகள் கூறியிருக்கிறான். நான் நன்மையானதைச் செய்யும் போது, தீமையும் இவ்விடத்திலிருக்கிறது. பாருங்கள்? நீங்களும் சரியாக அதைத்தான் செய்கிறீர்கள். உங்களுடைய மனதினாலே, அது தான் உங்களுடைய இருதயமாகும். பாருங்கள்-? இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மனதினாலே நீங்கள் சிந்திப்பதில்லை; அல்லது உங்கள் கண்களினாலே நீங்கள் காண்பதும் கிடையாது. நீங்கள்... உங்கள் இருதயத்தினாலே நீங்கள் காண்கின்றீர்கள். உங்களுக்கு அது தெரியுமா-? உங்கள் இருதயமானது தனக்குள்ளாக உங்களையும் இன்னும் வேறொரு நபரையும் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நான்கு வருடங்களுக்கு முன்னர் தான் விஞ்ஞானமானது அதைக் கண்டு பிடித்ததென்று நீங்கள் அறிவீர்கள். இருதயத்தில் ஒரு சிறிய அறை, அங்கு ஆத்துமா வாழ்கிறதென்று அவர்கள் கூறுகின்றனர். 94. நீங்கள் எப்பொழுதாவது உள்உணர்வு நிலை குறித்து கேள்விபட்டுள்ளீர்களா-? நீங்கள் ஏதாவதொன்றை செய்ய ஆரம்பித்து ''ஓ, நான் அதை நல்ல முறையில் செயல் படுத்துகிறேன்” என்று நீங்கள் நினைக்கையில், உங்கள் உள் உணர்வு நிலையோ வேறொன்றை உங்களுக்கு கூறுகின்றது. 95, பொய் பேசுவதைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுடைய பொறிக் கருவியை (lie detector) அவர்களால் உபயோகப்படுத்த முடிகிறது... என் அருமை நண்பர் வழக்கறிஞர் ராபின்சன் அங்கு பின் வரிசையில் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். அது பயன்படுத்தப்படும் போது அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அதைப் பார்த்திருக்கிறேன் - இங்கே - இங்கே கர்த்தருடைய தூதனைக் குறித்து நான் கூறினது உண்மைதானா என்று கண்டறிய என்னை அந்த பொறிக் கருவியைக் கொண்டு, சோதனைக்குட்படுத்தினார். ஆகவே, அந்த பொறிக் கருவியை உங்கள் எதிரில் வைத்து விட்ட பிறகு இந்த - இந்த காரியத்தை நான் செய்யவில்லை என்று உங்களால் கூடுமான வரை மிக அருமையாக மெருகேற்றபட்ட விதமாக கூறினாலும்- நீங்கள் ஒரு குற்றவாளியாக இருந்து அந்த பொய்யைக் கண்டறியும் பொறிக் கருவியானது, நீங்கள் கூறுவது பொய் என்று குறியிடு செய்யும். புரிகின்றதா-? எப்படி-? அது உங்கள் நரம்புகளின் அதிர்வுகளை அந்தப் பொறிக்கருவியானது கிரகிக்கின்றது. பாருங்கள்?- அது உங்களுக்கு கூறி விடும். ஏன் அப்படி நிகழ்கின்றது-? மனிதன் தன்னுடைய மூல துவக்கத்திலிருந்தே பொய் சொல்லும்படயாக உண்டாக்கப்படவில்லை. பொய் சொல்வது பாவமாகும், உங்களைப் பொய் பேசும்படிக்குச் செய்வது உங்கள் மீதிருக்கும் பிசாசானவன் தான். பாருங்கள்-? 96. உங்கள் சரீர அமைப்பானது பொய் பேசக்கூடாத விதத்தில் தான் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாகத் தான் நீங்கள் மறுபடியும் வாழ வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் என்றென்றுமாக, எப்பொழுதுமே வாழும் விதத்தில் தான் உண்டாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், பாவம் உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வந்தது. அப்படியானால், பாவமானது உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வருமானால், அப்பொழுது சரீரமானது மரித்துத்தானாக வேண்டும். ஆனால் அதற்குள்ளாக நித்திய ஜீவனால் வாசம் செய்ய முடியும், இந்த ஆவியானது உனக்குள்ளாக மாற்றப்படும் போது நீ நித்திய ஜீவனை கொண்டிருக்கிறவனாக இருக்கின்றாய். கடைசி நாளிலே தேவன் அந்த சரீரத்தை மறுபடியுமாக எழுப்புவார். அவர் அதைச் செய்யப் போவதாகக் கூறியுள்ளார். 97. ஆகவே என்னுடைய சிந்தை-சிந்தை... அவன் வேறொரு இடத்தில், " எனக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” என்று கூறுகிறான். இப்பொழுது, அந்த சிந்தையில் நீங்கள்-கிறிஸ்துவின் சிந்தையுடன் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். பாருங்கள், உள்ளே இருக்கின்ற பகுதி (பாருங்கள்?), உள்ளே இருக்கின்ற பங்கு, அதனால் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். அந்த உள் உணர்வுநிலை, அங்கே தான் விசுவாசமானது நங்கூரமிட்டு தங்கியிருக்கின்றது. 98. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற மக்களாகிய நீங்கள் அநேக முறைகள், உங்களில் அநேகர் ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது என்று அறிந்திருந்த நேரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது நடந்திட முடியாத ஒன்றாக அது இருந்திருக்கும், ஆனால் அது நடந்திருக்கும், அது சம்பவிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறே நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்திருப்பீர்களா- அது தான் விசுவாசம், அந்த உள்உணர்வு நிலையானது கிரியை நடப்பித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, இங்கே சிறிது உஷ்ணமாக காணப்படுகிறதென்றால், வெப்பம் சற்று அதிகரிப்பதை நீங்கள் உணர்ந்தால் அங்கே இருக்கின்ற அந்த கருவியை இயக்கிக் கொள்ளலாம். 99. இப்பொழுது, அங்கே உள்ளே அந்த உள்உணர்வு மனசாட்சியானது (பாருங்கள்?) அங்கே உங்களுடைய சிந்தையானது. இப்பொழுது இயேசு "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்.... (இப்பொழுது நான் எடுக்க நினைத்தது இதுவல்ல) ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்''. இப்பொழுது தேவனுடைய ராஜ்யத்தை உங்களால் காணமுடியாது, ஏனெனில் பரிசுத்த ஆவி தான் தேவனுடைய இராஜ்யமாகும். ''இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தை வல்லமை- யோடு காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை'', என்று, அவர் கூறினார். ''அப்படியானால் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே'' என்று வேதாகமம் கூறுகின்றது. அது உங்களுக்குள் இருக்கிறது, அந்த பரிசுத்த ஆவி, அதை உங்கள் கண்களாலே, உங்களால் காணமுடியாது. ஆகவே காண்பது என்றால், "புரிந்து கொள்ளுதல்” என்று அர்த்தம். 100. நீங்கள் ஏதாவது ஒன்றை நோக்கிப் பார்த்து, சரியாக அதை நோக்கிப் பார்த்துக் கொண்டு, "உம், என்னால் எதையுமே காணமுடியவில்லை, என்னால் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறுவீர்களானால், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அர்த்தமாகும். புரிகின்றதா-? புரிகின்றதா-? உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காண்பது என்றால் "புரிந்து கொள்ளுதல்” என்று பொருள்படும். ஆனால் உங்கள் கண்களால் எதைவேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் உங்களுக்குள் என்ன இருக்கின்றதோ அதைக் கொண்டு தான் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அதைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள். பாருங்கள்-? தேவனுடைய கண்களைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள். 101. ஆகவே இப்பொழுது, உங்கள் கருத்திலே நீங்கள் இருங்கள். நீங்கள் தயாரென்றால் உங்களுக்காக அருமையான ஒரு கருத்து இங்கேயுள்ளது. ஒரு கிறிஸ்தவன் தன் கண்களால் காணாத காரியங்களை பார்த்துக் கொன்டிருக்கிறான் (பாருங்கள்?). ஏனெனில் நாம் காணப்படாததைத்தான் நாம் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பாருங்கள்? எப்படி நீங்கள் அதைப் பார்க்கின்றீர்கள்? உங்களுடைய உள்ளார்ந்த கண்ணின் மூலமாகத்தான். விசுவாசத்தினால் நீங்கள் அதைக் காண்கிறீர்கள். ஆகவே இப்பொழுது, நாம் அதை நிரூபிப்போம்: முழு கிறிஸ்தவ கவசமானது காணக்கூடாத பண்புகளால், காரியங்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவ கவசம் என்றால் என்ன-? யாரோ ஒருவர் ''பார்ப்பது தான் விசுவாசமாகும்'' என்கிறார். அந்த நபர் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது, ஏனெனில் கிறிஸ்தவ கவசமானது இதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது, அது தான்; அன்பு. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கண்டிருக்கிறீர்களா-? அது செயல்படுத்தப் படுகையில் அதைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அன்பை கண்டதில்லை. உங்கள் கண்களைக் கொண்டு ஒரு பொருளாகக் காணமுடியாது. அன்பின் ஒரு பகுதியை உங்களிலிருந்து வெளியே எடுங்கள், அது எவ்வாறு காணப்படுகிறது என்பதை நான் பார்ப்பேனாக. பாருங்கள்-? அன்பு, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், விசுவாசம் - விசுவாசம், நற்குணம் (பாருங்கள்); சரீரப் பிரகாரமான கண்களாலே முழு கிறிஸ்தவ கவசமானது காணப்படாததாக உள்ளது, ஆனால் அது இருதயத்தாலே புரிந்து கொள்ளப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது-! உங்களுக்குப் புரிகின்றதா. உங்களுக்கு புரிகின்றதா. 102. பவுல், ''என் மனதினாலே... ('அவன் கிறிஸ்துவின் சிந்தையை உடையவனாய் இருக்கிறேன்!' என்று கூறினான்) ''நானே என் மனதினாலே தேவனுக்கு ஊழியம் செய்கிறேன், மாம் சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்'' என்று கூறினான். அது என்ன? இன்றிரவு என் மாம்சமானது, ''நீ மிகவும் களைப்பு அடைந்திருக்கிறாய். உன் தொண்டை மிகவும் கரகரப்பாகக் காணப்படுகிறது. அங்கே குளிரில் வெளியே சென்று வந்தாய். இன்றிரவு உன்னால் நீ சபைக்குச் செல்ல முடியாது,'' என்று கூறுகிறது. அது தான் மாம்சத்தின் பிரமாணம். "நீ அவர்களை தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி கேள்விகளை சகோதரன் நெவிலுக்கு அனுப்பி அவரை பதிலளிக்கும்படிக்கு கூறி விடு''. ஆனால் பாருங்கள். நான் அதைச் செய்வதாகத்தான் வாக்களித்துள்ளேன். பாருங்கள்-? 103. இப்பொழுது, என் சிந்தையில், உங்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர், ''நீ உன் வாக்கைக் காத்துக்கொள்” என்று கூறினார். ஆனால் மாம்சமே, ''நீ மிகவும், களைத்துப் போயிருக்கிறாய்” என்று கூறுகிறது. பாருங்கள்? 104. இப்பொழுது மாம்சமானது, ''இதோ பார், நீ மிகவும் அழகானவள், பள்ளியில் நீ தான் மிகவும் அழகுள்ள ஒருவள். ஆகவே உன்னுடைய பரிசுத்த உருளையான தாயும், உன் மூடபக்தி வைராக்கிய தந்தையும் கூறுவதின் மேல் கவனம் செலுத்தாதே. புரிகிறதா-? பள்ளியில் நீ தான் அழகாகக் காணப்படுகின்ற பெண்மணியாவாய்'' ''நீ தான் அழகுள்ள வாலிபன், சிறப்பாகக் காணப்படுகிற பையன், உறுதியாக அமைக்கப்பட்ட கட்டுடல் கொண்டவன் நீ. நகரத்திலேயே நீ தான் புகழ் பெற்றவன்,'' என்று கூறும். நீங்கள் பாருங்கள்? அந்த - அந்த ... ஆகவே உங்களுடைய அவயவங்களை அதற்கு ஒப்புவித்து விடுகிறீர்கள், பிறகு எப்படி நீங்கள் வெளியே வருகிறீர்கள்-? ஒவ்வொரு முறையும் அதன் கடைசியில்... பாருங்கள்-? 105. பவுல் ''என் மாம்சமானது எப்போதுமே அதற்கு ஒப்புவிக்கவே விரும்புகிறது,'' என்றான். உங்கள் மாம்சமும் அவ்விதம் தான் செய்கின்றது. பாருங்கள்-? ஆனாலும் இருதயத்தில் இருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாணமானது மாம்சத்தை மேற்கொண்டு, செய் என்று இருதயமானது எதைக் கூறுகிறதோ, அதற்கு சரீரத்தை கீழ்படியும்படி செய்கின்றது. அல்லேலூயா! 106. கவனியுங்கள், ஒரு பாவிக்கு அவ்விதமாக அது செய்யக் கூடுமென்றால், வியாதிக்கும் கூட அது கிரியை செய்யாம்லிருக்குமோ-? இருதயத்திலிருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாணமானது ''அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்'' என்பதை அறிந்திருக்கிறது, அவை தாமே தங்களுடைய வல்லமையால் நின்று அந்த சரீரத்திலிருக்கின்ற அந்த வியாதியானது தங்களுக்கு கீழ்ப்படியும்படிக்குச் செய்கின்றது, ஏனெனில் அது பிசாசாகும். உங்களுக்கு புரிகின்றதா. வியூ-! இது மிகவும் ஆழமான ஒரு காரியமாகும். நான் உங்களுக்கு அதைத் தான் கூறுகிறேன். அதுதான். பாருங்கள். 107. இப்பொழுது, பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணம் உங்கள் மாம்சத்தில் கிரியை செய்கின்றது, ஆனால் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் உங்கள் இருதயத்தில் கிரியை செய்கின்றது. ஆகவே உங்களுடைய இருதயம், உங்கள் இருதயத்திலுள்ள உங்கள் ஆவியானது செய் என்று எதைக் கூறுகிறதோ அதற்கு சரீரமானது கீழ்ப்படியும்படிக்குச் செய்யும். அது முற்றிலும் சரியே. இப்பொழுது, அதைத்தான் பவுலும் கூறினான். மாம்சமானது எப்பொழுதுமே, ''நான் மிகவும் களைப்புற்றிருக்கிறேன்; என்னால் முடியவில்லை; நான் போதுமானவன் அல்ல; என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறும். நான் இங்கே லாயிஸிடம் அல்லது டோலெரஸ் அல்லது யாரோ ஒருவர் என்னிடம் பரிசுத்த ஆவியைக் குறித்து அல்லது அதற்கடுத்த ஒன்றைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது நான் கூறினேன், "என்ன ... '' டோலெரெஸ் ''நான் நலமாக உணரவேண்டிய அச்சமயத்திலே அதற்கு மாறான ஒரு விதத்திலே நான் உணரத்தக்கதாகச் செய்தது என்ன?,'' என்றார்கள். 108. நான் “அந்த பிசாசு தான். அதைப் பெற்றுக் கொள்ள தயாராக நீங்கள் இருப்பதை அவன் கண்டான். "ஒரு சிறு தைரியமூட்டும் தடையை அவள் மீது நான் வைப்பேன் (சகோ.பிரன்ஹாம் அதை விவரிக்க ஒரு சிறு சத்தத்தை உண்டாக்குகிறார்-ஆசி), அதை சிறிது அவள் பேரில் அதிகரித்து, அவளை சிறிது அமைதிபடுத்தி விடுவேன்! என்றான்,'' பாருங்கள்-? ஆனால், ஓ, என்னே, அந்த சமயத்தில் தான் நீ எழும்ப வேண்டும்-! தேவன் உனக்களித்த உன்னுடைய உரிமைகளை உரிமை கோர வேண்டும்'', என்றேன். அதைத்தான் பவுல் கூற விழைகிறான். பாருங்கள்-? அந்த... ''எப்பொழுதுமே'' - அவன் "நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு என்று ... காண்கிறேன்” என்று கூறுகிறான். 109. நான், நீ என்ன செய்ய வேண்டுமென்று கூறட்டும். இதை நான் கவனித்திருக்கிறேன், என் மனைவி மற்றும் நான்... நான் சற்று துரிதமாக முடிக்கிறேன், ஏனெனில் இன்னும் சில நிமிடங்கள் தான் எனக்கு உள்ளன, இன்னும் சில பெரிய கேள்விகள் என்னிடம் உள்ளன. நான் உங்களை நீண்ட நேரம் உட்கார வைக்க விரும்பவில்லை, ஆனால் உங்கள் கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை சிறந்த விதத்தில் பதிலளிக்கவே விரும்புகிறேன். 110. கவனியுங்கள்-! காலையில் என்னால் ஆரம்பிக்க முடியும், ஆகவே நான்... இப்பொழுது, ஒரு கூட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்படிக்கு தேவன் என்னை வழிநடத்துகிறார், நல்லது, சகோதரனே, எல்லா காரியமும் நடந்தேறுவதை சற்று கவனித்துப் பாருங்கள். அல்லது நீங்கள் என்னை வீட்டிற்குச் செல்ல விடுங்கள், அங்கேயும் நீண்ட தூர தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன. இப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். சிறு ஜோசப் நேராக என் கழுத்தை நோக்கி என் மீது ஏறி வருவான். சாராள் ஒரு கேள்வியை என்னிடம் கேட்பாள். பெக்கி பியானோவை வாசிக்க ஆரம்பித்து விடுவாள். நான் “உஷ் - உஷ் - உஷ்!'' என்பேன். என் கையை அவர்கள் மீது வைத்து, "ஹே, உஷ், உஷ், உஷ், நான் - வியாதியஸ்தருக்காக அப்பா ஜெபிக்கப் போகிறேன்” என்று கூறுவேன். ''உம், அப்பா, இதோ பாருங்கள், ஜோசப் இவ்வாறு செய்து விட்டான்...'' நீங்கள் பாருங்கள்-? ஜெபத்தை ஆரம்பித்து விடுவேன். ஜெபம் முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் பொம்மைகளை எடுத்து அமைதியாக இருப்பார்கள். அது பிசாசாகும். நிச்சயமாக அது அதுவே தான். 111. பிறகு நான் வந்து, ''ஜோசப், நீ இன்ன - இன்ன காரியத்தை செய்யக்கூடாது'' என்பேன். உங்களுக்குத் தெரியுமா, முதலாவதாக அவன் ஒரு பழக்கத்திற்குள் வந்து விடுவான் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் பிள்ளைகளிடத்திலும் அதை கவனிக்கலாம், அவர்கள் உங்களிடம் பொய் பேசுவார்கள். ஆம், அது தான் உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கின்ற பொய்யின் ஆவியாகும். இதற்கு ஒரே ஒரு பரிகாரம் தான் உண்டு. ஒரு பெரிய பிரம்பு அல்ல, உங்களுக்கு தெரியும், சகோதரன் ஜெஸ், நாங்கள் உதை வாங்கின அந்த கோல். நாங்கள் தொல்லையில் சிக்கிக் கொண்டால் பழைய துப்பாக்கிகளிலிருந்து அந்த கோல்களை எடுப்பார்கள், ஹிக்கரி மரத்தின் உறுதி வாய்ந்த கட்டை, உங்களுக்கு தெரியும், பழைய துப்பாக்கி வாய் முகப்பு கட்டைகள். இந்த விதமான பரிகாரம் வேலை செய்யாது. ஆனால் ஜெபம் தான் அந்த தீய பிசாசை அப்பிள்ளை இடத்திலிருந்து துரத்தியடிக்கும். அது சரியே. ஜெபம் தான் அதைச் செய்யும். 112. ஆகவே உங்கள் சிறு மோலி தன்னுடைய சிறிய காலை உதைத்துக் கொண்டு, அங்குமிங்கும் வெளியே ஓடி, தன்னுடைய சிறு மூக்கை திருப்பிக் கொண்டு இருப்பாளானால், அவள் மீதிருக்கும் ஆடைகள் இல்லாமல் போகும் விதத்தில் அவளை நீங்கள் அடிக்கலாம்; ஆனால் இன்னுமாக அவ்விதமாகவே செய்து கொண்டு இருப்பாள். ஆனால் நீங்கள் அதை தேவனுக்கு முன்பாக வைத்து, அப்பிள்ளையின் ஆத்துமாவை தேவனுக்கென்று உரிமை கோருங்கள். நீங்கள் அப்படியே செய்து கொண்டு தரித்திருங்கள். எனக்குத் தெரிந்த வரை அது தான் சிறந்த காரியமென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா-! எனக்குத் தெரிந்த வரை அது தான் சிறந்த ஒரு பரிகாரம், அது ஜெபம் தான். 103. இப்பொழுது, நாம் பார்ப்போம். இப்பொழுது இங்கிருக்கின்ற அடுத்த கேள்வி இவ்விதம் இருக்கிறது, உலகம் உண்டாவதற்கு முன்னே முன்குறிக்கப்படுதல் என்றால் என்ன அர்த்தம்; இது வேதாகமத்தில் எங்கு காணப்படுகிறது-? உலகம் துவங்குவதற்கு முன்பே முன்குறித்தல்-? 113. சரி, என் விலையேறப்பெற்ற நண்பரே, நாம் ஒரே நிமிடத்தில் எபேசியர் 1 ஆம், அதிகாரத்திற்கு திருப்புவோம். இது சரியான பதிலாக இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த பொருளைக் குறித்து நீண்ட நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் எபேசியர் 1-வது அதிகாரத்தை வாசிக்க ஆரம்பிப்போம். 114. இப்பொழுது, முதல் காரியமாக, இதை நான் கூற விரும்புகிறேன், இந்த, முன் குறித்தல் என்கின்ற வார்த்தையானது பயிற்று விக்கப்படாத ஒரு கூட்டத்திற்கு முன்பாக உபயோகப்படுத்துவது ஒரு ஊழியக்காரனுக்கு கடினமான வார்த்தையாக காணப்படும். பாருங்கள்-? அது அவ்வாறே தான். நான் அதை உபயோகப்படுத்துவது இல்லை. சில நேரங்களில் இங்கே சபையில்... ஆனால் அங்கே கூட்டங்களில், அங்கே வெளியே... எல்லாம் ஒன்றாக எல்லாவற்றிலிருந்தும் ஒன்றாக சேர்க்கப் பட்டிருக்கையில், நான் அந்த வார்த்தையை நான் கவனிப்பேன். நான் முன்னறிவு என்ற வார்த்தையைத் தான் எப்பொழுதும் உபயோகிப்பேன், ஏனெனில் முன்குறித்தல் என்பது தேவனுடைய முன்னறிவே தான். தேவன் முடிவில்லாதவராக இருப்பதால், முன்னறிவின்படியே அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், அல்லவென்றால் அவர் முடிவில்லாதவரல்ல. பாருங்கள், பாருங்கள்? என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆதலால் முன்னறிவின்படி அவரால் முன்குறிக்க ஏதுவாயிருந்தது-? அதன் காரணமாகத் தான் நான் விசுவாசிப்பதென்னவென்றால், தேவன் - தேவன் ... 115. நீங்கள் சுவாசிக்கின்ற காற்றைப் போல; உங்கள் சுவாசம் தான் உங்களுடைய ஆவி என்கின்ற யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தாரின் கருத்துடன் நான் ஒத்துப் போவதில்லை. அது அவ்வாறே இருக்க முடியாது. பாருங்கள் உங்கள் ஆவி உங்களுடைய இருதயத்தில் தான் உள்ளது. பாருங்கள்-? நீங்கள் உலகத்திற்கு வருமுன்னறே உங்களுடைய ஆவியைக்கொண்டிருந்தீர்கள். தேவன் எரேமியாவிடம், அவன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னறே அவனைப் பரிசுத்தம் பண்ணி ஜாதிக்கு - ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக்கி, அவனை அறிந்திருந்ததாகவும் கூறினார். (பாருங்கள்?) எரேமியா 1:4. 116. இப்பொழுது கவனியுங்கள். ஆகவே இந்த காரியங்களெல்லாம் முன்னறிவு தான் என்பதை நாம் காண்கிறோம். இயேசு பிறப்பதற்கு முன் - யோவான் பிறப்பதற்கு 712 வருடங்களுக்கு முன்னர் ஏசாயா அவனை தரிசனத்தில் கண்டு, வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருந்தவன் இவன் தான் என்று கூறினான் - 712 வருடங்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து, இயேசு கிறிஸ்து உலகத்தோற்றத்திற்கு முன்னர் .... 117. எப்படி...? இதை நாம் வாசிப்போமாக. எபேசியர் 1, 1-வது அதிகாரம் - 1-வது வசனத்திலிருந்து நாம் வாசிக்க ஆரம்பிப்போம். .....அப்போஸ்தலனாகிய பவுல்... (எப்படி இவன் கூறுகிறான் என்று கவனியுங்கள். பவுல் இவ்விதமாக செய்வது எனக்குப் பிடிக்கும். பவுலை எனக்கு பிடிக்கும், உங்களுக்கும் தானே-? ஓ, அவன் கிறிஸ்துவினுடைய அருமையான ஊழியக்காரன் ஆவான். இப்பொழுது இதை கவனியுங்கள்) தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான் களுக்கு எழுதுகிறதாவது: 118. கவனியுங்கள், இது உலகத்திற்கு கூறப்படவில்லை; இது ஒரு அயலானுக்குக் கூறப்படவில்லை. இது இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிற சபைக்கு கூறப்படுகிறது (ஓ, இது அருமையானதாக உள்ளதல்லவா?) இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற சபைக்கு. அது... இப்பொழுது இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக எப்படி நீங்கள் செல்கிறீர்கள்-? ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். இப்பொழுது - எப்படி... ஆகவே அவன் இதை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே கூறுகிறான் (பாருங்கள்?) வெளி உலகத்திற்கல்ல. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு - தேவனாகிய நம்முடைய பிதா - ஸ்தோத்திரம்: அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்-! 119. ஓ, என்னே-! இதன் பேரில் சற்று சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் உண்டாகுமா-? நல்லது, நமக்கு விருப்பமுண்டு. நிச்சயமாக-! அதே பரிசுத்த ஆவி. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார்ந்து, எல்லா ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் தேவன் நம்மை ஆசீர்வதித்து இருக்கின்றார் என்று கூறுகிறது, சகோதரி ரோஸ். நான் நம்புகிறேன் - அந்த அது முந்தின நாளிலே உங்கள் பெயரை என்னால் நினைவு கூற முடியவில்லை. ஜெப வரிசையில் அல்லது ஏதோ ஒன்றில் இருந்தீர்கள் என நான் நம்புகிறேன். பின்னர் அதை நினைவு கூற நான் முயற்சித்தேன். அப்பொழுது நான் - ஆனால் உங்கள் பெயர் ரோஸ் ஆஸ்டின், அது சரியல்லவா...? இங்கே கூடாரத்திற்கு நீங்கள் எப்பொழுதும் வருவது வழக்கம். அதுவே தான். சரி. இப்பொழுது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே - எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதம்... (இந்த மேற்கோளை சரியாக நான் வாசிக்கிறேனா என்று நான் பார்க்கிறேன்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்: அவர் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே அவரோடே கூட கூட்டமாய்க் கூடியுள்ளோம்) . (இப்பொழுது கவனியுங்கள்! எல்லாம் தயாராக இருக்கிறீர்களா?)... தமக்கு முன்பாக... உலகத் தோற்றத்திற்குமுன்னே... (நான் உங்களுக்கு பிரசங்கித்தேன்). கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, 120. இப்பொழுது பாருங்கள், அவன் சபைக்கு பேசமுடியும். அவன் அதை குழந்தைகளுக்கு கூற மாட்டான், ஆனால் ஏற்கெனவே கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற ஒரு சபைக்கு அவன் பேசிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது, அவன் ஏதோ ஒரு சபைக்குச் சென்று “இதோ பாருங்கள்” என்று கூற முடியாது. அது கிறிஸ்துவுக்கு உள்ளாக இருக்கின்ற தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குத்தான். 121. இப்பொழுது நீங்கள் “ஆம், நானும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். நீங்கள் அப்படித்தான் என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் -பெற்றிருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக செல்லக்கூடிய ஒரே வழி அதுவே தானாகும். 1 கொரிந்தியர் 12:13 (பாருங்கள்?) - I கொரிந்தியர் 12வது அதிகாரம். சரி. "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக (அது கிறிஸ்துவின் சரீரம்) ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.'' இப்பொழுது-! அப்படியானால் நாம் ஒரு மனப்பட்டு உன்னதங்களிலே அவரோடு கூட அமர்ந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடி நமக்கு மகத்தான காரியங்களை காண்பித்து, நமக்கு போதித்து, காரியங்கள் நிறைவேறும்படிக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஓ, என்ன ஒரு இடம். 122. அவன், “அவ்விதமாக அழைக்கப்பட்டவர்களாயிருக்கிற நீங்கள், தெரிந்து கொள்ளப் பட்டவர்களாகிய உங்களிடம் நான் பேச விரும்புகிறேன். உலகத் தோற்றத்துக்கு முன்னே தமக்குள் தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார், அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள்.'' என்றான். உலகத்தோற்றத்துக்கு முன்னே தேவன் நம்மை தமக்குள் தெரிந்து கொண்டார். இதே பொருளை இன்றிரவில் நான் பேசுவேன் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிந்திருந்தார். அவர் முடிவில்லாதவர். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே .... ஓ-! வியூ-! பரிசுத்த ஆவியை இப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள். வார்த்தை அதைக் கொண்டு வரும். பாருங்கள்-? அந்த விதமாகத்தான் அது வருகின்றது: “பேதுரு இந்த வார்த்தைகளை பேசின போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.'' 123. உனக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்படவேண்டுமென்று உலகம் என்ற ஒன்று இருக்கு முன்னதாகவே தேவனுடைய எண்ணங்களில் நீ இருந்தாய், ஏனெனில் நீ அதைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார்; தாமாகவே அவர் உன்னைத் தெரிந்து கொண்டார். ஏனெனில் நீ வாஞ்சித்தது... நீ அல்லது இயேசு உங்கள் இருவரில் ஒருவராவது பூமியின் மீது இருப்பதற்கு முன்னதாகவே அவர் உன்னை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். பிறகு உன்னை தமக்குள்ளாகக் கொள்ளத்தக்கதாக உனக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்பட்ட ஒரு வழியை ஆயத்தம் செய்ய இயேசுவை, மரிக்கும்படிக்கு அவர் அனுப்பினார். ஓ, அது... எனக்குத் தெரியும் நான்... இது தான் சபை, நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். ஓ, இது எனக்கு மிகவும் ஐசுவரியமிக்க ஒன்றாகும். இது நான் விரும்பாதது; இது என் வாஞ்சைகளாயிராதது; இது என் சொந்த விருப்பமாய் இல்லாதது; இது என்னுடைய தெரிந்து கொள்ளுதலே அல்ல; இதனுடன் எனக்கு ஒரு தொடர்பும் இல்லாதிருந்தது என்பதை நான் நினைக்கும் போது- ஆனால் உலகமானது துவங்குவதற்கு முன்னதாகவே தேவன் நம்மைக் கண்டு நம்மை ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்திலே நம்முடைய பெயர்களை எழுதி வைத்தார். உலகம் என்கின்ற ஒன்று இருக்கும் முன்பே-! தேவனைக் குறித்து பேசுவது என்பது-! வியூ-! 124. அங்கே நான் அந்த பெரிய கண்ணாடி இருக்குமிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது... ஒரு 120-மில்லியன் வருடங்கள் நீளமுள்ள விண்வெளியை உங்களால் காண முடியும். (நான் இந்த கண்ணாடியின் மூலமாக பார்க்க தருணமில்லாதிருந்தது, ஆனால் அவர்கள் எடுத்த புகைப்படத்தை நான் கண்டேன்). நான் அந்த இடத்திலேயே என் கைகளை மேலே உயர்த்தினேன், நான் ''நீர் எவ்வளவு மகத்துவமானவர், நீர் எவ்வளவு மகத்துவமானவர்!'' என்றேன். அந்த கிரகங்களில் ஒன்றாகிலும் சுழல்வதற்கு முன்பாகவே (அல்லேலூயா!) இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது, நீர் எவ்வளவு மகத்துவமானவராக இருக்கிறீர். ஆம், ஐயா-! 125. உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே, கிரகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சூரியன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சந்திரன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, எந்த ஒன்றுமே இருப்பதற்கு முன்னதாகவே, தேவனும் தம்முடைய சிந்தைகளுமாக, தேவன் மாத்திரமே இருந்த போது, தேவனுடைய நித்திய சிந்தை உன்னை முன்குறித்தலின்படி, முன்னறிவின்படியே உன்னைத் தெரிந்து கொண்டு, நீ பூமியில் இருக்கப் போகிறாய் என்றும், பாவம் என்ற ஒன்று இருக்கும் என்றும் அறிந்திருந்தார். 126. யாரோ ஒருவர், “அப்படியானால், ஏன் - ஏன் பாவம் இருந்தது?'' என்று கேட்டார். அப்படியானால் பாவம் என்ற ஒன்று இல்லாதிருந்தால், ஒரு இரட்சகர் என்கின்ற அவருடைய தன்மை வெளியாகாமலிருந்திருக்கும். அவர் ஒரு இரட்சகராக இருக்கத்தக்கதாக ஒரு பாவி இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் சுகமாக்குபவராக இருக்கத்தக்கதாக ஒரு வியாதியுள்ள மனிதன் இருக்க வேண்டியதாக இருந்தது. ஆமென்-! உங்களுக்கு புரிகின்றதா. அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டியதாய் இருந்தது. தேவன் தான் அதைக்கண்டு அது அவராலே முன் குறிக்கப்பட்டதாய் இருந்தது. பிசாசானவன் காட்சியிலேயே கிடையாது. ஓ, "அப்பா, பிதாவே” என்று பிள்ளைகள் தம்மிடம் அழுது அவர்களை தம்மிடம் கொண்டு வரும் ஒரு கருவியாக சாலையின் ஓரத்திலிருக்கிற குப்பையான அவனை தேவன் உபயோகப் படுத்துகின்றார். அந்த நாளில் தூதர்கள் எப்படிப்பாடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாய் இருக்கும்-! நாம் மீட்பின் சம்பவங்களைப் பாடுகையில் தூதர்கள் தலைகளை தாழ்த்துவார்கள்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அவர்கள் அறியாதிருப்பார்கள். நிச்சயமாக. அவர்கள் இழக்கப் பட்டவர்கள் அல்ல. அது என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. நாம் எவ்வளவு அருமையாக உணர்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு காலத்தில் பாவிகளாயிருந்து தேவனிடமிருந்து அகன்றிருந்து, நம்பிக்கையில்லாமல், இரக்கம் இல்லாதவர்களாய், இந்த சீர்கேடான உலகத்திலே தேவனில்லாமல், மரித்துக்கொண்டு, பிசாசின் பாதாளத்திற்கு போய் கொண்டிருந்த வேளையில்; தேவன் தாழ இறங்கி குனிந்து நம்மை தூக்கி எடுத்து, நம்மை மீட்டார்; இப்பொழுது நாம் தூதர்களுக்கு மேலாக இருக்கிறோம். சரியாக இப்பொழுதே-! 127. அது என்ன-? ஒரு தூதன் பணியாளன் ஆவான். நாமோ குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். அதிகமாக நினைவு கூறப்படுவது யார், உங்களுடைய வேலைக்காரனா அல்லது உங்களுடைய குமாரனா அல்லது குமாரத்தியா-? ஓ, என்னே-! பரிசுத்தவானுக்கான ஜெபம் ஒரு தேவ தூதனை விட இலட்சக் கணக்கான முறை அதிகம் மேலே செல்லும் (ஆம் ஐயா!) ஏனெனில் அவன் குமாரனாயிருக்கிறான். ஓ, என் சகோதரனே, சகோதரியே. அது சரியே. 128. நீ சபை ... நான் விசுவாசிப்பதில்லை .... ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்களாகிய நீங்கள் யார் என்பதையும் தேவன் உங்களை வைத்திருக்கின்ற ஸ்தானத்தையும் நீங்கள் எப்போதும் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய குமாரர்களாய் இருக்கிறீர்கள். ஏன், தேவ தூதன் ஒரு பணியாளன் ஆவான். நீயோ குமாரனாய் இருக்கிறாய்-! ஒரு தூதனால் ஒரு செய்தியை மாத்திரமே கொண்டு வரமுடியும், ஆனால் அதை செயலாக்கத்தில் கொண்டு வருவது நீ தான். ஆமென்-! காட்சியில் இருக்கும் செயலாற்றுபவன் நீ தான். நீ குமாரனாயிருக்கிறாய். உனக்கு செய்தியைக் கொண்டு வரத்தக்கதாக தேவ தூதர்கள் பணியாளர்களாக இருக்கிறார்கள். "நீ இன்ன... இன்னதைச் செய்யும்படியாய் நான் இந்த செய்தியை உனக்கு கொண்டு வந்திருக் கிறேன். இது பிதாவிடமிருந்து வந்திருக்கிறது. நான் இதை உனக்குக் கொண்டு வருகிறேன். ஆம்!'' என்று கூறுவார்கள். அவ்வளவே தான். ஆமென்-! நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். அவர் நம்மை முன்குறித்தார்-! இப்பொழுது ஒரு நிமிடம் சற்று கவனியுங்கள். 103. தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் (கவனியுங்கள், நீங்களாகவே அவ்வாறே இருக்க வேண்டுமென்று முயற்சிக்காதீர்கள், ஏனெனில் உங்களால் முடியாது)... குற்றம் இல்லாதவர்களுமாய் இருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (இப்பொழுது, நாம் தெரிந்து கொள்ளவில்லை.... என்னால் அவரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்-? நானூறு இலட்சக்கோடி, இலட்சக்கணக்கான, இலட்சக் கோடி, நூறாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்பே எப்படி என்னால் அவரைத் தெரிந்து கொண்டிருக்க முடியும்-? ஆனால் அவர் தான் என்னைத் தெரிந்து கொண்டார். ஆமென்-? ஓ, சகோதரன் உட், அதுவே தான், பாருங்கள்-?) ஓ, சகோதரனே, இங்கே சில நிமிடங்களுக்கு முன்னர் நான் கண்ட ஒரு கேள்விக்கு இது ஒரு பதிலாக இருக்கும். எங்கோ சற்று முன்னர் நான் கண்டேன் ... ஓ ஆம். . எப்படி ஒரு மனிதனால் தேவனோடு மிக நெருங்கி ஜீவிக்கையில், அவன் பாவம் இல்லாமல் இருக்க முடியுமா-? இதை கவனியுங்கள். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றம் இல்லாதவர்களு மாய் இருப்பதற்கு... உலகத்தோற்றத்துக்கு முன்னே ... 129. அவருடைய அன்பு இதைச் செய்தது. என்னுடைய பாவத்துக்கு அவருடைய அன்பு பரிகாரத்தை செலுத்தியது. அவருடைய அன்பு அதை எடுத்துப் போட்டது. இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தி அன்பு மாத்திரமே. தன்னுடைய மனைவியை மிகவும் நேசிக்கிற ஒருவனைப் பார்ப்பீர்களானால், அவன் தன் மனைவிக்காக உயிரைக்கூட தாராளமாக விடுவான். மேலும் சகோதர அன்பானது .... 130. அங்கே நகரத்திற்கு வெளியே இருக்கின்ற இடத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மனிதன் இருந்தார், அவர் சபைக்கு எப்பொழுதேனும் ஒரு முறை சபைக்கு வருவார். அவர் தன் சகோதரனின் வீட்டில் முன்னொரு நாளிலே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் ''சகோதரன் பில்லிற்கு ஏதாவது சம்பவித்தால் என்ன ஆகும்?” என்றார். மேலும் அவர், "நான் சந்தோஷமாக என் மார்பை உந்தித் தள்ளி அவரை தாக்க வரும் துப்பாக்கி குண்டுகளை என் மார்பில் வாங்கிக் கொள்வேன்” என்றார். பாருங்கள்-? உனக்காக மரித்தல். அது தான் அன்பு. தன்னுடைய சகோதரனுக்காக உயிரைக் கொடுக்கும் அந்த மனிதனின் மகத்தான அன்பைப் போல வேறெதுவும் கிடையாது. பாருங்கள்-? 131. அன்பினால், அன்பினாலே உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது கவனியுங்கள்: தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.... (இதோ, முன்குறித்தல் என்கின்ற வார்த்தை ) .... முன்குறித்திருக்கிறார். 132. சகோதரன்மை இதைக் குறித்தென்ன? இது அற்புதமானதல்லவா-? அவர் உன்னை நேசித்தார். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே அவர் உங்களை நேசித்தார். உங்கள் சுபாவத்தை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பலவீனங்களை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பழக்கங்களை அவர் அறிந்திருந்தார். நீங்கள் என்னவாய் இருக்கப் போகிறீர்கள் என்பதையும், உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருந்தார். அவர் அப்பொழுது அங்கிருந்த அந்த மகத்தான பிரபஞ்சத்தை முழுவதுமாக பார்த்து "அவனை நான் காண்கிறேன்'' என்றார். உயிரின் ஒரு சிறு தூள் கூட இருப்பதற்கு முன்பாகவே அவர் அதைச் செய்ததால், நீங்கள் தேவனோடு நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நீங்கள் நித்தியமாக மாறுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் தேவனோடிருந்தீர்கள், தேவனின் பாகமாக இருந்தீர்கள். நான் என்ன கூற விழைகிறேன் என்பதை உங்களாலே காண முடிகிறதா-? நீங்கள் தேவனைப் போன்றே நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் .... 133. என் தந்தை எவ்வளவாக பிரன்ஹாமாக இருந்தாரோ அதே விதமாகவே நானும் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பிரன்ஹாமின் இரத்தமாக இருக்கிறேன். நான் என் தந்தையுடன் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் என் தந்தையிலிருந்து நான் பிறந்தவனாயிருப்பதால் அவரோடே நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். நீங்களும் உட் (Wood) ஆக இருக்கிறீர்கள். ஏனெனில் உங்கள் தந்தைக்கும் உட் என்று தான் பெயர். உங்கள் தந்தை ஜிம் வுட் (Jim Wood) எவ்வளவாக இருந்தாரோ அதேவி தமாக நீங்களும் வுட் (Wood) ஆக இருக்கிறீர்கள். நீங்கள் பாங்க்ஸ் வுட் (Banks Wood) அவ்வளவே. ஆமென்-! ஓ, என்னே-! நீங்களும் நெவில் தான். ஏனெனில் உங்கள் தகப்பனும் நெவில் ஆக இருந்தார். அவர் எவ்வாறு நெவில்லாக இருந்தாரோ அந்த விதமாக நீங்கள் நெவில்லாக இருக்கிறீர்கள். மகிமை-! தேவனும் நித்தியமானவராக இருப்பதினால் நாமும் நித்தியமானவர்களாக இருக்கிறோம்; ஏனெனில் நாம் தேவனுடைய ஒரு பாகமாயிருந்து, நித்திய ஜீவனின் மூலமாக தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், ஆதலால் நாம் அழிந்துபோகவே முடியாது. ''கடைசி நாட்களிலே நான் அவர்களை எழுப்புவேன்”. 134. அவர்கள் அங்கே பவுலின் தலையை துண்டிக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த போது... அவன் அந்த மரண பாதையை கடக்க வேண்டியவனாக இருந்தான். தீமோத்தேயுவிற்கு அந்த கடைசி நிருபத்தை எழுதினான், ''நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்-! இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” என்றான். அப்பொழுது மரணம், ''நான் உன்னை நோக்கி வருகிறேன்” என்றது. அவன் "உன் கூர் எங்கே?'' என்றான். பாதாளம் அவனிடம் "உன்னை நான் விழுங்குவேன்'' என்றது. 135. அவன், "உன் ஜெயம் எங்கே-?'' என்றான். அவன் ஒரு உதாரணத்தைக் கொண்டிருந்தான். அவன் திரும்பி கல்வாரியை நோக்கிப் பார்த்து, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். உங்களுக்கு புரிகின்றதா. ஓ, அது உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யத்தான் வேண்டும்; அது அப்படியே ஆகத்தான் வேண்டும். 136. ஜீவன்... வார்த்தையானது புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது, ஜீவன், ஜீவனுமாகிய வார்த்தை ஜீவனைப் பிடித்துக்கொள்கிறது, ஆகவே மானிடனிற்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று கூச்சலிடத் தான் வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, யாரோ ஒருவர், "பில்லி, மக்கள் எழும்பி, தங்கள் கைகளை மேலே அசைத்து அல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லது ஆமென், என்று கூறச் செய்வது எது-?'' என்றார். வேதாகமம் என்ன கூறுகிறதென்பதை கவனியுங்கள். 137. பவுல், ''நாம் எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும் போது கல்லாதவர்களாவது... அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால்; அவன் ஆசீர்வதிக்கப்பட்ட- வனாயிருந்தால் எவ்விதம் அவன் 'ஆமென்' என்று கூறுவான்-?'' என்றான். பாருங்கள்-? நீங்கள் எதைப்பேசுகின்றீர்களோ அதைக்குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவர் களாக இருத்தல் வேண்டும். அந்நிய பாஷை, அது ஒரு வியாக்கியானம் அல்லது வெளிப்படுத்தலாயிருந்தால் தான்... அதை உங்களால் புரிந்து கொள்ளக் கூடுமானால், அப்பொழுது உங்களால் ''ஆமென்” என்று கூறமுடியும். அவன் என்ன சொல்லுகிறான் என்பதை அவன் அறிந்துகொள்ளுகிறான். பாருங்கள்-? 138. இப்பொழுது-! ஓ, என்னே-! அங்கே தாவீதை நோக்கி அந்த சத்துரு வந்து கொண்டிருந்த அந்த நாளைப் பாருங்கள். அவன் அவர்களுக்கு திராட்ச ரசம் மற்றும் அப்பம் நல்ல இறைச்சியும் அளித்தான். அப்பொழுது அந்த விரோதி வந்து கொண்டிருக்கையில் என்ன செய்வதென்று திகைத்து நின்றார்கள்; இவர்களெல்லாரும் அங்கே வெளியே ஒன்று கூடினார்கள்; எல்லா இஸ்ரவேலரும் விருத்தசேதனத்திற்கு கீழ் ஒன்று கூடினார்கள். (கவனியுங்கள்-? இது பழைய யூத விருத்தசேதனத்தின் கீழாகும்) அப்பொழுது அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, ''தேவன், நீரே எங்கள் தேவனாவீர். நீர் எங்களை காத்துக் கொண்டு வந்துள்ளீர். நீர் தீர்க்கதரிசியாகிய மோசேயைக் கொண்டு வந்து இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தீர். வனாந்திரத்தினூடாக நீர் அவர்களைக் கொண்டு வந்தீர். அவர்கள் அங்கே இருந்தபோது அவர்கள் மீது கைவைக்கவும் கூட யாருக்குமே துணிவில்லை. உம்முடைய சுதந்திரத்தின் அருகில் யாருமே வரவில்லை. அவர்கள் அப்படிச் செய்ய பயந்தனர்,'' என்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை சிறியதாக இருந்தது, ஆனால் அவர்களை எதிர்த்து வந்தவர்கள் அப்படியே திரும்பி ஓடினர். ஏனெனில் அவர்களைத் தாக்க வந்தவர்கள், தங்கள் தாக்குதல் தங்கள் மீதே திரும்பக் கண்டார்கள். அவன், ''ஓ, நீர் எவ்வளவு மகத்துவமான தேவன். இப்பொழுதும் கர்த்தாவே நாங்கள் பாவம் செய்தோம்... இதோ எங்கள் மனைவிகள், இதோ எங்கள் சிறு பிள்ளைகள்; இந்த மணி நேரத்தில் நாங்கள் இடுக்கமான ஒரு சூழலில் இருக்கிறோம், ஓ, நாங்கள் என்ன செய்வது-? விரோதி வந்து கொண்டிருக்கிறானே. நாங்கள் என்ன செய்வது-?'' என்றான். 139. அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் ஆவியானவர் கூட்டத்திலிருந்து ஒருவனின் மீது வந்தார். அப்பொழுது அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது நீங்கள் சண்டையிடமாட்டீர்கள்; அப்படியே தரித்திருங்கள்! (ஆமென்!) அந்த குறிப்பிட்ட வழியாகச் சென்று அங்கே அவர்களைச் சந்தியுங்கள்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அவர் அப்பொழுது சத்துருக்கள் நடுவில் குழப்பம் நேரிடும்படிக்குச் செய்தார், அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்துக் கொண்டனர். உங்களுக்குப் புரிகின்றதா. உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து இயசுவுக்குள்ளாக தெரிந்து கொள்ளப்படத்தக்கதாக முன்குறிக்கப்பட்டார்கள். இப்பொழுது.., 104, ஒரு மனிதன், தேவனோடு மிகவும் நெருங்கி ஜீவிக்கும் போது அவன் பூமியிலிருக்கையில் அவனால் பாவமே செய்ய முடியாது என்று நீர் கூறினர். அப்படியானால் 1-யோவான் 1:8-லிருந்து 10 வரை விளக்கவும். 140. நாம் 1 யோவான் 1:8 முதல் 10 வரை பார்ப்போம். இவைகளை பார்க்க இன்னும் சிறிது நேரம் எனக்கிருக்குமானால்... எனக்கிருந்தது; நண்பர்களே, அதை நான் எடுக்கவில்லை. நான் - நான் வெளிய செல்ல முயற்சி... நல்லது, நான் யோவானை பிறகு பார்க்கிறேன், நான்... அது எபிரெயர்களின் அடுத்த பகுதியில் இருக்கும். சரி. 1 யோவான் 1:8 முதல் 10 - யோவான் 1:8 முதல் 10. நமக்குப் பாவமில்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நமமைச்சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்-களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 141. இப்பொழுது, என் சகோதரனே சற்று பொறுத்தருள்க. இங்கே 3வது அதிகாரத்திற்கு திருப்பி 9-வது வசனத்தைப் பாருங்கள். சரியாக என் வேதாகமத்திலுள்ள பக்கத்தில் நீங்கள் எடுங்கள். எட்டாம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்: பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாய் இருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதி முதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனு டைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார் (இப்பொழுது நான் பேசிக் கொண்டிருந்ததைக் குறித்தே தான், உன்னை அறிந்து தேவன் முன் குறிக்கின்றார்) தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்ய மாட்டான். 142. இவ்வாறு தான் வார்த்தை கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்- களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. இப்பொழுது சில மக்கள், ''நல்லது, இப்பொழுது, இங்கே ஒரு அருமையான சிறுமி அல்லது அருமையான சிறு பையன் இங்கே உள்ளார்கள். இவர்கள் ஆரம்பத்தில் பாவம் இல்லாதவர்கள்'' என்று கூறுகிறார்கள். நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்கள் பேசுகிறவர்களாக உலகத்திற்கு வந்தீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் பிறந்த போது, நீங்கள் ஒரு பொய்யனாக, ஒரு திருடனாக இருந்தீர்கள், இருக்கின்ற எல்லா காரியங்களும், எல்லா பாவமும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள், ஒரு திருடனாக அல்ல, ஏனெனில் நீங்கள் திருடவில்லை. ஆனால் நீங்கள்... நீங்கள் ஒரு பொய்யன் அல்ல, ஏனெனில் நீங்கள் பொய் பேசவில்லை. ஆனால் நீங்கள் பிறந்த போது, அந்த ஆவி உங்களுக்குள் இருந்தது, ஏனெனில் நீங்கள் உலகத்தாராயிருந்தீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் சீர்படத்தக்கதாக உங்களுக்குள் சீர்திருத்தத்தைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் மரித்து பிறகு பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். சிலுவையிலறையப்படுதல் இல்லாமல் உங்களால் பிறப்பை கொண்டிருக்க முடியாது; உங்களால் உயிர்த்தெழுதலைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக உயிர்த்தெழத்தக்கதாக உலகத்தின் காரியங்களுக்கு நீங்கள் சிலுவையிலறையப்பட்டாக வேண்டும். 143. நீங்கள் உங்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களின் பேரில் இன்னும் அதைப் போன்றவைகளின்பேரில் சார்ந்திருக்கப்போகின்றீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறக்கவே முடியாது. நீங்கள் அதை மறக்க வேண்டும், பவுல் செய்தது போல, அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறந்து, கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறெதையும் அறியாதவர்களாய் புதியதாகப் பிறக்க வேண்டும். ஓ ... இங்கே ...நான் அதை உங்களுக்கு... பாருங்கள்-? ஒரு புது சிருஷ்டியாகச் செய்வது பிறப்பாகும். இங்கே இருக்கின்ற அந்த கிரேக்க வார்த்தை, முன்பொரு நாள் நான் கிரேக்க அகராதியில் நான் ஆராய்ந்தேன், பிறப்பு என்கின்ற வார்த்தைக்கு ''சிருஷ்டிப்பு” என்று அர்த்தம். அது “நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதுச் சிருஷ்டிகளாய் இருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. அங்கே ஒரு வார்த்தை இருக்கிறது, சிருஷ்டி என்ற வார்த்தை சிருஷ்டிப்பு என்பதே. நீங்கள் ஒரு புது சிருஷ்டிகளாக இருக்கிறீர்கள். உலகத்தில் அல்ல, ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக. நீங்கள் ஒரு புதிய ... 144. இப்பொழுது, நீங்கள் உலகத்திலிருந்த போது, ஓ, அந்த ஆடம்பரமான காரியங்கள், நேர்த்தியான ஆடைகள் அல்லது அழகான ஏதோ ஒன்றை உங்களுக்குத் தெரியுமா என்கிறீர்கள். பிறகு... அது அந்தப் பக்கத்தில் பாருங்கள்-? "ஓ, நான் சபைக்குச் செல்கிறேன், நிச்சயமாக. நான் நரகத்திற்குப் போக விரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் அறிவீர்கள்... ''ஒரு வாலிபப் பெண்ணிற்கு பழுப்பு நிறக் கண்கள் அழகாக உள்ளன, அல்லது ஒரு வாலிபப் பையனுக்கு சுருளான தலைமயிர் தான் அவனுக்கு வசீகரம் - அல்லவென்றால் ''அவன் ஒரு ... '' ஏதோ ஒன்று அல்லது மற்றொன்று - அல்லது இச்சையுள்ள அல்லது குடிக்கின்ற அல்லது ஏதாவது ஒன்று கவனத்தை கவர்ச்சிக்க ஏதோ ஒன்று - என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தான் உலகம்; நீங்கள் உலகத்திலிருக்கிறீர்கள். வேதம், ''நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களில் தேவ அன்பு என்பதே இல்லை,'' என்று கூறுகின்றது. ஆகவே அதை உங்களிடத்திலிருந்து வெளியே எடுத்துப் போடத்தக்கதாக, நீங்கள் மரிக்கத் தான் வேண்டும், மரிக்க வேண்டும், சிலுவையிலறையப்பட வேண்டும், அடக்கம் பண்ணப்பட வேண்டும், பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாக உயிர்த்தெழ வேண்டும். 145. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் முன்னர்; நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிக்க வேண்டும். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரை உங்களிடம் நித்திய ஜீவன் கிடையாது, ஏனெனில் அது தான் நித்திய ஜீவன். பரிசுத்த ஆவி தான் தேவன்; அது உங்களுக்குள் இருக்கின்ற தேவனுடைய ஜீவன் ஆகும். அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா-? பாருங்கள்-? கவனியுங்கள்-! பாருங்கள்-? நீங்கள் அதற்கென்று விசுவாசிக்கின்றீர்கள். 146. சற்றுபொறுங்கள், இங்கே ஒரு அருமையான காரியம் இருக்கின்றது. இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்குமானால் பெண்களாகிய நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். (பாருங்கள்) இதில் காரியத்தை ஆணித்தரப்படுத்தலாம். ஒரு தாய் ஜீவனை எடுக்கின்றாள். ஆனால் குழந்தையானது இன்னும் பிறக்காமலிருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த குழந்தையை சரியாக பாவித்து இயற்கை விதிகளைக் கொண்டு சரியாக பேணுவீர்களானால் அந்த குழந்தையானது இயற்கையாகவே பிறக்கும். ஆனால் நீங்கள் இயற்கையான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால், குழந்தை மிகவுமாக பாதிக்கப்படும், அல்லது ஏதோ ஒன்று அதற்குச்சம்பவிக்கும், அதினால் குழந்தைக்கு தொல்லை ஏற்படும் (பாருங்கள்?) அது பிறப்பதற்கு முன்பாக அது அதைக் கொன்று போடும். 147. நல்லது, அதுவே தான் காரியம். அந்த பாதிப்புகள் சாத்தானிடமிருந்து வருகின்றன. சாத்தான் நரகத்தின் விஷ அம்புகளை எடுத்து எய்து சபையை பாதிப்புறும்படிக்குச் செய்ய முயற்சிக்கின்றான். அது பிறப்பதற்கு முன்பே அதை அவர்கள் கொன்று விடுகின்றனர். ஆனால் நீங்கள் வேதாகமத்தை எடுத்து அதினாலே போஷித்து - அதற்கு குழந்தை ஆகாரத்தை அளித்தால், அந்த தாய் போதுமான விட்டமின்களை எடுத்து... நல்லது எனக்குத் தெரிந்த வரையில் இது தான் வைட்டமின்களில் சிறந்த வைட்டமின் ஆகும். ஆவிக்குரிய வைட்டமின் ஆகும். பாருங்கள்-? அது உங்களை வளரும் படிக்குச் செய்கிறது. 148. இப்பொழுது, சபையானது அந்த ஆவிக்குரிய வைட்டமின்களை புசிக்க வேண்டியதாயுள்ளது; அந்த வைட்டமின்கள் சரியாக இங்கே உள்ளது, அவை ஒரு புத்தகத்தில் முழுமையாயுள்ளன. ஆகவே நீங்கள் அந்த ஆவிக்குரிய வைட்டமின்-களை புசிக்க, கற்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், அது குழந்தையை பிறப்பிற்கு கொண்டு வரும். நான் என்ன கூற விழைகின்றேன் என்று உங்களுக்கு புரிகின்றதா-? 149. இப்பொழுது அந்த சிறு குழந்தையானது ஜீவனைப் பெறுகையில் - அது ஜீவனைப் பெறுகையில், அந்த சிறிய அணுக்கள், செல்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு அது அசைந்து மற்றும் உதைத்துக் கொண்டிருக்கும். அது அப்பொழுது அசைந்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்னுமாக அது பிறக்கவில்லை. ஆனால் அது உலகத்தை வந்தடைந்தவுடன் ஒரு மருத்துவரோ, தாயோ அல்லது யாராவது ஒருவர் அதை மேலே தூக்கி (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அதற்கு ஒரு சிறிய அடி கொடுப்பார். அப்பொழுது அது "வீல் வீல்' என்று கூச்சலிடும். (பாருங்கள்?) அப்பொழுது அது சுவாசிக்க ஆரம்பிக்கும். அது ஜீவ சுவாசத்தை சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அது ஜீவிக்கின்ற ஆத்துமாவாகி விடுகின்றது. 150. ஆகவே அது தான் சில சமயங்களில்... நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறத் தயாராக இருக்கும் போது; நீங்கள் பிரசவ வேதனையில் இருப்பீர்கள்; நீங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று வாஞ்சித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களில் எத்தனைப் பேர் சரியாக இப்பொழுதே அவ்விதமாக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வாஞ்சித்து, அது உண்மையாகவே என்னவென்பதை அறிய விரும்பி, அதற்குள்ளாகச் செல்ல வேண்டுமென்று இருக்கிறீர்கள்-? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற விரும்புகிறவர்கள் எத்தனை பேர்-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்-? நீங்கள் பிரசவ வேதனையில் இருக்கிறீர்கள், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் - விடுவிக்கப்பட வாஞ்சிக்கின்றீர்கள். உங்களுக்குள்ள தேவை என்னவெனில் ஒரு சிறு சுவிசேஷ அடி, அதைப் போன்ற ஒன்று (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அப்பொழுது நீங்கள் "மகிமை-!'' என்று கூச்சலிடுகிறீர்கள். அது சம்பவிக்கும் போது... நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் என்னைக் குறித்து நினைப்பதை நானறிவேன், ஆனால் உலகத்திற்கு பைத்தியமாக காணப்படுகின்ற கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாக நாம் - நாம் இருக்கிறோம். ஏதோ ஒன்று உள்ளில் கூச்சலிடுகின்றது; அப்பொழுது அது வந்து கொண்டேயிருக்கிறது. 151. ஒரு நபர் கூறினதைப் போன்று, அது தண்ணீர் வருவது நின்று போன ஒரு குழாயைப் போன்று. நீங்கள் அதற்குள் ஒரு சிறிய கம்பியை நுழைத்து, கம்பியின் இந்த முனையைப் பிடித்து அழுத்தி குத்தித் தோண்டுவீர்களானால் அப்பொழுது தண்ணீர் வேகமாக அதினூடாக வரத்தவிக்கும். நீங்கள் இன்னுமாக தோண்டுவீர்களே ஆனால், அங்கே ஏதோ ஒன்று நுழைய தீவிரிக்கிறதை நீங்கள் காண்பீர்கள். உங்களால் அதை உணர முடியும்; அது அந்த முனையில் இருக்கின்றது. பிறகு அந்த கம்பியை வேகமாக மேலே இழுப்பீர்களானால் (சகோதரன் தண்ணீர் பாய்ந்தோடுகின்ற இரைச்சலின் சத்தத்தை வாயால் சத்தமிட்டுக் காட்டுகிறார்-ஆசி) அந்த தண்ணீரானது குழாயினுள் வேகமாக வரும். அந்த விதமாகத் தான் அது இருக்கிறது. அப்பொழுதிலிருந்து அந்த தண்ணீரானது வந்து கொண்டேயிருக்கின்றது. அந்த விதமாகத் தான் பரிசுத்த ஆவியும் கூட வருகின்றது. பாவமானது குழாய்களை அடைத்துப் போட்டது. நீங்கள் பின்னே சென்று ''நான் அமைதியானவன்...? உங்களுக்குத்தெரியுமா...? மக்கள் என்னைத் தவறாக எண்ணுவார்கள்....? அந்த பரிசுத்த ஆவி ... '' என்பீர்கள். முதாலாவதாக என்ன சம்பவிக்கிறதென்று தெரியுமா-? 152. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியின் சிறு அசைவை உணரும் போது... நீங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதை அதிகமாக விரும்புவீர்கள்- உங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதிகமாய் விரும்புவீர்கள். "நான் அதைப் பெற்றாக வேண்டும் அல்லது நான் மரித்து விடுவேன்'' - எல்லாவற்றைக் காட்டிலும் அதையே நீங்கள் மேலாகக் கருதுவீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்கிறீர்கள். ''கர்த்தாவே, இது தான்” என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் குப்பியை வெளியே இழுக்கிறீர்கள். வீயூ! இதோ அது வருகின்றது-! வேகமாக வருகின்றது-! ஓ, என்னே-! விடுதலை-! ஓ-! என்னே-! அங்கே ஒரு...? அங்கே ஒரு ஜீவனானது அமர்கிறது. நீங்கள் “தேவனுக்கு மகிமை-?'' என்று கூறுகிறீர்கள். 153. பெந்தெகொஸ்தேயில் அங்கே பேதுரு அங்கே பின்னால் ஒளிந்து கொண்டு "கதவைத் திறந்து வெளியே பாருங்கள், அங்கே யூதர்கள் யாராவது வருகின்றனரா என்று பாருங்கள்” என்றான். "இல்லை. யாரையும் என்னால் காணமுடியவில்லை.'' ''சரி; அப்படியே தரித்திருங்கள்; ஏனெனில் நான் உங்களுக்கு கூறுகிறேன் - அவர்கள் இங்கே மேலே வருவார்களானால்...? 154. அவர்கள் எல்லாரும் அங்கே அமர்ந்திருந்தனர், ஒரு பெரிய பலத்த இடிமுழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு சத்தமானது வந்தது. அது அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதுமாக நிரம்ப ஆரம்பித்தது. ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம்பித்தது. அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே ஓடினர்; கதவுகளைத் திறந்தனர், படிகட்டுகளின் கீழாக ஓடி வெளியே சென்று குடிகாரர்களைப் போல தள்ளாடிக் கொண்டு அங்கே... ஆவியினால் நிறைந்து, கூச்சலிட்டு, ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தனர். 155. அவர்களோ, ''இந்த மனிதர் குடித்து வெறித்திருக்கின்றனர். இவர்கள் கூறுவதை கவனியுங்கள். இயேசு சிலுவையிலறையப்படும் போது அவரை மறுதலித்த, கதவிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் அந்த கோழையை அங்கே பாருங்கள். 'அவரை எனக்கு தெரியவில்லை, தெரியாது' என்றானே அவன். ஒரு சிறிய பெண், 'ஆம், உன் பேச்சு உன்னை அடையாளம் காட்டுகிறதே. மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன்' என்றாளே, அதற்கு இவன், 'அவரை நான் அறியேன்' என்று கூறி சபிக்கவும் செய்தானே,'' என்றார்கள். 156. ஆனால் வாய்க்காலானது திறக்கப்பட்டு ஆவியானவர் அவன் மூலமாக பாய்ந்தோட ஆரம்பித்த போது அவன், ''யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள் (ஆமென்!) நான் தான் தலைவன். இதை நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக; இவர்கள் குடியினால் வெறிகொண்டவர்கள் அல்ல. (தன் சபைக்காகப் பேசுகிறான்) நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது: 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் கூறினார்'' என்றான். உம் - ம் - ம், என்ன ஒரு வித்தியாசம்-! வியூ! என்னே-! இது ஒரு பயங்கரமான காரியம் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம், ஆனால் சத்தியம் என்ன என்பதை நீங்கள் காண நான் - நான் - அதைச் செய்ய வேண்டும். அதில் அப்படியே தரித்திருங்கள். 157. இப்பொழுது, நிச்சயமாகவே நீங்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள். 158. இப்பொழுது, நான் இதை விவரிக்கத்தக்கதாக - இந்த நாளிலே ... ''நாம் பாவஞ் செய்யவில்லை என்போமானால், நாம் தேவனைப் பொய்யராக்குகிறவர்களாய் இருப்போம்.” நீங்கள் பாவம் செய்வீர்கள் என்று கூறியிருக்கிறார். நீங்கள் பாவம் செய்யவில்லையென்பீர்களானால் ... நான் ... 159. ''நான் பாப்டிஸ்ட் சபையில், மெத்தொடிஸ்ட் சபையில், பெந்தெகொஸ்தே சபையில், பிரஸ்பிடேரியன் சபையில் பிறந்திருந்தேன்; நான் அதில் பிறந்திருந்தேன்.'' அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே பிறப்பிக்காது, நீ அதிலிருந்து மறுபடியுமாக பிறந்து வெளியே வரவேண்டும். அது சரியே. நாம் பாவமே செய்யவில்லையென்று கூறுவோமானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். ஆகவே அந்த வார்த்தை, அது தான் சத்தியமாயிருக்கின்றது. வசனமே சத்தியம் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்-? ''ஆதியிலே வார்த்தை இருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி... வார்த்தை” “பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.'' ஆகவே அவர் தான் அந்த வசனம், வார்த்தை. பாருங்கள்-? ஆகவே அந்த வார்த்தை அல்லது கிறிஸ்து உங்களுக்குள்... அவர் தான் வார்த்தையாயிருந்தார். உங்களில் எத்தனை பேர் அதை அறிவீர்கள்-? பாருங்கள்-? சரி. 160. நல்லது இதை நாம் இந்த விதமாக வாசிப்போம், ''நீங்கள் பாவஞ்செய்யவில்லை என்பீர்களானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மேலும் கிறிஸ்து நமக்குள் இல்லாதிருக்கிறார். ''பாருங்கள், பாருங்கள்-? இப்பொழுது அது... பாருங்கள், நீங்கள் பாவஞ் செய்யவில்லை என்று கூறுவீர்களானால் நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கத் தான் வேண்டும். 161. இப்பொழுது, நாம் அடுத்த வசனத்திற்குச் செல்வோம், ''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், பாவம் செய்யான், ஏனெனில் .... '' 162. இப்பொழுது பாவம் என்றால் என்ன-? யார் அதைக் கூறினது, யாரோ ஒருவரா-? அவிசுவாசம். வேதாகமம் அதைத்தான் பாவம் என்று கூறுகின்றது. ஒரேயொரு பாவம் தான் இருக்கின்றது, அது அவிசுவாசமாகும். அது சரி. ''அவரை விசுவாசியாதவனோ ஏற்கெனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.'' ஆகவே நீங்கள் ஒருவன் பாவம் செய்வான். 163. இப்பொழுது நீங்கள், "ஆம் இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அந்நாட்களிலே அவர்கள் பரிசுத்த ஆவியை அந்த விதமாகப் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன், ஆனால் இப்பொழுது அவ்விதமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்'' என்று கூறலாம். 164. ''ஆனால், சகோதரனே, வேதாகமம், 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்' என்று கூறுகின்றது” ''எனக்குத் தெரியும், ஆனால்... நீங்கள் பாவஞ் செய்கிறீர்கள். நீங்கள் சரியாக பாவம் செய்கிறீர்கள். தேவன் கூறியதை நீங்கள் அவிசுவாசிக்கிறீர்கள். ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” 165. ''நல்லது, எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ள விதம் என்னவென்றால்... ''உங்களுக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. வேதாகமம் கூறுகிறது - அவர் கூறினார், ''எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக.'' அது சரி. நீங்கள் ''நல்லது, அவர் முக்கியமானவரே, அவர் மாறாதவர் தான், ஆனாலும் என்னால் ...அவர் மாறாதவர் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்-?” எனலாம். ''ஆம், அவர் இங்கே இருந்தபோது செய்த அதேகாரியங்களை சபையில் செய்கின்றார்'' 166. ''ஓ, என்னால் அதை விசுவாசிக்க முடியவில்லை,'' என்றால் நீ பாவம் செய்கின்றாய். நீ பாவம் செய்கின்றாய். தேவனால், பரிசுத்த ஆவியால் பிறந்த ஒருவன் அந்த காரியங்களைக் கூறமாட்டான். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தக் காரியங்களைக் கூறினால், அதை அவன் பெற்றுக்கொள்ளவில்லை என்பதன் அத்தாட்சியாக அது காணப்படுகிறது. அவன் என்ன செய்திருந்தாலும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவனுக்கு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் இல்லையெனில், உயிர்த்தெழுதலின் வல்லமையில் விசுவாசம் இல்லையெனில், முதலாவது காலத்திலே எப்படி பரிசுத்த ஆவியானது ஊற்றப்பட்டதோ சரியாக அதே விதமாக நம்மீது ஊற்றப்பட்டிருப்பதை விசுவாசிக்காமல் இருந்தால், நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிற அதே தேவன், அப்போஸ்தலர்கள் செய்த அதே காரியங்கள் சரியாக இப்பொழுது நடைபெறுகின்றன, அந்நிய பாஷையில் பேசி, களிகூர்ந்து மற்ற எல்லாகாரியங்களும்; இவைகளை அவன் விசுவாசிக்கவில்லையெனில் அவன் தேவனால் பிறந்தவன் அல்ல. ஏனெனில் தேவனால் பிறந்த எவனும் அந்த விதமான பாவங்களை செய்ய முடியாது. அவர்கள் தேவனால் பிறந்தவர்களா இல்லையா என்பதை இந்த விதத்தில் தான் கண்டறிய வேண்டும். 167. நீங்கள் ஒரு நபரிடம் சென்று, ''டாக்டர். இன்னார்- இன்னார் அவர்களே, ரேவரெண்ட், டாக்டர்., அல்லது இன்னார் - இன்னார் அவர்களே (அது அருமையானது தான், எனக்கு அவ்வாறு பட்டங்கள் இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணுகிறேன்), அப்போஸ்தலர்கள் அன்று செய்த விதமாக சபையிலும் தெய்வீக சுகமளித்தலானது செய்யப்பட வேண்டுமென்பது உண்மைதானோ-?'' என்று கேட்டால். ''ஓ இல்லை, இல்லவே இல்லை!'' என்பானென்றால், அவன் பாவம் செய்கின்றான். அவன் ஒரு அவிசுவாசி. அது சரி. 168. நீங்கள், ''அவர்கள் அங்கு செய்தது போல நாமும் அதே விதமாகவே பரிசுத்த ஆவியை பெறுவோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் இங்கே வேதாகமத்தில் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அது என்ன கூறுகிறதென்றால்... பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அவர்கள் குடித்து வெறி கொண்டவர்கள் போல தள்ளாடினார்கள், அவர்கள் வெளியே ஓடி அந்த மக்களின் பாஷைகளிலே பேசினார்கள், அதைப் போன்ற காரியங்களைச் செய்தார்கள்; குடித்து வெறித்தவர்களைப் போன்று காணப்பட்டார்கள், சபையும் அவர்கள் குடித்து வெறித்திருந்தார்கள் என்று எண்ணுகிறது. பாப்டிஸ்டு சபையில், நம்முடைய பாப்டிஸ்ட் சபையில், நம்முடைய மெத்தோடிஸ்ட், நம்முடைய பிரஸ்பிடேரியன் சபையில், அல்லது எதுவாயிருந்தாலும் சரி, நாம் பரிசுத்த ஆவியைப் பெறுகையில் நாம் அந்த விதமாக நடந்து கொள்வதைக் என்னால் காண முடியவில்லையே” என்று கேட்கலாம். ''நல்லது, பிள்ளையே, நான் கூறுவதென்னவென்றால் அது அந்த 12-பேருக்கு மாத்திரம் தான்.'' அவன் பாவம் செய்கின்றான். அவன் தேவனுடைய ஆவியால் பிறந்தவனல்ல, ஏனெனில் வேதாகமம் கூறுகிறது ''தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் அவிசுவாசிக்க மாட்டான். அவன் ஒரு விசுவாசி, அவனால்... '' ஏன்? ஏன்? ஓ, இது தான் காரியம். அந்த புறாவானது அவனுக்குள் இருந்து அவனை வழி நடத்துகிறது. ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் இருக்கின்றது, அவனால் அதை மறுதலிக்கவே முடியாது; அவனால் முடியாது. அது தேவனுடைய ஆவியாக இருக்குமானால், தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியாது. நான் என் சொந்த வார்த்தையை மறுதலிப்பேனானால் அப்பொழுது நான் ஒரு பொய்யனாக ஆகிவிடுவேன். ஆகவே நீங்கள் தேவனுடைய ஆவியைக் கொண்டு இருக்கிறேன் என்று கூறி, தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பீர்களானால், ஒன்று தேவன் ஒரு பொய்யராக இருக்க வேண்டும் அல்லவென்றல் நீங்கள் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும், ஒன்று இப்படியிருக்க வேண்டும் அல்லது மற்றதாயிருக்க வேண்டும். ஆகவே வேதம் எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக'' என்று கூறுகின்றது. ஆகவே தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தையுடன் முரண்பாடு கொண்டிருக்க மாட்டான்; அது சரியே என்று தான் அவனால் கூற முடியும். வேறெதையும் அவனால் செய்யவே முடியாது. கவனியுங்கள், இது தான் சத்தியம். 169. கவனியுங்கள், இதை நான் திரும்பவுமாக வாசிக்கட்டும். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில், அந்த வித்து... 170. தேவனுடைய வித்து-? என்பது என்ன-? ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் - வித்தானது. அந்த வித்தானது இப்பொழுது என்ன?- கிறிஸ்துவே. கிறிஸ்து தான் தேவனுடைய வித்தாக இருக்கின்றாறா-? அவர் அப்படி இல்லையெனில் யாருடைய வித்தாக அவர் இருக்கிறார். அது சரி, அது சரி. அவர் தான் தேவனுடைய வித்து. 171. தேவனுடைய வித்தானது அவனுக்குள் தங்கியிருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் நிலைத்திருக்கவே வருகின்றார்; ஒரு எழுப்புதல் கூட்டத்திலிருந்து மறு எழுப்புதல் கூட்டம் வரைக்குமல்ல - ஆனால் நித்தியமாக இருக்கவே. இப்பொழுது, அதைக் குறித்த வேத வசனத்தை நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், எபேசியர் 4:30. ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.'' தேவனுடைய வித்தானது அவனுக்கு உள்ளாக அப்படியே தங்கி விடுகிறது, ஆகவே அவனால் பாவம் செய்ய முடியாது, ஏனெனில் அவன் தேவனால் பிறந்தவன். தேவனுடைய வார்த்தையை அவனால் அவிசுவாசிக்க முடியாது. 172. இப்பொழுது, ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகாமல் "ஓ அது வேறொரு காலத்திற்குத்தான்” என்று கூறினால், நினைவில் கொள்ளுங்கள் அவன் ஒரு அவிசுவாசியே, அவன் தேவனால் உண்டானவன் அல்ல, நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது, அப்படித்தானே-? நேரம் என்ன-? ஓ, என்னே-! நான் மறுபடியுமாக ஞாயிற்றுக்கிழமையன்று திரும்பி வர எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் வேகமாக, மிக வேகமாக முடிக்கட்டும். என்னால் கூடுமா-? இது மிக அருமையாக இருக்கிறது. ஓ, அந்த தேவனுடைய வார்த்தை. இது அருமையான ஒன்று என்று நீங்கள் எண்ணுகிறீர்களா-? அது சரி. சகோதரன் பிரன்ஹாம் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும். இதை சற்று நான் முடிவில் பார்க்கட்டும், இதை நான் எடுப்பேன். 105. நாம் உயிர்த்தெழுதலில் எந்த ரூபத்தில் இருப்போம்? 173. நாம் கீழே சென்ற போது எப்படி இருந்தோமோ அந்த விதத்திலே தான். சரியாக உயிர்தெழுதலானது . இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த புத்தகமானது கீழே விழுகின்றது (சகோ.பிரன்ஹாம் ஒரு புத்தகத்தை கீழே போடுகின்றார் - ஆசி) பிறகு நான் இந்த புத்தகத்தை எடுத்து, வேறொரு புத்தகம், இதற்கு பதிலாக வைத்து விடுகிறேன். இது உயிர்த்தெழுதல் அல்ல. உயிர்த்தெழுதல் என்றால், ''கீழே சென்ற அதே காரியத்தை மேலே கொண்டு வருதல்” என்பதேயாகும். இயேசு உயிர்த்தெழுந்தாரா-? அவர்கள் அவரை அறிந்துகொண்டனரா-? அவர் அதே இயேசுவாக அவர்களுடன் நின்று கொண்டிருந்தாரா-? "உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்.” நீ மரித்த போது எப்படி இருந்தாயோ, அந்த விதமாகவே நீ எழுந்திருப்பாய். அது தான் உயிர்த்தெழுதல் நீ மனித சரீரமாக மரிக்கின்றாய்; நீ மனித சரீரமாக உயிர்தெழுகின்றாய். அது சரியாக அந்த விதமாகத்தான் இருக்கும். ஆகவே உயிர்த்தெழுதலிலும் அது அந்த விதமாகத் தான் இருக்கும். இதன் பேரில் இன்னும் நாம் இரண்டு மணி நேரம் பேசலாம், ஆனால் நாம் நிறுத்திக் கொள்வது நல்லது. 106. எபிரெயர் 4 மற்றும் 6 விளக்கவும் (சீக்கிரமாக, மிக சீக்கிரமாக நாம் முடித்து விடுவோம்) அதை எபிரெயர் 10:26-வுடன் ஒப்பிட்டு விளக்கவும். 6 மற்றும் 4, (என்னை மனிக்கவும், 6:4 மற்றும் 10:26. நாம் 10:26-ஐ பார்ப்போம், சரி, நான் இங்கே அதை எடுத்துவிட்டேன். பாருங்கள்?) ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்தாவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால் மனந்திரும்புதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 174. அது சரியாக நமக்கு கூறுகிறது. இப்பொழுது கவனியுங்கள். முன்பொரு இரவு நான் இதை எடுத்தேன். நான் இதை விவரித்த போது உங்களில் எத்தனைப் பேர் இங்கிருந்தீர்கள்? சரி, அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும். பாருங்கள், அது எல்லைக்கோட்டு விசுவாசிகளை குறிக்கிறது. 175. எத்தனைப் பேர் உபாகமம் 1-ல் வாசித்துள்ளீர்கள், அதில் அந்த வேவுகாரர்கள் கானான் தேசத்திற்குள் சென்று அதினுடைய காரியங்களை ருசிபார்த்தார்கள், கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கவில்லை. எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்? ஒரேயொரு கரம் தான் உயர்த்தப்பட்டிருக்கிறதே? ஜூனி. அது சரி. கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு நிழலாயிருக்கவில்லை, ஏனெனில் அங்கே யுத்தங்கள், சண்டைகள், கொள்ளைகள் மற்ற எல்லா காரியங்களும் கானானில் இருந்தது. அது பரிசுத்த - கானான் பரிசுத்த ஆவிக்கு நிழலாயிருந்தது. அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததை, உலகத்தை விட்டு வெளியே வந்ததைக் குறிக்கிறது. அவர்கள் வனாந்தரத்தில் தான் பரிசுத்தமாக்கப்பட்டு, வெளியே அழைக்கப்பட்ட சபையாய் இருந்தனர். கானானில் தான் அவர்கள் பரிசுத்த ஆவியுடன் குடியேறினர் (பாருங்கள்; பாருங்கள்) ஏனெனில் அவர்கள் இன்னுமாக யுத்தங்களைக் கொண்டிருந்தனர். உங்களுக்கு யுத்தங்கள் கிடையாது என்று நீங்கள் நம்பவில்லையெனில் பரிசுத்த ஆவியை ஒரு தரம் பெற்றுக் கொள்ளுங்கள். 176. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்-? அவர்கள் கானானில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்-? அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டு இருந்தனர். மகிமை-! அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கானானிற்குள் செல்லும் வரைக்கும் அவர்களால் தங்களுடைய உரிமைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாதிருந்தது. அவர்களுக்கு வனாந்தரத்தில் எதுவுமே சொந்தமானதாக இல்லை. பிறகு, அவர்கள் கானானிற்குள் வந்த போது, அப்பொழுது தங்கள் உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமக்கும் உரிமைகள் உண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நீங்கள் கானானிற்குள் இருக்கிறீர்கள். நீங்கள் அதற்காக போரிடத்தான் வேண்டும். ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீங்கள் போரிட்டாக வேண்டும். ஆம் ஐயா-! அதன் காரணமாகத் தான் மக்கள், "சகோதரன் பிரன்ஹாம் இன்றைக்கு நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள்'' என்று கூறுகின்றனர். சகோதரனே விரைவில் கானானிற்குள் செல், நீ எதைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்து கொள்வாய். கவனி ஜெபம் ஆரம்ப ... ? ... ஆம், ஐயா-! அவன், ''சாத்தானே, இங்கே பார். இது என்னுடையது-! நான் தான் இதன் சுதந்தரவாளி! தேவன் அவ்விதமாக கூறியுள்ளார்-! வெளியே செல்-! (அது சரியே-!) என் நிலத்தை விட்டு வெளியே செல்-!” என்றான். "உன்னுடைய நிலமா-?” என்கிறான் சாத்தான். ''அதற்கான உரிமைப் பத்திரம் என்னிடம் இருக்கின்றது. வெளியே செல்-! பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலோடு நாளை உனக்கு சட்டப்பூர்வமான முன்னறிவிப்பு எச்சரிக்கையை அளிப்பேன்.'' அவன் வெளியே செல்கிறான். நிச்சயமாக, அவன் சென்றுதானாக வேண்டும். 177. இப்பொழுது, இப்பொழுது, பரம ஈவை ருசி பார்த்தவர்களைக் கவனியுங்கள். இப்பொழுது, இங்கே கவனியுங்கள். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால் .... (10, இது 10-ம் அதிகாரத்தில் 26-வது வசனம்) .... பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 178. இப்பொழுது, அவைகளில் ஒன்று அதை ருசிபார்த்தது தான், அடுத்ததாக இருப்பது நீங்கள் அதைப் பெற்று அதனுடைய அறிவை பெற்றீர்கள். அப்படியானால் நீங்கள் எதில் பாவம் செய்கிறீர்கள்-? அவிசுவாசம் .... இப்பொழுது அவை இரண்டும் எப்படி காணப்படுகிறதென்று கவனியுங்கள். புரிகின்றதா-? "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நீங்கள் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால்...'' இப்பொழுது... ஒரு நிமிடம், இதை நான் எடுக்கட்டும். நாம், புதுப்பித்து... ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் அருமையான பரம ஈவை ருசி பார்த்தும்,.. (எதை ருசிபார்த்தார்கள். பாருங்கள்-?) பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 179. அவன் இன்னுமாகச் சென்று நீ முள் பூண்டுகளைப் போலவே நீ உள்ளே உட்காருவதைக் கூறுகிறான், பூமியின் மேல் அடிக்கடி மழையானது பெய்கின்றது; நீ முள் பூண்டுகளைப் போல உள்ளே உட்கார்ந்திருந்தாயானால், பரிசுத்த ஆவி விழும் போது, ஓ, என்னே, மற்றவர்களைப் போல நீயும் அதன் பேரில் சந்தோஷமடைந்தாய், ஆனால் நீயோ அதை உன் கையால் தொட்டு, அங்கே புறப்பட்டுச் சென்று கர்த்தருக்காக உழைத்து அதற்காக ஏதோ ஒன்றை செய் என்றால், இல்லை, இல்லை என்னால் செய்ய முடியாது என்கிறாய். பாருங்கள்-? அப்படியானால் அது எதைக் காண்பிக்கிறதென்றால், தேவனுடைய ஆவி உனக்குள் இல்லை என்று தான் காண்பிக்கின்றது. புரிகின்றதா-? பிறகு நீ அப்படியே வெளியே கழன்று வந்து விடுவாய், “சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” 180. ஆனால் இங்கே , நாம் அவிசுவாசிப்போமானால்.... இப்பொழுது, பாவம் என்றால் என்ன-? அவிசுவாசம். அந்த காரியமானது உனக்கு தெரியப்படுத்தப்படும் போது, நீ அதிலிருந்து மனப்பூர்வமாக திரும்பி, ''எனக்கு- எனக்கு ஒன்றும் தேவை இல்லை'' என்று கூறினால், நீ அதைக் கண்ட பிறகு, அது மறுபடியுமாக உன் இருதயத்தை நோக்கிக் கூப்பிடாது, உன் காரியம் முடிக்கப்பட்டது; அது சரி. உன்னுடைய கிருபையின் நாளை நீ பாவமாக்கிப் போட்டாய். பாருங்கள்-? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிற வர்களாயிருந்தால்... (இப்பொழுது என்னுடைய வேதத்தில் அதை நான் குறித்து இருக்கிறேன்... ஓரப்பகுதியில் ''m'' என்று குறிக்கப்பட்டுள்ளது - பாவம் என்றால் மனப்பூர்வமாய் அவிசுவாசித்தல். பாருங்கள், பாருங்கள்?) .... மனப்பூர்வமாய் .... பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், (எல்லா காரியங்களும் உனக்கு நலமாக வெளியரங்கமாக்கப்பட்டிருக்கையில் தேவன் அதை உனக்கு மனமாரக்கொடுக்கையில் நீ மனப்பூர்வமாய் தேவனைப் புறக்கணித்து புறம்பே செல்வாயானால் ... பாருங்கள்?) நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு அதிகமான கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாய் இருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்-? (ஓ, என்னே!) 181. அது என்னவாக இருக்கும்-? ஒரு பிரசங்கி, ஒரு போதகன், நாம் ... ஏனெனில் நானும் ஒரு பிரசங்கி, ஒரு பிரசங்கியை நாம் எடுத்துக் கொள்வோம். அவன் இங்கே நடந்து வருகிறான், மேலே வருகிறான், கிறிஸ்துவை பறைசாற்றுகிறான், விபச்சாரம் மற்றும் எல்லா காரியங்களும் இனிமேல் இல்லாத ஒரு நிலைக்கு வருகிறான், ஒரு அருமையான சுத்தமான வாழ்க்கையை வாழ்கிறான், அவன் இங்கே வருகிறான், தேவனுடைய கிருபையானது அவனுக்கு அருமையானதாக அமைந்திருந்தது, அப்பொழுது அவன் சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்குள் நடந்து செல்கிறான் (பாருங்கள்?) நடந்து செல்கிறான், தேவன் அவனை சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்கு வழி நடத்துகிறார், அங்கே அவன் அதைக் காண்கிறான், ஆனால் அவன், ''இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். என்னுடைய சபை அதை ஏற்றுக்கொள்ளாது, என்னால் அதைச் செய்ய முடியாது. என்னை அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். ஆலோசனை சங்கமானது என்னை வெளியேற்றிவிடும். ஊழியக்காரர்கள் கூட்டத்தில் என்னை சபையை விட்டு புறம்பாக்கி விடுவார்கள்,” என்று கூறுவான். ஏனெனில் அவனைப் பரிசுத்தப்படுத்தி சத்தியத்தை அறியும் அறிவு என்கின்ற வரையில் அவனைக் கொண்டு வந்த அந்த அதே இரத்தத்தை தகுதியில்லாதது என்று எண்ணி தேவன் அவனை பரிசுத்த ஆவியினண்டை ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்து நடத்தி வந்த பிறகு, அதை தன்னுடைய காலின் கீழ் மிதித்தால், பாவத்தின் நிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை. 182. நீங்கள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள்.'' என்று கூறலாம். ஒரு நிமிடம்-! அந்திக் கிறிஸ்துவின் ஆவி அதைத்தான் செய்யும். அவைகளின் இரண்டு தலைகளை கவனித்தீர்களா-? யார் அந்த யூதாஸ்காரியோத்து-? பிசாசு-! அவன் கேட்டின் மகன் என்று வேதம் கூறுகின்றது. கேடு என்றால் என்ன-? நரகம். அவன் நரகத்தின் குமாரன், நரகத்திலிருந்து வந்தான், நரகத்திற்குச் சென்றான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தார், பரலோகத்திலிருந்து வந்தார், பரலோகத்திற்கு திரும்பிச்சென்றார். அவர்களிருவரும் சிலுவைகளில் மரித்த போது... யூதாஸ்... யூதாஸ் சிலுவையில் மரித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா-? உங்களில் எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்-? அவன் ஒரு மரத்தின் மீது செத்தான். இயேசுவும்கூட ஒரு மரத்தின் மீது மரித்தார். அது வெட்டி எடுக்கப்பட்ட ஒன்றாய் இருந்தது; அவ்வளவு தான். ''மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். ஆகவே அவன் நரகத்திலிருந்து வந்தான். ஆகவே கவனியுங்கள்.... அவன் சபைக்கு உள்ளாக எவ்வளவாக கள்ளத்தனமாக பதுங்கிச் செல்கிறான். அவனால் முடிந்த வரை மிக உயரிய ஒரு நிலைக்கு வருகிறான். பாருங்கள். அவன் எவ்வளவு வஞ்சிக்கிறவனாகயிருக்கிறான், யூதாஸ் எவ்விதமாக வந்தான்-? அவன் என்னவாக இருந்தான்-? ஒரு பொருளாளர், பொக்கிஷதாரியாக இருந்தான், ஒரு சகோதரனாக சபையில் கிரியை செய்து கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஒரு... (ஒலிப் பதிவு முழு நிறைவு பெறாத நிலையில் முடிவுறுகிறது - ஆசி.) ******* கேள்விகளும் பதில்களும் Questions and Answers COD #13 61-01-12 1.... இன்னும் பலவற்றை நான் பெறவேண்டியதாயுள்ளது, ஆனால் நான்.... என் ஒத்தவாக்கியப் புத்தகத்தை (Concordance) கொண்டு வந்திருக்கிறேன். அதை நான் லியோவிடம் கொடுத்து விடுவேன், அல்லது அருகில் உட்கார்ந்து கொண்டு எனக்குதவி செய்ய மனம் உள்ள யாரிடமாவது , அதை நாம் உபயோகிக்க தருணம் உண்டாயிருக்குமானால். அங்குள்ள இந்த பெண்மணி, அங்கு... அவளுக்கு... “எங்கே... அவளுடைய கணவன் யார்? ஆம். உங்கள் மனைவி அங்கிருந்து வந்து உங்களுடன் உட்கார்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அவ்விதமே செய்யலாம். சகோதரரின் மத்தியில் கூறப்படுபவைகள் ஒரு சகோதரிக்கும் கூறத் தகுந்தவையே. நாங்கள்... உங்களுக்குத் தெரியும். அது... அது சரியா? அவளை உங்கள் அருகில் அமர்த்திக் கொள்வதற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். டாக், அவளுக்கு அங்கே வெப்பமாக உள்ளதா? நல்லது. அது சரி, அவளுக்கு சிறிது தனிமையாக இருக்கும். இங்கு ஒன்றுமே இல்லை. சில நேரங்களில் நான் 'மனிதர்' என்று குறிப்பிடும் காரணம், மனிதரிடையே மனிதர்கேட்கும் சில கேள்விகளுக்கு ஸ்திரீகளின் முன்னிலையில் பதில் கூற முடியாமலிருக்கக் கூடும். ஆனால் உள்ளூர் சபைகளில் வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளில் அப்படி ஒன்றும் இராது. ஏனெனில் அவை பெரும்பாலும் 'ஊழியக்காரர்களைக் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊழியத்தைக் குறித்தும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்ததுமாயிருக்கும். 2இப்பொழுது, இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்... எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சகோ. கோட் (Brother Gad), அது எங்கே , அது இப்பொழுது ஒலிநாடாவில் பதிவாகிக் கொண்டிருக்கிறதா? சரி. சகோதரரே, இதை நாங்கள் செய்யக் காரணம், முக்கியமான பாகம் என்ன ... மனிதரின் சிந்தையில் என்ன உள்ளது என்றும், நமது காரியங்கள் என்னவென்றும் அறிந்து கொள்வதற்கே. நாம் - நாம் எல்லோரும் ஒரே காரியத்தைப் பேச வேண்டும். உதாரணமாக, யாரோ ஒருவர் இங்குள்ள சகோதரனின் சபைக்குச் சென்றார் என்று வைத்துக் கொள்வோம் (உங்கள் முதல் பெயர் என்ன , சகோதரனே? வில்லர்ட். சகோதரன் ... இங்கு வில்லர்ட் என்னும் பெயர் கொண்ட இருவர் உள்ளனர். உங்களை வேறொரு பெயரால் நான் அழைக்க வேண்டும். நான்... உங்கள் கடைசி பெயர் என்ன , க்ரேஸ்). சகோ. க்ரேஸ் அவர்களின் சபைக்கு சகோ. க்ரேஸ் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுகிறார், அதன் பிறகு அவர் செல்லர்ஸ்பர்கிலுள்ள சகோ. ரட்டல் சபைக்குச் செல்கிறார். சகோ. ரட்டல் வித்தியாசமான ஒன்றைச் சொல்லுகிறார். அதன் பிறகு அவர் சகோ. ஜூனி சபைக்குச் சென்று முற்றிலும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கிறார். முடிவில் அவர் இந்த கூடாரத்துக்கு வந்து இன்னும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கிறார். பாருங்கள்? அப்படியிருக்குமானால், அது மக்களை குழப்பிவிடும். 3உதாரணமாக, ஒருவர், “ஓ, நீங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியை பெறவேண்டியதில்லை. அது அவசியம் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, சகோ. க்ரேஸ் அவ்விதம் கூறினதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நீங்கள் சகோ. ரட்டல் சபைக்குச் செல்கிறீர்கள். அவர், “ஆம், அது அவசியம்” என்று கூறுகிறார். அதன் பிறகு நீங்கள்ஜூனியின் சபைக்குச் செல்வீர்களானால் அவர், “அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை' என்று கூறுகிறார். பாருங்கள்? நாம்ஒன்று கூடுவோமானால்... ஜெபர்ஸன்வில்லில் இந்த சத்தியத்தில் உள்ள போதகர் அனைவரும் ஒன்று கூடும்படி செய்து, நாம் அனைவரும் ஒரே காரியத்தை கூறுவோமானால் நலமாயிருக்கும். 4அங்கு தான் அநேக சமயங்களில் டீகன்மார்களும் தர்மகர்த்தாக்களும்.... அவர்களுடைய அலுவல் என்னவென்பதை அவர்கள் கண்டுகொள்ள வேண்டும். இன்றிரவு சபை பொருளாளரும், வாயில் காப்போரும் இங்குள்ளதைக் காண்கிறேன். எனவே அவர்களுடைய அலுவல் என்னவென்பதை நாம் இப்பொழுது காணப் போகிறோம். இதையடுத்து இங்கு கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் எந்தவிடத்திலும் கேட்கப்பட்டு, எந்தவிடத்திலும் அவைகளுக்கு பதில் அளிக்கப்படும். இவை சாதாரண கேள்விகளே - தர்மகர்த்தாக்கள் செய்ய வேண்டிய வேலை என்ன போன்றவை. அது அவர்கள் வழக்கமாக செய்யும் வேலையாயிருக்குமானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் நினைத்தேன், ஒருக்கால்... 5ஒரு கேள்வி இங்கு கேட்கப்பட்டுள்ளது. அது நல்ல ஒரு கேள்வி என்று நினைக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால் அதற்கு சற்று கழிந்து பதிலளிக்கிறேன். ஆனால் இப்பொழுது நாம் சிந்திக்க வேண்டியது: ஒரு குறிப்பிட்ட பிரச்சினை எழும்பும்போது, ஒரு டீகன் என்ன செய்ய வேண்டும்? அவர் என்ன ... ஒரு குறிப்பிட்ட பிரச்சினை எழும்பும்போது, அவர் செய்ய வேண்டிய கடமை என்ன? அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பாருங்கள்? அல்லது ஒரு தர்மகர்த்தா என்ன செய்ய வேண்டும்? ஒரு மேய்ப்பர் என்ன செய்ய வேண்டும், அப்படி ஏதோ ஒன்று, பிரச்சினையின்போது அவர்கள் வழக்கமாக செய்ய வேண்டிய வேலை முறை நமக்குத் தெரியும், ஆனால் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று சம்பவிக்குமானால், பாருங்கள், அப்பொழுது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? 6நாம் எங்கே பொருந்த வேண்டும் என்று நமக்குத் தெரியும், அது ஒரு இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது போன்றது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஸ்தானத்தை அறிந்திருக்கிறோம். இந்த விதமான ஒரு கூட்டத்தில், இந்த கேள்வியின் பேரில் பாதிஇரவை நாம் கழிக்க முடியும், அது நமக்குத் தெரியும், ஆனால் அது ... அது அவசியமல்ல என்று நினைக்கிறேன். இதற்கு நாம் விடையளிப்போம். நீங்கள் ஒவ்வொருவரும்... இப்பொழுது பெயர்கள் எழுதப்படவில்லை, சில கேள்விகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் கேள்விகள் எழுதினவர்களின் பெயர்களை நான் அறிவிக்கமாட்டேன். கேள்விகள் எதுவாயிருந்தாலும், அவைகளை நான் படிப்பேன். இரண்டு கேள்விகளில் மட்டுமே பெயர் எழுதப்பட்டுள்ளன. பொறுங்கள், பெயர் எழுதப் பட்ட வேறொரு கேள்வியையும் நான் ஒருக்கால் கண்டுபிடிக்கக் கூடும். எனக்குத் தெரியும், அது டாக்டர் இங்கில்மன். நான் 4-426 தெற்கு பகுதிக்கு சென்று அவரைச் சந்தித்தேன். ஜார்ஜ் டவுனில் வசிக்கும் அந்த டாக்டர் வீட்டுக்கு நாங்கள் சென்றிருந்த போது, அவர் சுகமடைந்தார். அவர் நீண்ட காலமாக நினைவிழந்திருந்தார். இந்த கேள்விகள் மாத்திரமே பெயர் கொண்டுள்ளன. இப்பொழுது நான் முதலில் படித்த நமது முதல் கேள்வியைப் பார்ப்போம். நாம் தயவுகூர்ந்து ஒரு நிமிடம் எழுந்து நிற்போம். 7எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு நாங்கள் மனிதர் கொண்ட கூட்டமாக, கிறிஸ்தவ மனிதரைக் கொண்ட கூட்டமாக கூடி வந்திருக்கிறோம். உம்மை நாங்கள் நேசிக்கிறோம், உம்மில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம், எங்கள் வாழ்க்கையையும் சேவைகளையும் உமது ஊழியத்திற்கென்றே அர்ப்பணித்துள்ளோம். இங்கு இளைஞர்கள், நடுத்தர வயதுள்ள ஊழியக்காரர் உள்ளனர். அவர்களுக்கு சபைகள் உள்ளன. அவர்கள் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவர்கள். இங்கு மகன்மார்கள் உள்ளனர், அவர்கள் வெவ்வேறு சபைகளில் தங்கள் உத்தியோகங்களில் பொறுப்புள்ளவர்களாக உள்ளனர். இங்கு பொறுப்புடன் கூடிய தர்மகர்த்தாக்கள் உள்ளனர். மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள் யாராயிருந்தாலும், கர்த்தாவே, நாங்கள் உமக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறோம். ஆகையால்தான், நாங்கள் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, இங்கு ஒன்றுகூடி வந்துள்ளோம். நாங்கள் ஒரே காரியத்தைப் பேசவேண்டுமென்று எங்களுக்கு வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ளது. பிதாவே, இவ்விதமான கூட்டத்தில், எங்கள் சகோதரரில் சிலருக்கு, எங்களில் சிலருக்கு, கருத்து வேறுபாடு உண்டாயிருக்க வழியுண்டு, உண்மை என்னவென்று கண்டுகொள்ளவேஅவர்களில் சிலர் கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். நாங்கள் ஒவ்வொருவரும் குறைவுள்ளவர்கள் என்று அறிந்திருக்கிறோம். இங்குள்ள சகோதரர் எவரையாகிலும் நான் இங்கு வரும்படி அழைத்து இந்த கேள்விகளுக்கு விடையளிக்கக் கூறுவேனானால், அவர்கள் என்னைப் போன்றே அல்லது என்னைக் காட்டிலும் நன்றாக விடையளிக்க முடியும். ஆனால் நாங்கள் ஒருமித்து உமது வெளிப்பாடுகளின் மேல் சார்ந்திருந்து, உமது வார்த்தையின் மூலமாயும்.... உமது ஆவியினாலும் எங்களுக்கு வெளிப்படுத்துவீர் என்றும்... ஒவ்வொரு கேள்விக்கும் எங்களுக்கு விடைகிடைக்குமென்றும் காத்திருக்கிறோம். எங்கள் இருதயங்கள்... நாங்கள் இந்த விடைகளினால் நிறைந்து, இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக எங்களுக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின் மூலமாக உமக்கு சேவை செய்ய நாங்கள் ஆயத்தமாகி விட்டோம் என்னும் உணர்வுடன் செல்ல கிருபையருளும். பிதாவே, இங்கு நாங்கள் வந்துள்ள நோக்கம் அதுவே. அதை இப்பொழுது அருளுவீராக. பிதாவே, உமக்காக நாங்கள் காத்திருக்கையில், எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பீராக. எங்கள் மனதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம். கேள்விக்கு முழுவதுமாக பதிலளிக்கப் பட்டு ஆவியினால் நாங்கள் திருப்தியடையும் வரைக்கும், நாங்கள் அதிலே நிலைகொண்டு, உமது பிரசன்னத்தின் நிமித்தம் நாங்கள் ஒருமுகமாக இணங்கும்படி செய்யும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்! 8துவக்கத்தில் ஒரு வேத வசனத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். தீர்க்கதரிசியாகிய ஏசாயா கூறினது போன்று: “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்....' ஏசாயா 1:18 ஆகையால் தான் நாம் இன்றிரவு இங்கு வந்திருக்கிறோம் - விவேகத்துடன் காரியங்களை அறிந்து கொள்ள. இப்பொழுது நான் தொடங்கப் போகிறேன்... எண் வரிசைப்படி சிலவற்றை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். சகோ. உட் இதை அவர்கள்... இந்த உறையில் பதில்கள் உள்ளன. என் அருமை சகோதரரே, இந்த பதில்கள் ஒவ்வொன்றும், என் அறிவுக்கு எட்டின வரைக்கும், அதை நான் எவ்வாறு புரிந்து கொண்டேனோ. அதற்கேற்ப சிறப்பாக அளிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். 9இந்த பதில்கள் பிழையற்றவை அல்ல என்று நான் கூறவில்லை, பாருங்கள். வேதவாக்கியங்கள் பிழையற்றவை, எனக்குத் தெரிந்தமட்டில் இந்த பதில்கள் வேதவாக்கியங்களுடன் இணைந்துள்ளன. நான் கூறுவது தெளிவாயுள்ளது என்று நம்புகிறேன். இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, அதை பெற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பெற்றுக்கொள்ளலாம். வேதவாக்கியங்கள் பிழையற்றவை என்று நானறிவேன், ஆனால் என் பதில்கள் பிழையற்றவை அல்ல. நீங்கள் அனைவரும் இதை புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயித்திருக்கிறேன். அது பிழையற்றவையாக இல்லாமல் இருக்குமானால், நீங்கள் எந்த நேரத்திலும் அதைக் குறித்து என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமையுண்டு. அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தால்.... அது உங்களுடைய கேள்வியாக இருக்க வேண்டுமென்பதில்லை, அது வேறொருவருடைய கேள்வியாயிருந்தால், ஒருக்கால் அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால் நாங்கள் உதவி செய்யவே இங்குள்ளோம். இங்கு நாம் ஒன்று கூடி வந்துள்ள காரணம், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், நாட்கள் பொல்லாதவைகளாயிருக்கின்றன. நாம் பயிற்சி பெற, பள்ளியில் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். 10சகோ. ஸ்ட்ரிக்கர் ஒரு இராணுவ வீரர்; பின்னால் உள்ள சகோ. கோட் ஒரு இராணுவவீரர்; ஒருக்கால் இங்குள்ள சகோ. ரட்டலும் கூட ஒரு இராணுவ வீரராய் இருந்திருக்கலாம். சகோ. பீலரும் மற்றவர்களும் இராணுவ வாழ்க்கையில் இருந்திருக்கின்றனர். நீங்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு, ஆலோசனை நிகழ்த்துகின்றீர்கள். நீங்கள் போர்க்களத்துக்கு செல்வதற்கு முன்பு போரைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். சத்துருவை நீங்கள். போர்க்களத்தில் சந்திப்பதற்கென அவனுடைய யுத்ததந்திரம் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்கிறீர்கள். நான் முன்பு குத்து சண்டையிடுவது வழக்கம். அவர்கள் எனக்கு எதிராக குத்து சண்டையிடுகிறவன் யாரென்று அறிந்து. அவன் எந்த விதமான குத்து உபயோகிப்பான், அது மேல் குத்தோ, இடது குத்தோ, அவன் வலது கை குத்து சண்டைக்காரனா. இடது கை குத்து சண்டைக்காரனா, அவன் எவ்வளவு பெலசாலி, அவன் பாதங்களை வேகமாக அசைப்பவனா. அவனுடைய கண்களை அவன் எப்படி உபயோகிக்கிறான், அவன் எந்தமூலையிலிருந்து வருகிறான், இது போன்ற அவனுடைய எல்லா தந்திரங்களையும் கண்டு கொள்வார்கள். குத்து சண்டை பழக்குகிறவர்கள் அவன் முன்பு குத்து சண்டையிட்டதை கண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள், என்னுடன் சண்டை போடவிருக்கும் மனிதனின் அதே தந்திரங்களைக் கொண்ட வேறொரு மனிதன் என்னுடன் சண்டையிடும்படி செய்து என்னைப் பழக்குவார்கள். அதற்காகத் தான் நாம் இன்றிரவு இங்கிருக்கிறோம். சத்துரு தாக்கும் விதத்தை நாம் அறிந்திருக்கிறோம். அவன் கையாளும் யுக்தி என்னவென்று நாம் அறிந்திருக்கிறோம். அவன் அசைய முடியாதபடிக்கு அவனை வேதவசனங்களால் தாக்குவதற்காகவே இன்றிரவு நாம் இங்கிருக்கிறோம். ஏனெனில் சத்துரு எல்லாவிடங்களிலும் இருக்கிறான். 11பின்னால் உட்கார்ந்திருக்கும் சகோ. ராபர்ஸனை நான் காண்கையில், ஒரு இராணுவ வீரன் எவ்வாறு இருப்பான் என்பதை அவர் நிச்சயம் அறிந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு உண்மையில் இராணுவத்தில் சில காலம் நல்ல தருணம் உண்டாயிருந்தது! இங்கு எத்தனை இராணுவ வீரர் உள்ளனர், பார்ப்போம், இராணுவத்தில் வீரராக பணியாற்றியவர்? இங்கே பாருங்கள், ஒரு கூட்டம் இராணுவவீரர். சரி. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். சகோ. ராய், சகோ. பீலர், இன்னும் இங்குள்ள மற்ற இராணுவ வீரரே, அதை தான் நீங்கள் ஆராய்ந்து படிக்கிறீர்கள். இல்லையா? நீங்கள் எதிரியைக் குறித்து ஆராய்ந்து அறிகிறீர்கள், “அவன் என்ன செய்யப் போகிறான்? அவனுடைய அசைவு என்ன?” என்று. அதன் பிறகு அவனைப் போர்க்களத்தில் எவ்விதம் சந்திப்பது என்பதை அறிந்து கொள்கிறீர்கள். 12அதற்காகத்தான் இங்கு நாம் இருக்கிறோம் - சத்துருவின் அசைவை ஆராய்ந்து அறிந்து, அவனை எப்படி சந்திப்ப தென்றும், அவனை எது ஜெயங்கொள்ளும் என்றும் அறிந்து கொள்வதற்காக. மற்றும் ஞாபகம் கொள்ளுங்கள். இதை கூற விரும்புகிறேன், சகோதரரே. இங்குள்ள இந்த சிறு சபை வரிசையாக வரங்களைப் பெறத் தொடங்கியுள்ளது, சபைக்கு வரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரங்கள் இருந்தாலும் இல்லாமற்போனாலும், வரம் ஒன்றுமே இல்லாமற் போனாலும், நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், வரம் எப்பொழுதுமே சத்துருவைத் தோற்கடிக்காது. ஆனால் வார்த்தை தோற்கடிக்கும். வார்த்தை அவனை எந்தவிடத்திலும் சந்திக்கும். இயேசு இந்த உலகில் இருந்தபோது அதை நிரூபித்தார். அவருடைய .... அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். அவர் சத்துருவைத் தோற்கடிக்க தமது அருமையான வரங்கள் ஒன்றையும் ஒருபோதும் உபயோகிக்கவில்லை. நாம் மத்தேயு சுவிசேஷத்தில் காண்கிறோம் - அது மத்தேயு 2ம் அல்லது 3ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். அவர் சொன்னார்... இல்லை, மத்தேயு 2ம் அதிகாரத்தில் அவர் சத்துருவைச் சந்தித்த போது (மத்தேயு 4ம் அதிகாரம் - தமிழாக்கியோன்), அவனை வார்த்தையின் அடிப்படையில் சந்தித்து எழுதியிருக்கிறதே“ என்றார். சத்துரு வந்து “எழுதியிருக்கிறதே” என்றான். அவர் “இப்படியும் எழுதியுருக்கிறதே” என்று சத்துருவைத் தோற்கடிக்கும் வரைக்கும் உரைத்தார். அதற்காகவே இங்கு நாம் இருக்கிறோம், தேவன் நமக்கு அளித்துள்ள பொருளின் உதவியைக் கொண்டு சத்துருவை சந்திக்க 13இப்பொழுது நான்கு கேள்விகளை இங்கு வைத்திருக்கிறேன் .... அவை ஒரே துண்டு காகிதத்தில் எழுதப்பட்டுள்ளன. அவைகளுக்கு வரிசைக்கிரமமாக ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு, ஐந்து, ஆறு ... எட்டு, பத்து என்று எண்களைத் தந்திருக்கிறேன். இந்த காகிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பின்பு, மற்ற கேள்விகளுக்கு தாவி விடுவேன். இது என்ன கூறுகிறதென்றால்: சகோ. பிரான்ஹாமே, இந்த கேள்விகள் முறைப்படி இல்லாமல் போனால், அவைகளைத் தள்ளி விடுங்கள். அதைக் குறித்து நான் மோசமாக நினைக்கமாட்டேன். அது கர்த்தருடைய கரம் அல்லவென்று அறிந்து கொள்வேன். முதலாம் கேள்வி : சகோ. பிரான்ஹாமே, நீங்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்... அதாவது நான் மீண்டும்... நான் ஊழியத்துக்கு மீண்டும் வரவேண்டுமென்று நீங்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன், நான் சிந்தனை செய்து அதைக் குறித்து தேவனிடத்திலிருந்து திட்டமானவார்த்தையைப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்நாள் வரைக்கும் அது வரவேயில்லை. முடிவு மிகவும் அருகில் உள்ளதென்று நான் அறிந்துள்ளபடியால், கர்த்தராகிய இயேசு என்னிடம் பேசுவதற்கு நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா? அல்லது, நீங்கள் இந்நாளில் அவருடைய சார்பில் பேசும் பேச்சாளராக (spokesman) இருப்பதால், என்னிடம் என்ன கூறவேண்டுமென்று உங்களிடம் கூற அவர் பிரீதிப்படுவாரா? நல்லது. இப்பொழுது சகோதரனே, நான்... அதற்கான பதிலை இங்கு எழுதி வைத்துள்ளேன். தேவன் இந்த சகோதரனை அழைத்தல், வாழ்க்கையில் ஒரு அழைப்பு. “அழைப்பு என்னும் இந்த ஒரு பெரிய காரியத்தை நாம் பொருளாகத் தெரிந்து கொண்டு, இரவு முழுவதும் அந்த ஒன்றின் பேரில் பிரசங்கிக்கலாம். உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் (2பேது. 1:10), பாருங்கள். நாம் அழைக்கப்பட்டோமா என்று வியந்து கொண்டிருக்க நாம் விரும்பவில்லை. நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? சகோதரனே, உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்துள்ளதென்றும், ஒரு வேலையைச் செய்ய நீங்ள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் முற்றிலும் நிச்சயமுடையவர்களாயிருந்தால்.... சத்துரு உங்களிடம் இந்த சூழ்ச்சியைக் கையாள முடியும். அதாவது, நீங்கள் உண்மையில் அழைக்கப்பட்டிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கும்படி அவனால் செய்ய முடியும்; அல்லது மாறாக, நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள் அழைக்கப் பட்டுள்ளதாக நினைக்கும்படி செய்ய முடியும். எனவே நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். 14இப்பொழுது. இதைச் செய்ய வேண்டிய முறை இதுவே. முதலாவது கண்டுபிடியுங்கள்... நல்லது, இப்பொழுது. இது ஆலோசனை மட்டுமே, இதைக் குறித்து நான் செய்யக் கூடிய ஓரே காரியம் ஆலோசனை தருவதே. பாருங்கள்? முதலாவதாக உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்தது என்பதைஉறுதியாக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு உங்கள் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பரிசீலனை செய்து பாருங்கள். பாருங்கள்? நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிரசங்கம் செய்வதற்கு உங்கள் நோக்கம் என்ன? அது வெறும் ... இப்பொழுது உங்களுக்கு உள்ள வேலையைக் காட்டிலும் அது எளிதான வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அதை மறந்து விடுங்கள், அது அழைப்பு அல்ல. தேவனுடைய அழைப்பு உங்கள் இருதயத்தை மிகவும் அனல் மூட்டிக் கொண்டேயிருப்பதால், உங்களால் இரவும் பகலும் இளைப்பாறவே முடியாது. அதிலிருந்து நீங்கள் விலகவே முடியாது. அது உங்களை சதா உறுத்திக் கொண்டேயிருக்கும். 15நீங்கள் பிரசங்கிக்க வேண்டுமானால்... உங்களுக்கு வேறொரு நோக்கமும் இருக்கக் கூடும். நீங்கள், “இப்பொழுது எனக்குள்ள வேலையைக் காட்டிலும், நான் வெற்றிகரமாக சுவிசேஷகனுடைய அல்லது மேய்ப்பனுடைய வேலையைச் செய்து, எனக்கு நல்ல சம்பளமும், ஒரு நல்ல வீடும் கிடைக்கப் பெற்று வாழ நேரிட்டால், அது மிகவும் நன்றாயிருக்கும், இப்பொழுது நான் செய்து வருகின்ற வேலையைக் காட்டிலும் அது எளிதாக இருக்கும். அது உண்மையிலேயே அவ்விதம் இருக்கும் என்று எண்ணுகிறேன்...' எனலாம். இப்பொழுது, பாருங்கள், துவக்கத்திலேயே உங்கள் குறிக்கோள் தவறானது. பாருங்கள். அது சரியல்ல. பாருங்கள்? அதில் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். இல்லையென்றால் நீங்கள், “நல்லது. இந்த ஊழியத்தை நான் செய்வதனால் ஒருக்கால்... ஜனங்களின் மத்தியில் பிரபலம் வாய்ந்தவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறலாம். பாருங்கள். அப்படியானால், நீங்கள் ஒரு பெரிய தோல்விக்கு ஆயத்தமாயிருப்பதைக் காணலாம். உண்மையாக, பாருங்கள்! ஆனால், “நான் மலிவு பிஸ்கோத்துக்களைத் தின்று ஓடை தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் எப்படியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்னும் குறிக்கோள் உங்களுக்கு இருக்குமானால் உங்களில் ஏதோ ஒன்று ஊடுருவிப் பாய்ந்து நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன், இல்லையேல் மரிப்பேன்' என்று கூற வைக்குமானால்! பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்காவது செல்வீர்கள். ஏனெனில் தேவன் உங்களுடன் ஈடுபடுகிறார். தேவன் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அது தேவன், நீங்கள் இளைப்பாற அவர் விடமாட்டார். வழக்கமாக தேவனால் அழைக்கப்பட்ட மனிதன் இளைப்பாற விரும்பமாட்டான். அதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? எந்த மனிதனும்... 16அண்மையில் மிகவும் விலையேறப் பெற்ற சில சகோதரர்கள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நாங்கள் இப்பொழுது வழியில் வந்துவிட்டபடியால், நாங்கள் இப்பொழுது கர்த்தரைக் கண்டடைந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டபடியால், நாங்கள் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக வரங்களை நாடலாமா? என்று கேட்டனர். நான், “அவ்விதம் ஒருபோதும் செய்யாதீர்கள்” என்றேன். பாருங்கள்? அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்ய மக்களுக்கு ஆலோசனை கூறாதீர்கள். ஏனெனில் அதைச் செய்ய விரும்பும் ஒரு மனிதன் வழக்கமாக அதைச் செய்ய முடியாத ஒருவனாயிருப்பான். அதைவிட்டு ஓடிப் போக முயற்சி செய்யும் ஒரு மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். பாருங்கள்? அவன் அதை விட்டு ஓடிப் போக முயன்று, “ஓ, சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் அழைப்பு எனக்குள் உள்ளது, ஆனால் நான் . ... வ்யூ! அதைச் செய்ய எனக்கு பிரியமில்லை என்கிறான். பார்த்தீர்களா? அவன் ஓடிப் போக முயல்கிறான். ஆனால் அதை எப்படியாவது செய்ய வேண்டுமென்று நினைப்பவன், முதலாவதாக என்ன தெரியுமா, அவன் பெருமை கொண்ட ஒருவனாக ஆகிவிடுகிறான். அவன், “தேவனே, மலைகளை அசைக்கத்தக்கதாக எனக்கு வல்லமையை அளிப்பீராக. நான் உமக்கு சொல்லுகிறேன், மலைகளை அசைக்க என்னை நீர் அனுமதிப்பீரானால், உமக்காக நான் ஏதாவதொன்றைச் செய்வேன்” என்கிறான். இல்லை, அவனால் ஒன்றுமே செய்ய முடியாது, அவன் சரியான மனப்பான்மைக்கே தன்னை நகர்த்திக் கொள்ள முடியாது. பாருங்கள். எனவே அவன் தேவனுக்காக மலைகளை அசைக்கவே முடியாது. 17பவுலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பவுல் தன் அழைப்பை விட்டு விலகிக் கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓ, சகோதரனே! அவனால் அதை செய்திருக்கவேமுடியாது. அவன் தன் சபையை விட்டு, எல்லாவற்றையும் விட்டு .... அவன் ஆசியாவுக்குச் சென்றான் என்று நினைக்கிறேன், இல்லையா? அது வரைக்கும் அது அவனை இரவும் பகலும் உறுத்திக் கொண்டேயிருந்தது. அது சரியா தவறா என்றும், தேவன் அவனை உண்மையில் அழைத்திருக்கிறாரா என்பதையும் கண்டு கொள்ள அவன் அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேதத்தை ஆராய்ந்து பார்த்தான். எனவே சகோதரனே, தேவன் உங்களை அழைத்திருப்பாரானால், அது உங்கள் இருதயத்தை உறுத்திக் கொண்டேயிருக்கும். அப்படி இருக்குமானால் நான், “பாரமான யாவற்றையும். உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விடுங்கள்” என்பேன். பாருங்கள்? அது உங்களை உறுத்தாமல் போனால், அதைக் குறித்து நான் பெரிதாக எண்ண மாட்டேன். அதை அப்படியே விட்டு விடுவேன். 18சகோ. பிரான்ஹாமே, என்னிடம் என்ன கூற வேண்டு மென்று அவர் உங்களிடம் கூறுவார் என்று நினைக்கிறீர்களா? தேவன் அவரிடம் நேரடியாக பேசுவார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா, தேவன் ... அவர் நம்மிடம் பேசக்கூடாதபடிக்கு நாம் அவ்வளவு பெரியவர்கள் அல்ல. அவர் நம்மிடம் பேசுவார். பாருங்கள், அவர் அவர் நம்மிடம் பேசுவார். இதை உங்களிடம் கூறுகிறேன், அவர் என்னிடம் அதைக் கூறுவாரானால், ஒருக்கால் அந்த சகோதரன், “நல்லது. அவர் சகோ. பிரான்ஹாமிடம் அவ்விதம் கூறினார், தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறலாம். ஆனால், பாருங்கள், உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பது சகோ. பிரான்ஹாம் அல்ல, கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கிறார். பாருங்கள்? அழைப்பைக் கொடுப்பது கர்த்தராகிய இயேசுவானால், அவரே பேசுவார். பாருங்கள்? நான் உங்கள் செவிகளில் பேசலாம், ஆனால் கிறிஸ்து உங்களை ஊழியத்துக்கு அழைப்பாரானால் அவர் உங்கள் இருதயத்தில் பேசுவார். பாருங்கள்? அங்கு தான் அது நங்கூரமிடப்பட வேண்டும், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லவே முடியாது. இப்பொழுது இரண்டாம் கேள்வியின் பேரில்... இப்பொழுது அதைக் குறித்து ஏதாகிலும் கேள்வி இருக்குமானால், பாருங்கள். அதாவது ஒரு மனிதனின் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்து அவனுடைய இருதயத்தில் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து, வேறொரு சகோதரன் ... ஓ, இதை எழுதினது யார் என்று எனக்குத் தெரியும். பாருங்கள், அது ஒரு விலையேறப்பெற்ற, அருமையான , கிருபையுள்ள சகோதரன். அவருக்கு தேவனுடைய அழைப்பு உள்ளதென்று நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். ஆனால் நான்... ஆனால் நான் கூறுவதன் பேரில் அவர் அதைச் செய்வதை நான் விரும்பமாட்டேன் (அதன் காரணமாகத்தான் நான் இவ்விதம் அதற்கு விடையளித்தேன்) பாருங்கள். “நல்லது. ஆமாம், சகோ. இன்னார் இன்னார் ஊழியத்துக்குச் செல்ல வேண்டும்” என்று நான் கூறுவதன் பேரில். பாருங்கள்? 19அப்பொழுது நீங்கள், “அதை நான் செய்ய வேண்டும் என்று சகோ பிரான்ஹாம் என்னிடம் கூறினார்” என்பீர்கள். பாருங்கள், சகோ. பிரான்ஹாமுக்கு ஏதாகிலும் சம்பவித்து, நான் கொல்லப்பட்டேன், அல்லது மரித்துப் போனேன். அல்லது விலகி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது, பாருங்கள், உங்கள் அழைப்பு அப்பொழுது முடிந்து விடும். ஆனால் சகோதரனே, இயேசு உங்களை அழைப்பாரானால், நித்தியம் என்று ஒன்று உள்ள வரைக்கும். அது ஒலித்துக் கொண்டேயிருக்கும் பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது இரண்டாம் கேள்வி... இப்படி ஏதோ ஒன்று, “இது கடைசி நாட்கள் என்று நான் அறிந்துள்ளதால், அதைக் குறித்து அந்த சகோதரனை நான் பாராட்டுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை அந்த சகோதரன் உணர்ந்துள்ளதைக் குறித்தும் கிறிஸ்துவுக்காக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும் அவருடைய இருதயத்தின் உத்தமத்தைக் குறித்தும் நான் நிச்சயம் அவரைப் பாராட்டுகிறேன். 20நமது விலையேறப் பெற்ற ஆண்டவர் அவருக்காக நான் ஒரு சிறிய காரியத்தைச் செய்ய என்னை அனுமதிப்பாரானால், நான் முன்பு ஊழியம் செய்திருந்து தவறில்இருந்த (அதற்காக நான் வருந்துகிறேன். அதை அவர் இடைப்பிறவரலில் (paranthesis) எழுதியிருக்கிறார். அந்த ஜனசமூகத்தினிடம் சென்று அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டுமா? அவர்கள் என் இருதயத்தில் இடம் பெற்றுள்ளனர். இல்லை, சகோதரனே. அதே ஜனசமூகத்தினிடம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியது அவசியமில்லையென்று நினைக்கிறேன். அருமை சகோதரனே, கர்த்தர் உங்களை அழைக்கும் போது, நீங்கள் முன்பு குடியிருந்த ஜன சமூகத்துக்கு உங்களை போக விடமாட்டார் என்று நினைக்கிறேன். அங்கு நீங்கள் ஒருக்கால் வேறு காரியங்களைப் போதித்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுதோ, அப்பொழுது நீங்கள் போதித்தவைகளிலிருந்து வித்தியாசமான காரியங்களைக் காண்கிறீர்கள். தேவன் உங்களை அழைக்கும்போது. அவர் ஒருக்கால்... அவர் அதை உங்களுக்கு உறுதிப்படுத்துவாரானால், அவர் எந்தவிடத்திற்கும் உங்களை அனுப்பலாம். பாருங்கள்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜனசமூகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அந்த ஜன சமூகத்தில் இருந்த போது உத்தமமாய் இருந்தீர்கள். இந்த கேள்வியை எழுதின சகோதரனை நான் அறிவேன். மிகவும் ஆழமான உத்தமத்துடனும், ஒரு உண்மையான கிறிஸ்தவனாகவும், உங்களுக்குச் செய்யத் தெரிந்த அனைத்தையும் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்தீர்கள். அவ்வளவுதான் தேவனுக்குத் தேவை. பாருங்கள்? தேவன் உங்களை மீண்டும் அந்த ஜனசமூகத்துக்கு செல்ல அழைப்பாரானால், நான் மீண்டும் அங்கு செல்வேன். அவர் அவ்விதம் செய்யாவிட்டால், அவர் என்னை எங்கு அனுப்பினாலும் அங்கு செல்வேன். அதன் பேரில் கேள்வி வேறெதாகிலும் உண்டா? 21மூன்றாம் கேள்வி: ஒருவர் கிறிஸ்துவின் சரீரத்தில் தனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது? அது நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. “எவ்விதம்... இன்றிரவு இங்குள்ளவர் அநேகரின் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி எழும்பக் கூடும்: ”எனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது?“ இந்த சகோதரன் ”கிறிஸ்துவில்எனக்கு என்ன ஸ்தானம், கிறிஸ்துவின் எந்த பாகத்தை நான் வகிக்க வேண்டும்?“ என்று கேட்கிறார் என்று ஊகிக்கிறேன். இப்பொழுது, உதாரணமாக, சகோதரனே, எனக்குத் தெரிந்த சிறப்பான விடையை உங்களுக்கு அளிக்க இதைக் கூறுகிறேன். கிறிஸ்துவில் உங்கள் ஸ்தானம் என்ன ... என்பது பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதை வெளிப்படுத்தினது பரிசுத்த ஆவியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் செய்யும் காரியங்களில் அவர் உங்களை ஆசீர்வதிக்கிறாரா இல்லையாவென்று பாருங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்தால், அது அவர்தான். அவர் ஆசீர்வதிக்காமல் போனால்..... 22அண்மையில் ஒருவர் என்னிடம், “தேவன் என்னைப் பிரசங்கம் செய்ய அழைத்திருக்கிறார்” என்றார். “நல்லது, அப்படியானால் பிரசங்கம் செய்யுங்கள்” என்றேன். பாருங்கள்? எனவே அவர் - அவர் அது இப்படித்தான் என்று நான் உண்மையில் நினைக்கிறேன்... எவராகிலும் ஒருவர் இவ்விதம் நடந்து கொள்ளும்படி சாத்தான் செய்து, அவர்களை வஞ்சிக்கிறான். அதை தான் அவன் செய்ய விரும்புகிறான். அப்பொழுது உலகத்தார் அனைவருமே தங்கள் விரல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் தங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரமும் அதற்கு அர்த்தம் உரைக்கும் வரமும் உள்ளதாக எண்ணிக் கொள்கின்றனர்; சிலருக்கு தெய்வீகசுகமளிக்கும் வரம் உள்ளது; இன்னும் சிலருக்கு ... சில சமயங்களில் அவர்கள் இந்த காரியங்களில் தவறாக உள்ளனர். தங்களுக்கு இந்த வரங்கள் உள்ளபோதே அவர்களுக்கு இவை இல்லையென்று நினைப்பவரும் உண்டு. எனவே அது மிகவும் தந்திரமான ஒன்று. 23எனவே, சகோதரரே, இதை எப்பொழுதும் கடைப் பிடியுங்கள். அதாவது, ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றும்போது அதை செய்வது வேதப்பூர்வமானதா (அது வேதத்தில் உள்ளதா என்பதைக் கண்டு பிடியுங்கள். அது வேதத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் எழுதப்படுவதல்ல, நீங்கள் அதைச் செய்வதற்கு அது வேதம் முழுவதிலும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் அர்த்தத்தில் தான்நான் கூறுகிறேன். உங்கள் ஸ்தானம், நீங்கள் சுவிசேஷகர்; மேய்ப்பர், போதகர், தீர்க்கதரிசி, தேவன் உங்களை எந்த ஸ்தானத்தில் இருக்க அழைத்திருக்கிறாரோ அந்த ஸ்தானம். பாருங்கள்? அல்லது உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரம், பாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரம், சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் ஏதாவது வரம், சபைக்குள்ள நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்களில் ஏதாவதொருஸ்தானம் இருக்குமானால் முதலாவதாக தேவன் அழைத்தாரா என்பதைப் பாருங்கள். அதன் பிறகு, வழக்கமாக, அதை நான் எவ்விதம் கவனிப்பேன் என்றால்.... நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன், நான் ஒரு நபரின் சுபாவத்தைக் கவனித்துக் கொண்டே வந்து, அவர்கள் எந்தவிதமான வரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பேன். பாருங்கள், தேவன் தம் சிருஷ்டியுடன், அவர் அவனை எந்தவிதமாக உண்டாக்கியிருக்கிறாரோ, அந்த விதத்தில் கிரியை செய்வார். பாருங்கள்? அவர் ஒரு சிருஷ்டியை உண்டாக்கினால்.... 24நீங்கள் ஒரு மனிதனை சலன புத்தியுள்ளவராயிருக்கக் கண்டு, அவர், “கர்த்தர் என்னை ஒரு மேய்ப்பனாக இருக்க அழைத்திருக்கிறார்” என்பாரானால், மேய்ப்பன் சலன புத்தியுள்ளவராக இருக்க முடியாது. மேய்ப்பன் திடமானவர், நிலையுள்ளவர். யாருங்கள்? “தேவன் என்னை போதகராக (teacher) அழைத்திருக்கிறார். அவர் வார்த்தையை எவ்விதம் வியாக்கியானம் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? அவர் எல்லாவற்றையும் குழப்புவாரானால், அப்பொழுது நீங்கள் அவர் உண்மையில் போதகர்தானா என்று சொல்லிவிடலாம். பாருங்கள்? அப்படியானால், செய்ய வேண்டியகாரியம் என்னவெனில், நீங்கள் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருத்து உங்கள் ஸ்தானம் வழக்கமாக அறிந்து கொள்ளப்படுகிறது. 25இப்பொழுது, தேவன் என்னை ஒரு சுவிசேஷகராக அழைத்த போது, நான் மேய்ப்பனாக இருக்க விரும்பினேன். வீட்டிலேயே தங்கியிருப்பது நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். தேவன் என்னை அழைத்தார். முடிவில் எல்லா மக்களும் ஒன்று கூடி...அவர்கள் மிகவும் அழுது 1717 ஸ்பிரிங் தெருவிலிருந்து வெளி வந்தனர். அவர்களில் ஒருவரும் இன்றிரவு இங்கில்லை. அருகில் வசித்த திருமதி ஹாக்கின்ஸ் என்னைச் சந்தித்து அது பொருளாதார நெருக்கடி உண்டாயிருந்த காலம், அண்டை வீட்டிலுள்ள ஒருவர் ஒரு பானை பீன்ஸ் சமைத்து. நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதை உண்பது வழக்கம்) அழுது கொண்டே என்னிடம் “நீர் மாத்திரம் ஒரு கூடாரத்தைக் கட்டுவீரானால், மேசையில் என் பிள்ளைகளின் ஆகாரத்தை குறைத்துக் கொண்டு, அதற்கு பணம் தருவேன்” என்றாள். பாருங்கள்? என் அழைப்பு சுவிசேஷகராக இருக்க... அன்று காலையில் இங்குள்ள இந்த மூலைக்கல்லை இன்றிரவு நீங்கள் தகர்த்தால், என் வேதாகமத்தின் கடைசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு காகிதம் அதில் காணப்படும், நான் சுவிசேஷகனாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினது அதில் எழுதப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் வெற்றிகரமான மேய்ப்பனாக இருக்கவேயில்லை, அவ்விதம் இருக்கவும் போவதில்லை. ஏனெனில் ஒரு மேயப்பனுக்கு இருக்க வேண்டிய பொறுமை எனக்கில்லை. பாருங்கள்? எனவே நான் மேய்ப்பனாக இருக்க முயன்றால், ஒரு மேய்ப்பன் சுவிசேஷகனாக இருக்க முயன்றால் அது எப்படி முடியாத காரியமோ, அது போல் இருக்கும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்த்தர் உங்களை எந்தவிதமாக அழைத்திருக்கிறாரோ, சரீரத்தில் உங்கள் ஸ்தானம் எதுவோ, அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 26பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அது முதலாம் கேள்வி, “பரிசுத்த ஆவியால் நிறைந்த அனைவருமே ... இவையனைத்தும் ஒரே கேள்வியில் அடங்கியுள்ளன. இதற்கு நான்காம் கேள்வி என்று எண் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதை முதலிலேயே காண்போம், பாருங்கள்? பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்களெல்லாரிலும் அதிகமாகபாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன்.சரி, நான்காம் கேள்வி : பரிசுத்த ஆவியைப் பெறும்போது எல்லாருமே அந்நிய பாஷை... இல்லை, அப்படியில்லை, எல்லாருமே அந்நிய பாஷை பேசுகின்றனரா... இல்லை, பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? இப்பொழுது, சகோதரனே, நான்... இது ஒரு ஆழமான கேள்வி. இப்பொழுது, அங்கே, நீங்கள் ஒருக்கால். இதற்கான சில விடைகளை ஒருக்கால் நான் பின்பு தரக்கூடும். பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். அப்பொழுது நீங்கள் முதலில் ... தேவன் உங்களை அழைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ஒரு போதும் அழைக்கப்படவே மாட்டீர்கள். பாருங்கள், நீங்களாகவே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். அது சரியா? எனவே பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். 27ஆனால், தானியத்தின் முளையிலிருந்த அதே ஜீவன் தான் பட்டுக்குஞ்சத்தை தோன்றச் செய்தது. முளையிலும் பட்டுக் குஞ்சத்திலும் என்ன இருந்ததோ, அதுதான் தானியத்தை தோன்றச் செய்தது. எனவே அந்நிய பாஷையில் பேசும் பரிசுத்த ஆவி என்ன? அது நீதிமானாக்கப்படுதலின் மேலும் வளர்ந்த கட்டம். பாருங்கள்? பெந்தெகொஸ்தே சபை என்ன? மேலும் வளர்ந்த லூத்தரன் சபை. பாருங்கள்? ஆனால், இப்பொழுது, வளர்ச்சியடைந்து விட்ட பிறகு, இந்த கேள்வி எழக் கூடும் அப்படியானால் நான் இருந்த இடத்திலேயே இருக்கவா? இல்லை! இல்லை, தானியம் முதிர்வடைந்து விட்டது. பாருங்கள்? நீங்கள் தானியத்தில் தொடங்குகிறீர்கள். நீங்கள் வார்த்தையில், தானியத்தில், தொடங்குகிறீர்கள். அது நீதிமானாக்கப்படுதலை தோன்றச் செய்கிறது. அது பரிசுத்தமாக்கப்படுதலை தோன்றச் செய்யும் வரைக்கும் நீதிமானாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பரிசுத்தமாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, அது என்ன செய்கிறது? அது என்ன... இன்னும் ஒரு கேள்வி உள்ளது, இல்லையா? சரி. 28“அந்நிய பாஷைகளில் பேசுதல் என்றால் என்ன? அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது உங்களை நீதிமானாக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்தின பரிசுத்த ஆவியின் அபிஷேகமேயன்றி வேறல்ல. அது மிகவும் அதிகமாக நிறைத்து! இப்பொழுது இந்தக் கேள்வி எனக்குத் தேவைப்பட்டது. இந்த மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்பார் என்று எனக்குத் தெரியவே தெரியாது. தேவன் அதை அறிவார். இப்பொழுது மிகவும் ... இங்கு மிகவும் உஷ்ணமாக இருந்தால், அந்த கதவைத் திறந்து விடுங்கள், உங்களுக்கு உறக்கம் வருவதாக இருந்தால். இதை நீங்கள் நன்றாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கு உண்மையில் சிறிது உஷ்ணமாயுள்ளது. உங்களுக்கு அது உறக்கத்தை வருவிக்கும். 29இப்பொழுது கவனியுங்கள், இதை கவனியுங்கள்: நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது இங்கே பாருங்கள். இதை விளக்க விரும்புகிறேன். இங்கு நான் இருக்கிறேன், நான் ஒரு பாவி . நான் இந்த வழியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். சற்று கழிந்து, ஒரு சமயம், ஏதோ ஒன்று என்னிடம் பேசுகிறது. தேவனைத் தவிர வேறொன்றும் என்னைத் திருப்ப முடியாது. அது சரியா? நான் இந்த வழியாக திரும்பி விடுகிறேன். நான் அவ்விதம் திரும்பும் போது, அது தான் என் நீதிமானாக்கப்படுதல். அது சரியா? அங்குள்ள கிறிஸ்துவின் படமே, நான் போய் சேரவேண்டிய இடம். எனக்கு நல்லுணர்வு தோன்றும் இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். பாருங்கள், நான் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன். நான் அவருடன் பேசக்கூடிய இந்த கட்டத்துக்கு வந்துவிட்டேன், ஏனெனில் .... நான் இன்னும் என்னைக் குறித்து வெட்கப்படும் நிலையில் இருக்கிறேன். நான் இன்னும் புகை பிடிக்கிறேன், இன்னும் பொய் சொல்கிறேன், நான் செய்யத்தகாத சில தீய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன், எல்லா நேரங்களிலும் எனக்கு ஏற்றத் தாழ்வு, ஏற்றத் தாழ்வு உள்ளது. ஆனால் நான் அவரிடம் நடந்து சென்று அவரிடம் பேச வேண்டும்மென்று வாஞ்சித்து, அவர் என்னை இவையனைத்திலுமிருந்து சுத்திகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? சரி, அது இங்குள்ளது, அது பரிசுத்த பரிசுத்தமாக்கப்படுதலின் கட்டம். அது என்ன செய்தது? அது என்னை நேராக்கியது. பாருங்கள்? 30இப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்குச் செல்கிறேன். பாருங்கள் இங்கு நான் அடையும்போது, ஒரு அபிஷேகத்தினால் நான் பரிசுத்த ஆவியில் இருக்கிறேன். அது சரியா? பரிசுத்த ஆவி என்ன செய்கிறது? அது எனக்கு வல்லமையைத்தருகிறது - ஒரு பிரசங்கியாயிருக்க வல்லமை, ஒரு பாடகனாயிருக்க வல்லமை, அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கு வல்லமை, பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பதற்கு வல்லமை. அது முழுவதும் வல்லமையாயுள்ளது, ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமை. தேவனுடைய வல்லமையே என்னைத் திசை திருப்பியது. தேவனுடைய வல்லமையே என்னை பரிசுத்தமாக்கியது. என்னை நிரப்பியது பரிசுத்த ஆவியே. இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நான் இங்கு நின்று கொண்டு எதையோ கூற முயல்கிறேன், தேவனுடைய வல்லமை என் மேல் அதிகமாக இறங்கி என்னால் பேச முடியவில்லை. பாருங்கள்? அப்பொழுது நான் திக்கி பேசத் தொடங்குகிறேன். உதாரணமாக, நான் “சகோதரர்களே” என்று கூற முற்படும்போது, அது.... இது இப்படியுள்ளது, இதை நான் இந்த விதமாக விவரிக்கப் போகிறேன். நீங்கள் அதை நிச்சயம் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று கருதி சகோதரர்களாகிய உங்களிடம் இதை விவரிக்கப் போகிறேன். “எப்படி இருக்கிறீர்கள், சகோதரனே? பாருங்கள், நான் இன்னும் பாவக் குற்றத்தில் இருக்கிறேன். ”உங்களில் நான் ஒருவனாக இருப்பதற்கு நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சரி. சற்று கழிந்து. என்ன நடக்கிறது? நீங்கள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் இன்னும் உலகத்தின் அசுத்தமானகாரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். 31சற்று கழிந்து நான் சுத்திகரிக்கப்படுகிறேன். ஏதோ ஒன்று சம்பவித்தது, நான் பரிசுத்தமாக்கப்பட்டு விட்டேன். அப்பொழுது நான் உங்களை முகத்துக்கு நேராக பார்க்க முடிகிறது. நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். பாருங்கள்? சரி. “சகோதரனே, தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்தில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்தமுள்ள சகோதரராகிய உங்கள் மத்தியில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்”. ஏன்? நீங்கள் விரலை சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது, நான் சுத்திகரிக்கப்பட்டு விட்டேன். இப்பொழுது தேவன் என்னை அவருடைய சேவையில் வைக்கப் போகிறார். ஆம். ஐயா! 32“சகோ. பிரான்ஹாமே, நீங்கள் நீதிமானாக்கப்பட்டு விட்டீர்களா?” “ஆம்! உங்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாதிருந்த காலத்தை நான் நினைவுகூருகிறேன். சகோதரனே, இப்பொழுது என்னால் உங்கள் முகத்தைப் பார்க்க முடிகிறது . பாருங்கள், இந்த மற்றது என்ன? இப்பொழுது நான் ... இது சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, இது சேவைக்குள் வருகிறது. “பரிசுத்தமாக்கப்படுதல்” என்பது கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது என்றும், அதன் அர்த்தம் “சுத்திகரிக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது” என்றும் நாம் அறிவோம். பாண்டங்கள் பலி பீடத்தினருகில் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சேவையில் இருக்க வேண்டுமானால், நிறைக்கப்பட்டு சேவையில் வைக்கப்பட வேண்டும். இப்பொழுது, நான் இங்கு சென்று, சேவைக்குள் வந்து விட்டேன். தேவன் தான், “எனக்கு செவிகொடு, எனக்கு செவி கொடு! எனக்கு செவி கொடு!' என்று சொல்லி என்னைத் திசை திருப்பினார். அவர் சொன்னார்... நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள்? இங்கு (சகோ. பிரான்ஹாம் ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதைப் போல் பேசி விவரிக்கிறார் - ஆசி). பாருங்கள், இங்கே, நீங்கள் மிகவும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அதுதான், பார்த்தீர்களா, அதுதான் அந்நிய பாஷையில் பேசுதல். 33எனது கருத்து இதுவே: அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று நான் நம்புவதில்லை. அதுவல்ல! ஏனெனில் மந்திரவாதிகளும், பாம்புகளை கையாளுகிறவர்களும், பிசாசுகளும் அந்நிய பாஷையில் பேசுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும், அது தேவனுடைய பிழையற்ற செயல் என்றும் சொல்லி விட முடியாது. ஆனால், இதை ஞாபகம் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளில் பேசுகிறார் என்பது உறுதி , ஆனால் பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதன் அத்தாட்சி நீங்கள் வாழும் வாழ்க்கையே, பாருங்கள். “ அவர்களுடையகனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:16). ஆவியின் கனி அந்நிய பாஷை பேசுதல் அல்ல (அவ்விதம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை). ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், சமாதானம், இச்சையடக்கம் (கலா. 5: 22-23). பாருங்கள், அது தான் களி. அது எந்தவிதமான மரம் என்று கூறுவதற்கு, இதை தான் அந்த மரத்தில் காண்கிறீர்கள். பாருங்கள்? அது தான். 34மனிதர் பிரசங்கிகளாகிய உங்களை, டீகன்மார்களாகிய உங்களை, தர்மகர்த்தாக்களாகிய உங்களை, சுவிசேஷகர்களாகிய உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் இந்த தெருவில் நாள் முழுவதும் அந்நிய பாஷையில் பேசினாலும், அவர்கள் உங்களை நம்பமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ, அதை வாழ்ந்து காண்பித்து, கசப்பான வேர் அனைத்தையும் உங்களை விட்டு களைந்து போட்டு, இனிமையைக் காண்பீர்களானால், அப்பொழுது மனிதர் ஏதோ ஒன்று உள்ளதை உணருவார்கள். “அந்நிய பாஷையில் பேசுதல்”. தேவனுடைய பலி பீடத்தின் கீழ் தன்னை படைத்திருக்கும் ஆவியினால் நிறைந்த நபர் அந்நிய பாஷையில் பேசுவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? அவரைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகின்றனர். இந்த வரங்களில் எந்த ஒன்றையுமே பாவனை செய்ய முடியும். பாருங்கள்? ஆனால் ஆவியின் கனியோ உள்ளில் உள்ள ஆவி எது என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு சாட்சியாக இருக்கிறீர்கள். ஏனெனில், ஆப்பிள் மரத்தில் பீச் மரத்தின் சத்து இருக்குமானால், அது, உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக பீச் பழங்களைத் தான் கொடுக்கும். அது உண்மை . பாருங்கள், ஏனெனில் அது தான் அதற்குள் இருக்கும் ஜீவன். 35இப்பொழுது, இங்கும் அதே காரியம் தான். நாம் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, இதை நான் உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன். நான் விசுவாசிப்பது என்னவெனில். ... ஆவியின் அபிஷேகத்தினால் கிறிஸ்துவுக்குள் வரும் ஆவியில்நிறைந்த ஒருவன் வெறுமனே .... அதுவல்ல. அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட தன் அடையாளமல்ல. பாருங்கள்? அபிஷேகம் என்னும்போது, நீங்கள் பிசாசின் வல்லமையினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, இந்த பிசாசின் வஞ்சகஆவியின் அபிஷேகத்தின் மூலம் அந்நிய பாஷையில் பேச முடியும். அதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? அதை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன்? அவர்கள் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து விட்டு, அந்நிய பாஷையில் பேசுவது எனக்குத் தெரியும். 36வனாந்தரத்திலுள்ள பாம்பாட்டிகள், பெரிய பாம்பை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதிகள் அந்நிய பாஷையில் பேசி அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர். - நான் மந்திரவாதிகளின் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் ஒரு பென்சிலை கீழே வைப்பார்கள், ' ஓரு புத்தகத்தையும் கீழே வைப்பார்கள். பென்சில் புகை போக்கி குழாயில் மேலும் கீழும் ஓடி, “முகச்சவரம், மயிர். கத்தரித்தல், இரண்டு துண்டு” என்னும் பாடலை வாசிக்கும், அது அந்நிய பாஷைகளில் எழுதி, மந்திரவாதி அதற்கு அர்த்தம் உரைத்து என்ன நடந்ததென்று பிழையின்றி உரைப்பான். அது எனக்குத் தெரியும் : பாருங்கள்? எனவே நான்... பாருங்கள், உங்களால் ... பவுல், “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்து போம், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். இந்த வரங்கள் அனைத்தும் விரைவில் போய்விடும்' என்று கூறியுள்ளான் (அந்த கேள்வி சற்று பின்னால் நமக்கு வருகிறது, ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்”. பாருங்கள்? எனவே, நமக்கு நிறைவானது வேண்டும், சகோதரரே. நாம் போலியான அநேக காரியங்களையும், அவை தவறான அர்த்தம் உரைத்ததையும் நாம் கண்டிருக்கிறோம். 37ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதை நீங்கள் முகத்துக்கு நேராக காண்பதனால், அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக நம்பி விடாதீர்கள். பாருங்கள்? ஆனால் அவர்களில்காணும் கனிகளைக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பதை தீர்மானியுங்கள். ஏனெனில் “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு உரைத்திருக்கிறார். பாருங்கள்? அது உண்மை . “அவர்களுடைய கனிகளினாலே”. இப்பொழுது, அதிலிருந்து நான் விலகிச் செல்லாதிருப்பேனாக. ஏனெனில் தேவன் அளித்துள்ள அந்த மகத்தான வரத்தை நான் அவமதிக்க விரும்பவில்லை. பாருங்கள்? நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழும் ஆவியில் நிறைந்த மனிதன் அல்லது ஸ்திரீ, அல்லது பிள்ளை எவருமே அந்நிய பாஷையில் பேசாமல் அங்கு நீண்ட காலம் வாழமாட்டார்கள். பாருங்கள்? அவனோ அல்லது அவளோ அதை செய்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 38நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது ஒருக்கால் அந்நிய பாஷை பேசாமல் இருந்திருக்கலாம். பாருங்கள்? ஆனால் நீங்கள் எந்நேரமும் தேவனுக்கு முன்பாக கிடக்கும் போது, அபிஷேகத்தின் மேல் அபிஷேகம் உங்களுக்கு கிடைக்கும் போது, ஏதோ ஒன்று நடக்கும். பாருங்கள்? என்றாகிலும் ஒரு நாள் நீங்கள் மிகவும் நிறைந்து, உங்களால் வேறொன்றையும் பேச முடியாத நிலை ஏற்படும். நீங்கள் ஏதோ ஒன்றைப் பேச முனைவீர்கள் ஆனால் உங்களால் அதை பேச முடியாது. ஜனங்கள் மாத்திரம் அது பரிசுத்த ஆவி என்பதை உணருவார்களானால், அவர்கள் முன் சென்று, தங்கள் இருதயத்தைத் திறந்து, தேவன் அவர்களிடம் பேசுவதற்கு விட்டுக் கொடுப்பார்கள். “பரியாச உதடுகளினாலும் (ஆங்கிலத்தில் ”stammering tongues“ - அதாவது நிதிக்கு வாயினாலும் - தமிழாக்கியோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்' என்று வேதம் உரைக்கிறது. ஏசா. 28:18ப் பாருங்கள் (ஏசா. 28:11 - தமிழாக்கியோன்). 39“திக்கு வாய் என்றால் என்ன? ஒருவர் தெளிவாக பேச முடியாமலிருப்பது (சகோ. பிரான்ஹாம் ஒருவர் திக்கு வாயினால் பேசுவதைப் போல் காண்பிக்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் திக்கிப் பேசுகிறீர்கள். நீங்கள் தெளிவாக பேச முயல்கிறீர்கள். பாருங்கள் . ஆவியினால் முழுவதும் நிறைதல் அவர் பேச முயல்கிறார். . உதாரணமாக நான். ”சகோதரன் ஜா - ஜா - ஜாக்... ஜா... சகரன் ஜாக்... சகோதரன் ஜா - ஜா - ஜாக் - ஜாக் - ஜாக்ஸன்“ என்று கூறுவதுபோல. பாருங்கள். அது போல, நீங்கள் பேச முயல்கிறீர்கள். ஆனால் உங்களால் பேச முடிவதில்லை. பாருங்கள், அது ஆவியினால் மிக அதிகமாக நிறைந்திருத்தல்! அது... 40சகோதரரே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவி எப்பொழுதாகிலும் உங்களை மிகவும் அதிகமாக அசைத்து, உங்களால் ஒன்றும் பேச முடியாமல் போய், சிறிது நேரம் நீங்கள் அமைதியாக இருந்து, நீங்கள் உட்கார்ந்து அழுகின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அவ்விதம் நீங்கள் செய்திருக்கிறீர்களா? நல்லது. அதுதான் பரிசுத்த ஆவி . நீங்கள் மாத்திரம்... ஜனங்கள் அநேக நேரங்களில் அந்நிய பாஷையில் பேசாததன் காரணம், தங்களை எவ்வாறு ஆவிக்கு சமர்ப்பிப்பது என்பதை அறியாததனால் தான். அது அவர்கள் மேலேயே உள்ள போது, அவர்கள் தொலைவிலுள்ள ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? ஆகையால் தான் அவர்களால் முடியாமல்..... சிலர் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமே இல்லாத சில வார்த்தைகளைக் கூறுகின்றனர். அவர்களுக்குப் பரிசுத்த ஆவி கிடையாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக கூறிக் கொள்கின்றனர். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“. பாருங்கள்? 41இப்பொழுது, ஏதாகிலும் கேள்வி உண்டா? (சகோ. ஜூனியர் ஜாக்ஸன், “சகோ. பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. அந்த கேள்வி கேட்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் தவறான ஒன்றை ஏற்றுக் கொண்டு போதிப்பதாக ஒருவர் சந்தேகித்தார். நீங்கள் எந்தவிதமாக போதித்தீர்களோ அதே விதமாகவே நானும் போதிக்கிறேன்) நன்றி, சகோ. ஜாக்ஸன். “நான் எத்தனை முறை அந்நிய பாஷையில் பேசினாலும், வேதம் உரைப்பதற்கு என் வாழ்க்கை சாட்சி பகராவிட்டால், தெருவில் போகும் ஒரு நாயை விட நான் சிறந்தவன் அல்ல) அது உண்மை . (”நான் அபிஷேகம் பெற்று ஆறு மாதங்கள் வரைக்கும் அந்நிய பாஷையில் பேசவேயில்லை எனக்கும் கூட அப்படித்தான் நேர்ந்தது, சகோ. ஜாக்ஸன். 42என் கொட்டிலில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு ஆண்டுகழித்து - அப்படி ஏதோ ஒன்று - நான் அந்நிய பாஷையில் பேசினேன். அதற்கும் ஓரிரண்டு ஆண்டு கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் இப்படி மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனாயிருந்தேன், இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும். அக்காலத்தில் நான் பிரசங்கிக்கும் போது அதிக உணர்ச்சி வசப்படுவதுண்டு. அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபை , மில்டவுன் பாப்டிஸ்ட் சபை . நான் மிகவும் பலமாக பிரசங்கித்துக் கொண்டே உட் பாதைக்கு சென்றேன். நான் பிரசங்கத்தை நிறுத்தினவுடனே, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டது. நான் சில வார்த்தைகளை - நான்கு, ஐந்து, ஆறு வார்த்தைகளை - அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு முன், களைப்படையும் தேசத்தில் கன்மலை, புயலடிக்கும் நேரத்தில் ஒதுங்குமிடம்“ என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பாருங்கள்? 43அதன் பிறகு ஒரு நாள் நான் ரயில் பாதையின் வழியாக, ஸ்காட்ஸ்பர்குக்கு இந்த பக்கமாக, ரோந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. ஓ. என்னே, ரயில் பாதையின் மேல் பனிக் கட்டி படர்ந்திருந்தது. எனக்கு நியமிக்கப்பட்ட முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் ரயில் பாதையைக் கடந்து மறுபுறம் சென்றேன். அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது. அது ஏறக்குறைய ரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சடுதியாக... நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன. நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்த போது. திடீரென்று நான் அந்நிய பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள். நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவேயில்லை. அந்நிய பாஷையில் பேசுதல் எரியும் நிலயில் (combustion) வருவதால், அந்த நபருக்கு தான் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. அவர்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. பாஷைக்கு அர்த்தம் உரைத்தலும் அவ்விதமாகவே உள்ளது. அர்த்தம் உரைப்பவர்கள் தாங்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்திருக்கவே மாட்டார்கள். அதைக் குறித்து அவர்களுக்கு எந்த எண்ணமும் இருக்காது. ஏனெனில் அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று. பாருங்கள். நீங்கள் மாம்சத்தை அதில் நுழைப்பீர்களானால், அது மாம்ச சம்பந்தமாகி விடுகிறது. ஆனால் ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக் கொண்டு, உங்களை ஆட்கொள்ளும் போது, உங்களை அறியாமலேயே அதை நீங்கள் செய்கிறீர்கள். பாருங்கள்? 44[சகோ. நெவில், “சகோ. பிரான்ஹாமே, இப்பொழுது நான் ஒன்றைக் கூறலாமா?” என்று கேட்கிறார் - ஆசி]. நிச்சயமாக, சகோ. நெவில், நீங்கள் கூறலாம். (“நீங்கள் இவ்விதமாகக் கூறுகிறீர்கள். ஒரு மனிதன் அந்நிய பாஷை பேசும்போது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனால், அது ஆராதனையில் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டுமே, நீங்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில்.... ஒரு வரத்தையுடைய மனிதன் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறான் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். ஆம். உதாரணமாக... ('அந்நிய பாஷையில் பேசவிருக்கும் ஒருவன். அவன் பேசப்போகிறான் என்பதை அறிந்திருக்க வேண்டும் ) ஆம். அது உண்மை . (”இல்லையென்றால், அவன் ஒழுங்கை மீறினவனாயிருப்பான்“]. அது உண்மை . அவனுக்கு அந்த உணர்வு தோன்றுகிறது. பாருங்கள்? ”அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவன் இருந்தால், அதற்கு அர்த்தம் உரைக்கிறவன் இல்லாமல் போனால், அவன் அமைதியாயிருக்கக் கடவன்“ என்று வேதம் உரைக்கிறது. 45உதாரணமாக, நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாராகிலும் ஒருவர். நீங்கள் கூச்சலிடவிருக்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடத் தொடங்கும்போது, தேவனுடைய வல்லமை உங்கள் மேல் வரும்வதை நீங்கள் எப்பொழுதாகிலும் உணர்ந்ததுண்டா? எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? நல்லது. நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். பாருங்கள்? நீங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லமை உங்கள் மேல் வருவதை உண்ருகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் அணைத்து போட வேண்டிய நேரங்கள் உண்டு. அதாவது அதை நீங்கள் அடக்கிக் கொள்ள முடியும். பாருங்கள். அந்நேரத்தில் பேசுவது தகாததாயிருக்கும். நீங்கள் நின்று கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அல்லது நகரத் தந்தையுடன் அல்லது ஒரு கூட்டம் ஜனங்களுடன் ஏதோ ஒன்றைக் குறித்து இத்தெருவில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் திடீரென்று மேலும் கீழும் குதித்து. “மகிமை. அல்லேலூயா!” என்று கூச்சலிட்டு, எல்லாவற்றையும் உதைத்தெறிந்து. தெருவில் மேலும் கீழும் ஓடத் தொடங்கினால், நீங்கள் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறுவார்கள். பாருங்கள், அந்த மனிதன் பைத்தியக்காரன் என்பார்கள். பாருங்கள்? 46நல்லது. அவ்விதம் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களைத் தோண்டிக் கொண்டேயிருந்து, உங்களால் அடக்கிக் கொள்ளவே முடியாது என்னும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் எப்படியும் அதை அடக்கிக் கொள்வீர்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் நீங்கள்; “ஆம். ஐயா. ஆம். ஐயா . உ - ஊ, ஊ - ஊ. ஆம், ஆம், ஐயா . உ - ஊ ” என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அந்த நேரத்தில் அது உங்களை துண்டு துண்டாக தோண்டியெடுத்துக் கொண்டிருக்கும். இருப்பினும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருப்பீர்கள். பாருங்கள்? அண்மையில் நீதிமன்றத்தில், சில பெந்தெகொஸ்தேயினரை, அவர்கள் ஏதோ ஒன்றைச் செய்ததற்காக - அதிகமாக கூச்சலிட்டார்கள் என்பதற்காக, அப்படி ஏதோ ஒன்றிற்காக - கொண்டு நிறுத்தினர். அவர்கள் செய்தது முற்றிலும் நியாயமானது. பாருங்கள். ஆனால் நீதிபதி அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கூற முயன்ற ஒவ்வொரு முறையும். அவர்கள் அந்நிய பாஷை யில் பேசத் தொடங்கினர். பாருங்கள்? நீதிபதிக்கு கோபம் மூண்டு. “இந்தப் பைத்தியக்கார ஜனங்களை இங்கிருந்து கொண்டு போய் விடுங்கள் என்று கூறிவிட்டார். பாருங்கள்? 47அவர்கள் பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் உண்டாயிருந்து, அவர்கள் நீதிபதியிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது. இன்னின்ன காரியம் நடந்தது என்று உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றைக் கூறியிருந்தால்! ”கர்த்தர் உரைக்கிறதாவது, நேற்றிரவு நீர் ஒரு வேசியுடன் வாழ்ந்தீர். அவள் பெயர் சாலி ஜோன்ஸ். அவள் இன்னின்ன தெருவில் 44ம் எண் வீட்டில் வசிக்கிறாள். அப்படியிருக்க, நீர் எப்படி என்னை நியாயந்தீர்க்கலாம்? அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதை நீர் மறுதலிப்பீரானால், இங்கேயே விழுந்து சாவீர்“, ஓ, சகோதரனே! அப்பொழுது அங்கு வித்தியாசமான ஒன்று நடந்திருக்கும். ஆனால் நீங்கள் அங்கு நின்று கொண்டு அந்நிய பாஷை மட்டும் பேசுவீர்களானால், “நீங்கள் அவர்களுக்கு மூடர்களாயிருப்பீர்கள்” என்று பவுல் கூறினான். பாருங்கள்? நீங்கள் எப்பொழுது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுது கடைபிடிக்காமலிருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது. அது... பாருங்கள், நான்... இப்பொழுது புரிந்து கொண்டீர்களா, நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். பாருங்கள்? நிச்சயமாக 48அந்த கேள்வி இங்கே கீழே வருகிறது. அதை நான் கூறாமல் பிடித்து வைத்திருந்த காரணம், அதே கேள்வி நமக்குள்ளது. “அவர்கள் அமைதியாயிருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றனரா?” பாருங்கள்? அதற்காகத் தான் நீங்கள் கேட்கும் வரைக்கும் அதற்கு பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இப்பொழுதே, பாருங்கள், இப்பொழுதே. கீழேயுள்ள இந்தக் கேள்வியையும் நாம் பார்க்கலாம், அப்பொழுது ஏற்கனவே கூறினவைகளை நாம் குறிப்பிடலாம். எல்லோரும் அந்தக் கேள்விக்கான பதிலை நன்றாக புரிந்து கொண்டீர்களா? (சகோ. ஃபிரட், “சகோ. பிரான்ஹாமே” என்று அழைக்கிறார் - ஆசி). ஆம், சகோ. ஃபிரட். (ஆவியில் பேசும் ஒருவர் (அவர் ஆங்கிலேயன் என்றும் அவர் ஆங்கிலம் பேசுகிறவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவர் ஆங்கிலத்தில் பேசும்படி ஆவியானவர் அவருக்குத் தந்தருளுவாரா?) நிச்சயமாக. ஆம், ஐயா. பாருங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் எல்லா பாஷைகளிலும் பேசக் கூடும்.பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில், வானத்தின் கீழ் காணப்படும் எல்லா பாஷைகளையும் பேசினவர்கள் அங்கு கூடியிருந்தனர், பாருங்கள். ஆங்கிலத்தில் பேசுவது... இப்பொழுது. சகோ. ஃப்ரட்டி, இதை நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன், அதாவது நான்... நான் அபிஷேகத்தின் கீழ் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கத்தால், அது ஆவியானவர் பேசும்படி தந்தருளுவதே, பாருங்கள். அது ஆங்கிலம் தெரியாதவனுக்கு அந்நிய பாஷையாயிருக்கும். இருப்பினும்... 49அந்நிய பாஷை என்பது (ஆங்கிலத்தில்; “unknown tongue” தெரிந்திராத பாஷை - தமிழாக்கியோன்) உண்மையில் அந்நிய பாஷை அல்ல. அது... அங்கு யாராகிலும் இருப்பார்கள்... பெந்தெகொஸ்தேநாளில் அங்கு கூடியிருந்தவர்கள், அந்த பாவிகள் அனைவரும், “இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்றனர் (அப். 2:7-8). அங்கு “அந்நிய பாஷை என்பது இருக்கவேயில்லை. பாருங்கள், அது வேதப்பூர்வமானது அல்ல. பாருங்கள்? அங்கு அந்நியமாக.... அது அந்நிய பாஷை அல்ல, அது ஒரு பாஷை. ”நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? அங்கு தெரிந்திராத பாஷை ஒன்றுமே இல்லை. பாருங்கள்? இதை நாம் விட்டுச் செல்லும் முன்பு, இதன் பேரில் ஏதாகிலும் கேள்வி இப்பொழுது இருக்கின்றதா? “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே”. பாருங்கள்? 50ஒரு சகோதரன், “மானிட பலவீனத்தின் காரணமாக ஒரு சிறு தவறு நேரிடுகிறது. ஜனங்கள். வேறெதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து, அதை அப். 2:4ன்படி தவிர, வேறெந்த விதத்திலும் விசுவாசிக்க மாட்டேன்' என்கின்றனர்' என்கிறார் - ஆசி) நல்லது. அவர்கள் தெரிந்திராத பாஷையில் நிச்சயம் பேசமாட்டார்கள் (”இல்லை, தெரிந்த ஒரு பாஷையில்). உ-ஊ . ஜனங்கள் நீங்கள் கூறுவதை கேட்கக் கூடிய பாஷையில் அவர்கள் பேச வேண்டும். பாருங்கள். ஏனெனில் “தங்கள் தங்கள் பாஷையில் அவர்கள் பேசுகிறதைக் கேட்டார்கள்” (அப். 2:6). இப்பொழுது, நான் இந்த இடத்திலே - பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேனானால்.... நான் சொல்வேன்....இங்குள்ள ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற அதை நாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன், அது சகோ. உட். அது சரிதானே, சகோ. உட்? உங்கள் பெயரை அறிவிக்க நான் நினைக்கவில்லை... என்னவிருந்தாலும் இங்குள்ள நாம் சகோதரரர்கள், இதை நாம் கூற விரும்புகிறோம். அவர் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது , சகோ. பாங்க்ஸ் அதை சரியான விதத்தில், வேதத்தின்படி பெற்றுக் கொள்வாரானால், அவர் எழுந்து நின்று ஆங்கிலத்தில் பேசுவார். அவர், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எழும்பினார்” என்று சொல்லுவார். அவர், “அவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது என் இருதயத்தில் வந்தார், அவர் தேவனுடைய குமாரன் ! என்னுடைய பாவங்கள் போய் விட்டன, எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது' என்னும் அனலுரைக்கும் தீர்க்கதரிசனமாக அதை கூறுகிறார். பாருங்கள்? பார்த்தீர்களா? அது பாஷை பேசுதல்.... “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 51இப்பொழுது இந்தியானாவிலுள்ள நாமும் கென்டக்கி நாட்டிலுள்ளவர்களும் வெவ்வேறு பாஷைகளைப் பேசுகிறோம். என்றும் சகோ. பாங்க்ஸ் கென்டக்கியைச் சேர்ந்தவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவரால் இந்தியானா பாஷையை பேச முடியாது. அவர் எழுந்து இந்தியானா பாஷையில் பேசுவாரானால் - அவருக்கு அந்த பாஷை தெரியாது என்பது தெரியும். பாருங்கள்? அவர் இந்தியானா பாஷையில் பேசுவதை நாம் கேட்கிறோம். அவர் கென்டக்கி பாஷையில் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார். அல்லேலூயா!” என்று கென்டக்கி பாஷையில் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ அவர் கூறுவதை இந்தியானா பாஷையில் கேட்கிறோம். பெந்தெகொஸ்தே நாளில் அவ்விதமாகத்தான் இருந்தது. பாருங்கள்? “இவர்கள் எல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? ”இவர் கென்டக்கியை சேர்ந்தவர் அல்லவா? அப்படியிருக்க, இந்தியானா, ஒஹையோ, இல்லினாய், மெய்ன் .மசாசூசட்ஸ், கலிபோர்னியா நாட்டைச்சேர்ந்தவர்களாகிய நாம் நம்முடைய ஜென்ம பாஷைகளில் அவர் பேசுவதைக் கேட்கிறோமே, இதெப்படி? கருத்து புரிகிறதா? பாருங்கள், அது ஆவியின் ஏவுதல். பாருங்கள், அவர்கள் ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு அதை கேட்கின்றனர், 52பாருங்கள், அங்கு அளிக்கப்பட்ட செய்தி என்னவெனில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த சாட்சியே. பாருங்கள். அது உண்மை . தேவன் உங்களில் வாசம் செய்யாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் அதைக் குறித்து சாட்சி சொன்னாலும், நீங்கள் இதை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. பாருங்கள்? அது உண்மை . நீங்கள் எவ்வளவு நன்றாக இப்பொழுது வேறு கேள்வி உண்டா? (சகோ. ராய் ராபர்ஃன், “நல்லது, சகோ. பிரான்ஹாமே, அதை நாம், அந்த ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த பெண்ணின் விஷயத்தில், ஜெப வரிசையில் கண்டோம் என்று எண்ணுகிறேன்” என்கிறார் - ஆசி) ஆம். மிகவும் நல்லது, சகோ. ராய். அங்குதான் நான் இப்பொழுது செல்லப் போகிறேன் - போமாண்டுக்கு. அது போமாண்ட் தானே? ஆம், ஐயா. அங்கு ஜெபவரிசை நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் மேடையின் மேல் வந்தாள். வெளிப்படையாகக் கூறினால், நான் வெளியே போகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இல்லையா? ஹாவர்ட் என்னை வெளியே கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஸ்பானிய சிறுமி - அவளுக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும் - அழுவதைக் கேட்டேன். நான் பார்த்த போது, நான் தொடர்ந்து சென்றிருந்தால், ஜெபவரிசையில் அடுத்தபடியாக அவளுக்கு ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கு அவள் ஜெப அட்டையை வைத்திருந்தாள். வரிசையில் நிறைய பேர் இருந்தனர், ஆனால் அவளுடையது தான் அடுத்த ஜெப அட்டை. நான், அவளைக் கொண்டு வாருங்கள்“ என்றேன். அவர்கள் அவளை மேடையின் மேல் கொண்டு வந்தனர். நான் வேறொரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ”அவளை மேலே கொண்டு வாருங்கள்' என்றேன். நான் அவளிடம் இப்படி ஏதோ ஒன்றைக் கூறினேன்: “நீ விசுவாசிப்பாயா? உனக்குள்ள கோளாறு என்னவென்று உன்னிடம் கூறுவதற்கு இயேசு எனக்கு உதவி செய்வாரானால், அவர்உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிப்பாயா?” என்று. அவள் தலை குனிந்து கொண்டிருந்தாள். அவள் செவிடு ஊமை என்று எண்ணினேன். பாருங்கள்? 53நான் மறுபடியும் அவளைப் பார்த்தபோது, “அவளுக்கு ஆங்கிலம் தெரியாது” என்று சொன்னேன். எனவே அவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை அங்கு கொண்டு வந்தனர். “அதை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். அவள் ஆம் என்று சைகை காட்டினாள். நான் கூறினதை அவளால் மொழிபெயர்ப்பாளரின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. பாருங்கள்? 126: நல்லது, நான் சொன்னேன். நான் பார்த்த போது, எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. நான், “ஒரு பழைய காலத்து அடுப்பைக் காண்கிறேன், அதன் மேல் ஒரு கிண்டி உள்ளது. அது மஞ்சள் சோளக்கதிரினால் நிறைந்துள்ளது . சகோ. ராய், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ”நீ சோளத்தை அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டாய். அப்பொழுது நீ மிகவும் வியாதிப்பட்டாய், உன் தாய் உன்னைக் கட்டிலில் படுக்க வைத்தாள். அப்பொழுது உனக்கு வலிப்பு வரத் தொடங்கினது. அன்று முதல் உனக்கு அந்த வலிப்பு இருந்து வருகிறது“ என்றேன். அவள் திரும்பி மொழிபெயர்ப்பாளரை நோக்கி, “அவருக்கு ஸ்பானிஷ்பாஷைபேசத் தெரியாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றாள். மொழிபெயர்ப்பாளர் என்னை நோக்கி, “நீங்கள் ஸ்பானிஷ் பாஷையில் பேசவில்லை, இல்லையா?” என்றார். நான், “இல்லை” என்றேன். நாங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டதை போட்டுக் கேட்டோம். அது முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தது. 54அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் அந்த பெண்ணை நோக்கி, “அப்படியானால் அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். பாருங்கள், அவளுக்கு சரியான அர்த்தம் கிடைத்ததா என்று அவர் பார்க்க வேண்டும். “அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். அவள் நான் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவரிடம் ஸ்பானிஷ் பாஷையில் எடுத்துக் கூறினாள். நான் ஆங்கிலத்தில் பேசினதை அவள் தன்னுடைய ஜென்ம பாஷையில் - ஸ்பானிஷ் பாஷையில் - கேட்டாள். “நாம் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக். கேட்கிறோமே, இதெப்படி? அந்த பெண் சுகமடைந்தாள். பாருங்கள், அதுதான், அது தேவனுடைய அற்புதமான கிரியை. ஒரு சகோதரன், “அப்படியானால், பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள அந்த பாண்டம் ஒரு பாண்டமாக மட்டுமே இருக்கும், அதை நிரப்புகிற ஒருவர் அதை எதை கொண்டும் ... என்று கேட்கிறார் - ஆசி). அவருடைய விருப்பத்திற்கேற்ப எதைக் கொண்டும். அது முற்றிலும் உண்மை. அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள், அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள், பாருங்கள்? அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த பாண்டம் அசுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம் அல்ல. அது சுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம். நான் கூறுவது விளங்குகிறதா? (அந்த சகோதரன், “சில நேரங்களில் அந்த பாண்டம் உபயோகிக்கப்பட்டு, அது அறியப்படாமலே இருக்க வகையுண்டு” என்கிறார் - ஆசி). ஓ, நிச்சயமாக. (அந்த சகோதரன் ஒரு சாட்சி கூறுகிறார் - ஆசி). உ-ஊ, உ-ஊள. அது முற்றிலும் உண்மை . நிச்சயமாக. ஓ, நாம் எல்லாருமே அதைக் கண்டிருக்கிறோம், அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா . நாம் எல்லாருமே ... இவை யாவும் நமக்குத் தெரிந்த விஷயமே. 55அது நான்காம் கேள்வி என்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்கெளல்லாரிலும் அதிகமான பாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன். இப்பொழுத, நான் நினைப்பது என்னவென்றால், இந்த சகோதரனின் கேள்விக்கு பதிலளித்து முடிக்க : அவர்களெல்லாரிலும் அதிகமாக பவுல் பாஷைகளைப் பேசுதல். பவுல் அறிவுள்ள ஒருவன், அவனுக்கு அநேக மனுஷகள் தெரிந்திருந்தது. பாருங்கள், அவனால்... அவன் நியாய விசாரணைக்குச் சென்றிருந்தபோது, அவன் இந்த பாஷையை, அந்த பாஷையை பேசினான். அது மற்றவர்களுக்கு அந்நிய பாஷையாக இருந்தது. அது ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு பேசப்பட்ட பாஷையல்ல. அவை வழக்கமாக பேசப்படும் மொழிகள். ஆனால்... மற்றும் ...... 56தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆவியின் நிறைவைப் பெற்றுள்ள எந்த ஒரு நபரும் விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசும் அனுபவத்தைப் பெற்றிருப்பார் என்பது என் கருத்து. ஏனெனில் பவுல் விவரித்துள்ளபடி அது தான் வரங்களில் மிகவும் தாழ்ந்த, மிகவும் குறைந்தவரம். நீங்கள் வரங்களை வரிசைப்படுத்தினால், வரங்களின் வரிசையில் பாஷைகளைப் பேசும் வரமே கடைசியான வரம் (1 கொரி. 12:28). இப்பொழுது, முதலாவதாக, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் வரங்களாக இருக்கிறீர்கள் என்றும், நான் வெளியே இருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது, “ஒரே வாசலினாலே, ஒரே ஆவியினாலே”. ஒரே வாசலின் வழியாக இந்த அறைக்குள் நுழைகிறேன். அது சரியா? நான் அந்த வழியாக வர முடியாது, இந்த வழியாக வரமுடியாது. பின்னால் உள்ள அந்த வழியாக வரமுடியாது. பாருங்கள்? நான் எப்படி இங்கே வருகிறேன்? சகோ. ராபர்ஸன் வழியாகவா? இல்லை, ஐயா . சகோ. லியோவின் வழியாகவா? அவர் அந்நிய பாஷை பேசும் வரம் என்று வைத்துக் கொள்வோம், பாருங்கள், நான் சகோ. லியோவின் வழியாகவா இதற்குள் வருகிறேன்? இல்லை, ஐயா. உ-ஊ . அப்படியானால், நான் எவ்வாறு உள்ளே வருகிறேன்? “ஒரே வசலினாலே, ஒரே ஆவியினாலே'. ஆவி என்பது எல்லாமே பாஷைகள் அல்ல. ஒ , இல்லை. ஹ! பாருங்கள்? பாருங்கள், ”ஒரே ஆவியினாலே இந்த சரீரத்திற்குள் நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன்“. 57இப்பொழுது, இது ஆவி, நீங்கள் எல்லோரும் வரங்கள். நீங்கள், “நல்லது. தேவனே ஸ்தோத்தரியுங்கள்” என்கிறீர்கள். நான் அங்கு செல்கிறேன், அங்கு சகோ. உட் இருக்கிறார், 'அவர் அற்புதங்கள் என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம்.பாருங்கள்? “ஓ, நான் ஒரு அற்புதத்தை செய்தேன். நான் அற்புதத்தை செய்ததனால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று அறிந்திருக்கிறேன். ஒரு ”அற்புதத்தினாலே “ நாம் எல்லாரும் அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. நான் பிறகு சகோ. ஜூனியிடம் செல்கிறேன், அவர் அறிவு என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம். “நல்லது. நல்லது, எனக்கு வேதாகம அறிவு உள்ளது. ஆகையால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று எனக்குத் தெரியும்”. இல்லை, நாம் பிரவேசிக்கும் வழி அதுவல்ல. சரி, சகோ. லியோவினாலும் அல்ல, சகோ. உட்டினாலும் அல்ல, சகோ. ஜூனியினாலும் அல்ல. பாருங்கள்? அல்ல. ஆனாலே ஒரே எதனாலே? (சபையோர்“ஆவியினாலே” என்கின்றனர் - ஆசி). இந்த சரீரத்திற்குள்ளாக நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன். இப்பொழுது நான் அதற்குள் இருக்கிறேன், இப்பொழுது பிதா என்னை எங்கே உபயோகிக்கப்போகிறார்? பாருங்கள்? ஒருவேளை லியோ (அந்நிய பாஷை பேசும் வரம் - தமிழாக்கியோன்) வாசலின் அருகே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடும். அந்நிய பாஷை பேசுதல் ஒரு வேளை முதலாவது காரியமாக இருக்கக் கூடும், அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம். நான் ஆவியை அதிகமாக பெற்றிருக்கக் கூடும், அப்பொழுது தேவன் மற்றெல்லாவற்றையும் கடந்து சென்று சகோ. உட்டை (அற்புதங்களைச் செய்யும் வரம் - தமிழாக்கியோன்) அடைய முடியும். எனக்கு பரிசுத்த ஆவி இல்லையென்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனெனில் ஞானஸ்நானத்தின் மூலமாக நான் இந்த சரீரத்திற்குள் இருக்கிறேன். நான், “நல்லது. தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக, இப்பொழுது நான் உட்கார்ந்து கொண்டு இளைப்பாறுவேன், நான் பரலோகத்திற்கு செல்வேன்” என்று சொல்வதற்காக தேவன் என்னை இங்கு கொண்டு வரவில்லை. ஹ! நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் இங்கிருந்து அங்கு செல்ல முடியும். நான் கூறுவது புரிகிறதா? நான் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியும், அல்லது நடுபாகத்திற்கு செல்ல முடியும், எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒன்று நடக்கும், ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும். அது என்ன? ஆவியின் ஞானஸ்நானம் நான் அந்த சரீரத்தில் இருக்கிறேன் என்பதைக் காண்பிக்கிறது. “ஒரே ஆவியினாலே”. சகோதரனே. இதை கிரகித்துக் கொண்டீர்களா? சரி! அது தானே நீங்கள் கேட்டது? சரி. 58அந்நிய பாஷைகளும் தீர்க்கதரிசனங்களும் ஆராதனையின்போது எந்த வரிசைக் கிரமத்தில் உபயோகிக்கப்பட வேண்டும் ... (ஆராதனையின்போது அவை உபயோகிக் கப்படவே கூடாது. பாருங்கள்?) தேவனை மகிமைப்படுத்த... (கூடவே கூடாது!). சபை பக்தி விருத்தியடையச் செய்ய? ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், தீர்க்கதரிசியினுடைய ஆவி... (இல்லை, என்னை மன்னிக்கவும். அது வேதாகமம், நான் “ஜனங்கள்” என்று சொல்லவிட்டேன், இல்லை). தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது“ என்று வேதாகமம் உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆவியில் அந்நிய பாஷை பேசுதலும் தீர்க்கதரிசனம் உரைத்தலும் சபையை பக்திவிருத்தியடையச் செய்வதற்காகவே, ஆனால் அதற்குரிய சேவை ஒன்றுண்டு. பாருங்கள்? சபையில் தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கும்போது... அது தொந்தரவு செய்யக் கூடாது. பாருங்கள்? அது கூட்டத்தை ஒருக்காலும் தடங்கல் செய்யக் கூடாது. இப்பொழுது, பாருங்கள், “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள்”. நமக்கு இப்பொழுது வேறொரு கேள்வி உண்டு, ஒரு நிமிடம் அதற்கு செல்வோம். பாருங்கள், இந்த வரங்கள் இயங்குவதற்கு... சரியான வழி என்னவெனில்.... இது அநேக வரங்களுக்கான பதில், பாருங்கள். நாம் அந்த கேள்விகளுக்கு வரும்போது, நாம் முதலாம் கேள்விக்கு அந்த பதில் உரைத்தோம், இந்த நபர் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் உரைத்தோம் எனலாம். பாருங்கள்? இது. ஐந்தாம் கேள்வி : . தேவனை மகிமைப்படுத்த ஆராதனைகளின் போது அந்நிய பாஷைகள் பேசுதலையும் தீர்க்கதரிசனம் உரைத்தலையும் உபயோகிக்கலாமா? பாருங்கள், இப்பொழுது, போதகர்... போதகர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, சபையானது ஒழுங்குக்குள் இருக்குமானால், சரியான முறை... நான், 'சபையை ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்' என்று உங்களிடம் கூறினது உங்களில் அநேகருக்கு தெரியும். இந்த வரங்கள் ... கர்த்தருக்கு சித்தமானால், இதை தான் நாம் இந்த கூடாரத்தில் செய்யவிருக்கிறோம். நான் கவனித்து வருகிறேன். சகோ. நெவிலையும் மற்ற சகோதரரையும்ஒழுங்குக்குள் கொண்டு வந்து விட்ட பிறகு, நான் ஏதோ ஒன்றைக் காண்கிறேன். இப்பொழுது நீங்கள்... சகோதரராகிய உங்களில் அநேகர் வாலிப சகோதரராயிருக்கிறீர்கள். 59நான் உங்கள் எல்லாரையும் விட இந்த விதத்தில், அனுபவத்தில் மூத்தவன். இந்த ஊழியத்தில் நான் முப்பத்தோரு ஆண்டுகளாக இருக்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லை இங்கு நான் நட்டேன். சந்திக்க வேண்டிய எல்லாவற்றையும் நான் சந்திக்க வேண்டியதாயிற்று. நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் அதை அறிந்திருப்பது மாத்திரமல்ல, அதை நீங்கள் எடுத்துக் கூறும்போது, தேவன் அதை ஆதரிக்க வேண்டும். இதை நீங்கள் மிகவும் வெற்றிகரமாக செய்யக்கூடிய வழி என்னவெனில், நீங்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யலாம். அதை தான் அவர்கள் அங்கு 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் செய்தார்கள் என்று நினைக்கிறேன்: “அங்கே உட்கார்ந்திருக்க ஒருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், மற்றவன் பேசாமலிருக்கக்கடவன்”. (1 கொரி. 14:30). அது “வரங்களுக்கான சிறப்புக் கூட்டம்” என்று எண்ணுகிறேன். அவர்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை வைப்பார்களானால், அது சரியாயிருக்கும். வரங்களைப் பெற்றுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி, அதன் பிறகு சபைக்கு ஆராதனைக்காக வருவார்களானால் அது அருமையாயிருக்கும். அந்த கூட்டத்தை அவர்கள் வைக்கட்டும். அங்கு பிரசங்கம் எதுவும் இருக்காது. அது ஆவியின் வரங்களுக்காக மட்டுமே. 60அது வெளியாட்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் அல்ல. அவர்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து கொண்டு, சொல்லுவார்கள். ஒருவர் எழுந்து நின்று, “ஹா ஹா” என்று அந்நிய பாஷை பேசி, வேறொருவர் “ஹா - ஹா” என்பாரானால், உள்ளே வந்த இவர்கள், “என்ன நடந்து கொண்டிருக்கிறது? பாடல்கள் எங்கே? மற்றவை எங்கே?” என்று கேட்கக் கூடும். பாருங்கள்? இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்களில் அநேகர் (அதற்கு அர்த்தம் உரைப்பவர்கள் போன்றவர்) சுவிசேஷத்தில் குழந்தைகளாயுள்ளனர். பாருங்கள்? அவர்களை மனம் நோக வைக்க வேண்டாம், அவர்கள் வளரட்டும்... அந்த வரத்தில் சிலவற்றில், சாத்தான் உள்ளே பின்னிக் கொள்வதை நீங்கள்காணலாம். அனுபவம் பெற்றுள்ள நாம் அதை கண்டு கொள்ளலாம். பாருங்கள், அதை நாம் புரிந்து கொள்ளலாம், நீங்கள் அதை கவனிக்க வேண்டும். அண்மையில் ஒரு குறிப்பிட்ட போதகர், இங்கு தற்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவர், என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று, என்னிடம் இதைக் கூறினார், அவர் மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சகோதரர். 61அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், உங்களிடம் நேரடியாக, “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை நேராக்கிக் கொள்வோம்” என்று கூறியிருப்பேன். பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் இதை, வேதத்தின்பால் உங்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மையுடன் கேட்டு, உதவி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாருங்கள்? இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ... அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் தவறாயிருந்தாள், இந்த... அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன் - அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதும், ஏதோ ஒன்றைக் கூறுவதும். அதை கேட்கும்போது. அது என்னவென்று நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம். 62அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், உங்களிடம் நேரடியாக, “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை நேராக்கிக் கொள்வோம்” என்று கூறியிருப்பேன். பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் இதை, வேதத்தின்பால் உங்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மையுடன் கேட்டு, உதவி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாருங்கள்? இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ... அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் தவறாயிருந்தாள், இந்த... அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன் - அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதும், ஏதோ ஒன்றைக் கூறுவதும். அதை கேட்கும்போது. அது என்னவென்று நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம். 63வேதம் கூறாத ஒன்றையும் நான் போதிக்கவோ அல்லது கூறவோ மாட்டேன். ஏதாவது ஒரு சகோதரன், ஒரு கிறிஸ்தவ சகோதரன், தவறான ஒன்றை நான் போதிப்பதைக் காண்பாரானால், ஆராதனை முடிந்த பின்பு அவர் என்னை ஒரு புறம் அழைத்துச் சென்று. “சகோதரனே, உமது அறைக்கு வந்து உம்மிடம் பேச விரும்புகிறேன், நீங்கள் ஒரு விஷயத்தில் தவறாயிருக்கிறீர்கள் என்று கூறுவாரானால், அதை நான் மெச்சுவேன். பாருங்கள், நான் நிச்சயம் அந்த சகோதரனின் செயலை பாராட்டுவேன். ஏனெனில் நான் சரியாயிருக்க விரும்புகிறேன். அது எனக்குத் தேவை. இப்பொழுது, நாம் எல்லோருமே சரியாயிருக்க விரும்புகிறோம், ஆகையால் தான் இந்த காரியங்களை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை வேதத்திலிருந்து வரவேண்டும். பாருங்கள், வேதவசனங்களை ஒன்றாக இணைக்க. 64இப்பொழுது, அந்நிய பாஷை பேசுதல் எவ்விதம் இருக்க வேண்டுமென்றால்... சிறிது காலம் கழிந்து... இப்பொழுது சிறிது காலத்துக்கு அது அவ்விதமே சென்று கொண்டிருப்பதற்கு விட்டு விடுங்கள். பாருங்கள், அது அவ்விதமே சென்று கொண்டிருக்க, அவ்விதமே இருக்க விட்டு விடும்படி ' உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஊழியக்காரராகிய உங்களுக்கு, மேய்ப்பர்களாகிய உங்களுக்கு நான் கூறுவது என்னவெனில், இந்த குழந்தைகள் சற்று பெரியவர்களாக வளரும் வரைக்கும். அது அப்படியே சென்று கொண்டிருக்கும்படிக்கு விட்டு விடுங்கள். ஒருக்கால், விரைவிலோஅல்லது காலந்தாழ்ந்தோ , சத்துரு அந்த நபரை வஞ்சிக்க முயல்வான் என்றால், அது அம்பலமாகி விடும். அதைக் குறித்து நமக்கு நிச்சயமாகத் தெரியாது. இப்பொழுது. இதற்குப் பிறகு, இதைத் தொடங்குவதற்கு முன்பு, அது என்னவென்று கண்டுபிடிக்க, ஞானத்தின் ஆவியுள்ள சிலரை, ஆவிகளை பகுத்தறியும் ஆவியுள்ளவர்களை கொண்டு வாருங்கள். முதலாவதாக, ஒரு சிறு தவறு உள்ளதாக யாராகிலும் ஒருவர் கவனிக்கத் தொடங்கினால், அதுதான் பகுத்தறிதல். அதை சிறிது காலம் வளர்த்து வாருங்கள். பாருங்கள்? அந்த பகுத்தறிதல் தவறாகின்றது என்பதை நீங்கள் கண்டால், அதை திருத்துங்கள். அந்த காரியம். அது தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்குமானால், அது வார்த்தையின் அடிப்படையில் திருத்துதலை ஏற்றுக் கொள்ளும். பாருங்கள்? 65இதை உதாரணமாகக் கூறுகிறேன். நாம் அந்நிய பாஷையில் பேசினோம் என்று வைத்துக் கொள்வோம் - யாரோ ஒருவர். நாம். இங்குள்ளவர்கள் வரங்களைப் பெற்றுள்ள ஒரு கூட்டம் மனிதர் என்று வைத்துக் கொள்வோம். லியோ எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார்; அதற்கு இங்குள்ள வேறொரு சகோதரன் - வில்லர்ட் - அர்த்தம் உரைக்கிறார். நல்லது , சகோ. நெவில், சகோ. ஜூனி, சகோ. வில்லர்ட் காலின்ஸ் பகுத்தறிபவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, லியோ அந்நிய பாஷையில் பேசினதால்.... இங்கு நாம் பரிசுத்தவான்களின் ஒரு சிறு கூட்டத்தை - வரங்கள் கூட்டத்தை - ஒழுங்கு செய்திருக்கிறோம். லியோ அந்நிய பாஷையில் பேசினார். அதற்கு வில்லர்ட் அர்த்தம் உரைத்து, கர்த்தர் உரைக்கிறதாவது, புதன் இரவன்று இங்கு ஒரு ஸ்திரீ வருவாள், அவள் மிகவும் மூர்க்கத்தனமுள்ளவளாய் இருப்பாள். அவளைக் கடிந்து கொள்ள வேண்டாமென்று சகோ. பிரான்ஹாமிடம் சொல் ஏனெனில் அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அவளை அந்த மூலைக்கு அழைத்துச் செல்லும்படி சொல். ஏனெனில் அந்த மூலையில் தான் அவள் ஒரு பொல்லாத காரியத்தை செய்தாள். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்தது என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அது மிகவும் நன்றாகத்தான் ஒலிக்கிறது. இல்லையா? பாருங்கள்? சரி. 66இப்பொழுது முதலாவதாக, என்ன தெரியுமா, பழைய ஏற்பாட்டின் காலத்தில், தீர்க்கதரிசி அல்லது வேறு யாராகிலும்என்ன உரைத்தாலும், அது முதலில் ஊரீம் தும்மினால் பரிசோதிக்கப்பட்டது. பாருங்கள், அது வார்த்தைக்குச் சென்றது. ஊரிம் தும்மீமின் ஒளிகள் பிரகாசிக்கவில்லையென்றால், அதை அப்படியே விட்டு விடுவார்கள். பாருங்கள்? முதலாவதாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில், அதை வார்த்தைக்குக் கொண்டு செல்வதே. இப்பொழுது, இந்த மனிதன் அந்நிய பாஷையில் பேசினார், அது நன்றாக ஒலித்தது. இந்த மனிதன் அதற்கு அர்த்தம் உரைத்தார், அதுவும் நன்றாக ஒலித்தது. ஆனால் வார்த்தை கூறுவது என்னவெனில், “அது இரண்டு அல்லது மூன்று நியாயாதிபதிகளால் முதலில் தீர்ப்பு கூறப்படட்டும்” என்று. அதை ஊரிம் தும்மீமுக்கு கொண்டு செல்லுங்கள். இப்பொழுது, முதலாவதாக, வில்லர்ட் காலின்ஸ், “அது தேவனால் உண்டானது என்கிறார். ஜூனியும் ”அது தேவனால் உண்டானது என்கிறார் - மூன்றில் இரண்டு பேர். அது ஒரு தாளில் எழுதப்பட்டு, இந்த சபையில் அறிவிக்கப்படுகிறது. அது நடக்கும் முன்பு அதை படிக்கக் கேட்கும் மக்கள், அது நடப்பதைக் காணும்போது, “சகோதரனே, அது தேவன் ! பாருங்கள், அது தேவன்” என்பார்கள். ஆனால் அது நடக்காமல் போனால், என்ன நடக்கிறது? பாருங்கள்? (நாம் இப்பொழுது மற்ற கேள்விக்குச் செல்லப் போகிறோம், அதை நான் இங்கேயே கூறிவிடலாம். “தீர்க்கதரிசனம் அனைத்துமே ... அர்த்தம் உரைத்தல் அனைத்தும் செய்திகளும் தீர்க்கதரிசனமாகுமா?) இப்பொழுது, ஒரு நிமிடம். அது நடக்காமல் போனால் என்ன? அப்படியானால், லியோ தவறான ஆவியில் அந்நிய பாஷை பேசினார். மற்றவர் தவறாக அர்த்தம் உரைத்தார்; நீங்கள் தவறாக அது சரியென்று நியாயந்தீர்த்தீர்கள். அதை உங்களிடமிருந்து விலக்கி விடுங்கள். அது உங்களுக்குத் தேவையில்லை, அது தவறானது. அதை தனியே விட்டு விடுங்கள். அது பிசாசு, பாருங்கள்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). ”நான் ஒரு பிரசங்கியல்ல. நான் அர்த்தம் உரைக்கிறவன், கர்த்தாவே. நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ... சகோ. லியோ, “கர்த்தாவே, நான் ஓரு பிரசங்கியல்ல. எனக்கு அந்நிய பாஷை பேசும் வரமுள்ளது, பிசாசு அதில் என்னைக் கவிழ்த்து விட்டான். தேவனே, அதை என்னை விட்டு அகற்றி விடும்” என்பார். நீங்கள், “கர்த்தாவே, எனக்குபகுத்தறிதலின் ஆவியைக் கொடுத்திருக்கிறீர், அதை நீர் அநேக முறை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது ஏன் இவ்விதம் நேர்ந்தது? பிதாவே, என்னைச் சுத்திகரியும்! இது ஏன் நேர்ந்தது? என்பீர்கள். பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள் உண்மையானதைப் பெற்றுக் கொள்கிறீர்கள். பாருங்கள், அது வழக்கமான பரிசுத்தாவன்களின் கூட்டம். அதுதான் வேதத்தில் உள்ளதென்று நினைக்கிறேன். ஏனெனில் பவுல், “ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்து, ஏதாவதொன்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டால்... அங்கு உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசுகிறவன் முடிக்கும் வரைக்கும் இவன் பேசாமலிருக்கக்டவன். அவன் முடித்த பிறகு இவன் பேசலாம். நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்” என்கிறான். அது வழக்கமாக நடைபெறும் ஆராதனையாக இருக்க முடியாது, அது உங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவராக ஆராதனையின் போது தங்கள் வரங்களை உபயோகிக்க முடியாது. 67இப்பொழுது. அது தேவனால் உண்டானது என்று நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டுமானால், பாருங்கள், அது மதியீனமாக இருக்குமானால், அது தேவனால் உண்டானதல்ல. அது நிறைவேறுமானால், அது தேவனால் உண்டானது. பாருங்கள்? அது நிறைவேறுமானால். எனவே நமது சபைகளில் பாருங்கள் , சகோதரனே, அப்படியானால் நமக்கு திடமான சபை உள்ளது, எவருமே நமது பேச்சிலும் செயலிலும் தவறு கண்டு பிடிக்க முடியாது. நான் பொது ஜனங்களுக்கு முன்பாக நிற்கையில், அது எவ்விதமான சூழ்நிலையில் என்னை நிறுத்துகிறது என்பதைப் பாருங்கள். அதைப் பாருங்கள். ஒரு தவறு நேர்ந்தால் என்னவாகும்? பாருங்கள்? நான் அவரை நம்பியிருப்பதால் தவறு ஏதும் ஏற்படுவதில்லை. பாருங்கள்? அவரை நான் நம்பியிருக்கிறேன். யாராகிலும் ஒருவர், “நீங்கள் தவறு செய்து விடுவோமா? என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரான்ஹாமே” எனலாம். இல்லை, இல்லை, ஊ - ஊ, நான் தவறு செய்து விடுவேன் என்று பயப்படுவதில்லை. அவரை நான் நம்பியிருக்கிறேன். அவரே என் பாதுகாப்பு. இதை நான் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அதில் நான் நிலைத்திருப்பேன் 68நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தேவன் உங்களைத் தெரிந்து கொண்டிருப்பாரானால், அவரே உங்கள் பாதுகாப்பாயிருப்பார். பாருங்கள், அவர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்புவாரானால், நீங்கள் கூறும் வார்த்தைகளை அவர் ஆமோதிப்பார். அப்பொழுது நீங்கள் அவருடைய ராஜதூதராகி விடுகிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷைகள் பேசும் வரமுள்ள ராஜதூதர்; நீங்கள் பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரம் கொண்ட ராஜதூதர்; நீங்கள் பகுத்தறிதலின் வரத்தைப் பெற்ற ராஜதூதர், நீங்கள் மூவரும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்படியானால் உங்களுக்கு என்ன உள்ளது? உங்களுக்கு ஒரு திடமான சபை உள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் நிற்க பயப்படமாட்டீர்கள். இங்கு நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பையன் ஒருவன் அங்கு வந்திருந்தான், அவன் தற்கொலை செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தான். சகோ. பாங்க்ஸ் என்னிடம் வந்து, “அந்தப் பையன் நான்கைந்து நாட்களாக இங்கிருக்கிறான்' என்றார். எனக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டாயிருந்தன. அவரோ, ”அந்தப் பையன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்“ என்றார். அங்குள்ள வாட்டர் வயூ ஓட்டல் நிர்வாகிகள் அந்தப் பையனுடைய நிலைமையைக் குறித்து என்னிடம் அறிவித்துக் கொண்டேயிருந்தனர். 69நான் அவனுக்காக ஜெபிக்க அறைக்குள் சென்றேள். நான் அங்கு செல்வதற்கு முன்பு, “சகோ. பாங்க்ஸ், அந்தப் பையனை நான் கண்டதில்லை, அவனைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு அவனுக்குள்ள கோளாறு என்னவென்று உங்களிடம் சொல்லப் போகிறேன்” என்றேன். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? அங்கு நாங்கள் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அங்கு வந்து, அதைச் செய்தது எதுவென்றும், அவன் எங்கு சென்றிருந்தான் என்றும், அவனுடைய வாழ்க்கையைக் குறித்தும் எல்லாமே அவனிடம் கூறினார். அவன் ஏறக்குறைய மயக்கமுற்று விழுந்தான். “ஒரு மனிதனிடம் அவ்விதம் கூறும்போது தவறு நேர்ந்து விடும் என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரான்ஹாமே?” மேடையின் மேல் நின்று கொண்டு ஒரு மனிதனிடம் அவன் தன் மனைவிக்கு உண்மையில்லாதவனாக நடந்து கொள்கிறான் என்றும், வேறொருஸ்திரீயின் மூலம் அவனுக்குக் குழந்தை உள்ளது என்றும், சொல்லி அது தவறாயிருக்குமானால், அவன் உங்களை சிறையில் போட்டு விடுவான். ஆகவே நீங்கள் சரியாக கூறவேண்டும். பாருங்கள்? பாருங்கள்? அது தேவனால் உண்டாயிருக்குமானால், நீங்கள் பயப்படாதீர்கள்! ஆனால் நீங்கள் பயப்படுவீர்களானால்... அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திராமல் போனால், அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திருக்கும் வரைக்கும் அமைதியாய் இருங்கள். அது சரியா? நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாய் இருந்து, அதன் பிறகு அதைக் கூறுங்கள். 70சகோதரனே, இது கடினமான போதகம், ஆனால் நீங்கள் என் சகோதரர். நீங்கள் முன்னேறிவரும் இளம் ஊழியக்காரர்கள், நானோ வயது சென்றவன், இந்நாட்களில் ஒன்றில் இவ்வுலகை விட்டுப் போக வேண்டியவன். பாருங்கள்? எனவே அது சரியென்று நிச்சயமுடையவர்களாய் இருங்கள். அறையை விட்டு வெளியே வருகையில் ... சிறிது நேரம் கழித்து இதை கூறுகிறேன். ஒரு பையன் .... நல்லது, அதன் ஒரு பாகத்தை இப்பொழுது கூறிவிடுகிறேன். நேற்று எனக்கும் சகோ. பாங்க்ஸுக்கும் அதிக வேலை உண்டாயிருந்தது . (ஓ, என்னே), நாங்கள் அதிக கடினமாக உழைத்தோம். நான் என்ன செய்ய வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன் என்பதை இந்த கூட்டத்தில் உங்களிடம் கூறுகிறேன். லியோவும், ஜீனும், சகோதரராகிய சிலரும் பன்றி வேட்டைக்காகப் போக உத்தேசித்திருக்கிறோம். நம்முடைய கூட்டம் முடிந்தவுடனே, அரிசோனாவில் ஜாவலினா பன்றி வேட்டைக்கென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஒதுக்கியுள்ளனர். நாங்கள் பீனிக்ஸுக்கு ஒரு நாள் கூட்டத்துக்கு செல்லப் போகிறோம். அடுத்த கூட்டம் தொடங்குவதற்கு இடையில் நான்கு நாட்கள் உள்ளன. நாங்கள் அரிசோனாவில் இருக்க வேண்டும். அப்பொழுது ஜாவலினா பன்றி வேட்டை காலம் துவங்குகிறது. 71எனவே என் துப்பாக்கி சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க அதை சுட்டுப் பார்க்க விரும்பினேன்; பாங்க்ஸ் என்னுடன் வந்திருந்தார். நாங்கள் வாசலுக்கு வெளியே வரும்போது, ஒரு மனிதன் உள்ளே வந்தார் (“தயவு செய்து 'சகோ. பிரான்ஹாம் இருக்கிறாரா? என்று கேட்காதீர்கள்” என்று எழுதி வைக்கப் பட்டிருந்த போதிலும்). பாருங்கள், அவர்கள் அதைச் செய்யக் காரணம்.... அது வியாதியஸ்தருக்கு அல்ல. என் வீடு, வேண்டுமானால் பாங்க்ஸை கேட்டுப் பாருங்கள், அவர் அடுத்த வீட்டில் வசிக்கிறார். ஜனங்கள் இரவும் பகலும் வந்த வண்ணம் இருக்கின்றனர், வியாதிப்பட்ட பிள்ளைகளையும் கொண்டு வருகின்றனர். நாங்கள் யாரையும் காணாமல் அனுப்பி விடுவதில்லை. ஆனால். லியோவும் ஜிம்மும் மற்றவர்களும் ட்ரெய்லர் வண்டியிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “இங்கு வியாதிப்பட்ட பிள்ளையுடன் ஒருவர் வந்திருக்கிறார். இங்குள்ள ஒரு மனிதனுக்கு புற்றுநேய் உள்ளது' என்றார்கள். நாங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு அவரைக் காணச் சென்றோம். 72நேற்றிரவு மருத்துவமனை அறைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தேன். யாரோ ஒருவர் அங்கிருந்து தொலைபேசியில் என்னை வரும்படி அழைத்தார். அங்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் நான் அறைக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டார். பாருங்கள், வேறு யாரோ ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை கூப்பிட்டு விட்டார். அதனால் பரவாயில்லை, என்னவாயினும் நான் செல்கிறேன். பாருங்கள்? அப்படிச் செல்ல வேண்டியது என் கடமை , பாருங்கள், யாருக்காகிலும் உதவி செய்வதற்காக அப்படிப்பட்டவர்களுக்காக அங்கு அவ்விதம் எழுதி வைக்கப்படவில்லை. நாங்கள் காரில் ஏறப்போகும் தருணத்தில் இந்த மனிதன் வந்தார். சகோ. பாங்க்ஸுக்குத் தெரியும் நான்... நான் வீட்டில் காத்துக் கொண்டிருந்தேன். சகோ. பாங்க்ஸின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து அவரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரைக் காண நான் அங்கு சென்றிருந்த போது, நானும் பிடித்து வைக்கப்பட்டேன். நாங்கள் எங்கள் துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு காரில் ஏறுவதற்காக புறப்பட்ட தருணத்தில், இந்த மனிதன் உள்ளே நடந்து வந்தார். 73நான் அவரிடம், அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தொலைபேசியில் அந்த எண்ணைக் கூப்பிடச் சொல்ல (பட்லர் 2-1519 என்ற எண்) ஆயத்தமானேன். “நாங்கள் அவசரமாய்ப் போக வேண்டும்” என்றேன். அவர், “ஐயா, நீங்கள் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். நான், “என் பெயர்...” என்றேன். முதலாவதாக நான் அவரிடம் நடந்து சென்றேன். அவர், “எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் யாரென்று தெரியாது என்பதை அறிந்து கொண்டேன். “என் பெயர் பிரான்ஹாம்” என்றேன். “நீங்கள் தான் சகோ. பிரான்ஹாமோ?” என்று கேட்டார். “நான்தான்” என்றேன் .. அவர், “சகோ. பிரான்ஹாமே, உங்களைச் சந்தித்து பேச வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் வெளியே செல்ல ஆயத்தமாயிருப்பதைக் காண்கிறேன்” என்றார். நான், “ஆம், ஐயா, அப்படித்தான்” என்றேன். அவர், “நீங்கள் அவசரமாக போக வேண்டும் என்பதை, அறிகிறேன்” என்றார். நான், “ஐயா, நான் உடனே போக வேண்டும்” என்றேன். அவர், “எனக்கு சில நிமிடங்கள் உங்களிடம் பேச வேண்டும்” என்றார். நான், இப்பொழுது முடியாது என்று சொல்ல வாயெடுத்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் , “அவனை அறைக்குள் கொண்டு செல், அவனுக்கு நீ உதவி செய்ய முடியும்” என்றார். அது எங்கள் திட்டம் அனைத்தையும் மாற்றிவிட்டது. துப்பாக்கி ஒருபுறம் வைக்கப்பட்டு விட்டது. தேவனுடைய வேலை முதலில் பாருங்கள்? அவர் சொன்னார் .... “என்னுடன் வாருங்கள்” என்று அவரை அழைத்துச் செல்கையில் சகோ. பாங்க்ஸிடம், “சற்று கழிந்து வருகிறேன்” என்றேன். அந்த மனிதன், “இது என் ஆத்துமாவைக் குறித்த விஷயம், சகோ. பிரான்ஹாமே” என்றார். நான், “சரி, உள்ளே வாருங்கள்” என்றேன். நான் உள்ளே நுழைந்த போது, மேடா, “நீங்கள் இன்னும் புறப்படவில்லையா?” என்று கேட்டாள். நான், “இல்லை, இல்லை, இல்லை, யாரோ ஒருவர் என்னைக் காண வந்திருக்கிறார்' என்று கூறிவிட்டு, ”பிள்ளைகளைமற்ற அறையில் வைத்துக் கொள்“ என்றேன். அவரை நான் அந்த சிறு குகை அறைக்குள் கூட்டிச் சென்று, நாங்கள் உட்கார்ந்தோம். நாங்கள் உட்கார்ந்த மாத்திரத்திலே...” அந்த மனிதன் நேற்றிரவு சபைக்கு வந்திருந்தார். அவர் வந்திருந்தாரா பாங்க்ஸ்? நீங்கள், ஆம், நல்லது. நேற்றிரவு வருவதாக கூறியிருந்தார். அவர் .... 74முதலாவதாக பரிசுத்த ஆவியானவர் அவர் யாரென்றும், அவர் என்ன செய்தாரென்றும், அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்றும், அவரைக் குறித்து எல்லாமே, அவரிடம் கூறத் தொடங்கினார். அதற்கு பாங்க்ஸ் சாட்சி. அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தை கூட பேசவில்லை. அந்த மனிதரிடம், “நீ அலைந்து திரிகிறவன். நீ மாடிஸனில் வசிக்கிறாய், ஆனால் இப்பொழுது நீ இந்தியானாவிலுள்ள ஈவான்ஸ்வில் என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறாய். அங்கு நீ ஒரு பிரத்தியேக கொள்கையை (cult) கடைபிடிக்கும் வேதப் பள்ளியில் சேர்ந்து, மிகவும் குழப்பமடைந்திருக்கிறாய். சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீ லூயிவில்லுக்கு வந்தாய். அங்கு ஒரு மனிதன் இருந்தார், அவருடன் நீ உட்கார்ந்து உணவு உண்டாய். அவர்தான் நீ இங்கு வந்து என்னைக் காணும்படியாகவும் 'அவர் உன் தொல்லை அனைத்தும் நேராக்கி லிடுகிறார்' என்று உன்னிடம் கூறினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது ” என்றேன். உட்கார்ந்து கொண்டிருந்த மனிதன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு என்னைப் பார்த்து, “ஆம், ஐயா” என்றார். “அது உங்களை பிரமிக்க வைத்தது. இல்லையா? என்றேன். ”ஆம், அது அப்படித்தான் செய்தது“ என்றார். “நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஐயா, நான் விசுவாசிக்க விரும்புகிறேன்” என்றார். “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறட்டுமா?” என்றேன். அவர், “சரி, ஐயா' என்றார். நான் அவரிடம் அதைக் கூறினேன். அவர், ”சகோதரனே, அது உண்மை “ என்றார். “உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றேன். அவர், “சரி, நான் மாற்றிக் கொண்டு விட்டேன்” என்றார். “இதுதான் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது” என்றேன். “அது உண்மை ! அது உண்மை !” என்றார். 75“உங்களுக்கு ஒருதரிசனம் தேவையில்லை, நீங்கள் நேராக்கப்பட வேண்டியது மட்டுமே” என்று சொல்லிவிட்டு, அவர் செய்த ஒரு காரியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது மிகவும் மோசமான, பயங்கரமான காரியம், அதைச் செய்தது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். கர்த்தர் எனக்கு ஜனங்களைக் குறித்து கூறுவதை நான் வெளியே சொல்வதில்லை. நான் அவரிடம், “சரி, அதைச் செய்வீர்களா?” என்று கேட்டேன். அவர், “நான் செய்வேன்” என்றார். நான், “நீங்கள் போகலாம்” என்றேன். நாங்கள் அந்த அறையில் பத்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை, இல்லையா சகோ. பாங்க்ஸ்? ஏழு நிமிடங்களுக்கும் பத்து நிமிடங்களுக்கும் இடையே. நாங்கள் வெளியே வந்து, சாலையில் ஒன்றாக காரில் பயணம் செய்த போது - அவரும் நானும், சகோ. பாங்க்ஸும், என் சிறிய மகன் ஜோவும் என்று நினைக்கிறேன் - அவர் என்னிடம் திரும்பி, “மிஸ்டர், உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார். நான், “சரி, கேளுங்கள்” என்றேன். அவர், “எனக்கு சிறிது குழப்பமாயுள்ளது. என்னைப் பொறுத்த எல்லா விஷயங்களையும் நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார். பாருங்கள்? பாங்க்ஸ் கூட இருந்தார். நான், “மிஸ்டர். நீங்கள் எப்பொழுதாகிலும் என் தரிசனங்களைக் குறித்தும் என் ஊழியத்தையும் கேள்விப்பட்ட துண்டா?” என்று கேட்டேன். அவர், “ஒரு மணி நேரம் முன்பு வரைக்கும் உம்முடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. லூயிவில்லில் யாரோ ஒருவர் இங்கு போகும்படி கூறினார். நான் நடந்து பாலத்தைக்கடந்து வந்தேன்” என்றார். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? “உம்முடைய பெயரையும் நீங்கள் யாரென்றும் நான் அறிந்திருக்கவேயில்லை” என்றார். நான், “என் ஊழியத்தில் அது தேவன் அனுப்பின்வரம்” என்றேன். அவர், “அது அவ்விதம் இருக்குமானால் நான் .... என் குழப்பம் எல்லாம் போய் நான் சரியாயிருக்கிறேன். அது என்னவென்றால், தேவன் உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார். “அது மிகவும் சரி என்றேன். அவர், “நான் வேதத்தில் படித்திருக்கிறேன். ஒரு முறை இயேசு சீஷர்களிடம் பேசி” அவர் “ஜனங்கள்” என்று சொல்வதற்கு பதிலாக “சீஷர்கள்” என்று சொல்லிவிட்டார் - “அவர் சீஷர்களிடம் பேசி அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த காரியங்களைக் கூறினார்” என்றார். பாருங்கள்? “அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார்” என்று வேதத்தில் கூறியுள்ளதை தான் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து, “அது அவருடைய பிதா அவர் மூலம் பேசுதல் என்பதாக அவர் கூறினார்” என்றார். “அது உண்மை ” என்றேன். 76அவர், “அப்படியானால், இப்பொழுது, இப்பொழுது, என்னிடம் இந்தக் காரியங்களை அறிவித்து, நீர் கூறினது உண்மை என்பதை நான் விசுவாசிக்கும்படி செய்வதற்காக தேவன் உம்மை ஒரு கருவியாக உபயோகித்து உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார். “அது உண்மை தானா?” என்று கேட்டேன். அவர், 'ஆம், அது தேவனாயிருக்க வேண்டும்“ என்றார். நான், “சகோதரனே (நானும் பாங்க்ஸும் இவ்வாறு கூறினோம்), கூட்டங்களுக்கு பத்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் சிலரை விட இப்பொழுது உமக்கு அதிகம் தெரிகிறது. அவர்கள் இதைக் குறித்து இன்னும் அறியாமலிருக்கிறார்கள்” என்றேன். அந்த மனிதன்! அதுதான் அது. பாருங்கள்? ஆவியின் மூலம் அந்நிய பாஷை பேசுதலும் (கிரமமாக) தீர்க்கதரிசனம் உரைத்தலும் ஆராதனையின் போது உபயோகிக்கப்படலாமா? இல்லை. அது இந்த விதமாக உபயோகிக்கப்பட்டு, ஆராதனையின் போது அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது, தற்பொழுது, அவர்கள் ஆராதனையில் பேசட்டும். ஆனால் அது கட்டுக்கு மீறும் நிலை ஏற்பட்டால், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது தேவனாயிருக்கலாம். சிறு குழந்தை நடக்க முயற்சி செய்யும்போது, நான்கைந்து முறை கீழே விழுந்தால்.... இந்த சபைக்கு இப்பொழுது வந்த முதற் கொண்டு இதை காண்கிறேன். நல்லது. அதை அப்படியே விட்டு விடுகிறேன். ஆனால், பாருங்கள், சகோ. பிரான்ஹாமே, அதை ஏன் நீங்கள் திருத்தக் கூடாது?“ என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, இல்லை . 77பில்லி பால் முதலில் நடக்கத் தொடங்கின் போது, அவன் விழுந்து எழுந்திருப்பான். அவன் நடப்பதைக் காட்டிலும் விழுவது தான் அதிகமாக இருந்தது. அவனுக்கு நடக்கத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடக்கும் வரம் இருந்தது என்று நான் எண்ணுகிறேன். அவனை சிறிது காலம் நடக்கவிடுகிறேன் . அவனுடைய கால்கள் தடுக்கி விழும்போது, அவனிடம் கூறுகிறேன். நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள்? அவன் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டு தடுக்கி விழுந்தால், அவனிடம், “எழுந்து நட, நீ எங்கே இருக்கிறாய் பார்?” என்பேன். பாருங்கள்? அது தான் வித்தியாசம், பாருங்கள். இப்பொழுது அவர்கள் சிறிது காலம் தடுக்கி விழுந்து தடை செய்யட்டும். அவர்களை நீங்கள் திருத்தும் நேரம் வரும் போது. அவர்கள் அதை ஆட்சேபித்தால், அது தேவன் அல்ல என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் தேவனுடைய ஆவி அடங்கியிருக்கிறது. இங்கு நீங்கள் சிறிது குறிப்பிட்டுள்ள வண்ணமாக, “தீர்க்கதரிசனத்தின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது”. பாருங்கள்? அது உண்மை . (சகோ. ஸ்ட்ரிக்கர், “சகோ. பிரான்ஹாமே, இதை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் - ஆசி). சரி. சகோதரனே. (“அநேக சமயங்களில், நான் ஆராதனைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, அந்நிய பாஷைகள் பேசப்படுவதையும் அதற்கு அர்த்தம் உரைத்தலையும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், அதைக் குறித்து எனக்கு மோசமான உணர்வு இருந்து வந்திருக்கிறது. நான் வீடுதிரும்பும்போது, வழி நெடுக நான் மனஸ்தாபப்பட்டது போல் தோன்றினது. அது தேவனால் உண்டானதல்ல என்னும் காரணத்தினாலா, அல்லது அது ஒழுங்கின்படி இல்லை என்பதற்காகவா? 78இருக்கலாம், சகோதரனே, இவ்விரண்டில் ஏதாவதொரு காரணம் இருக்கலாம். பாருங்கள்? இதை நான் கூற முற்படுகிறேன். இப்பொழுது. இது வில்லியம் பிரான்ஹாம் கூறுவது, பாருங்கள். நான் வேதவசனங்களுக்கு செல்லும் வரைக்கும், அது வரைக்கும் நான் கூறுவது என் சொந்த அபிப்பிராயமே. சகோ. ஸ்ட்ரிக்கர், இதை கூற விரும்புகிறேன், இது இவ்விரண்டில் ஏதாவதொரு காரணமாயிருக்கலாம். அது ஒழுங்கின் படி இல்லத்தனால் இருந்திருக்கலாம், அல்லது உங்களில் ஏதாவது தவறு இருந்திருக்கலாம். அந்த நபரில் ஏதாவது தவறு இருக்கக் கூடும்; அல்லது செய்தியில் தவறு இருக்கக் கூடும்; ஏதாவதொன்று உங்களுக்கு மோசமான உணர்வு ஏற்பட காரணமாயிருந்திருக்கும். இப்பொழுது. இப்பொழுது, உங்களுக்கு இங்கு சிறிது உதவி செய்ய விரும்புகிறேன், சகோ. ஸ்ட்ரிக்கர். பாருங்கள்? எப்பொழுதுமே... உணர்வைக் கொண்டு எதையுமே தீர்ப்பு செய்யாதீர்கள், பாருங்கள். அதன் தன்மைகளைக் கொண்டு தீர்ப்பு செய்யுங்கள்; அது என்ன கனி கொடுக்கிறது என்பதன் அடிப்படை யில், பாருங்கள். ஏனெனில் சில நேரங்களில்.... சில சமயங்களில் நமக்கு உணர்ச்சி உண்டாகிறது என்பது உண்மைதான் - பிசாசின் உணர்ச்சியைப் போல. அது எனக்கும் கூட உண்டாகிறது, அப்பொழுது நான் அதை எளிதாக எடுத்துக் கொள்வேன், அதைக்குறித்து ஒன்றுமே சொல்லமாட்டேன், அதை தனியே விட்டு விடுவேன். ஏனெனில் அது என்னவென்று எனக்கு நிச்சயமாய் தெரியும் வரைக்கும், அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது, உதாரணமாக, அநேகர், “வயூ! சகோதரனே, எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று தெரியும். அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அந்நிய பாஷை பேசுகின்றனர். கூச்சலிடுகின்றனர். ஆவியில்நடனமாடுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகிறது. அது உணர்ச்சியினால் அல்ல, அவர்களுடைய கனிகளினாலே. 79அங்கு ஒரு ... அதைக் குறித்து நான் கண்ட தரிசனம் ஞாபகமுள்ளதா? எப்படி அந்த... எபிரேயர் 6ம் அதிகாரம், பாருங்கள், “தன் மேல் அடிக்கடி பெய்கின்ற மழையைக் குடித்து பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” (எபி. 6:7-8). என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சிறிது காற்றை நான் அறைக்குள் விடுகிறேன். நீங்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டும் களைப்பாயும் இருக்கிறீர்கள் என்று அறிவேன். எனவே இப்பொழுது, பொறுங்கள், இதை சிறிது வேகமாக முடிக்க வேண்டும், இல்லையென்றால் மற்ற கேள்விகளுக்கு நான் வரவே முடியாது. இந்த கேள்விக்கு நாம் இங்குள்ள கேள்விகள் அனைத்திலும் நாம் தொடக்கக் கேள்விகளிலேயே இருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகள்... பாருங்கள் ... 80இங்கு கோதுமை வயல் ஒன்றுள்ளது. அதில் ஜிம்ஸன் களை, காக்கில்பர் களை, இன்னும் மற்றகளைகளும் உள்ளன. நல்லது, இப்பொழுது வறட்சி ஏற்பட்டுள்ளது. கோதுமையைப் போலவே ஜிம்ஸன் களைக்கும் காக்கில்பர் களைக்கும் தாகம் உண்டாகிறதல்லவா? எந்தவிதமான மழை... கோதுமையின் மேல் ஒரு விசேஷித்த மழையும், காக்கில்பர் களையின் மேல் மற்றொரு விசேஷித்த மழையுமா பெய்கிறது? இல்லை, ஒரே மழை தான் இவ்விரண்டின் மேலும் பெய்கிறது. அது சரியா? அது போன்று ஒரே ஆவிதான் மாய்மாலக்காரன் மேலும் கிறிஸ்தவன் மேலும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய “கனிகளினாலே”. சகோதரனே, அது ஆழமாக பதிந்து விட்டதா? பரிசுத்த ஆவியின் அடையாளம் அதன் கனிகளே, ஆவியின் கனிகள். நல்லது, அது நல்லது. நீங்கள், “நான் ஒரு தண்டு, நான் ஒரு காக்கில்பர். கோதுமை தண்டைப்போலவே நானும் ஒரு தண்டு' எனலாம். ஆனால் எந்தவிதமான ஜீவன் உனக்குள் உள்ளது? அதற்குள் இருக்கும் ஜீவன் முட்களைப்பிறப்பித்து, எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டும், புண் படுத்திக் கொண்டும், நீச்சத்தனமாயும் மோசமாயும் உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? கர்வம், பாருங்கள், அது ஆவியின் கனியல்ல. ஆவியின் கனியோ சாந்தம், பொறுமை, தயவு, பாருங்கள். இவையெல்லாம். பாருங்கள்? அவர், ஒருவேளை, “நல்லது. உங்களைப் போலவே என்னால் உரத்த சத்தமாய் கூச்சலிட முடியும். தேவனுக்கு ஸ்தோத்திரம். பரிசுத்த ஆவி என் மேல் விழுகிறது எனலாம். அது முற்றிலும் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர் வாழ்கின்ற வாழ்க்கை அவர் கூறுவதை ஆதரிக்கவில்லை. பாருங்கள்? அவர் ஒரு களை, அவர் தொடக்கத்திலேயே களையாக இருந்தார். இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப்படுதல் என்னும் பெரிய கேள்வியை அடைகிறோம், பாருங்கள். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? 81அவர்கள் தொடக்கத்திலேயே களைகளாக இருந்தனர், இவரோ தொடக்கத்தில் கோதுமையாக இருந்தார். வறட்சி வந்தது; பிறகு மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிந்தது. சரி, புரிந்து கொண்டீர்களா? (ஒரு சகோதரன், “ஒரு பிரசங்கியின் கனிகளைக் குறித்தென்ன?... வார்த்தையைப் பிரசங்கிக்கும் ஒருவர்” என்று கேட்கிறார் - ஆசி). ஒரு பிரசங்கி அங்கு எழுந்து நின்று வார்த்தையை ஒரு பிரதான தூதனைப் போல் பிரசங்கித்து, பாருங்கள், வேதத்திலுள்ள இரகசியங்களை அறிந்து, ஒரு நல்ல மேய்ப்பனாக விளங்கி, ஜனங்களைச் சந்தித்து மற்ற காரியங்களைச் செய்திருந்தாலும், அவர் இழக்கப்பட்டவராயிருக்கக் கூடும். பாருங்கள்? அவருடைய கனி ஒவ்வொரு முறையும் அதைத் தெரியப்படுத்தும், சகோதரனே. பாருங்கள்? அவர் எவ்வளவு நல்லவராயிருந்தாலும், அவர் என்னவாயிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் அவர் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” என்று இயேசு கூறவில்லையா? (மத். 7: 22), அவர் அந்நிய பாஷை பேசினார், அற்புதங்களைச் செய்தார், பாஷைக்கு அர்த்தம் உரைத்தார், தேவனுடைய பரமரகசியங்களை அறிந்திருந்தார், இன்னும் மற்ற காரியங்கள் அனைத்தையும் செய்தார். இருப்பினும் இயேசு அவர்களை நோக்கி, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்” என்கிறார் (மத். 7:23). நான் கூறுவது விளங்குகிறதா? [சகோ. டெய்லர், “தவறான செய்தியைக் கொண்டு வரும் ஒரு மனிதனைக் குறித்தென்ன? அதாவது, அவர் சரியன்று நினைத்துக் கொண்டு, தவறானதைப் பிரசங்கிப்பவர் என்று கேட்கிறார் - ஆசி]. நல்லது, அந்த மனிதன் உத்தமமாயிருப்பாரானால் இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரன் திரும்பிச் சென்று இவைகளை மீண்டும் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறது போல. அந்த மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராயிருந்து, அவர் எப்பொழுதாகிலும் சத்தியத்தின் முன்னிலையில் கொண்டு வரப்படுவாரானால், அவர் அதை அடையாளம் கண்டு கொள்வார். பாருங்கள்? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது”. உங்களுக்கு புரிகி... நான் கூறுவது விளங்குகிறதா, சகோ. டெய்லர்? அதைக் குறித்து தானே நீங்கள் கேட்டீர்கள்? பாருங்கள்? 82இப்பொழுது, உதாரணமாக, சகோ. க்ரேஸ் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கி என்றும் அவருக்கு பரிசுத்த ஆவியைக் குறித்தும், இன்னும் மற்ற காரியங்களான ஆவியின் வரங்கள் போன்றவைகளைக் குறித்து ஒன்றும் தெரியாதென்றும் வைத்துக் கொள்வோம். அவர் நல்லவர், விசுவாசமுள்ள பாப்டிஸ்ட் பிரசங்கி. பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா, இவை அவருடைய முன்னிலையில் கொண்டு வரப்படுகிறது. நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பிள்ளை ஒவ்வொருவரும்... ஒவ்வொரு காலத்திலும், தேவன் அவரைப் பிடிக்கும் வரைக்கும் வலை போடப்படும். தேவனுடைய சித்தம் செய்து முடிக்கும் வரைக்கும், ராஜ்யம் வர முடியாது. அது உண்மை. அவர்களில் ஒருவரும் அழிந்து போக முடியாது, பாருங்கள், அது தான் வழி. பரலோக ராஜ்யம் கடலில் வலையைப் போடும் ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுக்கும்போது. அதில் எல்லாவிதமான கடல் ஜந்துக்களும் இருக்கின்றன. அவன்மீனை மட்டும் வைத்துக் கொள்கிறான். ஆமைகளும், மற்றவைகளும் தண்ணீரில் போடப்பட்டு அங்கு சென்று விடுகின்றன. அவன் மறுபடியும் வலையைக் கடலில் போடுகிறான். அவனுக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்கிறது. ஒருவேளை அவனுக்கு ஒரே மீன் மட்டும் கிடைத்திருக்கும். எல்லாம் பிடிக்கப்படும் வரைக்கும் அவன் வலையைப் போட்டுக் கொண்டேயிருந்தான். இப்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஆனால் அந்த மீன் தொடக்கத்திலேயே மீனாக இருந்தது. அது எஜமானின் உபயோகத்திற்காக போடப்பட்டது. அவ்வளவு தான், அவைகளை இன்னும் தெளிவான சுத்தமான குளத்தில், வேறொரு குளத்தில் போட்டார்கள். ஆனால் அவனோ எல்லா மீன்களையும் பிடித்து வெளியே கொண்டு வரும் வரைக்கும், இந்த தவளை குளத்தில் வலையை வீசிக் கொண்டேயிருக்கிறான். நான் கூறு வது விளங்குகிறதா . சகோ. டெய்லர்? அங்குள்ள உங்கள் குடும்பத்தினரின் மூலமாகவே இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சரி, இப்பொழுது. 83அவர் எப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு எல்லா நேரங்களிலும் ஆவியின் மீது கட்டுப்பாடு உள்ளதா? ஆம், ஐயா. ஆம், ஐயா. பரிசுத்த ஆவி கட்டுப்படுத்துகிறது. ஆம், ஐயா. அதற்கு உங்கள் மீது கட்டுப்பாடு உண்டு, உங்களுக்கும் அதன் மீது கட்டுப்பாடு உண்டு. நீங்கள் வேதத்திற்கு முரணாக நடந்து கொள்ளும்படி அது ஒருக்காலும் செய்யாது. அது... “ஆவி அயோக்கியமானதைச் செய்யாது. அது உண்மை . சரி. “உங்களை நேசிக்கும் ஒருவரிடமிருந்து.... ஆம், அது, அதை பார்ப்போம். சரி, நாம் வேறொரு கேள்விக்குச் சென்று நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காண்போம். இப்பொழுது, அதற்கு ஒரு அடிப்படை இருந்ததென்று நினைக்கிறேன். இந்த கேள்விகளை நான் இப்பொழுது படிக்கவிருக்கும் போது, வேறெதாகிலும் கேள்வி... இதன் பேரில் வேறெதாகிலும் கேள்வி உண்டா? நாம் எல்லோரும் புரிந்து கொண்டு விட்டோமா? இதை நாம் எவ்விதம் விசுவாசிக்கிறோம் என்று நம் எல்லோருக்கும் புரிந்து விட்டதா? 84ஒரு சகோதரன், “எனக்கு ஒரு கேள்வி உண்டு” என்கிறார் - ஆசி. சரி. கூறுங்கள். இதன் பேரிலா? சரி. ஆம், இதன் பேரில்தான். நான் சற்று தயங்கினேன். ஆனால்...“] தயக்கம் வேண்டாம், இது ஒரு... ”நீங்கள் பிரசங்கிக்கும் ஒரு மனிதனைக் குறிப்பிட்டீர்கள். அவருடைய ஊழியத்தில் என்ன நடந்தாலும், அவர் கிறிஸ்து கொண்டு வந்த செய்தியைப் பிரசங்கிக்காமல் இருந்து, அவர் சத்தியத்துடன் தொடர்பு கொள்ளும் தருணம் உண்டாகி, அவர் அதை புறக்கணிப்பாரானால், அப்பொழுது என்ன நடக்கும்?) அவர் இழக்கப்படுகிறார். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .... (“முன் குறித்தலின் சம்பந்தமாக, இவ்வுலகில் அவர் வருவதற்கு அவர் முன் குறிக்கப்பட்டதன் சம்பந்தமாக) அது தான், அதுதான். பாருங்கள்? அப்படியானால் அவர் அவ்விதமாக இருக்கமுன் குறிக்கப்படவில்லை”). அவ்விதமாக இருக்க தொடக்கத்திலேயே அவர் முன் குறிக்கப்படவில்லை. “அவர்கள் நம்முடைய வர்களாயிருக்கவில்லை, அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். (1 யோவான் 2: 19). 85உதாரணமாக, இது இப்படி உள்ளது, எபிரேயர் 6ம் அதிகாரத்திலும் அதே காரியம் தான். பாருங்கள்? ஜனங்கள் அந்த வேதவசனத்துக்கு தவறாக அர்த்தம் உரைத்து, அது “கூடாத காரியம்” என்று நினைக்கின்றனர். அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள், அவர்கள் முதலாவதாக அது என்னவென்று விளங்கிக் கொள்ளவேயில்லை. அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்; அவர்கள் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர்” என்று கூறியுள்ளார் (எபி. 6:4-6; 10:29). நல்லது, என்னைப் பொறுத்தவரையில், அது ஒரு வெளிப்பாடு. அது அப். 2: 38ம் மத் 28:19ம் போன்றது. அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும், பாருங்கள். இப்பொழுது பாருங்கள், அது இங்குள்ளது, அதே காரியம்தான். நல்லது, இப்பொழுது அவன். எபிரேயரிடம் பேசுகிறான், பாருங்கள்? அந்த அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என்று உரைக்கப்பட்டுள்ளது (எபி. 10:31). இங்கு ஒரு மனிதன் இருக்கிறான், அவன் அந்த எல்லைக்கோடு விசுவாசியைப் போன்றவன். இங்கு... இங்கு அதே காரியம்தான், அதுவே பிழையற்ற உதாரணமாக என் மனதில் தோன்றுவதை நான் காண்கிறேன். 86தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார். அந்த ஜனங்கள் அனைவரும் வெளியே வந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அது சரியா? சிவந்த சமுத்திரம்... அவர்கள் மோசேயின் செய்திக்கு செவிகொடுத்து, ஆயத்தமாகி அணிவகுத்து நடக்கத் தொடங்கினர் (நீதிமானாக்கப்படுதல்), அவர்கள் திசைத் திரும்பி, இங்கிருந்து தொடங்கினர். அவர்கள் சிவந்த சமுத்திரத்தை அடைகின்றனர் (இரத்தம்), அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து விடுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைக் கடினமாக வேலை வாங்கினவர் அனைவரும் மரித்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய மூன்று நாட்கள் பிரயாணம் மாத்திரமே இருந்தது. பாருங்கள்? அது நாற்பது மைல்கள் தூரம்தான். இருந்தது, அவ்வளவு தான் அவர்களுக்கு இருந்தது, பாருங்கள். அதோ அவர்கள் உள்ளனர், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அதை அடைந்திருப்பார்கள். இன்னும் சில நாட்களில் பீனிக்ஸில் நடைபெறவிருக்கும் வர்த்தகரின் கூட்டத்தில் அதைக் குறித்து தான் இந்த மலையின் மேல் தங்கியிருத்தல் என்னும் பொருளின் பேரில் பேசலாம் என்று எத்தனித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் இருக்கும்படி அவர் செய்துவிட்டார், ஏனெனில் அவர்கள்... உ - ஊ ! பாருங்கள்? 87அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்து திரும்பிப் பார்க்கின்றனர் (பரிசுத்தமாக்கப் பட்டவர்களாய்). “ஓ, அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுக்கு மகிமை! அல்லேலுயா! என்னை ஒரு காலத்தில் தொல்லைப்படுத்தின அந்த பழைய காரியங்களெல்லாம் மரித்துப் போய் அங்கு கிடக்கின்றன.நான் முன்பு புகைத்திருந்த சிகரெட்டுகள் போய்விட்டன. நான் முன்பு குடித்திருந்த அந்த மதுபானம் இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. ஓ, தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்கின்றனர். கானானைச் சுதந்தரிக்க அவர்கள் ஒவ்வொருவரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வருகின்றனர். நல்லது, மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தெரிந்து கொண்டான். அது சரியா? அவன் அவர்களை அங்கு அனுப்பினான். நல்லது, அவர்களில் சிலர், “ஆ, ஆ, ஆ, நம்மால் அதைச் செய்ய முடியாது. முடியாது. அது - அது. அவர்களுக்கு முன்னால் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோம்” என்றனர். பாருங்கள்? 88“இப்பொழுது, நான் பரிசுத்த ஆவியைக் குறித்தும் அந்த காரியங்கள் அனைத்தைக் குறித்தும் பிரசங்கித்தால், நான் எப்படிப்பட்ட சபைக்கு அதை பிரசங்கிப்பேன்? ஏன், எனக்கு காலி இருக்கைகள் மட்டுமே இருக்கும். என் மெதோடிஸ்டு ஜனங்கள் வெளியே நடந்து சென்று விடுவார்கள், என் பாப்டிஸ்டு ஜனங்களும், என் பிரஸ்பிடேரியன்களும் கூட எனலாம். அவர்கள் வெளியே நடந்து செல்லட்டும். அவர்கள் துவக்கத்திலேயே வெள்ளாடுகள்! உங்களுக்கு வேண்டியது செம்மறியாடுகளே, பாருங்கள், பாருங்கள்? நீங்கள் வெள்ளாடுகளுக்கு மேய்ப்பனாக, இல்லை, நீங்கள் செம்மறியாடுகளுக்கே மேய்ப்பனாயிருக்கிறீர்கள்! மேய்ப்பதற்கு செம்மறியாடுகள் இருக்கும்போது, வெள்ளாடுகளை மேய்ப்பதால் என்ன பயன்? பாருங்கள்? நான் சத்தியத்தை சபையில் நான்கு கம்பங்களுக்கு பிரசங்கித்தாலும் எனக்கு அக்கறையில்லை என்று நான் அடிக்கடி கூறியதுண்டு. ஆம், ஐயா. இப்பொழுது பாருங்கள். அவன் என்ன செய்தான்? அவர்கள் திரும்பி வருகின்றனர், யோசுவாவும் காலேபும், இரண்டு சதவிகிதம், அது சரியான சதவிகிதம் தானா... பன்னிரண்டில் இரண்டு பேர். நல்லது. அவர்கள் பன்னிரண்டு பேர் இருந்தனர், அந்த பன்னிரண்டு பேர்களில் இரண்டு பேர் விசுவாசித்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று, “இது தங்குவதற்கு மிகவும் நல்ல இடம்” என்றனர். யோசுவாவும் காலேபும் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவன் அதை அவர்களுக்கு கொடுத்து, “அது உங்களுடையது” என்றார். அவர்கள் அங்கு சென்று ஒரு பெரிய திராட்சைக் குலையை வெட்டி இப்படி அதை சுமந்து கொண்டு வந்து, “வாருங்கள், தோழரே! இது மிகவும் அருமையான இடம்! இதை குடித்துப் புசியுங்கள்” என்றனர். பாருங்கள், இவ்வளவு பெரிய திராட்சை பழங்கள். 89ஓ, அந்த திராட்சம் குலையைக் கண்ட மற்றவர்கள், “ஆ. நம்மால் செய்ய முடியாது என்றனர். அவர்கள் திரும்பிச் சென்றவுடன் மற்றவர்களிடம், ”இல்லை, சகோதரனே, இந்த மோசே நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்து விட்டான்“ - அவன் பிரதிநிதியாக இருந்த இந்த பரிசுத்த ஆவி - ”அவன் நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்துவிட்டான். இதோ நாம் இங்கிருக்கிறோம். நமது ஊழியம் பாழாகி விட்டது, அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாது' என்றனர். பாருங்கள், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் மறுதலிக்கின்றனர். பாருங்கள், அவர்கள் இந்த இரண்டாம் பலி பீடத்துக்கு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் காண்கின்றனர். ”ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு பரம ஈவை ருசி பார்த்தவர்கள். பாருங்கள், “ருசி பார்த்தவர்கள்”. அதை அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்தனர். அது சரியென்று நாம் காண் கிறோம், அதைக் கண்கூடாக காண்கிறோம். “பரம ஈவை ருசி பார்த்து, இந்த காரியத்தில் பங்கு கொண்டவர்கள். பாருங்கள், இந்த பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டவர்கள். “ அது நல்லது, அந்த மனிதனைப் பாருங்கள். அவன் குருடனாயிருந்தான் என்று எனக்குத் தெரியும், இப்பொழுது அவன் பார்வையடைந்திருக்கிறான். அந்த வயோதிபனைப் பாருங்கள். அந்த ஆசாமிக்கு என்ன நேரிட்டது? யார் நினைத்தது, படிப்பில்லாத இவர். ... அவர் அக்கினியைக் கொண்டவராய் உலகத்தில் நின்று கொண்டிருக்கிறார்”. பார்த்தீர்களா? பாருங்கள்? பாருங்கள்? 90அதன் பிறகு மறுதலிக்கிறவர்கள் (ஆங்கிலத்தில் “fall away” “விழுந்து போதல் - தமிழாக்கியோன்), பாருங்கள், அவர்களை ... மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது ... அவர்களுக்கு மீண்டும் மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர் ... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் போன்றவைகளுக்கு மறுபடியும் அஸ்திபாரம் போடுதல் என்பதைக் குறித்து உங்களுக்குத் தெரியும். தேவனுக்கு சித்தமானால், அதை நாம் செய்வோம். நாம் திரும்பிச்சென்று அந்த அஸ்திபாரத்தை மறுபடியும் போடுவோம். ஆனால் இவர்களோ அதில் பங்கு கொண்டதற்காக மனஸ்தாபப்படுகின்றனர். ”அங்கு நான் சென்றிருந்ததற்காக வருந்துகிறேன். இவர்கள் தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர். சகோதரனே, அவன் போய்விட்டான்! அவ்வளவுதான். அவன் முடிந்து விட்டான். பாருங்கள்? தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு பிள்ளை அவ்விதம் செய்வது கூடாதகாரியம். அவன் அதை செய்யவேமாட்டான். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அது கானானுக்குள் அல்லது வேறெங்காகிலும் செல்வதற்கு அழைக்கப்பட்டால், அவர்கள் போவார்கள். பாருங்கள்? ”என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது“. ஒரு சகோதரன், “அவர்கள் அப். 2: 38லும் விசுவாசம் கொண்டிருத்தல் அவசியம் இல்லையா?” என்று கேட்கிறார் - ஆசி) அவர்கள் ஒவ்வொரு வேதவாக்கியத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது முற்றிலும் சரி, சகோதரனே. 91இரண்டுவிதமான வேதாகம பாஷைகள் உண்டா? தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? பெந்தெகொஸ்தே நாளில் பேசப்பட்ட பாஷை வெவ்வேறு ஜாதியினரால் புரிந்து கொள்ளப்பட்டது; ஆனால்1 கொரிந்தியர் 14:2ல் அந்நிய பாஷை தேவனிடம் பேசப்படுகிறது, மனிதரிடம் அல்ல, 1 கொரிந்தியர் 13 :1... (அது கொரிந்தியர் 13 என்று. எழுதப்பட்டுள்ளது என்று தான் நினைக்கிறேன்)... மனுஷர் பாஷை என்றும் தூதர் பாஷை என்றும் குறிப்பிடுகிறதே. ஓ, ஆமாம். பாருங்கள்? நல்லது, அது... இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்களே உங்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லி விட்டீர்கள். பாருங்கள்? இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டா? (அநேக பாஷைகள் உண்டு பாருங்கள்?) வேதாகமத்தில் இரண்டு விதமான பாஷைகள் உண்டா? பெந்தெகொஸ்தே நாளில் வானத்தின் கீழிருந்த வெவ்வேறு பாஷைக்காரர் அங்கு குழுமியிருந்தனர். பாருங்கள்? சரி. தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம். 92பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் - அதைக் குறித்து உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் - “தூதர் பாஷை உண்டு, மனுஷர் பாஷை உண்டு' என்று கூறியிருக்கிறான். தூதர் பாஷை என்பது மனிதன் தனிமையில் தனக்கும் தேவனுக்கும் இடையே ஜெபத்தை ஏறெடுக்கும்போது. ஆனால் அவன் சபையில் ஒரு பாஷையைப் பேசும்போது, அது சபையின் பக்திவிருத்திக்காக அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். ”அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் போகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்“. (1 கொரி. 14 : 4). எனவே பவுல், ”நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்“ என்கிறான் (1 கொரி. 14:19). அப்பொழுது அது தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டு பக்திவிருத்தி உண்டாக்குகிறது. நான் கூறுவது விளங்குகிறதா? 93இப்பொழுது... இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டு. அது மனுஷர் பாஷை, தூதர் பாஷை. பாருங்கள்? பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் என்கிறான் (1 கொரி 13:1), பாருங்கள், மனுஷர் பாஷை, தூதர் பாஷை இவ்விரண்டுமே... இப்பொழுது அங்கு தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள். அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று கூறுகிறவர்கள்; அவர்கள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் குழப்பமடைந்திருக்கிறீர்கள்” என்றனர். நான் அவர்களிடம், “நீங்கள் அப். 2:4ன்படி அதை பெறுவீர்களானால், அப்பொழுது அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் நீங்கள் பேசுகிறதை அவர்கள் கேட்க வேண்டும்” என்றேன்.அவர், “ஓ, இல்லை! இல்லை!” என்றார். நான், “நிச்சயமாக அப்படித்தான் . ஆம், ஐயா” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் மிகவும் குழப்பமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்றால் ... தூதர் பாஷை என்று ஒன்றுண்டு. அது பரிசுத்த ஆவி தூதன் இறங்கி வந்து உங்களிடம் பேசுவது என்றார். அது நன்றாக ஒலிக்கிறது, பாருங்கள், அதில் நிறைய சத்தியம் உள்ளது போல் அது தொனிக்கிறது. ஆனால் அது முற்றிலும் சத்தியமல்ல. சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் நிச்சயம் சாவதில்லை” என்று கூறின போது, அது... அவன் அவளிடம் நிறைய சத்தியத்தை கூறினான், ஆனால் அது சத்தியமல்ல. பாருங்கள்? பவுல், “மனுஷர் பாஷை, தூதர் பாஷை என்கிறான். அவன் குறிப்பிடும் தூதன்.... 94அது எப்படி வேதவாக்கியங்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடுவதில்லை (jive) என்று நாம் பார்ப்போம். பாருங்கள்? அது “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் கூறுகிறேன். நான் “வேதவாக்கியங்களுடன் சேர்ந்து நடனமாடுவதில்லை” என்று கூறினதால் என்னை மன்னிக்கவும். நான் வேதவாக்கியங்களுடன் “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் இதை கூறுகிறேன். “வேதவாக்கியங்களுடன் இணைவதில்லை' என்பது மிகச் சிறந்த வார்த்தையாகும். அவர், “தூதர் பாஷைகளைப் பேசுகிற மனிதன், அதுதான் பரிசுத்த ஆவியின் பாஷை, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அதைப் பேசுகிறோம்” என்றார். நான், “அதை எப்பொழுது எங்கே பெற்றுக் கொண்டீர்?” என்று கேட்டேன். அவர் பெற்றுக் கொண்ட இடத்தையும், எந்த மணி நேரம், எந்த நிமிடத்தில் அதைப் பெற்றுக் கொண்டார் என்பதையும் எனக்குத் தெரிவித்தார். அதை நான் சந்தேகிக்கவில்லை. பாருங்கள்? எனக்கு எந்த ... அவருக்கு நான் நியாயாதிபதி அல்ல. பாருங்கள்? அவர், “ அங்கு தான் அதை பேசினேன்” என்றார். அவர் எந்த இடத்தில் பேசினார் என்பதை சரியாக அறிந்திருந்தார். அவர், “எனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தது” என்றார். “அதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் மகனே, அதுவல்ல நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்றேன். அவர், “ஓ, ஆமாம்!. அதுதான் அடையாளம்” என்றான். நான், “இல்லை” என்றேன். அவர், “இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், சகோதரனே!' என்றார். நான், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக கூறும் அந்த இந்தியானாபோலீஸ் சபையில் இருந்தவர்கள், நீங்கள் உயிர்த்தெழுதலைக் குறித்தும் தேவனுடைய வல்லமையைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் பேசினதை அவர்கள் ஆங்கில பாஷையில் கேட்டனரா?” என்றேன். அவர், “இல்லை, நான் அவர்கள் அறிந்திராத அந்நிய பாஷையில் பேசினேன் ” என்றார். நான், 'அப்படியானால் நீங்கள் அப். 2: 4ன்படி அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் .... ஒரு வார்த்தையும் கூட அறியப்படாமல் இருக்கவில்லை. “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே”. . 95அவர், 'ஓ சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எங்கு குழப்பமடைந்திருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது காண்கிறேன். பாருங்கள், தூதர்பாஷை என்று ஒன்றுண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அந்த பாஷையில் பேசுகிறீர்கள், அதற்கு யாரும் அர்த்தம் உரைக்கத் தேவையில்லை, அது பரிசுத்த ஆவியானவர் பேசுவதாகும். பாருங்கள்? பிறகு அந்நிய பாஷை பேசும் வரம் ஒன்றுண்டு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்“ என்றார். நான், 'அப்படியானால் நீங்கள் தலைகீழாக இதைக் கூறுகிறீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அதை தலை கீழாக பெற்றுக் கொண்டார்கள். அதாவது யாருமே அறிய முடி யாத பாஷையில் அவர்கள் பேசுவதற்கு முன்பு, எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய பாஷையில் அவர்கள் பேசினார்கள். அப்படித்தானே? என்றேன். பாருங்கள். எனவே அது உண்மையில்... 96இரண்டு விதமான பாஷைகள் உண்டு. ஒன்று தூதர் பாஷை. அது மனிதன் தனி ஜெபத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவனிடத்தில் பேசும் தூதர் பாஷையாகும். நடந்த ஒரு சம்பவத்தை இப்பொழுது நான் உங்களிடம் கூற முடியும், ஆனால் எனக்கு நேரமில்லை. டாக்டர் அலெக்சாண்டரின் இடமாகிய சீயோன் என்னுமிடத்தில் அந்தஸ்திரீ அரங்கத்துக்கு வந்திருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அங்கு நான் சென்றிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த கூட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்ல பில்லி வந்திருந்தான். நான், 'பில்லி, போய் விடு“ என்றேன். நான் ... அவன், “நீங்கள் எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? யாராகிலும் இங்கு வந்திருந்தார்களா?” என்றான். நான், “இல்லை, ஐயா. நீ திரும்பிப் போய் சகோ. பாக்ஸ்டரிடம் இன்றிரவு பிரசங்கிக்கும்படி கூறிவிடு” என்றேன். நான் தரையில் முழங்கால்படியிட்டு, “ஆண்டவரே, எனக்கு என்ன நேர்ந்தது?” என்றேன். அப்பொழுது திடீரென்று யாரோ ஒருவர் கதவண்டையில் வேறொரு பாஷையில் பேசுவதைக் கேட்டேன். நான் நினைத்தேன் .... அது ஜெர்மன் பாஷை. “அந்த ஆளுக்கு ஏதோ தேவை போலிருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார்” என்று நினைத்தேன். நான் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு, அங்கு இப்படி நின்றுகொண்டு அவர் பேசுவதை உற்றுக் கேட்டேன். “அந்த விடுதி முதலாளிக்கு அது எப்படி புரியும்?” என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் அந்த விடுதி முதலாளியை எனக்குத் தெரியும், அது நகரத்தை விட்டு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது என்னைச் சுற்றிலும் அந்த சிறு நகரத்தில் ஜனக்கூட்டம் அதிகமாக இருந்ததனாலே, அங்கு நான் சென்று விட்டேன். நான், “இது விசித்திரமாயுள்ளதல்லவா? என்று எண்ணினேன். நான், ”இந்த ஆள் மூச்சு விடாமல் பேசுகிறாரே என்று நினைத்தேன். பாருங்கள், அப்படித்தான் நான் நினைத்தேன், வேகமாக பேசுகிறாரே!“ என்று. நல்லது. நான், 'இது என்ன, அது நான் தான்' என்று கூறிக் கொண்டேன். நான் அமைதியாக இருந்தேன். சிறிது கழிந்து அவர் பேசி முடித்தார். அவர் முடித்த போது, நான் ஒரு சேனையின் வழியாக ஓடி மதிலைத் தாண்ட முடியும் என்பது போன்ற உணர்வு எனக்குண்டாயிற்று. நான் வெளியே சென்றேன். அப்பொழுது, பில்லி 'கேட்டை (gate) விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான். நான், “ஒரு நிமிடம் நில்” என்று அவனை நோக்கி கூச்சலிட்டேன். 97அவன் திரும்பி வந்தான். அவன் 'சோடா பாப்' குடித்துக் கொண்டிருந்தான். அவன், “அப்பா, என்ன விஷயம்?” என்றான். நான், “ஒரு நிமிடம் நில், ஒரு நிமிடம் நில், உன்னுடன் நான் வருகிறேன்” என்றேன். நான் முகத்தை வேகமாக கழுவினேன். அவன், “என்ன விஷயம்?” என்றான். கூட்டத்துக்குச் செல்லும் விஷயத்தில் என்னுடன் பேசி எந்த பயனும் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவன், “என்ன விஷயம்?” என்றான். நான், “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. கூட்டத்துக்குப் போகலாம் வா” என்றேன் நாங்கள் கூட்டத்துக்குச் சென்றோம். அங்கு சகோ. பாக்ஸ்டர் உட்கார்ந்து கொண்டு, “என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் இடையே ஒன்றுமில்லை” என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். அவர், “வயூ! நீங்கள் வரமாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!” என்றார். நான் “உஷ்” என்று சொல்லிவிட்டு, மேலே சென்று பிரசங்கிக்கத் தொடங்கினேன். 98நான் பிரசங்கித்து முடிக்கும் தருணத்தில் அந்த பெரிய அரங்கத்தின் பின்பக்கத்தில் யாரோ ஒருத்தி பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் ஒலிபெருக்கியை அது வரைக்கும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஸ்திரீ மேலும் கீழும் நடந்து, தன்னால் முடிந்த வரைக்கும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். பார்க்கப் போனால், அவளுக்கு காசநோய் இருந்தது. அவள் இரட்டை பட்டினம், செயிண்ட் பால்ஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டாள். நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர மறுத்து விட்டது. ஏனெனில் அவளுடைய சுவாசப்பைகள் வெடித்து விடும் என்று அவர்கள் பயந்தனர். மருத்துவர், “அவளுடைய சுவாசப் பைகள் தேன் கூடு போல் ஆகி விட்டது. அது வெடித்து விட்டால்இறந்து போவாள்” என்று கூறிவிட்டார். சில பரிசுத்தவான்கள் 38 மாடல் செவர்லே காரைக் கொண்டு வந்து, பின்னால் உள்ள இருக்கையை நீக்கிவிட்டு, அங்கு படுக்கை போல் ஒன்றை உண் டாக்கி, அவளை அதில் படுக்க வைத்து காரை சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தார்கள். மேடு போன்ற ஒரு இடத்தின் மேல் கார் மோதி, குலுக்கல் ஏற்பட்ட போது, அவள் இரத்தம் கக்கத் தொடங்கினாள். அந்த இரத்தம் மூக்கின் வழியாகவும் வெளியேறியது. அவள் பலவீனமடைந்து கொண்டே வந்தாள். முடிவில்... அவளுக்கு காரில் இறக்க விருப்பமில்லை. அவள் காரை நிறுத்தச் சொல்லி, புல் தரையில் தன்னை கிடத்தும்படி கூறினாள். அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அவர்கள் எல்லோரும் அவளைச் சுற்றி நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று, அவள் மேல் ஏதோ ஒன்று பட்டதாக அவள் கூறி, எழுந்து நின்றாள். அவள் தன்னால் இயன்ற வரை உரக்க சத்தமிட்டுக் கொண்டே சாலையில் பயணம் செய்யத் தொடங்கினாள். அவள் சபையை அடைந்து உட்பாதையில் மேலும் கீழுமாக நடந்தாள். நான், “சகோதரியே, அது நடந்தது எத்தனை மணிக்கு?” என்று கேட்டேன். பரிசுத்த ஆவியானவர் என் மூலம் பேசின அதே மணி நேரத்தில் அது நடந்தது. அது என்ன? வரங்கள். 99அது என்ன - அந்த 'ஆப்போஸம் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக வாசலில் வந்து படுத்துக் கொண்டிருந்த சம்பவம்! (ஆப்போஸம்' என்பது கங்காருவைப் போன்ற ஒரு அமெரிக்க மிருகம் - தமிழாக்கியோன்). ஒன்றும் அறியாத அந்த மிருகம், அதற்கு ஆத்துமா கிடையாது. நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியாத ஒன்று; பாருங்கள், அதற்கு ஆத்துமா கிடையாது (அதற்கு ஆவி உள்ளது), ஆத்துமா கிடையாது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்தல். தேவன் ஒரு வரத்தை பூமிக்கு அனுப்பினார், பரிசுத்த ஆவியானவரால் மேலும் காத்திருக்க முடியவில்லை. எனவே அவர் வந்து என்னை ஆட்கொண்டு, அவரே அந்தவிதமாக பேசத் தொடங்கி, அவரே வேண்டுதல் செய்தார். நாங்கள் நேரத்தை ஒப்பிட்டுப் பார்த்த போது, அதே நேரத்தில் அவள்.... அவர்கள் அவளைப் புல்தரையில் கிடத்தி, என்ன நேரத்தில் அது நடந்தது என்று காண விரும்பினர். ஏனெனில் அவள் மரித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால், அவள் எந்த நேரத்தில் மரித்துப் போனாள் என்று அவர்கள் கூறவேண்டும். பரிசுத்த ஆவியானவர் என் மேல் விழுந்து அந்த வார்த்தைகளை உரைத்து வேண்டுதல் செய்த அதே நிமிடத்தில் அவள் சுகமடைந்தாள். அவர் வேண்டுதல் செய்தபோது உரைத்த சொற்கள் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அது பரிசுத்த ஆவியானவர் பேசுதல். அதை நான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், எனக்குப் புரியவில்லை. அது ஒருக்கால் அவளுடைய தூதனாக இருக்கலாம். இன்னும் சில நிமிடங்களில் அந்த விஷயத்துக்கு நாம் வரப் போகிறோம். அந்த தூதன் வந்து அந்த செய்தியை அளித்திருக்கலாம், பாருங்கள்? இப்பொழுது - இப்பொழுது, அது-அது சரி. இரண்டு விதமான பாஷைகள் உண்டு. அவைகளில் ஒன்று..... 100ஏதாகிலும் கேள்வி உண்டா? சரி, தேவன் என்ன உரைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முயலுதல், பாருங்கள். இப்பொழுது நான் .... சகோ. ஸ்ட்ரிக்கர், இந்த விஷயத்தில் நான் கூற விரும்புவது என்னவெனில், அதைக் குறித்து சிந்திக்க முயற்சி செய்யாதீர்கள், பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவதற்கு விட்டுக் கொடுங்கள். அது என்னவென்று புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். தொடர்ந்து உங்களை பரிசுத்த ஆவிக்கு முழுவதுமாக சமர்ப்பியுங்கள். பாருங்கள்? “ஹெ, நீர் என்ன கூறுகிறீர்?” என்று நீங்கள் கேட்க முனைகிறீர்கள். “ஹெ, நீர் என்னிடமா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” பாருங்கள், அவர். அவர் புரிந்து கொள்ள முயல்கிறார். 101மற்றவர்களுக்காக பீடத்தண்டையில் ஜெபிக்கையில், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவது சரியா? ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இங்கு நான் என்ன எழுதிவைத்திருக்கிறேன் என்பதை காணட்டும், அதை நான் பார்க்க வேண்டும். அர்த்தஞ்சொல்லுகிறவன் இல்லா விட்டால், அவர்கள் பேசாமலிருக்கக்கடவர்கள். 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம்.... 14ம் அதிகாரம் 28ம் வசனம். யாரிடம் வேதாகமம் உள்ளது? (ஒரு சகோதரன் கீழ்கண்ட வசனத்தைப் படிக்கிறார் - ஆசி).அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் சபையிலே பேசாமல் ... சரி, எப்பொழுதாவது எங்காவது சபையில் அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், பேசாமலிருங்கள் - அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாமல் போனால். 102பீடத்தண்டையில், ஒரே ஒரு காரியம், யாராகிலும்.... ஜனங்கள் பீடத்தண்டையில் செல்வதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அண்மையில் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் பீடத்தண்டையில் சென்று எவராகிலும் ஒருவரை முதுகில் தட்டி, அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டேன். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அந்நிய பாஷையில் பேசுபவர் காண்பிப்பது போல் தோன்றினது. பாருங்கள், அது செயற்கையாக பரிசுத்த ஆவியை ஜனங்களிடம் கொண்டு வர முயல்வது போல் உள்ளது. அவ்விதம் செய்யாதீர்கள். பாருங்கள்? செய்ய வேண்டியது என்னவெனில், அந்த நபரைத் தனியே விட்டு விடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் வரைக்கும், அவர்கள் கரங்களை உயர்த்திக் கொண்டிருக்கட்டும். பாருங்கள். எனவே அது தவறாகும். இல்லை, அவர்கள் சபையில் பேசாமலிருக்க வேண்டும், பாருங்கள். 103(ஒரு சகோதரன், “சகோ. பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. ஒரு நபர் ஆராதனைக்கு வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு செய்தி வரும் போது, அது வழக்கமாக ஆராதனையின் முடிவில் தான் வருகிறது. அப்படி வரும் போது, இந்த வரத்தையுடைய நபர், தூதரின் பாஷைக்கும் அல்லது அளிக்கப்படுகின்ற செய்திக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?) இப்பொழுது, இதைப் பார்ப்போம்... (ஒலி நாடாவில் 'காலியிடம் - ஆசி).... அவர்கள் உள்ளே வந்து அதை எழுதி என் மேசையின் மேல் வைக்க வேண்டும். பாருங்கள்? அதை நான் இவ்விதம் பகிரங்கமாக படிப்பேன். சகோதரனே, அந்த அறைக்குள் நான் சென்று விட்டால், அவ்வளவு தான். பாருங்கள்? 104அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். எல்லோரும் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அங்கு சகோதரி ஐரீன் மீட்பர் மரித்த குருசண்டை' என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருப்பாள்.வாயில் காப்போர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பார்கள். யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டால், அவர்கள் “உஷ், உஷ், உஷ்” என்பார்கள். பாருங்கள்? சிறு பிள்ளைகள் சத்தம் செய்தால்... வாயில் காப்போர் அவர்கள் பக்கத்தில் இனிமையாக அமர்ந்து, “தேனே, இது கர்த்தருடைய வீடு, நீ அவ்விதம் செய்யக் கூடாது. கர்த்தருடைய வீட்டில் நீ நல்லபடி நடந்துக் கொள்ள வேண்டும்” என்பார்கள். மனிதர் அவர்களுடைய மனைவிகள், எல்லோருமே, தங்கள் 'கோட்'களை தொங்க விடுவதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். கதவு திறக்கப்பட்டவுடன், உள்ளே வரும்போது, அவர்களை வரவேற்க கதவண்டையில் யாராகிலும் இருப்பார்கள்... எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய ஆயத்தமாகி, சபையை சரியான விதத்தில் வைப்பார்கள். எல்லோருக்கும் உட்கார இடம் கிடைத்து அவர்கள் உட்காருகின்றனரா என்று கவனித்துக் கொள்வார்கள். 105நான் அறைக்குள் ஜெபித்துக் கொண்டிருப்பேன் - சில சமயங்களில் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணியிலிருந்து. யாருமே என்னைத் தொந்தரவு செய்வதில்லை. என் செய்தியுடன் நான் சபைக்கு வருவேன். ஆராதனை தொடங்கும் போது, பாடல் தலைவர், “இன்னின்ன எண் பாடலுக்கு நாம் பாட்டுப் புத்தகத்தைத் திருப்புவோம்” என்று அறிவிப்பார். உதாரணமாக, “மீட்பர் மரித்த குருசண்டை ' என்னும் பாடலுக்கு, அவர்கள் அதைப் பாடிக் கொண்டே இருப்பார்கள். இரண்டு விசேஷித்த பாடல்களைப் பாடின பிறகு... நாங்கள் பாடல்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை, வார்த்தையில் தான் செலவிடுவோம். அவர்கள் ஞானப்பாட்டுகளைப் பாடுவார்களானால், அதற்காகத்தான் அவர்கள் வழக்கமான ஞானப்பாட்டுகள் பாடும் நேரத்தை வைத்திருக்கின்றனர். நாம் - நாம்... ஜனங்கள் அங்கு முக்கியமாக வருவது வார்த்தைக்காகவே. அது திருத்தும் வீடு. 106அதன் பிறகு ஒரு கூட்டாளி, உதாரணமாக சகோ. ஜார்ஜ் டீ ஆர்க் எழுந்து ஜெபிப்பார். அதன் பிறகு ஒரு விசேஷித்த பாடல் இருக்கும் - தனியார் பாடல் போன்ற ஒன்று. அதன் பிறகு செய்திக்கான நேரம். யாராகிலும் ஒருவர் என்னிடம் வந்து, அறையை விட்டு வெளியே வர நேரமாகி விட்டது என்றுஅறிவிப்பார். நான் அபிஷேகத்தின் கீழ் புத்துணர்ச்சியுடன் வெளியே வருவேன், பாருங்கள்? நல்லது. ஒருக்கால் அந்த வாரத்தில் அவர்கள் சபையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கக் கூடும் - தங்கள் சொந்தக் கூட்டம் ஒன்றை . அல்லது ஒருக்கால் அன்றிரவு ஆராதனை தொடங்கும் முன்னர், அவர்கள், கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கக் கூடும். அது இங்கே இருக்கும். அதை நான் இங்கு பெற்றிருப்பேன். நான், “அடுத்த வாரம் இந்த இடத்தில் ஒரு புயல் உண்டாகும் என்று இந்த தாளில் எழுதப்பட்டிருக்கிறது” என்று அறிவிப்பேன், அல்லது வேறெதாகிலும் ஒன்று நடக்கும் என்று. “அது அந்நிய பாஷையில் பேசப்பட்டு, இந்த சபையில் உள்ள இரு பரிசுத்தவான்களால் - சகோ. இன்னார் இன்னார், சகோ. இன்னார் இன்னார் அவர்களால் அர்த்தம் உரைக்கப்பட்டு இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட்டுள்ளனர்.”இது தேவனால் உண்டாயிருக்க வேண்டும். அது இன்னின்னது, அது இன்னின்னது“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது என் முதல் பாகம். 107பிறகு நான் “சரி, இதற்காக நாம் ஆயத்தமாயிருப்போம், எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். பாருங்கள்? யாருக்காகிலும் விசேஷித்த விண்ணப்பம் உள்ளதா?” என்று கேட்டுவிட்டு, “நாம் ஜெபம் செய்வோம்” என்பேன். எழுந்து ஜெபித்த பிறகு, நேராக வார்த்தைக்கு சென்று விடுவேன். ஆராதனை முடிந்தவுடனே, பீட அழைப்பு கொடுக்கப்படும். பாருங்கள்? பீட அழைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். ஜனங்களை பீடத்தண்டையில் வரவழைத்தல், பீட அழைப்பு முடிந்த பிறகு, ஒருவேளை நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். அது போல் ஏதோ ஒன்று. ஆராதனை இவ்வாறு நன்றாக முடிவு பெறும், ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. 108அதைக் குறித்து தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன் ... அந்த தூதன் என்னிடம் நடந்து வந்ததாக நான் அன்றிரவு கண்ட தரிசனம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த அறையில் நான் உட்கார்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது நள்ளிரவு. “தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு... என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அது எப்படி முடியும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அந்த ஒளி பிரகாசிப்பதை நான் கண்டேன். இதோ அவர் நான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு நடந்து வந்தார். பாருங்கள்? அப்பொழுது தான் இந்த கூட்டங்களுக்காக எனக்குக் கட்டளை கொடுத்தார். இப்பொழுது, இல்லை, செய்தியை அளிக்கும் நபர். அது உங்கள் கேள்வி என்று நினைக்கிறேன். “செய்தியை அளிக்கும் அந்த நபர், அவருக்கு ... ”செய்தியை அளிக்கும் அந்த நபர். அது கர்த்தருடைய தூதனா இல்லையா என்று அறிந்து கொள்ள முடியுமா?“ (ஒரு சகோதரன், “இப்பொழுது, கேள்வி என்னவெனில், தூதர் பாஷைகள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்... ”ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). அவரால் முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், பாருங்கள். அவ்விதமாகத்தான் அதை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். அது இருக்க வேண்டிய விதத்தில் அதை நாம் பெற்றிருப்போமானால், அதற்காக ஒரு வழக்கமான கூட்டத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால்.... 109பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் உண்டு. நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். நீங்கள் இங்குள்ள சபையோர், ஆனால் உங்களுக்கு ஒரு ஊழியம் உண்டு. உங்களுக்கு ஏதோ ஒன்றுண்டு, நீங்கள் தேவனுடைய ராஜ்யத்துக்கு உதவி செய்ய முயன்று. அதற்காக ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள், பாருங்கள், எனவே சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடுகிறீர்கள். ஆகையால்தான் மேய்ப்பர்களாகிய நாங்கள் ஒன்று கூடுகிறோம். எங்களுக்கு பொதுவாக ஏதோ ஒன்றுண்டு. சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடி, வேதத்தைப் படித்து, அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து. செய்தியை அளிக்கிறீர்கள், பாருங்கள். 110ஆனால், இப்பொழுது, இந்த மனிதன், அவர் உணர்ந்தால்.... அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார், அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரமுண்டு. நல்லது. அவர் கூட்டத்துக்கு வந்து.அந்நிய பாஷையில் பேசுகிறார், ஆனால் அதற்கு அர்த்தம் உரைக்கப்படுவதில்லை. அர்த்தம் உரைப்பவருக்கு அது என்னவென்று புரிவதில்லை. [ஒரு சகோதரன், “அப்படியானால் இந்த மக்கள் சரீரம் பக்தி விருத்தியடையச் செய்கின்றனர், ஆனால் மேய்ப்பர்கள், போதகர்கள் போன்ற உத்தியோகங்கள் சரீரத்தை பரிபூரணப் படுத்துகிறது என்றா கூறுகிறீர்? என்று கேட்கிறார் - ஆசி]. ஆம், அதற்காகத்தான் அவையுள்ளன, பரிபூரணப்படுவதற்காக பாருங்கள்? பரிபூரணப்படுவதற்கென்றே இவை அளிக்கப்பட்டுள்ளன. பாருங்கள். சபை பரிபூரணப்படுவதற்காகவே ஆவி அளிக்கப்பட்டுள்ளதென்று நான் நம்புகிறேன். 111இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள் ஆவியில் நிறைந்தவர்கள், அதில் சந்தேகமில்லை. இப்பொழுது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறார், அவர் இந்த கூட்டத்தில் அந்நிய பாஷையில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர் அர்த்தம் உரைப்பவர்களுக்கு முன்னால் தான் இருக்கிறார், பாருங்கள், இருப்பினும் யாருமே அதற்கு அர்த்தம் உரைக்கவில்லை என்றால், எங்கோ தவறுள்ளது. அர்த்தம் உரைப்பவர் ஒன்றும் செய்ய முடியாது. பாருங்கள். அவர் ஆவியின் ஏவுதலினால் மட்டுமே அர்த்தம் உரைக்க முடியும். அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஆவியின் ஏவுதலினால் எப்படி பேசுகிறாரோ, அதே போல. அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரம் இருக்கலாம், ஆனால் வழக்கத்தில் உள்ள ஒரு பாஷையைப் பேசும் வரம் அவருக்கு இல்லை . அவர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், அவர் இந்த அந்நிய பாஷையை உபயோகிக்கும் போது, அப்பொழுது அவர் காண்கிறார். இப்பொழுது, அவர் முயற்சி செய்யக் கூடாது. அவர் மறுபடியும் அதை பேசத் தொடங்கினால், அவர் பெருமையுள்ளவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் செய்யக் கூடாது... அவர் தொடக்கத்திலேயே தவறாயிருக்கிறார். பாருங்கள், அவரை அது எங்கும் கொண்டு செல்லாது. பாருங்கள், அவர் நினைக்கலாம், “நல்லது. தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்த ஆளுக்கு நான் பேசின பாஷைக்கு அர்த்தம் உரைக்க பிரியமில்லை. அவ்வளவு தான் ” என்று. இப்பொழுது பாருங்கள், அவர் தொடக்கத்திலேயேதவறாயிருக்கிறார். அங்கே தவறான நோக்கம், தவறான குறிக்கோளை உடையவராயிருக்கிறார். பாருங்கள்? 112ஆனால் அவர் இனிமையும் தாழ்மையும் உள்ளவராக இருப்பாரானால், அவர், “நல்லது, ஒருக்கால் கர்த்தர் தமது சேவையில் என்னை உபயோகிக்க விரும்பவில்லை. இருப்பினும் நான்.... இதன் மூலம் அவர் என் ஆத்துமாவை ஆசிர்வதிக்கிறார், அவர் நான் பக்திவிருத்தியடைய விரும்புகிறார். நான் அந்நிய பாஷையில் பேசும் போது அவருக்கு அருகில் நான் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். தோட்டத்துக்கு நடந்து சென்று, 'ஓ. தேவனே! என்பேன். அப்பொழுது வல்லமை என் மேல் விழுந்து, நான் அந்நிய பாஷையில் பேசி, புத்துணர்ச்சி பெற்றவனாய் உள்ளே வருவேன். ஓ, கர்த்தாவே, நீர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறீர். அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் என்னை நேர்க் கோட்டில் வைத்திருக்கிறீர்” என்பார். பாருங்கள்? “கர்த்தாவே, இன்றைக்கு நான் அந்த மனிதனிடம் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாததற்காக என்னை மன்னிக்கவும், ஆண்டவரே. நான் அதை செய்யாமல் விட்டு விட்டேன், அப்படி நான் செய்திருக்கக் கூடாது. பிதாவே, என்னை தயவு கூர்ந்து மன்னிப்பீராக” என்பார். இப்பொழுது அது அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறது. “ஆ, வ்யூ, இப்பொழுது அதைக் குறித்து நல்லுணர்வு தோன்றுகிறது”. பாருங்கள், அப்படியானால் பரவாயில்லை, பாருங்கள், உங்களுடைய அந்த வரம் சபையில் உபயோகிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக. “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் பாருங்கள், அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லா விட்டால், அப்பொழுது... நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள், அது தான். அவனுக்கே அது தெரியாது. அவன் .... ஆனால் அவன் தவறாயிருக்கும் போது அதை அறிந்து கொள்கிறான். இப்பொழுது, இவ்விரண்டை நீங்கள் பிரிக்கும் வரைக்கும், இவை ஒன்றாக போகும்படி விட்டு விட வேண்டும். அந்த ஒன்றை தான் நீங்கள் செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் நான் நினைக்கிறேன் .... 113கொரிந்தியர் 14:5க்கு விளக்கம் தாருங்கள். இந்த வேதவசனத்தை யார் வேகமாக எடுக்க முடியும்? யாராகிலும் ஒருவர் எடுத்து விட்டாரா? (ஒலி நாடாவில் காலியிடம். ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கிறார் - ஆசி). நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும் அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். சரி, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன்' பவுல் என்ன சொல்ல முயல்கிறான் என்றால் .... உதாரணமாக சபை, நீங்கள் என் சபை. பவுலுக்கிருந்த சபைகளில் சில, இப்பொழுது நமக்கு இங்குள்ள அங்கத்தினர்களைப் போல் அவ்வளவு அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டதல்ல. சில வேளைகளில் பத்து அல்லது பன்னிரண்டு பேர். பாருங்கள்? பாருங்கள்? அவன், ”நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்“ என்கிறான். அது உங்களைத் திகைப்படையச் செய்து விட்டதல்லவா? பாருங்கள், அப்போஸ்தலர் 19ல் கூறப்பட்டுள்ள அந்த சபையில் ஏறக்குறைய ஒரு டஜன் அங்கத்தினர்கள் இருந்தனர் என்று நினைக்கிறேன். பாருங்கள்? வெகு சொற்பப் பேர், ஊழியக் களத்தில், பாருங்கள். அது எப்பொழுதுமே சிறுபான்மையோராக இருந்து வந்துள்ளது. அவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய பன்னிரண்டு பேராயிருந்தார்கள் என்று அங்கு கூறப்பட்டுள்ளது (அப். 19:7) என்பதை நீங்கள் காணலாம். 114இப்பொழுது, நீங்கள் காண்பீர்களானால், பவுல் இங்கு, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” என்கிறான். “நீங்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆயினும் அதற்கு அர்த்தம் உரைக்கப்படாவிட்டால், நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன் என்கிறான். அது எவ்விதம் அங்கு எழுதப்பட்டுள்ளது? யார்... அந்த வசனத்தை எடுத்து விட்டீர்களா? சரி, அதை நாம் மறுபடியும் படிப்போம். இப்பொழுது கவனியுங்கள். ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கத் தொடங்குகிறார். “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன்... - ஆசி). அங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். ”நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்“ (”நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்... “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்” (ஏனென்றால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அந்நிய பாஷைகளைப் பேசுகிறவனிலும் மேன்மையுள்ளவன்...'] இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதைவிட மேன்மையுள்ளது வேறெது? அங்கு தானே நீங்கள் என்னை நிறுத்தச் சொன்னீர்கள்? ஒரு சகோதரன், “அது வித்தியாசமான ... என்று நான் கூறிக் கொண்டிருந்தேன்” என்கிறார் - ஆசி). ஆம், பாருங்கள், ஆம். பாருங்கள்? 115இப்பொழுது. உதாரணமாக, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளே வருகிறேன், நீங்கள் எல்லோரும் ... இந்த கூட்டத்தை நாம் ஆரம்பித்தோம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்லது. அது என்ன? பாருங்கள். அந்த கல்லாதவன், “ஊ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர் - என்பான். பாருங்கள்? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான். இப்பொழுது, அந்த வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார். “... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்... - ஆசி). பார்த்தீர்களா? ”சொல்லாவிட்டால், பாருங்கள். நான் .... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். தொடர்ந்து படியுங்கள் ... சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு....). பார்த்தீர்களா? சபை பக்தி விருத்தி அடைகிறது. இப்பொழுது. வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை... இங்குள்ள இந்த ஆள்.... இங்குள்ள இத்தனை பேர் கல்லாதவர்என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இன்றிரவு நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நாமனைவருமே கர்த்தர் என்ன கூறப் போகிறார் என்பதை நாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை. அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். பவுல், “நீங்கள் அறிய வேண்டியது... நான் .... அது நல்லது தான். நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது நல்லது தான் என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று ”கர்த்தர் உரைக்கிறதாவது, இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு அந்நியர். அவருடைய பெயர் ஜான்டோ. அவர் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றிரவு இங்கு வந்துள்ள காரணம், அவர் உதவியை நாடுகிறார். அவர் இன்று டென்னஸியிலுள்ள மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். அவருக்கு சுவாசப் பைகளில் புற்று நோய் உள்ளதென்றும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் கூறிவிட்டார்' என்று கூறினால் எப்படியிருக்கும்? 116இப்பொழுது. உதாரணமாக, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளே வருகிறேன், நீங்கள் எல்லோரும் ... இந்த கூட்டத்தை நாம் ஆரம்பித்தோம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்லது. அது என்ன? பாருங்கள். அந்த கல்லாதவன், “ஊ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர் - என்பான். பாருங்கள்? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான். இப்பொழுது, அந்த வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார். “... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்... - ஆசி). பார்த்தீர்களா? ”சொல்லாவிட்டால், பாருங்கள். நான் .... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். தொடர்ந்து படியுங்கள் ... சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு....). பார்த்தீர்களா? சபை பக்தி விருத்தி அடைகிறது. இப்பொழுது. வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை... இங்குள்ள இந்த ஆள்.... இங்குள்ள இத்தனை பேர் கல்லாதவர்என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இன்றிரவு நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நாமனைவருமே கர்த்தர் என்ன கூறப் போகிறார் என்பதை நாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை. அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். பவுல், “நீங்கள் அறிய வேண்டியது... நான் .... அது நல்லது தான். நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது நல்லது தான் என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று ”கர்த்தர் உரைக்கிறதாவது, இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு அந்நியர். அவருடைய பெயர் ஜான்டோ. அவர் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றிரவு இங்கு வந்துள்ள காரணம், அவர் உதவியை நாடுகிறார். அவர் இன்று டென்னஸியிலுள்ள மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். அவருக்கு சுவாசப் பைகளில் புற்று நோய் உள்ளதென்றும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் கூறிவிட்டார்' என்று கூறினால் எப்படியிருக்கும்? 117“அதற்கு அர்த்தஞ்சொன்னாலன்றி பாருங்கள், அர்த்தம் சொல்லுதல் பக்திவிருத்தி உண்டாக்குகிறது. பாருங்கள்? அப்பொழுது அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் .... அந்த ஆள் வெளியே சென்று, ”உங்களிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். அந்த ஜனங்களிடம் தேவன் இல்லை என்று என்னிடம் கூறாதீர்கள். நிச்சயமாக அவர் இருக்கிறார்! அவர்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது' என்பார். பாருங்கள்? “ எனவே நமக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் அதனுடன் கூட அந்நிய பாஷைகளில் பேசும் வரங்களும் அவசியமாயுள்ளது. ஆனால் அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கு அர்த்தம் சொல்லுதல் அவசியம். அதற்கு அர்த்தம் சொல்லும் போது அது தீர்க்கதரிசனமாகிவிடுகிறது. பாருங்கள்? அது தீர்க்கதரிசனம். அதைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது, அதை நாம் ஒரு நிமிடத்தில் பார்ப்போம், விரைவில் அதற்கு வருவேன் (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). 118மத்தேயு 18: 10. (ஒரு சகோதரன் மத்தேயு 18:10ஐப் படிக்கிறார் - ஆசி]. “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'. சரி. இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், பெயர்கள் எழுதப்படுவதில்லை, சிறு காகிதத் துண்டுகள் மாத்திரமே, பாருங்கள், இதைக் கேட்டவர் யாராயிருந்தாலும், நான் நிச்சயமாக இதை நீங்கள் இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். ஆனால் நான் நினைக்கிறேன். இதன் விளக்கம்; “இதற்கு விளக்கம் தாருங்கள்” என்று என்னைக் கேட் பீர்களானால், இது தான் என் விளக்கம். இப்பொழுது நீங்கள் 2 கொரிந்தியருக்குத் திருப்புங்கள், யாராகிலும் 5: 1க்குத் திருப்பினால், “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும்” என்று எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது”. சரி. 119இப்பொழுது அவர் .... நீங்கள் மத்தேயு 18:10ஐக் கவனிப்பீர்களானால் அவர் “சிறு பிள்ளைகளைக் குறித்து இங்கு பேசுகிறார். அவர்கள் சிறு பிள்ளைகள், மூன்று அல்லது நான்கு வயதுள்ளவர்கள், அவர்களைக் கொண்டு வந்தார்கள். ”சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். “சிறு பிள்ளைகள் என்பது ”சிறு பிள்ளை“ என்பதன் பன்மைச் சொல். சிறு பிள்ளை என்றால் சிறுவன் அல்ல - கைக்குழந்தை அல்ல, அதற்கும் பதின்மூன்று வயதுக்கும் இடையே உள்ள ஒரு பருவம். பாருங்கள்? அதுதானாக பொறுப்புள்ளதாயிருக்கும் பருவத்தை எட்டவில்லை. அவர், “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்றார். அந்த சொல்லுக்கு உண்மையான அர்த்தம் “மோசமாக நடத்தாதீர்கள்” (mistreat). பாருங்கள், “இவர்களில் ஒருவனை மோசமாக நடத்துதல்” ஒரு சிறு பிள்ளையை நாம் மோசமாக நடத்தக் கூடாது. அவர்கள் சிறு பிள்ளைகள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள், அவர், “அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்” என்றார். பார்த்தீர்களா? வேறு விதமாகக் கூறினால், அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய சரீரங்கள், அவர்கள் மரித்தால் அவர்கள் செல்லவிருக்கும் அந்த தூதனைப் போன்ற சரீரங்கள், பரலோகத்தில் என் பரமபிதாவின் சமுகத்தில் எப்பொழுதும் இருக்கின்றன“. பாருங்கள்? 120இப்பொழுது, “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும் நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது” அது சரியா? அது ஒரு சரீரம். இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு மட்டும் நேரமிருந்தால்! எனக்கு நேரமில்லை என்பதை அறிவேன். ஆனால், 'இங்கே, இதை ஒலிப்பதிவு செய்வதால், இதை சிறிது விளக்குகிறேன், அப்பொழுது நீங்கள் எப்படியும் புரிந்து கொள்வீர்கள். பாருங்கள், ஒரு இரவு பேதுரு சிறையிலிருந்தான். அவர்கள் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானின் வீட்டில் ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய தூதன் - அந்த அக்கினி ஸ்தம்பம் - சிறைச் சாலைக்குள் வந்தார். ஒரு வெளிச்சம் இறங்கி வந்தது. அந்த ஒளி அவனிடம் வந்த போது.பேதுரு சொப்பனம் காண்கிறதாக நினைத்தான். அது... வேதம், “அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது” என்கிறது (அப். 12:7). பாருங்கள்? நம்முடன் இன்றுள்ளவரும் அவரே என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள், அவர் இறங்கி வந்தார். நாமும் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டால், அதே விதமாக நமக்கும் நேரிடலாம். பாருங்கள்? அவர் அங்கு வந்து, “என் பின்னே வா” என்றார். எனவே பேதுரு, “இப்பொழுது நான் சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன், இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்” என்று எண்ணினான். அவன் காவலாளர்களைக் கடந்து சென்றான். அவன் “உ - ஊ. இப்பொழுது நான் நடந்து கொண்டே செல்கிறேன். கதவுதானாக திறக்கிறதே என்று எண்ணினான். அவன் அடுத்த காவலுக்குச் செல்கிறான், அதுவும் தானாக திறவுண்டது. அவன் நகர வாசலை அடைந்த போது, அதுவும் தானாக திறவுண்டது. பேதுரு சொப்பனம் காண்கிறதாக அப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு நின்ற போது, ”நல்லது. இப்பொழுது நான் விடுதலையாகி விட்டேன். எனவே நான் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான் வீட்டுக்குச் சென்று அங்கு ஐக்கியத்தில் கலந்து கொள்வேன்“ என்றான். 121அவர்கள் அங்கு, “ஓ கர்த்தாவே, உமது தூதனை அனுப்பி பேதுருவை விடுவியும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய அதே நேரத்தில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. சகோ. பிரான்ஹாம் தட்டுகிறார் - ஆசி]. ஒரு பெண் கதவண்டையில் வந்து, “யார் அங்கே? என்று கேட்டாள். அவள் ஜன்னல் சட்டங்களைத் திறந்து பார்த்த போது அது பேதுரு என்று அறிந்து கொண்டாள். அவள் திரும்பிச் சென்று நீங்கள் ஜெபம் பண்ணுவதை நிறுத்திக் கொள்ளலாம், பேதுரு அங்கு நின்று கொண்டிருக்கிறார்” என்றாள். அவன், “இது என்ன! திறவுங்கள். நீங்கள் - நீங்கள்...' என்றான். பாருங்கள்? [சகோ. பிரான்ஹாம் மறுபடியும் தட்டுகிறார் - ஆசி]. அவன் “கதவைத் திறவுங்கள், நான் உள்ளே வர வேண்டும்” என்றான். எனவே அவன் சொன்னான் ....அவள் திரும்பவும் வந்து, “கதவண்டையில் நின்று கொண்டிருப்பவர் பேதுருதான்” என்று சாதித்தாள். அவர்கள், “ஓ, அவர்கள் பேதுருவை ஏற்கனவே சிரச்சேதனம் செய்து விட்டார்கள். அது அவருடைய தூதன்” என்றனர். பாருங்கள், பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்த போது, அவன் அதை பெற்றுக் கொண்டான் என்று அவர்கள் எண்ணினர். ஏனெனில் அவன் வருவதற்காக அது பரலோகத்தில் காத்திருந்தது. அன்றொரு நாள் நான் கடந்து சென்று அந்த தரிசனத்தைக் கண்டேன். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால், நமக்கு வேறொன்று இருக்கிறது”. இந்த சிறுவர்கள் பாவமே செய்யாதவர்கள், பாருங்கள் ... பாருங்கள்? 122ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் போது, அது அங்கு வைக்கப்பட்ட வுடன் ... பாருங்கள்? பாருங்கள்? ஆனால், அது முதலில் ஆவியாயுள்ளது. அந்த ஆவி மாம்சத்தை தரித்துக் கொள்ளும் போது, ஒரு சிறு ஜீவகிருமி மாம்சத்தைத் தரித்துக் கொண்டு, அதன் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும் போது... கர்ப்பத்தில் அது உதறுகின்றது. குலுக்குகின்ற சிறு தசைகளைக் கொண்டதாயுள்ளது. அது நமக்குத் தெரியும். அவை ஜீவ அணுக்கள். ஒரு குதிரை மயிரை நீங்கள் தண்ணீரில் போட்டால், அது மிதக்கி, அசைந்து கொண்டிருக்கும். அதை நீங்கள் தொடும் போது அது குதிக்கும். அப்படித் தான் தாயின் வயிற்றிலுள்ள ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் அது இந்த உலகத்தில் பிறந்து அதன் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போது, அது ஜீவாத்துமாவாகிறது. பாருங்கள்? ஏனெனில் பூமிக்குரிய சரீரம் இவ்வுலகில் பிறந்தவுடனேயே, அதை ஏற்றுக் கொள்ள வானத்துக்குரிய ஒரு சரீரம், ஆவிக்குரிய சரீரம் ஒன்றுள்ளது. மாம்சத்துக்குரிய சரீரம் விழுந்தவுடனே, அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால் அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. ஒரு குழந்தை பூமிக்கு மாம்சத்தில் வந்தவுடனே, அதை ஏற்றுக் கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. இந்த ஆவிக்குரிய சரீரம்...மாம்சத்துக்குரிய சரீரம் அழிந்து போனவுடனே, ஆவிக்குரிய சரீரம் ஒன்று மறுபுறத்தில் காத்திருக்கிறது. பாருங்கள்? அதை நாம் 'தியாஃபனி' (theophany) என்று அழைக்கிறோம், பாருங்கள், தியாஃபனி. (ஒரு சகோதரன், “நல்லது, அப்படியானால், இந்த சரீரம் உயிர்த்தெழும் வரைக்கும், அது ஒரு தற்காலிகமான சரீரமா? என்று கேட்கிறார் - ஆசி]. ஆம், பாருங்கள்? ஆம். ஓ, ஆமாம். (”உயிர்த்தெழுதல்வரைக்கும் அந்த நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போமா?] அது சரி. பாருங்கள்? பாருங்கள்? 123அது இன்னும் மனுபுத்திரருக்கு வெளிப்படவில்லை. நான் நினைக்கிறேன். அதை நான் கண்டேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? ஆனால் அது என்ன விதமான சரீரம் என்று எனக்குத் தெரியவில்லை, உங்கள் கைகளையும் மற்ற உறுப்புகளையும் உணர முடிவதைப் போல அவர்களையும் என்னால் தொட்டு உணர முடிந்தது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. நான் உலகத்தை விட்டுச் சென்று அநேக ஆண்டுகள் கழித்தும் இதை நீங்கள் போட்டுக் கேட்க வகையுண்டு. பாருங்கள்? ஆனால்... அது என்னவாயிருப்பினும், அந்த ஜனங்களை நான் தழுவினேன், அவர்கள் கைகளைப் பிடித்தேன். நீங்கள் தத்ரூபமாயிருப்பது போல் அவர்களும் தத்ரூபமாயிருந்தனர். இருப்பினும் அது .... அவர்கள் புசிக்கவில்லை, குடிக்கவில்லை, அங்கு நேற்று என்றோ நாளை என்றோ இருக்கவில்லை. பாருங்கள், அது நித்தியம். இப்பொழுது, அந்த கூடாரம் ... அவர்கள் அந்த சரீரத்தில் புறப்பட்டு, பூமிக்குத் திரும்ப வருகின்றனர், அந்த விதமான சரீரத்தில் அவர்கள் அழியாமையைப் பெற்றிருந்தனர். பூமியின் மண்ணானது எப்படியோ அந்த 'தியாஃபனியாக ஒன்று கூடி, அவர்கள் மீண்டும் மானிடராக, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசித்ததைப் போல் புசிக்கின்றனர். பாருங்கள்? “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக ஒன்று ஏற்கனவே காத்திருக்கிறது. 124எனவே பாவமே இல்லாத இந்த சிறு பிள்ளைகள் - அவர்களுக்கு இன்னும் பாவம் இருக்கவில்லை - அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய “சரீரங்கள்” (பேதுரு அந்த சரீரத்தில் திரும்பி வந்ததாக கருதப்பட்டான்...) காத்திருக்கின்றன. “பரலோகத்தில் பரம பிதாவின் சமுகத்தை தரிசித்தவைகளாய்” அவைஎப்பொழுதும் அவருடைய சமுகத்தில் உள்ளன. அவர்கள் அதை அறிந்திருக்கின்றனர். ஒரு சகோதரன், “இயேசு அவருடைய உயிர்த்தெழுதலின் முதலாம் கட்டத்தில் 'என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறப் போகவில்லை' என்று சொல்லிவிட்டு அதன் பிறகு அறைக்குள் வந்தபோது தோமாவிடம் 'உன் கையை நீட்டி என் விலாவிலே போடு' என்று சொன்னதைப் புரிந்து கொள்ள சிறிது கடினமாயுள்ளது என்கிறார் - ஆசிர. அது உண்மை . அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. (”ஓரிடத்தில் அவர், அவரைத் தொட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தோமாவிடம் அருகில் வந்து அவரைத் தொடும்படி சொல்லுகிறாரே, இவ்விரண்டிலும் வேறுபாடு காணப்படுகிறதே). அவர் இன்னும் ஏறிப் போகவில்லை, பாருங்கள். நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை) 125அது உண்மை, பாருங்கள், அது வரைக்கும் அவர் தொடப்படக் கூடாது. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின்பு. அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்து மனிதர் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்தார், அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. அவர் சொன்னார். அவர் மரியாளிடம், “என்னைத் தொடாதே” என்றார். அவள், “ரபூனி” என்றாள். அவர், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன்” என்றார். அதன் பிறகு அன்றிரவு - அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பிறகு - தேவனுடைய சமுகத்துக்கு ஏறிப் போனார். அங்கிருந்து திரும்பி வந்து, அவரைத் தொடும்படி தோமாவை அழைத்தார். பாருங்கள், அவர் தேவனிடத்திற்கு ஏறிப் போனார். அது உண்மை . சரி. 126கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில், 'அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்“ என்று கூறப்பட்டுள்ளது. வெப்ஸ்டர் அகராதியில் தீர்க்கதரிசனம் உரைத்தல்: வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைத்தல், முக்கியமாக தெய்வீக ஏவுதலினால்' என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி... ஆம், அப்படித்தான் வெப்ஸ்டர் கூறியுள்ளார், அதை தான் அந்த சகோதரன் கேட்டார். வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னுரைக்காத செய்தி ”தீர்க்கதரிசனம்“ என்று அழைக்கப்படலாமா? இல்லை, ஐயா... “தீர்க்கதரிசனம் உரைத்தல்” என்றால் “முன்னுரைத்தல்” பாருங்கள்? சரி. 127இப்பொழுது, 1 கொரிந்தியர் 14:27ன் படி, அந்நிய பாஷைகளில் அளிக்கப்படும் எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும், எந்த ஒரு ஆராதனையிலும் அந்நிய பாஷைகளில் மூன்று செய்திகளுக்கு மேல் கொடுக்கப்படக் கூடாதென்று நினைக்கிறேன். அப்படித் தான் வேதம் கூறுகிறது. அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அதை நாம் அதைக் குறித்து நமக்கு நன்றாகத் தெரியும், பாருங்கள். அது ... ஆம், ஐயா, அது... மூன்று பேர் மட்டும் அது 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் உள்ளது. பாருங்கள்? அது உண்மை. “மூன்று பேர் மட்டும். சகோதரரே, அதை உங்கள் கூட்டங்களில் கவனித்துக் கொள்ளுங்கள். அநேகம் பேர் அந்நிய பாஷையில் பேச முற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.. அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இல்லை என்று இப்பொழுது சொல்லி விடாதீர்கள். கொரிந்து சபையை ஒழுங்குபடுத்துவதற்காக பவுல் சென்றிருந்தான். அது நம்மெல்லாருக்கும் தெரியும், இல்லையா? அதை அவன் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியதாயிருந்தது. அவன், ”சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப் படக்கடவது “ என்றான் (1 கொரி. 14:40). நீங்கள் கவனிப்பீர்களானால், பவுலுக்கு கொரிந்து சபையினால் எப்பொழுதுமே தொல்லை உண்டாகிக் கொண்டிருந்தது. அந்த விதமாக அவனுக்கு.... அவன் எபேசு சபைக்கு அப்படிப்பட்ட எதையும் கூறவில்லை, அவர்களுக்கு அவன் நித்திய பாதுகாப்பைக் குறித்து போதித்தான். ஆனால் கொரிந்து சபைக்கு அவன் எழுதின நிரூபத்தில், நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே காணப்படவில்லை. அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகளாயிருந்தனர் - “ஒருவன் அந்நிய பாஷையைப் பேசுகிறான்.ஒருவன் சங்கீதம் பாடுகிறான் என்பதாய் (1 கொரி 14:26). அது சரியல்லவா? பாருங்கள்? உங்கள் சபையோர் அவ்விதம் தொடங்கும் படி நீங்கள் விட்டு விடுவீர்களானால்.... 128மார்டின் லூத்தரைப் போல. அவர் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசினார். அவர் தன்னுடைய நாள் குறிப்பு புத்தகத்தில் (diary), “நான் அந்நிய பாஷையில் பேசினேன். ஆனால் அதை நான் என் ஜனங்களுக்குப் போதித்தால், அவர்கள் வரத்தைக் கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரத்தை நாடிக் கொண்டிருப்பார்கள்” என்று எழுதி வைத்தார். அவர் கூறினது உண்மை , பாருங்கள், அவர்கள் வரத்தை கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரங்களை நாடுவார்கள். அதை தான் ஜனங்கள் பெற்றுக் கொள்கின்றனர், அவர்களை அந்நிய பாஷையில் பேச அனுமதிக்கும் போது, அவர்கள் பெருமை கொள்கின்றனர். அது தேவனால் உண்டாகாமல் போனால்... அது ஒன்றுமில்லாமல் போய் விடும். ஆனால் நாம்... நவீன சபைகள் அதை தலைகீழாக செய்து விடுகின்றன, நாமோ அவ்விதம் செய்வதில்லை. அது தேவனுடைய வரம் என்றும், அது தேவனுடைய ஆவியால் அங்கு அளிக்கப்படக் கூடும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். சகோ. ராய், அப்படித் தானே? அது உண்மை . ஆம், ஐயா. அதை சபையில் வையுங்கள்! அதுசபைக்கு உரிமையானது. அந்நிய பாஷையில் பேசும் வரம் தேவனுடைய சபைக்கு உரிமையான ஒன்று. இப்பொழுது, அவருடைய கேள்வி என்னவென்று பார்ப்போம். அது என்ன கூறுகிறதென்றால்: எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்... அது சரி... அதுவும் முன்று பேர் மட்டில் என்று நினைக்கிறேன். 129அது சரி, பாருங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு மேல் அனுமதித்தால் ... உதாரணமாக, நீங்கள் கூட்டம் ஒன்றை நடத்துகிறீர்கள் என்றும், நாமெல்லாரும் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். இவரை அந்நிய பாஷையில் பேசவிட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேசவிடுவதனால் என்ன பயன்? நாமெல்லாரும் மிகுந்த குழப்பமடைந்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்என்பதை அறியாமல் இருப்போம். பாருங்கள்? மூன்று பேர். மட்டில்... உதாரணமாக, ஹாலின் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார்.... அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் அந்நிய பாஷைக்கு நீங்களே அர்த்தம் உரைக்கலாம், இல்லையென்றால் அதற்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்கலாம். இப்பொழுது நீங்கள்.... “அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்” (1 கொரி. 14:13). அவன் தான் பேசின அந்நிய பாஷைக்கே அர்த்தம் உரைப்பதென்பது, வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைப்பது எவ்வளவு முறையோ, அவ்வளவு முறையானது. ஆனால், அந்நிய பாஷையில் பேசுவதற்கு முன்பு, அங்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருந்தாக வேண்டும். அந்நிய பாஷையில் பேசுகின்ற சிலர் அங்கு இருந்து அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதற்கு நீங்களே அர்த்தம் உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். 130நீங்கள் பெருமைக்காக அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் பக்திவிருத்திக்காகவே இதை செய்கிறீர்கள், பாருங்கள். பெருமைக்காக செய்யாதீர்கள். தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்கும் ஏதுவாக அப்படிச் செய்யுங்கள். பாருங்கள், இவையனைத்தும் ஒரு பெரிய நோக்கத்துக்காக, சகோதரனே. இந்த வரங்கள் தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்காகவும், ஜனங்களை தேவனிடத்தில் கொண்டு வருவதற்காவும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவுமே. அவர் மரித்துப் போன தேவன் அல்ல, அவர் ஜீவனுள்ள . தேவனாய் நமது மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். பாருங்கள்? அதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம், ஏனெனில் உண்மையான வரங்கள் கிரியை செய்வதைக் காண்பதை பிசாசு வெறுக்கிறான். வரங்கள் பலவீனமானவை, எனவே இந்த வரங்களை அவன் உபயோகித்து அவனால் கிரியை செய்ய முடியும். என்னே, ஓ.என்னே. இவை ஒவ்வொன்றையும் அவனால் உண்மையில் பாவனை செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் ..... 131இப்பொழுது பாருங்கள், தீர்க்கதரிசன வரம் பெற்றுள்ள ஒருவருக்கும். ஒரு தீர்க்கதரிசிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் அளிக்கப்படுவதற்கு முன்பு ... தீர்க்க தரிசன வரம் பெற்ற ஒருவர் என்ன கூறினார் என்பதை சபைக்கு அறிவித்து, இரண்டு அல்லது மூன்று பேர் அதை பகுத்தறிந்து, அது உண்மை என்பதை ஆமோதிக்க வேண்டும். ஆனால் தீர்க்கதரிசிக்கு அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? தீர்க்கதரிசி என்பது ஒரு உத்தியோகம். தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம். ஒரு தீர்க்கதரிசி பிறப்பின் போதே தீர்க்கதரிசியாகப் பிறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறான், சகோதரனே. அது தான் தீர்க்கதரிசி. ஆனால் தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம், பாருங்கள். ஒன்று தேவனால் அளிக்கப்பட்ட உத்தியோகம். மற்றது தேவனால் அளிக்கப்பட்ட வரம். பாருங்கள்? அது தான் வித்தியாசம். 132இப்பொழுது, செய்திகள் இவ்விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக, சகோ. ஜூனி இன்றிரவு அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அர்த்தம் உரைப்பவர் என்று நமக்குத் தெரியும். சகோ. நெவிலும் அர்த்தம் உரைப்பவர் , பாருங்கள், பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பவர். நல்லது. அது நமக்குத் தெரியும். இன்றிரவு இங்கு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஓ, தேவ ஆவியானவர் பேசுவதற்கு துடி துடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னே! நாம். இதை நாம் பெற்றிருக்கிறோம்... சபை ஆராதனை இன்னும் சில நிமிடங்களில் துவங்கப் போகின்றது. பாருங்கள், அது துவங்குவதற்கு முன்பாக நாம் கூடியிருக்கிறோம். இங்கு நாம் கடைபிடிக்கும் ஒழுங்கின் பிரகாரமாகவே இதை வரிசைப்படுத்தி கூறிக் கொண்டிருக்கிறேன். - நல்லது. முதலாவதாக என்ன தெரியுமா, சகோ. ரட்டல் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள்? ஜூனி குதித்தெழுந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்ன காரியம் நடக்கப் போகிறது” என்கிறார், அல்லது இங்குள்ள யாராகிலும் ஒருவரைக் குறித்து சொல்லுகிறார். அப்பொழுது பதிவாளர்கள், என்ன கூறப்பட்டதோ அதை எழுதிக் கொள்கின்றனர்; உ - ஊ , இதை வேகமாக பார்ப்போம்.... அவர் என்ன சொன்னார் என்பதை.சரி, அது மறுக்கப்பட்டால், அதை விட்டு விடுங்கள், பாருங்கள், அதை கிழித்துப் போட்டு விடுங்கள். ஆனால் அது மறுக்கப்படவில்லை என்றால், அதை இரண்டு பேர் அங்கீகரிக்கின்றனர். அதன் பிறகு அது இங்கு எழுதப்படுகின்றது. அந்த இரண்டு பேர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். பாருங்கள்? அது - அது - அது உங்கள் சபைக்கு. அது ... உங்கள் நன்மைக்காகவே இதை எல்லாம் உங்களிடம் கூறுகிறேன், பாருங்கள், அவர்கள் அவ்விதம் தொடக்கத்திலே செய்தார்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. - 133முதலாவதாக என்ன தெரியுமா, ஹாலின் குதித்தெழுந்து அந்நிய பாஷையில் பேசுகிறார். அர்த்தம் உரைக்கிறவர் முன்பு கூறின அதே செய்தியை கூறலாம். பாருங்கள். அது அதே செய்தியாக இருக்கக் கூடும், நடக்கப் போகிற ஒரு குறிப்பிட்ட காரியம், ஒரு தீர்க்கதரிசனம், பாருங்கள். நடக்கவிருக்கும் ஏதோ ஒரு சம்பவம், அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று. பின்னால் உள்ள சகோ. ராபர்ஸன் குதித்தெழுகிறார். அவரும் அந்நிய பாஷையில் பேசுகிறார். சரி, அதுவும் முன்பு மற்றவரால் அளிக்கப்பட்ட அதே செய்தியாக இருக்கக் கூடும், அதற்கு அதே அர்த்தம் உரைக்கப்படக்கூடும். அல்லது இவை மூன்று வெவ்வேறு செய்திகளாக இருக்கலாம். இப்பொழுது, தேவன் ஒரே இரவில் ஐம்பது செய்திகளை அளிக்கமாட்டார். அது நமக்குத் தெரியும், ஏனெனில் அதை நம்மால் கிரகித்துக் கொள்ள முடியாது. பாருங்கள்? ஆனால் சபையை ஏதாகிலும் துன்புறுத்திக் கொண்டிருந்தால், உதாரணமாக.... அல்லது அது எதாகிலும் ஒன்றைச் செய்து கொண்டிருந்தால், அது சபை சீர்பொருந்துவதற்காகவே, பாருங்கள்? அதற்கு மேல் நான் அந்நிய பாஷையில் பேசுவதை அனுமதிக்க மாட்டேன் , பாருங்கள். ஏனெனில் மூன்று பேர் மட்டில் என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? 134மூன்று பேர் மட்டில். அதன் பிறகு நான், “அவைகளை எழுதி பிரசங்க பீடத்தின் மேல் வைத்து விடுங்கள்' என்பேன். பாருங்கள்? பிறகு அடுத்த நாள் இரவு நாம் மறுபடியும் கூடுகிறோம். இன்றைக்கும் நாளை இரவுக்கும் இடையே ஏதாகிலும் ஒன்று நடக்க விருந்தால் தேவன் அச்செய்திகளில் ஒன்றில் அதை கூறியிருப்பார். நான் கூறுவது விளங்குகிறதா? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். இப்பொழுது நான் நினைக்கிறேன். வெப்ஸ்டர் என்ன கூறுகிறார் என்றால், தீர்க்கதாசினமானது...வரப்போவதை முன்னுரைக்காத செய்தி தீர்க்கதரிசனம் என்று அழைக்கப்படலாமா? இல்லை, அது தீர்க்கதரிசனமாக, தீர்க்கதரிசனம் உரைத்தலாக இருக்குமானால், அது வரப்போவதை அறிவிக்க வேண்டும். அது உண்மை . 135சரி. நான் நினைக்கிறேன். இதுவே கேள்வியின் கடைசி பாகம் என்று நினைக்கிறேன். நாம் அடுத்த கேள்விக்குச் செல்வோம். சகோதரன் பிரான்ஹாமே, இவைகளில் ஏதாவதொன்று... இது தட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது, இது அழிந்து போயிருக்கிறது.... சகோ. பிரான்ஹாமே, இக்கேள்விகளில் ஏதாவதொன்றுக்கு பதில் சொல்லவோ அல்லது விளக்கம் கூறவோ உங்களுக்கு ஏவுதல் இல்லாமல் போனால், அதை ஒருபுறம் தள்ளி வைத்து விடுங்கள். நான் தவறாக நினைக்கவே மாட்டேன். வேதத்தின்படி, ஒரு டீகனின் முழு வேலை என்ன? நல்லது, அவர்கள் அதை அங்கு வைத்திருக்கின்றனர். அது. இக்கேள்வியைக் கேட்டது நமது சபையின் டீகன்மார்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும். கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு என்னவென்பதை அங்கு எழுதி வைத்திருக்கின்றனர். அதில் இன்னும் நில நகல்களை எடுத்து, நமது டீகன்மார்கள் ஒவ்வொருவருக்கும் அதை கொடுக்க வேண்டும் - நம்மிடம் வேறு பிரதிகள் இல்லையென்றால், ஜீன், நாம் ஒரு நகல் எடுக்க முடியுமா என்று வியக்கிறேன் .... அல்லது நீங்கள், அல்லது சகோ. லியோ யாராகிலும் ஒருவர். ஏழு அல்லது எட்டு நகல்கள் எடுத்து அவைகளை நமது டீகன்மார்களுக்குக் கொடுங்கள். வேதத்தின்படி, ஒரு மகன் என்ன செய்ய வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது. 136ஒழுங்குக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனம் உரைத்தல், அல்லது அந்நிய பாஷையில் செய்தி அளித்தல் இருக்குமானால், அதை நாம் எவ்விதம் திருத்த வேண்டும்? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, பாருங்கள். இதைக்கேட்ட மகனே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பராக, ஏனெனில் இது ஒரு நல்ல கேள்வி. அதை நீங்கள் ரப்பர்கையுறையைக் கொண்டு கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஒரு ... இங்குள்ள நமது சபைக்கு யாராகிலும் ஒருவர் வந்து ஒழுங்கின்படி இல்லாத அந்நியபாஷையில் ஒரு செய்தியையோ அல்லது தீர்க்கதரிசனமோ உரைப்பாரானால், அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள். அவர்கள் ஒழுங்கில் இல்லை என்று அவர்களுக்குத் தெரிகிறது, அது ... ஆராதனையை பாழாக்கி விடக் கூடும். பாருங்கள்? அவ்விதம் அது பாழாக்குகிறதென்றால், டீகன்மார்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம், அமைதலாயிருப்பதே. பாருங்கள். ஏனெனில் மேடையின் மேலுள்ள தீர்க்கதரிசி தான் உண்மையில்... நீங்கள் அவருக்குப் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் அவருக்கு போலிஸ்காரர்கள், நீங்கள் சுற்றிலும் காவலராய் இருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அது யாராகிலும் நம்முடைய ... அது யாராகிலும் நம்முடைய சபையைச் சேர்ந்தவர்களாயிருந்தால், அந்த நபர் இதைக் குறித்து பயிற்சி பெறாதவர், பாருங்கள், அவர்கள் பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். நமது ஜனங்களுக்கு எவ்விதம் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று நமக்குத் தெரியும். ஆனால் அது நமது சபையில் இல்லாத ஒருவராக இருக்குமானால், அந்த நபர் எவ்விதம் பயிற்சி பெற்றிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது. 137உதாரணமாக... கலிபோர்னியாவிலுள்ள கோஸ்டா மீஸா என்னுமிடத்தில் நடந்த சம்பவம். பில்லிக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் பீட அழைப்பு கொடுக்க ஆயத்தமான போது, ஒரு ஸ்திரீ குதித்தெழுந்து, உட்பாதையில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷையில் பேசி, பீட அழைப்பை சுக்குநூறாக கிழித்தெறிந்தாள். நான் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. ஆவியானவர் துக்கமடைந்ததை நீங்கள் அங்கு காணலாம். ஒழுங்கின்படி ஒன்று இருக்குமானால், அது தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தாது. பாருங்கள்? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) … அவள் தொடங்க ஆயத்தமாவதற்கு முன்பே அவள் தன்னை எவ்விதம் ஆயத்தப்படுத்திக் கொண்டாள்! ஏனெனில் அவளை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஒழுங்கின்படி இல்லாத ஒன்றைக் காணும் போது, எந்த ஊழியக்காரனும் அவ்விதமே செய்வார். அந்த ஸ்திரீ புறப்பட்டுச் சென்று பில்லியிடம் கூறினாளாம், அன்றிரவு நாங்கள் திரும்பி வரும் போது பில்லி என்னிடம், “அப்பா, பீட அழைப்பை இரண்டு இரவுகள் தடை செய்த அந்த ஸ்திரீ உங்களுக்கு ஞாபகமுள்ளதா?” என்று கேட்டான். நான், “ஆம்” என்றேன். அவன், “அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் 'தேவனுக்கு மகிமை, பில்லி, இன்றிவு என்னிடம் வேறொரு செய்தி உண்டு' என்றாள்” என்றான். நல்லது, பாருங்கள், அவளை கூட்டத்தினரின் மத்தியில் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். அங்கு டானி மார்டன் சுகமடைந்ததைக் குறித்துதான் 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிக்கை 'டானி மார்டினுக்கு நடந்த அற்புதம் என்னும் தலைப்பில் வெளியிட்டது. எனவே அந்த ஸ்திரீயை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன், பீட அழைப்பைக் கொடுக்க நான் தொடங்கின் போது, அவள்... அவள் சரியான பயிற்சி பெறவில்லை; அவள் நல்லவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் சுற்றுமுற்றும் பார்த்து, தலைமயிரை ஒதுக்கிக் கொண்டாள். அவள் கலைமயிரை கத்தரித்துக் கொண்டிருந்தாள். அப்படியானால் அவள் அதை அனுமதிக்கும் அசெம்பிளீஸ் சபையையோ அல்லது வேறெதாவது சபையையோ சேர்ந்திருக்க வேண்டும். அவள் தலைமயிரை மேலே கட்டிக் கொண்டு, காலுறையை இழுத்து விட்டுக் கொண்டு ஆயத்தமானாள். நான் பீட அழைப்பைக் கொடுக்கத் துவங்கின நேரத்தில் ... நான், “இங்குள்ள எத்தனை பேர் முன்னால் வந்து உங்கள் இருதயங்களை கர்த்தராகிய இயேசுவுக்கு அளிக்க விரும்புகிறீர்கள்?” என்றேன். 138அவள் குதித்தெழுந்தாள். நான், “உட்காரு” என்றேன். அவள் மறுபடியும் செய்யத் தொடங்கினாள். நான், “உட்காரு” என்றேன். பாருங்கள்? என்னே, எல்லோருமே ... நான் அமைதியாக நின்றேன். அவள் நான் சொன்னதைக் கேளாதது போல் மறுபடியும் எழும்பினாள். நான் மறுபடியும் கூச்சலிட்டேன். இந்த முறை அவளுக்கு கேட்டது. ஏனெனில் அங்கிருந்த பெரிய ஒலிபெருக்கியின் மூலம் நான் போட்ட சத்தம் கட்டிடத்தையே குலுக்கியிருக்கும். அவள் உட்கார்ந்து கொண்டாள். நான் தொடர்ந்து, “நான் கூறின் வண்ணமாக, எத்தனை பேர் பீடத் தண்டையில் வந்து உங்கள் இருதயங்களை தேவனுக்கு அளிக்க விரும்பிகிறீர்கள்?' என்றேன். நான் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினேன். பாருங்கள். அன்றிரவு நான் வண்டியில் புறப்பட ஆயத்தமான போது, ஒரு கூட்டம் ஸ்திரீகள் என்னைச் சூழ்ந்து கொண்டு, கோழிக்குஞ்சுகளின் கூட்டம் சத்தமிடுவதைப் போல், “நீங்கள் பரிசுத்த ஆவியை நிந்தித்து விட்டீர்கள்” என்றனர். - நான், “நானா? வேதம் கூறியுள்ள ஒழுங்கை நான் பின்பற்றும் போது, நான் எப்படி பரிசுத்த ஆவியை நிந்திக்க முடியும்?” என்று கேட்டேன். பாருங்கள்? இந்த ஸ்திரீ, “நான் தேவனிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைப் பெற்றிருந்தேன்” என்றாள். நான், “ஆனால், அதை தவறான நேரத்தில் கொடுத்தீர்கள், சகோதரியே” என்றேன். “அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல என்றா கூறுகிறீர்கள்?” என்றாள். நான், “என்னால் சொல்ல முடியாது. அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். உன் நன்மைக்காக இதை சொல்லுகிறேன். அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். நீ ஒரு நல்ல பெண்மணி என்று நம்புகிறேன், ஆனால் நீ ஒழுங்கைத் தவறி விட்டாய்” என்றேன். அவளுடைய மேய்ப்பர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் அவளுடைய மேய்ப்பர் தான் என்று எனக்குத் தெரியவந்தது. நான் சொன்னேன். நான், “ஒன்றுமட்டும் என்னால் கூற முடியும். நீ மாம்சத்தில் அதை செய்தாய், அல்லது வேதத்தைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத ஒரு மேய்ப்பர் உனக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவர் எங்களிடம் வந்து, சிறிது நேரம் வேதத்தைக் குறித்து பேசினால் நலமாயிருக்கும். நீ செய்தது தவறு. நீ ஒழுங்கை மீறி விட்டாய். நேற்றுக்கு முந்தின இரவும், நேற்று இரவும் நீ அநேக ஆத்துமாக்களை இழந்து விட்டாய், இன்றிரவும் நீ அதையே செய்திருப்பாய்' என்றேன். அவளுடைய மேய்ப்பர் என்னிடம், “நீங்கள் கூறுவதை என்னால் ஆமோதிக்க முடியவில்லை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றார். “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், “நீங்கள் முடித்து விட்டீர்கள். எனவே அவளுக்கு செய்தி அளிக்க உரிமையுண்டு' என்றார். நான், “நான் மேடையின் மேல் இருந்தேன். தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்க வேண்டும். நான் மேடையின் மேல் அப்பொழுது இருந்தேனே” என்றேன். “ அவர், ”நல்லது...' என்றார். நான், “எனக்கு இன்னும் செய்தி இருந்தது. நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தேன், அவர்களை மண்ணைக் கூட்டுவது போல் கூட்ட. நான் வலையை வீசி, அதை இழுத்துக் கொண்டிருந்தேன். அதை தடுக்க நீங்கள் எந்த தடுக்கலையும் போடக் கூடாது. நான் வலையை இழுத்துக் கொண்டிருந்தேன். அவளோ ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வருவதில் தலையிட்டுக் கெடுத்து விட்டாள். பாவிகள் வருவதற்கு அழைப்பு விடுக்காமல் போனால், பிரசங்கிப்பதனால் என்ன பயன்?” என்றேன். அவர், “நல்லது. அவள் செய்தி உங்கள் செய்திக்குப் பிறகு அளிக்கப்பட்டது. அது மேடைக்குப் புறம்பே அளிக்கப்பட்ட செய்தி... அது நேரடியாக தேவனிடமிருந்து வந்த செய்தி” என்றார். நான் பவுல் உரைத்ததை மேற்கோள் காட்டி, “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் கூறுவது கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை'. இல்லை, ஐயா. எதையும் புதிதாக நுழைக்கக் கூடாது! அவர்... இயேசு, 'நானே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்' என்று சொல்லியிருக்கிறார். பவுல், 'இங்கு கூறப்பட்டுள்ளதைத் தவிர, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் வேறெதாவது கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று சொல்லியிருக்கிறான். மிஸ்டர், நீங்கள் வரிசையிலிருந்து நிச்சயமாக விலகியிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட சபை உள்ளது? அது குழப்பமாகத் தான் இருக்கும் என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஜனங்கள் இதைச் செய்ய நீங்கள் அனுமதித்தால், உங்கள் பீட அழைப்பை நீங்ள் எவ்விதம் கொடுப்பீர்கள்? அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஊழியம் உண்டு, ஆனால் உங்களுடைய ஊழியத்துக்கு ஒரு நேரம் உண்டு” என்றேன். 139எனவே அது உண்மை. அந்நிய பாஷையில் பேசும் நமது சகோதரர்களாலோ அல்லது சகோதரிகளாலோ இப்படிப்பட்ட ஒன்று நமது சபையில் நேர்ந்தால், ஆராதனை முடிந்த பின்பு டீகன்மார்கள் அல்லது நிர்வாகக் குழு அவர்களைச் சந்தித்து, “ஒரு சில நிமிடங்களுக்கு, ஒலிநாடாவைப் போட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறவேண்டும். பாருங்கள்? நீங்கள் அதை.. அல்லது போதகர்... “போதகர் உங்களிடம் பேச விரும்புகிறார். எனவே படிக்கும் அறையில் எங்களைச் சில நிமிடங்கள் சந்திப்பீர்களா, சகோதரனே?” என்று கூறுங்கள். அங்கு சென்று அவரிடம் நல்ல விதமாகப் பேசுங்கள். பாருங்கள்? அவரிடம் எடுத்துக் கூறுங்கள்... ஆனால் எல்லோருமே ஒழுங்கை மீறி உங்கள் போதகரை தொந்தரவு செய்வார்களானால், அப்பொழுது மூப்பர்களாகிய நீங்கள் அவர்களிடம் நடந்து சென்று, “ஒரு நிமிடம்” என்று சொல்ல வேண்டும். அவர்களை நிறுத்தக் கூறும்படி போதகர் உங்களுக்கு சைகை காட்டினால், அது என்ன ஆவியென்பதை அவர் கிரகித்துக் கொண்டார். அதாவது அவர்கள் கூட்டத்தின் ஆவியை முறிக்கிறார்கள் என்று, பாருங்கள். 140போதகர் பிரசங்கத்தை நிறுத்தி விட்டு, பயபக்தியுடன் தலைகுனிவாரானால், அப்பொழுது ஒன்றும் சொல்லாதீர்கள். பாருங்கள்? ஒன்றும் சொல்லாதீர்கள். உங்கள் போதகர் அவ்விதம் செய்ய விட்டு விடுங்கள். உங்கள் போதகரை கவனித்துக் கொண்டேயிருங்கள். அவர் உங்களுக்கு இப்படி சைகை காட்டி அதை நிறுத்தச் சொன்னால், அப்பொழுது கிறிஸ்தவ அன்புடன் நடந்து சென்று, “என் சகோதரனே, என் சகோதரியே , அது யாராயிருந்தாலும், ”நீங்கள் ஒழுங்கை மீறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிக்கு தொந்தரவு விளைவிக்கிறீர்கள். அவர் தேவனிடமிருந்து செய்தியைப் பெற்றிருக்கிறார். அவர் செய்தியை பிரசங்கித்து முடித்த பின்பு, சிறிது நேரம் கழித்து அதைக்குறித்து நாம் பார்ப்போம்“ என்று கூறுங்கள். பாருங்கள், அது அவருக்கு தொந்தரவு விளைவிக்குமானால், ஆனால் யாராகிலும் பேசும் போது, போதகர் மரியாதையுடன் பிரசங்கத்தை நிறுத்தி ஒரு நிமிடம் காத்திருந்தால், அப்பொழுது அவர் ... ஒருவேளை அவர் உடனடியாக தொடங்கிவிடலாம். எனவே நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த சம்பவங்களில் தொண்ணூறு சதவிகிதம், அர்த்தம் உரைத்தல் போன்றவை, வேத வசனங்களையே எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும். அது இரு சாராரிடையேயும் ஒருக்கால் மாம்சமாக இருக்கக்கூடும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? சரி. - 141அர்த்தம் உரைத்தல் இல்லாமல், ஒருவருக்கும் அதிகமானவர்கள் அந்நிய பாஷைகளில் செய்தியைப் பேச அனுமதி உண்டா? கிடையாது. அவை ஒன்றன் பின் ஒன்றாக வர வேண்டும். பாருங்கள்? ஒருவர் அந்நிய பாஷையில் பேசி அதன் பிறகு அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். பாருங்கள்? அதன் பிறகு வேறொருவர் அந்நிய பாஷையில் பேசினால், அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். நீங்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அர்த்தம் உரைப்பவருக்கு என்ன செய்வதென்று தெரியாது, ஏனெனில் இரண்டு அல்லது மூன்று செய்திகள் ஒரேயடியாக அவர் மேல் மோதும் போது, அவருக்கு அது குழப்பமாக இருக்கும். தேவன் குழப்பத்துக்கு காரணம் அல்ல, பாருங்கள். எனவே ஒருவர் அந்நிய பாஷையில் பேசட்டும், அதற்கு வேறொருவர் அர்த்தம் உரைக்கட்டும். பாருங்கள்? அதன் பிறகு... மூன்று செய்திகளை அளியுங்கள். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உரைக்கப்படட்டும். 142அப்பொழுது நமக்கு ... உதாரணமாக சகோ. ரட்டல் அந்நிய பாஷையில் பேசி அதற்கு சகோ. நெவில் அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சகோ. ஃபிரட் அப்பொழுது அமைதியாக இருப்பார். அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலாவதாக, இது தேவனால் உண்டானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சரி. இப்பொழுது, சகோ. ரட்டல், சகோ. பீலர், சகோ. நெவில் ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போனால், அர்த்தம் உரைப்பவருக்கு வரிசையாக மூன்று செய்திகள் இருக்கும். அவருக்கு என்ன செய்வதென்று எப்படி தெரியும்? பாருங்கள்? அவரைத் தனியே விடுங்கள். செய்தியை அளித்த பிறகு அமைதியாயிருங்கள். சற்று காத்திருங்கள். அவருக்கு பக்கத்தில் உள்ளவருக்கு ஏதாவதொன்று வெளிப்பட்டால், அவர் அமைதியாயிருக்கட்டும். பாருங்கள்? முதலாவதாக பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்படட்டும். அவ்விதம் அர்த்தம் உரைக்கப்படும் போது, அதை எழுதிக் கொண்டு, பகுத்தறிபவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள், “நல்லது. அது தேவனால் உண்டானதுஎன்பார்களானால், ஒரு செய்தி அளிக்கப்பட்டு விட்டது. அதை கீழே வைத்து விடுங்கள். ஒரு நிமிடம் காத்திருங்கள். முதலாவதாக என்ன தெரியுமா, ஆவியானவர் அடுத்ததாக யார் மேல் அசைவாடுகிறாரோ, அவர் அந்நிய பாஷையில் பேசுவார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்ன கூறப் போகிறார் என்று அறிய அர்த்தம் உரைப்பவர் ஒரு நிமிடம் காத்திருப்பார். அதன் பிறகு அவர் அந்த செய்தியை உரைப்பார் , பாருங்கள். அதை எழுதி வைக்க வேண்டும், பாருங்கள்? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். 143சகோ. பிரான்ஹாமே, நீர் இந்த சபை காலத்துக்கு தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசுவைத் தொடர்ந்த அதே அடையாளங்கள் உம்மையும் தொடருவதை நாங்கள் காண்கிறோம். உம்மை நன்றாக அறிந்திருக்கும் சிலர் நீர் மேசியா என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. உமக்கும் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் என்ன வித்தியாசம் என்று விளக்கிக் கூறுவீர்களா? நல்லது, சகோதரரே, அது உண்மையென்று எனக்குத் தெரியும். பாருங்கள், ஆனால் சற்று பொறுங்கள். அதைக் குறித்து இங்கு ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள், அநேக சமயங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பாருங்கள்? ஆனால், இப்பொழுது. சில நேரம் அந்த நபரில் ... உங்களில் சிலர் என்னுடன் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்துக்கு வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்து கொண்டிருக்கும்போது, இதை கூற விரும்புகிறேன். உங்களுக்கு அந்த வசனம் கிடைக்கும் போது, அது லூக்கா 3ல் உள்ளது, அது... ஒருவேளை... அது... இதை நான்... நான் கதவை அடைக்கப் போவதில்லை, ஏனெனில் அங்கு யாரும் இல்லை. சகோதரரே, இதை நான் உங்களுக்கு கூறட்டும். இதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது எல்லாவிடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் உங்களிடம் இதைக் கூறுகிறேன், பாருங்கள், அது அவ்விதமாகத் தான் வர வேண்டும். அது அவ்விதமாக இல்லையென்றால், என் செய்திக்காக நான் மனஸ்தாபப்படுவேன். 144'கவனியுங்கள், சகோதரரே, இந்த விஷயத்தில் நீங்கள் அமைதியைக் கடைபிடிக்கும்படி, இயேசுவின் முன்னிலையில்உங்களுக்கு கட்டளையிடுகிறேன். ஆனால் நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை புரிந்து கொள்வீர்கள். பாருங்கள்? அவர் அந்த நதியில் முதலாவதாக என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுக்கு அது ஞாபகமுள்ளதல்லவா? “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி ... கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாயிருப்பது இந்த செய்தியே. அப்படித்தான் கர்த்தருடைய தூதன் உரைத்தார். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, “யோவான்ஸ்நானன் .... நீங்கள் எல்லோரும் அதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை புத்தகங்களில் வாசித்திருக்கிறீர்கள், அது நடந்த போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதை கேட்டதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அந்த தூதனே , ”கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, நீ இந்த செய்தியுடன் அனுப்பப்பட்டிருக்கிறாய், இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்“ என்னும் செய்தியை அறிவித்தார். இப்பொழுது, ”செய்தி“. 145இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்... வில்லி அங்கு அந்த நட்சத்திரத்தின் கீழ் என் பெயரை எழுதி வைத்திருக்கிறார், ஆகையால் தான் நான் அதை கடந்து வந்து விட்டேன், பாருங்கள், நான் நினைக்கவில்லை.... உங்களிடம் நான் முடிந்த வரை உத்தமமாயிருக்கப் போகிறேன், எனக்கும் அந்த செய்தியாளனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நான் எண்ணுகிறேன், பாருங்கள், அது சரி. நான் எண்ணுவது என்னவெனில், அவருடைய சபையில் ஒரு பாகத்தை வகித்து, அந்த முன்னோடி வரும் வரைக்கும் இந்த செய்தியை அளிக்க நான் அனுப்பப்பட்டிருக்கக் கூடும். நான் நம்புவது என்னவெனில், நான் என்னவாயிருக்கிறேனோ அவ்விதமாக இந்நாளுக்கான செய்தியை நான் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன், இதுவே இந்நாளுக்கான வெளிச்சம் என்று நான் நம்புகிறேன், இது வரப் போகிற அந்த நேரத்தைச் சுட்டிக் காட்டுகிறதென்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய தூதன் அங்கு “நீ கொண்டிருக்கும் அந்த செய்தி” என்று அறிவித்த செய்தி. இப்பொழுது, அங்கு எழுந்த அந்த நட்சத்திரத்தை நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரு .... 146இதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்... நான் நேரத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும், இங்கு மிகவும் அருமையான வேறு கேள்விகள் உள்ளன. இப்பொழுது பத்து மணிக்கு மேலாகி விட்டது. நீங்கள் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று அறிவேன். பாருங்கள். ஆனால் இதற்கு செவிகொடுங்கள். உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். எனக்கு சில நிமிடங்கள் தருவீர்களா? சரி, சரி, இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். சகோதரரே, இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் உங்களுக்கு நேராக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் என் மேய்ப்பர்... நீங்கள் என் மேய்ப்பர்களும் மற்றவர்களும், பாருங்கள். இதை நான் செய்தாக வேண்டும். நீங்கள் இந்த செய்தியில் என்னுடன் உழைக்கும் சகோதரர்கள். பாருங்கள்? 147இப்பொழுது, என்னைப் பொறுத்த வரையில், மனிதன் என்னும் வகையில், நான் உங்களைப் போன்றவன், உங்களை விட மோசமானவன். நான் - நான் - நான்... நீங்கள் அநேகர் கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். 'பாவிகளில் பிரதான பாவி நான்' என்று ஒரு சமயம் கூறப்பட்டது போல், நான் அவிசுவாசியாகவும் சந்தேகக்காரனாகவும் மிகவும் தாழ்ந்த வாழ்க்கை எனக்கிருந்தது என்றும் நினைக்கிறேன். ஆனால் பிள்ளை பருவம் முதற்கொண்டு, தேவன் ஒருவர் உண்டு என்றும், என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்தது என்றும் அறிந்திருந்தேன். அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லை, சகோதரனே. பாருங்கள்? ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். அதாவது செய்தி ஒன்று வரும், செய்தியாளன் ஒருவர் வருவார். அது ஒரு மனிதனாயிருக்குமானால், அது எனக்குப் பின் வருகிற ஒருவராக இருக்கும். பாருங்கள்? அது... ஆனால் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த செய்தியானது இந்நாளுக்கான உண்மையான செய்தி, இதுவே கடைசி செய்தி . நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று காண்கிறீர்களா, சகோதரர்களே? உங்கள் எல்லோரையும் என் நிலையிலேயே வைக்கிறேன். ஏனெனில் என்னைப் போலவே நீங்களும் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதே செய்தியின் செய்தியாளர்கள். 148இங்கே பாருங்கள், ஒரு படத்தை வரையப் போகிறேன். படத்தின் மூலம் இதை நன்றாக விளக்கலாம் என்று நினைக்கிறேன். சற்று இந்த கதவை நான் பாதி மூடப் போகிறேன். இது இயேசு, அது இயேசு. இங்கு கெத்சமனேயை வரைகிறேன். இது இங்கே அது அங்கே. உங்களால்... இதை நான் முன்பு சபைக்குக் கூறினதில்லை. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞானத்தை தேடிச் சென்ற மனிதரை எந்தவிதமான வெளிச்சம் (நட்சத்திரம்) நடத்திச் சென்றது? “உம்முடைய பரிபூரண ஒளியினிடத்தில் எங்களை வழி நடத்திச் செல்லும்” இங்கு வரைவதை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு உங்களிடம் ஒன்றைக்கூறப் போகிறேன். அதை நாம் உதறித் தள்ளி விடுவோம். அங்கு வில்லி செய்து வைத்தது சரியென்று கூறுவதை . அது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் சகோதரரே, அதை என்னால் கூற முடியாது. அப்படி கூறினால் நான் ஒரு பெருமைக்காரன். அப்படி செய்ய மாட்டேன். அதை நான் நம்பினாலும் அதைக் கூற மாட்டேன். பாருங்கள்? வேறு யாராகிலும் அவ்விதம் கூறினால், அது அவர்களைப் பொறுத்தது. - 149இங்கு, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்ட வண்ணமாக, நடந்த சில காரியங்களை பையன்கள் சாட்சி கூறலாமா என்று. கூட்டங்களில் நடந்த சிலவற்றை நான் பிரசங்க பீடத்திலிருந்து சாட்சி கூறுவது எனக்குப் பிடிக்காது. அதை மேலாளரோ அல்லது யாரோ செய்யட்டும். எனக்கு அவ்விதம் செய்ய பிடிக்கவில்லை. (ஒரு சகோதரன், “அவர்கள் யோவானிடம் வந்து, 'நீ கிறிஸ்துவா' என்று கேட்டனர்” என்கிறார் - ஆசி). ஆம், அது தான், நான் என்ன கூற முயல்கிறேன் என்றால் நீர் தான் அந்த தீர்க்கதரிசியா?“ அவன் அதை மறுத்தான். அவன் இவ்விரண்டில் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் 'நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்' என்றான் ]. ”வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்“, அவன் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டான். - [வேறொரு சகோதரன், “அவர்கள் அவனிடம் அவன் அந்த தீர்க்கதரிசியா என்று கேட்டபோது, அவன், 'இல்லை' என்றான் என்கிறார் - ஆசி]. ஆம், இப்பொழுது... அந்த தீர்க்கதரிசி மோசே முன்னுரைத்த அவரே. பாருங்கள், பாருங்கள்? ஆனால் அவன்யாரென்பதை அறிந்திருந்தான். அவன் அதைக் கூறினான். அவன் அவர்களிடம், ”நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்“ என்றான். அது அவன். அவன் யார் என்பதைக் கூறினான். பாருங்கள்? ஆனால் அவன் ஒரு... 150சொல்லுங்கள் ஒரு சகோதரன், “யோவானைத் தொடர்ந்து கிறிஸ்து வந்தபோது, அவர்கள் அவரிடம் வந்து... மேசியாவுக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று அவர் போதித்தார். அவர், 'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் என்றார்” என்கிறார் - ஆசி). அது அவன். அது உண்மை . அது உண்மை . யோவானும், “நான் ஒன்றுமற்றவன்! நான் ஒன்றுமற்றவன்! அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரன் அல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் இயேசு அவனைக் குறித்து என்ன கூறினார்? அவர், “யாரைக் காண வனாந்திரத்துக்குப் போனீர்கள்?” என்று கேட்டார். ஆம், ஆம். “காற்றினால் அசையும் நாணலையோ? அல்லது மெல்லிய வஸ்திரம் தரித்து ஆடம்பரமாயுள்ள மனுஷனையோ? அவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள். யாரைக் காணப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவன் உடன்படிக்கையின் தூதன். அப்படித் தான் அவன் இருந்தான். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவர், “ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் இதுவரையிலும் எவனும் இல்லை' என்றார். பாருங்கள்? அவ்விதமாகத்தான் அவன் இருந்தான், பாருங்கள், அவன் உடன் படிக்கையின் தூதனாயிருந்தான். இவன் தான் இயேசுவை, “இதுதான் அவர் என்று அறிமுகப்படுத்தினான். மற்றெல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து முன்னுரைத்தனர், ஆனால் யோவானோ, ”இதுதான் அவர் “ என்றான். பாருங்கள்? 151இப்பொழுது கவனியுங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். இதை ஒரு சிறிய விதத்தில் எடுத்துக் கொள்ளப்போகிறேன், பாருங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டார்கள். அந்த பாடலை, நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டுஅவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், வேதத்தில் படித்திருக்கிறீர்கள். மேற்கு திசையில் நடத்தி, இன்னும் போய்க் கொண்டிருக்கிறது அந்த பரிபூரண ஒளிக்கு எங்களை வழிநடத்தும் பாருங்கள், அந்த நட்சத்திரம் அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்திச் சென்றது, ஏனெனில் நட்சத்திரம் ஒளியைப் பிரதிபலிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அன்றொரு நாள் அதைக் குறித்த நாடகத்தை நாம் பார்த்தோம். அதைகாண அந்த ஞாயிற்றுக்கிழமை எத்தனை பேர் வந்திருந்தீர்கள்? பாருங்கள், அதைக் குறித்து இப்பொழுது தான் நாம் பிரசங்கித்து முடித்தோம். ஷெகினா மகிமை அந்த நட்சத்திரத்தில் பிரதிபலித்தது, நட்சத்திரம் அதைப் பிரதிபலிக்கிறது. அந்த நாடகத்தில் கர்த்தருடைய தூதன் இந்த மேடையின் மேல் நின்று கொண்டு ஷெகினா மகிமையிலிருந்து. பிரதிபலித்துக் கொண்டிருந்தார். அதே காரியம் தான். அது முற்றிலும் உண்மை. அந்த உண்மையானதை இங்கு பார்த்து, அதை அங்கு பார்க்கும்போது, அது பக்கத்தில் இப்படி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பாருங்கள்? 152இப்பொழுது இதைக் கவனியுங்கள். அந்த நட்சத்திரம் கிழக்கில் எழும்பினது. அது சரியா? அது ஒரு பெரிய நட்சத்திரம். சரி. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்த நேரத்தில் பூமியில் நட்சத்திரமாக விளங்கினது யார்? யோவான். அவன் தான் அவர்களை அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்தினான். அது சரியா? இயேசு கிறிஸ்துவின் முதலாம் தோற்றத்தின் போது அந்த நட்சத்திரம் கிழக்கில் தோன்றினது. இப்பொழுது அநேக சிறு நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் ஓடிச் சென்று, இறுதியாக சாயங்கால நட்சத்திரத்தில் முடிவடைகிறது. சாயங்கால நட்சத்திரம் சாயங்காலத்தில் பிரகாசிக்கிறது. காலை நட்சத்திரம் காலையில் பிரகாசிக்கிறது. இவ்விரண்டும் ஒரே அளவுள்ளதாகவும், ஒரே விதமான நட்சத்திரங்களாகவும் இருக்கின்றன. இரண்டையும் இரண்டையும் ஒன்று சேருங்கள், அப்பொழுது அது என்னவென்று அறிந்து கொள்வீர்கள், பாருங்கள். எனவே நட்சத்திரம் மேசியா அல்ல, அவர் மேசியாவைப் பிரதிபலிக்கிறார். 153இப்பொழுது நட்சத்திரம் தன் சொந்த ஒளியைக் கொடுப்பதில்லை. அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதுசரியா? (ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார் - ஆசி] ஹ? (“ஒரு விதத்தில் சந்திரன் அவ்விதம் செய்கிறது. நட்சத்திரங்கள் தங்கள் சொந்த ஒளியைக் கொடுக்கின்றனர். ஆம், சந்திரன் .... ஆம், உண்மையில் சந்திரன் ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆம், ஒரு நட்சத்திரம் தன் ஒளியைப் பிரதிபலிக்குமானால், அதன் ஒளி... தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஏனெனில் - அது ஒருவிதமான பனிக்கட்டி. இல்லையா? (அந்த சகோதரன் ”சூரியன்“ என்கிறார் - ஆசி). ஹ? அந்த சூரியனிலிருந்து தோன்றின ஒரு சூரியன். ('அந்த சூரியன்கள் நமது சூரியனைவிட தூரத்தில் இருக்கின்றன”]. ஆம். அவைகள் .... அந்த சூரியன்கள் பெரிய சூரியனிலிருந்து தோன்றினதாக நமக்கு கூறப்பட்டுள்ளது. சூரியன் இந்த கணைகளை அதனிடத்திலிருந்து வெளியே எறிந்தது. அவைகள் சூரியனைப் போல் எரிந்து கொண்டிருக்கும் சிறு கணைகள். எனவே அவைகள் நமக்கு சிறு சூரியன்கள். அது சரியா? சிறு ஒளிகள். (“சில... அவைகள் பெரும்பாலும் நமது சூரியனைக் காட்டிலும் பெரியவை) நமக்கு, நமக்கு, பாருங்கள். நாம் நம்மைக் குறித்து இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். சரி. 154இப்பொழுது, அவைகள் நமக்கு சூரியன்களாக, அல்லது ஒளியைக் கொடுப்பவைகளாக இருந்தால், அவை முக்கியமான ஒளியைக் கொடுக்கும் சூரியனின் பாகங்கள். பாருங்கள்? பெரிய சூரியன் நமக்கு பெரிய ஒளியை கொடுக்கிறது - பரி பூரண ஒளியை. சிறிய சூரியன்கள், அல்லது சிறிய நட்சத்திரங்கள் - நாம் கும்பலாகக் காண்பவை - பிரகாசிக்கும் சூரியனை விட அதிக தூரத்தில் இருக்கலாம். அவை நமக்கு கொடுப்பவை சூரியனை விட குறைந்த ஒளியையே. ஆனால் அவை ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. அது சரியா? பெரிய சூரியன் உதயமாகும் போது, சிறிய சூரியன்கள் மறைந்து விடுகின்றன. அது சரியா? அவை நமக்கு சூரியன் அல்ல, அவை சூரியனைப் போல் ஒளி தருபவை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது அவைகளில் மிகப் பெரியது (காலையில்) சூரியன் வருகையை அறிவிப்பது, சூரியன் அஸ்தமிப்பதை அறிவிப்பது விடி வெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமுமே. அது சரியா? இரண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள் - கிழக்கு நட்சத்திரமும் மேற்கு நட்சத்திரமும். 155இப்பொழுது அது எங்குள்ளதென்று பார்த்தீர்களா? எலியா கிழக்கு நட்சத்திரம் வரப்போவதை அறிவிக்கும் செய்தியாளனாக இருந்தான். அவன் மேற்கு நட்சத்திரத்தை அறிவிப்பவனாக இருப்பான் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது - அதாவது இந்த நாள் கடந்து சென்ற பிறகு, வரப்போகும் புதிய நாளை. அது என்னவென்று இப்பொழுது கண்டு கொண்டீர்களா?' கிழக்கு, “வெளிச்சம் உண்டாகும். பாருங்கள், சூரியன் இப்பூமிக்கு வருவதற்கு சற்று முன்பு, ”சூரியன் வரப்போகிறது“ என்பதை விடிவெள்ளி நட்சத்திரம் சாட்சி கூறினது. அது சரியா? பாருங்கள், அது விடிவெள்ளி நட்சத்திரத்தைத் தோன்றச் செய்தது. நல்லது. அப்படியானால் விடிவெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமும் ஒரேவிதமான நட்சத்திரங்களே. இதைத் தவிர சிறு நட்சத்திரங்கள் எங்கும் பரவியுள்ளன. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? செய்தியாளர்கள். 156நல்லது. அப்படியானால், அவர் அல்பாவும் ஓமெகாவுமாக, ஆதியும் அந்தமுமாக, வச்சிரக்கல்லும் பதுமராகமுமாக காணப்பட வேண்டியவராயிருக்கிறார். நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? இப்பொழுது கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், சரித்திரம் மறுபடியும் நிகழ வேண்டுமானால், இந்தக் கடைசி நாளில் எலியா பிரசங்கிக்க வேண்டிய செய்தியானது. விடிவெள்ளி நட்சத்திரம் அவருடைய வருகையை அங்கு அறிவித்தது போல, சாயங்கால நட்சத்திரம் வரப்போகும் ஒரு புதிய நாளை, வேறொரு நாளை அறிவிப்பதாய் உள்ளது. இது வரப் போகும் சூரியனை - நாம் பெற்றிருந்த சூரியன் போய் விட்டு, ஒரு புது சூரியன், ஒரு புது காலம், ஒரு புது நேரம் வரப்போகிறது என்பதை அறிவிக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். யோவான் தன் செய்தியை அளித்து கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான் என்றால், கடைசி நாட்களில் எலியா வருவான். தீர்க்கதரிசி உரைத்தது போல், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” 157சாயங்கால வெளிச்சம், நாம் பெற்றுள்ள மிகப் பெரிய சாயங்கால வெளிச்சம் சாயங்கால நட்சத்திரமே. அப்படியானால் இந்த மற்ற நட்சத்திரத்தைப் போலவே இதுவும் அதேவிதமான செய்தியைக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அதாவது, அது சூரியனைக் குறித்துப் பேசி, சூரியனை அறிவிக்கிறது. நல்லது, இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. இந்தக் காலம்மறைந்து போகிறது. நான் கூறுவது விளங்குகிறதா? இந்தக் காலம் கடந்து போய், வேறொரு நாள் வருவதை அது அறிவிக்கிறது. 158ஏனெனில், பாருங்கள் அது உண்மையில் மேற்கிலுள்ள யாராகிலும் அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், அது கிழக்கில் இருக்கும். அப்படியானால் பாருங்கள்,கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். ஆனால் அவர்கள் உண்மையில் .... அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு அந்த நட்சத்திரத்தை மேற்கில் நோக்கிப் பார்த்தனர். அது சரியா? அந்த சாஸ்திரிகள் மேற்கில் ... கிழக்கில் இருந்து கொண்டு அந்த மேற்கு நட்சத்திரத்தைக் கண்டனர். நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் அது மேற்கே இருப்பவர்களுக்கு கிழக்கு நட்சத்திரமாக இருந்தது. பாருங்கள், நாம் கூறுவது போல... நான் அடிக்கடி “கீழ் பாகம் மேலே உள்ளது' என்று கூறுவதுண்டு. எது சரியென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நாம் நித்தியத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே தென் துருவம் மேலேயும் வட துருவம் கீழேயும் இருக்கக் கூடும். நமக்குத் தெரியாது. பாருங்கள். மேலே போகும் வழி கீழேயுள்ளது. பாருங்கள்? நாம். நாம் இதை விட்டுச் செல்கிறோம். அதன் பிறகு நாம் நித்தியத்திற்குள் பிர வேசிக்கிறோம். அது வரப்போகும் நித்தியத்தை, வேறொரு நாளை, வேறொரு காலத்தை அறிவிக்கிறதாயிருக்கிறது. இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். அப்படி இருப்பதாக நாம் நம்புகிறோம், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். சரி, அப்படியானால், சாயங்கால வெளிச்சம் ஒன்று இருக்க வேண்டும். அந்த சாயங்கால வெளிச்சம், மல்கியா 4ன்படி, “ பிள்ளைகளின் இருதயயத்தை பிதாக்களிடத்தில் திருப்ப வேண்டும்” - தொடக்கத்தில் இருந்த நிலைக்கு. 159அவன் முதன் முறையாக வந்த போது, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்தில் திருப்பினான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் பிள்ளைகளே. அவன் பிள்ளைகளின் ... பிதாக்களின் இருதயங்களை (அந்த பழைமையான , வைதீக, பிதாக்களின் இருதயங்களை) அவன் அங்கு அறிவித்துக் கொண்டிருந்த அந்த வெளிச்சத்துக்குத் திருப்பினான். அவன் மறுபடியும் வரும்போது, அவன் திசை திரும்பி, (நீங்கள் கவனித்தீர்களா, உலகம் அழிவதற்கு முன்பு, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு). ”பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்“ - சாயங்கால நட்சத்திரம், அக்காலத்தில் அது விடிவெள்ளி நட்சத்திரமாய் இருந்தது. ஆமென். 160அதை நான் சரியாக கூறினேன் என்று நம்புகிறேன், பாருங்கள். விடிவெள்ளி நட்சத்திரம் இப்பொழுது சாயங்கால நட்சத்திரமாயுள்ளது. ஏனெனில் அது அதே நட்சத்திரம். நாம் மேற்கு திசையிலிருந்து கொண்டு கிழக்கே நோக்கிப் பார்க்கிறோம். அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு மேற்கே நோக்கிப் பார்த்தார்கள். அது அதே நட்சத்திரம் தான். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது கிழக்கு நட்சத்திரம் அல்லது மேற்கு நட்சத்திரமாக உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? சரி. இப்பொழுது அது கொண்டு வருகிறது. ஒருவன் பிதாக்களின் விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வருகிறான்; இந்த காலத்தில் “பிள்ளைகளின் விசுவாசம் பிதாக்களினிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது. நீங்கள் சுற்றி வந்து மறுபடியும் அங்கு அடைகிறீர்கள். நான் கூறுவது உங்களுக்கு விளங்கவில்லையா? அது எக்காலத்தும் ஒரே நட்சத்திரம்தான். ஒரே காரியம், ஒரே செய்தி, ஒரே காரியம் மறுபடியும் வந்தடைகிறது. அது கடந்து சென்று விட்டது. நீங்கள் எந்தப் பக்கம் செல்லுகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் கண்டு பிடிக்கும் நேரம் ஒன்று வரும் என்று நான் நம்புகிறேன். அதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நான் நம்பவில்லை. அவர்கள் எவ்வளவுதான் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தாலும். அவர்கள் எத்தனையோ காரியங்களை விஞ்ஞான ரீதியில் நிரூபித்து பிறகு அதை வாபஸ் வாங்க வேண்டியதாக இருந்தது. தேவன் உலகம் நின்றது என்றும் ... சூரியன் என்பதற்கு பதிலாக உலகம் என்று சொல்லிவிட்டேன். பாருங்கள், சூரியன். சூரியன் என்ன செய்வதாக அவர்கள் கூறுகிறார்களோ அது அதைச் செய்வதாக நான் உண்மையில் நம்புவதில்லை. சந்திரன் சுற்றுகிறது என்று எனக்குத் தெரியும். அவ்வாறே சூரியனும் சுற்றியோடுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அவர்களில் சிலர், “அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டு அவனிடம் 'சூரியனே நில்' என்று கூறும் படி செய்தார். ஆனால் உண்மையில் அவர் பூமியைத்தான் நிறுத்தினார்” என்கின்றனர். 161நான், “பூமி சுற்றாமல் நிற்குமானால் அது ஒரு வால் நட்சத்திரம் போல் விண்வெளியில் ஓடிச் சென்று விடும் என்று நீங்கள் என்னிடம் கூறியிருக்கிறீர்களே, அப்படியானால் என்ன நடந்தது?” என்று கேட்டேன். நான் திரு.தியீஸ் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உயர்நிலைப்பள்ளியில் வேதாகமம் கற்றுக் கொடுப்பவர். அவரை உங்களுக்குத் தெரியும். நான் அவரிடம், “வேதம் அப்படித் தான் கூறுகிறது. அதாவது பூமி.... இல்லை, சூரியன் நின்றது என்று என்றேன். அவர், “அவர் பூமியை நிறுத்தினார். அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டார்” என்றார். நான், “அப்படியானால் உங்கள் அறிவினால் அதை செய்யுங்களேன்” என்றேன். ஒரு சகோதரன், “சூரியன் எவ்வளவு நேரம் நின்றது என்று அவர்களால் இப்பொழுது விஞ்ஞானப் பிரகாரமாக நிரூ பிக்க முடிகிறதென்று நினைக்கிறேன். ” என்கிறார் - ஆசி). ஆம், அங்கே அவர்கள்... நானும் கூட அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம், அவர்கள் உரிமை கோருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வானசாஸ்திர நிபுணர் ஒருவர் அதைக் குறித்து பேசும்போது, அவர்களால் இதை இப்பொழுது நிரூபிக்க முடியும் என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் வான மண்டலத்தில் ஏதோ ஒன்று நடந்ததென்றும் அது சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தது என்றும் கூறுகின்றனர். அவர்கள் அதையெல்லாம் நிரூபித்து விட்டனர். நல்லது, என்னே, அந்த நேரத்தில் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் அப்படி ஏதோ ஒன்றைச் செய்துள்ளன. எப்படியாயினும், அது நமக்கு மிகவும் ஆழமானவை. 162எனவே, இப்பொழுது. இந்த செய்தியின் காரணம்... அது அப்படித்தான் என்பதை நிரூபிக்க, இந்த செய்தியை இந்த விதமாக காண வேண்டும். இப்பொழுது, சகோதரரே, நாம்அறிந்திருப்பது என்னவெனில், மனிதன் தேவனாக இருக்க முடியாது. இருப்பினும், மனிதன் ஒருவகையில் தேவனே. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவனே . நீங்கள் தேவனாக இருப்பதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கும் போது அல்ல. பாருங்கள்? இயேசு நம்மைப் போல் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் தேவன் அவருக்குள் இருந்தார். தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. நாமோ ஆவியை அளவாகப் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்பொழுது இந்த வெளிச்சம் வந்து விட்டபடியினால், அது யோவான்ஸ்நானன் செய்தியை அறிவித்த அந்த விதமான செய்தியை அறிவிக்குமானால், அவர் அந்த நதியில் கூறினபடி ... பாருங்கள். அது வேறெதாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பாருங்கள், ஆரம்பப் பள்ளி கல்வியும் கூட இல்லாதவன். அவர் நடக்கப் போகும் சம்பவங்களை என்னிடம் கூறினபோது, அவைகளில் ஒன்றுமே தவறிப் போகவில்லை. அவைகளில் ஒன்றுமே ஒருக்காலும் தவறிப் போகவில்லை. அவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சகோதரரிடம் கூறினேன். நம்மில் வயதில் மிகவும் மூத்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம் நான் இந்தக் காரியங்களைக் கூறியிருக்கிறேன். இந்த ஒளியைக் கண்டதைக் குறித்தும், அது என்ன நிறமாயிருந்தது என்றும் மற்றெல்லாமே. இப்பொழுது அந்த புகைப்படம் அது உண்மையென்பதைக் காண்பிக்கிறது. இந்த வெவ்வேறு காரியங்கள் அனைத்தும் அது உண்மையென்பதை நிரூபிக்கிறது. அது சரியா? நல்லது. அப்படியானால், அது உண்மையாயிருக்குமானால் .... அது அந்த ஒளிதான். 163இப்பொழுது நான்காம்... (ஒலி நாடாவில் காலியிடம் ஆசி).... அது 3ம் வசனம் தொடங்கி 5ம் வசனம் முடிய, இல்லை . அதுவல்ல... நாம் 14ம் வசனத்தில் தொடங்குவோம். சகோதரனே யார் வேதத்தில் அந்த பாகத்தை திறந்திருப்பது? சரி. பரி. லூக்கா 3ம் அதிகாரத்தில் 14ம் வசனம் தொடங்கி வாசியுங்கள் (ஒரு சகோதரன் லூக்கா 3:14-16 வசனங்களை வாசிக்கிறார் - ஆசி). போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான் யோவானைக் குறித்து: இவன் தான் கிறிஸ்துவோம் என்று ஜனங்களெல்லாரும் எண்ணங் கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில், யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். லூக் 3:14 - 16 சரி. அது என்ன? ஜனங்கள் மேசியாவின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியால், இந்த மகத்தான அபிஷேகிக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் கண்டபோது, ஒரு மனிதன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து தன் கூட்டத்தை நடத்தி விட்டு, மீண்டும் வனாந்திரத்துக்குச் செல்வதை அவர்கள். கண்டபோது, அவனைப் பின்பற்றின அநேகர் “இவன் தான் மேசியா” என்றனர். அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். பாருங்கள். யோவான்ஸ்நானனின் செய்தி இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக உண்மையான தேவனுடைய செய்தியாயிருக்குமானால், அதே விதமாக... எலியாவின் செய்தியும் அதே விதமாக கருதப்படவேண்டும்... பாருங்கள்? இது அந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று நினைக்கிறேன், முற்றிலுமாக. பாருங்கள்? இதுவும் அதே விதமாக கருதப்பட வேண்டும். பாருங்கள்? (ஒரு சகோதரன், “அந்தவிதமான முரணான அபிப்பிராயம் கொண்டுள்ளவர் எவருக்காகிலும் உதவி செய்ய ஏதாகிலும் ஒன்றைச் செய்வதற்கு நாங்கள் பொறுப்பாளிகளா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார் - ஆசி). ஒன்றுமில்லை, உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. (கேடான சிந்தை. அது கேடான சிந்தையில் முடிவடைய வாய்ப்புண்டா?“) இவ்விதமாக அது இருக்குமானால் அது கேடான சிந்தையில் முடிவடையும். அதாவது முன்னுரைக்கப்பட்ட இந்த மனிதன் தன்னை மேசியாவென்று அறிவித்தால், அவன் கள்ளக்கிறிஸ்து வென்று நாம் அறிகிறோம். பாருங்கள்? 164பாருங்கள், இந்த மனிதன் தன்னுடைய ஸ்தானத்தில் நிலைத்திருக்கும் வரைக்கும், பாருங்கள். அவர்கள் யோவானிடம் கூறினது போன்று. யோவான் ஒருபோதும்... யோவான் அவர்களைக் குறித்து எதுவும் கூறினதாக வேதத்தில் உரைக்கப்படவில்லை. அவர்கள் அருமையான கிறிஸ்தவர்கள்... இல்லை , யோவானை விசுவாசித்திருந்த விசுவாசிகள். அவர்கள் “உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய தீர்க்கதரிச, அதில் சந்தேகம் எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு அவனிடம் சென்று, “ நீர் தான் அந்த தீர்க்கதரிசி அல்லவா?” என்றனர். அவன், “இல்லை” என்றான். 165அவர்கள், “நீர் மேசியா தானே” என்றனர். பாருங்கள், அவர்கள் உண்மையில் அவ்வாறு எண்ணியிருந்தனர். அவன், “இல்லை” என்றான். பாருங்கள்? அவர்கள், “இல்லையா, அப்படியானால் நீர் யார்?” என்று கேட்டனர். அவன், “நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான் . “ஜனங்கள் அவருடைய வருகையை ஆவலாய் எதிர் நோக்கியிருந்தனர்” என்று வேதம் உரைக்கிறது. அந்த ஜனங்கள் யார்? அவனுடைய செய்தியைக் கேட்டவர்கள், அதற்கு செவி கொடுத்தவர்கள், அவனைப் பின்பற்றினவர்கள், அவனுடைய சகோ தரர்கள். பாருங்கள்? அவர்கள் அவனைப் புண்படுத்த விரும்பவில்லை, அவனைப் புண்படுத்த முயலவில்லை. ஆனால், பாருங்கள், அவன் மேசியாவென்று அவர்கள் உண்மையாகவே தங்கள் இருதயங்களில் எண்ணியிருந்தனர். நல்லது, ஒவ்வொரு தருணத்திலும் சரித்திரம் மீண்டும் நிகழ வேண்டும். அதை நாம் அறிந்திருக்கிறோம். அது மீண்டும் நிகழ வேண்டும். 166உதாரணமாக, நீங்கள் மத்தேயு 3-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களானால் அங்கு, “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்' என்று உரைக்கப்பட்டது நிறைவேம்படி இப்படி நடந்தது”. (மத். 2:15) என்னும் வசனம் இயேசுவில்நிறைவேறினதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் ஒத்து வேதவாக்கியங்களைப் பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது குமாரனாகிய யாக்கோபைக் குறிப்பிடும் ஒன்று. பாருங்கள்? அவ்வசனத்திற்கு. இரட்டை அர்த்தம் உள்ளது. எனவே இப்பொழுது அது. அந்தக் காரியம் எழும்பவில்லை என்றால், அது வருங்காலத்தில் எழும்பும் என்று நான் இப்பொழுதும் கூறுகிறேன். ஏனெனில் இந்த செய்தி தேவனிடத்திலிருந்து வந்ததென்றும், அது கிறிஸ்துவுக்கு முன்னோடியாக உள்ளதென்றும், அது எலியாவின் ஆவியும் வல்லமையும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் அது பிள்ளைகளின் இருதயங்களைத் திருப்பும் ஒன்றாய் அமைந்துள்ளது. எல்லாமே அதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. எனவே உண்மையான ஜனங்கள் அந்த விதமான கருத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அது முடி வடையத்தான் செய்கிறது. அவர்கள் உண்மையில் அவ்வாறு விசுவாசிக்கின்றனர், 'அவர்கள் என் சகோதரரும் நண்பர்களுமாவர். 167இப்பொழுது, எனக்கு. இந்த பட்டினத்தில் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அந்த மருத்துவரின் பெயரை நான் கூறப் போவதில்லை. அவர் என் நண்பர். அவர் என் தோளின் மேல் கையைப் போட்டு, “பில்லி, நீர் கடைசி காலத்தின் தேவனுடைய மேசியா என்று உம்மிடம் எனக்கு கூறுவது எளிதாயிருக்கும்” என்றார். நான் “டாக், அப்படி செய்யாதீர்கள்” என்றேன். அவர், “நல்லது, இவ்வுலகில் வேறு எவருமே நீர் பெற்றுள்ள காரியங்களையும் நீர் சொல்லும் காரியங்களையும், நீர் செய்யும் காரியங்களையும் பெற்றுள்ளதாக நான் கண்டதில்லை” என்றார். அது அவருக்கு அதிக உதவியாயிருந்தது, பாருங்கள். அங்குள்ள பிரசங்கிகளைக் காண்கிறேன். ஆனால் நீர் வித்தியாசமான ஒருவர், உமக்கு படிப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனெனில் மனோதத்துவம் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியாது என்றார். நான், “அது உண்மை , டாக் ” என்றேன். அவரிடத்தில் பேசி பிரயோஜனமில்லை. ஏனெனில் அவருக்கு எதுவுமே தெரியாது, அவரிடம் அடிப்படையான விஷயத்தை எடுத்துக் கூறவும் உங்களால் முடியாது. பாருங்கள், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், அதுதான், பாருங்கள். 168எனக்கு ஒரு கறுப்பு நிற ஸ்திரீயைத் தெரியும். அவள் எனக்கு பக்கத்து தெருவில் வசிக்கிறாள். எனக்கு தெரிந்த மனிதனிடத்தில் அவள் வேலை செய்கிறாள். இந்த மனிதனின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “இந்த ஸ்திரீ உங்களைத் தெய்வம் போல் தொழுகிறாள். ஏனெனில் அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்த போது நீங்கள் அவள் மேல் கையை வைத்து அவள் குணமாகி விட்டதாக கூறினீர்களாம்” என்றாள். அந்த கறுப்பு நிற ஸ்திரீ வேலை பார்க்கும் இந்த ஸ்தீரியும் அவளுடைய கணவனும் குறிப்பிட்ட ஒரு மருத்துவரும் நான் சற்று முன்பு கூறின மருத்துவர் அல்ல, இவர் வேறொரு மருத்துவர்) ஒன்றாக 'கால்ப் (Golf) விளையாடுபவர்கள். அந்த மருத்துவர் அவள் பிழைக்க மாட்டாள் என்று கைவிட்டு விட்டார். அவள் அவருடைய நண்பரின் வீட்டில் வேலை பார்க்கிறவள். கைவிடப்பட்ட அவள் முழுவதுமாக குணமடைந்து விட்டாள். மருத்துவர் அவளில் ஒரு துளி புற்று நோயையும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. பாருங்கள்; அவள் கூறுகிறாள்.... 169இப்பொழுது, நாம் நினைக்கின்ற அல்லது எடுத்துக் கொள்கின்ற அந்த அர்த்தத்தில் அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் என்ன அர்த்தத்தில் அதைக் கூறுகிறார்கள் என்றால்... தேவன் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து கொண்டு நமது மூலமாய் கிரியை செய்கிறார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். தனிப்பட்ட ஒரு நபர் தேவன் என்றல்ல, பாருங்கள். யோவான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது போல் இயேசுவும் ஒரு மனிதனே. அவர் மனிதனே. அவர் ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்தார், அவர் மரித்தார். அது சரியா? அவர் மனிதன். அவர் புசித்தார். குடித்தார், அவருக்குதாக முண்டாயிற்று. அவர் உங்களைப் போலவும் என்னைப் போலவும் ஒரு மானிடராயிருந்தார். ஆனால் தேவனுடைய ஆவி அவருக்குள் பரி பூரணமாக, அளவில்லாமல் வாசம் செய்தது. அவர் சர்வசக்திமான். ஆனால் எலியாவோ அந்த ஆவியில் ஒரு பாகம் மாத்திரமே. ஒரு வேளை அவன் தன் சகோதரரை விட சிறிது அதிகமாக அபிஷேகம் பெற்றிருந்திருக்கக் கூடும். ஆயினும் அவன் ஆவியின் ஒரு பாகம் மட்டுமே. ஜனங்கள் மேசியாவை எதிர் நோக்கியிருந்தனர். அவர்கள் தங்கள் சகோதரரை விட சிறிது அதிகமான இந்த பாகத்தைக் கண்டவுடன், “ஓ என்னே , இது அவராகத்தான் இருக்க வேண்டும்” என்றனர். ஆனால் இயேசு பிரகாசிக்கத் தொடங்கினவுடனே யோவானின் சிறு வெளிச்சம் அணைந்து போனது. பாருங்கள்? 170அது போல் அவர் வரும்போது, அந்த பரலோகத்தின் மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து கிழக்கிலிருந்து மேற்குக்கு வரும் போது, இந்த சிறு வெளிச்சங்கள் அணைந்து போகும்... பாருங்கள்? இப்பொழுது அவர் பூமிக்கு வரமாட்டார். ஆயிரம் வருட அரசாட்சி வரைக்கும் மேசியா பூமிக்கு வரமாட்டார். பாருங்கள். பாருங்கள்? ஏனெனில், “நாம் ஆகாயத்தில் எடுக்கப் பட்டு, கர்த்தரை அங்கு சந்திப்போம். அவர் பூமிக்கு வருவதில்லை. அவர் மணவாட்டியை ஆகாயத்தில் இழுத்துக் கொள்கிறார். அவர் ஒரு ஏணியை எடுத்துக் கொள்கிறார் ... அது என்ன நாடகம், லியோ, அதில் அந்த மனிதன் வீட்டின் பக்கத்தில் ஏரியை வைக்கிறானே? ரோமியோ ஜூலியட். அது சரி. அவர் ஏணியை வைத்து தன் மணவாட்டியைத் திருடிக் கொண்டு போய் விடுகிறார். - இப்பொழுது அவர் யாக்கோபின் ஏணியில் இறங்கி வந்து, “ப்ஸ்ட், இருதயத்துக்கு இனியவளே, இங்கே வா” என்று அழைக்கிறார். பாருங்கள், அவரைச் சந்திக்க நாம் மேலே செல்கிறோம். 171ஒரு சகோதரன், சகோ. பிரான்ஹாமே, அதனுடன் இது சரியாயிருக்குமா? இந்த ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் வந்து அவனை மேசியா என்று அழைக்க விரும்பினர். யூதர்கள் மேசியாவை தேவன் என்று கருதுவதாக நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்“ என்கிறார் - ஆசி]. - என்ன சொல்லுகிறீர்கள்? நான் என்ன சொல்லுகிறேன் என்றால், அந்த ஜனங்கள் யோவான்ஸ்நானனிடம் வந்து, அவனை மேசியாவாகிய கிறிஸ்து என்று எண்ணினர். மேசியா யூதர்களுக்கு தேவனாயிருப்பார் என்று நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்). ஆம் ஐயா, அது உண்மை , (ஒரு சகோதரன், “நல்லது, யோவான் அவர்களைக் கடிந்து கொண்டு, அவன் 'அல்ல' என்றும் கிறிஸ்து வரப்போகிறார் என்றும் சொன்னான்' என்கிறார் - ஆசி). அது உண்மை . சீஷர்கள் இயேசுவை 'ஆண்டவர்' என்று ஒப்புக் கொண்டு, 'நீங்கள் என்னை ஆண்டவரென்று சொல்லுகிறீர்கள், நான் அவர்தான்' என்றார்.:)ஆம் (”யோவான் 13-ல் அவர் சீஷர்களின் கால்களைக் கழுவின போது...“].அம். அது சரியென்று அவர் ஒப்புக் கொண்டார். அவர் ஆண்டவராயிருந்தபடியால், அவர் அது சரியென்று ஒப்புக் கொண்டார். அவர் ஒப்புக் கொண்டார். [” அவர் அதை ஏற்றுக் கொண்டார் ) உ-ஊ ஆனால், பாருங்கள், இயேசு ஆண்டவராயிருந்தபடியால், அவர் ஆண்டவர்தானா என்று கேட்கப்பட்ட போது, அவர், “ஆம் ஐயா, நான் உங்கள் ஆண்டவரும் போதகருமாயிருக்கிறேன். நீங்கள் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே” என்றார். ஆனால்..... (“ஆனால் வேறெந்த மனிதனும் அவ்விதம்.....” கூற முடியாது. முடியாது. உதாரணமாக.... யாராகிலும் நூன் தேவன் என்று கூறுவர்களானால் அது தவறு என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களிடம் கூற விரும்புகிறேன். பாருங்கள்? நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி, தேவனிடத்திலிருந்து வந்த ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? 172உள்ளூர் சபை ஒன்று மற்ற வெளிநாடுகளில் உள்ள தேவைகளை சந்திப்பதற்கு முன்பு, முதலில் தன் உள்ளூர் பொறுப்பை ஏற்று முடிக்க வேண்டியது அவசியமாஇல்லையா? அது தன் தேவைகளைச் சந்தித்து முடித்த பிறகு, அதனால் முடிந்த வரையில் மிஷனரி ஊழியத்துக்கு உதவி செய்வது வேதப்பூர்வமானதா? ஆம். உண்மை . கொடுத்தல் முதலில் வீட்டில் தொடங்குகிறது. பாருங்கள். இங்குள்ள நமது தேவைகளை நாம் முதலில் சந்திக்கிறோம். ஏனெனில் நாம்... இது தேவனுடையசபை . உங்கள் சிறு சபையும் தேவனுடைய சபையே. உங்களால் உங்கள் மேய்ப்பருக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போனால், உங்களால் பாடல் புத்தகங்களை வாங்க முடியாமல் போனால், நீங்கள் வேறு இடத்துக்கு பணத்தை அனுப்பக் கூடாது. பாருங்கள்? உங்கள் சபைக்கு வேண்டிய அனைத்துக்கும் நீங்கள் செலுத்திவிட்டு உங்கள் கடன்களை செலுத்தி முடித்த பின்பு, வெளிநாட்டில் உதவி தேவைபடுகிற அந்த மற்ற சகோதரனுக்கு உதவி செய்யுங்கள், பாருங்கள். நான் நினைப்பது என்னவெனில்.... உங்கள் சபைக்காக நீங்கள் பணம் செலுத்திக் கொண்டு இருக்கும்போதே, ஜனங்கள்மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்பினால், நான் மிஷனரி காணிக்கைக்காக ஒரு நிதியை ஒதுக்கி வைக்க விரும்புவேன். ஏனெனில் பலர் தங்கள் உள்ளூர் சபைக்குக் கொடுக்காமல், மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்புவார்கள். அவர்கள் மிஷன்களுக்கு அதை கொடுக்காவிட்டால், வேறெதற்காவது அதை செலவழித்துவிடுவார்கள். எனவே நான் சொல்வது என்னவெனில், மிஷன் ஊழியத்துக்கென்று ஒரு பெட்டியை வைத்து விடுங்கள், நான் .... அப்படித்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம். 173லூக்கா 1:17, யோவான் “எலியாவின் ஆவியை உடையவனாய் வருவதைக் குறித்து தயவு செய்து விளக்குங்கள். நல்லது. நாம் சற்று முன்பு தான் லூக்கா 1: 17ஐ. “எலியாவின் ஆவியை” உடையவனாய் வருவதைக் குறித்துப் பார்த்தோம். (ஒரு சகோதரன், “இங்குதான் மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் தங்கள் உபதேசத்தைப் பெற்றுக் கொண்டனரா?” என்று கேட்கிறார் - ஆசி]. மன்னியுங்கள்? (மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் இங்கு தான் தங்கள் கோட்பாட்டைத் தொடங்கினரா?“]. அப்படித்தான் இருக்க வேண்டும். [பாருங்கள், அவர் வேறொரு சரீரத்தில் வருவதாக அவர்கள் நம்புகின்றனர்). ஆம், பாருங்கள், ஆவி மரிப்பதில்லை என்பது உண்மை . தேவன் தமது மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியை அல்ல. அவர்கள், 'நீங்கள் நல்லவர்களாக இருந்திருந்தால், ஒரு நல்ல மனிதனுக்குள் திரும்பவருவீர்கள்' என்று கூறுகின்றனர்”]. ஆம், ஆம். நீங்கள் கெட்டவர்களாய் இருந்திருந்தால், ஒரு நாய்க்குள் நீங்கள் வரலாம் என்கின்றனர்“]. ஆம், அப்படித்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆம். நல்லது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு குழுவினரை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தரையையும் துடைக்க மாட்டார்கள். ஒரு எறும்பையும் கூட மிதிக்க மாட்டார்கள். அது ஒரு வேளை தங்கள் பந்துக்களில் ஒருவராக இருக்கலாம் என்பதற்காக . ஆனால், பாருங்கள், அது அஞ்ஞானக் கோட்பாடு. பாருங்கள்? அது அஞ்ஞானம் என்பது உண்மை. 174பவுல், “முக்கியமான வரங்களை நாடுங்கள்: இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்கிறான். அந்த மேன்மையான வழி என்னவென்று தயவுகூர்ந்து விளக்குங்கள். அன்பு. 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம், பாருங்கள். “நாடுங்கள்... முதலில்...1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தை எடுங்கள், சகோதரனே, கடைசி மூன்று அல்லது நான்கு வசனங்களை வாசியுங்கள். 1 கொரிந்தியர் 13... அந்த அதிகாரத்தின் கடைசி மூன்று வசனங்கள்.... ஒரு சகோதரன் 1 கொரிந்தியர் 13: 11-13 வசனங்களைப் படிக்கிறார் - ஆசி]. நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம் , நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (சகோ. பிரான்ஹாம் “உ-ஊ , அன்பு” என்கிறார் - ஆசி) 1 கொரி. 13:11-13 175ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக்கொள்ளப் படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படி குற்றப்படுத்துவது? ஓ, என்னே! அவருடன் பொறுமையாயிருங்கள், அப்படித்தான் நான் நினைக்கிறேன். பாருங்கள்? ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக் கொள்ளப்படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படிக் குற்றப்படுத்துவது? அவரைக் குற்றப்படுத்தக் கூடாது. உதாரணமாக அவர் டீகனாக விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அவர் அவ்விதம் செய்யக்கூடாது என்று அவரிடம் சொன்ன பின்பும், அவர் எப்படியும் டீகனின் ஸ்தானத்தை வகிக்க விரும்புகிறார். நல்லது. ஒரு நபர் அவ்விதமாக இருப்பாரானால், ஏதோ ஒரு பலவீனம் எங்கோ உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே நான் அவருடன் அன்போடு ஈடுபடுவேன். நீங்கள் ஒருவரை நன்றாக அறிந்திராமல் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள். உங்களால் முடிந்த வரைக்கும் உங்கள் சிறந்த மனிதர்களை உங்கள் குழுவில் நியமியுங்கள். சகோதரனே, வேறெவரையுமே அதில் .... அந்த மனிதனை முதலில் பரிசோதியுங்கள். ஒரு மகனுக்கு மேய்ப்பனைக் காட்டிலும் அதிகமான உத்தரவாதம் உள்ளது. ஒரு டீகன் குற்றமற்றவராய் இருக்க வேண்டும். பாருங்கள்? 176ஒரு இராப்போஜன ஆராதனையில், ஒரு மனிதன் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக பீடத்தண்டையில் வந்தார். இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சகோதரன் பிரான்ஹாம் அப்பம் திராட்சரசம் இவைகளின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பீடத்தண்டையில் உள்ள மனிதனுக்கு ஜெபிப்பதற்காக இராப்போஜன பொருட்களை விட்டு வர இயலாது என்று அவர் கூறிவிட்டார். தயவு கூர்ந்து இதற்கு விளக்கம் தாருங்கள்? என் உடன் போதகரான சகோ. நெவிலை ஜெபிப்பதற்காக அனுப்பினேன், பாருங்கள். அது நடந்த இரவு எனக்கு ஞாபகம் உள்ளது. என்ன நேர்ந்த போதிலும் அந்த இராப்போஜன மேசையுடன் நான் நிற்க வேண்டியவனாயிருக்கிறேன் .... இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு நேரமில்லை. இங்கு உட்கார்ந்திருக்கிற யாரோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது என்னவென்று கூறுகிறேன் , சகோதரனே. இயேசுகிறிஸ்துவின் சரீரத்துக்கு அடையாளமாயுள்ள இராப்போஜனம் இருக்கின்ற வேளையில், அது... அது எல்லா நேரத்திலும் காவல் செய்யப்பட வேண்டும். 177பாருங்கள், எலியா கேயாசியிடம், “என் கோலை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னான் (அவன் அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கோலை உடையவானாயிருந்தான்). அவன், ”நீ பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது. யாராகிலும் உன்னிடம் பேசினால்அவருக்கு மறு உத்தரவு அளிக்காதே. யாராகிலும் உனக்கு வாழ்த்துதல் கூறினால், அவருக்கு திரும்ப வாழ்த்துதல் கூறாதே. நீ நேராகப் போய் குழந்தையின் மேல் இந்த கோலை வை“ என்றான். அது சரியா? ”அந்த கோலுடன் நிலைத்திரு“. பாருங்கள்? அதை தான் நான் செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது, அங்கு என் உடன் போதகர் நிற்காமல் போயிருந்தால். நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். அது எப்பொழுது நடந்தது என்று எனக்கு ஞாபகம் உள்ளது. நான் .... அவர்கள் மட்டும்... சகோ நெவில் அங்கு நிற்கவில்லை என்றால், அல்லது பீடத்தண்டையில் இருந்த அந்த மனிதனுக்கு உதவி செய்ய வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால்.... அப்பொழுது நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். எனவே நான் இராப்போஜன மேசையினருகில் நின்று கொண்டிருந்தேன் அவாகள் இராப்போஜனத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமான போது, நான் ஏற்கனவே இராப்போஜனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். சகோ. நெவில் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் இராப்போஜனம் பரிமாறிக் கொண்டிருந்தேன். சகோநெவில் அங்கு நின்று கொண்டிருந்தார். 178அவர் பீடத்தண்டையில் வந்த போது, சகோ. நெவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பிரசங்ம் செய்து கொண்டிருந்த போது, இந்த மனிதன் கூட்டத்திலிருந்து எழுந்து பீடத்தண்டையில் சென்றிருப்பாரானால், அப்பொழுது நான் அந்த மனிதன் இருந்த பீடத்துக்கு சென்றிருப்பேன். என் சகோதரனின் மேல் ஆவியின் அபிஷேகம் தங்கியிருந்ததை நான் கண்டேன். அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஊழியக்காரர். அவர் கடமையின் பாதையில் இருந்து கொண்டிருந்தார். ஒரு போதகர் கடமையின் பாவா இருந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷையில் பேசவோ அல்லது வேறெந்த வகையிலும் தடங்கலாயிருக்கக் கூடாது. ஆம், பரிசுத்த ஆவியானவர் பிரசங்கத்தின் வாயிலாக யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும்போது, இரட்சிப்பைப் பெற யாராகிலும் பீடத்தண்டையில் ஒடிச் செல்வார்களானால், போதகர் தொடர்ந்து தன் கடமையின் பாதையில் இருக்கட்டும். உடன் போதகரோ அல்லது மகனோ இருப்பாரானால், அவர் விரைவாக அந்த நபரிடம்செல்லட்டும். கடமையின் பாதையில் உள்ள போதகரை தொந்தரவு செய்யாதீர்கள். பாருங்கள்? 179நான் என் கடமையின் பாதையில் இராப்போஜன மேசையின் பின்னால் நின்று கொண்டு இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் உடன் போதகர் சகோ. நெவில் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு மனிதன் பீடத்துக்கு ஓடி வந்து கொண்டிருந்தார். நான், “சகோ நெவில், அவரிடம் சொல்லுங்கள்' என்று கூறினேன். சகோ. நெவில் அவரிடம் சென்றார். ஆகயைால் தான் நான் போகவில்லை. அந்த மனிதனிடம் செல்ல உடன் போதகரோ அல்லது வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால், நான் இராப்போஜனத்தை நிறுத்தி விட்டு அவரிடம் சென்று அந்த ஆத்துமா இரட்சிப்படைவதைக் குறித்துக் கவனித்திருப்பேன். பாருங்கள்? ஆனால் அனுப்புவதற்கு ஒருவர் இருந்தார். நான் இராப்போஜனம் கொடுப்பதை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தால், அது என்னை கடமையின் பாதையிலிருந்து விலகச் செய்திருக்கும். 180தனிப்பட்ட ஊழியக்காரன் என்னும் முறையில் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிற ஒரு நபரிடம் எவ்வாறு வேதரீதியாக ஈடுபட வேண்டும்? சரி. அவருக்கு வார்த்தையை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். அதுவே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும். வார்த்தை வெளிச்சத்தைக் கொண்டுள்ளது. “சகோதரனே இயேசு அதை வாக்களித்துள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டேயிருங்கள். அவரைக் குலுக்கவோ, தள்ளவோ, சுற்றிலும் அசைக்கவோ செய்யாதிருங்கள். முயற்சி செய்யாதிருங்கள்... ஆம், நீங்கள் அவருக்கு அதைக் கொடுக்க முயற்சி செய் இருங்கள். ஏனெனில் உங்களால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள்... தேவன் அதை அவருக்குத் தந்தருளுவார். வாக்குத்தத்தங்களை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். பாருங்கள். அங்கு நின்று கொண்டு வாக்குத்தத்தத்தை மேற்கோள் காட்டிக் கொண்டேயிருங்கள். “பரலேகாத்தின் தேவனே, என் சகோதரனுக்காக ஜெபிக்கிறேன். அவருக்கு பரிசுத்த ஆவியைத் தருவீர் என்பதே உமது வாக்குத்தத்தமாயுள்ளது. அவரை நீங்கள் உற்சாகப்படுத்த முயல்வீர்களென்றால். அவர், “ஓ, சகோதரனே, மேய்ப்பனே, சகோதரனே - அவருடைய பக்கத்தில் யார் இருக்கிறார்களோ அவரைப் பார்த்து, ”நான் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும்“ என்று கூறிக் கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள், “சகோதரனே, அது ஒரு வாக்குத்தத்தம். தேவன் அந்த வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை சந்தேகிக்காதீர்கள். நீங்கள் வாக்குத்தத்ததை விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது எந்த வினாடியிலும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வருவார். அதை எதிர்பார்த்துக் கொண்டேயிருங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவித்து 'கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் நின்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள். நீங்கள் வாக்குத்தத்தத்தை மேற்கொள்காட்டிக் கொண்டேயிருங்கள். “நீங்கள் மனந்திரும்பி விட்டீர்களா?” என்று அவரிடம் கேளுங்கள். அவர் 'ஆம்“ என்கிறார். “அப்படியானால் நீங்கள், 'கர்த்தாவே, நான் மனந்திரும்பினால், என்னை மன்னிப்பதற்கு நீர் நீதியுள்ளவராயிருப்பதாக உரைத்திருக்கிறீர். நான் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியை பெறுவேன் என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, அதை நான் செய்து முடித்து விட்டேன். கர்த்தாவே, இப்பொழுது நான் காத்திருக்கிறேன். அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள். பாருங்கள். அது தான் முறை. அவரை உற்சாகப் படுத்திக் கொண்டேயிருங்கள். அவர் வார்த்தையில் நிலைத்திருக்கச் செய்யுங்கள். அது அவர் மேல் வரவேண்டுமென்று இருந்தால் அப்பொழுது வரும். 181நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன்.... இல்லை. நித்தியபாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா? இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் நினைக்கிறேன், “இருக்கிறாரா..” நான் படித்த விதமாகவே நீங்களும் படிக்கிறீர்களா என்று பார்க்கலாம். இதை படியுங்கள். ஒரு சகோதரன், “ நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா என்று வாசிக்கிறார் - ஆசி). நான் சரியாகத்தான் அதைப் படித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். இப்பொழுது நல்லது. நான் ... நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி சரியாக இருக்கிறாரா? என் கருத்து என்னவெனில் அந்த பிரசங்கி .. அவருக்கு நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்றால்.... ஆனால் அவர் அதை அறிந்திருந்தது. அது சத்தியம் என்பதை அறிந்திருந்து, அதை பிரசங்கிக்காமல் இருப்பாரானால், தன்னைக் குறித்து அவர் வெட்கப்பட வேண்டியவராயிருக்கிறார், அது உண்மை , அது எந்த கிறிஸ்தவனாயிருந்தாலும். இப்பொழுது கிறிஸ்தவன், இதை நன்றாக புரிந்து கொள்ள இயலாத கிறிஸ்தவவனுக்கு நான் கூற விரும்புவது என்னவெனில... ஒரு சகோதரன், சகோ. பிரான்ஹாமே, இதை மற்ற ஜனங்களுக்கு பிரசங்கிப்பதற்கு இது ஒரு வெளிப்படையான உபதேசம் இல்லை, அல்லவா?.....' என்று கேட்கிறார் - ஆசிர. இல்லை. இல்லை, இல்லை. அதைக் குறித்து தான் நான் கூறியிருந்தேன். ஆம், பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது. சென்ற ஞாயிறு நான் கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால், உங்களுக்கென்று ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். பாருங்கள். அதுவே நீங்கள் செய்யத்தக்க மிகச் சிறந்த முறையாகும். உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால் ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொண்டு, பாருங்கள், பிரசங்கம் செய்யுங்கள். நீங்கள் பிரசங்கி அல்லவென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையே ஒரு பிரசங்க பீடமாக அமைந்திருக்கட்டும். பாருங்கள். அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது, இல்லையா? பாருங்கள்? பாருங்கள்? ஏனெனில் அநேக தருணங்களில் நாம் காண்கிறது என்னவெனில்... சகோதரர்களாகிய நீங்கள் அதை உங்கள் சபைகளில் செய்யுங்கள். 182இதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சபையோர் சில நேரங்களில் காரியங்களை விளக்குவதிலும் காரியங்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். அவ்விதம் செய்யாதிருக்க அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். யாராகிலும் ஏதாவதொன்றை அறிந்து கொள்ள விரும்பினால், அவ்விதம் செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் வரட்டும். பாருங்கள்? நீங்கள் கவனமாயிருப்பது நலம். ஒருவேளை நீங்கள் அதற்கு விளக்கம் தரத் தலைப்பட்டால், அவரை இன்னும் அதிகமான குழப்பத்தில் ஆழ்த்தி, அவர் முன்பிருந்ததை விட இன்னும் மோசமான நிலையில் அவரைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு. நீங்கள் அவரிடம், “நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுகிறேன், எங்கள் போதகரிடம் வந்து அவரிடம் இதைக் குறித்து பேசுவீர்களானால், பாருங்கள். நாங்கள்... நீர் கூறுவது உண்மையே. எங்கள் போதகர் அதை விசுவாசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். ஆனால் அதற்கு ஆதாரம் காட்ட எனக்குத் தெரியாது. நான் ஒரு பிரசங்கியல்ல. அதை நான் விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதை நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்றால், அவர் வேதத்திலிருந்து அதை விளக்குவதை நான் கேட்டிருக்கிறேன், அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை” என்று சொல்லுங்கள். பாருங்கள்? சபையோர் அதை போதகரிடம் அறிவிப்பது நலம். போதகரும் அதற்கு எவ்விதம் விளக்கம் தரவேண்டுமென்று உறுதியாக அறிந்திருக்க வேண்டும். எனவே அதை நன்றாக படித்து அறிந்திருங்கள். ஏனெனில் அநேக சமயங்களில் அவர்கள் உங்களை மடக்கி விடுவார்கள், பாருங்கள். என்ன .... 183(ஒரு சகோதரன், “சகோ பிரான்ஹாமே” என்கிறார் - ஆசி) என்னை மன்னியுங்கள். (என்னால் கூடுமானால். ஆனால் எனக்கு அழைப்புள்ளதென்று நான் அறிந்திருக்கிறேன். என் தெரிந்து கொள்ளுதலையும் நான் உறுதியாக்கிக் கொண்டிருக்கிறேன் ]. உ - 2 (நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால், உங்களுக்கு ஒரு பிரசங்க பீடம் இருக்க வேண்டும்' என்று சற்று முன்பு நீங்கள் கூறினீர்கள்). ஆம், ஐயா. அது உண்மை . (“நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ஒரு சுவிசேஷகன் ) ஆம், ஐயா. ஆனால் ஒவ்வொருவருடைய பிரசங்க பீடமும் என்னுடையது. நல்லது. (ஆனால் இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சரீர உழைப்பு. அது கடினமாக வேலையல்ல. ஆனால் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு பிரசங்க பீடம் எதுவும் கிடையாது. இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருப்பது அவருடைய சித்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வார்த்தையின் மூலமாகவும் ஆவியின் சாட்சி மூலமாகவும் என்னிடம் வேலை செய்யும்படி கூறினார். சற்று கழிந்து பிரசங்க பீடங்கள் எனக்குத் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன் ) நிச்சயமாக , அது உண்மை . ('அது சரியா?”]. அது சரி, சகோதரனே. 184சகோதரனே, நீங்கள் அந்த பழைய சபை தஸ்தா வேஜுகளைப் புரட்டிப் பார்ப்பீர்களானால், நான் பதினேழு ஆண்டுகளாக இந்த சபையின் மேய்ப்பனாக இருந்து, ஒவ்வொரு நாளும் பிரசங்கித்து, ஒவ்வொரு நாளும் வேலையும் செய்து வந்திருக்கிறேன். பாருங்கள்? (ஒரு சகோதரன், “நீங்கள் வேலை செய்தால், நீங்கள் அழைக்கப்பட்டதற்கு அது ஒரு நல்ல அடையாளம்” என்கிறார் - ஆசிர. ஆம். பவுல் வேலை செய்தான், இல்லையா? அவன் கூடாரங்கள் செய்தான் (“ஒவ்வொரு பிரசங்கியும் ஒரு பிரசங்க பீடத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நீங்கள் கூறின் போது எனக்கு சோர்வு உண்டானது. ஆனால் தேவன் சிறிது காலத்திற்கு நான் வேலை செய்ய என்னை அழைத்திருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் ). நிச்சயமாக, பவுல் சென்று கூடாரங்களை உண்டாக்கினான், இல்லையா? அவன் மற்றவர்களின் பேரில் சார்ந்திருக்கக் கூடாதென்று எண்ணி தன் சொந்த கைகளினால் பிரயாசப் பட்டான். நிச்சயமாக. (”அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன்) பாருங்கள்? அது உண்மை . பாருங்கள்? ஜான் வெஸ்லி, “உலகம் முழுவதுமே என் சபை” என்று கூறினார். எனவே, உங்கள் பிரசங்க பீடம் இன்னும் திறந்திருக்கிறது, சகோதரனே. சுவிசேஷகர்கள் உலகெங்கும் செல்கின்றனர். அது சரியா? “நீங்கள் உலகமெங்கும் போய். எனவே உங்கள் பிரசங்க பீடம் முழு உலகமே . 185இது கட்டளையா... ஒரு மகன் அல்லது ஒரு தர்ம கர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்பது ஒரு கட்டளையா? ஆம், அது உண்மை. தங்களுடைய சொந்த கருத்து அல்லது வெளிப்பாட்டின் காரணமாக சபை உபதேசங்களுடன் கூட்டுவதோ அல்லது அவைகளிலிருந்து எடுத்து விடுவதோ நியாயமா? இல்லை, ஐயா. இல்லை . ஒரு டீகன் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசங்களுடன் இசைவாய் இணைந்திருப்பது அவசியம். அவர்களுடைய சபையின் போதக வியாக்கியானங்களுடன் அவர்கள். பரிபூரணமாய் நிலைத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்யாவிட்டால், அவர்கள் அதற்கு எதிராக போராடி தங்களையே உருவக் குத்திக் கொள்வார்கள். பாருங்கள்? நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்... வேறு விதமாகக் கூறினால், என் குடும்பத்தினரை நான் நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களுக்கு விஷம் கொடுப்பது போல இது உள்ளது. பாருங்கள், அதே காரியம்தான். பாருங்கள். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள்... ஒரு தர்மகர்த்தா அல்லது ஒரு டீகன் அவர்களுடைய உத்தியோகத்தை வகிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சபையில் உத்தியோகம் வகிப்பவர் எவரானாலும், பாருங்கள், அவர்கள் அந்த சபையின் பிரதிநிதிகள். அதன் காரணமாகத் தான் நான் முதல் தடவை, பாப்டிஸ்டு சபையை விட்டு வெளிநடந்தேன், பாருங்கள். அங்கு நான் சிறிது காலம் இருந்தேன் . அவர்கள் என்னிடம் சில பெண் பிரசங்கிகளுக்கு குருப்பட்டம் கொடுக்கக் கூறினார்கள். அதன் விளைவாக அங்கு தங்கியிருக்க என்னால் முடியவில்லை. “நான் அவ்விதம் செய்ய மறுக்கிறேன்” என்று கூறினேன். மேய்ப்பர் என்னை அதட்டி, “இது என்ன? நீ ஒரு மூப்பன்” என்றார். நான், “டாக்டர் டேவிஸ், நான் குருப்பட்டம் பெற்றுள்ள இந்த பாப்டிஸ்டு சபையின் விசுவாசத்துக்கு முழு மரியாதையையும் அளித்து இதைக் கூற விரும்புகிறேன். பெண்களுக்கு குருப்பட்டம் அளிப்பது பாப்டிஸ்டு சபையின் உபதேசமாயுள்ளது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது அதிலிருந்து விடப்பட்டிருந்த ஒன்றாக இருந்தது” என்றேன். அவர், “இது சபையின் உபதேசம்” என்றார். நான், “ஐயா, இன்றிரவு நான் வராமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள். அல்லது நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பீரா?” என்று கேட்டேன். பாருங்கள்? அவர், “உன் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் இன்றிரவு அங்கு இருக்க வேண்டியது உன்னுடைய கடமையாகும் என்றார். அதற்கு நான், “அது உண்மை தான், ஐயா. இந்த சபை 'காரியங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். உள்ளூர் மூப்பர்களில் ஒருவன் என்னும் முறையில் நான் கடமையின் பாதையில் இருக்க வேண்டும்” என்றேன். அவர் சொன்னார்... நான், “1 கொரிந்தியர் 14 அல்லது 15-ம் அதிகாரத்தில் பவுல், 'சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை' என்று ஏன் கூறினான் என்பதற்கு எனக்கு விளக்கம் தருவீர்களா?' என்று கேட்டேன். 186அவர், “ஏன், நிச்சயமாக அதற்கு என்னால் விளக்கம் தரமுடியும். பாருங்கள், அது என்னவெனில், ஸ்திரீகள் அனைவரும் பின்னால் முலைகளில் உட்கார்ந்துகொண்டு, மற்ற நேரங்களில் பேசுவது போலவே அங்கும் பேசிக் கொண்டிருந்தனர். பவுல், அவர்கள் அப்படி செய்வதை அனுமதிக்காதீர்கள்' என்றான் என்றார். அதற்கு நான், “அப்படியானால், அதே வேதபாரகனாகிய, அதே அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமாத்தேயுவில், 'உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. என்னத்தினாலெனில் முதலாம் ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப் படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள்' என்று கூறியுள்ளதற்கு விளக்கம் தாருங்கள். அவள் தான் வஞ்சிக்கப்பட்டாள். அவள் ஏதோ ஒன்றை தவறாகச் செய்ய வேண்டும் என்று கருதிச் செய்கிறாள் என்று நான் கூற வரவில்லை. அவள் உண்மையில் அதில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உபதேசம் பண்ணக் கூடாது” என்றேன். அவர், 'அது உன்னுடைய சொந்தக் கருத்தா?“ என்று கேட்டார். “நான் காண்கிறபடி, அது வேதத்தின் கருத்து. வேதம் அவ்விதம் தான் உரைத்துள்ளது' என்றேன். அவர், “இளைஞனே, அந்த கருத்தை நீ கொண்டிருப்பதற்காக நீ பெற்றுள்ள லைசென்ஸை உன்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ள முடியும்” என்றார். அதற்கு நான், “அவர்களுக்கு அந்த தொல்லை கொடுக்க மாட்டேன். நானே அதை கொடுத்து விடுகிறேன், டாக்டர் டேவிஸ். உங்களை அவமதிப்பதற்காக அவ்விதம் செய்ய வில்லை.” என்றேன். அவர் லைசென்ஸை வாங்கிக் கொள்ளவில்லை. அவர் அதை அப்படியே விட்டு விட்டார். 187அதன் பிறகு அவர் இவ்விஷயத்தில் என்னுடன் நேரடி .யாக விவாதம் ஒன்றை நடத்தப் போவதாகக் கூறினார். “சரி, எந்த நேரத்திலும்” என்றேன் நான். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. சற்று கழிந்து, கர்த்தர் என்னில் பேசிய போது, கர்த்தருடைய தூதன் வந்த போது, அவர் அதைக் குறித்து கேலி செய்தார். நான் அவரிடம், “நல்லது, டாக்டர் டேவிஸ், இப்பொழுதே என் லைசென்ஸை துறந்து விடுவது நலம். ஏனெனில் அது எனக்கு ஒரு பாரமாக இருக்கும். நான் குருப்பட்டம் பெற்று சிறிது காலம் இங்கிருந்தேன். இனிமேல் அது எனக்கு பாரமாக இருக்கும். எனவே அதை இப்பொழுதே துறந்து விடுவது நலமாயிருக்கும்” என்றேன் . எனவே, என்னால் பாப்டிஸ்ட் சபையில் தங்கியிருந்து பாப்டிஸ்டு உபதேசத்தைப் போதித்து, பாப்டிஸ்ட் விசுவாசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு சபை என்பதால், அவ்விதம் நான் செய்திருந்தால், நான் தவறு செய்தவனாயிருப்பேன், பாருங்கள். நான் ஏதோ ஒன்றை மறைக்கிறவனாயிருப்பேன். நான் உண்மையுள்ளவனாயிருந்தால், நான் பாப்டிஸ்ட் ஜனங்களிடம் சென்று (என்னுடைய போதகரிடத்திலோ அல்லது எனக்கு விளக்கம் அளிக்கக் கூடியவர் எவரிடத்திலாகிலும்) அவர்களிடம் ஜீவ 'வார்த்தையைக் குறித்துக் கேட்பேன். அவர்களால் வேத்திலிருந்து அதை எடுத்துக் காண்பித்து என் உணர்வுகளை திருப்திபடுத்துவார்களானால், அப்பொழுது அவர்கள் உரைக்கும் விதமாகவே நானும் உரைப்பேன் , பாருங்கள், நான் ஒரு பாப்டிஸ்டாக இருப்பேன். 188ஆகையால் தான் நான் சுயாதீனமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் தான் நான் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்திருக்கவில்லை. ஸ்தாபனங்கள் வேத விரோதமானவை என்பது என் கருத்து. எனவே தான் நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. அவ்விதம் சேர்ந்திராதது நியாயமானது என்று நான் உணருகிறேன். பாருங்கள்? எனவே நான் ஜனங்களை சேர்த்துக் கொண்டு அவர்களை அங்கத்தினர்களாக்குவதில்லை. நாம் அங்கத்தினர்களாக பிறக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் பிறக்கிறோம் என்பது என் கருத்து. பாருங்கள்? நாங்கள் ஜனங்களின் பெயர்களை புத்தகத்திலிருந்து எடுத்துப் போட்டு அவர்களை சபையிலிருந்து புறம்பாக்குவதில்லை. ஏனெனில அப்படி செய்வது நமது வேலையல்ல என்று நான் கருதுகிறேன். தேவனே சபையை விட்டுப் புறம்பாக்கும் பணியைச் செய்கிறார் என்பது என் கருத்து. பாருங்கள்? ஆனால் நான் விசுவாசிப்பது என்னவெனில், ஒரு சகோதரன் ஏதாகிலும் தவறொன்றைச் செய்யும் போது... 189உதாரணமாக சகோ நெவில் அல்லது சகோ ஜூனியர் அல்லது.... இங்குள்ள சகோதரர் ஒருவர், டீகன்மார்கள் தர்ம கர்த்தாக்கள் ஒருவர் தவறு செய்கிறார் என்பதை அவர்கள் கண்டு பிடிப்பார்களானால், சபை என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்கள் ஒன்று கூடி இந்த சகோதரனுக்காக ஜெபிக்க வேண்டும், அவர் அப்பொழுதும் நேராக்கிக் கொள்ளவில்லை என்றால், இரண்டு பேர்கள் அவரிடம் சென்று அவரிடம் எடுத்துக் கூறட்டும். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டால், அதை சபைக்கு முன்பாக அறிவியுங்கள். அப்பொழுதும் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், அப்பொழுது அது முழு சபையின் வேலையாயுள்ளது - மேய்ப்பர், மூப்பர்கள் மற்றெல்லாருமே சேர்ந்து அதை செய்ய வேண்டும். டீகன்மார் குழுவுக்கோ அல்லது தர்மகர்த்தா குழுவுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ மட்டும் அதை செய்ய அதிகாரமில்லை. யாரையாவிலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைக்காக ஐக்கியத்திலிருந்து வெளியாக்க வேண்டுமென்றால் - அவர் இங்கிருப்பதற்கு தகுதியுள்ள மனிதன் அல்ல, அவர் இங்கு வந்து நமது பெண்களை அசுசிப்படுத்தி, நமது ஸ்திரீகளை அவமதித்து, அதே நேரத்தில் அவர் நம்மில் ஒருவர் என்று அழைத்துக்கொண்டால். பாருங்கள்? அவர் வெளியில் வேறங்காகிலும் இருந்து நமது மத்தியில் வந்திருப்பாரானால், அதைக் குறித்து நாம் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட ஒருவர் நமது மனைவிகளுடன் காதல் புரிய முயன்று நமது பெண்மக்களை அவமதித்து, அவ்விதம் எதாகிலும் ஒன்றைச் செய்து, அல்லது நமது பையன்களை கூட்டிச் சென்று தாறுமாறான வழியில் அவர்களுடன் நடந்து கொண்டு அவர்களை சீர்குலையும்படி செய்தால், அப்படி ஏதாவதொன்றைச் செய்தால், இவைகளை உடனே கவனித்து, அவரை ஐக்கியத்தினின்று புறம்பாக்கி, அவர் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அவர் பங்கு கொள்ள அனுமதிக்க முடியாது. “அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.” 190ஒரு ஆள் கூறினவிதமாக, “அவர் இது அதுவாக இருக்கிறார், அவருக்காக ஜெபியுங்கள்' என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் நடந்ததை என்னால் மறக்கமுடியாது. சகோ லேவி பெட்ரஸ் ஒரு மகத்தான தேவனுடைய மனிதன். நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், மேசையினருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் அங்கு உண்டாயிருந்தன. கார்டன் லிண்ட்ஸே லேவி பெட்ரஸிடம், “இந்த பெரிய சபைக்கு மேற்பார்வையாளர் யார்?” என்று கேட்டார். அந்த சபை அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை விட மிகப் பெரிய சபை. அவர், “யார் இதற்கு மேற்பார்வையாளர்?” என்று கேட்டார். நற்பண்பு கொண்ட லேவி பெட்ரஸ் “இயேசு என்று பதிலளித்தார். அவர், “உங்கள் பிரஸ்பிடர் (presbyter) யார்? என்று கேட்டார், அதற்கும் அவர் ”இயேசு “ என்று பதிலளித்தார். அவர், “அது சரியென்று எனக்குத் தெரியும். நாங்களும் எங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்விதமே விசுவாசிக்கிறோம். ஆனால் உதாரணமாக ஒரு சகோதரன் வழி விலகுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை சபையிலிருந்து புறம்பாக்க அதிகாரமுடையவர் யார்? என்று கேட்டார். அதற்கு லேவி பெட்ரஸ், “நாங்கள் புறம்பாக்குதில்லை' என்றார்.”அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கார்டன் லிண்ட்ஸே கேட்டார். அவர், “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம்” என்றார். அது மிகவும் இனிமையான செயல் என்று எண்ணினேன். அது எனக்கு கிறிஸ்தவத் தன்மையாக ஒலித்தது. “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம். யாருமே அவரைப் புறம்பாக்குவதில்லை, அவர்கள் அவருக்காக ஜெபிக்கின்றனர். 191கார்டன் லிண்டஸே, “சில சகோதரர்கள் அவருடன் இணங்கி, வேறு சில சகோதரர்கள் அவருடன் ஐக்கியங் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? ஒரு மேய்ப்பர் பெண்களின் மனிதனாக ஆகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சில மேய்ப்பர்கள் அவரைத் தங்கள் சபைகளுக்கு அழைக்க மறுக்கின்றனர். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை உங்கள் ஸ்தாபனத்திலிருந்து நீக்கி விடுவீர்களா?' என்று கேட்டார். அதற்கு லேவி பெட்ரஸ், “இல்லை, நாங்கள் அவரைத் தனியே விட்டு விட்டு, அவருக்காக ஜெபிப்போம். இதுவரைக்கும் நாங்கள் ஒருவரையும் இழக்கவில்லை. அவர்கள் எப்படியாயினும் திரும்ப வந்து விடுகின்றனர்' என்றார். கார்டன் லிண்ட்ஸே, “நல்லது. சிலருக்கு அவர் வேண்டுமென்றும் மற்றவர்களுக்கு அவர் வேண்டாமென்றும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். “அவர் வேண்டுமென்று நினைக்கிறவர்கள் அவரை ஏற்றுக் கொள்கின்றனர், அவரை வேண்டாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார். எனவே அம்முறையை கடைபிடிப்பது சிறந்தது என்று கருதுகிறேன், இல்லையா சகோதரரே? அந்த விதமாக நாம் “சகோதரர்கள்”. 192இப்பொழுது, சகோதரரே, இங்கு கூறப்பட்டவை உங்கள் கேள்விகளுக்கு ஒருவாறு பதிலளித்தன என்றும் இன்றிரவு நடை பெற்ற கூட்டம் நமக்கு பிரயோஜனமாயிருந்தது என்றும் நம்கிறேன். நான் சிறிது காலம் வெளியே சென்றிருப்பேன். மேற்கில் நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்குச் செல்கிறேன். நான் தாழ்மையுடன் உங்கள் ஜெபங்களைக் கோருகிறேன். இங்கு நான் அளித்த சில பதில்கள், அல்லது அவைகளில் பெரும்பாலானவை சரியான பதில்களாக இருக்கக் கூடும். அல்லது அவைகளில் ஒன்றுமே சரியான பதில்களாக இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவைகள் என் சிந்தனைக்கேற்றபடி சிறந்த வகையில் சேகரிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டவை. கடைசி சில கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்க்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அவைகள்... நான் என்ன கூறுகிறேன் என்றால், அவைகள் சபையில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற ... வேதவசனங்கள். அவைகளை ஆழ்ந்து விவரிக்கத் தொடங்கினால் அவை மிகவும் கடினமுள்ள செயலாயிருக்கும் என்று எண்ணினேன். அவை பெரும் பாலும் சபையைக் குறித்த கேள்விகளே. 193நீங்கள் இவ்விதமாக தொடர்ந்து நிலைத்து வருகிறதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு எந்த விதமான ஒழுங்கின்மையோ, அதிருப்தியோ, குழப்பமோ காணப்படவில்லை. எந்த ஒரு கேள்வியும் விவாதிக்கப்பட்டு, “இது தவறு, இது தவறு. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறப்பட வில்லை. கேள்வி கேட்டவர்கள் தங்கள் நிலையை பெலப்படுத்திக் கொள்வதற்கென ஒன்றை அறிந்து கொள்ள விரும்பின் சகோதரர்களே, அவ்வளவு தான். அது தங்கள் போராயுதங்களை இன்னும் இறுகக் கட்டிக் கொள்ள முனைதலே. இவ்வாறு போராயுதங்களை இறுகக் கட்ட உதவும் இன்னும் அநேக கூட்டங்கள் நமக்கு உண்டாயிருக்கும் என்று நம்புகிறேன். 521.சகோதரரே, என் பேராயுதங்களும் இறுகக் கட்டப்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் போராயுதங்களை நான் இன்னும் சிறிது இறுகக் கட்ட தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று எனக்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள். நான் வாழ்கின்ற வாழ்க்கையும், நான் செய்கின்ற செயல்களும், இன்னும் அதிகமான தாழ்மையின் ஆவியைக் கொண்டும், மிகுந்த ஆவலுடனும் நான் செய்வேனாக. தேவன் தாமே சற்கென இதற்கு முன் எனக்கு இல்லாத அளவுக்கு ஒருஇருதயத்தைக் தருவராக. அதையே உங்களுக்கும் விரும்பி நான் ஜெபிக்கிறேன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 194உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டு விட்டேன். இப்பொழுது நேரம் பதினொன்று மணிக்கு ஐந்து நிமிடங்கள் .... இப்பொழுது, சகோ நெவில், நான் .... நான் போக வேண்டிய இடம் ஏறக்குறைய தொளாயிரம் சொச்சம் மைல்களே என்று அறிகிறேன். எனவே நான் திங்கள் காலை வரைக்கும் இவ்விடம் விட்டுச் செல்லப் போவதில்லை. எனவே ஞாயிறு பள்ளிக்காக இங்கு ஞாயிறன்று வரலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க ஞாயிறன்று உங்கள் விருந்தினராக இங்கு வருவேன். பாருங்கள்? ஆனால்... நல்லது , சகோதரனே. ஆம், சகோதரனே. சகோ. நெவில், இதுதான் காரணம், சகோதரனே. நான் .... உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே என் மீது கருணை கொண்டவராய் உமது பிரசங்க பீடத்தை எனக்கு அளித்து வந்திருக்கிறீர்கள்... நான் உங்களுக்கு மூத்த மூப்பன் என்பதைப் போல. ஆனால் சகோ நெவில், நான் அவ்விதம் என்னைக் கருதிக் கொள்வதேயில்லை. நாம் சகோதரர்கள் என்று தான் உணர்ந்து வந்திருக்கிறேன். சகோ ரட்டல், சகோ.ஜுனி, ஓ, அங்குள்ள சகோதரர் அனைவரும், நாம் எல்லோரும் சகோதரர்களாயிருக்கிறோம். பாருங்கள். 195ஆனால் என்ன... காரணம் என்னவெனில், எனது தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது, பாருங்கள். எனக்கு தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு யுத்தம் உள்ளது. இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு எனக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஓய்வு கிடைத்து, நான் மறுபடியும் கூட்டங்களை அங்கு தொடங்குவேன். சகோ. ஜூனி, நான் திரும்பி வந்தவுடனே , உங்கள் சபைக்கு வந்து உங்களை மறுபடியும் காணவேண்டுமென்று விரும்புகிறேன். நேற்று உங்கள் சிறு சபையைக் கடந்து சென்றேன் என்று நினைக்கிறன். என் மனைவி, “நான் நினைக்கிறேன், அ. என்றாள். அது க்ளெனெல்லன் பூங்காவுக்குப் பக்கத்தில்!பாதையின் அருகில் உள்ளதா? அங்கு வந்து அந்த செல்லர்ஸ்பர்க் மக்களிடம் பேச விரும்புகிறேன். அது அருமையாயிருக்கும். 196சகோ. ரட்டல், தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அங்கு நான் வரவிரும்புகிறேன், நீங்கள் ஒரு அருமையான குழுவைப் பெற்றிருக்கிறீர்கள். இன்றிரவு உட்கார்ந்து கொண்டு, ஒரு முதிய மூப்பர் கேட்பது போல் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அங்குள்ள சகோ. பீலர் நமது சுவிசேஷக சகோதரர்களில் ஒருவர். உங்கள் கூட்டங்களில் ஒன்றை நான் எங்காவது எப்பொழுதாவது சந்திப்பேன் என்ற நம்புகிறேன், சிறிது பாதிப்பை உண்டு பண்ணுவதற்கென, உங்களை உயர்த்துவதற்கு ஏதாவதொன்றை எங்காவது கூற . உங்களுக்கும் வேறு எல்லாருக்குமே, இங்குள்ள சகோ ஸ்ட்ரிக்கருக்கும், சுவிசேஷகர்களுக்கும், நான் கூறுவதற்கு எப்பொழுதும் நல்வார்த்தையைக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள சகோ. காலின்ஸ் என்றாவது ஒரு நாள் ஊழியத்தில் முழு நேர போதகராயிருப்பார் என்று நம்புகிறேன். தீரமுள்ள மனிதர்கள், உண்மையான விசுவாசம் கொண்ட மனிதர்களாகிய உங்களுடனும், டீகன்மார்கள், தர்ம கர்த்தாக்கள், சகோதரர்களாகிய உங்கள் அனைவருடனும் தேவன் இருப்பாராக. 197நீங்கள்... இங்குள்ள சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. நீங்கள்... [சகோ. கால்ட்வெல் “சகோ. கால்ட்வெல்' என்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் மூப்பர்களில் ஒருவர், அப்படி ஏதோ ஒன்று இல்லையா, அல்லது வெறும் (போதகர்”) போதகர். “நான் ஒரு போதகர். நான் சர்ச் ஆஃப் காட் சபையில் போதகராயிருந்தேன். அங்கு முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என்னால் முடியவில்லை. அங்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் பிரசங்கிக்க இயலவில்லை. அவர்கள் எனக்கு மிகவும் உயர்ந்த ஊழிய லைசென்ஸை அளித்திருந்தனர். ஆனால் அவைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டேன். நீங்கள் இந்த மகத்தான செய்திகளைப் பிரசங்கிக்கக்முதற்கு, அவைகளைப் புறக்கணித்து விட்டு, அந்த ஸ்தாபனத்தை விட்டு வெளியேறி விட்டேன். இப்பொழுது நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”]. நன்றி, சகோதரனே. எங்கள் ஐக்கியத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நமது நற்சாட்சிப் பத்திரங்கள் மேலேயிருந்து அளிக்கப்பட்டவை. நமது வாழ்க்கையே நமது நற்சாட்சிப் பத்திரமாக அமைந்துள்ளது. பாருங்கள். அதுவே நமது நற்சாட்சிப் பத்திரம். “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை”. பாருங்கள்? அது உண்மை. அதுவே நமது நற்சாட்சி பத்திரம். ஒரு முதிய... “நமக்கு அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை” என்று ஹாவர்ட் கூறுவது வழக்கம். அது உண்மை. “அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை. வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை .” 198சகோ. கால்ட்வெல், உங்களை நாங்கள் பெற்றிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு பெரிய ஸ்தாபனத்திலிருந்து வெளி வந்திருக்கிறீர்கள். அது ஆண்டர்ஸன் சர்ச் ஆப் காட் என்று நினைக்கிறேன் சகோ. கால்ட்வெல், “க்ளீவ்லாண்ட்' என்கிறார் - ஆசி) க்ளீவ்லாண்டு சபை, பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப் காட் நான் இங்குள்ள ...? சபையில் போதகராயிருந்திருக்கிறேன்). ஓ, ஆமாம். ஓ, ஆமாம். நான் அந்த சபைக்கு வந்திருக்கிறேன். ஒரு முறை சகோ. நெவில்..... இல்லை சகோ. உட்டுடன் வந்திருக்கிறேன். உங்கள் சபையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து எங்களுக்கு வேட்டை நாய் கிடைத்தது. நான் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் உங்களைக் குறித்து பேசினார்கள். நல்லது. நான் நிச்சயமாக ... (”என் சபையிலா?) ஒ? (“சகோ பர்ன்ஸ் ) அது சரி, சகோ. பர்ன்ஸ் . அது சரி (சகோ. கால்ட்வெல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் - ஆசி). ஒ? ஆம், ஓ, பெர்தா , அது சரி. ஓ, அது அருமையானது. 199அங்குள்ள சகோ. ரூக், அவர் இப்பொழுது மேய்ப்பராகி விட்டாரா, அவர் சுவிசேஷகர் என்று நினைக்கிறேன். அது சரியா? அல்லது நீங்கள் மேய்ப்பராக இருக்கிறீர்களா? (சகேர் “சுவிசேஷகன் மட்டுமே” என்கிறார் - ஆசி). சுவிசேஷகர். சகேர் . உங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். கர்த்தருக்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில மகத்தான ஊழியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள்... நீங்கள் இந்தியானா போலீஸுக்குச் சென்று கூட்டங்களை நடத்தி கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை வென்றதாக கேள்விப்பட்டேன். தேவன் உங்களோடு இருப்பாராக, சகோ. ரூக், உங்களைக் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பழைய ட்ராக்டரை ஓட்டி, உங்கள் முற்றத்தில் உரமிடுவதைக் கண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் வெளியே கர்த்தருக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய முயல்வதை நான் காண்கிறேன். உங்களை அவர் ஊழியத்துக்கு அழைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள், சகோதரனே தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. எதன் பேரிலும் ஒப்புரவாகாதிருங்கள்; ஆனால் அதை இனிமையான ஆவியுடன் செய்யுங்கள். உங்கள் செய்தி எப்பொழுதும் பரிசுத்த ஆவியின் இனிமையினால் சாரமேறினதாக இருப்பதாக. 200சகோ ஸ்ட்ரிக்கர்... (ஒரு சகோதரன், “உங்கள் அனைவருடைய ஜெபங்களையும் நாங்கள் வாஞ்சிக்கிறோம். நாங்கள் வடக்கு 'வெர்னனில் ஒரு சபையைத் துவங்க முயன்று கொண்டிருக்கிறோம்” என்கிறார் - ஆசி]. ஓ, அதை பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். (“இது வரைக்கும் நன்றாக நடந்து வருகிறது. அது சரி. பில்லி, நீ எப்பொழுது மேய்ப்பன் ஊழியம் செய்யப் போகிறாய்? இங்குள்ள டாக்டர் கோட் (Goad), டாக்டர் மெர்சியர், நான் நம்புகிறேன். அவ்விதம் தான் நாம் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்கிறோம். சகோ கோட் அந்த நிலையை அடைந்து விட்டார். அவர் பட்டம் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர், இப்பொழுது அவரால் தோட்டாக்களை நிறைக்க முடியும். ஆம் சகோ. லியோவை அவர் உள்ள விதமாகவே விட்டு விடலாமென்று நினைக்கிறேன் .... அவர் 'டாக்டர்' என்னும் பட்டத்தைக் கொண்டவராய் தொடர்ந்து இருக்கட்டும். நல்லது, பின்னால் உள்ள 'டாக்டர்' பிரான்ஹாமே, நல்ல விதமாக 'டாக்டர்' செய்து வைத்திருங்கள், விளக்கு அவளில் நல்லவிதமாக எரிந்து கொண்டிருக்கின்றது. நான் என்ன சொல்லுகிறேன் என்றால், விசேஷித்த கூட்டங்கள் நடை பெறும் போது, நான் நிர்வாகக் குழுவிடம் பேசி உனக்கு ஏதாகிலும் அதிக பணம் கொடுப்பார்களா என்று பார்க்கிறேன் சகோ. பிரான்ஹாம் சிரிக்கிறார் - ஆசி. இந்த இடத்தைப் பெருக்கி மற்ற வேலைகளைச் செய்வதனால், அது உன்னை சந்தோஷப்படுத்தும். 201டாக்டர் உட். அவரை டாக்டர்“ என்று நான் அழைக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்று நீங்கள் வியக்கலாம். அவரைத் தவறாக அவ்வாறு அழைக்கவில்லை. அவர் மரத்தை துண்டுகளாக வெட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். கர்த்தர் ஒரு அழகான மரத்தை வளரச் செய்தால், அவர் அதை வெட்டி அதைக்கொண்டு ஒரு வீட்டை உண்டாக்குகிறார். அவ்விதமான சிறந்த பணியை நான் இதுவரை கண்டதில்லை. எனவே அவரை நான் டாக்டர் என்று அழைக்க வேண்டியவனாயிருக்கிறேன். சகோ. டெய்லர், நீங்கள் இன்னும் கதவண்டை விசுவாசத்துடன் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒருவருக்கு இருக்கை அளிக்கிறீர்கள். உங்களை நான் இவ்விதம் கருதுகிறேன்: “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்” (சங் 84:10). அது உண்மை. நிச்சயமாக. சகோ ஹிக்கர்ஸன், நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி மேலே வந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுடைய ... நான் ... நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி, வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உத்தமத்தையும் நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கென்று செய்யும் எல்லாவற்றையும் நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்து, உங்களை உண்மையுள்ள டீகனாக ஆக்குவராக, நீங்கள் அவ்விதமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வீடு கீழ்ப்படிதலுக்குள் வந்து நீங்கள் இருந்து வந்திருக்கிற மற்றொல்லா காரியங்களிலும். 202சகோ. ஃபிரட், நீங்கள் கனடாவிலிருந்து எங்களி வந்து நீண்ட காலம் ஆகவில்லை. நீங்கள் கனடா தேசத் சேர்ந்தவரென்று நாங்கள் எண்ணுவதில்லை. நீங்கள் தர்மகவாக எங்களுடன் கூட சேர்ந்து அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறீர் என்று தான் எண்ணுகிறோம், நீங்களும், சகோ. உட்டும் சகோ. ராபர்ஸனுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து உங்கள் உத்தியோகத்தை திறம்பட செய்கிறீர்கள். சகோ. ஈகன் இன்றிரவு இங்கில்லை. சகோ. ராபர்ஸன், நீங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறீர்கள். இப்பொழுது விசாரணை நடந்து கொண்டிருக்கும் வரி வழக்கில் சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் மிகவும் உதவியாக இருக்கின்றனர். கேள்விகளும் பதில்களும் தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல் Jeffersonville, Indiana, USA 61-0723E COD-14 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்று எனக்காக ஜெபியுங்கள். சற்று குளிர்ச்சியாக்கத் தக்கதாக நாங்கள் சற்று குளித்தோம், அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாகவுள்ளோம், அதே விதமாக நமக்குள்ளாக, ஆவிக்குரிய பொழியுதல்களில் ஒன்று நமக்கிருந்து நமக்கு ஒரு சிறு உதவி செய்யுமென்று நான் நம்புகிறேன். நான் நம்புகிறேன் - சகோதரன் நெவில் அதற்காக நாங்கள் அதை உம்மிடம் நாங்கள் திருப்புவோமானால், அதைக் குறித்தென்ன? நான் பேசுவதா, நான் சிறிது... அந்த காற்றை சற்று என் பக்கமாக திருப்பவும். அப்பொழுது நான் இந்த... என்னுடைய தலை வழுக்கையாக இருப்பதால், வியர்வை உள்ளே சென்று என் தொண்டையில் நின்றுவிடுகிறது. இப்பொழுது, நான் சிலவற்றை தந்தேன். இன்றிரவிற்கான சில கேள்விகள், மற்றும் பதில்கள். இதை நாங்கள் செய்வதற்கான காரணம் என்னவென்றால் - ஜனங்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான். 2இவ்வாறு செய்வது ஒரு மேய்ப்பனுக்கு மிகவும் நல்லதான் ஒன்றாகும் என்று நான் எண்ணுகிறேன். ஜனங்கள் தங்கள் கேள்விகளை எழுதி வைப்பார்களானால் அப்பொழுது அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். நான் நினைப்பது என்னவென்றால் மேய்ப்பனால் இன்னுமாக, நம்முடைய எண்ணங்களையும், எதையாவது ஒன்றை நாம் காண்போமானால் அதையும் நம்முடைய மேய்ப்பர்களுக்கு மற்றும் ஆவிக்குரிய வழி நடத்துபவர்களுக்கு தெரிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும், அதனால் தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம், நம்மால் ஒவ்வொரு காரியத்தையும் இடறலின்றியும் மற்றும் அருமையாகவும் நடத்தவும், செய்யவும் முடியும். மேலும் அடுத்து நான்... அரைமணி நேரத்திற்கு முன்னர் என்னிடம் சுமார் இரண்டு அல்லது மூன்று... இக்காலை ஆராதனை முடிந்தவுடன் இந்த கேள்விகளை பில்லி என்னிடம் கொண்டு வந்தான். அப்பொழுது நான் உள்ளே சென்று வேதாகமத்தை ஆராய்ந்தேன், நான் குறிப்பிட்டிருந்ததாலும், இங்கே இருப்பதாலும் இன்றிரவு சிறிது பேசலாம் என்று எண்ணினேன், மேலும் சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் என்னை அழைத்து ''இதைப் பிடியுங்கள், இப்பொழுது என்னிடம் கை நிறைய உள்ளது'' என்றான். ஆகவே நான் சரியாக இவைகளை எடுத்து எனக்குத் அறிந்தவரை இவைகளுக்கு பதிலளிப்பேன். மேலும் குறித்த நேரத்தில் நான் பதிலளித்து முடித்துவிட்டால், ஒரு சிறிய பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன், ஒருக்கால் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் மட்டுமே பேச இருக்கும் ஒரு சிறிய பொருளை நான் வைத்திருக்கிறேன். 3மேலும், நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை தேவனுடைய கிருபையால், தானியேலின் எழுபது வாரங்களை என்னால் முடிந்த அளவிற்கு சிறந்த முறையில், விளக்குவேன். நான் இக்காலை கூறினவாறு அது ஒரு மகத்தான வேத வாக்கியமாகும். அதன் பேரில் பேசுவதற்கு அதிகம் இல்லை, ஆனால் அது எந்த இடத்தை சார்ந்திருக்கிறதோ அதில் அதை பொருத்த, வேதாகமம் முழுவதுமாக அதை பொருத்தி அமைப்பதாக இருக்கும். நாம் வெளிப்படுத்தல் 1-ல் ஆரம்பித்துள்ளோம், 6-வது அதிகாரத்திற்குள் நாம் வந்துள்ளோம். மேலும் அடுத்ததாக, இப்பொழுது நாம் ஏழு கடைசி முத்திரைகளுக்குச் செல்வோம். அந்த முத்திரைகள் 6-வது அதிகாரத்திலிருந்து, 6-வது அதிகாரத்தின் கடைசி பகுதியிலிருந்து, 19-வது அதிகாரம் உட்பட செல்கின்றது. ஆகவே அதை முடிக்க நீண்ட சமயம் தேவைப்படும். இப்பொழுது நான் அதற்காக, ஏழு இரவுகள் எடுத்து, ஏழு முத்திரைகளை பேசி முடிக்கக் கூடும். ஆனால் அவ்விதமாகச் செய்தால், அந்த மகத்தான பகுதியை இங்கே இந்த இடத்தில் இருக்கும் மக்கள் காண ஏதுவில்லாமல் போய்விடும். மேலும் அது ஆழமாக போதிக்கப்படாவிடில், அது சிறந்ததாக இருக்காது. ஆனால் அவைகளில் முதல் மூன்று அல்லது நான்கு வெறும் நிகழ்வுகள் தான், நாம் அதைப் பார்க்கலாம், ஒரு வரிசையாக அவை வருகின்றன; ஆனால் அதற்கடுத்ததாக, சரியாக மறுபடியுமாக தானியேலுக்குள்ளாக நாம் சென்று, திரும்பி ஆதியாகமத்திற்குள் சென்று, திரும்பி ஆதியாகமத்திற்குள் வந்து, வெளிப்படுத்தின விசேஷத்திற்குள் சென்று, திரும்பி சுவிசேஷங்களுக்குள் வந்து அதை அப்படியே அதற்குள்ளாக பின்னிபிணைக்க வேண்டியிருக்கும், ஏனெனில் அது இஸ்ரவேலின் அடிச்சுவடாகும், தேவன் இஸ்ரவேலுடன் ஈடுபடுதல். நாம் அந்த பகுதியோடு நிறுத்த வேண்டியதில்லை. நாம் நேரடியாக ஏழு முத்திரைகளுக்குள் சென்று தேவனுடைய வழிநடத்துதலை காணும் வரை நாம் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். தன்னுடைய கர்த்தரோடு மணவாளனும் மணவாட்டியுமாக 19-ஆம் அதிகாரம் வரும் வரைக்கும் சபையானது பூமியில் எடுக்கப்படும் அந்த சபைதான் கடைசியாக இருக்கின்ற சபை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலோடு ஈடுபடுதல் இருக்கும். ஆகவே இப்பொழுது தானியேலின் எழுபது வாரங்களை நாம் பார்க்கும் போது, அது வரவிருக்கின்ற முதலாம் முத்திரை திறக்கப்படுதலுக்கு ஒரு காட்சியை அமைத்து கவனத்துக்குரியதாக்குகிறது. 4பிறகு நான் நினைத்தேன், கர்த்தருக்கு சித்தமானால், நான்... அடுத்த ஞாயிறு நான் அதன் பேரில் பேசுவேன். ஞாயிறு காலை நான் அதை முடிக்க இயலாமல் போகுமென்றால், அப்பொழுது நான் மறுபடியுமாக ஞாயிறு இரவில் அதை முயற்சிப்பேன். அது நமக்கு வழியை திறந்து கொடுக்கும், கர்த்தர் நம்மை வழி நடத்துவாரானால், அப்போது அது வழியை உண்டு பண்ணும். அந்த பகுதியோடு நாம் நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை. அதிலிருந்து நாம் நேரடியாக ஏழு முத்திரைகளுக்குள்ளாக கடந்த செல்லலாம். கர்த்தர் வழி நடத்துமட்டுமாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம். இப்பொழுது, இன்றிரவு எங்களிடம் சில கேள்விகள் உள்ளன, அவையெல்லாம் அறிவுள்ள, அறிவிற்கு ஏற்புடைய கேள்விகளாக இருக்கின்றன. நான் முதலாவதாக ஒரு நிமிடம் பேச விரும்புகிற ஒன்று அதில் இருந்தது, அது யாரோ ஒருவர்... இது ஒரு கேள்வி அல்ல, யாரோ ஒருவர் என்னிடம் ஒரு காரியத்துக்காக பதில் கோருகிறார். என்னுடைய சாவிகள் எங்கே உள்ளது? தயவு கூர்ந்து எனக்கு கூறுங்கள். இன்று மதியம் அவர்கள் அதை தொலைத்துவிட்டனர். 5இப்பொழுது, நான் உங்களுக்கு கூறுகிறேன், சில வாரங்களுக்கு முன்னர், சில நாட்களுக்கு முன்னர் நான் இங்கே கூடாரத்தில் இருந்தேன்... நான் ஜெபத்தில் தரித்து, இந்த மக்களுடைய பொருட்கள் எங்கே உள்ளது என்பதை கண்டறியத் தக்கதாக நான் கர்த்தர் பேரில் காத்திருப்பது வழக்கம். மக்களுடைய கார்களைக் கூட நான் கண்டு பிடித்துள்ளேன். அந்த மக்கள் எங்கே அவைகளை விட்டுவிட்டனர் என்பதை கர்த்தர் என்னிடம் கூறுவார். சகோதரன் வெல்ச் ஈவான்ஸ் இங்கே வந்து தன்னுடைய காரை இழந்துவிட்டார், லூயிவில்லில் யாரோ ஒருவன் அதை திருடிச் சென்றுவிட்டான். அவரும் சகோதரன் பிரட் சாத்மன் மற்றும் சகோதரரில் சிலர்... சகோதரன் டாம் சிம்சன், என நம்புகிறேன் - அந்நாள் முழுவதுமாக இருந்தனர் அல்லது நீங்கள் அல்லவா, சகோதரன் டாம்? அவர்கள் வீட்டிற்கு வந்தனர், சகோதரன் ஈவான்ஸ் காரை இழந்து, துணிகள், மற்றும் காரில் அவர் வைத்திருந்த எல்லாவற்றையும் இழந்திருந்தார். அந்த காரை மில்லர் கடைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர், யாரோ ஒருவன் அதைத் திருடி கொண்டுபோனான். ஆம், இங்கே லூயிவில்லில் ஒரு கார் திருடும் கும்பல் உள்ளது, அவர்கள் இந்த கார்களைத் திருடி பெளலிங் கீரீன் அல்லது அதைப் போன்ற வேறொரு இடத்திற்கு அவைகளை ஓட்டிச் சென்று அவைகளுக்கு வேறு விதமான வர்ணம் தீட்டிவிடுவர். நீங்கள் கொண்டக்கியில் ஒரு காரை வைத்திருக்க அதற்கு எந்த ஒரு ஆவணமும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆகவே அவர்களால் அந்த கார்களை ஒரு சில நிமிடங்களுக்குள் மாற்றி அமைத்து அவர்கள் விரும்பும் வகையில் அவைகளை விற்றுவிடலாம். 6ஆகவே, சகோதரன் ஈவான்ஸ் தன்னுடைய சிறிய காரில் எல்லா பொருளையும் அதில் வைத்திருந்தார், கர்த்தர் எனக்கு அந்த காரைக் குறித்த பதிலைத் தந்தார். அவர்கள் வீட்டைச் சென்றடையும் முன்னர், அந்த கார் பாதி எரிபொருள் தீர்ந்த நிலையில் இங்கே நின்று கொண்டிருந்தது, அந்த காரைத் திருடியவர்கள் அதை பெளலிங் கீரீன் என்ற இடத்திற்கு ஓட்டிச் செல்கையில் கர்த்தர் அவர்களைத் திரும்பச் செய்தார், திருடர்கள் அதைத் திரும்பக் கொண்டு வந்து சரியாக அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர், காரில் இருந்த எல்லா பொருள்களும் அப்படியே இருந்தன, உபயோகிக்கப்பட்ட எரிபொருளைத் தவிர வேறு எதுவுமே திருடப்படவில்லை. அநேக முறை மக்கள் ஒரு குறிப்பிட்ட காரியங்களைக் கூறி என்னிடம் கேட்பார்கள், அப்பொழுது நான் கர்த்தரிடம் சென்று அந்த தரிசனங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன், அது வரும் வரையில் நான் காத்திருப்பேன் ஆனால் அப்படி நான் செய்வது மக்களுக்கு முன்பாக ஒரு பெரிய இடறலைக் கொண்டு வந்தது என்பதை நான் கண்டேன். உண்மையாகவே, அமெரிக்க மக்கள், சபைகள், இப்படிப்பட்ட ஒரு ஊழியத்திற்கு தயாராக இல்லை. அது சரி. அது அவர்களுடைய காலத்தை கடந்த ஒன்றாயிருக்கிறது. பாருங்கள்? ஆனால் அது எல்லா காரியங்களையும் பிறப்பிக்கிறது, உங்களில் சிலர் ''பிசாசு“ என்றும், சிலர் ஆவிகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் என்றும் அழைக்கிறீர்கள், உங்களில் சிலர் ”தேவனுடைய குமாரன்“ மற்றும் ”தேவன்“ என்றும் பலவித பெயர்களைக் கொண்டு அழைக்கிறீர்கள். பாருங்கள்? ஆகவே நான் அவ்வாறு செய்வதை விட்டு காத்திருந்து அந்த ஊழியத்தை ஆப்பிரிக்காவிலோ அல்லது தனிப்பட்ட சந்திப்புகளை இங்கே நான் வைக்கும் போது மாத்திரமே அந்த ஊழியத்தை செய்வேனென்று கர்த்தரிடம் வாக்குறுதி அளித்தேன். 7இப்பொழுது, நாங்கள் இங்கே தனிப்பட்ட சந்திப்புகளை, நேர்காணல்களை ஏற்பாடு செய்கிறோம், அதில் இப்படிப்பட்ட காரியங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆனால்... மேலும் இவ்விதமான காரியத்திற்காக சபையை அணுக வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எங்கள் செயலாளராக உள்ள என் மகன் பில்லி பாலை அணுகவும், அவன் உங்களுக்கு ஒரு சிறிய... ஒரு அனுமதி சீட்டை அளித்து அது எப்பொழுது இருக்கும், இன்னும், பிறவற்றை உங்களுக்கு கூறுவான். மேலும் அதைப் போன்ற ஒன்று தனிப்பட்ட நேர்காணல்களில் தான் செய்யப்பட வேண்டும், இங்கோ அல்லது ஊழியகளத்திலோ, அந்த காரியங்கள் இந்த வழியாகத்தான் கையாளப்பட வேண்டும். இவைகள் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு பலகையில் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பிரசங்க மேடையின் மீது வருவதென்பது... இப்பொழுது, சபையில் நாம் வரங்களை உடையவர்களாக இருக்கின்றோம். இங்கே தீர்க்கதரிசன வரத்தை கொண்டிருக்கின்ற சகோதரன் நெவில் நம்மிடம் உள்ளார். இங்கே அமர்ந்துள்ள சகோதரன் ஹிக்கின்பாத்தம், அந்நிய பாஷை பேசவும் வியாக்கியானம் அளிக்கும் வரத்தையும் கொண்டவர். நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால்... தேவன் உங்களுக்கு திறவு கோல்களை அளிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் நான் கூறுவது என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் ஒருக்கால் சகோதரன் நெவில் அல்லது சகோதரன் ஹிக்கின் பாத்தம், அல்லது சபையில் உள்ள இந்த வரங்கள் சிலவற்றின் மூலமாக இன்றிரவு பேசுவாரானால், ஒருக்கால் இவர்களால் அதைக் செய்யக்கூடும் என்று நான் அறிவுறுத்துகிறேன். இங்கே நாம் வைத்திருக்கின்ற சில கேள்விகள் பேரில் சில நிமிடங்களில்... 8ஆனால், என்னைப் பொறுத்தவரையில், இனிமேல் அமெரிக்க பொதுக் கூட்டங்களில் இதைச் செய்யமாட்டேன் என்று தேவனிடம் ஒரு வாக்குறுதியை நான் செய்திருக்கிறேன், பாருங்கள், ஏனென்றால் நான் ஊழியகளத்தை விட்டுச் செல்லும் படிக்கே அது செய்தது. அப்பொழுது சிலர் ஒரு “பிசாசு'' என்று சட்டென்று தீர்மானித்துவிடுவார்கள், மற்றவர்கள் ஒரு ''தேவன்” என்று அழைக்கத் துவங்கிவிடுவார்கள். மேலும் நீங்கள் பாருங்கள், இந்த விதமான ஊழியத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தமாக இல்லை. மேலும் தேவனால் அதை நடப்பிக்க இயலாமல் போகின்றது, இதைக் கேட்ட அந்த நபர் புரிந்து கொள்வார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இப்பொழுது, ஒருக்கால் இன்றிரவு பரிசுத்த ஆவியானவர். நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற உங்களுடைய சாவிகள் எங்கேயுள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு காண்பிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் அதைக் கண்டெடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், நீங்கள் அதை கண்டெடுத்து விடுவீர்களென்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? மேலும்... ஆனால் இப்பொழுது... ஆகவே அப்படியானால், இப்பொழுது, பில்லி பால், யாராவது இதைப் போன்ற ஒரு காரியத்தை வைத்திருந்து அவனை அணுகுவீர்களானால், அவன் அவைகளை சபைக்கு தெரியப்படுத்துவான், நான் வீட்டில் இருக்கும் போது சில அவசரமாக கவனிக்க வேண்டிய காரியங்களை பார்க்க முயற்சிப்பேன். 9இப்பொழுது, இக்கேள்விகளை நாம் அணுகுவதற்கு முன்பாக முதலாவதாக நான் கூற விரும்புவது எந்த ஒரு பதிலும் உங்களுடைய விசுவாசத்தின்படியாக அல்லது... வேதாகமத்தில் உள்ளதோடு இல்லாதிருந்தால், வார்த்தையின்படியாக அது இல்லாதிருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையே இல்லை. ஆகவே நான் இன்றிரவிற்கான பொருளை எடுத்து வேதப்பூர்வமாக இருக்கிறது என்று நான் நினைக்கின்றவைகளுக்கு பதிலளிப்பேன், ஆம், என்னால் முடிந்தவரைக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். ஆனால் கேள்விகளை சில நிமிடங்களுக்கு முன்னர் நான் பெற்றுக் கொண்டேன், மூன்று கேள்விகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அந்த மூன்றில் எதுவுமே... அவை சிறு காரியங்கள் மாத்திரமே இதைப் பாருங்கள் யாரோ ஒருவர் கண்ட சொப்பனம் அல்லது வேறொன்று, அதைப் பற்றி கூறலாமா அல்லது அதைப் போன்ற வேறொன்றைப் பற்றி என்பதை அறிய வேண்டுமென்றிருக்கிறார்கள். அவருடைய இரக்கத்தை நான் நெருங்குகையில் இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 10கர்த்தாவே, உம்முடைய நாமத்தில் அழைக்கப்பட்ட உம்முடைய மக்கள் நாங்கள். சொந்த அருமை பிள்ளைகளைப் போல எங்களை நேசித்து எங்களுக்காக அக்கறைக்கொண்டு எங்கள் மேல் கண்ணோக்கமாயிருக்கின்ற ஒரு பரமபிதாவை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறவர்களாக நாங்கள் இன்றிரவில் மகழ்ச்சி கொள்கிறோம். நான் இந்த ஜனங்களோடு எண்ணப்படுவதைக் குறித்தும், இவர்களுடைய சகோதரனாக இருப்பதைக் குறித்தும், கர்த்தாவே, நான் மகிழ்ச்சி கொள்கிறேன், இவர்களும் என்னுடைய சகோதரர்களும் சகோதரிகளுமாக இருக்கின்றனர். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கர்த்தாவே, தன்னுடைய சாவிகளை தொலைத்திருக்கும் ஒரு நபர் இங்கே உள்ளார். அந்த சாவிகள் சரியாக எங்கே இருக்கின்றது என்பதை நீர் அறிவீர். நீர் தாமே அதை வெளிப்படுத்தி, சரியாக அந்த சாவிகளுக்கு நேராக அவர்களைக் கொண்டு வரும்படியாக நான் ஜெபிக்கிறேன். அவர்களுக்கு அச்சாவிகள் விலையேறப் பெற்ற ஒன்றாகும், அது அவர்களுடைய கார் சாவி. ஆகவே பிதாவே, நீர் தாமே இந்த மக்களின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்குமாறு நான் ஜெபிக்கிறேன். எங்களுடைய மேய்ப்பரும் எங்கள் அருமை சகோதரனுமாகிய சகோதரன் நெவிலை நீர் தாமே ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். எய்த் அன்ட் பென் தெருவின் மூலையில் தொழுது கொண்டிருக்கின்ற கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாகிய எங்கள் சபையில் இந்த மகத்தான ஆவிக்குரிய வரங்களிலே எங்களிடையே நீர் கிரியை செய்து கொண்டிருப்பதை காண்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். அந்த ஜனக்கூட்டத்தில் நாங்களும் ஒரு அங்கத்தினராக எண்ணப்பட்டிருப்பதையும், தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அறிந்து கொள்ளும்போது நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். எங்கள் மேய்ப்பராகிய சகோதரன் நெவில், சகோதரன் ஹிக்கின் பாத்தம்ஸ், சகோதரன் ஃபங்க், மற்றும் சகோதரன் ஜூனியர் ஜாக்சன் மற்றும் அந்நிய பாஷையில் பேசி வியாக்கியானம் அளிக்கின்ற எங்கள் சகோதரிகளையும் நீர் தாமே ஆசீர்வதிக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். பிதாவே, நீர் தாமே இந்த மகத்தானவரங்களின் மூலமாக தொடர்ந்து உம்மை வெளிப்படுத்தி, அதில் எங்கள் சபையானது ஒரு ஆவிக்குரிய சபையாக அறியப்படுவதாக, சோர்வாக, பாரப்பட்டுள்ள மக்கள் உள்ளே வந்து சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமுகத்தில் உட்கார்ந்து, அவர் தாமே பேசி இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதை அறிந்து கொள்ள, நான் ஜெபிக்கிறேன். 11பிதாவே, இன்றிரவு நீர் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து எங்களை ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கின்றேன். கர்த்தாவே, இவைகளில் சில, சற்று மிருதுவானதாகவும் சில கேள்விகள் சற்று கடுமையானதாகவும் உள்ளன. கேள்வி கேட்ட அனைவருக்கும் இது ஒரு கடுமையான கேள்வியாக அமையும். இது அவர்கள் இருதயத்தில் இருக்கின்ற ஒன்றாகும், அது, சரி செய்யப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். பிதாவே, இக்கடமைகளைச் செய்வதற்கு நாங்கள் போதுமானவர்களல்ல, ஆனால் நீர் போதுமானதற்கு மேலானவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே நீர் தாமே இக்கேள்விகளை எங்களுக்கு வியாக்கியானித்து விளக்குமாறு ஜெபிக்கிறோம், அதனால் நாங்கள் மக்களுக்கு சரியான பதிலை அளிப்போமாக, அதனால் இவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு சபைதாமே உயர்த்தப்படுவதாக. தேவனுடைய நாமம் தாமே கனப்படுத்தப்படுவதாக. இப்பொழுது, பிதாவே, இது உம்முடைய சித்தமாக இருக்குமானால், இந்த வாரத்தில் நீர் தாமே எங்களோடு இருந்து இடைப்பட்டு, நான் தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் ஆராய்கையில் எனக்கு உதவும், அதனால் உம்முடைய சித்தமாக இருக்குமானால் அடுத்த ஞாயிறு காலை, அந்த மக்களுக்கு நான் வேத வசனத்தை திறக்க என்னால் இயலும்படிக்கும் செய்யும். அவர்களுடைய ஆத்துமாக்கள் தாமே புத்துணர்வு பெற்றுக் கொள்ளும்படிக்கு, தேவனே இதை அருள்வீராக. ஆழமான காரியங்களை நாடி தேடுகிறவர்களுக்கு, ஆண்டவரே, அவர்களுக்கு போதித்தருளும். இழக்கப்பட்டுப் போயிருப்பவர்களை இரட்சித்தருளும். வியாதிப்பட்டவர்களை சுகப்படுத்தும். பிதாவே, நாங்கள் எல்லாரும் உம்பேரில் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். 12இப்பொழுது, முதலாவது கேள்வியானது முற்றிலுமாக ஒரு கேள்வியைப் போன்று இல்லை, ஒரு சிறிய காரியம் சொல்லுங்கள், இதற்கு மிகவும் நெருக்கமாக நான் நிற்கிறேனா? அது மங்கலாக இருக்கிறதா? பின்னால் அமர்ந்துள்ளவர்களே, அது மங்கலாக இருந்தால் கையை உயர்த்துங்கள். கேள்வி: “சகோதரன் பில், பெரியவர்களும் சிறு பிள்ளைகளும் மிகவும் சத்தமிட்டுக் கொண்டு ஆராதனையின் போது அங்குமிங்குமாக சென்று கொண்டிருப்பதைக் குறித்து ஏதாவது கூறுங்கள். பயபக்தியைக் குறித்து இந்த கூடாரத்திற்கு சில பாடங்கள் அவசியமாயுள்ளன”. ஆமென்! பிள்ளைகளே, தேவனுடைய வீட்டில் எப்படி நீங்கள் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு தெரியாதா? இது தேவனுடைய பிரகாரமென்பது உங்களுக்கு தெரியாதா? தேவன் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கின்றார், எல்லாரும் அமைதியாக இருக்கக் கடவர்கள். இது தேவனுடைய இடமாயிருக்கிறது. இங்கு மக்கள் வருகின்றார்கள், தியானிக்கின்றார்கள், ஆத்தும் இரட்சிப்பை கண்டடைய முயற்சிக்கின்றார்கள்; மக்களுடைய வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றார்கள், யாராவது ஒருவருக்கு உதவ முயற்சிக்கின்றார்கள். உங்களால் செய்ய முடிகின்ற சிறிய அளவிலான காரியமானது பயபக்தியுடன் இருந்து, அமைதியாக அமர்ந்திருப்பதேயாகும். சபை ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் பருகிவிடுங்கள், சிறிய பிள்ளைகளுக்கு தண்ணீர் தேவைப்படும் என்பதை நானறிவேன். சிறிய பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்களே நீங்கள் அங்கே பின்புறத்தில் அமர்ந்து பிள்ளைகளை கூடிய அளவில் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே மெல்ல பேசுவது கூட இருக்கக் கூடாது, காதோடு காதான பேச்சும் கூட இருக்கக் கூடாது, நாமெல்லாரும் குற்றமுடையவர்களாயிருப்போம். வேதாகமம் வாசிக்கப்பட்டு அந்த ஊழியக்காரன் பிரசங்க பீடத்தை அடையும் போது நாம் அமைதியாக இருந்து கர்த்தர் பேரில் காத்திருக்க வேண்டும். இப்பொழுது தயவு கூர்ந்து அவ்விதமாக செய்ய முயலுங்கள். 13எனக்கு தெரியும் - சிறு பிள்ளைகளாகிய நீங்கள் சிறிது அங்குமிங்குமாக புரள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், புரிகின்றதா. அப்படிச் செய்வீர்களானால், சிறிது தொல்லைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியுமா, நீ அப்படிச் செய்யக்கூடாது என்று தான் தாயார் விரும்புகிறார்கள், அப்பாவும் நீ அப்படி செய்யக் கூடாது என்று தான் விரும்புகிறார்... ஆகவே நானும் கூட புரண்டு விளையாடுகின்ற சிறிய பிள்ளைகளை உடையவனாக இருக்கிறேன், ஜோசப், ஆகவே காரியங்களை அறிவேன். ஜோசப்பை அமைதியாக வைத்து பார்த்துக் கொள்வதால் ஆராதனையிலிருந்து எதுவும் எனக்கு கிடைப்பதில்லை என்று மேடா கூறினார்கள். நல்லது, யாராவது ஆராதனையிலிருந்து ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளத் தக்கதாக அவள் அவ்விதமாகச் செய்கின்றாள். பாருங்கள்? நாம் ஒருவருக்கொருவர் எப்பொழுதுமே மரியாதையும், கனத்தையும் கொடுக்கவே விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும் அவருடைய வீட்டையும் கனம் பண்ணுங்கள். 14இப்பொழுது, இந்த அடுத்த கேள்வி: கேள்வி: இன்று காலையில் ஆறு முதல் எட்டு வயது வரையிலான இரண்டு சிறு பிள்ளைகள் இங்கே பீடத்தண்டை இருந்தனர். அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படலாம்? எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. “உடனடியாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், ''அதுவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான். இப்பொழுது, இது கேள்வி எண் ஒன்று. அவ்விதமாகத் தான் செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன். நாம் வேத வசனங்களில் காண்பது... “அது வேத பூர்வமானதா?” என நீங்கள் கேட்கலாம். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கித்தபோது அந்த அதே வேளையில் மூவாயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். “கர்த்தர் மேல் எவர்கள் விசுவாசம் கொண்டார்களோ அவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர்'' நீ கர்த்தர் பேரில் விசுவாசம் கொண்டு அவரை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட உடனே நேராக தண்ணீரண்டை சென்று அங்கே உன் பாவங்களை அறிக்கைச் செய்து அங்கிருந்து ஆரம்பி; சிறியவர் அல்லது பெரியவர் எவராயிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் “ஆமாம், இந்த பிள்ளைகள் மிகச் சிறியவர்களாக உள்ளார்களே'' எனலாம். ''சிறு பிள்ளைகள் என்னிடம் வருவதற்கு இடம் கொடுங்கள். அவர்களை தடை செய்யாதீர்கள் பரலோக ராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது. என்ன வயதுடையவர்களாயிருந்தாலும் சரி, பீடத்தண்டை வர விரும்புகிற அல்லது ஞானஸ்நானம் பெற்று கொள்ள விரும்புகிற எந்த ஒரு பிள்ளை, குழந்தையின் (child) மேலும் நான் என் கையை வைக்க அஞ்சமாட்டேன், அவர்களுக்கு என்ன வயதாக இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. 15இப்பொழுது கேள்வி எண் இரண்டு: கேள்வி: எங்களுடைய நண்பராயுள்ள ஒரு போதகர் ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின்'' நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றார். அவருடைய தவறை நாங்கள் எடுத்துக் கூறாமலிருந்தால் நாங்கள் அதற்கு பதில் கூற வேண்டியவர்களாக இருப்போமா? நான் நம்புவதென்னவெனில் ஒரு கிறிஸ்தவன், ஒரு கடமையாக, அவர் உங்களுடைய தனிப்பட்ட நண்பராக இருந்தால்... அவருடன் ஒரு வாதத்தை ஆரம்பிக்க வேண்டாம்; அவ்விதமாக நீங்கள் செய்தால், நீங்கள் சரியாக இல்லையென்று அர்த்தம், உங்கள் - உங்கள் ஆவி சரியானது இல்லை. ஆனால் நீங்கள் அந்த சகோதரனை நேசித்தால், நீங்கள் நேசித்தாக வேண்டும், ஏனெனில் நீங்கள், “ஒரு நண்பராகிய போதகர்'' என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் இந்தக் குறிப்புகளில் எந்த ஒரு பெயரும் கையொப்பமிடப்படவில்லை, இந்த கேள்விகள் எங்கிருந்து வருகிறதென்றும், யார் எழுதினது என்றும் எனக்குத் தெரியாது. 16இப்பொழுது, நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், அது யாராக இருந்தாலும் சரி, இந்த போதகராகிய நண்பர் இந்த விதமாக ஞானஸ்நானம் கொடுப்பாரானால் நீங்களும் அவருடைய வீட்டிற்கு சென்று வருவதுமாக இருந்தால், நான் - நான் என்றாவது ஒரு சமயத்தில் இந்த கேள்வியை சற்று குறிப்பிடுவேன். அது உங்களுக்கு... அதைக் குறித்த வரையிலும் சற்று பேசுங்கள், அந்த பொருளைச் சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருங்கள்; கர்த்தர் அதைத் திறந்து ஆவன செய்யட்டும்; அப்படியானால் அப்பொழுது நீங்கள் அதைப் பேச வேண்டுமென்று உங்களிடம் கர்த்தர் கூறுகின்றார். பாருங்கள்? கர்த்தர் கேள்வியை திறக்கும் வரைக்கும் காத்திருங்கள். அதன் பிறகு அவரிடம் கூறுங்கள். நீங்கள், ''சகோதரனே, மத்தேயு 28:19 மற்றும் அப்போஸ்தலர் 2:38 மற்றும் இன்னும் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கிறதா என்று நான் வியப்புறுகிறேன்? இங்கே “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்றும் கூறுகிறது. மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று கூறுகின்றது, இது ஏன் என்று உங்களால் விவரிக்க முடியுமா?'' என்று கேளுங்கள். இப்பொழுது - இப்பொழுது, முயற்சிக்காதீர்கள்... நீங்கள் உண்மையாகவே மாணவன் இல்லையென்றால் மற்றும் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அறியாதவர்களாக இருப்பீர்களானால், அதைக் கூறாமல் அப்படியே இருந்து விடுவது நலம். பாருங்கள்? “நல்லது, நீங்கள் வருவீர்களானால்...'' என்று அவரிடம் கூறலாம், தெரிந்து கொள்ள வேண்டுமென்று உண்மையான மனமுடையவராக அவர் இருப்பாரென்றால் நீங்கள், ''நீங்கள் எங்கள் மேய்ப்பரை அல்லது யாராவது ஒருவரை சந்தித்து அதைக் குறித்து விவாதிக்கலாமே?'' என்று கூறலாம். 17இது ஒரு ஆழமான காரியமாகும். பாருங்கள்? அதை நீங்களாகவே எடுத்துப் பேச முயற்சிக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் உங்களையே குழப்பிக் கொள்வீர்கள். நீங்கள்... நீங்கள் பேசுவது என்னவென்பதை அறிந்திருந்து, எந்தவித சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக இருந்து, வேத வசனங்களை அறிந்திருப்பீர்களானால் பரவாயில்லை, ஆனால் அவரை புண்படுத்தாதீர்கள், நீங்கள் என்ன செய்தாலும் சரி, அவர் மனது புண்படும்படி செய்யாதீர்கள். பாருங்கள்? இடறல் உண்டாக்காதீர்கள், அவரிடம் கூறுங்கள்... ஆம், நிச்சயமாக அவர் தவறில் தான் இருக்கிறார். அது உண்மை. அந்த மனிதன் அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுக்கின்றார் என்றால் அவர் தவறில் தான் உள்ளார். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் எந்த ஒரு மனிதனும் வேதபூர்வமாக தவறில் இருக்கிறான். அது சரியே. 18கேள்வி எண் மூன்று: கேள்வி: விசுவாச அறிக்கையில் அவர்கள், ''மூன்று நபர்களில் இருக்கின்ற, நித்தியமானவராகிய, ஒரே தேவனில் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம். மத்தேயு 28:19, 18 மற்றும் 19; ஒன்று... கொரிந்தியர் 13:14 “இது மூன்று நபர்களுக்கு பதிலாக மூன்று அலுவல்களாக இருக்க வேண்டுமல்லவா?'' நீங்கள் சரியாக உள்ளீர்கள். தேவத்துவத்தில் மூன்று நபர்கள் கிடையாது. ஒரு நபராயில்லாமல் ஒரு தனி மனித பண்பு இருக்க முடியாது, ஒரு நபர் தான் அவ்வாறு தனிப்பட்ட பண்பைக் கொண்டிருக்க முடியும். மூன்று தேவர்கள் என்பது கிடையாது. ஒரேயொரு தேவன் தான் இருக்கின்றார், அந்த தேவன் இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்யும் தேவனுடைய ஆவியே தேவன், அவர் தம்முடைய சபையில் (நீங்களும் நானும்) இன்றைக்கு வாசம் செய்து, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய உனக்குள் வாசம் செய்கின்ற அவர் தாமே, நமக்கு தம்மையே பரிசுத்த ஆவியின் வடிவில் பிரித்து வைக்கின்றார். இப்பொழுது நீங்கள் சரியாக இருக்கிறீர்கள், ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவி'', என்பது அதே தேவனுடைய மூன்று அலுவல்களாகும். ஆனால், மூன்று தேவர்கள் அல்ல, அது வேதபூர்வமாக தவறானதாகும். 19கேள்வி: ஒரு கிறிஸ்தவனோ அல்லது ஒருவளோ தசமபாகம் செலுத்தாமலிருந்தால் பரலோகத்திற்கு செல்ல முடியுமா? இப்பொழுது, வேதப்பூர்வமாக என்னால் பதில் கூற முடியாதது இது ஒன்றிற்குதான். இப்பொழுது, இந்த, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி”, அந்த ஊழியக்காரன் உத்தமமானவராக இருக்கிறாரென்றால், பாருங்கள், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் மகிழ்ச்சியுடன்... சகோதரன் நெவில் மற்றும் நானும், அல்லது சகோதரன் பீலர் அல்லது சகோதரன் காலின்ஸ் அல்லது இந்த ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கின்ற இங்கேயுள்ள ஊழியக்காரர்களில் சிலர், இன்னும் மற்றவர் அவரை சந்திக்கலாம். இப்பொழுது, ஆனால் இப்பொழுது: தசமபாகம் செலுத்தாமல் இருப்பதால் ஒரு கிறிஸ்தவனால் பரலோகம் செல்ல இயலாதா? என்னால் அதற்கு “ஆம்” என்றோ அல்லது “இல்லை” என்றோ கூற முடியவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது என்னவென்றால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான். ஏனெனில் அது தேவனுடைய கட்டளையாகும், கற்பனையாகும், “ஜீவ விருட்சத்தின் மேல், ஜீவனுக்கு அதிகாரமுள்ளவர்களாவதற்கும் அவருடைய கற்பனைகளின்படியெல்லாம் செய்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்''. இப்பொழுது தசமபாகம் செலுத்துதல் என்பது ஒரு கிறிஸ்தவ அனுபவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று என நான் விசுவாசிக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் வேறொரு கேள்வியின் போது நான் இதை அணுகுவேன், இதைக் குறித்து மாதிரியான வேறொரு கேள்வி உள்ளதென்று நானறிவேன். 20கேள்வி: “சகோதரன் பிரன்ஹாம், நான் இரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளேன், ஆனால் தகர்த்தெறிந்து வெளியே வரவேண்டும் என்று நான் முயற்சி செய்கின்ற, ஆனால் முடியாதிருக்கின்ற, எதற்கும் இணங்காத ஒரு ஆவியிலிருந்து எப்படி என்னால் வெளிவர முடியும்? நல்லது, என் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி, யாராயிருந்தாலும் பரவாயில்லை, இப்பொழுது , இணங்காத, ஆவிகளைக் கொண்டிருக்கின்ற மக்களை நீங்கள் காண்பீர்களானால், வழக்கமாக ஒரு சிக்கலான மனநிலைதான் அதைப் பிறப்பிக்கின்றது, அல்லது அதை அவர்கள் தங்கள் தாய், தந்தை, தாய் மற்றும் தகப்பனுக்கு சகோதரனோ, சகோதரியோ, அல்லது பாட்டி, பாட்டனார், ஆகியோரிடமிருந்து மரபு வழியாக இவர்களை வந்தடைந்து விடுகின்றது. மேலும் உங்கள் வாழ்க்கையில் பாதைகளை பின் நோக்கி பார்ப்பீர்களானால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இப்பொழுது நான் இதை அனுபவத்தின் மூலமாக பகுத்தறிதலோடு, எடுத்துக் கொண்டேன், ஏனெனில் அந்த ஆவியைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோரை மேடையின் மீது நான் சந்தித்திருக்கிறேன். மேலும் முதலாவதாக என்ன தெரியுமா, இருதயத்தை பகுத்தறிதலின் மூலமாக அந்த ஆவியை நான் கண்டுபிடிப்பேன், பாட்டியிடமிருந்து அல்லது அவர்களுக்கு முன்பு இருந்த யாரோ ஒருவரிடமிருந்து வந்திருக்கும், நீங்கள் அதை மரபு வழியாக சுபாவமாக பெற்றுக் கொள்வீர்கள். 21இணங்காமல் பிடிவாதமாயிருப்பது தேவனால் உண்டானதல்ல. இப்பொழுது, அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி நீங்கள் ஒரு கிறிஸ்தவராக கடந்து வருவதற்குரிய விசுவாசம் உடையவர்களாக இருப்பது. ஏனெனில், நீங்கள் தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்கின்றீர்கள், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்களால் அதை கடிந்துகொள்ள, முடியவே முடியாது. அது அலைக்கழிக்கின்ற, வாலில்லாத கடகடவென்ற ஒலியெழுப்பும் அமெரிக்க நச்சுப்பாம்பைப் போன்ற ஒன்றாகும், அவன் உங்களை கடிப்பதற்காக தயாராக அங்கே படுத்துக்கிடக்கின்றான். நீங்கள் மாத்திரம் அவனை பொருட்படுத்தாமல் அவனை விட்டுக் கடந்து செல்வீர்களானால், அவனால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. பாருங்கள்? ஆகவே நீங்கள் அந்த பிடிவாத இணங்காத ஆவியை கொண்டிருப்பதாக உணர்ந்தால், அதை பீடத்தின் மீது வைத்து, அந்த காரியமானது செத்துவிட்டது என்று தேவனில் விசுவாசியுங்கள். அதன் பிறகு இனியும் அதை நீங்கள் கொண்டிருக்கவே மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள், அதற்கு எந்தவித கவனத்தையும் செலுத்தாதீர்கள். அந்த ஆவியானது உங்களை விட்டு ஓடிப்போகும், பிசாசை எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் அது என்னவென்றால், “சீக்கிரமாக அகன்று சென்றுவிடு'' என்பதே. ஆகவே அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான என்னுடைய ஆலோசனை இவ்விதமாகத் தான் இருக்கும். நாம் பிசாசை விசுவாசத்தில் மேற்கொள்ளுகிறோம். எல்லா தீமையையும் நாம் மேற்கொள்வது எதிலென்றால் விசுவாசத்திலேதான். 22கேள்வி: ''பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக ஏன் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்கள்? நல்லது, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்ற நாமமென்பது கிடையாது. அதுதான் காரணம். எந்த ஒரு நபருக்கும் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்” நாமத்தில் வேதாகமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்படவேயில்லை. வேதாகமத்தில் எல்லா நபரும் அல்லது வேதத்திற்கு பிறகு முந்நூறு ஆண்டுகளாக ஒவ்வொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. கடைசி அப்போஸ்தலன் மரித்து முந்நூற்று ஆறு வருடங்களுக்கு கழிந்து நிசாயா ஆலோசனை சங்கத்தில் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும், எந்த ஒரு அப்போஸ்தலனுக்கோ, எந்த ஒரு கிறிஸ்தவனுக்கோ, அல்லது எப்பொழுதாவது ஒரு முறை கூட “பிதா, குமாரன். பரிசுத்த ஆவி” என்பது ஞானஸ்நானத்திற்காக உபயோகப்படவேயில்லை. ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்கின்ற ஒரு நாமம் இல்லவேயில்லை. பிதா என்பது ஒரு நாமம் அல்ல, குமாரன் என்பது ஒரு நாமம் அல்ல, பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமம் அல்ல. அது மூன்று பட்டப் பெயர்கள், ஒரு நாமத்திற்கான மூன்று அலுவல் குறிக்கும் பட்டப்பெயர்கள்: ஒரு நாமத்திற்கு. இயேசு கிறிஸ்து. ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்கின்ற ஒரு நாமமானது கிடையவே கிடையாது. மேலும்... அதற்கு ஒரு நாமமும் கிடையாது, ஆகவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமாயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் நான் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். தெளிவாக புரிகின்றதா? 23கேள்வி: ''உயிர்த்தெழுதலுக்கு முன்னர் கிறிஸ்து பாதாளத்தில் இருந்தார்'' என்று சிலர் கூறுகின்றனர். இதற்கான வேத வசனம் ஏதாகிலும் உள்ளதா? இப்பொழுது, வேத வசனங்களிலிருந்து உங்களுக்கு பதிலளிக்க நான் விரும்புகின்ற. ஒரு வேதபூர்வமான கேள்வி இங்கே இருக்கின்றது, ஏனெனில் அவர்கள், ''இது வேத வசனங்களில்இருக்கின்றதா?'' என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்க விரும்பினவர்களே, நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலோ அல்லது இல்லையோ, நீங்கள் என்னுடன் 1பேதுரு 3:18 மற்றும் 20ற்கு திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அதினாலே நீங்கள் வேறு யாராவது ஒருவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் இதை வாசித்துப் பார்த்து இது உண்மையா அல்லது அப்படி இல்லையா என்று கண்டறிந்து கொள்ளுங்கள். வேதம் என்ன கூறுகின்றதோ மற்றும் சத்தியத்தோடு மாத்திரமே எப்பொழுதும் நிற்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் இந்த அருமையான நபர் யாராயிருந்தாலும் இது அப்படித்தானா அல்லது இல்லையா என்று வேதாகமத்திலிருந்து ஒரு மேற்கோளை அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். 24இப்பொழுது நாம் இங்கே இதை கண்டுபிடிப்போம்... நான் அதை கண்டுபிடித்தால்... நான் அநேக வருடங்களாக வைத்திருக்கின்ற இந்த பழைய வேதாகமம் ஏறக்குறைய கிழிந்து போகும் நிலையில் உள்ளது. இதில் அதை நான் கண்டுபிடிப்பேனென்றால், நான் நினைக்கின்றேன், ஒருக்கால் சகோதரனே, ஒரு வினாடி பொறுத்துக் கொள்ளுங்கள், அது தான் என்று உறுதியாக நான் கண்டால் அது தீமோத்தேயு, தீத்து, மற்றும் எபிரெயருக்கு அடுத்ததாக வருகிறதா என்று பார்ப்போம். இதோ எடுத்துவிட்டேன், ஆம், நான் எடுத்துவிட்டேன். உமக்கு நன்றி. 1பேதுரு 3, 1பேதுருவின் 3-ம் அதிகாரம். 3-வது அதிகாரம், 18-ம் வசனத்திலிருந்து நாம் துவங்குவோம். ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்) அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது, கீழ்ப்படியாமற் போனவைகள், அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 25இப்பொழுது அப்போஸ்தலர் 2ற்கு திருப்புங்கள், அப்போஸ்தலர் 2, நாம் 30-வது வசனத்தை எடுப்போம். அப்போஸ்தலர் 2ல், அப்போஸ்தலனாகிய பேதுரு தான் இதைப் பேசுகிறான். அப்போஸ்தலர் 2-வது அதிகாரம் வசனம்- 30, அதை இங்கே எழுதியுள்ளேன். ஆகவே அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததினால் மாம்சத்தின்படி அவனுடைய அறைகட்சையிலிருந்து அவர் கிறிஸ்துவை எழுப்பி அவருடைய சிங்காசனத்தின் மேல் அமரப் பண்ணுவார் என்று கர்த்தர் அவனோடு பண்ணின உடன்படிக்கையின் மேல் ஆணையிட்டார் என்பதை அறிந்திருந்தான். அவன் தீர்க்கதரிசியாயிருந்து, உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம் பண்ணினதை அறிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான். (கிறிஸ்துவின் சரீரம்) அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்கினது, நோவாவின் நாட்களிலே நீடிய துன்பத்தில் மனந்திரும்பாத அந்த ஆவிகளுக்கு அந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள்ளாக இறங்கிச் சென்றது, அவர் அங்கே ஆவிகளுக்கு பிரசங்கம் செய்து பிறகு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். அது வேதப் பூர்வமானதாகும், சத்தியமாகும். 26கேள்வி: இப்பொழுது கன்னிகைகளில் ஐந்து பேர் இழந்து போகப்பட்டார்கள்? ''ஐந்து கன்னிகைகள்'' அந்த ஐந்து புத்தியுள்ள மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்த கேள்வியை அவர்கள் கேட்கிறார்களென்று நான் யூகிக்கின்றேன். வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த எங்களுடைய போதனைகளின் போது எங்களுடன் நீங்கள் பங்கெடுத்து கேட்டிருப்பீர்களென்றால், அந்த கன்னிகைகள் - அந்த புத்தியில்லாத கன்னிகைகள் இழக்கப்பட்டுப் போகவில்லை என்றும், ஆனால் கலியாண விருந்திற்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் உபத்திரவத்தில் உபாதிக்கப்பட்டு இரத்த சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, கடைசி நாளிலே பொதுவான உயிர்த்தெழுதலிலே மறுபடியுமாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள். வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளாக அவரால் பிரிக்கப்பட்ட மக்கள் இவர்களே, பாருங்கள், இவர்கள் நியாயத் தீர்ப்பில் நிற்கின்றனர். நீங்கள், ''சரி, சகோதரன் பிரன்ஹாமே, சபையாகிய நாமும் கூட நியாயத்தீர்ப்பில் நிற்போமல்லவா'' எனலாம். இல்லை, ஐயா! நாம் நியாயத் தீர்ப்பில் நிற்க மாட்டோம். நாம் இப்பொழுது நியாயத் தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறோம், நம்முடைய பாவங்களை தேவன் கிறிஸ்துவின் மேல் போட்டுள்ளார், மேலும் நாம்... “என் வசனத்தைக் கேட்டு” பரி. யோவான் 5: 24 “என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். சபைக்கு இனி மேலும் நியாயத்தீர்ப்பு கிடையாது. அது எடுத்துக் கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றிராத மக்களை நியாயத்தீர்க்கத்தக்கதாக திரும்பவுமாக வருகின்றது. ஒரு - ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு, ஒரு அநீதக்காரனான நீதிபதியிடம் நம்மில் யாராகிலும் கொண்டு போகத் துணிகிறதென்ன, ”பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்பார்களென்று அறிவீர்களா?'' என்று பவுல் கேட்கவில்லையா. நாம் கிறிஸ்துவுடனே அமர்ந்து, ராஜாக்களையும், ஆசாரியர்களையும் நியாயந்தீர்ப்போம். நாம் பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து அவர்களிடம் கூறின போது, அதைப் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த மக்களை நியாயந்தீர்ப்போம். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! இல்லை, அவர்கள் இழந்து போகப்படவில்லை, ஆனால் அவர்கள் மணவாட்டியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவார்கள், ஆனால் மணவாட்டியாக இருக்க மாட்டார்கள், அவர்கள் பெற்றுக் கொண்ட சுவிசேஷ ஒளியை அவர்கள் கையாண்ட விதத்தின்படியாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். இப்பொழுது, இந்தப் படலமானது கிறிஸ்து என்ன செய்கின்றாரோ அதைப் பொறுத்துதான். இருப்பினும், அவர்கள் இழந்து போகப்படவில்லை. 27கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், 1 கொரிந்தியர் - கொரிந்தியர் 14-வது அதிகாரம், வசனம் 34 மற்றும் 35, “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை'' என்று கூறுகிறது. 35-ல், ''ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே” என்று உள்ளது. இப்பொழுது, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரைக் கொண்ட ஒரு ஸ்திரீ சபைகளில் சபையில் அந்நியபாஷையில் பேசினால், அவள் மூலமாக பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது அது ஒரு கள்ள ஆவியா? இப்பொழுது, நீங்கள்... இதுமிகக் கடுமையான ஒரு கேள்வியாகும், ஆகவே எனக்கு நன்கு தெரிந்த விதமாகத்தான் நான் பதிலளிக்க வேண்டியவனாக உள்ளேன், புரிகின்றதா. இப்பொழுது, என்னால் நியாயந்தீர்க்க முடியாது, ஏனெனில் நியாயந்தீர்க்க நான் அனுப்பப்படவில்லை. ஆனால் அநேக முறை நான் நினைப்பதுண்டு. சரியாக இதனுடன் பொருந்துகின்ற ஒரு கேள்வியை நான் வைத்துள்ளேன். அந்நிய பாஷையில் பேசுகின்ற ஒரு மனிதன், அவர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? அவர்கள் ஒருக்கால் ஒழுங்கிற்குப் புறம்பாக இருக்கலாம், அவர்கள் ஒருக்கால் சரியானதாக இல்லாதிருக்கின்ற ஒன்றை செய்கிறவர்களாக இருக்கலாம், ஆனால் அது பரிசுத்த ஆவி அல்ல என்று கூற நான் விரும்பவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாமலும் இருக்கலாம். பாருங்கள்? மேலும் அநேக சமயங்களில்... மக்கள் ஒருவரையொருவர் தவறாய் மதிப்பிட்டு தவறாய்த் தீர்மானிக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறான, கெட்ட காரியமாகும். நீங்கள், ''உம், அவள் கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை கொண்டவளாக இருக்கிறாள், அவள் மிகவும் சிறியதாக, குட்டையாக உள்ள ஒரு ஆடையை அணிந்திருக்கிறாள், ஆகவே அவள் மீது இருப்பது பரிசுத்த ஆவி அல்ல'' எனலாம். அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள் அவ்வாறு தவறான மதிப்பீட்டைச் செய்யாதீர்கள், அது சரியல்ல. அந்தப் பெண்ணின் இருதயத்தில் என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாதே. அதைக் குறித்து ஒன்றுமே உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் அவளுடைய நடத்தையை சிறிது சீர்படுத்துவார் என்பதை நீங்கள் அறிவீர்களா, இப்பொழுது, அது உண்மையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன், நானும் நீங்களுமாக, அதை நியாயந்தீர்க்கும் காரியத்தை தேவனிடம் விட்டுவிடுவோமாக, தேவன் அந்த நபருக்கு ஒளியைக் காண்பிக்கத் தக்கதாக நீங்களும் நானுமாக அந்த நபருக்காக ஜெபத்தை ஏறெடுப்போம். 28ஒரு சமயம் இங்கே ஒரு மனிதன் என்னை வெளியில் தனியே சந்தித்தார். இங்கே ஒரு பியானோ கருவி வாசிக்கும் ஒரு பெண் இருந்தாள். அவள் ஒரு சிறிய குட்டை பாவாடையை அணிந்திருந்தாள், அது சரியான விதத்தில் இல்லாதிருந்ததை நான் அறிந்திருந்தேன். மேலும் அந்த பெண் குட்டை தலைமயிரைக் கொண்டவளாக இருந்தாள், இந்த வழியில் அவள் சற்று குழந்தையாக இருந்தாள், இங்கு மேலும் அவள் பியானோ கருவியை வாசித்துக் கொண்டிருந்தாள். என்னை அங்கே வெளியில் சந்தித்த இந்த மனிதன் என்னை கடுமையான சீற்றத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். ''அதோ பார் கத்தரிக்கப்பட்ட குட்டைமயிர் அந்த பெண்னை அங்கே மேலே உட்கார வைத்திருக்கிறீரே, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியா!'' என்று அதிவேகமாக இன்னமாக திட்டிக் கொண்டிருந்தார். நான், ''சரி, அந்த பெண் தனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணுகிறேன். அந்த பாவாடையின் இந்த பாகம், இரண்டு துண்டுகள், அந்த விதமான ஆடை அணிவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்'' என்றேன். (அவைகளில் ஒன்று இங்கே கீழே காணப்படுகிறது, மற்றொன்று இங்கே மேலே காணப்படுகின்றது, அது மிகவும் மெல்லியதான ஒன்று, உள்ளே அணிந்திருக்கின்ற உள்ளாடை வெளியே தெரியும்). அவ்விதமான ஆடை அணியவே கூடாது என்பதே என் கருத்து. அது எனக்குப் பிடிக்காது, உண்மையாகவே அது எனக்குப் பிடிக்காது. மற்றவரைப் போலவே இவர்களும் ஆவியால் நிரப்பட்டவர்களாக இருக்கலாம், என்று என்னால் கூற முடியவில்லை, எனக்குத் தெரியாது; தேவன் அதை அறிவார். ஆனால் கண்ணால் கண்ட உடனே, நீ நரகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறாய் என்று கூறி அந்த பெண்னை நான் கடிந்து கொள்ளமாட்டேன். இந்த மனிதனோ தன்னுடைய சபையில் ஒரு பெண்ணைக் கொண்டிருந்தார், அவள் நீண்ட ஆடைகளையும் நீண்ட தலை மயிரையும் கொண்டவளாக இருந்தாள், ஆனால் எப்பொழுதுமே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் சண்டையிடுகின்ற அளவிற்கு பெரிய கோபக்காரியாக இருந்தாள், அவள் கூடுமான வரையில் மிகவும் கீழ்த்தரமானவளாகக் காணப்பட்டாள். இப்பொழுது, நீண்ட தலை மயிர் மற்றும் நீண்ட பாவாடைகள் உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லாது. இல்லை, ஐயா உங்களுக்குள் இருக்கின்ற ஆவியே உங்களை பரலோகத்திற்கு கொண்டுச் செல்லும். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக... 29ஆகவே நீங்கள்... நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் அநேக முறை போதகர் இந்த காரியங்களைக் குறித்துப் பேசாமல் இருந்துவிடுகின்றனர். ஆதலால் மக்கள் தானாகவே எல்லாமே சரிதான் என்று அப்படியே இருந்து விடுகின்றனர். ஆனால் உண்மையாக ஒரு போதகன் அதைக் கடிந்து கிழித்தெரிய வேண்டும். பிறகு - மேலும் - சபையிலுள்ள சகோதரிகள் - குணாதிசயத்தில் நிலைத்திருக்கின்ற, தங்கள் ஆடைகளை சரியாக அணிந்துள்ள அந்த சகோதரிகள், அவர்கள் இனிமையான சுபாவத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், அவர்கள் தாய்மார்களைப் போல, சகோதரிகளைப் போல இருக்க வேண்டும். தேவ பக்தியுள்ள, தாய்மையுள்ள, சகோதரிக்குரிய பண்புள்ள எந்த ஒரு பெண்ணும் இப்படிப்பட்ட ஒரு நபரிடம் ஆவியின் இனிமையுடனே சென்று அவளோடு உட்கார்ந்து இதைக் குறித்து அவளுடன் பேச கடமைப்பட்டவளாக இருக்கிறாள். ஆகவே அந்த பெண் தேவனுடையவளாக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்வார், அவளும் தன்னைத் திருத்திக் கொள்வாள். ஆனால் நீங்கள் உடனடியாக அவளைக் கடிந்து கொண்டு அவளை பலவந்தமாக கட்டாயப்படுத்துவீர்களானால், நீங்கள் அந்த சத்தியத்தில் வந்து இளைய, குழந்தையாக பிறந்திருக்கின்ற அவளுக்கு தீங்கிழைத்து புண்படுத்திவிடுவீர்கள். புரிகின்றதா? ஆதலால் தான் நான் அந்த நபரைக் கடிந்து கொள்வதில்லை. 30இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகின்ற நபர்.... இப்பொழுது, ஒரு வினோதமான காரியத்தை இங்கே நான் - நான் கூற வேண்டியவனாக இருக்கிறேன், நீங்கள் என்னுடன் உடன்படாதிருந்தால், அதனால் பரவாயில்லை. நீங்கள் பாருங்கள், அநேக முறை இக்காரியங்களை நாம் தவறாக நிர்ணயிக்கின்றோம். சரியான ஒன்றை செய்ய முயற்சிக்கும் ஒருவரை, நாம் எப்பொழுதுமே மிகச் சிறந்த விதத்தில் அந்த நபரைக் குறித்து சரியான விதத்தில் நாம் சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஓ, அவர்கள் முயற்சி செய்கின்றனர். உங்களிடம் பகுத்தறியுதல் இருந்தாலொழிய, அவர்களுடைய இருதயத்தை அறிந்து கொள்ள இயலாது. அவர்கள் தவறாயிருந்தால், அப்பொழுது நீங்கள்... வேதாகமம் கூறுகிறத , “ஒரு சகோதரன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாக இருக்கிறவர்கள் சாந்தமுள்ள ஆவியோடே அந்த சகோதரனிடம் செல்லுங்கள்; நீங்களும் சோதிக்கப்படாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் அந்த நபரை திரும்பவுமாக தேவனிடத்தில் ஒப்புரவாக்க முடியவில்லையெனில், அவர்களிடம் சரியான ஆவி இல்லை என்று நீங்கள் கூறாதீர்கள், எனெனில்... 31கவனியுங்கள், உண்மையாகவே உங்களை குத்தப் போகின்ற ஒரு காரியத்தை ஒரு நிமிடம் நான் கூறப்போகிறேன், ஆகவே ஒரு கண நேரத்திற்கு அமைதியாக அப்படியே தரித்திருங்கள். ஒரு மாய்மாலக்காரனின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரால் பேச முடியும். சரியாக! அவ்வாறு நிகழ்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன், அது சரியே என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் நிருபிக்க முடியும். பிசாசின் சக்திகள் அந்த ஆவிகளை எடுத்து அவர்களை உபயோகப்படுத்தும் என்று வேத வசனங்களைக் கொண்டு என்னால் உங்களுக்கு அதை நிருபிக்க முடியும்; நிச்சயமாக அவைகள் அந்த வரங்களை எடுத்து உபயோகப்படுத்துகின்றனர். மாய்மாலக்காரர்கள் உண்மையான பரிசுத்த ஆவியை எடுத்து அதைக் கொண்டு பேசுவதை நான் கண்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான், பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதின் ஒரே அடையாளம் அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரமே என்று உங்களால் கூற முடியாது. 32இப்பொழுது, சில காலத்திற்கு முன்னர் நான் பெந்தெகொஸ்தேயினுள் முதல் முறையாக கொண்டு வரப்பட்டபோது, நான் சகோதரன் ரோவ் அவர்களின் கூடாரம் இருக்கின்ற மிஷாவாகாவிற்குச் சென்றேன். அங்கே அவர்கள் ஒரு கன்வென்ஷன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர், அவர்கள் இயேசு நாமம் ஜனங்களாவர். இப்பொழுது, நான் இயேசு நாமம் ஜனங்களின் கருத்தோடு நான் உடன்படவில்லை, அப்படி இல்லை, அப்படி இல்லை ஏனென்றால்... அவர்கள் என் சகோதரர், ஆனால் காரணம் என்னவென்றால்... “மறு ஜென்மத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். நான் அதை விசுவாசிப்பதில்லை. தண்ணீர் உங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும் என்று நான் விசுவாசிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் மறு ஜென்மம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் ஒருத்துவ மக்களோ மறு ஜென்மத்திற்கென்று ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். இயேசுவின் நாமம், அது இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்கள், ஏனெனில் அவர், ”நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவங்களின் மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“ என்று கூறியுள்ளார். ஆனால் முதலாவதாக வருவதென்ன?மனந்திரும்புதல், உங்கள் பாவங்களுக்காக மனவருந்துதல், பிறகு பாவத்திலிருந்து திரும்புதல். பிறகு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல், அதுசரியே. இதை எல்லாம் நீங்கள் பாவ மன்னிப்பிற்காகத் தான் செய்தீர்கள். 33இப்பொழுது, அங்கே கூட்டத்தில் அநேக ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். அந்நாட்களில் இங்கே வடக்கு மாகாணத்தில் அல்லது தெற்கில் நிறப் பிரிவினையை கைக்கொண்டிருந்தனர், ஆகவே இங்கே அவர்கள் கூட்டத்தை வைக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அநேக கறுப்பு நிற சகோதரர் இக்கூட்டங்களுக்கு வர இருந்தனர். அது வெளிப்படுவதற்கு முன்னர் PA. of W, மற்றும் P.A of J.C. ஆக இருந்தது. ஆகவே அவர்கள் எல்லாரும் மிஷாவாகாவில் கூடியிருந்தனர், வெள்ளையர் மற்றும் கறுப்பு நிறத்தவர் சேர்ந்து ஒன்று கூடியிருந்தனர், அந்த சமயத்தில் தெற்கு பகுதியில் அவர்களால் கூட்டத்தை வைக்க முடியாமல் இருந்தது. அப்பொழுது வெள்ளை நிற மனிதர் இருவர் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டேன். அங்கே கொடுக்கப்பட்ட செய்திகளை அதற்கு முன்னர் என் வாழ்க்கையில் நான் கேட்டதே கிடையாது. அங்கே இருந்த மனிதர் எழுந்திருப்பார்கள், ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவார், மற்றொருவர் அதற்கு வியாக்கியானத்தை அளித்து, கூட்டத்தில் இருக்கின்ற மக்களை நோக்கி அவர்களிடம் என்ன தவறு உள்ளது, அவர்கள் என்ன செய்தனர் என்று கூறுவார். பிறகு இந்த மனிதர் அந்நியபாஷையில் பேசுவார், அவர் அதற்கு வியாக்கியானம் அளிப்பார். அப்பொழுது நான், “என்னே, நான் இங்கே தூதர்களின் மத்தியில் இருக்கின்றேனா'' என்று எண்ணினேன். இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் கேட்டதேயில்லை! 34நான் சோள வயலில் இரவு முழுவதுமாக ஜெபித்தேன். நான் சிறு பிராய முதற்கொண்டே, வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே கிடைக்கும் என விசுவாசித்தேன், என்னால் தரிசனங்கள் காணமுடிந்தது. அடுத்த நாள் காலை பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நானும் பேசினேன். வெளியே அங்கே அநேக மக்கள் நின்றிருந்தனர், அவர்கள் என்னிடம் வந்து தங்கள் கூட்டங்களுக்கு வர எனக்கு அழைப்பு விடுத்தனர், இன்னுமாக நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்டாக இருந்தேன். ஆகவே நான் - நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். சிறிதுநேரம் கழித்து அங்கே தூதர் போல் இருந்த அந்த இரண்டு மனிதரை சந்திக்க வேண்டுமென்று நான் ஆவல் கொண்டேன். இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்டதே... அவர்களுக்கு வாயைச் சுற்றிலும் வெள்ளையாகிவிடும், ஒருவர் எழுந்து நிற்பார், அந்நிய பாஷை பேசுவார். அந்த இன்னொருவர் எழுந்து நின்று, ''கர்த்தர் உரைக்கிறதாவது இங்கே உள்ள ஜோன்ஸ், அவர்கள் முந்தைய நாளில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தார். நீங்கள் அந்த வீட்டை சுற்றி நடந்த போது அந்த பாக்கெட் புத்தகத்தை எடுத்தீர்கள், அது இந்த மனிதனின் புத்தகமாகும், இந்த மனிதன் தான் அதை அங்கே தொலைத்துவிட்டார், கர்த்தர் உரைக்கிறதாவது, அதை திரும்பவுமாக எடுத்துக் கொள்!'' என்று உரைப்பார். “தேவன் என் மீது இரக்கம் வைப்பாராக, இதோ அது”. பாருங்கள், உண்மை, அதை அப்படியே உரைப்பார்கள், மக்களிடம் சரியாக அதைக் கூறுவர். அப்பொழுது நான், ''ஓ, என்னே, இது மிகவும் அற்புதமானதல்லவா!'' என்று நினைத்தேன். அப்பொழுதே நான், “இது தேவன் தான்'' என்று நினைத்தேன். 35சரி அப்பொழுது நான் அந்த இரண்டு மனிதரில் ஒருவரை சென்று சந்தித்தேன், நான் அவரோடு பேசிக் கொண்டிருந்த போதே, “தேவனே, அது என்னவாயிருந்தாலும், அதை நான் காண்பேனாக'' என்று நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். தரிசனங்கள், அதை எப்படி அழைப்பது என்றே எனக்கு தெரியாது, அதை என்ன என்று கூறவேண்டும் என்பதே எனக்குத் தெரியாதிருந்தது. ஆகவே அப்பொழுது அந்த காரியமானது என் முன்பாக வந்த போது, நான் அவருடைய கவனத்தை ஈர்த்தேன், அவருடைய ஆவியை நான் கண்டு பிடிக்கும் வரைக்கும் நான் அவருடன் பேசிக் கொண்டேயிருந்தேன், அங்கே அந்த ஸ்திரீ செய்தது. கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு இயேசு செய்தது போல், அவருடைய ஆவியைப் பகுத்தறியும் வரை நான் பேசிக் கொண்டேயிருந்தேன். அவர் ஒரு கிறிஸ்தவனாக, ஒரு உண்மையான, நேர்மையான தேவனுடைய பரிசுத்தவானாக இருந்தார். ”கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக'' என்று நான் எண்ணினேன். அரை மணி நேரம் கழித்து, அடுத்த மனிதனை அந்த மூலையில் சந்தித்தேன், அவருடன் நான் பேசினேன். நான் ஒரு மாய்மாலக்காரனிடம் பேசியிருப்பேனானால், அவர்களில் இவரும் ஒருவராய் இருப்பார். அவருடைய மனைவிக்கு கறுத்த தலைமயிர் இருந்தது, இவரோ பொன் நிற தலைமயிர் (blond) கொண்டிருந்த ஒரு பெண்ணோடு வாழ்ந்து அவள் மூலமாக இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தார்; ஆனால் இன்னுமாக, எந்த ஆவியைக் கொண்டு அந்த மனிதன் பேசிக் கொண்டிருந்தாரோ, அதே ஆவியைக் கொண்டு இந்த மனிதனும் அதே வியாக்கியானத்தை முற்றிலும் சரியாக அளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன். 36என்னுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாக, அந்த இந்தியர்களுடன் ஒரு மந்திர கூடாரத்திற்குள் சென்ற ஒரு அனுபவம் நான் பெற்றிருந்தேன். அவர்கள் பேயைக் கொண்டு நடனமாடுபவர்கள். அவர்கள் ஒரு பாம்பை எடுத்து தங்கள் மேல் சுற்றிக் கொண்டு, சோள ஆட்டம் ஆடி, அந்நிய பாஷையில் பேசி அதற்கு வியாக்கியானம் அளிப்பார்கள், அங்கு அமர்ந்திருந்த மக்களுடைய மனதில் என்ன இருக்கின்றது என்பதை சரியாக பிழையில்லாமல் கூறுவார்கள். பிறகு ஒரு மந்திரவாதி ஒரு பென்சிலை எடுத்து தரையில் கிடத்தினான். மேலும் பாருங்கள்? அந்த பென்சில் எழுந்து அந்நிய பாஷையில் எழுதி அதற்கு வியாக்கியானத்தையும் எழுதி சரியாக அங்கே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிடம் சரியாக எடுத்துக் கூறுவதையும் நான் கண்டிருக்கிறேன். மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கூட்டத்தில்! ஆகவே நான், ''நான் பிசாசுகளின் மத்தியில் வந்திருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டேன், பிறகு எல்லாவற்றையும் அப்படியே கடந்து போகச் செய்தேன். 37ஒரு நாள் நான் கிரீன் மில்லில் என்னுடைய குகையில் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அந்த காரியத்திற்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். நான்... திரும்பவுமாக நான் குகைக்குள் செல்ல வேண்டியிருந்தது, சிறிது சூரிய வெளிச்சம் எனக்கு தேவைப்பட்டது, அது மதிய வேளையாயிருந்தது, நான் வெளியே வந்து என் வேதாகமத்தை கீழே வைத்தேன். அங்கே மலையின் கீழே இருக்கின்ற அந்த மரக்கட்டையின் மீது உட்கார்ந்து சிறிது நேரம் வேதாகமத்தை வாசிக்கலாம் என்று எண்ணினேன். நான் வேதாகமத்தை கீழே வைத்து விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். காற்று அடிக்க ஆரம்பித்தது, காற்றானது வேதாகமத்தின் மீது அடித்து எபிரெயர் 6-வது அதிகாரத்திற்கு திருப்பினது “ஒரு வேளை, அதை நான் படிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ'' என்று எண்ணினேன். நான் அதை படித்தேன். “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப் போனவர்கள். அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, முள் செடிகளையும், முட் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமானது தகாததாயும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு''. அது அவ்விதமாக இருந்தது. நான் வாசித்து ''நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்றெண்ணினேன். வேறொரு பக்கத்திற்கு திருப்பினேன். ''நல்லது, இங்கே இருக்கிறதை நான் வாசிக்கட்டும், மற்றதை வாசிக்கட்டும்'' என்று நினைத்தேன். வேதாகமத்தை கீழே வைத்துவிட்டு, என் கண்களை துடைத்து சுத்தம் செய்தேன், அந்த காற்றானது மறுபடியுமாக அடித்து எபிரெயர்-கு மறுபடியுமாக திருப்பினது. அவ்விதமாக மூன்று அல்லது நான்கு முறை நடந்தது, மூன்று முறைக்கு மேலாக. அதில் எந்த தவறையும் நான் காணவில்லை. ”அப்படியானால் அதில் இருப்பது என்ன?'' என்று நினைத்தேன். 38நான், உங்களால்... எபிரெயர் 6-ஐ அநேக முறைகள் நீங்கள் வாசித்திருப்பீர்கள், ''முள் செடிகளும், முட்பூண்டுகளும், பூமியின் மீது தண்ணீர் பாய்ச்ச அடிக்கடி பெய்கிற மழையானது, அதை முளைப்பிக்க, அதன் கனியை கொண்டு வர, பெய்கின்றது. ஆனால் முள்செடிகளும், முட்பூண்டுகளும், புறக்கணிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு, ஒன்று சேர்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒன்றையுமே என்னால் கிரகித்துக் கொள்ள முடியாமலிருந்தது. ''உம், முள் செடிகளும் முட்பூண்டுகளும் சுட்டெரிக்கப்படுகின்றது, தேவன் தம்முடைய கோதுமையை களஞ்சியத்திற்கு கொண்டு செல்லுகின்றார், அவ்வளவுதான், இது தான் அர்த்தமென்று புரிகின்றது என்று நினைத்துக் கொண்டேன். அதைக் குறித்து வேறொன்றையும் என்னால் காண முடியவில்லை'' என்றேன். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன், அதைப் போன்று நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்கு முன்பாக ஒரு தரிசனம் வந்தது. அதிலே நான் உலகமானது இதைப் போன்று திரும்பிக் கொண்டிருந்தது, அது நேராக இருந்து பயிரிடப்பட தயாராக இருந்தது. வெள்ளை அங்கி தரித்திருந்த ஒரு மனிதன் ஒரு உணவு சாக்குப்பையை, அல்லது ஒரு விதை நிறைந்த சாக்குப்பையில் தலை குனிந்த வண்ணம் இருக்க சற்றே சென்று கொண்டிருந்தான். பழைய விதை விதைக்கும் முறையை எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, எப்படி நீங்கள்... என் தந்தை செய்வதை நான் கண்டிருக்கிறேன். கையினால் அவ்விதமாக வீசியெறிவது, அந்த விதைகள் நிலத்தின் மீது விழுந்து விடும்.இந்த மனிதன் விதைகளை இவ்விதமாக விதைத்துக் கொண்டிருந்தான். அவன் விதைத்து கடந்து சென்ற உடனே, அவன் பின்பாக கோதுமையானது மேலே வந்தது. 39நல்லது, அந்த மனிதனானவன் பூமியின் வளைவை சுற்றி சென்ற உடன், ஒரு கறுப்பு நிறத்தில் ஒன்று வருவதை நான் கண்டேன், ஒரு கறுப்பு நிலவைப் போன்று இருந்தது. நான் உற்றுப் பார்த்தேன், அது அருகில் வந்தது, அது ஒரு - ஒரு மனிதனாக இருந்தது, அடர்ந்த கறுப்பு, கறுப்பு நிற உடையை அணிந்திருந்தான். அவன் இவ்விதமாக கள்ளத்தனமாக பதுங்கி வந்தான். அவனும் ஒரு விதை சாக்குப்பையை வைத்திருந்தான், ஆனால் அதற்குள்ளாக களைகளை மாத்திரம் வைத்திருந்தான். இவன் இந்த கோதுமையின் நடுவில் இந்த விதமாக விதைத்துக் கொண்டிருந்தான், அதை தூவிக் கொண்டிருந்தான். இவனுக்கு பின்பாக களைகள், முட்பூண்டுகள், முட்செடிகள், முட்புதர்கள் மற்ற எல்லாமும் வளர்ந்தன. அப்பொழுது நான், “இவ்விதமான ஒரு காரியத்தை அந்த மனிதன் செய்வது வெட்ககேடான ஒரு செயலாயிற்றே'' என்று நினைத்தேன். அது ஒரு தரிசனமாயிருந்ததால், அது வேத பூர்வமானது என்று நான் யோசிக்கவில்லை, பாருங்கள். ஆகவே நான் ''அந்த மனிதனுடைய கோதுமை நிலத்தில் இந்த மனிதன் களைகளை விதைக்கிறானே'' என்றேன். அதன் பிறகு மிகவும் வெப்பமாயிற்று. அந்த சிறிய கோதுமை தலையை உயர்த்தி ''உஹ், உஹ், உஹ்“ என்று சுவாசிக்கத் திணறியது. அந்த சிறிய களையும் கூட தன் தலையை உயர்த்தி ''உஹ், உஹ் - உஹ்'' என்றது, அதுவும் கூட தண்ணீருக்காக கடுமையாக துடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் மழைக்காக ஜெபித்தன. சிறிது நேரம் கழித்து ஒரு மின்னலையும் இடியையும் உண்டாக்கும் ஒரு பெரிய மேகம் வந்தது, மழை பெய்ய ஆரம்பித்தது, அது பூமியை வந்தடைந்தது. அந்த சிறிய கோதுமை மேலும் கீழும் குதித்து “அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூச்சலிட ஆரம்பித்தது. அந்த சிறிய களைகளும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” எனக் கூச்சலிட்டது, நேராக நின்றது, கோதுமைக்கு உயிர் வந்தது போலவே களைக்கும் உயிர் வந்தது. அப்பொழுது, ''நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது என்று வேத வசனம் வந்தது“. அப்பொழுது தான் காரியத்தை அறிந்து கொண்டேன். பாருங்கள்? 40இது, ஒரு நபர் சபைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கையில் ஆவியானது அந்த நபரின் மேல் விழுகின்றது, ஆனாலும் அவர்கள் தவறாயிருப்பார்கள், அவர்கள் சரியான ஜீவியத்தை ஜீவிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும் அந்த ஆவியைக் குறித்து நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதில் கவனமாயிருங்கள், அது பரிசுத்த ஆவியாகவும் இருக்கக்கூடும். ஆவியை நபரைக் கொண்டு ஆவியை நியாயந்தீர்க்காதீர்கள். அந்த நபர் தவறாக இருக்கக் கூடும். ஆனால் “நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையானது பெய்கின்றது'' என்று வேதாகமம் கூறவில்லையா? வயலில் நடப்பட்டபோது, ''இரண்டையும் வளரவிடுங்கள், களைகளையும் கோதுமையும் ஒன்றாக வளரவிடுங்கள். களைகளை பிடுங்க முயற்சிக்காதீர்கள். அவைகளை நியாயந்தீர்க்க முயற்சிக்காதீர்கள், இரண்டையும் ஒன்றாக வளரவிடுங்கள். அந்த நாளிலே தூதர்கள் அனுப்பப்படுவார்கள், அவர்கள் களைகளை எல்லாம் எடுத்து சுட்டெரிப்பார்கள், கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்'' என்று இயேசு கூறவில்லையா? ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நாம் அறிந்து கொள்வோம். நீங்கள் உங்கள் இருதயத்தில் அறிந்து கொள்ளலாம். அந்த நபரோடு உறவு கொள்ள முயற்சித்துக் கொண்டிருங்கள். 41இந்த பெண் தவறான விதத்தில் உடையுடுத்தியிருந்தால், இந்த பெண்... என்று கூறாதீர்கள் அல்லது, இது எவ்விதமாக உள்ளது? ''பரிசுத்த ஆவியானவர் காண்பார் என்று கூறுவோம்''. நாம் பார்ப்போம். இல்லை, நான் தவறான ஒன்றை எடுத்துவிட்டேன், எப்படியாயினும் ஓ, இதோ இருக்கிறது, ஆம். பெண்கள் அந்நிய பாஷையில் பேசுவது, இப்பொழுது, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை கொண்ட ஒரு ஸ்திரீ சபையில் அந்நிய பாஷையில் பேசினால், அது... நாம் பார்க்கலாம். அவள் மூலமாக பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது அது ஒரு கள்ள ஆவியா? நீங்கள் பாருங்கள், நான் எதுவும் கூறமாட்டேன். அந்த ஸ்திரீ குட்டை மயிரை வைத்திருப்பதனால் அவள் சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்திருந்தால்... (அது தான் நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்று நான் நம்புகிறேன்)... ஆமாம், ''குட்டை தலைமயிர்“, சகோதரனே, நீர் திருமணமான மனிதராயிருந்தால், அவளும் திருமணமானவளாக இருந்தால் நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்றோ அல்லது உங்கள் மனைவி, இந்த ஸ்திரீயுடன் இனிமையாக காரியத்தை எடுத்து பேச செய்யலாமே? அவள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறாள் என்று நாம் விசுவாசிப்போம். அவள் இந்த சபையில் இருந்தால், அவளுக்கு பரிசுத்த ஆவி இருக்கிறது என்று நான் விசுவாசிக்கப் போகிறேன். அப்பொழுது இவ்விதமாகக் கூறுவோம், ஒருக்கால் அவள் ஒரு... உங்களுக்கு தெரியுமா, சில நேரத்தில், நம்மை ஆராய்ந்து பார்த்தால் நாமும் கூட சிறிது தவறை உடையவர்களாயிருக்க வகையுண்டு. நீங்கள் அதை அறிவீர்கள், அது தான் காரியம். ஆகவே யாராவது நம்மிடம் சிலவற்றை கூற வேண்டியிருக்கும். அநேக சமயங்களில் ஜனங்கள் என்னிடம் அநேக காரியங்களை நான் தவறாக செய்கிறேன் என்றும், நான் தவறு செய்தேன் என்றும் என்னிடம் கூறுவார்கள், நான் அதை பாராட்டுகிறேன். 42ஆனால் இப்பொழுது நாம் கூறட்டும்... என்னவாயிருந்தாலும், நாம் விசுவாசிப்போம். இதை நாம் விசுவாசிப்போம், அந்த ஸ்திரீ முற்றிலுமாக ஒரு கிறிஸ்தவளாக இல்லாமலிருந்து அவ்விதமாக அவள் உடுத்தியிருப்பாளானால், அதற்காக தேவன் அவளை நியாயந்தீர்ப்பார். அது சரி. ஆனால்... அவள் கீழ்த்தரமாக உடை அணிந்து, அவள் செய்யும் காரியங்கள் சரியானதாக இல்லாதிருந்தால், தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். ஆனால் அந்த ஸ்திரீயின் மீது இருக்கும் ஆவியானது பரிசுத்த ஆவியே என்று நாம் விசுவாசிப்போம். பாருங்கள், ஏனென்றால் நாம் அதை அறியவில்லை. இப்பொழுது, அந்த பரிசுத்த ஆவியின் வியாக்கியானமானது ஏதோ ஒன்றை கூறுமானால், “கிறிஸ்துவுக்கு சபிப்பை...'' ஆவியினாலே பேசுகிற எவனும் கிறிஸ்துவை சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும் அந்த ஸ்திரீயானவள் அந்நிய பாஷையில் பேசி பிறகு ”கிறிஸ்து சபிக்கப்பட்டவரென்று வியாக்கியானம் வருமென்றால்“, அந்த ஸ்திரீயின் மேல் இருப்பது தீய ஆவியென்று அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது கிறிஸ்துவை ஸ்தோத்தரித்து பக்திவிருத்தி உண்டாக்கும்படிக்கு இருக்கின்ற வரையில், அது ஆவியானவர் என்று விசுவாசியுங்கள். பாருங்கள்? ஆமென். இது குழப்பமாயிராது என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும் அதைக் குறித்து கொஞ்சம் நாம் தெரிந்து கொண்டோம் என்று நான் நம்புகிறேன். 43கேள்வி: உபாகமம், 23-ஆம் அதிகாரம் 2-வது வசனம் விவாகத்திற்கு அப்பாற்பட்டு பிறந்த ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்று போதிக்கிறதா? “தேவன் பெற்றோர் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்'' என்று கூறுகிறதே. இது என்னவென்பதை விளக்கவும். சரி. விபச்சாரமானது வேதாகம காலத்திலே ஒரு பயங்கரமான காரியமாக இருந்தது, ஒரு மனிதன் தன்னுடைய மனைவியாக அல்லாதிருக்கிற ஒரு பெண் மூலமாக ஒரு குழந்தையை பெறுவானானால், அந்த பிள்ளை, அந்த பிள்ளையினுடைய பிள்ளைகளிடத்திலும், அதனுடைய பிள்ளைகளிடத்திலும், நாலு தலைமுறைகளுக்கு, நானூறு மற்றும் அதற்கும் பிறகான வருடங்களுக்கு கர்த்தருடைய சபைக்குள்ளாக வரவே முடியாது, ஏனெனில் காளை மற்றும் வெள்ளாட்டு கடாக்களின் இரத்தமானது பாவத்தை எடுத்துப் போட போதுமானதாக இருக்கவில்லை. அதனால் பாவத்தை புறம்பாக வைக்க அல்லது மூடத்தான் முடியும். அதனால் பாவத்தை வெளியே எடுத்துவிட முடியாது. பாருங்கள்? அதனால் பாவத்தை வெளியே எடுத்து விட முடியவில்லை, அதனால் பாவத்தை மூடத்தான் முடிந்தது. விபச்சாரமானது பயங்கரமான ஒரு காரியமாகும்! ஒரு பெண், விலையேற்பெற்ற ரத்தினமாவாள், அவள் ஒரு தாயாக இருக்கும்படியாக தேவன் அவளை உண்டாக்கினார், தாய்மைத்துவத்தை அவளிடம் ஒப்படைத்தார். ஆனால் அவளோ தன் புருஷனல்லாத மற்றொரு மனிதனுக்கு ஒரு பிள்ளையைப் பெறுவாளானால், அப்பொழுது அந்த பிள்ளையின் மீதும், அதனுடைய பிள்ளைகள் மற்றும் அதனுடைய பிள்ளைகள், மற்றும் அதனுடைய பிள்ளைகளிடத்தில் மூன்று மற்றும் நான்கு தலைமுறைகளுக்கு சாபமானது இருக்கும். அநேக சமயங்களில் பால்வினை கிரந்தி நோய்கள் மற்றும் - மற்றும் குருட்டாட்டங்கள், மக்கள் மேல் வந்தது. ஆம் ஒரு பெண், பரிசுத்த விவாகத்திற்கு அப்பாற்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுப்பாளானால் அது ஒரு பயங்கரமான, பயங்கரமான காரியமாகும். கவனியுங்கள், அப்பொழுது மாத்திரமல்ல, இன்னுமாக அது ஒரு பயங்கரமான செயலாகும், நிச்சயமாக எப்பொழுதுமே அவ்விதமே. 44கேள்வி: எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்னர் எசேக்கியல் 38 மற்றும் 39 நிறைவேறுமா? இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களால், எசேக்கியல் 38 மற்றும் 39 கோகு மற்றும் மாகோகு குறித்து இருக்கிறது, அது தான் வடக்கு தேசமாகிய ரஷியா ஆகும். இப்பொழுது, இது சரி என்று நான் கூறவில்லை, ஆனால் நான் அதை போதிப்பது என்னவென்றால், அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு, சபை மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு நிறைவேறும். அங்கே இஸ்ரவேலுக்கு முன்பாக அவர்கள் வருகையில் கோகு மற்றும் மாகோகை தேவன் கையாளுவார். அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அது நடைபெறாது, பாருங்கள். ஆனால் நான் அதை அப்படித்தான் போதிக்கிறேன். அதைக் குறித்த என் கருத்து என்னவென்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர் என்று நான் கருதுகிறேன். 45கேள்வி: நாம் இங்கே கேள்விப்பட்ட மற்றும் கண்டிருக்கின்ற காரியங்களைக் குறித்து, அதாவது அவருடைய வருகையின் அருகாமை, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் மற்றும் காரியங்களைக் குறித்து மற்றவருக்கு சாட்சி கொடுக்க வேண்டுமென்று கர்த்தர் நம்மிடம் தீர்க்கதரிசனம் மூலமாக கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்களைப் போலக் காணப்படுகின்ற சிலரிடம் இந்த காரியங்களை நாங்கள் கூறியுள்ளோம், ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிப்பது போல காணப்படவில்லை. அந்த மக்களுக்கு என்ன சம்பவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா? இப்பொழுது, ''நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'' என்று கூறின விதத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சரியானதாக இருக்கும்படிக்கு அது செய்யும். ஏனெனில் நான் அதை குறித்து நினைத்துப் பார்ப்பேன். ஒருவனுக்கு தேவன் ஒளியை வெளிப் படுத்திக் கொடுக்காவிடில் எந்த ஒரு மனிதனாலும் தேவனுடைய ஒளியில் நடக்க முடியாதென்று நான் நம்புகிறேன். மற்றும் நான் விசுவாசிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும்... இந்த மறைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் ஜனத்திற்கு மறைக்கப்பட்டுள்ளது, இவைகளை தேவன் வெளிப்படுத்தினாலொழிய எந்த ஒரு மனிதனாலும் இவைகளைக் கூட காண முடியாது, அவ்வாறு நான் விசுவாசிக்கிறேன் ஏனென்றால் வேதாகமத்தில் அவ்விதமாகத் தான் எப்பொழுதுமே இருந்து வந்துள்ளன. 46''உங்களுக்கு கண்களிருந்தும் உங்களால் காணமுடியவில்லை, உங்களுக்கு காதுகளிருந்தும் கேளாமற்போகிறீர்கள்'' என்று இயேசு கூறிவில்லையா? மத்தேயுவிலும், 8 அல்லது 12-வது அதிகாரம் என்று நான் நம்புகிறேன், அது இயேசு இத்தனை அற்புதங்களை அவர்களுக்குள்ளாக செய்திருந்தும் அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலிருக்கிறார்கள் என்று ஏசாயா கூறினான், “அந்த தீர்க்கதரிசனமும் கூறினது'' பாருங்கள்? “ஒருவனை என் பிதா முதலில் அழைக்காவிடில் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு கூறினார். அது எல்லாவற்றையும் முற்றுப் பெறச் செய்கிறது, புரிகின்றதா? இப்பொழுது, ஒளியை பரப்புவதற்குத் தான் நீங்கள் - நீங்கள் பொறுப்பாளிகள், அவர்கள் அந்த ஒளியைப் பெறுவதற்கு நீங்கள் பொறுப்பாளிகளல்ல, அவர்களிடத்திற்கு அதை எடுத்துச் செல்ல நீங்கள் பொறுப்பாளிகள். ஆனால் அவர்களுடைய பதிற்செயலுக்கு நீங்கள் பொறுப்பாளிகள் அல்ல. ஆகவே தேவன் அவர்களை உள்ளே அனுமதிப்பாரென்றால், அது அவரைப் பொறுத்த ஒன்றாகும். அவர்கள் வஸ்திரமில்லாதவர்களாக இருந்தாலும், இன்னும் மற்றவை... ஆனால் அவர்கள்... அவர்களால் முடியாது. நினைவில் கொள்ளுங்கள், தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தினாலொழிய அவர்களால் அதைக் காண முடியாது. 47கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், தானியேல் 11-வது அதிகாரம், 31-ஆம் வசனத்தில், அன்றாட பலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள் என்ற நாளைக் குறித்து போதிக்கிறது. தயவு கூர்ந்து அவை என்ன என்பதை நீங்கள் விளக்க முடியுமா? ஓ, இந்த நபர் தன்னுடைய பெயரை இதனுடன் சேர்த்து கையொப்பமிட்டுள்ளார். அடுத்த ஞாயிறு என்னுடைய பொருள் இதுவேயாகும், அது தானியேலின் எழுபது வாரங்களுடன் வருகின்றது. ஆனால்... இதை நான் உங்களுக்கு கூறட்டும், இங்கே கையொப்பமிட்டுள்ள என் மிகவும் விலையேற்பெற்ற சகோதரன், நம்மெல்லாருக்கும் அருமையான நண்பராவார். ஆம், ''பாழாக்கும் அருவருப்பு'' இயேசு, மத்தேயு 24ல் அதைக் குறித்து பேசியுள்ளார். அந்த அருவருப்பு, (என்றால் அசுத்தம்) அந்த பாழாக்கும் அருவருப்பு, அது, ஒருக்காலத்தில் பரிசுத்த இடமாயிருந்த அந்த தேவாலய இடத்தில் தானே முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதி கட்டப்பட்டது தான் அந்த அருவருப்பு. 48கி.பி. 96ஆம் ஆண்டில், தீத்து அரசன் உள்ளே வந்து எருசலேமை கைப்பற்றி தேவாலயத்தை சுட்டெரித்தான், அந்த நிலத்திலே, அவர்கள், முஸ்லீம் மதத்தினரின் ஓமர் மசூதியை கட்டினார்கள், (முகமதியர் மதம்) அது இன்று வரையிலும் அங்கே இருக்கின்றது. தேவன் யூதர்களிடம் திரும்ப வரும் வரைக்கும் அது அங்கே இருக்கும். அந்த அருவருப்பு (அது தான் ஓமரின் மசூதி) பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கும் ஒன்று. அங்கே பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்றது, பாருங்கள். இயேசு அதைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார், ''வாசிக்கிறவன் சிந்திக்கக் கடவன்'' என்று கூறினார். பாருங்கள்? ஆதலால், அவர் அந்த நேரம் முதற்கொண்டு அநேக நாள்... அந்த அரசனுக்கு பிறகு, அநேக நாள், நாம் அடுத்த ஞாயிறன்று பார்க்கப் போகிறோம். எனக்கு தெரிந்த வரை சிறந்த முறையில் அதை நான் உங்களுக்கு அடுத்த ஞாயிறன்று எடுத்துரைப்பேன். தேவாலயத்தின் இடத்தை எடுத்துக் கொண்ட அந்த ஓமர் மசூதி தான் அந்த அருவருப்பு, “மேலும் அந்த பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கின்ற பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, பாருங்கள், தேவாலயம் இருந்த அந்த இடத்தில் (பரிசுத்த ஸ்தலம்) ஓமரின் மசூதி இருக்கின்றது. 49கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரும் ஒவ்வொருவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா, கர்த்தருடைய பண்டக சாலையிலே தங்கள் தசமபாகங்களை செலுத்த வேண்டுமா? இந்த கேள்விக்கான வேத வசனத்தை தயவு கூர்ந்து அளிக்கவும். சரி, உங்களால் கூடுமானால்... அது சரி, மல்கியா 4 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது, “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? (ஆங்கில வேதாகமத்தில் rob, திருட்டு என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) எதிலே உம்மை வஞ்சித்தோம் (robbed திருடினோம்) என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. உங்கள் தசமபாகம் மற்றும் காணிக்கைகளையும் என்னுடைய பண்டக சாலைக்கு கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங் கொள்ளாமற் போகும் மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். அது எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் சவால் என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேலும் எனக்கு அந்நேரம் மட்டுமிருந்தால் நான் அடுத்த பத்து நிமிடத்திற்கு இந்த சிறிய வேத வசனங்களுக்கு சென்றிருக்க மாட்டேன், நான் என்னுடைய தனிப்பட்ட சாட்சியை கூற விரும்புகிறேன். எப்படி நானும் பசியாயிருந்தேன், என் தாய் மற்றும் அவர்கள் பசியாயிருந்தார்கள், மற்றும் எனது தந்தையின் சுகவீனமான ஒரு சூழல், ஆனாலும் முதலாவதாக எனது தசமபாகத்தை எடுத்து அதை கர்த்தருக்கு கொடுத்தேன். நீங்கள் கொடுத்து அதன் பிறகு நடப்பவைகளை பாருங்கள். எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, நீங்கள் வாரத்திற்கு ஒரு டாலர் மாத்திரமே சம்பாதித்து, அந்த பணத்தில் பத்து சென்டுகளை கொண்டு வந்து உங்களுடைய பண்டகசாலையில், நீங்கள் செல்லுகின்ற உங்கள் சபையில் கொடுத்து, தேவன் அதை ஆசீர்வதிக்கவில்லையெனில் என்னை ஒரு மாய்மாலக்காரன் என்று கூறுங்கள். இப்படிப்பட்டதை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதேயில்லை ஆம், ஐயா. அது ஒவ்வொருவருக்கும் சவாலாகும். மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும்... அது மற்ற கேள்விக்கு செல்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகங்களை செலுத்த வேண்டும்! அது சரி. அதை செலுத்தித்தானாக வேண்டும். 50அது சரி இப்பொழுது: கேள்வி: ஒரு நபர் அல்லது நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே குரல் மற்றும் தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கான வியாக்கியானம் ஒவ்வொரு முறையும் வியாக்கியானம் செய்பவரால் பலவிதமாக வியாக்கியானிக்கப்படும் போது, அது பரிசுத்த ஆவியாக இருக்குமா? இப்பொழுது நான் இதை மறுபடியுமாக வாசிக்கட்டும்: ஒரு நபர் அல்லது நபர்கள் ஒவ்வொரு முறையும் ஒரே குரல் மற்றும் தொனியில் அதே காரியத்தை அந்நிய பாஷையில் பேசும் போது, (வேறு விதமாகக் கூறுவோமானால் ஒரு குறிப்பிட்ட, குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியுமாக அதே காரியத்தையே கூறிக் கொண்டிருத்தல்) அதற்கான வியாக்கியானம் ஒவ்வொரு முறையும் வியாக்கியானம் செய்பவரால் பலவிதமாக வியாக்கியானிக்கப்படும் போது, அது பரிசுத்த ஆவியாக இருக்குமா? இப்பொழுது, இது கடினமான ஒரு காரியம், ஆனால் என்னால் கூடுமான வரைக்கும் இதன் பேரில் சில உண்மைகளை நான் கொண்டு வருவேனாக. இது சகோதரன் பிரன்ஹாம் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்வது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயிக்கிறேன், ஆவிக்குரிய காரியங்களைக் குறித்த விவகாரங்களில் எனக்கிருக்கும் இந்த தனிப்பட்ட அனுபவத்தை நான் உங்களுக்கு கூறுவேனாக. இதைப் போன்ற கேள்விகளை என்னிடமாக கேட்பதற்கு உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த விதமாக என்னிடத்தில் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டீர்கள். வாக்குவாதத்தை எழுப்பவதற்கென்றே கேள்விகளை ஒரு கிறிஸ்தவன் கேட்கமாட் டான் என்று நான் விசுவாசிக்கிறேன், சத்தியம் என்னவென்பதை கண்டு கொள்வதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? நான் பதிலளிப்பேன், ஆனால்... எனக்கு தெரிந்த வரையில் உண்டாயிருக்கிற அறிவு என்று நான் என்னை தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே நான் அதற்கு பதிலளிப்பேன், அதன் பிறகு உங்களுக்குள் இருக்கும் ஆவி கோபம் கொண்டால், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி பரிசுத்த ஆவி அல்ல என்று தான் அர்த்தம். புரிகின்றதா? அப்படியானால் பரிசுத்த ஆவி கோபம் கொள்ளாது, ஒவ்வொரு முறையும் வார்த்தையினால் அது திருத்திக் கொள்ளும், சீர்திருத்தலை தாங்கும். 51இப்பொழுது இதை நான் கூறட்டும், நான் இந்த காரியத்தில், நினைவு கொள்ளுங்கள், தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருப்பாராக. நான், இது வில்லியம் பிரன்ஹாம், என்னால் இதை கூற முடியாது. அபிஷேகத்தின் கீழாக இப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கண்டிருக்கின்ற அனுபவங்களில், அந்த நபர் ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை, அதே குரல் தொனியில், பேசுவது அந்நிய பாஷையில் தான் பேசுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிப்பது என்னவென்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால் அவர்கள் ஆவியினாலே அந்நிய பாஷை பேசுகின்றார்கள். அவர்கள் அந்நிய பாஷையில் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் தவறான தொனியில் உள்ள வியாக்கியானத்தை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள் என நான் நம்புகிறேன். இப்பொழுது, அநேக சமயங்களில், மக்கள்... நான் - நான்... எப்படியாயினும்... இன்று இங்குள்ளோர் அனைவரும் சபை மக்கள் என்றே நான் யூகிக்கிறேன். அப்படித் தானே சகோதரன் நெவில், என்னவாயிருந்தாலும் சரி? இங்கே வெளியேயிருந்து வந்துள்ளவர்களாக இருந்து இதன் பேரில் கருத்து வேறுபாடு கொள்வீர்களானால், நான் இதை என் சொந்த சபைக்கு பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பாருங்கள். 52இப்பொழுது, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனான, உங்களுடைய மேய்ப்பனான நான் கூறிட விரும்புவது, இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு, உங்களுடைய ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்தை நோக்கி வருகையில்... அவை கட்டுக்கடங்காமல் இருப்பதை நீங்கள் கவனிக்க நேரிடுகையில்... அப்பொழுது நீங்கள் சற்று கவனித்தால் நல்லது - அந்த நபரை கவனியுங்கள், அதை அப்படியே விட்டுவிடுங்கள், ஏனெனில் அவர்கள் மேல் இருப்பது தேவனுடைய ஆவி அல்ல. ஆனால் அவர்கள் இனிமையாகவும், தாழ்மையாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் மற்றெல்லாமும் உடையவர்களாகவும் இருந்தால் அது தேவனுடைய ஆவியாகும். யாராவது ஒருவர் ஒழுங்கை மீறி நடந்து கொள்ளும்போது, மேய்ப்பர் அதை அடக்க நேரிடும் போது, அப்போது அந்த ஆவி எழும்புமானால், அப்படியானால் அது தேவனுடைய ஆவி அல்ல. தேவனுடைய ஆவி எப்பொழுதுமே வார்த்தைக்கு வரும், நிற்கும். புரிகின்றதா? அது ஒவ்வொரு முறையும் வார்த்தையை அடையாளங் கண்டு கொள்ளும். இப்பொழுது, ஆனால் இப்பொழுது நான் முகஸ்துதியோ அல்லது அதிர்ச்சியோ செய்ய முயலவில்லை, நான் உண்மையைக் கொண்டு வரவே முயல்கின்றேன். இப்பொழுது, ஒருவர் அந்நிய பாஷையில் பேசி மற்றொருவர் வியாக்கியானம் செய்ய எழுந்திருக்கையில் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள் (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அப்படித் தானே?) அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் செய்யப்படுகையில்... இதனுடன் சேர்த்து சில போதகத்தையும் நான் பேச வேண்டியுள்ளது. அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் அளிக்கப்படும் போது, சில மக்கள் அசாதாரணமான முகபாவம், சொற்களுடன் அந்நிய பாஷையை வியாக்கியானிக்க ஒரு காரியத்தை கூற முற்படுகின்றனர். அது வியாக்கியானம் அல்ல. 53வியாக்கியானம் என்பது, அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவதை, அவர்கள் என்ன பேசினார்களோ அதை அப்படியே மறுபடியுமாக திரும்பக் கூறப்படுவதே, நீங்கள் அதை ஆங்கிலத்தில் கூறக் கேட்கிறீர்கள். ஆனால் அந்த... இந்த நபர் உங்களுடைய சபையில் பேசுகையில்... இதில் ஒன்று நம்மிடையே இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படியானால், அதை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் யாரோ ஒருவர் எழுந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மறுபடியும், மறுபடியும் அல்லது அதே குரல் மற்றும் தொனியில் இப்படியாக, இப்படியாக, இப்படியாக, இப்படியாக கூறும் போது... நான் உங்களுக்கு கூறுகிறேன், இன்றிரவு, சகோதரன் ஜீனியர் ஜாக்சன் இங்குள்ளார் என்று நான் நினைக்கவில்லை. அவர் இருக்கிறாரா? அவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் ஜூனியர் ஜாக்சன் மற்றும் அவர் பேசுகின்ற அந்நிய பாஷை குறித்தும், மற்றும் சகோதரன் ஹிக்கின்பாத்தம் மற்றும் இங்கிருக்கின்ற உங்களில் அநேகரைக் குறித்து நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவதுண்டு, அந்நிய பாஷை வியாக்கியானத்தின் சத்தத்தில் இருக்கின்ற மாற்றத்தை நீங்கள் காணும் போது எப்படியாக இருக்கின்றது. பாருங்கள்? இப்பொழுது - இப்பொழுது அது பரவாயில்லை. இப்பொழுது, நான்... என் சபையைக் குறித்து நான் பெருமையாகச் சொல்லவில்லை. இல்லை ஐயா. என்னுடைய சபைக்கு திருத்தப்படுதல் தேவையாயிருக்கும் பட்சத்தில், அது புண்படுத்துகிறதோ அல்லது புண்படுத்தவில்லையோ, நான் - நான் இங்கே நின்று என் இரட்சகருக்காக என்னால் முடிந்த வரைக்கும் அதை நான் செய்வேன், அது சரியே, சுவிசேஷத்தில் நான் உங்கள் தகப்பனாவேன், பாருங்கள், ஆகவே நான்... நீங்கள் தவறான ஆவியை விரும்பமாட்டீர்கள், நீங்கள் சரியான ஆவியைக் கொண்டிருப்பதையே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும்... பெந்தெகொஸ்தே வானங்கள் முழுவதிலும் உண்மையானது நிறைந்திருக்க ஏன் ஒரு மாற்று பதிலீட்டை (substitute) எடுக்கவேண்டும்? சுத்தமான ஒரு மேஜை அமைக்கப்பட்டு அதில் கோழி கறி , மாவுபணியாரங்கள் மற்ற எல்லாமும் வைக்கப்பட்டிருக்கையில் நீங்கள் ஏன் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து உண்ணவேண்டும்? புரிகின்றதா? நாம் ஏன் அதைச் செய்வதில்லை? பாருங்கள்? உண்மையானதை நாம் பெற்றுக் கொள்வோம், அது தான் நமக்குத் தேவையாயிருக்கிறது, அந்த உண்மையான கலப்படமில்லாத தூய்மையான ஒன்று. 54இப்பொழுது, இங்கே கூறப்பட்டுள்ள இந்த காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், அதே போல் அந்த காரியத்தை நான் விசுவாசிக்கின்றேன். இரண்டும் சரியே. ஆனால் வியாக்கியானம் செய்பவர் அந்த நபருடைய பாஷையை வியாக்கியானம் செய்கிறார் என்றும் நான் நம்புவதில்லை. நான் அதை விசுவாசிப்பதில்லை. ஆவியானவர் இருக்கிறார் என்றும் அந்த வியாக்கியானம் செய்பவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வியாக்கியானிப்பவர் என்பதைக் காட்டிலும் தீர்க்கதரிசனம் உரைப்பவர் என்றே நான் விசுவாசிக்கிறேன் - அவர் தன்னுடைய சொந்த சத்தத்தை கேட்காமல் இருந்தால். “அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம மொழியிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?'' பாருங்கள்? அதே விதமாக நீங்கள் பேசக் கேட்க வேண்டும், நீங்கள் ஆங்கிலத்தில் பேசக் கேட்க வேண்டும். வியாக்கியானிப்பவர் இப்பொழுது, என்னால் எழுந்து நின்று, எனக்கு இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் அந்நிய மொழியில் எனக்குத் தெரியும். அதுதான் இப்பொழுது நான் பேசப் போகிறேன், ஆவிக்குரிய விரோதமாக அல்ல புரிய வைப்பதற்காக நான் அதைப் பேசப் போகிறேன், பைய், பைய் ப்ளை, ஐ... எக்கே வில் ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென். ''நான் என்ன பேசினேன் என்பதை அறிந்துள்ள நபர் யாராவது இங்கிருப்பார்கள் என்பதில் எனக்கு நிச்சயமில்லை. ஆமாம், சகோதரனே, நான் என்ன கூறினேன்? (சபையோரிலிருந்து ஒரு சகோதரன் ஆப்பிரிக்கான்ஸ் மொழியை என்னால் பேச முடியும் என்று நீங்கள் கூறினீர்கள் என்று கூறுகிறார் - ஆசி) “ஆப்பிரிக்கான்ஸ் மொழி, பைய், பைய் ப்ளை'', ''எனக்கு மிகவும், மிகவும் மகிழ்ச்சி'', ''ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்'' பாருங்கள், ”ஆப்பிரிக்கான்ஸ் ஸ்பிரெக்கென்“ பாருங்கள்? ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேச நான் இங்கிருக்கிறேன்''. 55இப்பொழுது, அவர் என்ன செய்தார்? அவர்... நான் ஆப்பிரிக்கான்ஸில் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஆங்கிலத்தில் பேசக் கேட்டார். அது சரியா? ஏனெனில் உங்களுக்கு ஆப்பிரிக்கான்ஸ் தெரியும். இப்பொழுது நீங்கள் பேசிக் கொண்டிருக்கையில்... நான் இங்கே நின்று கொண்டிருந்து அல்லது பேசிக் கொண்டிருந்து... பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், சகோதரன் நெவில் அதை மற்ற மக்களுடைய மொழியில் வியாக்கியானிக்கும் போது, நான் என்ன கூறுகிறேன் என்பதை அவர் கேட்டு அதை அவர்களுடைய மொழியில் கூறுகின்றார்; நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அவர் அறிவார். ஏனெனில் என்னுடைய மொழியை அவர் அறிவார். நீங்கள் ஒரு அறியாத மொழியில் பேசி அதை வியாக்கியானிக்கும் போது, நீங்கள் அதை உங்கள் ஜென்ம மொழியில் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் அவர்கள் கூறுவதை அந்த விதமாகத் தான் உங்களால் வியாக்கியானிக்க முடியும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்துவிட்டார். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்காகவே மாத்திரம் பேசுகிறீர்கள். 56இந்த ஏழை நபரை ஆசீர்வதிக்க பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கையில், அவர்களும் எழுந்திருக்கும் போது... நம்மை விட்டு கடந்து சென்று இன்றிரவு மகிமையில் இருக்கின்றார் என்று நான் உண்மையாக விசுவாசிக்கின்ற விலையேறப்பெற்ற வயதான சகோதரன் போல் எனக்கு தெரிந்த அருமையான வயதான ஆத்துமா, சகோதரன் ரையான், நாமெல்லாரும் அவரை அறிவோம். அவர் அங்கே தெருவில் நிற்பது வழக்கம்... (தேவனே, என்னை மன்னிக்கவும், பரிசுத்த தன்மைகளை மதியாத ஒன்றாக இருக்க அல்ல... அது... பரிசுத்த ஆவியை தூஷணம் செய்வது மன்னிக்க முடியாததாகும் என்பதை நானறிவேன்) ஆனால் சகோதரன் ஒரேயொரு வார்த்தையை எல்லா நேரத்திலும் திரும்பத் திரும்பக் கூறுவது வழக்கம் “சீக்கெம், சீக்கம், சீக்கெம்'' அல்லது அதைப் போன்ற ஒன்றை கூறுவார். அவர் ஏன், ஒருவர் ''அது தேவனால் உண்டானதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் “நிச்சயமாக, அது தேவனாலுண்டானது! நிச்சயமாக, அது தேவனுடையதுதான்'' என்று கூறினேன். ஆனால் அவர் அந்நிய பாஷையில் பேசினார், அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று என்னால் கூற முடியவில்லை, ஏனெனில் எனக்குத் தெரியாது. ஆனால் ஆவியானவருடைய பிரசன்னம் அங்கே இருந்தது. ஆகவே ஆவியானவருடைய பிரசன்னம் இருக்கும் போது, இந்த நபர் ஒரு வார்த்தையை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் கூறும் போது, இன்னொருவர் குதித்தெழுந்து வியாக்கியானம் அளிக்கமுயன்று, இன்னுமாக அவர் என்ன கூறுகிறார் என்பதை இவர் அறியாதிருக்கிறார். இந்த நபர் வியாக்கியானம் அளிக்கவில்லை, இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார்: தீர்க்கதரிசனத்தின் ஆவி இவர் மீது தங்கி அதினாலே இவர் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், வியாக்கியானம் அளிக்கவில்லை. 57ஆகவே அருமையான கிறிஸ்தவனே, ''அது பரிசுத்த ஆவியாக இருக்குமா?'' என்று கேட்டவராகிய உங்களுக்கு கூறுகிறேன். அது பரிசுத்த ஆவியானவர் இரண்டு அலுவல்களை உபயோகிப்பதாக இருக்கக் கூடும். ஒன்று, அந்நியபாஷையில் பேச ஒரு ஆத்துமாவை ஆசீர்வதிப்பதாகும்; மற்றொன்று, தீர்க்கதரிசனம் உரைத்தல், அந்த நபர் கூறுவதை அதை வியாக்கியானம் செய்வதாக அல்ல ஆனால் அவர் உரைத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்து அவர் தீர்க்கதரிசனம் உரைக்கும் அதே நேரத்தில் இவர் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருந்தார். அது வியாக்கியானம் என்று இவர் எண்ணினார், என்ன வித்தியாசத்தை அது உண்டு பண்ணினது? அது தேவனுடைய ஆவியானவர் சபைக்கு ஒரு செய்தியை அளிப்பதாகும். ஆனால் வியாக்கியானம் என்பது, ஆங்கிலத்தில் அது புரிந்து கொள்ளப்பட்டு, சரியாக அந்த நபர் என்ன கூறினாரோ அதை மறுபடியுமாக மீண்டும் கூறுதலாகும். அது தான் வியாக்கியானம் பண்ணுகின்ற வரமாகும். 58கேள்வி: “ஒரு கூட்டத்தில் அந்நியபாஷையில் ஏற்கெனவே மூன்று செய்திகள் புறப்பட்டு வந்துவிட்ட பிறகு, பிறகு ஜெப வரிசையிலும் இன்னுமாக செய்திகள் இருக்கலாமா, மேலும் கூட்டமானது ஆவிக்குரிய ஒழுங்கில் இன்னுமாக இருக்குமா?” ஏன், நிச்சயமாக. அது சரியே. நிச்சயமாக நீங்கள் எதை நோக்குகிறீர்கள் என்பதை நானறிவேன். அதோ பவுல் கூறுகிறான் அவையெல்லாம்... ''நீங்கள் தீர்க்கதரிசனம் உரைத்து அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள்“ என்பதைப் போல், பவுல் கூறுகிறான்... சிறிது நேரம் கழித்து, நீங்களெல்லாரும் சகோதரன் நெவில், இப்பொழுது நீங்களெல்லாரும் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள், இந்த மக்கள் எல்லாரும் இந்த ஆவிக்குரிய வரங்களை உடையவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது என்னுடைய வேத வசனத்தின் புரிந்து கொள்ளுதலில் நீங்கள் முழு மனதான நம்பிக்கை வைப்பீர்களானால், இந்த வரங்களையுடைய மக்களாகிய உங்களோடு மாத்திரமே நானும் வந்து நாமெல்லாரும் ஒன்று கூடி... நீங்கள் எப்படி... நீங்கள் கவனியுங்கள், சகோதரன் நெவில் மற்றும் சபையில், பாருங்கள், அது தேவனாகும், தேவன் அவர்கள் மத்தியில் அசைவாடுகிறார், அது தான் நமக்கு தேவைபடுகிறது, ஆனால் அதை நாங்கள் ஒழுங்கில் வைக்கவே விரும்புகிறோம் அதினால் அது சபைக்கு ஆசீர்வாதமாக அமைந்து காரியங்களைச் செய்யும். நான்... தேவனால்... வேத வசனங்களை அறிவேன், என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவேன். அதைத் தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம். 59இப்பொழுது, இங்கேயிருக்கும் இந்த நபர், இவர் அந்நிய பாஷையில் பேசுகிறவர் என்பது எனக்கு தெரியும், அது இரண்டு வல்லமைகளால் உந்தப்படுகின்றன, மூன்றுக்கு மேற்பட்டவைகளாக இருக்காது. அது சரியானது. ஆனால் இங்கு நீங்கள் கவனிப்பீர்களனால், அது... அங்கே ஒருவர் அளிப்பது போல... சகோதரன் சாத்மேன் எழுந்து தீர்க்கதரிசன செய்தியை அளிப்பது அல்லது அந்நிய பாஷையில் பேசுவது போல. அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்வது தீர்க்கதரிசனமே, பாருங்கள், தீர்க்கதரிசனத்தின் ஆவி. இப்பொழுது, வியாக்கியானிப்பவர் இல்லாதிருக்கையில், நீங்கள் அந்நிய பாஷையில் மாத்திரம் பேசிக் கொண்டிருந்தால், அந்த நபர் ஆவியினாலே ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார், ஆனால் அவர் சபையை புண்படுத்துவதில்லை. இப்பொழுது பவுல் இதைக் கூறத்தான் முயன்று கொண்டிருந்தான், “நீங்கள் ஆராதனை முழுவதையும் அந்நிய பாஷை பேசுவதிலேயே உபயோகிக்கிறீர்கள், பாருங்கள், அப்பொழுது கல்லாதவர்கள் இது என்ன, எதைக் குறித்ததாயிருக்கிறது? என்பார்கள். பாருங்கள், அவர்கள் அதை பெற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அங்கே ஒரு வியாக்கியானம் இருக்க வேண்டும், அங்கே இருக்கவேண்டும். ஆகவே... ஒரு கூட்டத்தில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று செய்திகள் மாத்திரமே இருக்கட்டும். 60இப்பொழுது, இங்கே அந்த நபர் ''பிறகு ஜெப வரிசையிலும்?'' என்று கேட்கிறார். அது ஒருக்கால் ஜெப வரிசையில் யாராவது ஒருவராக இருக்கலாம்.... ஒருக்கால் சகோதரன் நெவில், அல்லது வேறொரு சபையில் அல்லது எங்கிருந்து வந்ததாயிருந்தாலும் சரி, ஜெப வரிசையில் இந்த மனிதன்... அல்லது தெய்வீக சுகமளித்தல் கூட்டங்களில், சகோதரன் ராபர்ட்ஸின் கூட்டத்தில் இருந்திருக்கலாம், சகோதரன் ஆலன் அவர்களுடைய கூட்டத்தில் அல்லது ஏதோ ஒன்றில், என்னுடைய கூட்டத்தில் அல்லது யாரோ ஒருவருடையதில், எனக்குத் தெரியாது. ஆனால், அது என்னவாயிருந்தாலும் சரி, அங்கே சபையில் ஒரு தீர்க்கதரிசன செய்தியைக் குறித்து பவுல், ''மூன்று பேர் மாத்திரம் பேசலாம்'' என்று பேசுகிறான், ஏனெனில் தேவனுடைய செய்தியானது ஒரு செய்தியைப் பேசி அதை சபையாருக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஜெப வரிசையில் இருக்கையில் அவன் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைக்கின்றான், முழு சபைக்கு அல்ல. அப்படியாக இருக்குமானால், பாருங்கள், ஒரே இரவில் அவர்களில் முப்பது அல்லது நாற்பது பேர்கள் இருக்கையில் என்னுடைய எல்லா ஜெப வரிசைகளிலும் எப்படி என்னால் அதை தவிர்க்க முடியும். பாருங்கள், நீங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கையில். ஆனால் இந்த மனிதன் முழு சாரத்துக்கும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றார், அது இரண்டு அல்லது மூன்று செய்திகளாக இருந்து பிறகு நிறுத்தப்பட வேண்டும். பரிசுத்த ஆவி இன்னுமாக பேச விரும்புவார், ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள், வார்த்தை புறப்பட்டுச் செல்ல தருணம் கொடுங்கள். நீங்கள் பாருங்கள்? மேலும் உண்மையாகவே, அந்த உரைத்தலானது ஒன்று வார்த்தை கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ தான் இருக்க வேண்டும், வார்த்தையானது புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துவிட்ட பிறகு எதுவும் அதற்கு இடையூறு செய்யக் கூடாது. ஆனாலும், ஆவிகளும் வரங்களும் பரிபூரணத்திற்குள்ளாக செல்ல ஆரம்பிக்கையில் பிறகு அதை நாம் ஒழுங்கிற்குள் அமைத்துவிடலாம். நாம் இப்பொழுது பெந்தெகொஸ்தே சபையின் முக்கியத்துவத்தின் பேரில் பேசிக் கொண்டிருக்கிறோம், நான் உண்மையான பெந்தெகொஸ்தே சபையையே குறிப்பிடுகிறேன். தேவன் இன்னுமாக ஜீவித்து, அரசாட்சி செய்து, நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். 61இப்பொழுது, உதாரணத்திற்கு, இங்கிருக்கும் சகோதரி நமக்கு அந்நிய பாஷை அல்லது தீர்க்கதரிசனத்திலோ ஒரு செய்தியை அளித்து மற்றும் இவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணி அல்லது பின்புறத்தில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்க்கதரிசனமாகவோ அல்லது அந்நிய பாஷையில் ஒரு செய்தியை அளிப்பார்கள். அவர்கள் ஏறக்குறைய அதே காரியத்தின் பேரில் தான் பேசியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை - அது தேவன் துரிதமாக ஏதோ ஒன்றை அளிக்க முயற்சி செய்தல், சபையில் சில தனிப்பட்ட நபர்கள் ஒன்றை செய்ய வேண்டும் என்று அழைத்தல், அல்லது செய்யப்பட வேண்டுமென்று அவர் விரும்புகின்ற ஒன்றைக் கூறுதல். இப்பொழுது, உதாரணத்திற்காக, ஜெபவரிசை அழைக்கப்பட்டு, சகோதரன் நெவில் அல்லது நான் அல்லது யாராவது ஒரு போதகர் இந்த தனிப்பட்ட நபரிடம் செல்லும்போது, சரீரத்திற்கு அல்ல, அது அந்த தனிப்பட்ட நபருக்கு ஆகும். இந்த தனிப்பட்ட நபரிடம் ஏதோ ஒன்றைக் கூற தேவனுடைய ஆவி அவர் மீது வருகிறது, அப்பொழுது அந்த நபரிடம் கூறுகிறது, ஏனெனில் அவர் சபையோரிடம் பேசவில்லை. அவர் இந்த தனிப்பட்ட நபரிடம் பேசுகிறார், சபையோருக்கல்ல, ஆகவே அதனால் பரவாயில்லை. 62கேள்வி: சரி, “அருமையான சகோதரன் பிரன்ஹாம், கர்த்தர் எனக்கு சொப்பனங்களில் காரியங்களை அநேகமுறை காண்பிக்கின்றார். கடற்படையில் பணிபுரியும் என் மகன் தெரிவிக்கப்படக் கூடாத இரகசியங்கள் (Secrets) என்று கூறுகின்ற காரியங்களை தேவன் எனக்கு காண்பித்தார். மக்களுடைய மரணத்தைக் குறித்தும், மக்களுடைய இருதயங்களின் இரகசியங்களையும் எனக்கு காண்பிக்கின்றார். இது தேவன் எனக்களித்த வரமா? மக்களுடைய இருதயங்களையும் சிந்தனைகளையும் தேவன் எனக்கு காண்பிக்கும் போது, சொப்பனத்தில் கண்ட விதமாகவே எல்லா காரியமும் எப்பொழுதுமே நடந்தேறுகிறது”. ஏன், ஆம், என் சகோதரன் அல்லது சகோதரி, அது யாராயிருந்தாலும் சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னுடைய கருத்தின்படி, அந்த காரியமானது அது தேவனுடைய வரம் ஆகும். அது தேவனுடைய வரமாகும். சொப்பனங்களைக் குறித்து வேதாகமம் கூறுவது உங்களுக்கு தெரியுமல்லவா? யோசேப்பு, எப்படி அவன் சொப்பனங்கள் கண்டு அதன் அர்த்தத்தையும் கூறினான், மற்றவர்கள் எப்படி சொப்பனங்கள் கண்டார்கள். அந்த காரியங்கள் தேவனாலுண்டானவைகள். இப்பொழுது, அது தேவனுடையதாயிருந்தால், அது எப்பொழுதுமே உண்மையுள்ளதாக இருக்கும், அவர் கூறின விதமாகவே சரியாக எப்பொழுதும் அப்படியே அது சம்பவிக்கும். 63மேலும் இப்பொழுது வேண்டாம்... நீங்கள் அதை காட்சி பொருளாக வெளிகாட்ட ஆரம்பிப்பீர்களானால், அது உங்களை விட்டுச் சென்று விடும். பாருங்கள், பயபக்தியுடனும் இனிமையாகவும் மாத்திரமே இருங்கள். ஆகவே அவர் உங்களுக்கு ஒன்றைக் காண்பித்தால், அது ஒருவர் ஏதோ ஒரு தவறைச் செய்து, அந்த தவறை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியதாக அந்த சொப்பனம் இருக்குமானால், நீங்கள் நேராகச் சென்று அந்த நபரைக் கடிந்து கொள்ளக் கூடாது நீங்கள் அவர்களிடம் சென்று “சகோதரியே, சகோதரனே, உங்களுக்கு தெரியுமா, நீங்கள் தவறான ஒன்றை, ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்த இரவு கர்த்தர் என்னிடம் கூறினார் என்று கூறுங்கள்”. அந்த நபர், ''நீங்கள் கூறுவது தவறு. அது பொய்! நான் அவ்வாறு செய்யவில்லை!'' என்று கூறுவாரானால். இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில் நீங்கள் திரும்பிச் சென்று “பரலோகப் பிதாவே, அது தவறான ஒன்றா?'' என்று கேளுங்கள். இப்பொழுது, அந்த நபர்... அந்த நபர் உங்களுக்கு கூறினது உண்மையாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் தவறான ஆவியைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த நபர் நீங்கள் சொல்கின்ற காரியத்தை செய்திருந்து, இல்லை என்று பொய் சொன்னால், தேவன் அந்த நபரைப் பார்த்துக் கொள்வார். புரிகின்றதா? ஆம் ஐயா. ஏனெனில், பாருங்கள், அந்த நபர் செய்திருப்பது என்னவென்றால், அவர் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணம் செய்துள்ளார், பரிசுத்த ஆவி அந்த நபருக்கு சொல்லத் தக்கதாக கூறியிருப்பதை மறுதலிக்கின்றார். புரிகின்றதா, ஆகவே அது தவறான ஒரு காரியமாகும். 64கேள்வி: சகோதரன் பிரன்ஹாம், எப்படி ஒரு சபையால் நடனமாடி, சத்தமிட்டு அந்நிய பாஷையில் பேசி, ஆவியில் நிரம்பி (நாம் பார்ப்போம், இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்)... மூழ்க முடிகிறது ஆனால் அதில் எப்பொழுதாவது ஒரு முறை தான் மிக அபூர்வமாக வேத வசனம் வாசிக்கப்படுகிறது, அது எப்படி. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கும் கூட இதைப் புரிந்துக் கொள்ள இயலவில்லை; பாருங்கள், ''சத்தமிடுவது, நடனமாடுவது, அந்நிய பாஷையில் பேசுவது, ஆனால் வேத வசனங்களே வாசிக்கப்படுவதில்லை“ நான் - நான் - நான் வில்லியம் பிரன்ஹாம், இதைக் கூறுகிறேன், நினைவில் கொள்ளுங்கள், இது ஒருக்கால் இலட்சக்கணக்கான மைல் அளவிற்கு தவறாக இருக்கக்கூடும். நான் நம்புகிறேன் அநேக மக்கள். அதைப் போன்ற ஒரு ஒழுங்கைக் குறித்து இன்று ஒரு சகோதரனால் அந்த கேள்வி என்னிடமாக கேட்கப்பட்டது. அதாவது, அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும்போது, ஒருக்கால் ஒரு சகோதரன் ஒருவருக்கு ஜெபிப்பார், அப்பொழுது அவர் அவர்கள் எல்லாரையும் ஆவியில் நடனமாட அல்லது பாடும்படி செய்வார், ஜனங்கள் மத்தியில் அது வல்லமையைக் கொண்டு வரும் என்று எண்ணி அவ்விதமாகச் செய்வார். இல்லை, என்னைப் பொறுத்த வரையில் நான் அது தவறான ஒன்று என்று விசுவாசிக்கிறேன். 65ஒரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு வருகின்ற ஒரு நபர் இரட்சிப்பிற்கென வருவது போல, பயபக்தியுடன், விசுவாசித்து வருகிறார் என நான் நம்புகிறேன். அதில் இருக்கின்ற ஒவ்வொரு நபரும், சத்தமிட்டு கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் தங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ தேவனுடைய இரக்கத்தை கேட்க அங்கே மேலே செல்வதைக் காண்கையில், அவர்கள் தலையைத் தாழ்த்தி தேவனே, என் சகோதரனை அபிஷேகித்து அவருக்காக மேய்ப்பர் ஜெபத்தை ஏறெடுக்கையில் சகோதரனை ஆசீர்வதியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அவர் மீது வந்து தன்னுடைய சுகத்திற்காக அவருக்கு விசுவாசத்தை அளிக்கட்டும். அவர் விலையேபெற்ற ஒரு சகோதரனாவார். அவள் ஒரு விலையேறப்பெற்ற சகோதரியாவாள்'' என்று ஜெபிப்பார்கள். பாடல்கள் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவதற்கு பதிலாக அவருக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். ஆனால் நம்முடைய பெந்தெகோஸ்தே கூட்டங்களில் அந்தக் காரியங்கள் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம், அது தொடர்ச்சியாக... அது ஒரு ஆராதனை என்று நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் தேவனை ஆராதிக்கிறார்கள் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. என் முழு இருதயத்தோடு நான் அதை விசுவாசிக்கிறேன். அந்நிய பாஷை பேசுதல், சத்தமிடுதல் மற்றும் நடனமாடுதலில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன். அதின் ஒவ்வொரு பாகத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆம். வேதாகமத்தில் அவர்கள் செய்த எந்த ஒரு காரியமும், அப்பொழுது இருந்தது போலவே இன்றும் சரியானதாகவே உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால் அதற்கு அதன் நேரமும், அதன் ஒழுங்கும் உள்ளது என நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அந்த மகத்தான ஆசீர்வாதம் வந்திருக்கிறது, மக்களும் சத்தமிட்டு, கர்த்தருடைய மகிமையும் விழுகின்றது, மக்கள் கூச்சலிடவும், சத்தம் போடவும், ஆவியானவர் அவர்கள் என்னவெல்லாம் செய்யும்படிக்குச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யவும் விரும்புகின்றனர். தொடர்ந்து செய்யுங்கள், அது சரியே. ஆனால் ஒரு மனிதன் சுகமாக்கப்பட வரும் போது, மரணம் மற்றும் ஜீவனை குறித்த ஒரு கேள்வியானது சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கையில், நான் விசுவாசிப்பது என்ன என்றால் நாம் பயபக்தியுடன் இருந்து பிதாவிடம் பேச வேண்டும். இந்த சகோதரனுக்காக நாம் அவரிடம் பேச வேண்டும். அவரை தொழுது கொள்வதற்கு பதிலாக, அவரிடம் ''பிதாவே, நான் உம்மைத் தொழுது கொள்கின்ற ஒருவனாவேன். நான் உம்மை நேசிக்கிறேன், நான் அவ்வாறு உள்ளேன் என்பதை நீர் அறிவீர், நான் என் அன்பை உம்மிடம் வெளிப்படுத்துகிறேன். இப்பொழுது என் விசுவாசத்தை நான் உம்மிடம் வெளிப்படுத்துகிறேன், என் சகோதரன் நலமாக இருக்கும்படிக்கு உதவி செய்யும், பிதா அவ்விதமாக செய்வீரா?'' என்று கேளுங்கள். நீங்கள் அந்த விதமாக செய்கையில் உங்களுக்கு நல்ல பலன்கள் - கிடைக்கும் என நான் நம்புகிறேன். உண்மையாகவே நானும் அதைச் செய்கிறேன். பயபக்தியுடன், தேவ ஆவியுடன். 66என்னே, இவை நூறு மைல் நீளத்திற்கு இருந்திருக்கலாம். ஆனால் இவைகளுக்கு நான் பதிலளித்தேன் என நம்புகிறேன், வெளிச்சத்தை சிறிது காண்பித்தேன். எப்படியாயினும், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன் - சிறிது நேரம் கழித்து இங்கே மேய்ப்பரிடம் கேட்க விரும்புகிறேன், எனக்கு உதவிசெய்ய... ஒருக்கால் கீழே வந்து, வரங்களின் உருவில் தேவனுடைய ஆவியை தங்கள் மேல் பெற்றுள்ள மக்கள் எல்லாரையும் ஒன்று கூடச் செய்து, சிறிது நேரம் அதைக் குறித்து நாம் பேசலாம். ஒருக்கால் நீங்கள் ஏணியில் சிறிது உயரமாக ஏறி தேவனண்டையில் இன்னும் நெருங்கிச் செல்ல என்னால் உதவி செய்ய முடியும், அதனால்... சபையில் அதை அதிகமாக ஒழுங்கிற்குள் அமைக்கலாம். நான் கவனித்துக் கொண்டே வருகிறேன், எனக்கு அது மிகவும் அற்புதமாகக் காணப்படுகிறது. அது இன்னுமாக மேலும், மேலுமாக முன்னே செல்வதை காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே நாம் வளர்ந்து வருகையில், சாத்தான் உள்ளே பதுங்கி ஊர்ந்து வர அனுமதிக்காதீர்கள். பையனே, அவன் திறமைசாலியாவான். அவனை சாதுரியமாக தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள், ஏனெனில் உங்களால் அது முடியாது. நீங்கள் தேவனை மாத்திரம் சார்ந்திருந்து தாழ்மையுடன் நடந்து கொண்டேயிருக்க மாத்திரம் செய்யுங்கள், அப்பொழுது தேவன் அதைச் செய்வார், தேவன் உங்களை இன்னும் அதிகமாக, அதிகமாக, அதிகமாக உபயோகிப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 67இருபது நிமிட பேச்சுக்கு நமக்கு நேரம் உள்ளதா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. பென், என்னை ஊக்குவிக்க இது போதுமான தாயுள்ளதென்று நான் யூகிக்கிறேன். சரி. நாம் சற்று சங்கீதத்திற்கு திருப்புவோமாக இன்றிரவு உங்களெல்லாருக்கும் ஒரு பிரசங்கத்தைப் போல நான் பேசத் தக்கதாக ஒரு சிறு சிந்தனையை கர்த்தர் எனக்கு அளித்தது போல் உள்ளது, உங்களால் கூடுமானால் ஒரு சில நிமிடங்களுக்கு... இங்கு உஷ்ணமாக இருக்கிறது என்பதை நானறிவேன், இங்கே மேலே கூட உஷ்ணமாக உள்ளது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள், புதன்கிழமை இரவு வரை நாம் திரும்பவுமாக சந்திக்கப் போவதில்லை. ஆகவே நாம் காத்திருந்து இந்த அருமையான பழைய பாடலாகிய “நம்மை இணைக்கும் பிணைப்பு ஸ்தோத்தரிக்கப்படுவதாக'' பாடும் முன்னர் - எழுதப்பட்ட வார்த்தையைக் குறித்து நாம் பேசுவோம். இந்த கேள்விகள் மூடிய பாத்திரத்தில் வைக்கப்பட்டது போல நம்மைச் செய்துவிடுகிறது. இப்பொழுது நாம் அதை விட்டு வெளியே வந்து, வார்த்தையை பேசுவோம். இப்பொழுது நாம் சற்று மறுபடியுமாக நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 68பரலோகப் பிதாவே, இந்த கேள்விகள், மக்கள் தங்கள் இருதயங்களில் என்ன வைத்துள்ளனர் என்பதை கண்டு கொள்ள நான் முயற்சித்து இதை குறித்து அதைக் குறித்து அவர்கள் கேட்பார்கள் என்று பார்க்கிறேன். கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். அவர்கள் ஆவிக்குரிய வரங்களை வாஞ்சிப்பதை என்னால் காண முடிகின்றது. ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுள்ளவர்கள் அதை எப்படி ஒழுங்கிற்கு நடத்துவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு, அது சபையின் மீது அந்த மகத்தான வெளிச்சத்தை போடும்படிக்கு இருக்கிறது; மற்றவர்களுக்கோ அது ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்பொழுது, கர்த்தாவே, எங்களுக்கு எங்களுக்கு உதவிசெய்யும், கர்த்தாவே. நாங்கள் உம்முடைய பிள்ளைகள். எங்களை நாங்கள் கனப்படுத்திக் கொள்ள இந்த காரியங்களை நாங்கள் செய்வதில்லை, தேவன் எங்களுக்கு அளித்துள்ள ஒரு வாரத்தினாலே இதை நாங்கள் தேவனுடைய கனத்திற்கென்று செய்கிறோம். பிதாவே, நீர் தாமே இந்த வரங்களை ஆசீர்வதித்து அவைகளை சபையிலே பிரத்தியட்சமாக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். அதனாலே யாத்திரீகர்களும், வெளியாட்களும், வந்து அந்த கதவண்டை நின்று உள்ளே வந்து சில நிமிடங்களுக்கு உட்காரும் போது, அந்த கதவினூடாக உள்ளே பிரவேசிக்கின்றவர்களுடைய ஒவ்வொரு இருதயத்தின் இரகசியத்தையும் தேவ ஆவியானவர் வெளிப்படுத்தி மிக மகத்துவமானவராக இருப்பாராக. கர்த்தாவே, இதை அருளும். அது தாமே இனிமையோடும், தாழ்மையுடனும் இருந்து, ஒருபோதும் கடுமையாகவும் கடிந்து கொண்டு, கிழித்தெரியாமல் இருப்பதாக. தேவனுடைய ஆவியானவர் அவ்விதம் இருப்பதில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே எல்லா காரியத்திலும் நீர் தாமே எங்களை ஆசீர்வதிக்கும் படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் சபையை ஆசீர்வதியும், எங்கள் சபை மக்களை ஆசீர்வதியும் - மற்ற சபைகளைச் சேர்ந்த மக்களை ஆசீர்வதியும். மேலும், பிதாவே, ஒரேயொரு சபை மாத்திரமே உண்டென்றும் நாங்கள் எல்லாரும் அதற்குள்ளாகப் பிறந்திருக்கிறோம் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும், பிதாவே, இன்று மதியம் எழுதும் மேசையருகே நான் உட்கார்ந்திருக்கையில் நீர் எனக்கு அளித்ததாக காணப்படுகின்ற இந்த சிறு வாசகத்தை நான் வாசிக்கையில் நீர் தாமே எங்களை இன்னுமாக ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இங்கே மக்களை நீண்ட நேரம் உட்கார வைக்காமல், சில காரியங்களை மாத்திரம் நான் பேசும்படிக்கு எனக்கு உதவி செய்யும். அதில் நீர் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். எங்களுக்கு ஒரு பொருளைத் தாரும், நாங்கள் அதனுடன் வீட்டிற்குச் செல்ல ஏதுவாக இருக்கும், கர்த்தருக்கு அவருடைய நன்மைக்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 69இப்பொழுது, மறக்காதீர்கள், அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்கு சித்தமானால். இப்பொழுது சங்கீதம் 106-அதிகாரம், 7 ஆம் வசனத்திற்கு நாம் திருப்புவோம். இங்கே கீழே ஒரு பாகத்தை நான் வாசிக்க போகின்றேன்... சங்கீதத்தின் இந்தப் பகுதியை. ஆனால், அது தாவீதாகும். இது ஏன் எனக்கு வந்ததென்றால், காலை கொடுக்கப்பட்ட செய்தியால் தான் இது எனக்கு வந்தது. நான் என்னுடைய கைக் கடிகாரத்தை இங்கே வைத்து, ஒன்பதரை மணிக்கு முடிக்க முயற்சிக்கிறேன். இப்பொழுது சங்கீதம் 106:7 ஆம் வசனம். எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம் பண்ணினார்கள். அடுத்த வசனத்தை நான் வாசிக்கப் போகின்றேன். ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. கர்த்தருக்கு சித்தமானால், தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்னும் தலைப்பின் பேரில் நான் உங்களுடன் பேசப் போகிறேன், தேவன், தவறாகப் புரிந்து கொள்ளுதல். இந்த விதமாக நான் கூறப் போகிறேன்: “தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல்”. 70உங்களுக்குத் தெரியுமா, தவறாகப் புரிந்து கொள்ளுதல் நம்மை அநேக பிரச்சனைகளுக்குள்ளாக கொண்டு சென்றுவிடும். அநேக சமயங்களில் மக்கள் மற்றவர் கூறினதை அப்படியே திரும்பக் கூறுகையில், அங்கே தான் அவர்கள் அவர்களை தவறாக புரிந்து கொள்கின்றனர். அது ஒரு நபரை தொல்லைக்குள்ளாகத் தள்ளிவிடும். நாம் எதைக் குறித்துப் பேசுகிறோமோ அதை புரிந்து கொள்கிறவரைக்கும் நாம் சற்று காத்திருத்தல் நமக்கு நல்லதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அப்படித் தானே நினைக்கிறீர்கள்? முதலில் நான் அது என்னவென்று கண்டுகொண்டு பிறகு அதைக் கூறுதல் எனக்கு மிகவும் நல்லதாக இருக்குமென்பதை நான் அறிவேன். பாருங்கள்? ஆனால் எப்பொழுதுமே நாம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறோம் என்பதுபோல் காணப்படுகிறோம். மேலும் இங்கே தாவீது இஸ்ரவேலைக் குறித்து பேசுகிறான், அவர்கள் எகிப்தில் இருக்கையில் அவருடைய அற்புதங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தனர். இப்பொழுது, தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது “நல்லது, அவர் என்ன கூறினார் என்பதை நான் கேட்கவில்லை'' என்று கூறிவிடுதல் அல்ல, ஆனால் ஒரு காரியம் செய்யப்படுவதைக் கண்டு, அது எதற்காக செய்யப்படுகிறது என்பதை தவறாய் புரிந்துக் கொள்ளுதல். அதுதான்... அதுதான் நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை முழுவதுமாக நழுவ விடுதல். 71இப்பொழுது, ''பார் நான் தேவன்'' என்று கூறும்படிக்காக தேவன் அற்புதங்களைச் செய்வதில்லை. ஒரு காரியத்தை புரிந்து கொள்வதற்காக தேவன் ஒரு அற்புதத்தைச் செய்கிறார். பாருங்கள்? தேவன் அதை ஒரு நோக்கத்திற்காகவே செய்கின்றார். மேலும் இங்கே சங்கீதத்தில் 7 ஆம் வசனத்தில் உள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? அது மிகவும் அழகான ஒன்று என்று நான் நினைக்கிறேன், அதை நான் மறுபடியுமாக வாசிக்க விரும்புகிறேன். எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், (பாருங்கள் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வில்லை...) உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம் பண்ணினார்கள். ஆனால் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். பாருங்கள், எகிப்தில் தேவன் ஏன் இந்த அற்புதங்களைச் செய்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் தம்முடைய கிருபைகளை அவர்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர்கள் மத்தியில் இருக்கும் தேவன் அவர் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அது எனக்கு பிடிக்கும். 72சில காலத்திற்கு முன்னர் சிக்காகோவில் நான் பிரசங்கித்த என்னுடைய சிறு பிரசங்கத்தில், இங்கே நான் பிரசங்கித்திருக்கிறேன் என்று நம்புகிறேன், பையன்கள் அதை ஒலி நாடாவில் பதிவு செய்துள்ளனர். கழுகு தன் கூட்டை கலைத்தது போல், அது தன் குஞ்சுகளின் மேல் சிறகடித்துக் கொள்கிறது போல் - எப்படி அந்த தாய்க் கழுகு தன்னுடைய சிறு குழந்தைகளை... அது குஞ்சுகளை பறப்பதற்காகக் கொண்டு செல்கிறது, அவைகளின் நிறைய சிறகுகள் தளர்ந்த நிலையில் இருக்கும். தன் தாய் கழுகு சிறப்பாக பறப்பதை அவைகள் கண்டதில்லை. ஏனெனில் அவைகளெல்லாம் கூட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தன. ஆனால் அது கூட்டிற்கு மேலே எழும்பி தன்னுடைய பெரிய மகத்தான சிறகுகளை விரிக்கின்றது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அது கூக்குரலிடுகிறது, தன்னுடைய குரலை அக்குஞ்சுகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறது. தன்னுடைய பெரிய சிறகுகளை விரிக்கின்றது. சில சமயங்களில் பெண் கழுகு கழுகுகளில் பெரியவைகளாக இருக்கும். அநேக பெண் கழுகுகளுக்கு, சிறகுகள் ஒரு முனையிலிருந்து மறுமுனை மட்டும் பதினான்கு அடி இருக்கும் எனக் கூறப்படுகிறது, அது ஒரு கன்று குட்டியை அப்படியே தூக்கி அதனோடு மேலே பறந்து சென்றுவிடும். முனைக்கு முனை பதினான்கு அடிகள். அதன் சிறகுகள், இங்கே ஏறக்குறைய பிரசங்க மேடை அளவிற்கு அந்த கம்பத்திலிருந்து இந்த கம்பம் வரைக்கும் இருக்கும். 73இந்த சிறிய குஞ்சுக்கு முன்பாக அது எழும்புகிறது, ஏன்? ஏனெனில் அக்குஞ்சை அது பறப்பதற்கு கொண்டு செல்லப் போகின்றது. அக்குஞ்சு கூட்டை விட்டு வெளியில் சென்றதேயில்லை. அது அக்குஞ்சை மேலே வானங்களுக்கு கொண்டு சென்று பிறகு அக்குஞ்சை குலுக்கி கீழே தள்ளிவிடுகிறது, அப்பொழுது அது தன் சிறகை அடித்துக் கொண்டு எப்படி பறக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறது. அத்தாய்க் கழுகு தனக்கு இருக்கும் அதிகாரத்தை காண்பிக்க விரும்புகிறது. அது தன் பெரிய சிறகுகளை மேலும் கீழும் அசைத்து அப்படி விரிக்கின்றது, கூச்சலிடுகின்றது, பிறகு அக்குஞ்சுகளின் மீது விசிறுகிறது. ஓ, என்னே! அக்கூட்டிலிருந்து இறகுகள், மற்ற எல்லாமும் பறந்து போய் விடுகிறது, ஒரு ஜெட் விமானம் காற்றை வீசுவதைப் போன்று அத்தாய்க் கழுகு காற்றை வீசுகிறது. அக்குஞ்சை தலைக்கீழாக அடிக்கிறது, அது தன்னுடைய சிறு முதுகின் மீது படுத்துக் கொண்டு மேலே நோக்கி, “அம்மா, நீங்கள் எவ்வளவு பெரிதாயிருக்கிறீர்கள் எவ்வளவு பெரியதாக இருக்கிறீர்கள்'' என்று நினைக்கிறது. ''பார், என் செட்டைகள் எவ்வளவு பலம் கொண்டதாக உள்ளது? உன்னை நான் அப்படியே தூக்கி, எனக்கு விருப்பமான இடத்திற்கு உன்னை கொண்டுச் செல்ல என்னால் முடியும். நான் வல்லமை பொருந்திய கழுகு!'' 74அதைத் தான் தேவன் இஸ்ரவேலுக்குச் செய்து கொண்டிருந்தார். “கழுகு தன் கூட்டைக் கலைப்பது போல என்று அவர் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா, அந்த அதே காரியம் தான். அங்கே அந்த கூக்குரல் மிகுந்த தேசத்தில் அவர் இஸ்ரவேல் இருப்பதைக் கண்டு அதை எகிப்திலிருந்து அவர் வெளியே கொண்டு வந்து, அதை கழுகின் செட்டைகள் மேலே சுமந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே கொண்டு சென்றார். பாருங்கள்? மேலும் தேவன் எதற்காக அந்த அற்புதங்களைச் செய்தார்? அந்த வல்லமையான யேகோவா தாமே, என்று தம்முடைய மக்கள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்து கொண்டிருந்தார். இன்றும் அதைத்தான் அவர் செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார். தம்மால் சுகப்படுத்த முடிகிறது என்று அவர் மக்களை சுகப்படுத்துவதில்லை. அவர்தான் அந்த உயிர்த்தெழுதல் என்றும் அவர்தான் உங்களை குணமாக்க முடியுமென்றும், உங்களுடைய சரீரத்தை அவரால் எழுப்ப முடியுமென்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் முயற்சிக்கின்றார். தாம் விரும்புகிற எதை வேண்டுமானாலும் அவரால் செய்ய முடியும், அவர் யேகோவா அது எனக்கு பிடிக்கும். ஆனால் மக்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். அவிசுவாசிகளாலும் மற்றும் புரிந்து கொள்ளக் கூடாது என்றிருப்பவர்களாலும் சுலபமாக தேவனை புரிந்து கொள்ளாமல் இருக்க முடிகிறது. (அநேக மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்) அநேகர் புரிந்து கொள்ள விரும்பாமல், தங்களைத் தாங்களே அடைத்துக் கொண்டு, “அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையவே கிடையாது என்றும் அப்படிப்பட்ட ஒன்றை நான் விசுவாசிப்பது கிடையாது'' என்றும் கூறி விடுகின்றனர். அப்படியானால் அவர்களாலே புரிந்துக் கொள்ளவே முடியாது. 75ஆனால் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற, உட்கார விரும்புகின்ற ஒரு மனிதன், (வழக்காடுவோம் (reason) வாருங்கள் என்று “கர்த்தர் சொல்லுகிறார்”). இப்பொழுது, அந்த மனிதன் கர்த்தரிடமிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள சரியான பாதையில் அவன் இருக்கிறான். ஆனால் தேவனுடனும், தேவனுடைய வல்லமையுடனும் தொடர்பு கொண்டுள்ள அநேக மக்கள்... அவருடைய வல்லமையுடன் தொடர்பு கொள்ளாமல் உங்களாலே தேவனுடன் தொடர்புள்ளவர்களாக முடியாது. ஏனெனில் நீங்கள் தேவனுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கையில் நீங்கள் அவருடன் நெருங்கிய பழக்கமுள்ளவர்களாக அல்லது அவருக்கு நீங்கள் ஒரு உறவினராக இருக்கிறீர்கள். அப்பொழுது அவருடைய வல்லமையை உங்களுக்குள் கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அதன் காரணமாகத்தான் இன்றைக்கு மக்களால் அற்புதங்களை விசுவாசிக்க முடியவில்லை, அதன் காரணம் என்னவெனில் விசுவாசிக்கும்படிக்கு அவர்களுக்குள்ளே எதுவுமே இல்லாதிருக்கின்றனர். விசுவாசிக்கத்தக்கதாக ஏதாவதொன்றை அவர்களுடைய இருதயத்தில் மக்கள் கொண்டிருக்க வேண்டும். ஆகவே தேவனுடைய ஆவி ஒரு மனிதனுக்குள் இருக்குமானால், அவன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும், தேவனுடைய ஒவ்வொரு அற்புதத்திற்கும் “ஆமென்” என்று கூறுவான். “ஒரு சிகப்பு முள்ளங்கியிலிருந்து இரத்தத்தை உன்னால் எடுக்க முடியாது. ஏனெனில் அதில் இரத்தமே கிடையாது'' என்று என் தாயார் கூறுவது வழக்கம். ஆகவே அதேவிதமாகத்தான், ஒரு அவிசுவாசியிடமிருந்து விசுவாசத்தை உங்களாலே வெளியே எடுக்கவே முடியாது, ஏனெனில் விசுவாசிக்கத் தக்கதாக அவர்களுக்குள் ஒன்றுமே இல்லாதிருக்கிறது. 76ஒரு மனிதன், ''நீர் என்ன கூறினாலும் சரி, தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கமாட்டேன்'' என்று கூறினார். நிச்சயமாக அது அவருக்கல்ல, அது விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் தான். நீங்கள் இரத்தம் எடுக்க வேண்டுமென்றிருந்தால், இரத்தம் இருக்கின்ற ஒன்றிலிருந்தே நீங்கள் எடுங்கள். நீங்கள் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், விசுவாசத்தை உடையதாக இருக்கின்ற ஒன்றிலிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த விதமாகத்தான் - விசுவாசத்தை தனக்குள்ளாகக் கொண்டிருக்கிற ஒன்றைத் தான் தேவன் உபயோகிக்கின்றார். சுகமளித்தலை விசுவாசிக்க போதுமான விசுவாசத்தை நீ கொண்டிருக்காவிட்டால் தேவன் உன்னை சுகமளித்தல் கூட்டத் துக்கு அனுப்பமாட்டார். அதை விசுவாசிக்க உனக்கு போதுமான விசுவாசம் இல்லாதிருக்கையில் எப்படி அவரால் உன்னை ஒரு அற்புதம் நிகழும் எழுப்புதல் கூட்டத்துக்கு அனுப்ப முடியும்? அவர் எதைக் கொண்டுக் கிரியை செய்கிறாரோ அதைப் பெற்றுள்ள ஒருவரையே அவர் விரும்புகிறார். ஆகவே ஜனங்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். 77நோவா தன்னுடைய நாளில் மிகவுமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். நோவா, தேவனுடன் நெருங்கிய பழக்கம் உடையவன், தேவனுடைய ஊழியக்காரன், தேவனை விசுவாசிப்பவன். ஆகவே நீ தேவனை விசுவாசிக்கும் ஒருவனாக ஆகும் போது, மக்கள் சரியான ஒன்று என்று நினைப்பதற்கு முரணாக காரியங்களை நீ செய்து நீ பைத்தியம் பிடித்தவன் என்று அவர்கள் நினைக்கும்படிக்கு ஆகிவிடுவாய். தேவனாலே எச்சரிக்கப்பட்ட நோவா, தன்னுடைய வீட்டாரை காப்பாற்ற ஒரு பேழையை ஆயத்தம் பண்ணினான். மக்கள் அவனை பைத்தியம் பிடித்தவன் என்று நினைத்தார்கள். அவன் பைத்தியம் பிடித்தவன் அல்ல, அவன் தேவனுடைய கட்டளையை பின்பற்றினதால் தான் அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஆமென்! எனக்கு அது பிடிக்கும். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். “எப்படி ஒரு மனிதனால்...'', ”வானத்திலிருந்து மழை என்பது வந்ததே கிடையாது. மழை என்றால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். மழை பெய்யவே இல்லை, தேவன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார்'', “நோவா, அந்த மழையானது எங்கே இருக்கிறது?'' ''எனக்குத் தெரியாது''. ''அது எங்கேயுள்ளது என்று எனக்கு காண்பி“. “என்னால் அதை உனக்கு காண்பிக்க முடியாது'' “நல்லது, மேலேயிருந்து கீழே வருவதற்கு ஒன்றுமே அங்கே இல்லாதிருக்கையில், அது மேலேயிருந்து கீழே விழப்போகிறதென்று உனக்கு எப்படி தெரியும்?'' நோவா இவ்விதமாக கூறியிருப்பான், ''அது கீழே வரப் போகிறதென்று தேவன் என்னிடம் கூறினார்“. அது கீழேவரப் போகிறதென்று தேவன் கூறியிருப்பாரானால், அவராலே அதை மேலே கொண்டுச் சென்று பிறகு அதை கீழே கொண்டு வர முடியும். ஆமென். அது அதை முற்றுப்பெறச் செய்துவிட்டது. தேவன்அதை கூறியிருப்பாரானால், அதுதான் அதன் முடிவு. பாருங்கள்? அவன் தேவனைப் பின்பற்றினதால் அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். 78எலியா. (இந்த பொருள்களின் மீது நீண்ட நேரம் என்னால் பிரசங்கிக்க முடியும் ஆனால் அதைப் போன்று அநேக காரியங்களை நான் இங்கே வைத்துள்ளேன். ஆகவே நான் சீக்கிரமாக கடந்து செல்கிறேன்). எலியா தன்னுடைய தேசத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். எலியா ஒரு இஸ்ரவேலனாயிருந்தான், அவன் ஒரு யூதனாக இருந்தான், அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஏனெனில் அவன் எப்போதுமே தன்னுடைய தேசத்தை கடிந்து கொண்டான், இராஜாவை கடிந்து கொண்டான் இராணியை கடிந்து கொண்டான், அவனை சுற்றியுள்ள அனைத்தையும் கடிந்து கொண்டான். மேலும் அவர்களை கடிந்து கொண்டால் அவன் எப்படிப்பட்ட ஒரு பைத்தியமாகக் காணப்பட்டிருப்பான். ஏன், என்னே, எல்லாமே ''கர்த்தர் உரைக்கிறதாவது“. யேசபேலே, இன்னார் - இன்னார் அவர்களே, தேவன் உங்களை தண்டிக்கப் போகிறார்'' என்று வந்தது. அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான். ஏன்? அவன் தேவனைப் பின்பற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் எலியாவை தவறாகப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் எலியாவிற்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் செயல்களைத் தானே தவறாகப் புரிந்து கொண்டனர். 79எப்படி ஒரு மனிதனால் தன்னுடைய சொந்த தேசத்திற்கு விரோதமாக எழும்ப முடியும்? தன்னுடைய சொந்த தேசத்தை தூஷித்தான், திருத்தினான், தேவனுடைய சாபங்களை அதன் மீது வைத்தான், அவன் வாழ்ந்து கொண்டிருந்த அதே தேசம், அதே மக்கள். தன்னுடைய சொந்த இனம், தன்னுடைய சொந்த நிறம், தன்னுடைய சொந்த கோட்பாடு, தன்னுடைய சொந்த மக்கள், ஆனாலும் இன்னுமாக தேவனுடைய நியாயத் தீர்ப்புகளை முன்னுரைத்து அவர்கள் மீது பஞ்சத்தை வருவித்தான். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான், ஏனெனில் அது எலியா அல்ல, அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டது எலியாவுக்குள் இருந்த தேவனையே. எலியா தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, அது எலியாவை வழி நடத்திக் கொண்டிருந்த தேவன், ஆகவே பரிசுத்த தேவனையே அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர், அவரால் பாவத்தை சகிக்க முடியாது. அது உங்கள் சகோதரன், சகோதரி அல்லது தாயின் மீது இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது யாராயிருந்தாலும் சரி, தேவனுடைய பார்வையில் அது பாவமே, அதற்காக நியாயத் தீர்ப்பானது அவர்கள் மீது வரும். தவறாகப் புரிந்து கொள்ளுதல். 80இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அந்த சிலையை தாழ விழுந்து பணிந்து கொண்டிருக்கையில் தானியேல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான், அவனும் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவும் தாழ விழுந்துதொழுது கொள்ள மறுத்தனர். நல்லது அவர்களோ, “அவனுக்கு என்ன ஆயிற்று?'' என்றனர். முழுதேசமும், இந்த பைத்தியக்காரனுக்கு என்ன ஆயிற்று? பார், மற்ற எல்லா எபிரெயரும் நம்முடைய தேவனை அங்கிகரித்துவிட்டனர், அவர்கள் அதை அங்கிகரித்துவிட்டனர், நாம் எக்காளங்களை ஊதுகையில் எக்காளங்களின் சத்தம், சுரமண் டலங்கள் வாசிக்கப்படுகையில், நாதஸ்சுரம் சத்தம் கேட்கையில் அவர்கள் தாழ விழுகின்றனர். அவர்கள் எல்லாரும் தாழ விழுகின்றனர், ஆனால் இந்த மூளைக்கோளாறு பிடித்தவனுக்கு என்ன ஆயிற்று? அவனுக்கு என்ன ஆயிற்று, ”அவன் அவ்வாறு செய்யமாட்டானா?'' என்றனர். ஏனெனில் அவன் தேவனோடு தொடர்பு கொண்டிருந்தான். அதுதான் காரணம். அவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது பைத்தியம் பிடித்தவன், என எண்ணப்பட்டான். ''ஆம் அவர்கள் பைத்தியம் பிடித்தக் கூட்டம் ஆவர்“ ஆனால் அவர்களோ ஆவியானவருடைய வழி நடத்துதலை மட்டும் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் தவறாக எண்ணப்பட்டனர். 81பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளும், எப்படி அவர்கள் எழும்பி தங்கள் தேசத்திற்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், எப்படி அவர்கள் மக்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், எப்படி அவர்கள் காரியத்திற்கெதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், அவர்கள் மீது சாபங்களை போட்டு, அதைப் போன்ற காரியங்களைச் செய்தனர். அவர்கள் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏன்? அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாக இருந்தனர், அவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்து கொண்டிருந்தனர் , அவர்கள் தேவனுடைய சேவையை செய்து கொண்டிருந்தனர், ஆகவே தான் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். தேவனைப் பின்பற்றுகிற எந்த ஒருவரும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவர். நம்முடைய கர்த்தராகிய இயேசு, அவருடைய பிறப்பிலிருந்து, அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அந்த சாஸ்திரிகள், அவர்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற ஒரு ராஜாவை காண ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை அவர்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தானியேலின் தீர்க்கதரிசனங்களின் படி, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த ராஜா ஒரு இரட்சகராயிருப்பாரென்றும், இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இரண்டு வருடங்களாக, இந்தியாவிலிருந்து புறப்பட்டு, டைக்ரீஸ் நதியைக் கடந்து, பாலைவனங்களைக் கடந்து, மலைகளின் வழியாக வந்து, எல்லா இடத்தையும் கடந்து ஒரு நாள் மாலையில் சூரியன் மறைகின்ற நேரத்தில் எருசலேம் பட்டினத்திற்குள் வந்து 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் எங்கே?'' என்று கூக்குரலிட்டனர். 82அதை குறித்து யாருமே அறியாதிருந்தனர். யூதருக்கு ராஜா பிறந்ததை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த ஜனங்கள் அதைக் குறித்து அறிந்திருந்தனர்; ஆனால் அவர் பிறந்திருந்த அதே பட்டினத்தில், அவர் பிறந்திருந்த அதே இடத்தில், அவர் எந்த மக்களுக்காகப் பிறந்தாரோ அந்த மக்கள் மத்தியில், அவர்கள் அதைக் குறித்து அறியாமல் இருந்தனர். அவர்கள் சாஸ்திரிகளை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர்கள், ''யூதருக்கு ராஜா என்னும் ஒரு காரியம் என்பது கிடையாது. எங்களுக்கு இங்கே ஏரோது ராஜா இருக்கிறார்'' என்றார்கள். அவர் பிறக்கையில், அவருடைய பிறப்பில் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். மரியாள் யோசேப்பை மணப்பதற்கு முன்பாகவே ஒரு தாயாக இருக்க வேண்டியவளாக இருந்தாள். தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல். அது பரிசுத்த விவாகத்திற்குப் புறம்பாக பிறந்த ஒன்று என்று எண்ணினர், அவளுக்குள் அந்த பிள்ளை ஆவியினால் உண்டானது என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அது தேவனுடைய செயலாயிருந்தது. ஆனால் மக்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். இன்னுமாக அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர், தேவனுடைய செயலானது எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. 83ஆவிக்குரிய விசுவாசமிருக்கின்ற மக்களால் மாத்திரமே, ஆவியானவரை விசுவாசிக்கின்ற மக்கள். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, சாஸ்திரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். ஏரோதும் அதைத் தவறாகப் புரிந்து கொண்டான். ''நல்லது, குழந்தை எங்கே இருக்கிறது என்று எனக்கு சொல்லுங்கள், நானும் கூட சென்று அவரைப் பணிந்து கொள்வேன்'' என்று ஏரோது கூறினான். அவன் ஒரு மாய்மாலக்காரனாயிருந்தான், அவன் பொய் சொன்னான். அவன் பயந்தது... பரலோகத்தின் ராஜாவாகிய மேசியா வரப்போகிறார் என்கின்ற வேத வசனங்களை அவன் அறியாதிருந்தான். அது பூமிக்குரிய ராஜா என்று ஏரோது நினைத்தான், ஆகவே அவரை ஒழித்து விட வேண்டுமென்று எண்ணி அவரைக் கொன்று போட எண்ணினான். பூமிக்குரிய ராஜா அல்ல, இந்த பூமி அவருடைய ராஜ்யம் அல்ல என்று அவர் கூறினார், “இது என் ராஜ்யமாக இருந்ததானால் என் பிரஜைகள் எனக்காக போராடியிருப்பார்களே, ஆனால் என்னுடையது உன்னதத்திற்குரியது''. ஏரோதோ அதை தவறாகப் புரிந்து கொண்டு, அது ஒரு பூமிக்குரிய ராஜா என்று நினைத்தான். 84அந்த விதமாகத் தான் இன்றைக்கும் கூறுகிறார்கள், “நீ ஒரு கிறிஸ்தவனானால், நீ எந்த சபையைச் சேர்ந்தவன். எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்?'' ''எதுவுமில்லை!'' அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பாருங்கள், அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஸ்தாபனம் என்பது “கிறிஸ்தவன்'' என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை திருப்பி போட்டாலும் அதே விதமாகத்தான் உள்ளது. ஆனால் அது மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இப்பொழுது ஏரோது அதை தவறாகப் புரிந்து கொண்டான் என்று நாம் கண்டு கொண்டோம், அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிக்கொதேமு இயேசுவிடம் இரவில் வந்த போது, அந்த புதிய பிறப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவர் அவனை கடிந்து கொண்டு பேசினார். நான் அவனை கடிந்து கொண்டு பேசுவதில்லை. அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான், ஒரு காரியத்தை கண்டு கொள்ள அவன் விரும்பினான். நாள் முழுவதுமாக அவன் வேலையில் மும்முரமாக இருந்தான், ஒருக்கால் தன்னுடைய ஆசாரியனுடைய அலுவலகத்தில் அல்லது வேறெதோ ஒன்றில், இருந்திருப்பான், ஆதலால் அவன் அங்கு வந்தான், என்னவாயிருந்தாலும் அநேக மக்கள் செய்வதைக் காட்டிலும் அவன் செய்தது மிகவும் மேம்பட்டதாக இருந்தது. பகலோ அல்லது இரவோ இவர்கள் வரவேமாட்டார்கள். அவனோ முடிவில் வந்தான்; அவனை நீங்கள் குற்றப்படுத்துவதற்கு முன், நீங்கள் அதை செய்தீர்களா? முடிவாக அவன் இயேசுவிடம் வந்தான், நாம் அங்கே செல்லாதிருக்கும் பட்சத்தில் அவனை நாம் குற்றப்படுத்த வேண்டாம். மேலும் நீங்கள் அங்கே சென்றடைவீர்களென்றால், அப்பொழுது நீங்கள் அவனை கடிந்து கொண்டு பேசமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். இல்லை, அவன் - அவன் இரவு வேளையில் அங்கு சென்றான். ஒருக்கால் அவன் நாளெல்லாம் அலுவலில் மும்முரமாக இருந்திருக்கலாம், அதனாலே தான் அவன் இரவிலே வந்தான். எப்படியாயினும் அவன் வந்தான். ஒருக்கால் இயேசு வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலும் மற்ற காரியங்களிலும் மிகவும் மும்முரமாக இருந்திருப்பார். அவரை தனிப்பட்ட போட்டிக்காக பிடிக்க முடிந்த ஒரே நேரம் இரவு தான். ஆனால் அவன் இறுதியாக அங்கே அடைந்தான். ஆகவே அவரை தனிப்பட்ட பேட்டிக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அவன் அங்கேயே இருந்தான். அப்பொழுது இயேசு... அவன் - அவன், “ரபீ, நீர் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமாட்டான்'', என்று கூறினான். இயேசு, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான், ராஜ்யத்தை காணக் கூடமாட்டான்” என்று கூறினார். மேலும் இஸ்ரவேலிலே இருந்த அந்த மகத்தான ரபீ, போதகன், “என்ன, நானா, ஒரு வயதான மனிதனான நான் என் தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்து மறுபடியும் பிறக்க முடியுமா?'' என்று கூறினான். பாருங்கள் இயேசு எதைக் குறித்துப் பேசினாரோ அதை அவன் தவறாகப் புரிந்து கொண்டான், அவன் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. ஏனெனில் இயேசு ஆவிக்குரிய பிறப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார், அவனோ அதை ஒரு இயற்கைப் பிறப்பிற்கு ஒப்பிட முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவரை அவன் தவறாகப் புரிந்து கொண்டான். அவர் கூறினதை அவன் புரிந்து கொள்ளவில்லை. அவன்... மக்கள் செய்யும் விதமாகவே அவனும் செய்தான். நிக்கொதேமுவைப் போல் நம்மில் அநேகர் தேவனுடைய காரியங்களை தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் நாம் அதை எடுத்து ஒரு இயற்கைக் காரியத்திற்கு பொருத்திவிடுகிறோம். 85உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர், “ஓ, தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதைப் போன்ற ஒன்று உள்ளதென்று எனக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறுகிறார். ஒரு சமயம் ஒரு மருத்துவர் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பேசியதை நான் கேட்டேன்... அவளுக்கு தெரியவில்ல... அவள் உடம்பில் இருந்த ஒரு சதை வளர்ச்சிக்கு என்ன ஆயிற்று என்று அறிய அவர் விரும்பினார். அவள், சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபித்தார். கர்த்தர் என்னை சுகமாக்கினார்'' என்று கூறினாள். அவரோ, ''நான் அதை நம்புவதில்லை'' என்றார். அவர், என்னால் - என்னால் அதைப் போன்ற ஒன்றை என்னால் விசுவாசிக்கவே முடியாது. யார் அதை எடுத்துப் போட்டது என்று என்னிடம் கூறு'' என்றார். ''தழும்பு இருக்கிறதா என்று பாருங்கள்“ என்றாள். ''அதன் மீது என்ன தடவியிருக்கிறாய்?'' என்று கேட்டார். அவள், “எதுவும் இல்லை, ஒன்றுமே தடவவில்லை, கூட்டத்தில் அவர் என்னை அழைத்ததை மாத்திரமே செய்தார், அந்த சதைவளர்ச்சி மறைந்துவிட்டது'' என்றாள். நான் சரியாக அடுத்த அறையில் அமர்ந்திருந்தேன், அது சரியே, நான் அடுத்த அறையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அங்கே இருந்தது அவளுக்குத் தெரியாது. நான் அங்கே இருந்தது அவருக்கும் தெரியாதிருந்தது, ஏனெனில் அவருக்கு என்னைத் தெரியவே தெரியாது. ஆகவே நான் அங்கே அமர்ந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் கூறினார். மருத்துவரின் அலுவலகத்துக்கு ஒருவரை அழைத்துச் சென்றேன். அது முற்றிலும் சரியே. அவர் என்ன கூறினார் என்பதை என்னால் கேட்க முடிந்தது, அவர் அதை விசுவாசிப்பதில்லை என்பதை நான் கண்டு கொண்ட உடனே நான் நோயாளியை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். ஆகவே அவர், ''அதைக் குறித்த ஒரு வார்த்தையைக் கூட நான் விசுவாசிப்பதில்லை, அதைப் போன்ற ஒன்றை செய்யக் கூடிய எதையுமே நான் இதுவரை கண்டதேயில்லை. அதை நான் விசுவாசிப்பதே இல்லை'' என்றார். மேலும் ''நான் அதை விசுவாசிக்கும் முன்னர் அதை நான் காணவேண்டும்“ என்று கூறினார். “நல்லது, என்னுடைய சதை வளர்ச்சியைக் குறித்து என்ன?'' என்று அவள் கேட்டாள். அவர், ''அதை நான் விசுவாசிக்கும் முன்னர் அது மறைவதை நான் காண வேண்டும்'' என்றார். 86பார்ப்பது என்பது விசுவாசித்தல் அல்ல. “விசுவாசமானது நீ காணாத காரியங்களின் உறுதியாயிருக்கிறது''. பாருங்கள், முதலில் நீ அதை விசுவாசிக்கிறாய், பிறகு அது சம்பவிக்கிறது. ஆகவே அந்த அந்த மனிதன் ஒரு விசுவாசி அல்ல, ஆதலால் அது அவருக்கு எல்லாமே ஒரு விளங்காத மர்மமாக இருந்தது. அவர் எதைக் குறித்து பேசுகிறார் என்பதை அவர் அறியாதிருந்தார் ஏனெனில் அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அது அவருக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. மக்கள் இன்றைக்கு, “ஓ, அந்த தெய்வீக சுகமளித்தலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அந்த பரிசுத்த ஆவியை நான் விசுவாசிப்பதில்லை. அந்நிய பாஷையில் பேசுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதைப் போன்று சத்தமிடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதைப் போன்ற காரியங்களை நான் விசுவாசிப்பதே கிடையாது. அதில் எனக்கு விசுவாசமே கிடையாது'' என்று கூறுகின்றனர். ஏன்? அது அவர்களுக்கு புரியாத மர்மமாக உள்ளது! நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாத்திரமே செய்கிறீர்கள். அது தேவன், இங்கே அது வேதாகமத்தில் இருக்கின்றது. செயல்முறைக்கு கொண்டு வரும் என்று வேதாகமம் உரைத்த அதே காரியங்களை இங்கே அது பிறப்பிக்கிறதென்றால், அப்படியானால் அது தேவனாகத்தான் இருக்க வேண்டும். நீ அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய், அவ்வளவுதான். தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். 87அவருடைய சீஷர்கள் கூட அவருடைய அற்புதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த இரவில் அவர் படகிற்குள்ளிருந்தபோது, “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்கும் கீழ்ப்படிகிறதே'' என்று அவன் கூறினான். அவர் தேவன் என்றும் அவர் மனிதன் அல்ல என்றும் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அது தான் இன்றைக்கு மக்களிடம் இருக்கின்ற ஒரு காரியமாயிருக்கிறது, அவர்கள் அவரை ஒரு நற்பொருள் கொண்டுவரும் சின்னம் பொருந்திய ஒரு சிறு பையனாக அல்லது மரத்தாலான ஒரு மட்டையை கையில் ஏந்தியவராக செய்ய விரும்பினர். கூடாரத்தை சுற்றி இருக்கின்ற ஒரு சிறு ஆளாக அவரை காண முயன்றனர். அவர் கூடாரத்தை சுற்றி வருகின்ற ஒரு சிறு ஆள் அல்ல, அவர் யேகோவா, தேவன். அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக அவர் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தனர். அவர் அவர்களில் ஒருவராக இல்லை, அவர் அவர்கள் மத்தியில் தேவனாக இருந்தார்! அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் அதிகமானவராக இருந்தார். நான் அடிக்கடி கூறுவது போல், அவர் பசியாயிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அவர் ஒரு உலர்ந்த ரொட்டியை, இரண்டு ரொட்டிகள் மற்றும் சில மீன் துண்டுகளைக் கொண்டு ஐயாயிரம் பேர்களை போஷித்த போது தேவனாயிருந்தார். படகின் பின்புறத்தில் அவர் சோர்ந்திருந்த போது ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் அவர் காற்றையும் அலைகளையும் அமைதியாக்கி அவருக்கு கீழ்ப்படியச் செய்த போது அவர் தேவனாயிருந்தார், “இந்த மனிதன் எப்படிப்பட்டவரோ?'' அவர் மனித பாங்குடையவர் அல்ல, அவர் மனிதனில் வெளிப்பட்ட தேவனாக இருந்தார். அவர்கள் அவரை தவறாக புரிந்து கொண்டனர். அவர் ஒரு மனிதனாக, மரியாளின் மகனாக, ஒரு தச்சன் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவரோ மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக இருந்தார். ஆமென். 88ரோம் போர்ச் சேவகர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, அவருடைய கண்களைச் சுற்றிலும் துணியைக் கட்டி, அவருடைய தலையின் உச்சியில் அடித்து, “இப்பொழுது, நீ ஒரு தீர்க்கதரிசியானால், நீ ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் எல்லாரும் கூறுகின்றனர், உன் உச்சந்தலையில் யார் அடித்ததென்று சொல்லு பார்க்கலாம்'' என்று கூறினார், அவர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர். ''நான் செய்ய வேண்டும் என்று பிதா எனக்கு காண்பிப்பதை மாத்திரமே நான் செய்கிறேன். பிதா எனக்கு காண்பிக்கிறதை நான் செய்கிறேன், நான் செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுவதை நான் செய்கிறேன்'' என்று இயேசு கூறினதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டனர் 89அவர்கள் அவருடைய ஊழியத்தை தவறாக புரிந்து கொண்டனர். யூதர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் அவர்களுடைய நண்பராகவும் இரட்சகராகவும் வந்தார், ஆனால் அவர்களோ அவரை தீமையான ஒன்றிற்கு சமமாக கூறிட முனைந்தனர். அவருடைய ஊழியத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர், ''தென் தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள்'' என்று கூறினார். அவர் சாலொமோனிலும் பெரியவர் என்பதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் ஒரு மனிதன் மாத்திரமே என்று அவர்கள் எண்ணினர். அவர் பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாகக் பிறந்த ஒருவர் என்றும், இந்த விதமான கெட்ட ஆசைகளைக் கொண்டிருந்த ஒரு கீழ்த்தரமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் என்றும், ஒரு தகாத உறவினால் பிறந்த குழந்தை என்றும் அவர்களில் அநேகர் எண்ணங் கொண்டிருந்தனர். அந்த கேள்வியை நாம் வைத்திருந்தோம், அவர்களாலே... அவர்கள், “நீ பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாய்ப் பிறந்த ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும், உன் மீது பிசாசைக் கொண்டவனாக இருக்கிறாய். என்ன, நீ எங்களுக்கு போதிக்க போகின்றாயா? நாங்கள் ரபீக்கள்!'' என்று கூறினர். அவர், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்'' என்று கூறினார். பாருங்கள், அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். 90ஒரு சமயம் ரோம் போர்ச் சேவகர் அவர் பேசுவதை கேட்டு திரும்பிவந்து, ''அந்த மனுஷன் பேசுகிறது போல் ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை. ஒரு மனுஷன் இந்த விதமாக பேசி நாங்கள் கேட்டதேயில்லை'' என்று கூறினார்கள். அது ஒரு மனிதன் பேசுவது அல்ல, அது தேவனே! ஆம், ஐயா. மனிதன் இந்த விதமாக பேச முடியாது. ஒரு மனிதன் வேத வசனங்களை சொல்லி பேசுகிறான், இயேசு அந்த வேத வசனங்களை ஜீவிக்கும் படிக்குச் செய்கிறார். ஒரு மனிதன் இந்த விதமாக ஜீவிக்க முடியாது: “வேதாகமம் இங்கே இதைக் கூறுகிறது, இதோ அது!'' ஒரு மனிதனால் , ''வேதாகமம் அதைக் கூறுகிறது'' என்று மாத்திரமே கூறமுடியும், அதைத் தான் அவனாலே செய்ய முடியும். ஆனால் இயேசுவால், ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசமாயிருக்கிறார். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'' என்று கூற முடிந்தது. வேறு யாராலும் இந்த விதமாகக் கூற முடியாதிருந்தது! ஆமென். அல்லேலூயா அது சரி. ”என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'' யாராலுமே அதைக் கூற முடியாதிருந்தது! “அந்த சேவகர் அந்த மனுஷன் பேசுகிறது போல் ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை'' என்று கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் ஒரு பிரசங்கியைப் போல அல்லது ஒரு வேத பாரகனைப் போல பேசவில்லை, அவர் அதிகாரத்துடன் பேசுகிறார் பிசாசுகள் கூட அவருக்கு கீழ்ப்படிகின்றன, காற்றும் அலைகளும் அவருக்கு கீழ்ப்படிந்தன. அவர் ஒரு மனிதன் என்று அவர்கள் எண்ணியிருந்தனர், ஆனால் அவர் தேவனாயிருந்தார். பாருங்கள், அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். 91''என்ன, நீ - நீ தவறான உறவினால் பிறந்த ஒருவனாயிற்றே. நீ பரிசுத்த விவாகத்திற்கு புறம்பாக பிறந்த ஒருவனாயிற்றே. நீயா எங்களுக்கு போதிக்கப் போகிறாய்? என்ன, நீ பைத்தியம் பிடித்தவனென்றும், பிசாசைக் கொண்டிருக்கிறவனென்றும் எங்களுக்குத் தெரியும். நீ ஒரு சமாரியன், நீ அங்கே சென்று அந்த பிசாசுகளை உன் மீது ஏற்றிக் கொண்டு வந்துவிட்டாய். பரிசுத்த ரபீகளாகிய எங்களுக்கு நீ போதிக்க முற்படுகிறாயா?'' என்றனர். அவர், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்'' என்று கூறினார். ஆம், அவர்கள் அவரை தவறாகப்புரிந்து கொண்டனர், அவர் யார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அதே போன்று இன்றும் நடந்து கொண்டிருக்கிறது, அவர் இல்லாதிருக்கிற ஒன்றாக மக்கள் அவரை சித்தரிக்க முயல்கின்றனர். அவர் மனிதன் மாத்திரம் அல்ல, அவர் மனிதனுக்குள் இருக்கும் தேவன் ஆவார் மூன்றாம் நபரல்ல, அவர் தான் அந்த ஒரே நபர். ஆம், ஐயா. நல்லது, நிச்சயமாக, அவர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். 92அப்பொழுது அந்த சமயத்தில் ஒரு இரவு விருந்திற்கு, ஒரு பெரிய விருந்திற்கு அவரை அழைத்த அந்த பரிசேயன், அந்த பரிசேயன் கூட அவரை தவறாகப் புரிந்து கொண்டான். அவர் அங்கு இருந்தால் மட்டும் போதும் என்று அவன் நினைத்தான். சமீபத்தில், சிக்காக்கோவில், அந்த காலை உணவு கூட்டத்தில் அந்த செய்தியைக் குறித்து பேசினேன் என்று நான் நம்புகிறேன். அந்த பரிசேயன், இப்பொழுது, அங்கே பின்புறத்தில் உட்கார்ந்திருக்கும் அவரைப் பார், கழுவப்படாத கால், மற்ற எல்லாம். அந்த சிறு பெண் உள்ளே வந்து அவரை அவளுடைய கண்ணீரால் கழுவினாள், தன்னுடைய தலை மயிரால் துடைக்கின்றாள், இவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், தன்னுடைய கால்களை கழுவிக் கொண்டிருக்கின்ற இந்த ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார். ஆகவே இவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்பதை இது காண்பிக்கிறது!'' என்று கூறினான். இயேசு எழுந்து நின்று, ''சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும்!'' என்றார். ஆமென், அவன் தவறாகப் புரிந்துக் கொண்டான், அவ்வளவுதான். அவர், ''நான்... நான் வரும்படிக்கு நீ எனக்கு அழைப்பு கொடுத்தாய், நானும் உன்னுடைய அழைப்பை ஏற்று, தொடர்ச்சியாக இருக்கின்ற என்னுடைய நிகழ்ச்சி அட்டவணையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். கதவண்டையில் நீ வந்து என்னை சந்திக்கவில்லை. என் தலைக்கு எண்ணெய் பூசவில்லை. என்னுடைய பாதங்களை நீ கழுவவில்லை. நீ என்னை முத்தஞ் செய்து வரவேற்கவில்லை. அழுக்காக, வியர்வையால் முழுவதுமாக நனைந்தவனாக நான் உள்ளே வரும்படி விட்டுவிட்டு, என்னை பரியாசம் செய்யும் படிக்கு அங்கே அந்த மூலையில் உட்கார வைத்தாய். ஆனால் இந்த ஸ்திரீ, இந்த ஸ்திரீயோ, என் பாதங்களை ஓயாமல் முத்தஞ் செய்தாள். அவைகளை மனந்திரும்புதலின் கண்ணீரினால் அவள் கழுவினாள்'' (என்ன அழகான தண்ணீர்) “தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள். சீமோனே, உனக்கு எதிரான காரியத்தை நான் கூறப் போகிறேன். மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது'' என்று கூறினார். சீமோன் தவறாகப் புரிந்து கொண்டான்; அவளோ சரியாக புரிந்து கொண்டாள். சீமோன், ''அவர் ஒரு மனிதன் மாத்திரமே'' என்றான்; அவளோ, ”அவர் தேவன், என் இரட்சகர்'' என்றாள். அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அவர் இன்னுமாக தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார். 93அந்த சீஷர்கள் கல்வாரியில், அவர்களெல்லாரும் அவரை மறுதலித்து சென்றபோது, அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருந்தனர். அற்புதங்களைச் செய்து மரித்தோரை எழுப்பின் ஒரு மனிதனாக அவர்கள் அறிந்திருந்த இவர் தம்மையே மரணத்திற்கு அற்பணித்து, அதினூடாக நடந்து சென்று, அடிக்கப்பட்டு, அழுது கொண்டு, முகம் முழுவதுமாக எச்சில் வடிந்து கொண்டு, அவர்கள் அவருடைய முகத்திலிருந்த தாடியை கை நிறைய பிடுங்கி எடுத்த போது வந்த இரத்தம் எச்சிலோடு கலந்தது; அவருடைய முதுகை எலும்புகள் வெளியில் தெரிந்து பளபளக்கும் வரை சாட்டையால் அடித்தனர், எதற்கும் கவலை கொள்ளாத, குடி போதையில் இருந்த போர் சேகர்கள், அவரை தெருவில் அடித்துக் கொண்டிருந்தனர். ''எப்படி இவர் அவர்கள் இவ்விதமாக செய்யவிட்டுவிட்டாரே?'' என்று நினைத்து அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு தூரத்திலேயே நின்றுவிட்டனர். அது சரி. பிசாசும் அவரை தவறாக புரிந்து கொண்டான். பிசாசும், ''அங்கே மிக மோசமாக நடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்ற அவர் நிச்சயமாக தேவனுடைய குமாரனாக இருக்க முடியாது, ஏனெனில் என் சீடர்கள் அவரை சபித்துக் கொண்டு எல்லா விதத்திலேயும் மோசமாக நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரும் அதை ஏற்றுக் கொண்டு அப்படியே இருக்கின்றாரே. அவர் தேவனுடைய குமாரன் அல்ல'' என்று கூறினான். 94பரிசேயரும், ஆசாரியர்களும் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு, ''நீ தேவனுடைய குமாரனானால், அங்கிருந்து கீழே இறங்கி வா“ என்றனர். அவருக்கு இடது பக்கத்திலிருந்த கள்ளன் அவரை தவறாகப் புரிந்து கொண்டு, ''நீர் தேவனுடைய குமாரனானால், நம்மெல்லாரையும் சிலுவையிலிருந்து எடுத்துப் போட்டு உன்னை இரட்சித்துக் கொண்டு எங்களையும் கூட இரட்சியும்'' என்று கூறினான். ஆனால் வலது பக்கத்திலிருந்த கள்ளன் அவரைப் புரிந்து கொண்டு, “நாம் தீமை செய்தோம், நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம், ஆனால் இந்த மனிதனோ ஒன்றுமே செய்ய வில்லையே'' என்றான். ''ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்றான். “நிச்சயமாக நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்'' திரும்பி வந்த அந்த சத்தத்தை கவனியுங்கள், நம்முடைய பாவங்களுக்காக மரித்துக் கொண்டிருக்கிற தேவன் அவர் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர் மரிக்கக் கூடிய ஒரே வழி, மாம்சத்திலே மரணத்தில் ஆழ்த்தப்படுவதே. ஆவியிலே அவரை மரிக்கச் செய்ய முடியாது, ஏனெனில் அவர் தான் அந்த நித்திய ஆவி. ஆகவே அவர் மரிக்கும்படியாகச் செய்யப்படத் தக்கதாக அவர் மாம்சத்தில் இருந்தாக வேண்டும், ஆகவே அவரை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவனோ அதைப் புரிந்து கொண்டான். 95ஒரு நாளிலே, அதற்கு பிறகு பத்து நாட்கள் கழித்து, அல்லது அதற்கு பிறகு சுமார் நாற்பது நாட்கள், ஐம்பது நாட்கள் கழித்து, சீஷர்கள் ஒரு மேலறைக்குள்ளே ஏறி அங்கே பத்து இரவுகளும் பகலும், ஐம்பதாவது நாள் வரையிலும் தங்கினார்கள். அப்பொழுது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது, ஏனெனில் இயேசு, “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்'' என்று கூறியிருந்தார். அது வரப் போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது சம்பவித்தாக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ''நான் அதை அனுப்பும் வரை நீங்கள் அங்கே சென்று காத்திருங்கள்''. அவர்கள் அங்கே மேலே காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அறிக்கை செய்தனர், தங்கள் மனங்களிலும் இருதயங்களிலும் இருந்த எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் எல்லாரும் ஒரே மனதுடன், ஒரே இடத்தில், வாக்குத்தத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்: முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தனர், ஆண்களும் பெண்களுமாக அங்கே இந்த மேலறையில் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர், யூதர்கள் உள்ளே நுழைந்து அவர்களுக்கு காயம் உண்டாக்காதபடிக்கு எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. 96அங்கே மேலே அவர்கள் நடந்து கொண்டிருக்கையில், பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது, அங்கே சுற்றி சுற்றி பலத்த காற்று அடித்தது, அப்பொழுது அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மீது அமரத்துவங்கினது. கதவுகள் திறந்து கொண்டது. ஜன்னல்கள் திறந்து கொண்டது, அவர்கள் வெளியே தெருக்களில் சென்றனர். அப்பொழுது அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் அல்லவா? இந்த ஜனங்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் ஏதோ ஒன்றை உளரிக் கொண்டிருக்கிறார்கள், “அவர்கள் எதைக் குறித்து பேசுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லையே” என்று அவர்கள் கூறினர். உடனே அவர்கள், ''எப்படி நாம் ஒவ்வொருவரும் அவர்கள் நம் சொந்த மொழிகளில் பேசக் கேட்கிறோம், அவர்கள் எல்லாரும், கலிலேயரல்லவா?'' என்று கூறினர். இது பிதாவினுடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது என்பதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அங்கே எழுந்து நின்று பேசத்தக்கதாக தேவன் அங்கே ஒரு தீர்க்கதரிசியை வைத்திருந்தார், பேதுரு “எருசலேம் மனிதரே, யூதேயாவில் வாசம் பண்ணுகிற ஜனங்களாகிய நீங்கள், இதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும், என் ஆவியை ஊற்றுவேன். என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக் காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்,'' என்று கூறினான். அது தேவனுடைய செயலாக இருந்தது. அது பரிசுத்த ஆவியாக இருந்தது, ஆனால் அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். 97அவர் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். இஸ்ரவேல் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டது. நோவாவின் காலத்தில் இருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். தானியேலின் காலத்தில் இருந்தவர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். யோவானின் காலத்திலிருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். தீர்க்கதரிசியின் காலத்திலிருந்த ஜனங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டனர். பெந்தெகோஸ்தே காலத்திலிருந்த ஜனங்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர். இந்தக் காலத்திலிருக்கிற மக்களும் அவரைத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர், அது இன்னும் அதே விதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைக் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். இயற்கையை ஆவிக்குரியதோடு ஒப்பிட வேண்டிய காலம் இதுதான். மக்கள்... பெந்தெகொஸ்தே நாளிற்கு பிறகு, அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பிறகு, இந்த மகத்தான பெரிய கூட்டத்தை அங்கே நடத்தினர், தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த அங்கே இருந்த அந்த மனுஷனை அவர்கள் அழைத்தனர். அவர்களில் இருவர் அங்கே தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது இந்த பிச்சைக்காரன் குவளையை குலுக்கி காசு கேட்டான். அதற்கு அவன், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட!'', என்று கூறினான். அவன் தன்னுடைய கையினால் அவனைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் நடக்கத் துவங்கினான், குதித்தான், ஓடினான், எகிறி பாய்ந்தான், தேவனைத் துதித்தான், தேவாலயத்திற்குள் சென்றான். எல்லா மக்களும் ஒன்று கூடத்துவங்கினர், கூச்சலிட்டனர், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். என்ன, அது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. 98ஆகவே அவர்கள் அவர்களை சிறையில் அடைத்து ''இயேசுவின் நாமத்தில் இனிமேல் பிரசங்கிக்கவே கூடாது'' என்று அவர்களை மிரட்டி பயமுறுத்தினர். அப்பொழுது பேதுரு ''யாருக்கு நாங்கள் செவிகொடுக்க வேண்டும், தேவனுக்கா அல்லது மனுஷனுக்கா?'' என்றான். அப்பொழுது அவர்கள் இவர்களை சற்று அடித்துவிட்டோம், சற்று பயமுறுத்திவிட்டோம் (அடுத்த முறை தூக்கில் போடப்படுவீர்கள், அல்லது எரித்து போடப்படுவீர்கள், அல்லது சிலுவையில் போடப்படுவீர்கள் என்பதை போன்று) அவர்கள் நிறுத்திவிடுவர் என்று நினைத்துக் கொண்டு விடுவித்தனர். ஆனால் அடுத்த காரியமாக எதைப் பார்த்தார்கள் என்றால், மறுபடியுமாக இவர்கள் அங்கே தெருவில் அதே விதமாகச் செய்தனர். ஏன்? அவர்கள் அவர்களைத் தவறாக புரிந்து கொண்டனர். அது ஜனங்கள் செய்வது அல்ல; அது தேவன் அந்த ஜனங்களுக்குள்ளாக இருந்து அந்த காரியங்களைச் செய்தல். 99அந்த காலையில் அந்த சிறு ஸ்தேவானை சனகரீம் சங்கத்தில் அவர்கள் பிடித்த போது, “நாம் இவனை அந்த சங்கத்திற்கு முன்பாக கொண்டு செல்வோம். இந்த ரபீக்களும், யூதர்களும், பிரதான ஆசாரியர்களும், பரிசுத்த பிதாக்களும், மற்றும் எல்லாரும் அங்கே கூடியிருக்கையில், தெய்வீகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர்களைக் காணும் போது இவன் மிகவுமாக பயந்து போய்விடுவான்'' என்று கூறினர். ஆகவே அவர்கள் இவனை சங்கிலிகளால் கட்டி, அவனை அங்கே, பட்சிக்கின்ற ஓநாய்கள் கூட்டத்தின் மத்தியில் ஒரு சிறு ஆட்டுக் குட்டியைப் போல நிறுத்தினார்கள். அவர்கள், ”இப்பொழுது இவனை கவனியுங்கள், சகோதரனே, அதை எல்லாம் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், என்னை தொல்லைப்படுத்தாதீர்கள் என்று கூறுவான் பாருங்கள்'' என்றார்கள். அவனோ, “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே. உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் ஏன் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்!'' என்று கூறினான். ஆமென்! அது அவனல்ல என்பதை அவர்கள் கண்டு கொண்டனர் அவர்கள் மண்கட்டிகளை எடுத்துக் கொண்டனர், தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டு, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்து, மண்கட்டிகளை அவன் மீது வீசி அவனைக் கொன்று போட்டார்கள். அவன் தன் தலையை வானத்துக்கு நேராக உயர்த்தி, கற்கள் அவனை ஒரு புறத்திலிருந்து மறுபுறம் மாறி மாறி அடித்தது, அவன், ''அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும் இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன், என்று கூறினான். ஆமென்! அவன் கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் நித்திரையடைந்தான். அவன் மரித்த போது, ''பிதாவே இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்'' என்று கூறினான். பாருங்கள், அவன் செய்ததை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். பவுல் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தான், பின்னர் அது அவனுடைய மனதை பாதித்தது, அவன், ''அவர்களெல்லாரிலும் நான் சிறியவன், ஏனெனில் உம்முடைய பரிசுத்தவானாகிய ஸ்தேவானுடைய மரணத்திற்கு நானும் அருகே நின்று பார்வையாளனாக இருந்தேன்'', என்றான். அவ்வளவுதான். 100பாருங்கள், இந்த ஆர்வத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இன்றைக்கு மக்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அதை பரிசுத்த உருளையர்களின் கூட்டம் என்று அவர்கள் அழைக்கின்றனர். மனநிலை சரியில்லாத மக்களின் கூட்டம் அது என்று அவர்கள் அழைக்கின்றனர். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ''உங்களுடைய சரியான மனதை அவர்கள் விமர்சிக்க தங்களுடையதை அவர்கள் இழந்து போகின்றனர், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்குள்ளே உடையவர்களாக இருக்கிறீர்கள். ஒன்று மாம்ச பிரகாரமாகவும் இன்னொன்று ஆவிக்குரிய பிரகாரமாகவும், உலகத்தின் சிந்தையையும் கிறிஸ்துவின் சிந்தையையும் ஒரே சமயத்தில் உங்களாலே கொண்டிருக்க முடியாது. மாம்சத்தின்படி நடக்கிறவன் மாம்சத்துக்குரியவனாக இருக்கிறான், ஆவியின்படி நடக்கிறவன் ஆவிக்குரியவனாக இருக்கிறான்''. ஆமென். அதை கர்த்தாவே உமக்குள்ளாக அதை கண்டெடுக்கத்தக்கதாக என்னையே நான் இழந்து போகச் செய்வேன், ஆம் ஐயா, ஆகவே தேவன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது நீங்கள் அல்ல, அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை அவ்விதமாக செய்யும் படிக்கு செய்கிறார். ஆமென். அவர்கள் உங்களுக்கெதிராக பேசவில்லை, அவருக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள். மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். அங்கே, அவர்களை அவர்கள் விட்டுவிடலாம், ஆனால் அவர்கள் உடனே திரும்பவுமாக தெருவில் வந்து மறுபடியுமாக துவக்குவார்கள். இன்றைக்கும் அதே காரியம் தான். அவர்கள் மக்களை தவறாக புரிந்து கொள்கின்றனர். அது என்னவென்பது அவர்களுக்கு தெரியாது. 101இன்றைக்கு அவர் என்னை மக்களிடத்திற்கு அனுப்பினார் என்னும் என் ஊழியத்தில் என்னை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும், “நாங்கள் விசுவாசிப்பது சகோதரன் பிரன்ஹாம்...'' என்றனர். சில காலத்திற்கு முன்னர் ஒரு பிரசங்கியோடு நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர், ''சகோதரன் பிரன்ஹாம், நீர் சபைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றீர் என்பதை நாங்களெல்லாரும் அறிவோம், ஆனால், கருத்து என்னவென்றால் நீர் எப்படி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறவராக வரலாம்? என்பதே'' என்றார். அவர்கள் வேதாகமத்தை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதற்காகத்தான் அவர் என்னை அனுப்பியுள்ளார், நான் இங்கிருப்பதின் நோக்கம் அதுவே தான். ”நீங்கள் சர்ப்பத்தின் வித்தைக் குறித்தும் மற்றும் அது போன்ற காரியங்களை குறித்தும் நாங்களெல்லாரும் போதிக்கிறதற்கு முரணாக நீங்கள் ஏன் போதிக்கிறீர்கள்?'' நல்லது சகோதரனே, அதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன். அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஆமென். ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையின் படியும் மற்றும் பரிசுத்தஆவியின் அடையாளங்களிலும்... சாட்சி பகருகின்றார். அவர்கள் எவ்வளவாக அதை தவறாகப் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை, தேவன் அந்த வார்த்தையை உறுதிபடுத்துகின்றார்! ஆமென். தேவன் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார். தேவனோடு ஜீவிக்கும் ஒவ்வொருவரும் தேவனுடன் சேர்த்துத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அது தேவன் அவர்களுக்குள் கிரியை செய்தலாகும். ஆமென் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் (நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்தி துதிகளை ஏறெடுங்கள்) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 102தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? ஒரு சிறிய பாடலை நாங்கள் பாடுவது வழக்கம், ''இப்பொழுது நான் குறியிடப்பட்டுள்ளேன், குறியிடப்பட்டுள்ளேன், குறியிடப்பட்டுள்ளேன், தெய்வீக ஆவியினால் குறியிடப்பட்டுள்ளேன்“ என்றவாறு இருக்கும். அது சரி. ஒரு காலத்தில் என்னை நேசித்த மக்கள், இப்பொழுது என்னைப் பார்த்து முதுகைத் திருப்பி சென்றுவிடுகிறார்கள். ஏனென்றால் நான் குறியிடப்பட்டுள்ளேன், ஆவியானவராலே குறியிடப்பட்டுள்ளேன். ஆமென். கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக உலகக் காரியங்களை என் சிந்தை இழந்து போகும்படிக்குச் செய்துவிட்டேன்; ஆதலால் நான் கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டிருப்பேனானால், என் சிந்தையானது மேலே இருக்கின்ற காரியங்களை தான் நாடுகிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்திற்கப்பால் வேறே ஒரு சரியான ஞானஸ்நானம் உள்ளதா என்று யாராவது காண்பிக்கும்படிக்கு விரும்புகிறேன். சர்ப்பம் வித்தை உடையதாக இருக்கவில்லை என்று கூறும் ஒரு வேத வசனத்தை யாராவது காண்பிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். மூன்று தேவர்கள் உண்டென்று கூறும் ஒரு வேத வசனத்தை யாராவது காண்பிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். அப்பொழுது அவர்கள், ''நல்லது, அது என்ன?'' என்று கேட்கின்றனர். 103தேவன் தம்முடைய செய்தியை என்னிடம் அனுப்பி அதைக் குறித்து சாட்சியும் கொடுக்கின்றார். அடையாளங்கள் பின்தொடர வார்த்தையை அவர் உறுதிப்படுத்துகின்றார். அதைத்தான் வேதாகமும் கூறினது. அதை அவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இது கண்கூடாக நடக்கின்ற செயலாகும். ஆனால் அவர்கள் என்ன செய்கின்றனர்? அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஏனெனில் அசெம்பிளீஸ் ஆப் காட், ஒருத்துவம் அல்லது இருத்துவம், அல்லது திருத்துவம், அல்லது தேவனுடைய சபை, அல்லது பாப்டிஸ்டு, மெத்தொடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் ஸ்தாபனங்களின் பெயரிலே நான் வரவில்லை. நான் அவர்களுடைய நாமங்களில் ஒன்றினாலும் வரவில்லை, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வருகின்றேன். தேவன், தம்முடைய இரக்கத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினாலே செய்தியை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே மக்கள் இன்னுமாக தேவனுடைய ஆவியைத்தான் தவறாகப்புரிந்து கொள்கின்றனர். அது சரி. தவறாகப் புரிந்து கொள்ளுதல். நிச்சயமாக, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவீர்கள், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தேவ பக்தியுள்ள எல்லாரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள். நீதிமானாகிய நோவா முதற்கொண்டு இன்று உள்ள நவீன - நாள் பரிசுத்தவான் வரையிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவர். எப்பொழுதுமே அவ்விதமாகத் தான் உள்ளது, ஜனங்கள் அதை தவறாகப் புரிந்து கொள்வர். இஸ்ரவேல் அதைத் தவறாகப் புரிந்து கொண்டது. அவர்கள் அதை புரிந்து கொள்ளமாட்டார்கள்; அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் ஆவியிலே மாம்சத்தில் இருக்கிறார்கள்... அது ஆவிக்குரியதோடு இடைப்பிரிந்து கூடவே செல்லாது, ஏனெனில் அது கலவாது. 104மனுஷனுடைய கைகளால் உண்டாக்கப்படாத ஒரு ராஜ்யத்திலே நாம் ஜீவிப்பதற்காக நான் மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன். மனிதனால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு ராஜ்யத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நம்முடைய ராஜ்யம் மேலே உள்ளது என்பதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆகவே நம்முடைய ராஜ்யமானது மேலே உள்ளதென்றால், நாம் மேலேயிருந்து பிறந்தவர்கள், அப்படியானால் நாம் மேலான காரியங்களை நாடித் தேடுகிறோம், அங்கே கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார், ஓ, அங்கே அவர் நம்மைக் குறித்து வெட்கப்படுவதில்லை. நம்முடைய சாட்சி.... இந்த பூமியிலே நாம் அவரைக் குறித்து வெட்கப்படுவதில்லை. ஏனெனில் நாம் அந்நியரும், பிரயாணம் செல்கிறவர்களுமாயிருக்கிறோம். நாம் இந்த பூமிக்குரியவர்கள் அல்ல, நாம் தேவனுடைய ஆவியினாலே பிறந்திருக்கிறோம். நாம் அவருடைய இரத்தத்தாலே கழுவப்பட்டு, அவருடைய ஆவியினாலே பிறந்து, அவருடைய கிருபையினாலே நிரப்பப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். அது தான், தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல். ஆனால், நாம் அக்கறைக் கொள்வதெல்லாம் அவரை நேசிக்கத்தான். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? 105சரி, டெட்டி, நேசிக்கிறேன். பாடலிற்கு சுரம் எங்களுக்கு கொடுக்கவும், நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் அதைப் பாடுவோம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்புஅவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் அவர் அற்புதமானவரல்லவா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவருடைய சொந்த ஜனமாயிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறீர்களா? ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாயும், அவருக்கு சொந்த ஜனமுமாய் ஆவிக்குரிய பலிகளை உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியையும் செலுத்தும் ஜனமாயிருப்பதற்கு மகிழ்ச்சியுடைவர்களாய் இருக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஒரு பாடலைப் பாடப் போகிறேன், பாடல் பாடும்படிக்கு நான் உணருகிறேன்: நான் ஏன் சந்தோஷமும் விடுதலையுமாயிருக்கிறேன் என்று அநேக மக்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதை நான் காண்கிறேன்; ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் காரணம். ஓ, அது தான் என்னுடனுள்ள காரணம், ஓ, அது தான் என்னுடனுள்ள காரணம் ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் என்னிடமுள்ள காரணம். உங்களுக்கு அது பிரியமா? அப்படியானால் நாமெல்லாருமாகப் பாடுவோம்: நாம் ஏன் சந்தோஷமும் விடுதலையுமாயிருக்கிறோம் என்று அநேக மக்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதை நாம் காண்கிறோம்; நாம் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறோம், அதில் ஒரு சந்தேகமுமில்லை அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம், (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம் ஆவியால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன், அதில் ஒரு சந்தேகமுமில்லை, அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, நான் சந்தோஷமடைகையில், நான் பாடுவேன், நான் சத்தமிடுவேன், சிலர் அதை புரிந்து கொள்ளாதிருப்பதை நான் காண்கிறேன் ஆனால் யோர்தானைக் கடந்து அருமை தேசம் கானானிற்குள் சென்றுவிட்டேன் அது தான் என்னிடமுள்ள காரணம். ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம் (தேவனுக்கு ஸ்தோத்திரம்) ஓ, அது தான் என்னிடமுள்ள காரணம்; யோர்தானைக் கடந்து அருமை தேசம் கானானிற்குள் சென்றுவிட்டேன், அது தான் என்னிடமுள்ள காரணம். 106ஓ, அது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் தானே? யோர்தானைக் கடந்து அருமையான தேசமாகிய கானான் தேசத்திற்குள் செல்லுதல், உலகத்திற்கு விடை கொடுத்துவிட்டு, உலக காரியங்களுக்கு மேலாக உயர்ந்து, இப்பொழுது நான் இந்த பரலோக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கே கீழே இருக்கின்ற அந்த பருந்துகளுக்கு நான் செய்வது விநோதமானதாக இருக்கும், ஆம், நிச்சயமாக, நான் அதற்கு மேலாக பறந்து கொண்டிருக்கிறேன். அது சரி. நமக்கு என்ன கவலை? நாம் கானான் தேசத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆமென்! ஆம், ஐயா. புதிய திராட்சைகளை நாம் சாப்பிட்டு, ஒரு அருமையான தருணத்தைக் கொண்டவர்களாக; முழுவதும் மகிமையால் நிரப்பட்ட, முழுவதும் வல்லமையால் நிரம்பிய, முழுவதும் பரிசுத்த ஆவியைக் கொண்டதாக இருக்கும், ஆம். ஐயா. “நிரப்பப்பட்ட ஒரு மனிதன்...'' என்று ஸ்தேவானைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. எதை முழுவதுமாக கொண்டிருத்தல்? எதை முழுவதுமாக கொண்டிருத்தல்? அவன் பரிசுத்த ஆவியால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான், அவன் வல்லமையால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான், அவன் ஞானத்தினால் முழுவதுமாக நிறைந்தவனாக இருந்தான், அவன் முழுவதுமாக மகத்துவத்தால் நிறைந்தவனாக இருந்தான். அது எல்லாம் ஒன்று சேர்ந்து என்னவாயிருந்தது? அவன் பரிசுத்த ஆவியால் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தான். அங்கே தான் இந்தக் காரியங்களெல்லாம் வாசம் செய்கின்றன. ஜீவிக்கின்ற தேவனுடைய சபையும் அதுவே தான். கிறிஸ்தவனே, அதற்காக நீ மகிழ்ச்சியாயிருக்கின்றாயா? சந்தோஷமாக இரு. நீ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் ”கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தேவ பக்தியுள்ளவர்களெல்லாரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவர்“ வேதாகமம் முழுவதுமாக அவர்கள் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். இப்பொழுது, நான் என்ன கூற முயன்றுக் கொண்டிருக்கிறேன்? அந்நிய பாஷையில் பேசும் மக்களாகிய உங்களுக்கு, சத்தம் போடுகிற நீங்கள், ஆவியில் நடனமாடுகிற நீங்கள், ''ஓ, அது அர்த்தமற்றது'' என மக்கள் கூறுவர், நான் உங்களுக்கு காண்பித்ததை நினைவு கூறுங்கள். வேதாகமம் முழுவதுமாக, அவர்கள் எப்பொழுதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர். நினைவில் கொள்ளுங்கள், நீங்களும் வேத வசனத்தில் இருக்கிறீர்கள், சரியானதையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். சரியாக அதோடு தரித்திருங்கள், தேவன் உங்களோடு இருக்கிறார். வேதாகமத்தோடு சரியாக தரித்து நில்லுங்கள், மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார். ஆமென். 107நான் அவரை நேசிக்கிறேன். அவருடைய பிரசன்னத்தில், கர்த்தருடைய தூதன் முதன் முறையாக மனிதர் முன்பாக தோன்றின்போது நாம் பாடிக் கொண்டிருந்த அந்த அருமையான பழைய ஞானஸ்நான பாடலை நாம் பாடுவோமாக. முன்னதாக நான் அதைக் கண்டிருக்கிறேன், ஆனால் முதல் முறையாக அவர் கீழே இறங்கி வந்தபோது - அவர் கீழே வந்த போது, அவர் - அவர், ''கிறிஸ்துவின் முதல் வருகைக்கு யோவான் முன்னோடியாக அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடும்''. அங்கே நதியில் 1933 ஆம் வருடம், ஜூன் மாதம் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே கரையோரத்தில் நிற்கையில் அது கீழே இறங்கி வந்தது. நாங்கள் கரையில் நின்று கொண்டு பாடிக் கொண்டிருந்தோம்: புரண்டோடும் யோர்தானின் கரையில் நான் நின்று, என் ஆவலுள்ள பார்வையை செலுத்தினேன், என் சுதந்தரங்கள் இருக்கின்ற அந்த சந்தோஷ, அருமையான கானானை நோக்கி நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் அந்த ஆரோக்கியம் நிறைந்த இடத்தை அடைகையில் என்றென்றுமாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன்! என் பிதாவின் முகத்தை நான் எப்பொழுது காண்பேன், அவருடைய மார்பில் எப்பொழுது இளைப்பாறுவேன்? ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா.. நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். அந்த பரந்த சமவெளிகளின் மேல் நித்திய நாள் ஒன்று பிரகாசிக்கும்; அங்கே தேவனாகிய குமாரன் (Son) என்றென்றைக்கும் அரசாளுவார், இரவை சிதறடிப்பார். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... நாம் அதை மறுபடியுமாக பாடுவோம், உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கை குலுக்குங்கள். நான் வாக்குத்தத்தம்... ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா.. ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 108இப்பொழுது, துளி சந்தேகமும் இல்லாமல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, நீங்கள் ஆவியினாலே மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்துள்ள ஒவ்வொருவரும், நாமெல்லாரும் இப்பொழுது எழுந்து நம்முடைய கரங்களை உயர்த்தி பாடுவோமாக. நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... இதை நான் நீண்ட காலமாக காணவில்லை. பெண்களே , உங்கள் பையைத் திறந்து உங்களுக்கு ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்களே உங்கள் பாக்கெட்டில் கைவிட்டு உங்களுக்கு ஒரு கைகுட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாமெல்லாருமாக தேவனுக்கு கைக்குட்டை அசைவு வெகுமதியை அளிக்கப்போகிறோம். சரி, நாமெல்லாருமாக, நாம் கானானிற்குள் செல்லும் போது அசைக்கும் விதத்தில் நாமெல்லாரும் அசைக்கப் போகிறோம், உங்கள் கைக்குட்டையை அசையுங்கள் சரி. இப்பொழுது: நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வா... இப்பொழுது, தங்களுடைய தெரிந்து கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயப்படுத்தாதிருக்கிற யாராவது இங்கே இருப்பீர்களானால், நாங்கள் அதை மறுபடியுமாக பாடுகையில் இங்கே நீங்கள் வர விரும்புகிறீர்களா, உங்களுடைய கைக்குட்டையையும் வெளியே எடுத்து எங்களுடன் சேர்ந்து மறுபடியுமாக அசைப்பீர்களா. கதவுகள் திறந்திருக்கின்றன, பயணச் சீட்டுகள் இலவசம். நீங்கள் வரலாமல்லவா? சீயோனின் அந்த பழைய கப்பலில் ஏறி வாருங்கள், அக்கப்பல் பிரயாணப்படப் போகிறது. நாம் செல்வோம். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், (நேரம் நீண்டதாக இருக்காது) நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 109நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்: இயேசுவைப் போல, இயேசுவைப் போல, இப்பூமியிலிருக்க நான் வாஞ்சிக்கிறேன்; இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவப் பயணமெல்லாம் நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன் பெத்லகேம் தொழுவத்திலிருந்து அந்நியர் ஒருவர் தோன்றினார், இப்பூமியில் நான் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன்; இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவப்பயணமெல்லாம் நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மறக்காதீர்கள். புதன்கிழமை இரவு ஜெப கூட்டத்தை மறக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், அதிகமாக ஜெபியுங்கள், எனக்காக ஜெபியுங்கள், உங்கள் மேய்ப்பருக்காக ஜெபியுங்கள், உங்கள் அண்டை வீட்டாருக்காக ஜெபியுங்கள், உங்கள் டீக்கன்மார்களுக்காக ஜெபியுங்கள், உங்கள் தர்மகர்த்தாக்களுக்காக ஜெபியுங்கள், நம்மோடு தேவன் தம்முடைய வழியையே கொண்டிருக்கத்தக்கதாக ஜெபியுங்கள். இயேசுவைப் போல, இயேசுவைப் போல, இப்பூமியிலிருக்க நான் வாஞ்சிக்கிறேன் (அது தான் என் இருதயத்தின் வாஞ்சை அவர் புரிந்து கொள்கின்றார்) (அநேக மக்கள் அதை புரிந்து கொள்வதில்லை. நினைவில் கொள்ளுங்கள், தேவன் ஒரு வழியை உண்டாக்குவார்) இப்பூமியினின்று மகிமைக்கு... நான் அவரைப் போலவே இருக்க கேட்கிறேன். (சகோதரன் பிரன்ஹாம் பாடலை வாய் மூடிமெளனமாக மெதுவாக இசைக்கிறார் - ஆசி...) தாழ்மையாகவும் கீழாகவும், இப்பூமியில் அவரைப் போலிருக்க வாஞ்சிக்கிறேன். இப்பூமியினின்று மகிமைக்கு என் ஜீவ பயணமெல்லாம் நான் அவரை போலவே இருக்க கேட்கிறேன். இப்பொழுது உங்கள் தலைகள் தாழ்த்தியிருக்கையில், உங்கள் கண்கள் மூடியிருக்கையில், நம்முடைய இருதயங்கள் தேவனை நோக்கி இருக்கையில், நாம் நம்முடைய விலையேறப் பெற்ற, அருமை நண்பர், கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோதரன் ராய் பார்டரை அழைப்போமாக... கூட்டத்தின் முடிவு ஜெபத்தை செய்ய அழைப்போம். சகோதரன் பார்டர்ஸ் (சகோ. ராய் பார்டர்ஸ் ஜெபிக்கிறார் - ஆசி) கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 61-1015M COD-15 1...இந்தக் கேள்விகளை, நான் பிரசங்க பீடத்துக்கு வருவதற்கு முன்பு, ஆனால் சகோ. மூர் தொலைபேசியில் ஒரு அவசர அழைப்பு விடுத்தார், யாரோ மிகவும் வியாதிப்பட்டிருப்பதாக எண்ணினேன், பார்க்கப் போனால் அவருக்கு ஒரு கூட்டத்தை நான் நடத்தி தர வேண்டுமென்று விரும்பினார். அவர் தொலைபேசியில் பேசுவதை முடித்துக் கொள்ள நான் முயன்று கொண்டிருந்தேன். அவர் நன்றி கூறுதல் நாளின் போது வந்து லூயிசியானாவிலுள்ள அவர்களுக்கு ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டு மென்று விரும்பினார். சென்ற ஆண்டு நாங்கள் அங்கு சென்றிருந்த போது, நாங்கள்... கர்த்தர் ஒரு எழுப்புதலைத் தொடங்கினார். அது இதுவரைக்கும் முடியவில்லை. அது இன்னும் தொடர்ந்து சென்று. கொண்டிருக்கிறது. அந்த எழுப்புதல். கடந்த இந்த ஆண்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டனர்அங்கு எழுந்த அந்த எழுப்புதலுக்குப் பிறகு. 2இன்று காலை இங்கு வந்திருப்பது ஒரு விதத்தில் ஆச்சரியமாயுள்ளது என்று நினைக்கிறேன், எனக்கு அவ்விதம் உள்ளது. எனக்குத் தெரியாது. எனவே ஜனங்களுக்கு இதை நாங்கள் அறிவிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக இங்கு வந்தேன். நான் நினைத்தேன், அந்த வகையில் ... ஜனங்கள் கேள்வி கேட்கும்போது, அவர்களுடைய இருதயங்களில் என்ன உள்ளதென்று ஒரு போதகர் அறிந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜனங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் கண்டு கொள்கிறோம். இன்று காலை நாம் தொடங்குவதற்கு முன்பு, ஒரு குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று யாரோ ஒருவர் கூறினார் என்று நினைக்கிறேன். குழந்தையின் பிரதிஷ்டை இருக்குமென்று பில்லி என்னிடம் கூறினான். அப்படியானால், ஏன்... நல்லது. அந்த சிறுவனை நாம் மேடையின் மேல் கொண்டு வந்து. அவனை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்து விட்டு, பிறகு கேள்விகளுக்கு பதிலளிப்போம். அதன் பிறகு நாங்கள் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கப் போகின்றோம். 3என் தாயார் அதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்று அறிவிக்க விரும்புகிறேன். அவர்கள்.... அவர்கள் நிலை முன்பிருந்ததை விட மோசமடையவில்லை என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அவ்விதம் எண்ணுகின்றனர். நான் அவ்விதம் எண்ணவில்லை; அதே நிலையில் தான் அவர்கள் உள்ளதாக எண்ணுகிறேன். அவர்கள் மரித்துப் போவார்கள் என்று தேவன் என்னிடம் கூறும் வரைக்கும், அதை நான் நம்ப மாட்டேன். என் தாயாருக்காக நான் விசுவாசத்தை பற்றிக் கொண்டவனாய் இருக்கப் போகின்றேன் (பாருங்கள்?), அவர்கள் இவ்வுலகை விட்டு போகப் போகின்றார்கள் என்று அவர் என்னிடம் கூறும் வரைக்கும். இப்போது, அவர் அவளை அழைத்துச் செல்லலாம். எனக்கு தெரியாது. அதை என்னிடமிருந்து விலக்கிக்கொண்டிருக்கலாம், கவலைப்படுவதிலிருந்து என்னைக் காத்திருக்கலாம் அல்லது ஏதாவது இருக்கலாம். ஆனா அவ என்ன இருந்தாலும் கடவுள் நல்லா வரணும்னு நம்பப் போறேன். அவள் மூன்று வாரங்களாக சாப்பிடவில்லை (ஆனால் குளுக்கோஸ் மட்டுமே), ஆனால் அவள் எப்படியும் குணமடைவாள் என்று நான் நம்புகிறேன். 4[சகோதரர் பிரான்ஹாம் ஒரு குழந்தையை அர்ப்பணிக்கிறார்.] சரி, இது ஒரு . . . இன்னொரு சாமியார் இங்கு வருவார் என்று நம்புகிறேன். லிட்டில் மிஸ்டர் வூட்ஸ். (அவரது முழுப் பெயர் என்ன?) இது வூட்ஸ் குடும்பத்தில் இப்போது சேர்க்கப்பட்ட ஒரு சிறிய டோக்கன். நிச்சயமாக, அவர் பாட்டியின் செல்லப்பிள்ளை. வில்லியம் டேவிட் ஜூனியர். நிச்சயமாக அவன் நல்ல சிறுவன். மற்றும் அவரது சிறிய கைமுட்டிகள் [தெளிவற்ற வார்த்தைகள்]. ஏனென்றால் அவன். . . . ஆம், அவர் விரல்களை இரட்டிப்பாக்கியுள்ளார். அவனுடைய தூண்டுதல் விரல் உள்ளது. . . . அணில் வேட்டைக்காரன், இல்லையா? ஒரு கண்ணால் என்னைப் பார்க்கிறார். அவர் ஒருவிதத்தில் பின்தங்கியவர் என்று நினைக்கிறேன். கடவுள் நம் வீட்டிற்கு அனுப்பும் சிறிய விஷயங்கள் இவை என்பதை நாம் பாராட்டுகிறோம், மேலும் இவற்றை வளர்க்கும் பொறுப்பை நமக்குத் தருகிறோம். கடவுளின் அருள் இந்த குடும்பத்தில் தொடர்ந்தால், இந்த குழந்தை கடவுளின் அறிவுரையில் வளர்க்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தலை வணங்குவோம். எங்கள் பரலோகத் தகப்பனே, இன்று காலை சிறிய வில்லியம் டேவிட் வூட்டை, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர் பூமியில் இருந்தபோது, கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை, அவர் கிடப்பதற்காக, அவர்கள் அவரிடம் கொண்டுவந்த வேதவசனத்தைப் பொறுத்தமட்டில், இன்று காலை உங்களிடம் கொண்டு வருகிறோம். அவருடைய கரங்கள் அவர்கள்மீது அவர்களை ஆசீர்வதிப்பார். இன்று காலை அவர் மாம்ச சரீரத்தில் இங்கே இருந்திருந்தால், நமது சகோதரனும் சகோதரியும் இந்த சிறிய கிருபையை அவருக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம், இதனால் இன்று நாம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோம், அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வழியில், அவர்கள் குழந்தைகளைக் கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு. நாங்கள், விசுவாசத்தால், சிறிய தாவீதை இயேசுவின் பெயரால் உங்களிடம் உயர்த்துகிறோம். ஆண்டவரே, நீங்கள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். கடவுளே, நீங்கள் தாமதித்தால் அவர் உமக்கு அடிமையாக வாழ்வார். அருள்வாயாக, ஆண்டவரே. அவருக்கு ஆரோக்கியத்தையும் வலிமையையும் கொடுங்கள். அவனுடைய அப்பாவையும் தாயையும் ஆசீர்வதியுங்கள். உங்கள் தெய்வீக சித்தத்தில் இருந்தால், இந்தச் சிறுவன் வரவிருக்கும் நாட்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எழுப்புவான். அருள்வாயாக, ஆண்டவரே. இந்த சிறிய வில்லியம் டேவிட் வுட்டை இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களின் ஒரு வரவுக்காக நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஆமென். 5அவர் ஒருக்கால் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்; எனக்குத் தெரியாது. அவருடைய ... அதை அவர் என்னிடம் மறைத்து வைத்திருக்கக் கூடும், நான் கவலை கொள்ளாமல் இருப்பதற்காக; அவர்களுடைய நிலை என்னவானாலும், தேவன் அவர்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கப் போகின்றேன். மூன்று வாரங்களாக அவர்கள் ஒன்றுமே உண்ணவில்லை, க்ளுகோஸ் மட்டும். ஆனால் அவர்கள் எப்படியும் சுகமடைவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? (சகோ. பிரான்ஹாம் குழந்தையைப் பிரதிஷ்டை செய்கிறார் - ஆசி), 6இப்பொழுது, ஒரு சில கேள்விகள் இங்குள்ளன. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தை திறந்து பார்க்கவும் கூட எனக்கு தருணம் கிடைக்கவில்லை; ஏனெனில் இவை இன்று காலையில் தான் என்னிடம் கொடுக்கப்பட்டன. சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவைகளைக் கையிலெடுத்தேன், அவைகளில் ஒரு பகுதியை விரைவாகப் படித்தேன் , சில கேள்விகளை நான் கண்டபோது எப்படி.... என்று வியந்தேன்... அவைகளில் சில.... நான் இதுவரை பெற்றுக் கொண்டதில் இவையே மிகவும் கடினமான கேள்வித் தொகுப்பாய் உள்ளன. எனவே இவைகளை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, நமக்கு இவைகளைக் கொண்டு கடினமான நேரம் உண்டாயிருக்கும் என்பதைக் கண்டு கொண்டேன். எனவே உங்கள் கருத்துக்கேற்ப இக்கேள்விகளுக்கு நான் பதில் அளிக்காமல் போனால்... இவை என் அறிவுக்கு எட்டின் வரையில் என்பதை நினைவில் கொள்ளவும். சில வேளையில் இவைகளுக்கு பதிலளிக்க ஒரு வேதவசனத்தை நான் குறிப்பிட்டு, அதை படிக்க நேரம் இல்லாமலிருக்கக் கூடும். நீங்கள் வீட்டுக்கு சென்ற பிறகு, அதை எடுத்து வாசியுங்கள். நான் தவறான வேத வசனத்தை குறிப்பிட்டிருந்தால், நான் தவறு செய்து விட்டிருப்பேன். நான் வேண்டுமென்று வேத வசனத்தை தவறாக குறிப்பிடுவதில்லை, ஆனால் சில நேரங்களில் நமக்கு அவ்விதம் நேர்ந்து விடுகிறது. அது ஒன்றைக் குறிக்கும் வசனமாயிருக்கும், நாம் வேறொன்றை தவறாக குறிப்பிடக் கூடும். அதை செய்வது எவ்வளவு எளிதென்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நமது நோக்கம். அதை சரியாக குறிப்பிடுவதே நமது நோக்கமாயுள்ளது. இக்கேள்விகளை இந்த ஞாயிறு எடுத்துக் கொண்டு, அவைகளுக்கு அடுத்த வாரம் பதிலளித்திருப்பேனானால், அவைகளைத் தேடிப் பார்க்க எனக்கு வாரம் முழுவதும் நேரம் இருந்திருக்கும். 7ஆனால் வியாதிப்பட்ட அநேகர் வந்து கொண்டிருந்தனர். எனக்கு அதிகமான வேலை இருந்தது, எனக்கு வந்திருந்த அழைப்புகளுக்கு வெளியே செல்ல எனக்குத் தருணமே கிடைக்கவில்லை. எனவே வியாதியஸ்தரை கூடாரத்துக்கு வரவழைத்து அவர்களுக்காக நாம் ஜெபிக்க இன்று ஒரு நல்ல தருணம் என்று எண்ணினேன். ஜெபம் காரியங்களை மாற்றி விடுகிறதென்று நாமறிவோம். ஜெபம் நமக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. ஜெபத்தின் காரணமாகவே இன்று நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஜெபத்தின் மூலமாக தேவனுடைய கிருபையினால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று காலை நான் சிறிது களைப்புற்றிருக்கிறபடியால், உங்களுடைய ஜெபங்களை நான் வாஞ்சிக்கிறேன் - எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று 8நேற்று என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன், ஒரு கிறிஸ்தவ குடும்பம். அங்கு சில வாலிப கிறிஸ்தவர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று என் மனதில் பட்டது, ஒரு எண்ணம். நான் சுற்றியுள்ள மரங்களைக் கண்டபோது, அவை பட்டுப் போய் கொண்டிருந்தன “இந்த மரங்கள் பட்டுப் போகும் நிலையில் இருந்த போதிலும், அவை எவ்வளவு அழகாயிருக்கின்றன!” என்று எண்ணினேன். சில நேரங்களில் இந்த மரங்கள் பச்சையாகவும் சிறப்பாயும் இருக்கும் நிலையைக் காட்டிலும் பட்டுப் போகும் நிலையில் மிகவும் அழகாயுள்ளன. அது நம்முடைய நிலைக்கு எவ்வளவு பொருத்தமாய் பரலோகப் பிதாவின் பார்வையில் அமைந்துள்ளது! ஏனெனில் அவர் “பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று கூறியுள்ளார் (சங். 116:15). பிதா தம்முடைய பிள்ளை, கிறிஸ்துவில் தன் ஸ்தானத்தையும், தன் விசுவாசத்தையும், “தேவனுடைய கிருபையினால் நான் இரட்சிக்கப்பட்டேன்” என்னும் அறிக்கையையும் கொண்டவனாய் (பாருங்கள்?) மரண நேரத்தில் நின்று கொண்டு அவரிடம் வீட்டுக்கு வருவதை கீழே நோக்கி பார்ப்பது எவ்வளவு அழகான காரியமாயிருக்கும்! மரண நேரத்திலும் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்னும் நம்முடைய நிலையை நம்மால் பற்றிக் கொண்டிருக்க முடிகிறது. 9பிதா நம்முடைய தீரத்தையும் விசுவாசத்தையும் நம்முடைய சாட்சியை நாம் பற்றிக் கொண்டிருப்பதையும் நேசிக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம் ஆரோக்கியமாயும் திடமாயும் நல்லுணர்வு தோன்றும் நேரத்திலும் சாட்சி கூறுவது அல்ல; நீங்கள் சோர்வுற்று, பெலன் குன்றி, துன்பப்படும் போது சாட்சி கூற வேண்டும். அப்பொழுது தான் உங்கள் சாட்சி முக்கியம் பெறுகிறது. அதைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கையில்; இதைக் குறித்து நான் எண்ணிப் பார்த்தேன். அதாவது மரணம் ஜீவனுடன் சம்பந்தப்பட்டதல்ல. ஜீவனும் மரணமும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. மரத்திலுள்ள இலைகள் செத்துப் போவதற்கு முன்பு, அதன் சத்து அதை விட்டு வெளியேற வேண்டும். எனவே, மரணமானது எதனுடன் சம்பந்தப்பட்டுள்ளதென்றால் - நான் மானிடர்களைக் குறித்து பேசுகிறேன் - மரணம் பாவத்துடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஏனெனில் நமக்கு பாவம் எதுவும் இருந்ததற்கு முன்பு, மரணம் இருக்கவேயில்லை. ஆனால் மரணம் எங்குள்ளதோ, அங்கு பாவம் உள்ளது; பாவம் எங்குள்ளதோ, அங்கு மரணம் உள்ளது; ஏனெனில் பாவத்தின் பலனே மரணம். அதன் பிறகு, அவன்... பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்“ (எசே. 18:20). ஆனால் நாம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டு, மரணத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? மரணம் ஜீவனுடன் சம்பந்தப்பட முடியாது. ஜீவனும் மரணத்துடன் சம்பந்தப்பட முடியாது. 10நேற்று சில வாலிப கிறிஸ்தவர்கள் கூடியிருந்த அறையில் நான் பேசிக் கொண்டிருந்த போது, “நீங்கள் சாலையில் நின்று கொண்டிருந்த போது, ஒரு கார் மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் கட்டுக்கு மீறி சாலையில் வந்து கொண்டிருக்குமானால், நீங்கள் உங்களால் முடிந்த வரையில் மிகவும் வேகமாக அந்த நெடுஞ்சாலையை விட்டு விலகி விடுவீர்கள். அந்த காரின் வழியிலிருந்து விலகிக் கொள்ள, நீங்கள் குதித்து, வழுக்கி , எது வேண்டுமானாலும் செய்வீர்கள்” என்றேன். அந்த விதமாகத் தான் பாவமும் ஒரு கிறிஸ்தவனுக்கு இருக்க வேண்டும், ஏனெனில் பாவம் மரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. பாவத்தை நீங்கள் எந்த உருவிலும் கண்டால், உடனே அதிலிருந்து குதித்து விலகியோடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குக் கவலையில்லை, பொல்லாப்பின் தோற்றத்திலிருந்து விலகுங்கள். ஏனெனில் பாவத்துடன் சம்பந்தப்படுதல் மரணத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அங்கு நின்று கொண்டு, உங்களை நோக்கி வரும் கார் உங்கள் மேல் மோத விட்டுக் கொடுப்பது போல் உள்ளது. நீங்கள், அது என்ன செய்யும் பார்க்கலாம் என்று காத்திராதேயுங்கள்; அதன் வழியிலிருந்து விலகி விடுங்கள். தீமையின் தோற்றத்தைக் கண்டால், அதை விரைவில் பறக்கணிக்து விடுங்கள். சோதனை வருவதை நீங்கள் காணும்போது, பாவம்... அது தவறான ஒன்றாக இருக்குமானால், மரணம் உங்கள் பின்னால் பதுங்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அப்படியானால், மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் உங்களை நோக்கி வரும் மோட்டார் வாகனத்திலிருந்து எவ்வளவு விரைவாக தப்பி ஓடுவீர்களோ, அவ்வளவு விரைவாக இதையும் விட்டு ஓடிவிடுங்கள். நீங்கள் மோட்டார் வாகனத்தின் வழியிலிருந்து விரைவில் விலகிக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் குதித்து, வழுக்கி, எப்படியும் ஓடித் தப்பித்துக் கொள்வீர்கள். 11நமக்கு ஜீவன் உள்ளதென்று நாம் எப்படி அறிந்து கொள்கிறோமென்றால், நாம் பாவத்தை வெறுக்கும் காரணத்தாலே. நாம் பாவத்தை மிகவும் அதிகமாக வெறுக்கிறோம், அதனுடன் மரணம் சம்பந்தப்பட்டுள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம், அது தோன்றும்போது, நாம் உடனே அதை புறக்கணிக்கிறோம். நாம் அதிலிருந்து எந்த வகையிலும் விலகியோட, நாம் குதிக்கிறோம், ஒடுகிறோம், பாவத்திலிருந்து விலகியிருக்க நாம் எதையும் செய்கிறோம், ஏனெனில் பாவத்தில் மரணம் உள்ளது. நாம் பாவத்துடன் தொடர்பு கொண்டிருக்க நிச்சயமாக விரும்புவதில்லை. அதிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம் எனவே அது ஒரு நல்ல சிறு கருத்தாய் இருக்குமென்று எண்ணினேன். நேற்று அந்த கிறிஸ்தவர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, இக்கருத்து எனக்கு தோன்றினது; அதை இந்த சபைக்கு இன்று காலை எடுத்துரைப்பது நலமென்று எண்ணினேன் - முக்கியமாக இங்கு அமர்ந்துள்ள வாலிபப் பிள்ளைகளுக்கு இத்தகைய சோதனை நேரிடுகையில். 12பிறகு, இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதை மட்டும் இப்பொழுது பார்க்க நேர்ந்தால்... இதை ஞாபகம் கொள்ளுங்கள், பாவமுள்ள எதிலுமே மரணம் படுத்துக் கிடக்கிறது. நீங்கள் பாவத்தில் பங்கு கொள்வீர்களானால், மரணத்தில் பங்கு கொள்கிறீர்கள். எனவே அதிலிருந்து விலகியிருங்கள். பாவம் என்பது என்ன? அவிசுவாசம்! அவிசுவாசம் அனைத்திலுமிருந்து விலகியிருங்கள். தேவனுடைய வார்த்தையை அவமதிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விலகியிருங்கள். நான் சுகமளிக்கும் ஆராதனையைத் தொடங்கும் முன்பு, இக்கேள்விகளுக்கு விடையளிப்பதை என்னால் நேரத்தோடே முடிக்க முடிந்தால், அவமரியாதை என்பதைக் குறித்து சிறிது பேச விரும்புகிறேன். 13இப்பொழுது, இக்கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு அல்லது விடையளிக்க முயற்சிப்பதற்கு முன்பு. நாம் ஜெபம் செய்வோம்: எங்கள் பரலோகப் பிதாவே, இன்று காலை நாங்கள் இயேசுவின் நாமத்தில் உமது சமுகத்தில் வந்து, நாங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து எங்களை விலக்கிக் கொண்டு விட்டோம் என்று கூற முற்படுகிறோம். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய எங்களால் கூடாது என்றும், நாங்கள் ஒன்றைப் பகைத்து மற்றதை சிநேகிப்போம் என்றும் அவரால் உரைக்கப் பட்டுள்ள து (மத். 6:24). நாங்கள் நித்திய ஜீவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்று இன்று காலையில் விசுவாசிக்கிறோம்; ஏனெனில் நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் ஏற்றுக் கொண்டு எங்கள் ஜீவியத்தில் பரிசுத்த ஆவி தங்கி எங்களை வழிநடத்துகிறது என்னும் அத்தாட்சியை பெற்றுள்ளோம். இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பாவத்தைக் காணும் போது, அது எவ்வளவு சிறிதாக இருந்தபோதிலும், எவ்வளவு அழகாக அது காணப்பட்டாலும், பயங்கர வேகத்தில் வரும் காரைக் குறித்து நான் ஒரு உதாரணத்தைக் கூறினது போல, எங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று. குதித்து அதிலிருந்து விலகியோடும்படி செய்கிறது. நாங்கள் எந்தவிடத்திலும் பாவத்தில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை, அதிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம். 14இப்பொழுதும் கர்த்தாவே, வியாதியஸ்தர், தேவையுள்ளவர் அநேகர் இன்று காலை இருப்பதை உணருகிறேன். கர்த்தாவே, அவர்களுக்கு விசுவாசத்தை தரும்படியாக ஜெபிக்கிறேன் - முக்கியமாக இன்று காலை இந்த கூடாரத்தில் ஜெப வரிசையில் வருபவர்களுக்காக . இவர்கள் பாரமான யாவற்றையும், எல்லா அவிசுவாசத்தையும் தள்ளி விட்டு, அதிலிருந்து வேகமாக வெளி யேறி, விசுவாசத்துடன் கர்த்தராகிய இயேசுவினிடம் ஓடிப் போவார்களாக! மருத்துவமனைகளிலும், வியாதிக்குப் பின்பு ஓய்வெடுக்கும் வீடுகளிலும் உள்ளவர்களுக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, என் தாயாருக்காக ஜெபிக்கிறேன். இதுவரைக்கும், கர்த்தாவே, அவர்களை எங்களோடு கூட வைத்து வந்திருக்கிறீர், இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். விசுவாசத்துடன் தேவைப்பட்ட கரங்களுடன் உம்மை அணுகுகிறோம், முதலாவதாக உம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள, அவர்கள் இவ்வுலகை விட்டுப் போவது அவருடைய சித்தமா என்று காண். அது அவருடைய சித்தமாயிருக்குமானால், நாங்களும் - அது எங்களுடைய சித்தமும் கூட, ஆனால் சாத்தான் இந்த பொல்லாப்பைச் செய்தானா என்றும் எங்களுக்கு ஒரு சோதனையைக் கொடுப்பதற்கென உம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடந்து கொண்டிருக்கிறதா என்றும் நாங்கள் முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அப்படியானால், கர்த்தாவே, எங்கள் கடமையின் பாதையில் நாங்கள் தீரமாக நிற்க விரும்புகிறோம். 15பிதாவே, எங்களுக்கு வந்துள்ள அந்த தொலைபேசி அழைப்புகளையும் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கிற விசேஷித்த விண்ணப்பங்களையும் நினைவுகூரும்படி இக்காலையில் உம்மை வேண்டிக் கொள்கிறோம். எல்லாவிடங்களிலுமுள்ள எங்களுக்கு அன்பார்ந்தவர்களை ஆசீர்வதிப்பீராக. இன்றைக்கு கேள்விகளுக்கு பதிலளிப்பது என் மேல் விழுந்த கடமையாயுள்ளது, கர்த்தாவே. இவை ஆழமானவை என்றும், ஜனங்களின் இருதயத்தில் எழுந்த உத்தமமான கேள்விகள் என்றும் நாங்கள் உணருகிறோம். ஏதோ மூடத்தனமாக அவர்கள் இவைகளைக் கேட்கவில்லை; சத்தியத்தை அறிந்து கொள்ள அவர்கள் சிரத்தை கொண்டுள்ளதால், இவைகளைக் கேட்டிருக்கின்றனர். உமது வசனமே சத்தியம். எனவே பிதாவே, இக்காலையில் இந்த வசனமாகிய சத்தியத்துக்குள், எங்கள் சிந்தனைகளை இணைக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, போதிக்கும் இவ்வீட்டிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் செல்லும்போது, நாங்கள் இன்னும் அதிகமாக புரிந்து கொண்டிருக்கவும், அது எங்கள் ஆத்துமாக்களுக்கு நன்மையாயிருக்கவும் எங்களுக்கு உதவி செய்வீராக. இதை நாங்கள் தேவனுடைய மகிமைக்கென்று அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்காக இங்கு சில உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில், நம்மால் எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ, அப்பொழுது ஜெபிப்போம். இப்பொழுது, சரியாக நமக்கு ஒன்றரை மணி நேரம் உள்ளது. நான் உங்களுக்கு ஏற்கனவே கூறினது போன்று, இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடையளிக்க முடியுமா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு நாம் திட்டமிருப்பது என்னவெனில், கேள்விகளுக்கு விடையளித்து விட்டு, ஜனங்களின் விசுவாசத்துக்கு உதவியாயிருப்பதற்கென ஒரு சிறு பிரசங்கத்தை நிகழ்த்தி விட்டு, அதன் பிறகு வியாதியஸ்தருக்கு ஜெபிக்கலாம் என்பதே. இன்றிரவு நடக்கவிருக்கும் ஆராதனைகளையும், நடுவாரஜெபக் கூட்டங்களையும், ஆண்களின் கூட்டங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஞாயிறைக் குறித்து எனக்குத் தெரியவில்லை.... கூடுமானால், கர்த்தர் அனுமதிப்பாரானால், சபைக்கு அளிப்பதற்கென என் இருதயத்தில் ஒரு செய்தி உள்ளது. அது தலைசிறந்த ஒன்று, அதைப் பிரசங்கிக்க வேண்டுமென்று இவ்வாரம் என் இருதயத் தில் எழுந்தது. பிரசங்கிப்பதற்கென ஒரு செய்தி, சுவிசேஷக செய்தி ... நம்முடைய கர்த்தர் நடத்தும் விதமாக, அதைக் குறித்து சற்று கழிந்து பார்ப்போம். எனக்காக இப்பொழுது ஜெபியுங்கள், ஏனெனில் சில பெரிய தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. சகோ. ராய் பார்டர்ஸ் (இன்று காலை அவர் இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்) கூட்டங்கள் ஒழுங்கு செய்வதை கவனித்துக் கொள்கிறார். கடந்த சில மாதங்களில் வந்த அழைப்புகள் ஒரு புத்தகம் நிறைய எழுதப்பட்டு, அது அவரிடம் உள்ளது - செல்ல வேண்டிய வெவ்வேறு இடங்கள், கூட்டங்கள் ஒழுங்கு செய்ய அவரை கேட்டுக் கொண்டவர்களின் பெயர்கள். எனவே இவ்விஷயத்தில் நான் சரியான தீர்மானம் எடுக்க தேவன் உதவி புரிய வேண்டுமென்று ஜெபியுங்கள். நான் எதைச் செய்தாலும், அது சரியாயிருக்கட்டும், அதுவே முக்கியம் வாய்ந்தது. 17இப்பொழுது கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அது... ஆகையால் தான் நான் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். சுக மளிக்கும் ஆராதனை இருக்குமென்று நாங்கள் விளம்பரப்படுத்த வில்லை, எனவே, நமது ஜனங்கள் மாத்திரமே இங்கிருப்பார்கள்; அவர்களுடைய இருதயத்தில் என்ன உள்ளதென்று நாம் அறிந்து கொள்ள முடியும். இங்கு பின்னால் அமர்ந்துள்ள நமது விலையேறப்பெற்ற சகோதரனும் மேய்ப்பனுமாகிய சகோ. நெவில் - அவர் தேவனுடைய ராஜ்யத்தில் முன்னேறி வருவதைக் காண்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் அவர் முன்னேறினதை ஒன்று சேர்த்து பார்த்தால், அதை காட்டிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில் அவர் அதிகமாக முன்னேறியிருக்கிறார் என்பது என் கருத்து. கர்த்தர் எவ்வளவாக அவரை ஆசீர்வதித்திருக்கிறார்! அதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதை நான் அவருக்கு நேராக கூறுவதில்லை ... அவருக்குப் பின்னாக இதை கூறியிருக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். நான் பையனாயிருந்த முதற்கொண்டு சகோ. நெவிலை அறிவேன். பாருங்கள்? எனக்குத் தெரியும், சகோ. நெவில் ... இதை நான் விசுவாசிக்கிறேன்; அதாவது நம்மெல்லாரையும் போல அவரும் தவறு செய்யக் கூடியவர்; நாம் எல்லாரும் தவறு செய்யக் கூடியவர்களே, நாம் இன்னும் மானிடரே. ஆனால் அது அவருடைய இருதயத்திலிருந்து எழுந்த ஒன்றாக இருக்காது; அதை நான் நம்பமாட்டேன். அவர் உத்தமமுள்ளவர். அவர் எப்பொழுதுமே மிகுந்த உத்தமமுள்ளவராய் இருந்து வந்திருக்கிறார். 18அவர் இந்த செய்திக்குள் வந்தபோது, சபையின் வாக்குகளை (vote) கொண்டு அவரை இங்கு மேய்ப்பராகக் கொண்டு வந்தேன். அவர் இப்பொழுது இவைகளைப் புரிந்து கொண்டிருப்பது போல அப்பொழுது புரிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் உத்தமமாக மற்றெல்லாவற்றையும் தள்ளி விட்டு இதை ஆராய்ந்து பயபக்தியுடன் அணுக முற்பட்டார். இப்பொழுது அவருக்கு செய்தியில் திடமான ஆதாரம் உள்ளதென்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவர் பிரசங்க பீடத்துக்கு வரும்போது அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்தவராயிருக்கிறார். எனவே இந்த கூடாரத்துக்காக நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். ஒரு புதிய கூடாரத்தைக் கட்டுவதால், அல்லது இந்த கூடாரத்தை விரிவுபடுத்தி, பெரிதாக்கி ஞாயிறு பள்ளி அறைகளை. அதில் கட்டலாமா என்று ஆலோசனை செய்ய அன்றொரு இரவு இங்கு ஒரு கூட்டத்தை அவர்கள் நடத்தினதாகக் கூறினர்; இதை விரிவுபடுத்தி பெரிதாக்கி, எல்லா வகுப்புகளுக்கும் வகுப்பறைகள் ஞாயிறு பள்ளி அறைகளைக் கட்டி, தரையில் கம்பளம் விரித்து, கூரையை வழவழப்பான 'பிர்ச்' (birch) மரத்தினால் உண்டாக்கி, வெளியே பெட்ஃபோர்ட் கற்களைப் பதித்து அதை அழகுபடுத்தலாமென்று சபையானது ஒருமுகமாக முடிவு செய்தது. இப்பொழுது கட்டிடக் கலை நிபுணர்களும் (architects) மற்றவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபையை பெரிதாக்கி, பின்பாகத்தை விரிவுபடுத்தி, அதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக நாளை ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 19இப்பொழுது, இந்த கேள்விகளில் நான்... சில கேள்விகளை நான் பார்க்கக் கூட இல்லை. சில சொற்களை நான் மெள்ள எழுத்து கூட்டி அது என்னவென்று கண்டு கொள்ள வேண்டும். உங்கள் எழுத்தின் காரணமாக அல்ல, எனது குறைந்த கல்வியே காரணம். நாம் அப். 2:38ன்படி ஞானஸ்நானம் பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்றஞானஸ்நானத்தைக் குறித்து நாம் எவ்விதம் ஜனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா இல்லையா? மேலும் தொடர்ந்து சென்று வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள்? இப்பொழுது, இது ஒரு நல்ல கேள்வி. இந்த கேள்விகளின் பேரில் நான் மறுபடியும் கூற விரும்புகிறேன் (பாருங்கள்?) உங்கள் கருத்துக்கேற்ப இவைகளுக்கு நான் விடையளிக்காமல் போனால்... எனக்குத் தெரிந்தவரையில் இவைகளை வேதரீதியாக்க, வேதவாயிலாக இவைகளுக்கு விடையளிக்கப் போகின்றேன். 20வேதப்பிரகாரமான தண்ணீர் ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே. அது அப். 2: 38லும் வேதாகமத்தின் மற்ற பாகங்களிலும், வேதாகமம் முழுவதிலும் காணப்படுகிறது. இன்றைக்கு அநேகர் - அதை தொடங்கின சபையிலிருந்து வழிவழியாக வந்த ஏறக்குறைய எல்லா சபைகளுமே - ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றன. அவர்கள் தவறாக அவ்விதம் செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கட்டளை வேதத்தில் எங்குமே இல்லை. அது வேதத்தில் காணப்படவில்லை. பேதுரு... இயேசு சொன்னதை மத்தேயு எழுதிக் கொண்டிருந்த போது... அவர்கள், “நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்' என்று மத். 28:19ல் உரைக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கொள்கின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பட்டப்பெயர்களே, நாமம் அல்ல, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி .... அவர் .... வேதாகம காலங்கள் அனைத்திலும் அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். வரலாற்றில் வழிவழியாக லவோதிக்கேயா (என்னை மன்னிக்கவும்) - ரோமாபுரியிலுள்ள நிசாயா என்னுமிடத்தில் நிசாயா ஆலோசனை சங்கம் நடைபெற்று கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும். 21பெந்தெகொஸ்தே சபை ... இரண்டு குழுக்கள், அவர்கள் பிரிந்து சென்றனர். ஒரு குழு வார்த்தையில், எழுதப்பட்ட வார்த்தையில் நிலைத்து நிற்க விரும்பினது, மற்ற குழுவோ ஒரு முதல் தரமான (classical) சபையை விரும்பினது. அது கான்ஸ்டன்டைனின் அரசாட்சியின்போது நடந்தது. கான்ஸ்டன்டைன் மதப்பற்று கொண்டவன் அல்ல. அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு அஞ்ஞானி. ஆனால் அவன் இருதரப்பினரை இணைக்க விரும்பின் ஒரு அரசியல்வாதி... ரோமாபுரியில் பாதி பேர் கிறிஸ்தவர்கள், பாதி பேர் அஞ்ஞானிகள். எனவே அவன், முதல் தரமான குழு அஞ்ஞானக் கொள்கைகள் சிலவற்றையும் கிறிஸ்தவக் கொள்கைகள் சிலவற்றையும் கைக்கொள்ளும்படி செய்தான். அவர்கள் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டனர். எனவே, வேதாகமத்தை அவமதிக்கும் வண்ணமாக, கத்தோலிக்க சபையானது, தேவன் சபைக்கு, அதன் விருப்பப்படி மாற்றவோ அல்லது எதையும் செய்யவோ அதிகாரம் அளித்துள்ளார் என்று விசுவாசிக்கிறது. பாருங்கள்? எனவே அது உண்மையாயிருக்குமானால், கத்தோலிக்கரைத் தவிர நம்மெல்லாரும் தவறாயிருப்போம் (பாருங்கள்?), கத்தோலிக்க சபை மட்டுமே சரியாயிருக்கும். அப்படியானால் மெதோடிஸ்டு சபை செய்வது சரி, பாப்டிஸ்டு சபை செய்வது சரி, அனைத்து ஸ்தாபனங்களும் செய்வது சரி. பாருங்கள்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியானால் யார் சரி? கத்தோலிக்க சபைக்கு வேதம் கூறியுள்ள எதையும் மாற்றி அமைத்து, “மரியாளே வாழ்க' போன்றவைகளை உபதேசங்களாக செய்துவிட அதிகாரம் இருக்குமானால், மெதோடிஸ்டு சபைக்கு, ”முழுக்கு ஞானஸ்நானம் தவறு, நாங்கள் தெளிப்போம்' என்று கூறுவதற்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியே; ஏனெனில் சபை தனக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றால், எது உண்மையான சபை? மெதோடிஸ்டு சபையா, பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, கத்தோலிக்க சபையா, அல்லது எந்த சபை? பாருங்கள்? 22பெந்தெகொஸ்தே சபை ... இரண்டு குழுக்கள், அவர்கள் பிரிந்து சென்றனர். ஒரு குழு வார்த்தையில், எழுதப்பட்ட வார்த்தையில் நிலைத்து நிற்க விரும்பினது, மற்ற குழுவோ ஒரு முதல் தரமான (classical) சபையை விரும்பினது. அது கான்ஸ்டன்டைனின் அரசாட்சியின்போது நடந்தது. கான்ஸ்டன்டைன் மதப்பற்று கொண்டவன் அல்ல. அவன் தொடக்கத்திலிருந்தே ஒரு அஞ்ஞானி. ஆனால் அவன் இருதரப்பினரை இணைக்க விரும்பின் ஒரு அரசியல்வாதி... ரோமாபுரியில் பாதி பேர் கிறிஸ்தவர்கள், பாதி பேர் அஞ்ஞானிகள். எனவே அவன், முதல் தரமான குழு அஞ்ஞானக் கொள்கைகள் சிலவற்றையும் கிறிஸ்தவக் கொள்கைகள் சிலவற்றையும் கைக்கொள்ளும்படி செய்தான். அவர்கள் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டனர். எனவே, வேதாகமத்தை அவமதிக்கும் வண்ணமாக, கத்தோலிக்க சபையானது, தேவன் சபைக்கு, அதன் விருப்பப்படி மாற்றவோ அல்லது எதையும் செய்யவோ அதிகாரம் அளித்துள்ளார் என்று விசுவாசிக்கிறது. பாருங்கள்? எனவே அது உண்மையாயிருக்குமானால், கத்தோலிக்கரைத் தவிர நம்மெல்லாரும் தவறாயிருப்போம் (பாருங்கள்?), கத்தோலிக்க சபை மட்டுமே சரியாயிருக்கும். அப்படியானால் மெதோடிஸ்டு சபை செய்வது சரி, பாப்டிஸ்டு சபை செய்வது சரி, அனைத்து ஸ்தாபனங்களும் செய்வது சரி. பாருங்கள்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியானால் யார் சரி? கத்தோலிக்க சபைக்கு வேதம் கூறியுள்ள எதையும் மாற்றி அமைத்து, “மரியாளே வாழ்க' போன்றவைகளை உபதேசங்களாக செய்துவிட அதிகாரம் இருக்குமானால், மெதோடிஸ்டு சபைக்கு, ”முழுக்கு ஞானஸ்நானம் தவறு, நாங்கள் தெளிப்போம்' என்று கூறுவதற்கு அதிகாரம் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியே; ஏனெனில் சபை தனக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றால், எது உண்மையான சபை? மெதோடிஸ்டு சபையா, பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, கத்தோலிக்க சபையா, அல்லது எந்த சபை? பாருங்கள்? 23எவராகிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் எங்குமே இல்லை; ஏனெனில் அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. பிதா என்பது நாமமல்ல; குமாரன் என்பது நாமமல்ல; பரிசுத்த ஆவி என்பதும் நாமமல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அதை தான் அப்போஸ்தலர்களும் காலங்கள் தோறும் இருந்தவர்களும் அறிந்து பின்பற்றினர். இப்பொழுது, அடுத்த கேள்வி... நான் கூறினது வேதப்பிரகாரமாக சரி. அது உண்மை. வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தவர்கள், தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கென இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடப்பட்டனர் - அப். 19:5. உண்மை! எனவே வேதப்பிரகாரமாக அதுவே சத்தியம். அதற்கு விரோதமாக எந்த ஒரு பேராயரும், எந்த ஒரு தலைமைப் பேராயரும், எந்த ஒரு ஊழியக்காரனும், வேறு எவருமே ஒரு வார்த்தையும் கூற முடியாது, ஏனெனில் அதுவே சத்தியம். பாருங்கள்? 24அன்றொரு நாள் சிக்காகோவில் இதைக் குறித்து வாக்குவாதம் செய்ய அங்கு நின்று கொண்டிருந்த முன்னூறு போதகர்களைக் கேட்டேன்... நான் ... கர்த்தர் என்னிடம் கூறினார். அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளி நாங்கள் எங்கிருப்போம் என்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் என்னிடம் கூறினார். நான் முன்னூறு திரித்துவ போதகர்களின் முன்னால் நின்று கொண்டு, “இந்த உபதேசத்தில் நான் தவறாயிருந்தால், உங்களில் சிலர் எழுந்து நின்று வேதப்பிரகாரமாக நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்பதை எனக்குக் காண்பியுங்கள் - பாடபுத்தகத்தைக் கொண்டல்ல. நான் போதித்து வருகிற சர்ப்பத்தின் வித்து என்பது போன்ற ஒன்று கிடையாதென்றால், இங்கு வந்து வேதத்தின் மூலமாக அதை எனக்குக் காண்பியுங்கள்” என்றேன். யாருமே அசையவில்லை (பாருங்கள்?), எனெனில் அதை செய்ய முடியாது. அது உண்மை. நான் வித்தியாசப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் அது சத்தியம்; அது வார்த்தை. அங்குதான். அதைக் குறித்து யாரும் வாக்குவாதம் செய்ய முடியாது; அது தேவனுடைய வார்த்தை; அதை எவருமே செய்ய முடியாது. பாருங்கள்? 25இப்பொழுது, “இதை பெற்றிராதவர்கள்... அது சரியா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள, அதை நான் படிக்கட்டும். பாருங்கள்? ”மற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா இல்லையா? மேலும் தொடர்ந்து சென்று வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்கள்?“ நல்லது, நான் விசுவாசிக்கிறேன் - தேவன் தமது ஜனங்களை அழைத்து அவருடைய சபையை நியமித்திருக்கிறார் என்றும், உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்த அனைவரும் அதில் இருப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். வேதாகமம் அவ்விதம் போதிக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் தன் முழு இருதயத்தோடும் சத்தியத்தை அறிந்து கொள்ள அதைத் தேடுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று. தேவனிடத்தில் அன்புகூரும் ஒவ்வொரு மனிதனும் அதைச் செய்வான். ஒரு மனிதன் அறியாமையின் காரணமாக தவறான ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, அவன் பெற்றது தவறான ஞானஸ்நானம் என்பதை அறியாமல் இருந்தால்.... இப்பொழுது, வேதப்பிரகாரமாக இதை என்னால் கூற இயலாது. ஆனால், ஒரு மனிதன் சரியானதை செய்ய அறியாமலிருந்து, தன் அறிவுக்கு எட்டின விதமாக அவன் ஒன்றைச் செய்திருந்தால், தேவன் அதை பாராமல், அவனை எப்படியும் இரட்சிப்பார் என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவனுக்கு... வெஸ்லியின் காலத்தில், சீர்திருத்த காலமாகிய லூத்தரின் காலத்தில், தேவன் கனப்படுத்தி, அவர் கனப்படுத்தினதாக நிரூபித்த அந்த தேவனுடைய மகத்தான மனிதர், அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் அந்த விசுவாசத்தைக் கொண்டவர்களாய் மரித்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 26நான் நம்பவுது என்னவெனில் இன்னும் அநேக காரியங்கள்... இன்று காலை சார்ல்ஸ் ஃபுல்லர் “பழைய பாணியில் எழுப்புதலின் நேரம்” என்னும் வானொலி நிகழ்ச்சியில் பேசினதை கேட்டீர்களா? அவர் எனக்கு மிகவும் பிரியமான வேத போதகர்களில் ஒருவர், இருப்பினும் அவர் மிகவும் அவர் சிறந்த வேதப் போதகர் என்பது என் கருத்து. இன்று காலை அவர் (அவர் தீர்க்கதரிசனத்தைக் குறித்துப் பேசினார் என்று எண்ணுகிறேன்); இன்னும் பெரிய காரியங்கள் வரப் போகின்றன என்றும், சபை இதுவரைக்கும் அறியாத காரியங்கள் ஜனங்களுக்கு வெளிப்படும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு “ஆமென்” என்றேன். இன்னும் ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறது என்றும், இந்நாட்களில் ஒன்றில் அது ஒரு குறுகிய காலத்திற்கு - ஒருக்கால் ஒரு சில மாதங்களுக்கு - பூமியை வெள்ளம் போல் நிரப்பும் என்றும் நான் நம்புகிறேன். ஒரு பெரிய வெளிச்சம் வரவிருக்கிறதென்று நான் நம்புகிறேன். எந்த ஒரு நபரும் தனக்குள்ள விசுவாசத்திலும் உத்தமத்திலும், தனக்குக் கிடைக்கப் பெற்ற வெளிச்சத்தில் நடந்தால் இரட்சிக்கப்படுவார் என்று நான் நம்புகிறேன். 27ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் வந்த போது, அப்பொழுது அவர்களுக்கிருந்த வெளிச்சத்தில் அவர் கண்டார் என்று உங்களுக்கு ஞாபகமுள்ளதா? என்ன நடந்ததென்று நினைவில் உள்ளதா? “அந்த ரோம் நூற்றுக்கு அதிபதி நல்லவன் அல்லவா? அவன் நமது பட்டினத்தைக் கட்டினான் - நமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான், (இவையனைத்தும் அவன் செய்தான்) - அவனுக்கென்று கேட்கப்படும் ஆசிர்வாதங்களுக்கு அவன் தகுதியுள்ளவன்”. பாருங்கள், தேவன் புரிந்து கொள்ளும் பிதாவாயிருக்கிறார்; அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையில் வெளிச்சத்தைக் காண்கிறீர்களா அல்லது காணவில்லையா என்று அவருக்குத் தெரியும். இப்பொழுது, இந்த கேள்விக்கு சரியான விடை, சரியான ஞானஸ்நானம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதற்கு மாறாக வேறு வழியில் ஞானஸ் நானம் பெற்றவர்கள், தங்கள் இருதயத்தில் சுயநலமில்லாமல், “நல்லது, அதனுடன் நான் விளையாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள்... அது அந்த நபருக்கும் தேவனுக்கும் இடையே உள்ள ஒன்று. ஆனால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியயாமலிருந்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது என் கருத்து. அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. அதன் பேரில் நாம் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும், ஆனால் கூடுமானால், இக்கேள்விகள் அனைத்தையும் நாம் காண முயல்வோம். 28தயவுகூர்ந்து எபிரேயர் 6:4 முதல் 6 வசனங்களையும் எபிரேயர் 10:26- 29 வசனங்களையும் விளக்கித் தருவீர்களா? இது பரிசுத்த ஆவி பெற்ற மக்களை குறிப்பிடுகிறதா அல்லது பரிசுத்தமாக்கப்பட்டவர்களையா என்பதையும் விளக்குங்கள்; வித்தியாசம் என்னவென்று விளக்குங்கள். நல்லது. அந்த நபர் குறிப்பிட்டுள்ள எபிரேயர் 6:4லக் காண்போம். வேதாகமக் கேள்விகள் என்றால் எனக்கு மிகவும் பிரியம். அது உங்களிலிருந்து ஏதோ ஒன்றை இழுத்து வெளி கொணர்கிறது. உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கப் பெறுகிறது; மற்றபடி நீங்கள் அதை பெற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் மற்றவர்களின் கருத்தக்களைத்தான், அவர்கள் இருதயத்தில் உள்ளதைத் தான். நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, அங்கே எபிரேயர் 10 உள்ளது, இங்கு எபிரேயர் 6:4 உள்ள து. சரி. ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிற படியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எபி. 6:4-6 அது ஒன்று. இப்பொழுது எபிரேயர் 10:26. சரி, எபிரேயர் 10ம் அதிகாரம் 26ம் வசனம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால். பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள். எபி. 10: 26-29. 29இவையிரண்டும் ஒரே காரியத்தை குறித்து உரைக்கின்றன. இப்பொழுது, இந்த கேள்வி கேட்ட நபருக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் எபிரேயர் 6:4ஐக் கவனிப்பீர்களானால், “ஒரு தரம் பிரகாசிக்கப்படுபவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று அது உரைக்கிறது. அது இப்பொழுது நாம் வாசித்த மற்ற வேதபாகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. நீங்கள் பிரகாசிக்கப்பட்டு, அந்த பிரகாசிப் பிக்கப்படுதலை விட்டு விலகிச் செல்வீர்களானால், அந்த நபர் மறுபடியும் தன் இடத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பாருங்கள்? இப்பொழுது, எபிரேயர் நிரூபம், இந்த புறக்கணிப்பினால் கிடைக்கப் பெறும் தண்டனையையே எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவை புறக்கணித்தல், வேதத்தின் வெளிச்சத்தைப் புறக்கணித்தல் என்பது உலகிலுள்ள மிகப் பயங்கரமான காரியங்களில் ஒன்றாகும். 3062... இப்பொழுது, கவனியுங்கள், “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்”. பாருங்கள்? “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், (கவனியுங்கள்) பரம ஈவை ருசிபார்த்தும்”. அவர்கள் அந்த ஒரத்துக்கு வந்து விட்டனர்: “பரம ஈவை ருசிபார்த்தும்”. இப்பொழுது, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு வரவில்லை என்பதை கவனியுங்கள். பாருங்கள்? அவர்கள் அதற்கு பிரகாசிப்பிக்கப்பட்டனர். “பரம ஈவை ருசி பார்த்து (பாருங்கள்?) பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டு (அதை ருசி பார்த்ததன் மூலம்), தேவனுடைய நல்வார்த்தையையும் (அதன் ஒரு பாகத்தை பாருங்கள்?) இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது.... 31இப்பொழுது, எபிரேயர் 10ம் அதிகாரம் அதற்கான நியாயத்தீர்ப்பை அளிக்கிறது. “மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணினவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்? உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் இவ்விரண்டு வேதபாகங்களையும் ஒன்று சேர்த்த பின்பு, இப்பொழுது அவ்விதம் செய்த ஒரு மனிதனை வேதத்திலிருந்து நாம் எடுத்துக் கொண்டு பார்ப்போம். இப்பொழுது, இன்றைய சபை அனைத்தும் முன்னடையாளத்தின் நிறைவேறுதலாயுள்ளது. அது நமக்குத் தெரியும். ஒரு முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் உள்ளன. இஸ்ரவேல் ஜனங்கள் பாலஸ்தீனாவிலிருந்து - எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்குப் பிரயாணம் செய்தல், ஆவிக்குரிய சபை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு பிரயாணம் செய்வதற்கு முன்னடையாளமாயுள்ளது.... நீங்கள் எல்லோரும் அதை ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லையா? வேதசாஸ்திர பண்டிதர் அனைவருமே அது முன்னடையாளம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். 32அவர்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். எகிப்துதான் உலகம். அவர்கள் அதை விட்டு வெளி வந்து, சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானத்தின் மூலம் பிரிவினையின் தண்ணீர்கள் வழியாய் கடந்து, களிகூர்ந்து தேவனைத் துதித்தவர்களாய் மற்ற பக்கத்துக்கு வந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் சென்றனர். நல்லது, நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கு சற்று முன்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு முன்பு; அது சில நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டிய ஒன்று. பத்து அல்லது பதினொன்று நாட்களுக்கு அதிகமாக இருக்க வழியில்லை, ஏனெனில் அது நாற்பது சொச்சம் மைல்கள் தூரத்தில் இருந்தது. அவர்கள் நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத் துக்குள் பிரவேசித்திருப்பார்கள், நமது பிரயாணத்தில் நாம் நடந்து செல்லும் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் கடந்திருப்பார்கள். அவர்கள் வெளியே வந்து, சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர், அவர்களுக்குப் பின்னே வந்த பார்வோனின் சேனை மூழ்கினது. அவர்களுடைய சத்துருக்களிலிருந்து அவர்கள் நீங்கலாகி, வனாந்திரத்தில் பிரயாணம் செய்து காதேஸ்பர்னேயாவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையை அடைந்தனர். அங்கே அவர்கள் தோல்வியடைந்தனர். ஏன்? அவர்கள் ஏன் தோல்வியடைந்தனர்? இப்பொழுது, மோசே பத்துக் கோத்திரத்தினரிடமும் பேசி, அந்த தேசம் எவ்விதம் உள்ளது என்று வேவு பார்க்க ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியை அனுப்பப் போவதாக கூறினான். 33இன்று காலையில் நீங்கள் வந்துள்ள இடத்துக்கு அது ஒத்ததாய் உள்ளதல்லவா? இன்றைக்கு நீங்கள் - சபையானது லூத்தரின் மூலம் நீதிமானாக்கப்படுதலைக் கடந்து, மெதோடிஸ்டின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதலைக் கடந்து வந்து, இப்பொழுது வாக்குத்தத்தத்தின் நேரத்தை அடைந்துள்ளது. அந்த வாக்குத்தத்தம் ஆவியின் அபிஷேகமே. அது பழைய ஏற்பாடு முழுவதிலும் புதிய ஏற்பாட்டிலும் கூட (பாருங்கள்?) வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது; “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” (லூக். 24:49). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அவ்வாறு கூறினான். அதுதான் வாக்குத்தத்தம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் என்பது இந்த பரிசுத்த ஆவியின் தேசத்தில் வாழ்வதேயாகும். ஆவியின் வல்லமையில் வாழ்வதே தேவன் சபைக்கு அளித்துள்ள வாக்குத்தத்தம். அது வேறொரு உலகம்; அது வேறொரு தேசம். வாக்குத்தத்தத்தைப் பெற்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்வதற்கு, நீங்கள் முன்பிருந்த நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நீங்கள் தரிப்பிக்கப் பட்டு, பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது பெலனடைவீர்கள்” என்னும் வாக்குத்தத்தத்தை நினைவுகூருங்கள். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காலங்கள் தோறும் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்று பேதுரு கூறினான்.... இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டு வந்துள்ளதை நீங்கள் படிப்படியாக பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காணலாம், அதன் பிறகு அவர்கள் வாக்குத்தத்தத்தில் பிரவேசித்தனர். 34வெளியே புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டனர். அதன் பிறகு மோசே வேவு பார்ப்பதற்கென்று ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனை அனுப்பினான். அவர்களில் சிலர் திரும்ப வந்து.... நல்லது. அவர்களில் சிலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு செல்ல மறுத்தனர், அவர்களில் இருவர் மாத்திரமே சென்றனர். அவர்கள் திரும்பி வந்த போது, இரண்டு பேர் தூக்க வேண்டிய அவ்வளவு கனமான திராட்சைக் குலையை கொண்டு வந்தனர். அவர்கள் திராட்சை பழத்தை ருசிபார்த்ததில்லை. அவர்கள் வனாந்தரத்தில் இருந்தனர்; எனவே அது பழங்கள் தோன்றுதவற்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவினாலும், காடைகளினாலும் போஷிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அந்த தேசத்துக்குள் பிரவேசித்து, இருவர் தூக்க வேண்டிய அவ்வளவு பெரிய திராட்சைக் குலையைக் கொண்டு வந்தனர். இவர்கள் தேசத்துக்குள் பிரவேசித்து அங்கிருந்து திரும்பி வந்து, மற்றவர்களுக்கு இந்த திராட்சை பழங்களை ருசிபார்க்கக் கொடுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் திரும்பி வந்த பிறகு, திராட்சை பழங்களை ருசி பார்த்ததன் நிமித்தம் களிகூருவதற்கு பதிலாக, தங்கள் கோத்திரத்தாரிடம் சென்று, “ஓ, பெலிஸ்தியர் அல்லது ஏத்தியர், அல்லது பெர்சியரின் பெரிய மதில் சூழ்ந்த பட்டினங்களை நாங்கள் கண்டோம். இங்கே எல்லா விதமான ஜாதிகளும் உள்ளனர். அவர்கள் இராட்சதர்கள். அவர்களுக்கு முன்பாக நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம். அந்த தேசத்தை நம்மால் கைப் பற்ற முடியாது. மோசே, எங்களை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என்றனர். பாருங்கள்? அவர்கள் எல்லோரும் - அவர்கள் ஒவ்வொருவரும் - வனாந்தரத்தில் அழிந்து போனதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் எல்லைக்கோடு விசுவாசிகள். அவர்கள் உண்மையான காரியம் வரைக்கும் வந்து வாக்குத்தத்தத்தைக் கண்டு, அங்கு சென்று வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று எண்ணினர். 35இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதலின் வழியாக வந்தவர்கள் இன்றைக்கு அந்நிலையில் தான் உள்ளனர். பாருங்கள்? “தன்னைப் பரிசுத்தஞ் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் காலின் கீழ் மிதித்து”. பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள் ஓரிடத்தை அடைந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கண்டு, திரும்பிச் சென்று அது மதவெறி. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வகுப்புகளிலிருந்து நாங்கள் துரத்தப் படுவோம், எங்கள் இடங்களிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம். எங்கள் சபைகளிலிருந்து நாங்கள் துரத்தப்படுவோம், எங்களால் அதை செய்ய முடியாது (பாருங்கள்?), ஏனெனில் எங்கள் சபை போதகத்துக்கு அது முரணாயுள்ளது' என்கின்றனர். பாருங்கள்? அவர்களை இவ்வளவு தூரம், வாக்குத்தத்தத்தினால் முத்திரிக்கப்படும் இடம் வரைக்கும் கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அங்கிருந்து நடந்து திரும்பி சென்று விடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவது முழுவதும் கூடாத காரியம் என்று அவர் கூறியுள்ளார். பாருங்கள், பாருங்கள்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றவர்களை அல்ல. 36ஞாபகம் கொள்ளுங்கள், அந்த இருபத்தைந்து லட்சம் ஜனக்கூட்டத்தில், யோசுவா காலேப் இருவர் மட்டுமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்றனர். ஏனெனில் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் ஏற்கனவே சென்று ஆசிர்வாதத்தைப் பெற்று திரும்பி வந்தனர். அவர்கள், “நம்மால் அதைக் கைப்பற்ற முடியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்திருக்கிறார்” என்றனர். அவர்கள் அதில் நிலைகொண்டிருந்தனர். ஏன்? மற்றவர்கள் சூழ்நிலையை நோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் யோசுவாவும் காலேபும், “அந்த தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்து விட்டேன், அதை போய் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று தேவன் உரைத்ததை நோக்கிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு ஜனங்கள், “ஓ, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டால், நான் அந்நிய பாஷை பேசினால் அல்லது தீர்க்கதரிசனம் உரைத்தால், என் சபையில் நான் சாட்சி கூறி கூச்சலிட்டால், அவர்கள் என்னைப் புறம்பாக்குவார்கள்” என்கின்றனர். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்! 37நீங்கள், “நல்லது, இப்பொழுது நான் உங்களிடம் கூறுகிறேன், நான் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன், நான் நல்ல, சுத்தமான பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்” எனலாம். அது உண்மைதான். ஆனால் நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டிய இடத்துக்கு, எல்லைக்கோட்டுக்கு வந்திருக்கிறீர்கள். அதை நீங்கள் மறுதலிப்பீர்களானால் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டவர்களை கூடாத காரியம்“. பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், ஒரு மனிதன் நீதிமானாக் கப்படுதலின் வழியாகக் கடந்து வந்து, “எனக்கு வார்த்தையைப் பிரசங்கிக்க விருப்பமுள்ளது என்று நினைக்கிறேன் என்கிறார். அவர் இரசிக்கப்படுகிறார். அவர், ”நான் பாவம் செய்து அலுத்துப் போய் விட்டேன்' என்கிறார். சரி. அவர் இன்னும் புகைபிடித்துக் கொண்டிருக்கிறார், ஒருக்கால் அவர் இச்சிக்கலாம், அப்படி ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கக் கூடும். சற்று கழிந்து அவர், “தேவனே , இது கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல, முக்கியமாக ஒரு போதகருக்கு - பெண்களைத் தவறான வழியில் பார்ப்பதும், புகை பிடிப்பதும் என்கிறார். அல்லது, ”நான் அந்த ஆட்களுடன் சேர்ந்து கொண்டு சமுதாய மதுவாக 'பீர்' குடிக்கிறேன் - என் சபையோருடனும் கூட. அது சரியென்று தோன்றவில்லை. கர்த்தாவே, என்னைப் பரிசுத்தப்படுத்தும்' என்கிறார். அப்பொழுது கர்த்தர் அவரை பரிசுத்தப்படுத்தி, இச்சையையும் மற்றெல்லாவற்றையும் அவரிடத்திலிருந்து எடுத்துப் போடுகிறார். அப்பொழுது அவர் பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு பாண்டமாக ஆகிவிடுகிறார். அப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதை அவருக்கு முன்பாக வைக்கிறார். அதைச் செய்வதற்கு அவர், தான் இருக்கின்ற அந்த கூட்டம் ஜனங்களை விட்டு வெளி வர வேண்டும். அங்குதான் அவர் தன் உண்மையான நிறத்தைக் காண்பிக்கிறார், அவர் அதிலிருந்து பின்வாங்குகிறார். அவர் அவ்விதம் பின்வாங்கும் போது என்ன செய்கிறார்? அவரைப் பரிசுத்தமாக்கின இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, அது தன்னை அங்கு கொண்டு செல்ல இயலாதென்று கருதி, அதைக் காலின் கீழ் மிதித்துப் போடுகிறார். அப்படிப்பட்டவர் இரட்சிக்கப்படுவது கூடாத காரியம். அப்படியானால் அது என்ன செய்கிறது? அவரை பட்சிக்கும் கோபாக்கினைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் கொண்டு செல்கின்றது. இது தெளிவாகி விட்டதென்று நம்புகிறேன். இல்லையென்றால் அதை வேறொரு நேரத்தில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இங்கு என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன. 38சகோ. பிரான்ஹாமே, பரி. யோவான் 21:15 முதல் 17 வசனங்களில் இயேசு பேதுருவிடம், அவன் தம்மிடத்தில் அன்பாயிருக்கிறானா என்று கேட்டு அவருடைய ஆட்டுக் குட்டிகளை மேய்க்கச் சொல்லிவிட்டு, அதன்பிறகு என் ஆடுகளை மேய்ப்பாயாக' என்று கூறினதன் அர்த்தம் என்ன? 17ம் வசனத்தில் அவர் மறுபடியும், 'என் ஆடுகளை மேய்ப்பாயாக“ என்கிறாரே? நல்லது. இதுதான் அது. பாருங்கள், கிறிஸ்து மேய்ப்பர். அவர் போக வேண்டிய நேரத்தில், தாம் போஷித்துக் கொண்டிருந்த ஆடுகளை, தமது மந்தையை, தமது சபையை, ஒப்படைத்துச் செல்கிறார் .... பாருங்கள் தமது மந்தையை தொடர்ந்து போஷிக்கும்படி அவர் தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டுச் செல்கிறார் - ஒரு மேய்ப்பனாக இருந்து, ஆடுகளைப் போஷிக்கும்படி 39வேறு விதமாக கூறுவோமானால், இது இப்படி உள்ளது. இங்கு நீங்கள் பார்ப்பீர்களானால்... இக்காலை வேளையில் அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆடுகளுக்கு ஆடுகளின் ஆகாரம் கொடுத்தால் தான் அவை வளரும். நீங்கள் ஒரு பெரிய 'ஹாம்பர்கரை பொறித்து, அதை ஒரு ஆட்டுக்குக் கொடுத்தால், அதை உண்டு அதனால் வளர முடியாது. ஏனெனில், பாருங்கள். அது- அது ஆட்டின் ஆகாரமல்ல. பாருங்கள்? நீங்கள் ஒரு நல்ல டீ போன் ஸ்டிக்கை பொறித்து. அதை ஒரு ஆட்டுக்கு கொடுத்தால், அது - அது ஆட்டின் ஆகாரம் அல்ல. அதனால் அதை தின்ன முடியாது. அவ்வளவுதான், ஏனெனில் அது ஒரு ஆடு. ஆடுகள் ஆடுகளின் தீவனத்தையே விரும்பும். நல்லது. அப்படியானால், நீங்கள் தேவனுடைய மந்தையை போஷிக்கும் போது, அவைகளை மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தினால் போஷிக்காதீர்கள்; அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள். அதைக் கொண்டுதான் ஆடுகள் வளரும். வார்த்தையைப் போஷியுங்கள்! ஒரு மேய்ப்பனாக, உண்மையான மேய்ப்பனாக இருங்கள். “என் ஆடுகளை போஷிப்பாயாக” (ஆங்கிலத்தில் “Feed my sheep” என்பதை தமிழில் “என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று மொழி பெயர்த்துள்ளனர் - தமிழாக்கியோன்). ஆட்டுக்குட்டிகள் சிறியவை. ஆடுகள் பெரியவை. எனவே குட்டிகளானாலும் பெரியவைகளானாலும், தேவனுடைய மந்தையைப் போஷியுங்கள்! பாருங்கள்? அவைகளை வார்த்தையினால் போஷியுங்கள்! வசனமே (பாருங்கள்?) சத்தியம்! ”மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று இயேசு கூறியுள்ளார் (மத். 4:4). அது சரியா? அப்படியானால் மனிதர் பிழைக்க வேண்டுமானால், அவர்கள் தேவனுடைய மந்தையாக - இந்த சபையாக - இருப்பார்களானால், அவர்கள் வார்த்தையினாலும் தேவனுடைய மன்னாவிலும் வளர வேண்டியவர்களாயிருக்கின்றனர். இதுவே அவருடைய மன்னா! 40வேதத்திலே - சபைக் காலங்களைக் குறித்து தியானித்த போது நாம் பார்த்தோம் - இயேசு மறைவான மன்னாவாயிருக்கிறார்; கிறிஸ்துவே சபையின் மன்னா. மன்னா என்பது என்ன? பழைய ஏற்பாட்டிலே மன்னா ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து புதிதாக விழுந்து, பிரயாணப்பட்டு சென்று கொண்டிருந்த சபையை போஷித்து வந்தது. அது சரியா? புதிய ஏற்பாட்டில் மறைவான மன்னா எது? “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது (மறைவாயிருத்தல்), நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பேன். கிறிஸ்துவே வானத்திலிருந்து ஒவ்வொரு நாளும் தேவனிடத்திலிருந்து புதிதாக வரும் மறைவான மன்னாவாயிருக்கிறார் - ஒவ்வொரு நாளும். நீங்கள். நல்லது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேவனைக் குறித்த ஒரு பெரிய அனுபவம் எனக்கு உண்டாயிருந்தது' என்று கூற முடியாது. இப்பொழுது என்ன நடக்கிறது? பாருங்கள்? ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு புது ஆசிர்வாதம். புதிதான ஒன்று தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. மறைவான மன்னா - கிறிஸ்து - வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. நாம் கிறிஸ்துவாகிய இந்த மன்னாவைப் புசித்து, மறுபக்கத்திலுள்ள அந்த தேசத்தை அடையும் வரைக்கும் அவர் நம்மை போஷித்து வருகிறார். 41அவர் என் ஆடுகளை போஷிப்பாயாக என்று கூறினதன் அர்த்தம் இதுவே. இதைக் குறித்தே நாம் பேசிக் கொண்டிருந்தால், மற்ற கேள்விகளுக்கு நம்மால் சொல்ல முடியாது. இது ஒரு நல்ல கேள்வி. கிறிஸ்து மன்னாவாக, ஆடுகளின் ஆகாரமாக இருக்கிறார் என்பதைக் குறித்து பேசுவது எனக்கு பிரியம். அவர்களைக் கிறிஸ்துவினால் அவருடைய வார்த்தையிலிருந்து போஷியுங்கள். பாருங்கள்? கிறிஸ்துவின் வார்த்தையை, அது இங்கு எழுதப்பட்டுள்ள விதமாகவே எடுத்துக் கொண்டு, அதை ஆடுகளுக்குக் கொடுங்கள். ஒ, அவர்களுக்கு 'ஹாம்பர்கர் - தேவை. என்று யார் கூறினாலும் அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தேவையானது இந்த வேதாகமத்தில் உள்ளது. அதுதான்! இதுவே ஆடுகளின் ஆகாரம். இதுதான் அவர்களை வளரச் செய்யும் பரிசுத்த ஆவி, இதுவே அவருடைய வார்த்தை. அவருடைய கட்டளை. வார்த்தை ஒரு விதை விதையானது செடியைத் தோன்றச் செய்கிறது; அந்த செடியை நாம் புசிக்கிறோம். பரிசுத்த ஆவி வளரச் செய்யும் இந்த செடியைத்தான் சபையானது புசிக்கிறது. பரிசுத்த ஆவி சபையைப் போஷித்து தேவனுடைய சமுகத்தில் களிகூரும் படி செய்கிறது. ஜனங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, பரிசுத்த ஆவி அவர்கள் மூலம் கிரியை செய்ய விட்டுக் கொடுக்கின்றனர். அப்பொழுது பரிசுத்த ஆவி, அவர்கள் என்ன செய்வார்கள் என்று தேவன் வாக்களித்ததை அவர்களுக்கு அளிக்கிறார். தேவன் தமது சபை வளர்ந்து வருவதைக் காண்கிறார். எனவே ஆடுகள் நன்றாக போஷிக்கப்படுகின்றன, பரிசுத்த ஆவி அதன் மூலம் மகிமைப்படுகிறார். பாருங்கள்? அதுதான். “என் ஆடுகளைப் போஷிப்பாயாக”. சரி. இது மாத்திரமல்ல, இன்னும் வேறெதாகிலும் இருந்தால், எனக்கு சற்று பின்பு தெரியப்படுத்துங்கள். 42சகோ. பிரான்ஹாமே, சிறிது நேரத்துக்கு முன்பு நான் ஜெபவரிசையின் வழியாக வந்த போது அபிஷேகம் பெற்ற கரங்கள் என் மேல் வைக்கப்பட்டு, இரட்சிக்கப்படாத என் கணவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் கொல்லப்படுவது போல ஆட்கொள்ளப்பட்டேன். அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது உறுதியான அடையாளமா? நல்லது. இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு பெண்ணாயிருக்க வேண்டும். சகோதரியே, அவர் இரட்சிக்கப்படுவார் என்பதற்கு இது நிச்சயமான அடையாளம் என்று நான் கருதமாட்டேன் , இருப்பினும் தேவன் அவரை இரட்சிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, ஆனால்... “இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று உங்களால் கூற முடியுமா?” என்று கேட்பாயானால், அதைக் குறித்து ஜாக்கிரதையாயிரு (பார்?) ஏனெனில், பார், பரிசுத்த ஆவி உன்னை ஆசிர்வதித்திருக்கக் கூடும், ஏனெனில் நீ கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டாய். பார்? 43கிறிஸ்து பாவமுள்ள சபைக்காக சிலுவைக்குச் சென்றது போல, நீ பாவமுள்ள உன் கணவருக்காக நிற்பதற்காக இங்கு வந்தாய். பார்? நீ செய்தது ஒரு பெரிய காரியம். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், தேவன் அதை செய்வாரென்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பேன் (பார்) - தேவன் அதை செய்வாரென்று. ஏனெனில் அவர் அந்த ஆசிர்வாதத்தை கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் - அது கூடுதலாக தேவன் உனக்குக் கொடுத்த ஒன்று. அவர் உன்னை ஆசிர்வதித்ததனால், அது உனக்கு நல்லுணர்வை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அது இவ்விதம் உள்ளது. உதாரணமாக, நீ சபையில் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்; அர்த்தம் உரைப்பவர் இல்லாமல், நீ சபையில் அந்நிய பாஷை பேசக் கூடாது. ஆனால் நீ அந்நிய பாஷை பேசி, அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால்.... ஏன், உபயோகி... நீ... நீ வீட்டிலோ அல்லது வேறெந்த இடத்திலோ ஜெபத்தில் தரித்திருக்கும் போது; அந்நிய பாஷையில் பேசலாம். ஏனெனில், “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் (1 கொரி. 14:4). அது அவனுக்கு ஆறுதலை அளிக்கிறது. பார்? அவனுக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. ஏனெனில் அவன் அங்கு நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, முதலாவதாக என்ன தெரியுமா, பரிசுத்த ஆவி அவன் அல்லது அவள் மேல் வருகிறார், அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகின்றனர். அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுடைய ஆத்துமா மகிழ்ந்து களிகூருகின்றது. பார்? நீ ஏறெடுத்த ஜெபத்துக்கு தேவன் பதிலளிப்பார் என்பதற்கு அது அடையாளமல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நீ சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. அது ஒரு ... அவர் உன்னை அறிந்திருக்கிறார்; அவர் உன்னோடு கூட இருக்கிறார் என்பதன் அடையாளம் அதுவே. இதற்கும் பொருந்தும் - பரிசுத்த ஆவியானவர் உனக்கு ஆசிர்வாதத்தை அருளுதல். 44இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு. அதுவே நான் கடைசி முறையாக அந்நிய பாஷையில் பேசினது என்று நினைக்கிறேன். நான் .... இது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்பொழுது நான் இல்லினாய் நகரில் இருந்தேன். சீயோன் பட்டினத்திலுள்ள ஜெப வரிசைக்கு என்னை அழைத்துச் செல்ல பில்லி வந்திருந்தான். என் இருதயத்தில் பாரம் தோன்றினது. எனவே நான் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினேன். நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, பில்லி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான், “பில்லி, என்னால் இப்பொழுது வர முடியாது என்றேன். அவன் வெளியே சென்று உட்கார்ந்து கொண்டான். நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், என் இருதயம் அதிகமாக பாரமடைந்திருந்தது. அந்த நிலையில் என்னால் சபைக்குச் செல்ல முடியவில்லை. பாருங்கள். வழக்கமாக அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அளித்து நடக்கப் போகும் ஒன்றை எனக்குக் காண்பிப்பார். ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்யவில்லை. அந்த அறையில் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ ஒருவர் கதவண்டையில் நின்று கொண்டு .... அது வெளி நாட்டு மொழியைப் போல் தொனித்தது, ஜெர்மன் மொழி, டட்ச் மொழி, அப்படி ஏதோ ஒன்று. அது மிகவும் வேகமாகவும் அர்த்தம் புரியாமலும் இருந்தது. நான் மறுபடியும் கவனித்துக் கேட்டேன். நான், “நல்லது. யாரோ ஒருவர் ஜெர்மன் மொழியில் அந்த விடுதி முதலாளியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் போலும். அவர் அவருக்கு பதில் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டேன். நான் ஜெபம் பண்ணி முடித்து, நாற்காலியில் இப்படி சாய்ந்து கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அவர் பேசிக் கொண்டே போனார். நான், “ஏன் யாரும் அவருக்கு பதில் கொடுக்கவில்லை?” என்று நினைத்துக் கொண்டு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். “இது விசித்திரமாயுள்ளதே” என்று எண்ணினேன். 45கீழே சாலையில் எடை போடும் கருவி ஒன்றிருந்தது. அங்கிருந்த ஒருவன் ஒருவனைப் பார்த்து, “ஓட்டிக் கொண்டு போ என்றும், மற்றொருவனிடம், ”ஒட்டிக் கொண்டு எடைக் கருவின் மேலே வா“ என்றும் கூச்சலிடும் சத்தம் கேட்டது. நான் திரும்பி அந்தப் பக்கம் பார்த்தேன். எனக்கு ஏதோ ஒரு உணர்ச்சி ... பார்க்கப் போனால், நான்தான் அவ்விதம் பேசிக் கொண்டிருந்தேன். அது நான் . நான் அமைதியாக இருந்தேன், எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் கட்டுக்கு மீறி பேசிக் கொண்டிருந்தேன், ஆனால் நான் பேசினது ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நான் .... என் வாய் அசைந்து கொண்டிருந்தது, நான் ஏதோ ஒருவிதமான மொழியை - பேசிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் அமைதியாக இருந்தேன். சற்று கழிந்து அது நின்று போனது. அது நின்றபோது, ஒ என்னே, எனக்கு கூச்சலிட வேண்டும் போல் தோன்றினது. நான் மிகவும் சந்தோஷமாயிருந்தேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை, பாரம் என்னை விட்டு நீங்கினது. எனவே நான் பில்லியைக் கூப்பிட்டு, சபைக்குச் சென்றேன். நான் சபைக்குச் சென்ற போது .... அப்பொழுது திரு. பாக்ஸ்டர் கூட்டம் ஒழுங்கு செய்வதற்கு மேலாளராக பணியாற்றினார். அவர் பாடிக் கொண்டு, காத்துக் கொண்டிருந்தார். நான் அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக அந்த இடத்தை அடைந்தேன். தாமதமாகி விட்டது என்று அவரிடம் கூறினேன். நான் அழுது கொண்டிருப்பதை அவர் கண்டார். அவர் என்ன விஷயம்?“ என்று கேட்டார். 46நான் “ஒன்றுமில்லை” என்றேன். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெண் அரங்கத்தின் பின்வழியாக வந்து பின்னால் உள்ள இருக்கையில் அமரவிருந்தாள். நாங்கள் என்ன நடந்ததென்று அறிந்து கொள்ள அவளிடம் கேட்ட பொழுது, அவள் இரட்டை பட்டினத்திலிருந்து (செயின்ட் பால் அல்லது மினியாபோலிஸ், அந்த இரண்டு பட்டினங்களில் ஏதோ ஒரு பட்டினத்திலிருந்து) சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தாளாம்.... அவள் காச நோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர தைரியப்படவில்லை, அவளுடைய சுவாசப் பைகள் மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தது - பசையைப் போலிருந்தது. எனவே ஒரு சில சகோதரர் ஒரு பழைய ஷெவர்லே காரை எடுத்து, அதன் பின் இருக்கையை கழற்றி விட்டு, அந்த இடத்தில் எப்படியோ ஒரு கட்டிலைப் பொருத்தி - அல்லது ஒரு படுக்கையை - அவளை அதில் கிடத்தி, கூட்டத்துக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவள் வரவேண்டுமென்று விரும்பினாள். மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு விட்டனர். சாலையில் வந்து கொண்டிருந்த போது... ஒரு சிறு குலுக்கல் ஏற்பட்டாலும் அவள் இரத்தம் கக்குவாள் என்று அவர்கள் அவளிடம் கூறி யிருந்தனர். அவள் அதே விதமாக இரத்தம் கக்கத் தொடங்கினாள். அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அந்த பரிசுத்தவான்கள் அவக் சுற்றிலும் நின்று கொண்டு அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவள் வெறும் ... ஒவ்வொரு முறையும் அவள் சுவாசித்த போது, இரத்தம் கொப்பளித்துக் கொண்டு அவள் வாயின் வழியாக இப்படி வெளி வந்தது. அப்பொழுது திடீரென்று அவள் உடனே சுகமடைந்தாள். அவள் குதித்தெழுந்து களிகூர்ந்தவளாய் சபைக்கு வந்தாள். அவள் அங்கு பின்னால் இருந்து கொண்டு, சாட்சி கூறிக் கொண்டிருந்தாள். “அது எந்த மணி நேரத்தில் நடந்தது?” என்று கேட்டேன். அவள் அதை உரைத்த போது, அதே மணி நேரத்தில் தான் என் மூலமாக அந்த பேச்சு நடந்து கொண்டிருந்தது. நல்லது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீக்காக அங்கு வேண்டுதல் செய்து கொண்டிருந்தார். நான் கூறுவது விளங்குகிறதா? 47இப்பொழுது, வேதம் அதை உரைக்கிறது. சில நேரங்களில் நாம் வார்த்தைகளை முணுமுணுக்குகிறோம்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அங்கு பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, நாம் புரிந்து கொள்ளாத காரியங்களுக்காக வேண்டுதல் செய்கிறார். பாருங்கள்? அந்த ஸ்திரீ உடனே சுகமடைந்தாள். அவள் நீண்ட காலமாக எங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அவள் பரிபூரண சுகமடைந்தாள், அவள் சுகமடைந்து விட்டாள். இப்பொழுது பாருங்கள், அவை எங்குள்ளன என்று தேவன் அறிவார். அதைச் செய்ய அவருக்கு ஒரு முறை உண்டு. பாருங்கள்? அதை அவர் தமது சொந்த வழியில் செய்கிறார். அவர் என்ன செய்கிறாரோ அதற்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அந்த நிலையை நீங்கள் அடையும் போது, மூடபக்தி வைராக்கியத்தையும் சத்தியத்தையும் பிரிக்கும் குறுகிய கத்தி முனையில் நிலைத்திருப்பது கடினமான காரியம். இப்பொழுது, நீங்கள் கவனமாயிராவிடில், பிசாசு உங்களை மூடபக்தி வைராக்கியத்துக்குள் கொண்டு சென்று விடுவான், அப்பொழுது நீங்கள் உங்கள் அனுபவத்தையும் மற்றெல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யும்போது, நீங்கள் திடமான சத்தியத்தில் நிலைத்திருக்க இயலாது. வேதத்தில் கவனமாயிருந்து அதில் நிலைத்திருந்து, சாந்த குணத்தோடும் தாழ்மையோடும் இருங்கள். நீங்கள் அதில் நிலை கொண்டிருந்தால், தேவன் உங்களை பாதையின் வழியாக கல்வாரியை நோக்கி, கொண்டு சென்று கொண்டேயிருப்பார். 48சகோதரியே, அது உன்னுடைய விவகாரத்தைப் போன்ற ஒன்று. தேவன் உனக்கு ஆசிர்வாதத்தை அருளினார். நீ உன் விருப்பத்தை அடைவாய் என்பதற்கு அது ஒருக்கால் உறுதியான சாட்சியாக இருக்கக் கூடும். ஆனால் நான் அதன் மேல் மாத்திரம் சார்ந்திருந்து (பாருங்கள்?) “கர்த்தர் என்னிடம் கூறினார் என்று சொல்ல மாட்டேன். எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் எடுத்துரைத்த காரணம், நீ தொடர்ந்து விசுவாசிப்பதற்கு அது உன்னை உற்சாகமூட்டக் கூடும் என்பதனால் தான். என்னவாயினும், தேவன் அங்கு செய்தது - அந்த விதமாக ஆவியை உன்மேல் கொண்டு வந்தது - ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே. அது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது உன் கணவருக்காக நேர்ந்திருக்குமானால், அவர் நிச்சயமாக தேவனுடைய இராஜ்யத்துக்குள் வந்து விடுவார். அதை நான் விசுவாசிக்கிறேன். 49சகோ. பிரான்ஹாமே, ஸ்திரீகள் சபையில் பேசக் கூடாது என்பது வேதபூர்வமானது அல்லவா? இவர் இரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அது உண்மை. அது உண்மை. ஸ்திரீகள் போதகர்களாக சபையில் பேசுவது சரியல்ல. அது உண்மை. 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம். இங்குள்ள சபையோராகிய உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இந்த கேள்வியை இன்று காலையில் கேட்டது ஒரு அந்நியராக இருக்கக் கூடும்; எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்திரீகள் பிரசங்கம் செய்வது சரியல்ல. அது உண்மை . அந்த வேதபாகத்தை இங்கு நான் படிக்கிறேன். அப்பொழுது நீங்கள் கண்டு கொள்ளலாம். அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த பாகத்துக்கு நான் வருவேன் - என்னால் கண்டுபிடிக்க முடியுமானால்.... ஆம், அது இங்குள்ளது. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்: பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது (முன்பிருந்த நாட்களில் நியாயப்பிரமாணம் ஸ்திரீ போதகர்களை அனுமதிக்கவில்லை) (law அதாவது “நியாயப்பிரமாணம் என்பதற்கு பதிலாக தமிழில் ”வேதம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. கொரி 14: 34-35. 50இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், கொரிந்து சபை... கொரிந்து கிறிஸ்தவர்களில் அநேகர்... அந்த நாளில் தியானாள் பெரிய பெண் தெய்வமாக விளங்கினாள். அவள் ஒரு ரோமப் பெண் தெய்வம். அவள் எபேசுவுக்கும் பெண் தெய்வமாயிருந்தாள். அவள் உலகம் முழுவதிலும் தொழுது கொள்ளப் பட்டாள். இப்பொழுது, அவளுக்கு ஊழியம் செய்தவர்கள்... அவள் பெண்ணாக இருந்த காரணத்தால், அவளுடைய ஊழியக்காரிகளும் பெண்களாக இருந்தனர். அவர்கள் பவுலின் மூலம் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவின் போது ... பவுல் இந்த நிரூபங்களை எழுதின போது, அவன் ரோமாபுரியில் சிறையில் இருந்தான். அவர்கள் அந்நிய பாஷையில் பேசி, மகத்தான வரங்கள் அவர்களிடையே கிரியை செய்யத் தொடங்கின போது. அவர்கள் பவுலுக்கு நிரூபங்கள் எழுதினர். நல்லது. இந்த ஸ்திரீகள் தங்கள் ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று எண்ணினர். 51இப்பொழுது, வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் 36ம் வசனத்தில் இவ்வாறு உரைக்கிறான் : தேவ வசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவர்னென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். கொரி. 14: 36-38 இல்லையென்றால், ஸ்திரீகள்... இப்பொழுது, சபைக்கு எழுதப்பட்ட இந்த நிரூபத்தின் வரலாற்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், இந்த ஸ்திரீகள் எண்ணினது என்னவெனில் ... தியானாளுக்கு அவர்கள் பூசாரிகளாக இருந்தது போலவே, இந்த ஊழியத்தை இங்கும் தொடர்ந்து செய்யலாமென்று எண்ணினர். தேவன் ஒரு ஸ்திரீயல்ல; தேவன் ஒரு மனிதன். உண்மையான ஒருவன் மாத்திரம் உண்டு, அதுதான் மனிதன். ஸ்திரீ மனிதனிலிருந்து தோன்றின உப பொருள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்பட வில்லை, ஸ்திரீயே மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். பாருங்கள்? உங்கள் ஆவிக்குரிய சிந்தையை நீங்கள் திறந்து கொடுப்பீர்களானால். பாருங்கள்? பாருங்கள்? 52மனிதன் பூமியில் முதலாவது தோன்றின போது, அவன் ஆணும் பெண்ணுமாக இருந்தான். அவன் ஆண் இனமாக ஆவதற்கு முன்பு, ஆண்மைத்தனமும் பெண்மைத்தனமும் ஒருங்கே கொண்டவனாயிருந்தான். பாருங்கள்? பெண்ணின் ஆவி, சற்று தாழ்ந்த ஆவி. அது பயந்த இயல்பைக் கொண்டது. பிறகு ஆண்மைத் தனம், ஆண். அவர் அவனை வித்தியாசமான ... உலகத்தில் பலுகிப் பெருகுவதற்கென அவர் பெண்ணின் ஆவியை அவனிலிருந்து எடுத்து, அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, பெண்ணை உண்டாக்கினார். அவள் ஆளுகை செய்ய வேண்டியவள் அல்ல! அவள் முதலில் அதைச் செய்த போது, மானிடவர்க்கம் முழுவதும் விழுந்து போவதற்கு அவள் காரணமாயிருந்தாள். பாருங்கள்? ஓ, அது முழுவதும்... அவளே வீழ்ச்சிக்கு காரணம். அதன் பிறகு தேவன் அவளை எடுத்து, ஒரு ஸ்திரீயின் மூலம் தோன்றின கிறிஸ்துவினால் ஜீவனை உலகத்துக்கு திரும்பக் கொண்டு வந்தார். ஆனால் சபையில் போதகராயிருப்பதற்கு ஒரு ஸ்திரீ அனுமதிக்கப் பட்டதாக எங்கும் இல்லை. 53தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில், “உபதேசம் பண்ண வும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்' என்று பவுல் உரைத்திருக்கிறான் (1 தீமோ. 2:15). பாருங்கள்? ஸ்திரீ பிரசங்கம் பண்ணுவது சரியல்ல; அது உண்மை. சில திறமையான பெண் பிரசங்கிகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களால் நன்றாக பிரசங்கிக்க முடியும் - ஏமி மக்பியர்ஸன் போன்றவர்கள், இன்னும் அநேக பெண்கள். உங்கள் கரத்தை அவர்கள் மேல் சிறிது நேரம் வையுங்கள். பாருங்கள்? அதுவல்ல... அந்நிய பாஷையில் பேசக் கூடியவர்கள் இன்று காலையில் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நான் அறிவேன். அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், அவர்கள் அந்நிய பாஷையில் பேச துணிய மாட்டார்கள். பாருங்கள்? அந்த ஸ்திரீகள். ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதனால் அவர்கள்... உங்கள் பிறப்பு அதனுடன் நிறைய சம்பந்தப்பட்டுள்ளது. அது உங்கள் பெயர், உங்களைக் குறித்த எல்லாமே (பாருங்கள்?). என்னவாயினும், அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. 54இன்று காலை இங்கு வந்து துப்பாக்கியின் குதிரையை (trigger) இழுத்து ஒரு மனிதனை என்னால் கொல்ல முடியும். ஆனால் அவ்விதம் செய்ய நான் துணிவு கொள்ள மாட்டேன். ஆனால் என்னால் செய்ய முடியும், நிச்சயமாக. பாருங்கள். நீங்கள் ஒரு அணிலைச் சுட்டுக் கொல்ல முடியும். ஆனால் நாம் அவ்விதம் செய்யக் கூடாது. பாருங்கள்? அதே காரியம் தான் பெண்கள் பிரசங்கிக்கும் விஷயத்திலும். நீங்கள் தவறு செய்யாதபடிக்கு இவைகளின் பேரில் கவனமாயிருக்க வேண்டும். இது கர்த்தருடைய கட்டளை. அவர்கள் பவுலுக்கு நிரூபம் எழுதி, “பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் கூறினார் என்று சொன்ன போது, பவுல் ”தேவனுடைய வார்த்தை உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? அங்கே தீர்க்கதரிசிகள் யாராகிலும் இருந்தால், நான் கூறுபவை கர்த்தருடைய கற்பனைகள் என்று அவர்கள் ஒத்துக் கொள்வார்கள். (பாருங்கள்? அது உண்மை). எவனாகிலும் இதற்கு முரணாக செயல்பட விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்க விரும்பினால், அவன் அறியாதவனாயிருக்கட்டும் (பாருங்கள்?) .. அவனைத் தனியே விட்டு விடுங்கள், அவன் விருப்பப்படி செய்யட்டும் (பாருங்கள்?) நீங்களோ அதற்கு மாறாக எதையும் செய்யாதிருங்கள்' என்கிறான். அவள் சபையில் பேசக் கூடாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 55அங்குதான் உங்கள் மேய்ப்பரோ அல்லது மற்றவரோ, ஆவிக்குரியவரா இல்லையா என்பதை நீங்கள் நிதானிக்கலாம், பாருங்கள்? பவுல், “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு கூறுபவை கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக் கடவன்' என்கிறான். பாருங்கள்? அதன் காரணமாகத்தான், ஜனங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். பவுல் அவ்விதம் செய்தான். அவன் 'பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து வேறெதையாகிலும் போதித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்“ என்றான். அது ஏற்கனவே இந்த சபையில் போதிக்கப்பட்டுள்ளது. எந்த மனிதனாகிலும் வந்து... பரலோகத்திலிருக்கிற ஒரு தூதன் வந்து, ”ஸ்திரீகள் பிரசங்கம் பண்ணலாம். அவர்கள் பிரசங்கிகளாயிருக்கலாம். அவர்களை போதகராக அபிஷேகம் பண்ணுங்கள்“ என்று சொல்வானானால், ”அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்“ என்று வேதம் உரைக்கிறது. இங்கு அது தேவனுடைய கட்டளையாயுள்ளது. 56வாழ்த்தும்போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வது (ஓ!) சரியா? இல்லை, ஐயா! இல்லவே இல்லை! இல்லை, ஐயா! நீங்கள் ஒரே ஒரு பெண்ணைத்தான் முத்தமிடலாம், சகோதரனே. அது உங்கள் மனைவி (பாருங்கள்?), அல்லது உங்கள் பிள்ளையை, அல்லது பாருங்கள்? “அது சரியா... அதை சரியாக படித்தேனா என்று பார்க்கட்டும்: வாழ்த்தும் போது கிறிஸ்தவ மனிதரும் ஸ்திரீகளும் ஒருவரை யொருவர் முத்தமிட்டுக் கொள்வது சரியா?” இல்லை, ஐயா! இல்லவே இல்லை! அது... அதை ஒரு போதும் தொடங்கி விடாதீர்கள்! ஆம், ஐயா! வேண்டாம், ஐயா! ஸ்திரீகளிடத்திலிருந்து விலகியிருங்கள். அவர்களை விட்டுப் புறம்பேயிருங்கள். முற்றிலும் உண்மை. இப்பொழுது, அவர்கள் நமது சகோதரிகள். ஆனால் செய்யாதீர்கள். இப்பொழுது, அவர்களுக்கு அது உள்ளது. அது ... அது பெந்தெகொஸ்தே சபைகளிலும் கூட நுழைந்து விட்டது, அது “சுயாதீன அன்பு” (free love) என்று அழைக்கப்படுகிறது. யாராகிலும் அவ்விதம் செய்வார்களானால், அதை விட்டு விலகியிருங்கள். அது உண்மை ! நீங்கள் எவ்வளவு சுத்தமாயிருந்தாலும், எனக்கு கவலையில்லை.... நீங்கள் என் சகோதரன், நீங்கள் ஒரு நல்ல பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த மனிதன் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை; நீங்கள் இன்னும் ஒரு மனிதனே; அவள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; அவள் இன்னும் ஒரு ஸ்திரீயே. உங்களுக்கு விவாகமாகும் வரைக்கும் அதை விட்டு விலகியிருங்கள். அவ்விதம் நீங்கள் செய்யுங்கள் 57ஞாபகம் கொள்ளுங்கள், சரீரமானது... இப்பொழுது நான் இரு சாராரிடமும் பேசப் போகிறேன். அப்பொழுது வயது வந்த நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஆண்களும் பெண்களும் கலந்துள்ள கூட்டம். ஆனால் நான் உங்கள் சகோதரன். இது கேட்கப்பட்ட ஒரு கேள்வி. பாருங்கள்? மனித குலத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு சுரப்பிகள் (glands) உண்டு. பெண்ணுக்கு பெண் சுரப்பி உள்ளது, இன சுரப்பி. ஆணுக்கு ஆண் சுரப்பி உள்ளது. இன சுரப்பி. இந்த சுரப்பிகள் மனித உதடுகளில் அமைந்துள்ளன. அது உண்மை. மற்றும் ஒன்றைத் தொடங்க வாய்ப்புண்டு, அதாவது மனிதன் வேறொரு மனிதனை வாயில் முத்தமிடுதல். அது அசுத்தமான செயல்! அது அசுத்தம்! அது என்ன செய்கிறது? அது ஓரினப் புணர்ச்சிக்காரரைத் தோற்றுவிக்கிறது. அதிலிருந்து விலகியிருங்கள்! நீங்கள் சொல்லலாம்... 58அண்மையில் ஒரு ஆள் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அவர்கள் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்தினார்களே' என்றார். அவர்கள் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அவர்கள் கழுத்தின் மேல் விழுந்து அவர்களைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர். அது கைக்குலுக்குதல் உள்ளே வருவதற்கு முன்பு. அது ஒரு வாழ்த்துதல். அப்படித்தான் அது உள்ளது. அவர்கள் ஒருவர் கைகளை ஒருவர் குலுக்குவதில்லை; அவர்கள் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரையொருவர் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டனர் - உதடுகளிலோ, முகத்திலோ அல்ல. அவ்விதம் செய்வது சீர்குலைதலை உண்டாக்கும். அதிலிருந்து விலகியிருங்கள். அவ்விதம் செய்யாதீர்கள்! இந்நாட்களில் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்குகிறோம். நீங்கள் விரும்பினால்... உங்கள் சகோதரனைக் கட்டித் தழுவி, அவரைக் கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம். அல்லது அவர் உங்களை கழுத்தின் பின்புறத்தில் முத்தமிடலாம், அதில் தவறொன்று மில்லை. ஆனால் ஒரு ஸ்திரீயை முத்தமிடாதீர்கள். அவளும் உங்களை முத்தமிட அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அது உண்மை! நீங்கள் அவள் கையைப் பிடித்து. “ஒரு நிமிடம் பொறு. சகோதரியே. ஒரு நிமிடம்; இதை நேராக்கிக் கொள்வோம்” என்று சொல்லுங்கள். எனவே அதை செய்யுங்கள். 59சற்று முன்பு, பிரசங்கத்தின் தொடக்கத்தில் நான் உங்களிடம் என்ன கூறினேன்? தொண்ணூறு மைல் வேகத்தில் ஒரு கார் சாலையின் வழியாக வருவதைக் காண்பீர்களானால், அதன் வழியிலிருந்து விலகுங்கள். அது உண்மை! நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சிறு மாற்றத்தை ஏதாகிலும் ஒன்றில் காணும்போது, அதிலிருந்து விலகுங்கள். அவ்விதமான தரையில் நீங்கள் இருக்கக் கூடாது. சாத்தான் உங்களுக்கு முன்பாக ஏதாவதொன்றைக் கொண்டுவந்து, அது உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்தி உங்களை நரகத்துக்கு அனுப்பி விடும். அதிலிருந்து விலகியிருங்கள்! பொல்லாங்கை கண்டால் அதைப் புறக்கணியுங்கள். அது உண்மை. மனிதனாக இருங்கள், ஸ்திரீயாக இருங்கள்.... ஒரு நிமிடம் நான் ஸ்திரீகளை ஆதரித்து பேசப் போகிறேன். அது வழக்கத்துக்கு மாறானது, இல்லையா? அவர்கள், “ஓ.. ஸ்திரீயே அதற்கு காரணம்! ஓ, அது ஸ்திரீயின் தவறு. அவள் தன் வழியை விட்டு விலகாமல் இருந்தால், மனிதனும் அவன் வழியை விட்டு விலகாமல் இருந்திருப்பான்' என்கின்றனர். அது உண்மை. அது உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அவள் தன் வழியை விட்டு விலகிவிட்டாள். ஒரு கெட்ட ஸ்திரீ இல்லாமல் போனால், மனிதன் கெட்டவனாக இருக்க முடியாது; ஆனால் கெட்ட மனிதன் இல்லாமல் ஒரு கெட்ட ஸ்திரீ இருக்க முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை! 60தேவனுடைய புத்திரன் என்று உரிமை கோருபவனே, உன்னுடைய கொள்கைகள் எங்கே? ஒரு ஸ்திரீ தன் வழியை விட்டு விலகினாலும், நீ தேவனுடைய புத்திரன் அல்லவா? நீ அவளைக் காட்டிலும் உயர்ந்த, அதிக பெலமுள்ள பாண்டம் அல்லவா? அவளை பெலவீனமான பாண்டம் என்று வேதம் அழைக்கிறதே. அவள் பெலவீனமாயிருந்தால், உன்னை தேவனுடைய மனிதனாகக் காண்பி. அவளிடம், “சகோதரியே, நீ தவறாய் இருக்கிறாய்' என்று சொல். அது உண்மை! அவ்விதம் நான் செய்திருக்கிறேன், மற்ற கிறிஸ்தவர்களும் செய்துள்ளனர். நீ கிறிஸ்தவனாக இருக்கும் வரைக்கும் அவ்விதம் செய்வாய். உன்னைக் கிறிஸ்தவனாகக் காண்பி. நீ தேவனுடைய புத்திரன். உனக்கு ஸ்திரீயைக் காட்டிலும் உன் மேல் அதிக கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளது. அவள் பெலவீனமாயிருந்தால். அவள் பெலவீனமானவள் என்பதை அடையாளம் கண்டு கொள். அவளுடைய தவறுகளைப் புரிந்து கொள், அவளைத் திருத்த முயற்சி செய். அவளிடம், 'சகோதரியே, நாம் கிறிஸ்தவர்கள். நாம் அவ்விதம் செய்யக் கூடாது என்று சொல். பார்? உண்மையான ஒரு மனிதனாயிரு, தேவனுடைய புத்திரனாக இரு. ஸ்திரீகளை கவனி. அங்கு தான் தொடக்கத்தில் பெரிய வீழ்ச்சி உண்டானது. அது சாத்தான் ஏவாளுடன் கூட. அதன் மூலமாகத் தான் மானிட வர்க்கம் முழுவதுமாக விழுந்து போனது. நீ தேவனுடைய புத்திரனாயிருப்பாயானால், பெலமுள்ளவனாயிரு: உண்மையில் ஒரு மனிதனாயிரு. நீ அவ்விதம் இராமல் போனால், அவ்விதம் ஆகும் வரைக்கும் பலிபீடத்தில் தங்கியிரு. பொல்லாங்கு தோன்றும் போதே, அதை புறக்கணித்து விடும். இந்த விதமான வாழ்த்துதலை இப்பொழுது தொடங்காதே. 61சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடம், அவர்கள் இரண்டு மூன்று முறை இங்குள்ள என் சபையில் கண்டதாக... இந்த சபையில் உள்ளவர்கள் அல்ல, ஆனால் இந்த சபைக்கு வெளியிலிருந்து வந்த மக்கள் செய்வதை. இன்று காலை நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க நேர்ந்தால், இதை உங்களுக்கு மிகவும் ஆழமாக பதிய வைக்கப் போகின்றேன். பாருங்கள்? ஸ்திரீகள், வாலிப ஸ்திரீகள் வருவதும், இந்த மனிதர் இந்த ஸ்திரீகளை முத்தமிடுவதும். அவ்விதம் செய்யாதீர்கள்! அதிலிருந்து விலகியிருங்கள். இதை - ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அவள் வாலிபப் பெண்ணாக, விவாகமாகாதவளாக இருப்பாளானால், என்றாவது ஒரு நாள் அவள் யாரோ ஒருவரின் மனைவியாக இருப்பாள். அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரமே கிடையாது. அவளை விட்டு விலகியிருங்கள். அவளுக்கு வாழ்த்து கூற நீங்கள் விரும்பினால், ஒரு தேவனுடைய புத்திரனாக, அவளுடன் கைகுலுக்கி, “எப்படியிருக்கிறாய், சகோதரியே?” என்று கேளுங்கள். அத்துடன் அது முடிவு பெறட்டும். பாருங்கள்? இத்தகைய காரியங்களிலிருந்து விலகியிருங்கள்; அது அசுத்தம்! அது விரைவில் உங்களைத் தொல்லையில் மாட்டி விடும். நீங்கள் சும்மா.... ஓ . அது... பாவம் மிகவும் எளிதாகவும், பசியை உண்டு பண்ணுவதாகவும், இனிமையாகவும் உள்ளது. அதற்குள் விழுவது மிகவும் எளிது. செய்யக்கூடிய சிறந்த காரியம் என்னவெனில், அது தோன்றுவதைக் காணும்போதே, அதிலிருந்து விலகியிருத்தலே. திரும்பிப் போய் விடுங்கள். உண்மையான கிறிஸ்தவனாக இருங்கள்! 62மனிதன் ஒருவரையொருவர் முத்தமிடும் விஷயத்தில், உங்கள் சகோதரனை நீங்கள் கழுத்தில் முத்தமிட்டால், அவ்விதம் செய்ய நீங்கள் விரும்பினால், அது சரியானது. ஆனால் எந்த மனிதனையும் உதடுகளில், வாயில், முத்தமிடாதீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள். ஏனெனில் அது சரியல்ல. பாருங்கள்? தொடக்கத்திலேயே ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? எனவே அதிலிருந்து விலகியிருங்கள். அதைப் புறக்கணியுங்கள். அதை இங்குள்ள இந்த கூடாரத்தில் தொடங்கி விடாதீர்கள். வேண்டாம், அதை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்க முடியாது. பாருங்கள்? உங்கள் சகோதரனை நீங்கள் காண விரும்பினால், அவரை கழுத்தில் முத்தமிட விரும்பினால், நல்லது. நீங்கள் முன்சென்று அதைச் செய்யுங்கள். ஆனால் ஜனங்களை வாயில் முத்தமிடாதீர்கள். ஏனெனில் அது கிரியை செய்யாது, அது சரியல்ல. அது ஒரு சீர்குலைதலைத் தொடங்குகிறது. அது ஓரினப் புணர்ச்சிக்காரர்களையும் அப்படிப்பட்ட காரியங்களையும் தோன்றச் செய்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யத் தூண்டுவது இரண்டு காரியங்களே... நீங்கள் தொடங்கினால் ... அந்த மனிதன்... நான் கண்டிருக்கிறான் ... ஓ. பலமுறை, ஜனங்களின் மத்தியிலே. அவர்கள் வருவார்கள். சபைகளில் கண்டிருக்கிறேன். போதகர் வந்து ஒவ்வொரு சகோதரியிடமும் சென்று அவளைத் தழுவி முத்தமிட்டு அவளை உட்காரச் செய்வார். “எப்படியிருக்கிறாய். சகோதரியே, அல்லேலூயா! மற்றொரு சகோதரியிடம் சென்று அவளை முத்தம்மிடுவார். இப்படியாக சபை முழுவதிலும் சென்று செய்வார். என்னைப் பொறுத்த வரையில் அது தவறு! 63நான் ஃபின்லாந்தில் இருந்த போது, நாங்கள் எல்லாரும் அங்கு சென்றிருந்தோம்.... உங்களுக்கு அது ஒருவேளை தெரிந்திருக்கும், அங்கு நாங்கள் கூட்டங்கள் நடத்தினோம். நான் ஒய்.எம். சி.ஏ.வுக்கு சென்றிருந்தேன். ஃபின்லாந்தில் சோப்புகள், டிடெர் ஜெண்டுகள் எதுவும் இருக்கவில்லை. என்னிடம் சவர சோப்பு இருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கு நின்று கொண்டு, அந்த சவரசோப்பை உபயோகித்து குளிக்க வேண்டியதாயிற்று. எங்களிடம் ஒரு துண்டு சோப்பு மாத்திரமே இருந்தது. ஃபின்லாந்தில் சோப்புகள் கிடையாது. அவர்கள் ஏதோ ஒருவகை இரசாயனப் பொருளை உபயோகித்து குளிக்கிறார்கள். அது உங்கள் தோலை அரித்து விடுகிறது. எனவே அவர்கள். அவர்கள் எங்களை ஃபின்லாந்து தேசத்து 'சானா' குளியலுக்கு கொண்டு போகப் போவதாக கூறினார்கள். நாங்கள் ஒய்.எம்.சி.ஏ.வுக்குச் சென்றோம். 'சானா' குளியலுக்காக அங்கு சென்றோம். அது பிரபலம் வாய்ந்த ஃபின்லாந்து தேசத்து 'சானா'. இதற்கு முன்பு நான் 'சானா' குளியலை எடுத்திருக்கிறேன். அது நன்றாயிருந்தது. நான், 'நல்லது. நாம் ஒய்.எம். சி.ஏ.வுக்குப் போகப் போகிறோம். அது நன்றாயிருக்கும்“ என்று எண்ணினேன். 64ஆனால் அங்கு போக நான் புறப்பட்ட போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அப்படிச் செய்யாதே (ஓ, பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளது மிகவும் நல்லது), அப்படிச் செய்யாதே என்றார். நல்லது. நான் உடனே, “இன்று காலை எனக்கு குளியல் அவசியமில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். டாக்டர் மானியனும் மற்றவர்களும், “ஓ, சகோ. பிரான்ஹாமே, என்னே, அங்கே சில பெரிய கண்ணாடி அறைகள் உள்ளன. அது மிகவும் அழகானது' என்றனர். வழக்கமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், அவர்கள் இந்த தண்ணீரை அந்த பாறைகளின் மேல் ஊற்றி அதை ஆவியாக மாற்றி, உங்களை 'பிர்ச் (birch) மரத்தின் இலைகளால் இப்படி அடிப்பார்கள். அதன் பிறகு நீங்கள் வெளியே ஓடி குளிர்ந்த தண்ணீரில் குதிக்க வேண்டும். ஃபின்லாந்து நாட்டினர் பனிக்கட்டி போன்றவைகளுக்குள் செல்கின்றனர். (ஒலிநாடாவில் முதலாம் பக்கம் முடிந்து இரண்டாம் பக்கம் தொடர்ச்சி இல்லாமல் தொடங்குகிறது - ஆசி). ...நியாயத்தீர்ப்படையாமல், மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். நான், “அதை நான் சொல்லவில்லை. அதை இயேசு கிறிஸ்து உரைத்தார்' என்றேன். அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார். நான், “சவுல் ராஜாவா? என்று கேட்டேன். அவர் ”ஆம்“ என்றார். 65அதனால் ஒய்.எம்.சி.ஏ வரை சென்றோம். அவர்கள் உள்ளே வந்தார்கள், அந்த மனிதர்கள் அனைவரும் நின்று, என்னை வாழ்த்தினர். மேலும், ஓ, அவர்கள் பேப்பரில், முதல் மற்றும் இரண்டாவது பக்கத்தில், ஒவ்வொரு நாளும், கூட்டங்களில் தலைப்புச் செய்திகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் சுற்றி இருந்தனர், நான் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்தேன், அவர்கள் அனைவரும் ஆடைகளை அவிழ்க்க அறைக்குள் சென்றனர். அவர்கள் ஆடைகளை அவிழ்ப்பதற்காக அங்கு சென்றிருந்தபோது, இங்கே அழகான தோற்றமுடைய சிறிய பின்னிஷ் பொன்னிற தலை கொண்ட பெண் ஒருவர் வந்தார். மேலும் அவர்கள் நல்ல மனிதர்கள். அவர்கள் எவ்வளவு சுத்தமான, ஒழுக்கமான மனிதர்கள். இதோ தோளில் துணியுடன் வருகிறாள். அறைக்குள் நடக்க ஆரம்பித்தான். நான், “ஏய், ஏய், ஏய். நிறுத்து. ப்ஸ்ஸ்.” நான் அவளைத் தடுக்க முயன்றேன். அவள் சுற்றிப் பார்த்து சிரித்தாள், உள்ளே சென்றாள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் (ஆண்களுக்கு ஆடை இல்லை), ஒரு துண்டு கொடுத்தாள். ஒவ்வொரு பெண்ணும் இறங்கி வந்து, ஒரு ஆணை அழைத்து, அவர்களை மீண்டும் அங்கே அழைத்துச் சென்று, அப்படியே தேய்த்தார்கள். பரிசுத்த ஆவி என்றால் என்ன என்று பார்த்தேன். அதனால் நான் மீண்டும் வெளியே வந்ததும், “டாக்டர். மன்னினேன்,” நான் சொன்னேன், “அது எப்படி வரும், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்துவிட்டு, அந்த சானாக்களை அவர்களுடன் எடுத்துச் செல்லுங்கள்...” “ஓ,” அவர் கூறினார், “அந்த ஸ்க்ரப் பெண்கள், சகோதரர் பிரான்ஹாம்.”நான் சொன்னேன், “அவை என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இது தவறு. இது சரியன்று.” நான் சொன்னேன், “இயற்கையே உங்களுக்கு கற்பிக்கிறது.”அவர் கூறினார், “சரி, சகோதரர் பிரான்ஹாம், அவர்கள் அமெரிக்காவில் உள்ள உங்கள் செவிலியர்களைப் போலவே குழந்தைகளிலிருந்து ஸ்க்ரப் செய்ய வளர்க்கப்படுகிறார்கள், அது போன்ற விஷயங்கள்; அவர்கள் அதை உயர்த்தியுள்ளனர்.”நான், “அவை என்னவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை; அது இன்னும் தவறு. முற்றிலும். அது ஆணும் பெண்ணும், அவர்கள் பிரிந்து, ஒருவரையொருவர் உடுத்திக்கொள்ள வேண்டும். ஆமென்.நான் அதைத் தொடங்க விரும்பவில்லை, சிறிது நேரம் கழித்து நான் பிரசங்கிப்பேன், இல்லையா? எல்லாம் சரி. 66கேள்வி: “தயவுசெய்து அப்போஸ்தலிக்க விசுவாசத்தை விளக்குங்கள்.”அது ஒரு கேள்வி. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று கேள்விகள் உள்ளன. அப்போஸ்தலிக்க விசுவாசம் என்றால் “அப்போஸ்தலர்களின் நம்பிக்கை” என்று பொருள். அப்போஸ்தலிக்க விசுவாசம் என்றால், நீங்கள் பைபிளுடன் இருங்கள். இப்போது, இன்று அப்போஸ்தலிக்க நம்பிக்கை என்று அழைக்கப்படுவது, அவர்களில் பலர் பைபிளுடன் இருப்பதில்லை. ஆனால் அப்போஸ்தலிக் என்றால் பைபிளின் அப்போஸ்தலிக்க நம்பிக்கை, அப்போஸ்தலிக்க நம்பிக்கை. எல்லாம் சரி. 67கேள்வி: “...மேலும் தங்களை அடிப்படைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் குழு, இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா?”இப்போது, எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, “இந்த குழுக்கள் காப்பாற்றப்பட்டதா?” எனக்கு தெரியாது.ஆவிக்கும், ஆவிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குங்கள்...சரி, இப்போது அது வேறு கேள்வி. இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? இப்போது, எனக்குத் தெரியாது. பார், எனக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்போது, இந்தக் குழுக்கள் காப்பாற்றப்பட்டதா? எனக்கு தெரியாது. ஆவிக்கு இடையிலான வேறுபாட்டை விளக்குங்கள். . . . என்பது இப்போது வேறு கேள்வி. இந்த இரண்டு குழுக்களும் காப்பாற்றப்பட்டதா? நான் அதை உங்களுக்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சொல்கிறேன், எனக்குத் தெரியாது என்று சொல்கிறேன். எனக்கு தெரியாது. இப்போது, நினைவில் கொள்ளுங்கள், இதோ என் எண்ணங்கள். அது தவறாக இருக்கலாம். ஒரு ரோமன் கத்தோலிக்கராகவோ அல்லது அவர் யாராக இருந்தாலும், மெதடிஸ்ட், பிரஸ்பைடிரியன், சர்ச் ஆஃப் கிறிஸ்து, லூத்தரன், எதுவாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, அவருடைய இரட்சிப்புக்காக அவரை உறுதியாக நம்பினால், அவர் இரட்சிக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன். ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதைச் செய்வதில்லை. தேவாலயம் அவர்களைக் காப்பாற்றுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள், பாருங்கள். அவர்களின் இரட்சிப்பு தேவாலயத்தில் உள்ளது. இந்த பாதிரியார் சில காலத்திற்கு முன்பு இங்கே காற்றை நிறுத்தியது போல் வேறு இரட்சிப்பு இல்லை [டேப்பில் உடை] கிறிஸ்து, அது சரி. சபையால் அல்ல, கிறிஸ்துவால்.இப்போது, இந்த அப்போஸ்தலர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் என்றால், இப்போது, தங்களை அழைக்கிறார்கள். . . . 68இப்போது, ஒரு அடிப்படைவாதியைப் போல, சிறிது காலத்திற்கு முன்பு என்னிடம் வந்து, அவர் என்னிடம், “நீ ஒருவித மெலிந்த கால்வினிஸ்ட், இல்லையா?” என்றார்.நான், “கால்வின் பைபிளில் இருக்கும் வரை நான் அவருடன் இருக்கிறேன்” என்றேன். நான் சொன்னேன், “நான் பைபிளுடன் செல்கிறேன், கால்வின் பைபிளில் இருந்தால்; ஆனால் அவர் பைபிளை விட்டு வெளியேறினால், நான் பைபிளை நம்புகிறேன்.அவர் சொன்னார், ”சரி,“ அவர் கூறினார், ”நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டால், அவன் ஒருபோதும் இழக்கப்படமாட்டான் என்று நீங்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். நான் சொன்னேன், “அவர் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார், அவர் ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாகவோ அல்லது நியாயத்தீர்ப்புக்குள் வரமாட்டார், ஆனால் ஏற்கனவே மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டார்” என்று வேதம் கூறுகிறது. “நான் சொன்னேன், ”அது நான் அல்ல. அதைத்தான் இயேசு கிறிஸ்து சொன்னார்.“அதற்கு அவர், ”நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்“ என்றார். ”சவுல் இரட்சிக்கப்பட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?“நான், ”சவுலே, ராஜா சவுலா?“ என்றேன்.அவர், ”ஆம்“ என்றார்.”ஏன்,“ நான் சொன்னேன், ”நிச்சயம்.“ நான், “நிச்சயமாக” என்றேன். அவர். “இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவன் ஒரு தீர்க்கதரிசி” என்றார். நான், “அது சரியே. அவன் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது (அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல, ஆனால் அவனுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தபோது இவன் அவர்களுடன் இருந்தான். ஆனால் சாமுவேல் அக்காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாமறிவோம். எனவே ...) சவுல் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தான்” என்றேன். அவர், “அவன் தீர்க்கதரிசியாயிருந்ததால், அவன் இரட்சிக்கப்பட்டானா?” என்று கேட்டார். நான், “நிச்சயமாக” என்றேன். அவர், “அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சவுல் இரட்சிக்கப்பட்டான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் வேதமோ, கர்த்தர் அவனை விட்டுப் போய் விட்டதாகவும், அவன் தேவனுக்கு சத்துருவானான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் உரைக்கிறதே! அவன் இரட்சிக்கப் பட்டான் என்று எவ்விதம் கூற முடியும்?' என்றார். 69நான், “நீர் அடிப்படைக் கொள்கைக்காரரா (fundamentalist)? சகோதரனே, அதை நீர் சரியாக வாசிக்கவில்லை; அவ்வளவு தான். வேதம் கூறுவதை நீர் வாசிக்கவில்லை' என்றேன். அவர், “நல்லது. அவன் தேவனுடைய சத்துருவான பிறகு இரட்சிக்கப்பட முடியாது” என்றார். நான், “சவுல் இரட்சிக்கப்பட்டான் என்றேன். அவர், “ஓ!” என்றார். நான், “அவன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவன் இரட்சிக்கப்பட வேண்டும். பாருங்கள்? தேவன் அவனை இரட்சித்தார். நாம் வழக்கமாக கூறுவது போல, தேவன் சிகப்பு இந்தியர் கொடுப்பது போல் கொடுப்பவர் அல்ல. அவர் அவ்விதம் செய்வதில்லை... நல்லது. உங்களை அவர் இழக்கப் போகிறார் என்று அறிந்து கொண்டே தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பாரானால், பரிசுத்த ஆவியை அவர் முதற்கண் கொடுத்ததே எத்தகைய மூடச் செயலாயிருக்கும்!” என்றேன். 70நீங்கள் பரிசுத்த ஆவியைப் பாவனை செய்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டது போல் நடிக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்கள் ஆதி முதல் அந்தம் வரைக்கும் அறிந்திருக்கிறார். அது உண்மை! அது வியாபாரத்தை தளர்ந்த முறையில் நடத்துவது போலிருக்கும். தேவன் அவ்விதம் நடத்துபவரல்ல. அவர் முடிவற்றவர். அவர் தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். இங்கு என்னென்ன இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தவர். பூமியில் இருக்கப் போகின்ற ஒவ்வொரு மலரையும், ஒவ்வொரு சிறு பூச்சியையும், உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் அறிந்திருந்தார். எனவே பாருங்கள், அவருடைய அலுவலை அவர் ஏன் அவ்விதம் நடத்த வேண்டும்? அவர் அவ்விதம் செய்வதில்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், நீங்கள் நித்தியமாக இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். அதை நான் வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும். நாம் அதை எத்தனையோ முறை செய்திருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், இதை மட்டும் கூற விரும்புகிறேன். அந்த ஆள் என்னிடம், “நல்லது, சவுலைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்றார். நான், 'நிச்சயமாக சவுல் இரட்சிக்கப்பட்டான்“ என்றேன். நான் தொடர்ந்து, சவுல் பின்மாற்றமடைந்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவன் பின் மாற்றமடைந்து தேவனை விட்டு விலகிப் போனான். ஏனெனில் அவன் பேராசை பிடித்தவன். அவனுக்கு பண ஆசை இருந்தது என்றேன். எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சாமுவேல் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை எச்சரித்திருந்த போதிலும், அவன் பலிகளைக் கொண்டு வந்தான். அவன் ராஜாவையும் கூட காப்பாற்றினான், அவன் நிறைய பொருட்களை அழிக்காமல் கொண்டு வந்தான். ஏனெனில் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை உரைக்கிறபடியே, அதை பின்பற்றுவதற்கு பதிலாக, உங்கள் சொந்த கருத்துக்களை அதில் நுழைத்து விடுகிறீர்கள். அங்கு தான் நீங்கள் பின்மாற்றமடைகிறீர்கள். ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் குறித்து நான் கொண்டுள்ள கருத்து அதுவே அவர்கள் வார்த்தையைப் பின் பற்றாத காரணத்தால் பின் மாற்றமடைகின்றனர். நீங்கள் வார்த்தையை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தால், அவர்கள் அதற்கு புற முதுகு காட்டி, “ஓ, எங்கள் சபை இதை தான் போதிக்கிறது” என்கின்றனர். அது சரியல்ல, தேவன் உரைத்துள்ளதே முக்கியம் வாய்ந்தது. 71சாமுவேல், இல்லை சவுல், அங்கு சென்று எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்துப் போடும்படிக்கு கட்டளை பெற்றான். அதை செய்வதற்கு பதிலாக அவன் பலிக்காக சிலவற்றை சேகரித்தான், அவன் ராஜாவின் உயிரையும் காப்பாற்றினான், எல்லாவற்றையும் செய்தான். சாமுவேல் அவனிடம் நடந்து சென்று, தேவனுடைய ஆவி அவனை விட்டுப் போய் விட்டதாகக் கூறினான் - அப்படி எல்லாமே. சாமுவேல் மரித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து சவுலுக்கு... தேவனுடைய ஆவி அவனை விட்டுப்போய் விட்டது, ஆனால் அவன் இழக்கப்படவில்லை. நிச்சயமாக இழக்கப்படவில்லை, அபிஷேகம் அவனை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது கவனியுங்கள், என்ன நடந்ததென்று. சவுல், வெகு தூரம் கர்த்தரை விட்டு விலகிப் போன பிறகு, அவன் யுத்தத்துக்கு சென்றான். அவன் யுத்தத்துக்கு செல்ல ஆயத்தமானான். யுத்தத்துக்கு செல்வதைக் குறித்து அவன் கவலை கொண்டான். அவன் கர்த்தரிடத்தில் ஒரு சொப்பனம் தரும்படி கேட்டான். கர்த்தர் அவனுக்கு எந்த சொப்பனமும் அருளவில்லை. அந்நாட்களில் தேசத்தில் தீர்க்கதரிசிகள் எவரும் இருக்கவில்லை. சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் அவர்களுக்கு இருந்தனர். ஆனால் தேவனிடத்திலிருந்து பதில் கிடைக்க அவர்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. அவன் ஊரிம் தும்மீமிடத்திற்கும் சென்று அங்கு கேட்டான். ஊரிம் தும்மிமின் மின்னல் பிரகாசம் கூட அவனுக்கு பதிலளிக்கவில்லை. அவன் என்ன செய்தான்? அவன் ஒரு குகைக்குள் ஊர்ந்து சென்றான். அங்கே அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருந்தாள், குறி சொல்லும் ஒருத்தி. அஞ்சனம் பார்க்கிற இவள்.... அவன் வேலைக்காரனைப் போல வேஷம் மாறி அவளிடம் சென்று, “நீ தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவியுடன் எனக்காக தொடர்பு கொள்வாயா? என்று கேட்டான். அவள், “நல்லது, சவுல் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?” (அவள் சவுலிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அதை அறிந்திருக்கவில்லை) “அவர் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் கொன்று போடுவதாக சொல்லியிருக்கிறாரே” என்றாள். அவன், “நான் சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவேன். நீ. எனக்காக சாமுவேலின் ஆவியுடன் தொடர்பு கொள்” என்றான். எனவே அஞ்சனம் பார்க்கிற அந்த ஸ்திரீ தன் மந்திர சக்தியால் செயல்படத் தொடங்கினாள். முதலாவதாக என்ன தெரியுமா, சாமுவேல் எழும்பி வருவதை, அவனுடைய ஆவி வந்து, அவர்களுக்கு முன்பாக காணக்கூடிய ரூபமாக ஆனதை அவள் கண்டபோது, அவள், “தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்” என்றாள். 72அது ஆறுதலாக இருந்தது. வயோதிப சாமுவேல் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாயின. ஆனால் அவன் நின்றுகொண்டிருந்தான். அது மாத்திரமல்ல... அவன் தன் தீர்க்கதரிசியின் அங்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் உயிரோடிருந்தது மாத்திரமல்ல, அவன் அப்பொழுதும் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அல்லேலூயா! அவள், சவுலிடம், “நீர் என்னை ஏமாற்றி விட்டீர்” என்றாள். சவுல்,“ சாமுவேலே, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நான் நாளைக்கு யுத்தத்துக்குப் போகிறேன் , கர்த்தருடைய ஆவி என்னை விட்டுப் போய்விட்டது. எனக்கு கர்த்தரிடத்திலிருந்து ஒரு சொப்பனம் கூட கிடைக்கவில்லை. ஊரிம் தும்மீமும் கூட என்னிடம் பேச மறுக்கின்றன. நான் பயங்கரமான நிலையில் இருக்கிறேன் என்றான். - சாமுவேல் சவுலிடம், “நீ தேவனுக்கு சத்துருவாய் இருக்க, என்னை ஏன் என் இளைப்பாறுதலிலிருந்து வெளியே அழைத்தாய்?” பாருங்கள்? சாமுவேல் அவ்விதம் கூறினான். அவன் தொடர்ந்து மற்றவைகளைக் கூறினான். அவன் சொன்னான். எவ்வாறாயினும், அவன் கர்த்தருடைய வார்த்தையை அவனுக்கு உரைத்தான். அவன் அவ்விதம் செய்தபோது... ஞாபகம் கொள்ளுங்கள், அவன் மரித்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. பாருங்கள்? ஆனால் அவன், “நான் வார்த்தையை உரைக்கிறேன் என்றான். அவன் அவனிடம் கர்த்தருடைய வார்த்தையை உரைத்தான். அவன், ”நாளைக்கு நீ யுத்தத்தில் மடியப் போகிறாய், உன் குமாரனாகிய யோனத்தானும் உன்னுடன் மடியப் போகிறான். நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். அவன் இழக்கப்பட்டிருந்தால், தீர்க்கதரிசியாகிய சாமுவேலும் இழக்கப்பட்டிருக்க வேண்டும். அது அடிப்படை கொள்கை (fundamentalism); அது ஏன் அவ்விதம் அழைக்கப்படுகிறதென்று காண்கிறீர்களா? பாருங்கள், பாருங்கள்? அவன், ”நாளை இரவு இந்நேரம் நீ என்னோடிருப்பாய்“ என்றான். பாருங்கள்? சவுல் இழக்கப்பட்டிருந்தால், சாமுவேலும் இழக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இருவருமே ஒரே இடத்தில் இருந்தனர். 73இல்லை, இல்லை! அடிப்படை கொள்கைக்காரரே, நீங்கள்... அடிப்படை கொள்கைக்காரர் என்று அழைக்கப்படுபவரே, கிறிஸ்தவ சபை என்று அழைக்கப்படுபவரே. கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுபவரே - கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. இன்றைக்கு நீ அமெரிக் கனாயிருப்பதால் நீ கிறிஸ்தவன் என்று கருதப்படுகிறாய். பார்? அது கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவது. ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்னப்படுபவர் ஆவியினால் மறுபடியும் பிறந்த ஆணும் பெண்ணுமாவர். அதுவே உண்மையில் மற்ற இவர்கள் பாவனை செய்பவர்கள், ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள். 74ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை தயவுகூர்ந்து விளக்குங்கள். நல்லது. அது கடினமான ஒன்று. முதலாவதாக நீங்கள் ஒரு திரியேகன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போல. பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்பவை ஒரு நபருக்கு உரிமையான மூன்று பட்டப்பெயர்கள், அவர்தான் இயேசுகிறிஸ்து. நீங்கள் சரீரம், ஆவி, ஆத்துமாவாயிருக்கிறீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள். அவைகளில் ஒன்று மாத்திரம் இருக்குமானால், நீங்கள் நீங்களாயிருக்க மாட்டீர்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் நீங்கள். அன்றொரு நாள் நான் கூறினது போல, “இது என் கை; இது என் விரல்; இது என் மூக்கு; இது என் கண்கள்; ஆனால் நான் யார்?” இது சொந்தமாயுள்ள நான் யார்? அதுதான் எனக்குள்ளே இருக்கும் ஒன்று அது தான் ஞானம். இந்த கண்கள், இந்த கைகள், இந்த சரீரம் இன்றைக்கு உள்ளது போல் இங்கு நின்று கொண்டிருந்த போதிலும், நான் ... என் சரீரம் இங்கிருக்கலாம், ஆனால் நான் போய்விட்டிருக்கக் கூடும், நான் என்னவாயுள்ளேனோ அது எனக்குள்ளே நான் என்னவாயுள்ளேனோ, அது போய் விட்டிருக்கக் கூடும். அந்த பாகம் தான் ஆவி ஆத்துமா என்பது அந்த ஆவியின் சுபாவம், பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது அது ஒன்றும் செய்வதில்லை. நீங்கள்... அது உங்கள் ஆவியை ஒரு வித்தியாசமான ஆத்துமாவாக மாற்றி விடுகிறது. அந்த ஆத்துமா அந்த ஆவியின் மேலுள்ள வித்தியாசமான சுபாவமாகும். எனவே ஆத்துமா என்பது உங்கள் ஆவியின் சுபாவம். தொடக்கத்தில் நீங்கள் நீசத்தனமாகவும், பொல்லாதவர்களாகவும், பகை, குரோதம், விரோதம் போன்றவைகளைக் கொண்டவர்களாயும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அன்புள்ளவர்களாயும், இனிமையாயும், தயவாயும் இருக்கிறீர்கள். வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அது உங்கள் சுபாவம். நாம் அதை நான் அவ்விதமே அழைப்பேன். உங்கள் ஆத்துமா மாற்றம் பெறுகிறது. பழைய ஆத்துமா செத்து, புதிய ஆத்துமாவாகிய புது சுபாவம் உங்களுக்குள் பிறக்கிறது. பாருங்கள்? 75உங்களுடைய மூளை உங்கள் ஞானம் அல்ல, உங்களுக்குள் இருக்கும் ஆவியே உங்கள் ஞானம். பாருங்கள்? உங்கள் மூளை உயிரணுக்களையும் மற்றவைகளையும் கொண்டது. அதற்கு தானாகவே ஞானம் கிடையாது. அதற்கு அப்படி ஞானம் தானாகவே இருக்குமானால், அது அங்கிருக்கும் வரைக்கும், நீங்கள் மரித்தாலும் உயிரோடெழுந்தாலும், அது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்? அது உங்களுடைய மூளை அல்ல; அது உங்களுக்குள் இருக்கும் உங்கள் ஆவியே. உங்கள் ஆத்துமா அந்த ஆவியின் சுபாவம். அது சரீரத்தை கட்டுப்படுத்தும் ஆவியின் ஆத்துமா . பாருங்கள்? பார்த்தீர்களா? நான் விரைவாகச் செல்ல வேண்டும், ஏனெனில் நமக்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, நான் நினைக்கிறேன் - அது விளங்கி விட்டது என்று நம்புகிறேன். 76சகோ.பிரான்ஹாமே, கூட்டத்தில் ஸ்திரீகள் சாட்சி சொல்லலாமா அல்லது அந்நிய பாஷையில் பேசலாமா என்பதை தயவுகூர்ந்து விளக்குங்கள் - தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நல்லது, ஒரு ஸ்திரீ பிரசங்கியாயிருப்பாளானால் அவள் கூட்டத்தில் பிரசங்கிக்கவே கூடாது. ஆனால் அவளுக்கு அந்நிய பாஷையில் பேசும் வாரம் இருந்து, அவள் தீர்க்கதரிசனமும் மற்ற வரங்களும் கொண்டவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இருப்பாளானால், அவளுக்கு அப்படி செய்ய உரிமையுண்டு என்பது என் கருத்து. ஏனெனில் வேதாகமத்தில் மிரியாம் போன்ற தீர்க்கதரிசினிகளை நாம் காண்கிறோம். அவர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை... என் சிறு பிரசங்கத்தை செய்ய எனக்கு நேரமிருந்தால், அதைக் குறித்து பேசுவேன். பாருங்கள்? 77ஸ்திரீகள் வரங்களைக் கொண்டவர்களாய் இருந்தால்... நாம் வெகு சீக்கிரத்தில் ஒன்றாக கூடும்போது, நாம் கடைபிடிக்க வேண்டிய சரியான வழி ... நமது சபை இன்னும் சிறிது அதிகமாக அனுபவம் பெறும்போது... உங்களுக்குத் தெரியுமா, இன்னொரு குழு, இன்னொரு சபை, இந்த சபையுடன் இணையப் போகிறது, அவர் களுக்கு உட்கார சபையில் போதிய இடவசதி கிடைத்தவுடனே. இன்னொரு சபை இந்த சபையுடன் இணையப் போகிறது. அது ஒரு ஸ்தாபன மல்ல, அவர்கள் ஒரு கூட்டமாக இந்த சபைக்கு வரப் போகிறார்கள். அவர்கள் வரங்களைப் பெற்றுள்ள மக்கள். இப்பொழுது, அவர்கள் ஒன்றாக இணைந்த பிறகு, செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், வரங்களைப் பெற்றுள்ள இந்த மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் ஒன்றாக கூடி, ஆவியானவர் அவர்களுக்கு என்ன சொல்லுகிறார் என்பதை காண வேண்டும். அதன் பிறகு அது மேடையிலிருந்து அறிவிக்கப்படலாம். மக்கள் .... அது சபையின் பக்திவிருத்திக்காக . 78இப்பொழுது, நீங்கள் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைப்பவர் யாரும் அங்கில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால்... நீங்கள் கூட்டங்களில் உள்ளபோது, சில நேரங்களில் அது மிகவும் அவபக்தியாயுள்ளது. சில நேரங்களில் நீங்கள் காண்பது என்னவெனில்.... நான் என் சபையாரின் மத்தியில் நின்று கொண்டு பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசி பீட அழைப்பைக் கெடுத்து விடுகின்றனர். இப்பொழுது பாருங்கள், அந்த நபர் சரியாகவே அந்நிய பாஷையில் பேசக்கூடும்; அது பரிசுத்த ஆவியாயிருக்கக் கூடும். ஆனால் பாருங்கள், என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் போதிக்கப்படாத காரணத்தால், அதை எப்படி அடக்கிக் கொள்வதென்று .... நான் மேடையின் மேல் உட்கார்ந்து கொண்டு, ஒரு பிரசங்கி பிரசங்கிப்பதைக் கேட்டு, அவர் ஒரு தர்மசங்கடமான நிலையை அடைவதை நான் கண்டிருக்கிறேன்... நான் எழுந்து நின்று அவருக்கு உதவி செய்ய விரும்பினேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் அதே காரியத்தை செய்திருக்கிறீர்கள்; நாம் எல்லோரும் அதை செய்திருக்கிறோம். ஆனால் அது என்ன? அது அவபக்தி. உட்காருங்கள். என் சகோதரனை மதியுங்கள். 79நான் சகோ. நெவில் பிரசங்கிப்பதை கேட்டிருக்கிறேன், நான் பிரசங்கிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். நாங்கள், எவ்வித சந்தேகமுமின்றி, நாங்கள்... சகோ. ஜே.டி. இன்னும் மற்றவர். நாம் ஒருவர் பிரசங்கிப்பதை மற்றவர் கேட்டிருக்கிறோம். நாம், “ஓ, சகோதரனே, அவருக்கு உதவி செய்ய நான் எழுந்து போவேன்” என்று சொல்லியிருக்கிறோம். பாருங்கள்? ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுவதை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அமைதியாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது. பாருங்கள்? அது உண்மை. அமைதியாயிருங்கள். பாருங்கள்? அதை செய்யுங்கள். நான் நம்புவது என்னவெனில் ஒரு ஸ்திரீ ... கேள்வி என்னவெனில் ஒரு ஸ்திரீக்கு அந்நிய பாஷை பேசும் வாரம் இருந்து அவள் பேச விரும்பினால், அந்த நேரம் வரும்போது, அவளுக்கு அந்நிய பாஷையில் பேச உரிமையுண்டு, ஆனால் அவள் பிரசங்கம் செய்யவோ மனிதர் மேல் அதிகாரம் செலுத்தவோ கூடாது. அவள் பிரசங்கித்தால், மனிதர் மேல் அதிகாரம் செலுத்துகிறது ளாக ஆகிவிடுகிறாள். - 159. சகோ. பிரான்ஹாமே, முன்பு விவாகமாகாதிருந்த ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதன்பிறகு அவளுக்கு இருமுறை 80விவாகமாகி விட்டது. நாம் மணம் புரிய விரும்பினால், முதல் மனைவியிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. முன்பு விவாகமான அவளிடத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டுமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா? நல்லது, என் சகோதரனே, அதை நீங்கள் செய்ய இதுதான் ஒரே வழி. இது ஒரு பெரிய பொருள். சபை ஒழுங்கடைந்து அது இருக்க வேண்டிய இடத்தை அடையுமானால், என்றாகிலும் ஒரு நாள் இதைக் குறித்து பேச விரும்புகிறேன். இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன், நான் .... விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில் சபைகளில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சாரார் ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். மற்ற சாரார் மற்ற கருத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், தேவனுக்கு முன்பாகவும் அவருடைய வேதாகமத்துக்கு முன்பாகவும், கிருபையை என் இருதயத்தில் கொண்டவனாய், என் கருத்து என்னவெனில், அவர்கள் இருவருமே தவறு. பாருங்கள். ஆனால் அதில் ஒரு சத்தியம் அடங்கியுள்ளது. 81இயேசு உரைத்ததை நீங்கள் கவனிப் பீர்களானால்.... இங்கே என் சகோதரன் இருக்கிறார், இரத்த சம்பந்தமான என் சொந்த சகோதரன். அவர் ஒரு பெண்ணை மணந்து கொள்ளப் போகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி, ஒரு நல்ல பெண்ணின் மூலம் ஒரு பிள்ளை உள்ளது. அவர் என்னிடம் வந்து மணம் முடித்து வைக்கும்படி கேட்டார். நான் முடியவே முடியாது“ என்று சொல்லி விட்டேன். இயேசு மத்தேயு 5ம் அதிகாரத்தில், “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய (அவள் விவாகம் செய்வதற்கு முன்பு அவ்விதம் நடந்து கொண்டு அவளுடைய கணவருக்கு அதை தெரியப்படுத்தாமலிருந்தால்) தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிற வனாயிருப்பான்' என்று கூறியுள்ளார் (மத். 5:32). எனவே அப்படி செய்யாதீர்கள். இல்லை, உங்கள் முதல் மனைவி மறுபடியும் விவாகம் செய்து கொண்டுவிட்டால், நீங்கள் திரும்பவும் அவளிடம் போகக் கூடாது. ஆனால் நீங்கள் - அவள் உங்களை விவாகரத்து செய்து உங்களைத் தள்ளிவிட்டிருந்தால். 82“நான் சுயாதீனமாயிருக்கலாமா?” என்று கேட்டிருக்கிறீர்கள். அதை நான் மறுபடியும் படிக்கட்டும்: “இதற்கு முன்பு விவாகமாகாத ஒரு பெண்ணை நான் விவாகம் செய்தேன். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதன் பிறகு அவளுக்கு இரு முறை விவாகமாகி விட்டது (கேள்வி கேட்ட நபர் விவாகம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்). நாம் மணம் புரிய விரும்பினால் முதல் மனைவியிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. இல்லை, ஐயா! லேவியராகமத்தில் கூறப்பட்டுள்ள பிரமாணத்தைப் பாருங்கள். அவள் வேறொருவருக்கு உரிமையாகி விட்ட பிறகு நீங்கள் அந்த பெண்ணிடம் சென்றால், அவளை நீங்கள் கறைபடுத்தி, நீங்கள் உங்களை முன்னைவிட மோசமான நிலைக்கு ஆளாக்கிக் கொள்வீர்கள். இல்லை, வேறொருவரை விவாகம் செய்து கொண்ட உங்கள் மனைவியை நீங்கள் திரும்பச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இப்பொழுது, “விவாகமாகி விட்ட என் மனைவியினிடத்தில் நான் திரும்பச் செல்லலாமா, அல்லது நான் சுயாதீனமாயிருக்க வேண்டுமா? நீங்கள் சுயாதீனமாயிருக்கிறீர்கள்! சுயாதீனமாக நிலைத் திருங்கள்! ஆம், நீங்கள் திரும்பிச் செல்லாதீர்கள். வேண்டாம், ஐயா! அவள் வேறொருவரை மணந்து கொண்டு விட்டாள்; அவளை விட்டு விலகியிருங்கள். அதுதான் சரி! வேண்டாம். .. அது அசுத்தப்படுத்துகிறது. நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நமக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால், அதை விவரிக்க எனக்கு விருப்பம். ஆனால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம், என் சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், வேண்டாம், ஐயா! உங்களை விவாகம் செய்து கொண்ட பிறகு இரண்டு மூன்று முறை விவாகம் செய்து கொண்ட அந்த பெண்ணிடம் திரும்பச் செல்லாதீர்கள். அது தவறு! 83இதற்கு முன்பு விவாகமாயிருந்த அந்த தம்பதிகளுக்கு அண்மையில் நான் விவாகம் செய்து வைத்தேன். அவர்கள் விவாகரத்து செய்து ஒருவரையொருவர் பிரிந்தனர் — வயோதிப் தம்பதிகள். ஓ, அது சகோதரன் சகோதரி பக்கெட்; அவர்கள் தான் அது. அவர்களால் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லை. அவர் களுக்கிடையே சிறு பூசல் உண்டானது; அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். அவள் மிகவம் உண்மையாக தனியாக வாழ்ந்து வந்தாள். அவரும் அதே விதமாக வாழ்ந்து வந்தார். சற்று கழிந்து. அது எவ்வளவு மூடத்தனம் என்பதை அவர்கள் உணர்ந்து, மறு படியும் விவாகம் செய்து ஒன்றாக வாழ விரும்பினர். நான், “நிச்சயமாக” என்றேன். பாருங்கள்? “அது நல்லது, அப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும்” என்றேன். எனவே அவர்கள்.... அவர்கள் விவாகமான நிலையிலே இருந்தனர். அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை; அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு வேண்டிய பத்திரங்களைக் கொடுத்தேன்; அவ்வளவுதான், ஏனெனில் அவர்கள் தொடக்கத்தில் செய்திருந்தனர். 84கத்தோலிக்கருக்குள்ள அறையப்பட்ட இயேசுவின் உருவம் கொண்ட சிலுவையின் (crucifix) மேலுள்ள மூன்று எழுத்துக்களின் அர்த்தம் என்ன? நல்லது. அத்தகைய சிலுவையின் சின்னம் அனைத்தும் ஒன்றே. இல்லையென்றால்... அதை நான் மறுபடியும் பார்க்கட்டும். அது ஐ-ஆர் - என் -ஐ (I-R-N-1) என்று உள்ளது. அதன் அர்த்தம் “நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா என்பதே. அதற்கு வேறு விசேஷித்த அர்த்தம் உண்டோ இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் அர்த்தம் நசரேயனாகிய இயேசு, யூதரின் ராஜா!” சரி.. 85சபை கட்டிட நிதிக்காக தசமபாகத்தை உப்யோகிப்பது தவறா? நல்லது. இப்பொழுது, இங்கே - இது சபைக்கு உணர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சிறு காரியம். சரியான முறை என்னவெனில், தசமபாகம் சபையின் போதகருக்கு செல்ல வேண்டும். அது தான் சரி! வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில், ஆலயத்தை பழுது பார்ப்பதற்காக, அவர்கள் ஒரு பெட்டியை கதவண்டையில் வைத்தனர். ஜனங்கள் அந்த பெட்டியில் பணத்தைப் போடுவார்கள். அதை பலமுறை நீங்கள் பழைய ஏற்பாட்டில் படித்திருக்கிறீர்கள். அவ்விதமாகத் தான் அவர்களை ஆலயங்களை பரிபாலித்தனர். அந்த நிதியை உபயோகித்து தான் அவர்கள் ஆலயங்களை பழுது பார்த்தனர். ஆனால் பத்தில் ஒரு பாகம் - தசம பாகம் அனைத்தும் - அவர்களுடைய ஆசாரியர்களுக்கு, அவர்களுடைய மேய்ப்பர்களுக்கு சென்றது. ஆம், தசமபாகத்தை வேறெதற்கும் உபயோகிக்கக் கூடாது. ஜனங்கள் தங்கள் தசமபாகத்தை எடுத்து விதவைகளுக்கு கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். அது தவறு. விதவைக்கு கொடுக்க உங்களிடம் வேறெதாவது இருக்குமானால், அதைக் கொடுங்கள். ஆனால் தேவனுடைய பணத்தை அவளுக்கு கொடுக்காதீர்கள். முதலாவதாக, அது உங்களுடையதல்ல, அது தேவனுடையது. 86உங்களுக்கு ஒரு ரொட்டி வாங்கி வருவதற்காக என்னிடம் நீங்கள் இருபத்தைந்து சென்டு காசு கொடுத்தனுப்பி, நான் தெருவில் ஒருவரை சந்தித்து அவருக்கு இந்த இருபத்தைந்து சென்டு காசை கொடுத்து விடுவேனானால், பாருங்கள், நான் உங்கள் காசை எடுத்து கொடுத்து விடுகிறேன். அவர் என்னிடம் காசு கேட்டால், என் பாக்கெட்டில் உள்ள என் காசை அவருக்கு நான் கொடுக்க வேண்டும். இது உங்கள் காசு. அதை எடுத்து கொடுத்துவிடக் கூடாது. அது போன்று தசமபாகம் கர்த்தருடையது. ஆசாரியனிய லேவி தசமபாகத்தைக் கொண்டே வாழ வேண்டும். தசமபாகம் பண்டகசாலையில் கொண்டு வரப்பட்டு, அது தேவனால் ஆசிர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தத்தையும் அதன் நிரூபணத்தையும் உடையதாய் இருக்கிறது. அவர், “நீங்கள் என்னை நம்பாமல் போனால், அதைக் கொண்டு வந்து நான் அதை ஆசிர்வதிக்கமாட்டேனோ என்று என்னை சோதித்துப் பாருங்கள்” என்கிறார் (மல். 3:10). பாருங்கள்? அது உண்மை . தசமபாகம் சபையின் போதகரின் ஜீவனத்துக்கென அவருக்கு செல்ல வேண்டும். கட்டிட நிதி இன்னும் மற்றவை எல்லாம் முற்றிலும் வேறுபட்ட நிதி . அது வேதப்பூர்வமானது! ஒரு முறை நாம் தொடங்கி விட்டால், நான் ஒரு இரவு எடுத்துக் கொண்டு ... சில நாட்களுக்கு முன்பு, நான் கூடாரத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இரண்டு மூன்று வாரங்களாக இப்படிப்பட்ட தலைப்புகளின் பேரில் பேசி, சபையில் தசமபாகம் எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்பதை காண்பித்தேன். 87சகோ.பிரான்ஹாமே, நாம் கிறிஸ்தவர்களான பிறகு, மேசன்ஸ் போன்ற விடுதியை சேர்ந்து கொள்வது தவறாகுமா? இல்லை, ஐயா! நீங்கள் எங்கிருந்தாலும் கிறிஸ்தவராயிருங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அப்பொழுதும் கிறிஸ்தவராயிருக்கலாம். 88கர்த்தரைக் கண்டு கொள்வதற்கு மிகச் சிறந்த வழி என்ன... சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்த உங்கள் கருத்து என்ன? இப்பொழுது... நான் நினைக்கவில்லை நான்... அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்கிறதா என்று பார்க்கட்டும். “மிகச் சிறந்த வழி எது என்பதற்கான உங்கள் கருத்து (அங்கே ஒரு காற்புள்ளி (comma) இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்)... ”சில முக்கியமான விஷயங்களில் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எது என்பதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?“ அருமை நண்பனே, நான் உமக்குச் சொல்லுகிறேன், சில முக்கியமான விஷயங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழி ஜெபமே. பாருங்கள்? இப்பொழுது, இதை நான் ... இங்கு ஒரு அருமையான சிறு காரியம் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயம் உங்களுக்கு இருக்குமானால்... நான் கடைபிடிக்கும் முறை இதுவே. அதை நான் கர்த்தருக்கு முன்பாக கொண்டு செல்வேன். அது எப்பொழுதும் என் பெலனாக அமைந்துள்ளது; நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, அவர் என்ன சொல்லுகிறாரென்று பார்ப்பேன். நான் அந்த விஷயத்தில் எந்த பக்கத்தையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பேன். நான், “இப்பொழுது, பரலோகப் பிதாவே, அது இப்படி இருக்க வேண்டும்...” என்று சொல்வதில்லை. 89என் விஷயத்தில், பெரும்பாலும், அது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பது உண்மையே. ஆகையால் நான் தரிசனத்துக்காக காத்திருப்பேன். ஆனால் அநேகருடன் தேவன் தரிசனத்தின் மூலம் ஈடுபடுவதில்லை. எனவே நீங்கள் தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டுமென்று ஆலோசனை கூற மாட்டேன். பாருங்கள்? ஏனெனில் சிலருக்கு தரிசனம் கிடைக்கின்றது. சிலர் வேறொன்றை செய்கின்றனர். நீங்கள் செய்பவைகளை என்னால் செய்ய முடியாது - நீங்கள் தேவனை சேவிக்கும் வழியில் - நான் செய்பவைகளை உங்களால் செய்ய முடியாது. பாருங்கள்? தேவன் வெவ்வேறு விதமாக நம்முடன் ஈடுபடுகிறார். நான் உங்கள் ஸ்தானத்தில் இருந்து கர்த்தரிடத்திலிருந்து தரிசனம் பெறாமலிருந்தால், நான் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து, “கர்த்தாவே, என்ன தீர்மானம் செய்ய வேண்டுமென்று எனக்குக் காண்பியும்” என்று அவரைக் கேட்பேன். அதை ஒரு வழியில் செய்ய உங்களுக்கு உணர்வு தோன்றுமானால், சிறிது காத்திருங்கள், அதன்பிறகு இன்னும் சிறிது அதிகம் காத்திருந்து. எந்த வழியில், எந்த பக்கம் சாய்கிறீர்கள் என்பதைப் பாருங்கள், எந்த பக்கம் ஆவியானவர் ... “பிதாவே, என் இருதயத்தில் உள்ளதை நீர் அறிந்திருக்கிறீர், அதனால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவரைக் கேளுங்கள். கூட்டங்களைக் குறித்தும் சில நேரங்களில் நான் அப்படித்தான் செய்கிறேன். இந்த வழியாக அல்லது அந்த வழியாக செல்ல வேண்டுமென்று நான் வழிநடத்தப்படுவதாக எனக்குத் தோன்றும், அப்பொழுது நான் அந்த வழியாக செல்வேன். அப்படித்தான் அதை செய்ய வேண்டும், ஏனெனில் அது ஜெபத்தில் வைக்கப்படுகிறது; நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை செய்கிறீர்கள். 90இதை நான் விசுவாசிக்கிறேன், என் நண்பர்களே. முன்காலத்தில், புதிய ஏற்பாட்டின் காலத்தில் பவுல் இரு வழிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு, எந்த வழியாக செல்ல வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தவறான வழியில் செல்லப் புறப்பட்ட போது, அவனுக்கு மக்கதோனிய அழைப்பு வந்தது. நான் விசுவாசிப்பது என்னவெனில், நீங்கள் தேவனுக்காக ஒரு தீர்மானம் செய்து, உங்களால் முடிந்த வரைக்கும் அதை மிகச் சிறந்த முறையில் செய்வீர்களானால், தேவன் உங்களைத் திருத்தி, நீங்கள் தவறு செய்ய... பார்த்துக் கொள்வார். தேவன் அவ்விதம் செய்வாரென்று நான் , பாசிக்கிறேன். - 91நாம் பார்ப்போம். சகோ, பிரான்ஹாமே, உறங்கும் கன்னிகைகள் என்று கருதப்படுபவர் நியாயத்தீர்ப்பின்போது 'நியாயந்தீர்க்கப்படும்போது, அவர்களுக்கு என்ன நேரிடுகிறது? நல்லது, உறங்கும் கன்னிகைகள் இரட்சிக்கப் படுவார்கள் என்பது உண்மையே. அவள் நியாயத்தீர்ப்பின் போது இரட்சிக்கப்படுவாள். அவள் மணவாட்டியாக இருக்க முடியாது. அவள் நியாயத்தீர்ப்புக்கு வரும் ஒரு கூட்டம் ஜனங்கள். அவர்கள் கன்னிகைகளாய் இருப்பதனால், அவர்கள் தேவனுக்கு முன்பாக இருக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். அவர் பிரிக்கிறார். அவர்கள் அவருடைய வலது பக்கத்திலுள்ள செம்மறியாடுகள் . இரட்சிக்கப்படாதவர்கள் அந்த பெரிய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின்போது அவருடைய இடது பக்கத்திலுள்ள வெள்ளாடுகள். அதன் பேரில் நான் நிறைய நேரம் பேச முடியும், ஆனால் நேரமாகிக் கொண்டிருக்கிறது. 92பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர், தனக்கு செய்ய விருப்பமில்லாத சிறு காரியங்களைச் செய்யத் தூண்டப்பட்டு அதை செய்வதற்கு வாய்ப்புண்டா? ஓ, ஆமாம்! ஆம், ஐயா! ஆம், பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு நபர். அப்பொழுது தான் நீங்கள் இந்த காரியங்களைச் செய்யத் தூண்டப்படுவதற்கான நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு இலக்காக ஆக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் பிசாசை சேவித்துக் கொண்டிருந்த போது, உங்கள் விருப்பப்படி நீங்கள் அவலட்சணமாக நடந்து கொள்ள அவன் உங்களை அனுமதிக்கிறான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கென்று ஒரு நிலையை தெரிந்து கொண்ட மாத்திரத்தில், நீங்கள் மற்ற பக்கத்துக்கு வந்து விடுகிறீர்கள். அப்பொழுது அவன் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்கள் பக்கம் திருப்பி குறி வைக்கிறான். ஒவ்வொரு சோதனையையும், உங்கள் மேல் எறியப்படக் கூடிய ஒவ்வொன்றையும், உங்களை நோக்கி எறிகிறான். அப்பொழுது உங்களுக்கு கடினமாகி விடுகிறது. ஆனால் உங்களுக்கு என்ன உள்ளது “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிரலிருக் கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4). பாருங்கள்? நீங்கள் பிசாசின் பக்கம் இருந்தபோது, உங்களுக்கு எந்தப் போராட்டமும் இருக்கவில்லை, நர், அசுத்தத்தில் சுற்றிதிரிந்தீர்கள். பாருங்கள்? ஆனால் இப்பொழுதோ நீங்கள் உங்கள் போக்கை சுத்தமாக்கிக் கொண்டீர்கள்; நீங்கள் நாணயமாக உடை உடுக்கிறீர்கள்; நீங்கள் சவரம் செய்து கொள்கிறீர்கள்; தலையை நன்றாக வாரிக் கொள்கிறீர்கள்; நீங்கள் ராணுவ உடையை போட்டுக் கொள்கிறீர்கள்; உங்கள் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு, “வாருங்கள், போகலாம்” என்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் போர்களத்தில் இருக்கிறீர்கள், உங்களைப் பெரிதாக காண்பித்துக் கொள்ள அல்ல, ஆனால் போரிட், போரில் சோதனைகள் எழும்பும்போது . ஆவியினால் - விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்துக் கொண்டு, போராயுதங்களை தொடுத்துக்கொண்டு முன் செல்கிறீர்கள். அது நிச்சயம்! பாருங்கள்? அது உண்மை. ஓ. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் போரிடவில்லையென்றால், எதற்காக போராய தங்களைத் தரித்துக் கொள்ள வேண்டும்? இராணுவ வீரர் அனைவரும் சண்டையிடுவதற்காகவே அவ்விதம் தரித்துக் கொள்கின்றனர். தங்களைப் பெரிதாக காண்பித்துக் கொண்டு, “நான் இன்னார். நான் ஒரு கிறிஸ்தவன், நான் யாரென்று பாருங்கள். நான் இன்னின்னதை சேர்ந்தவன். அல்லேலூயா! அன்றொரு இரவு நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன். நிச்சயமாக, ஒன்றும் என்னை தொல்லைப் படுத்துவதில்லை” என்று சொல்வதற்காக அல்ல. உ-ஊ! ஓ, சகோதரனே, நீ திரும்பிச் சென்று மறுபடியும் முயற்சி செய்வது நலமென்று எண்ணுகிறேன். பார்? 93ஒ. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில், சாத்தான் ஒவ்வொரு துப்பாக்கியையும் உங்களை நோக்கி குறி வைத்து உங்களைச் சுட முற்படுகிறான். ஆனால் நீங்களோ சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டிருக்கிறீர்கள். விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆவியின் பட்டயத்தை, வார்த்தையின் பட்டயத்தை கையில் பிடித்துக் கொள்ளுங்கள், சுவிசேஷம் என்னும் பாதரட் சையை கால்களில் தொடுத்துக் கொள்ளுங்கள், அந்த நடுத் துண்டாகிய மார்கச்சையை போட்டுக் கொண்டு, அதிலுள்ள வாரை இழுத்து இறுகக் கட்டிக் கொண்டு, ஆயத்தமாகுங்கள். ஏனெனில் அது வந்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஆம், ஐயா! உங்களுக்கு நிறைய தொல்லைகள் வரும். ஆனால் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 94இயேசு பரி. மத்தேயு 16:910 வசனங்களில் கூறினதன் அர்த்தமென்ன? பன்னிரண்டு கூடைகளும் ஏழு கூடைகளும் எதற்கு எடுத்துக்காட்டாயுள்ளன? ஞாயிறு காலைக்கு கேள்வி. மத். 16:10 என்னவென்று நாம் பார்ப்போம், அது என்னவென்று இப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அந்த வேதபாகத்தை நான் எடுக்கட்டும். மத். 16:9-10. இதோ உள்ளது: இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? (இப்பொழுது கவனியுங்கள், இதற்கு முன்புள்ள சில வசனங்களை வாசிப்போம்) இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். நாம் அப்பங்களைக் கொண்டு வராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக் கொண்டார்கள். இயேசு ... (இப்பொழுது கவனியுங்கள்)... இயேசு அதை அறிந்து. (அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து கொண்டார். பாருங்கள்?). அற்ப விசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டு வராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிற தென்ன? இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 95வேறு விதமாகக் கூறுவோமானால்: “தேவன் ஒரு அற்புதத்தை செய்து தேவையானதை தருவதை நீங்கள் கண்டிருக்க, அவரால் ஒரு அற்புதத்தை மறுபடியும் செய்ய முடியாதா என்ன? பாருங்கள்?... இதை வேறு விதமாக இவ்விதம் கூறலாம்: அவர் உங்களை பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சித்திருக்க உங்கள் சரீரத்தை அவரால் சுகமாக்க முடியாதா என்ன? நீங்கள் பாவியாயிருந்த போது, நீங்கள் விசுவாசிக்கத்தக்கதாக உங்கள் ஆத்துமாவை எவ்வளவாக விசுவாச நிலைக்கு உயர்த்தினார் என் பதை நினைவுகூராமலிருக்கிறீர்களா? அவர் அப்படிப்பட்ட மகத்தான ஒன்றை உங்களுக்கு மறுபடியும் செய்ய முடியாதா என்ன? அவர் அற்புதத்தை அல்லது வேறெதாவதொன்றை உங்களுக்கு செய்ய முடியாதா என்ன? ஐந்து கூடைகள்... நினைவுகூருங்கள் என்றார். உதாரணமாக.... அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த போது, தேவன் சிவந்த சமுத்திரத்தை பிளந்து. வழியை உண்டாக்கி, அதன் வழியாக அவர்கள் நடந்து போகும்படி செய்தார். ஆனால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள் முறுமுறுத்தனர். அது சரியா? அவர்களுக்கு அப்பம் கிடைக்காத மாத்திரத்தில், அவர்கள், “எங்களுக்கு அப்பம் இல்லை என்று கூச்சலிட்டனர். பாருங்கள்? ”சிவந்த சமுத்திரத்தில் நடந்த அற்புதத்தை நீங்கள் உணரவில்லையா? அதன் வழியாக நீங்கள் வரவில்லையா?' என்று மோசே கேட்டான். அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் அருகில் கடினமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டபோது, “ஓ, நாங்கள் அங்கேயே செத்திருக்க வேண்டும். எகிப்தியர் எங்களைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்?” என்று அவர்கள் கூச்சலிட்டனர். அப்பொழுது மோசே, 'பூமியை அங்கே வாதைகளால் வாதித்தவர் யார்? கோசேனில் சூரியன் பிரகாசிக்கும்படி செய்தவர் யார்? என்று கேட்டான். பாருங்கள். அவைகளை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். தேவன் தேவனாயிருக்கிறார் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அல்லேலூயா! அவர் இன்னும் தேவனாயிருக்கிறார், அவர் நிச்சயமாக எதையும் செய்ய முடியும். 961கொரிந்தியர் 12:27ல்கூறப்பட்டுள்ள “கிறிஸ்துவின் சரீரம்' என்பதையும், வெளிப்படுத்தல் 21:9ல் கூறப்பட்டுள்ள ”கிறிஸ்துவின் மணவாட்டி' என்பதையும் தயவுகூர்ந்து விளக்குவீர்களா? வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள புதிய எருசலேம் ஆவிக்குரியதா? அது சபையின் ஆவிக்குரிய பகுத்தறிதலா? இல்லை! இதை முதலில் எடுக்க முடியுமா என்று பார்க்கிறேன், 1 கொரிந்தியர் ,வேகமாக, 1 கொரிந்தியர் 12ம் அதிகாரம், சரி, 27ம் வசனம்: நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயங்களாயுமிருக்கிறீர்கள். அடுத்த வசனம் என்ன? வெளிப்படுத்தல் 21:9. வெளிப்படுத்தல் 21ம் அதிகாரம் 9ம் வசனம். சரி, இங்கே உள்ளது. பின்பு. கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து : நீ இங்கே வா; ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 97ஆம், கிறிஸ்துவின் சரீரம். பாருங்கள், கிறிஸ்துவின் சரீரம் நமது பாவங்களுக்காக நொறுக்கப்பட்டது. ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அதன் அங்கத்தினர்களாகிறோம். அந்த சரீரம் எங்கேயிருந்து ... அடையாள ரீதியில் பேசுவோமானால், என் மனைவி எங்கிருந்து... ஏவாள் எங்கிருந்து வந்தாள்? ஆதாமின் சரீரத்திலிருந்து. அவள் அவனுடைய விலாவிலிருந்து எடுக்கப்பட்டாள். கிறிஸ்து.. அவள் அவனுடைய சரீரத்தின் பாகமாயிருந்தாள். அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவளை நான் மனுஷி என்று அழைப்பேன்” என்றான். பாருங்கள்? இப்பொழுது, கிறிஸ்துவின் சரீரம் இயேசுவின் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவே நாம் அவருடைய ஆவியாயும், மாம்சமாயும், எலும்பாகவும் இருக்கிறோம். பாருங்கள்? நாம் அவருடைய சரீரத்துக்குள் பிறந்திருப்பதனாலும், இங்குள்ள இந்த சரீரம் அவருக்குச் சொந்தமானதாயும், ஆனால் பாவத்தில் பிறந்திருந்ததனாலும், அவர் அதை மீட்டுக் கொண்டார். “அதை கடைசி நாட்களில் தேவன் எழுப்புவார், நான் அதற்குள் நித்திய காலமாய் வாசம் செய்வேன்” பாருங்கள்? அதுதான். சரி. 98இப்பொழுது பார்ப்போம். இந்த கேள்வியின் கடைசி பாகம், “புதிய எருசலேம் ஆவிக்குரியதா? இல்லை, இல்லை, புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான். அது சபையின் பகுத்தறிதல் அல்ல. பாருங்கள்? அது... புதிய எருசலேம் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வருவதை யோவான் கண்டான் - வெளிப்படுத்தல் 21 (பாருங்கள்?). அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப் பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாயிருந்தது. இப்பொழுது கடைசி கேள்வி, கேள்விகள் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். 99தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதாக வேதம் உரைக்கிறது. அப்படியானால் நீங்கள் தேவனிடத்தில் அன்புகூர்ந்து, பிறகு உலகத்துக்குத் திரும்பிச் செல்வீர்களானால், நீங்கள் பாவத்தில் மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது அவர் உங்களை எடுத்துக் கொள்வதற்கு முன்பு நீங்கள் ஒப்புரவாகி அவரிடம் திரும்பும்படி செய்வாரா? அந்த பெண்மணி, இதற்கு கையொப்பமிட்டிருக்கிறாள். எனவே அது ஒரு பெண்மணி என்று (பாருங்கள்?) அவள் கையொப்பமிட்டுள்ளதால் என்னால் கூற முடிகிறது. ஆம், சகோதரியே. நீ பிறந்திருந்தால்.... இப்பொழுது, இதை நான் உன்னிடம் கூறட்டும். பார், தற்காலிகமாக, சிறு விஷயங்களில், நாம் ஒவ்வொருவருமே ஒரு நாளில் பலமுறை பின் மாற்றம் அடைகிறோம். அது நமக்குத் தெரியும். நாம் ஒவ்வொருவருமே அதைக் குறித்து குற்றமுள்ளவர்களாயிருக்கிறோம்; நம்மில் எவருமே பிழையற்றவர் அல்ல. இந்த சரீரத்தில் நாம் உள்ள வரைக்கும், நாம் இன்னும்... ஜனங்கள் எவ்வளவுதான், “நான் பரிசுத்தமடைந்து விட்டேன், நான் அந்த ஸ்திரீயை முத்தமிடலாம், அல்லது அதைச் செய்யலாம்” என்று சொன்னாலும், அவர் பொய் சொல்லுகிறார்; அவரால் முடியாது. இப்பொழுது, அவ்வளவுதான். “கர்த்தாவே, நான் அதற்கு எவ்வளவு அருகாமையில் செல்ல முடியும் என்பதைக் காணட்டும்” என்று நான் கூற முயல்வதில்லை. அது “கர்த்தாவே, அதை விட்டு எவ்வளவு தூரம் நான் விலகியிருக்க முடியுமோ, அங்கு என்னை வைத்திரும்” என்பதாய் உள்ளது. பாருங்கள்? எவ்வளவு தூரம் உங்களால் விலகியிருக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விலகியிருங்கள். நீங்கள் இன்னும் மானிடர் என்பதை நினைவுகூருங்கள். பாருங்கள்? 100மற்றும்... இப்பொழுது நீங்கள் ஏதாவதொரு தவறைச் செய்வீர்களானால்... நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை ... நீங்கள் கிறிஸ்தவராக, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் தவறு செய்ய எண்ணங்கொள்வதில்லை. உங்கள் எண்ணங்கள் மற்றும் எல்லாமே சரியாயிருக்கும். ஆனால் நீங்கள், ஏதாவதொரு தவறு செய்வீர்களானால், இந்த பெண் இங்கு சொன்னது போல, நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்து, இழக்கப்பட்டு, மரிக்கும்படி தேவன் விட்டு விடுவாரா, அல்லது நீங்கள் ஒப்புரவாகி, உங்களைத் திரும்பக் கொண்டு வருவாரா? அவர் உங்களைத் திரும்பக் கொண்டு வருவார். நீங்கள் ஏதாகிலும் தவறு செய்து. அது உங்களைக் குற்றப்படுத்தாமல், நீங்கள் அதில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பீர்களானால், நீங்கள் முதற்கண் இரட்சிக்கப்படவேயில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை. நீங்கள் இரட்சிக்கப் படவேயில்லை; நீங்கள் ஏதோ ஒரு பாவனை விசுவாசத்தை கொண்டிருந்தீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படவேயில்லை. நீங்கள் இரட்சிக்கப்படும் போது, உங்களுக்கு வேறு ஆவி உள்ளது; உங்கள் சுபாவம் வித்தியாசமாகி விடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள், பழையவைகள் ஒழிந்து போய், அவை மரித்து மறதி என்னும் கடலில் புதைக்கப்படுகின்றன. பாருங்கள்? மற்றும்... ஆனால் இந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், உங்களுக்கு எல்லாவிடங்களிலும் கண்ணிகள் வைக்கப்படுகின்றன, உங்கள் கண்களை கிறிஸ்துவின் மேல் வைத்து நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தவறு செய்வீர்களானால், ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒப்புரவாகி விரைவில் திரும்பி வந்து விடுவான். 101பாருங்கள், பேழையிலிருந்து தேவன் காகத்தை வெளியே அனுப்பினார் - நோவா காகத்தை வெளியே அனுப்பினான். இப்பொழுது, அது யார்? அது ஒரு காகம். ஓ, ஆமாம், அது புறாவுடன் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அவையிரண்டுமே ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தன; ஆனால் அவன் காகத்தை வெளியே அனுப்பின போது, நல்லது. அந்த... லட்சக்கணக்கான ஜனங்களின் உடல்கள் உப்பிப் போய், அழுகி, குதிரைகளும் மிருகங்களும் மூழ்கி செத்து, தண்ணீர் நாற்றமெடுத்திருக்கும் என்று எண்ணுகிறேன். முழு உலகமே அழிக்கப்பட்டது. அந்த செத்த பிணங்கள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தன. நோவா புறாவை வெளியே அனுப்பினான், ஏனெனில் சிறிது சூரிய வெளிச்சத்தை அவன் கண்டதாக எண்ணினான். தண்ணீர் மட்டம் இறங்கி விட்டதா என்று அறிய, அவன் காகத்தை வெளியே அனுப்பினான். ஆனால் காகமோ பறந்து பிணத்தின் மேல் இறங்கி, “என்னே , இது அருமையானது; மிகவும் நன்றாயுள்ளது” என்றது. பாருங்கள். அது பிணத்தை தின்று கொண்டிருந்தது. ஏன்? அதுதான் அதன் இயல்பு. அது ஒரு காகம். அது எவ்வளவு தான் புறாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது எவ்வளவுதான் நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டிருந்த போதிலும், அது எவ்வளவு தான் இந்த சுத்தமான பறவையுடன் உட்கார்ந்து கொண்டிருந்த போதிலும், அது தொடக்கத்திலேயே ஒரு காகமாயிருந்தது. தன் நிறத்தைக் காண்பிக்க அதற்கு தருணம் கிடைத்த மாத்திரத்தில், அது காண்பித்து விட்டது. ஆனால் அவன் புறாவை வெளியே அனுப்பினபோது, அது புறப்பட்டுச் சென்ற போது, வ்யூ, அதனால் சகிக்க முடியவில்லை. அது எங்கும் செல்ல முடியவில்லை, தன் பாதங்களை இளைப்பாறச் செய்ய அதற்கு இடம் எங்குமில்லை, எனவே அது பேழைக்கு திரும்பி வந்தது. அப்படித்தான் அது உள்ளது. 102சில நேரங்களில், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று காண சிறிது நேரத்துக்கு நீங்கள் அவிழ்த்து விடப்பட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு புறாவின் சுபாவம் இருக்குமானால், உங்களால் காகத்தின் ஆகாரத்தை தின்ன முடியாது. அவ்வளவுதான், அது ஜீரணமாகாது; அவ்வளவுதான். நீங்கள் எங்கே செல்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் கிறிஸ்தவனாக இல்லாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள்! நான் கிறிஸ்தவனாக இல்லாமலிருந்தால், இன்று காலை நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்குச் சொல்லுங்கள்! என் தாயார் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது, இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டு என்னால் பிரசங்கிக்க முடிந்து, நான் செல்லும் வழியில் சென்று, அதற்கு அதிக கவனம் நான் செலுத்தாதது போல் காணப்படுகிறதற்கு காரணமென்ன? ஏனெனில் என் தாயார் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் இரசிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நானறிவேன். நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்; நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்திருக்கிறேன். 103தாயார் இப்பொழுது என்ன செய்வார்கள்? ஒருக்கால் அவர்களுக்கு வாழ்நாள் பூராவும், “என்றாவது ஒரு நாள் நான் கிறிஸ்தவளாகி விடுவேன்' என்னும் நல்லெண்ணம் இருந்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அவர்கள் நினைவிழந்த நிலையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களால் எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்கள் இப்பொழுது எப்படி கிறிஸ்தவளாகியிருக்க முடியும்? அவர்களுடைய பிள்ளைகள் என்ன செய்வார்கள்? அன்று நாங்கள் அவர்களுக்கு க்ளுகோஸ் செலுத்த அவர்களைக் கொண்டு போன போது ... அவர்களுடைய உடலில் உள்ள ஒன்றே ஒன்று க்ளூகோஸ் மட்டுமே. அவர்களால் விழுங்கமுடியவில்லை அவர்களுக்கு கைகால் முடங்கி விட்டது. அவர்கள், “பில்லி, இந்த ஒன்றை நீ அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்' என்றார்கள். அவர்கள் என்னைக் குறித்தும், அங்கு நின்று கொண்டிருந்த டீலோராஸைக் குறித்தும், அவர்களுடைய பிள்ளைகளைக் குறித்தும், என் சகோதரர்களில் சிலர் குடிப்பதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், “அவர்கள் உங்கள் இருதயத்தை உடைத்து விட்டார்கள்” என்றேன். அவர்கள், “ஆனால் பில்லி, இவையனைத்தும் ஒரு தாயாரின் வாழ்க்கை சக்கரத்தில் சுழலும் காரியங்களே. ஆனால் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்” என்றார்கள். நான், “அம்மா, நீங்கள் ஜெபர்ஸன்வில் தொடங்கி ஊடிகா வரைக்கும் விஸ்தாரமுள்ள ஒரு அரண்மனையை எங்களுக்கு விட்டு சென்றாலும்.. நீங்கள் போய் விட்ட பிறகு நாங்கள் சண்டை போட்டுக் கொள்ள (அப்படித்தான் அது நடக்கும்) ஒரு கோடி டாலர்களை வைத்து விட்டுச் சென்றாலும், நீங்கள் எங்களுக்கு வைத்துப் போகும் மிகப் பெரிய பொக்கிஷத்துக்கு அது ஈடாகாது. நதிக்கு அப்பாலுள்ள அந்த தேசத்தில் நாங்கள் உங்களை மறுபடியும் காண்போம் என்னும் உறுதியை எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள்” என்றேன். அது உண்மை . பாருங்கள்? 104நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், கிறிஸ்து நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்... நாம் பின் மாற்றமடையக் கூடும்; நாம் தவறு செய்யக் கூடும்; நம்மனைவருக்கும் ஏற்றத்தாழ்வு உண்டு; ஆனால் உங்கள் ஆத்துமாவில், நீங்கள் ஏதாவதொன்றைச் செய்யும்போது, உடனே உங்களில் ஏதோ தவறு ஏற்பட்டு விடுகிறது; அதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது தான் குதித்து ஓடி விடுவதற்கான நேரம். அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். இன்று நீங்கள் இங்கிருந்து வெளியே செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். யாராவது ஒருவர் உங்களிடத்தில் வந்து, “நீ உருளும் பரிசுத்தரில் ஒருவன் என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்' என்று சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். சாத்தான் உடனே உங்களிடம், ”அவனை கன்னத்தில் அறை என்கிறான். “நான் உருளும் பரிசுத்தனா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். பாருங்கள்? தீமையை நன்மையினால் சந்தியுங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் தீமையை நன்மையினால் சந்திக்கும்போது, தீமை நன்மைக்கு முன்பாக நிற்க முடியாது. அதனால் முடியாது. 105நான் ஒரு மிஷனரி, நான் உலகம் முழுவதும் சென்று, பலவித தீமைகளை கண்டிருக்கிறேன் - பலவித மந்திரவாதிகள், கொள்கைகள், பலவித பிசாசு வழிபாடு, ஓ, நான் நினைத்துப் பார்க்கக் கூடிய எல்லாமே. தீமையை நன்மை எப்பொழுதும் வெல்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். - கவனியுங்கள், இரவு எவ்வளவு இருளாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; உங்களால் உணர முடிகின்ற அளவுக்கு அது இருளாயிருக்கக் கூடும். உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தி எந்தவிதமான நிழலையும் காண முடியாமல் இருக்கக் கூடும். ஆனால் மிகச் சிறிய வெளிச்சம் கூட அந்த இருளை அம்பலப்படுத்தி விடும். நிச்சயமாக, அப்படித்தான் மரணத்தின் சமுகத்தில் ஜீவன் செய்கிறது. அப்படித்தான் தீமையின் சமுகத்தில் நன்மை செய்கிறது. அப்படித்தான் சந்தேகத்தின் சமுகத்தில் விசுவாசம் செய்கிறது, அது அதை சிதறடித்து விடுகிறது. 106சூரியன் பிரகாசிக்கும்போது - ஆசீர்வாதம் பிரகாசிக்கும் போது - இரவு எவ்விதம் இங்கு தங்கியிருக்க முடியும்? இரவு எங்கு சென்று விடுகிறது? அது இருக்க முடியாது. இரவுக்கு என்ன நேர்ந்தது? பன்னிரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இந்த கூடாரத்தில் இருந்த இருள் இப்பொழுது எங்கே? இந்த சுவர்களுக்குள் பரந்து கிடந்த அந்த இருள் இப்பொழுது எங்கே? அது இப்பொழுது இல்லை, அது மறைந்து விட்டது. ஏன்? வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் உள்ளே வரும்போது, இருள் போகத்தான் வேண்டும். ஆம், ஐயா! 107இரவிலே திரியும் கரப்பான் பூச்சிகள், வண்டுகள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சூரியன் எழும்பினால் அல்லது வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினால், அவை எவ்விதம் இருளுக்கு ஓடி வருகின்றன என்பதை கவனியுங்கள். சுவிசேஷமும் அதை தான் செய்கிறது. அது பிரகாசிக்கும்போது, உங்களை “உருளும் பரிசுத்தர் என்று அழைக்க விரும்புகிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது? உங்களை கேலி செய்பவர்களுக்கு என்ன நேரிடுகிறது? வெளிச்சம் பிரகாசிக்கத் தொடங்கினவுடனே, அவர்கள் மெல்ல இருளுக்குச் சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் இருளின் பிள்ளைகள். ஆனால் வெளிச்சத்தின் பிள்ளைகளோ வெளிச்சத்தில் நடக்கின்றனர். நாமோ தேவனுடைய கிருபையினால் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். எனவே வெளிச்சம் பிரகாசித்தபோது, நாம தேவனுக்கு நன்றி செலுத்தி, திறந்த கண்களுடன் நடந்து சென்று, மாம்சக் கண்கள் காணக்கூடாதவைகளை நாம் பார்த்தோம். ஏன்? விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ஆமென்! அது எனக்குப் பிரியம். 108நான் பேசவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த என் சிறு பிரசங்கத்துக்கு இப்பொழுது நேரமில்லை. ஏனெனில் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள்? ஆமென்! இந்த கேள்விகளை நாம் பார்த்த பிறகு - அவைகளில் சில மிக நுட்பமாகவும் எல்லாவிதமாகவும் இருந்தன, அவைகளுக்கு சரியான பதில் அளிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.... ஒரு வேளை அதன் பேரில் நான் சரியான விதத்தில் செயல்படவில்லை என்றிருக்கலாம், ஏனெனில் வேதத்தை ஆராய்ந்து பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்விதம் நான் ஆராய்ந்திருந்தால், வேதவசனங்களை ஒரு தாளில் குறித்து வைத்திருப்பேன். எல்லோருக்கும் திருப்தி என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், அதை மறுபடியும் எழுதி எனக்கு அனுப்புங்கள். அவைகளுக்கு முழுவதுமாக பதிலளிக்கப்படவில்லை என்று நீங்கள் எண்ணினால், அதை ஆராய்ந்து படிக்க நான் நேரத்தை ஒதுக்குகிறேன். 109நீங்கள் தங்கியிருந்ததற்காக நன்றி. இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் ஜெப வரிசையை அமைக்கப் போகிறோம். அவ்விதம் செய்வதற்கு முன்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இருந்த சூழ்நிலையை நாம் மாற்றி அமைப்போம் - ஒருவர் கேள்வி கேட்டால், ஒருவர் இந்த விதமாக விசுவாசிப்பது, வேறொருவர் அந்த விகமாக விசுவாசிப்பது போன்ற நிலையை பாருங்கள், கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அது சில நேரங்களில் கடுமையாயுள்ளது. எனவே இப்பொழுது நாம் கர்த்தரைத் தொழுது கொண்டு பாடுவோம்: நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்தத்தால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இதை மறுபடியும் பாடும்போது, உங்கள் அருகிலுள்ள யாராகிலும் ஒருவருடைய கைகளைக் குலுக்குங்கள். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இப்பொழுது நம்முடைய கரங்களை அவரிடம் இப்படி உயர்த்தி, நமது கண்களை மூடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 110எங்கள் பரலோகப் பிதாவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம். கர்த்தாவே. இந்த சிறு கூட்டத்தாரும் உம்மை நேசிக்கின்றனர் என்று நான் விசுவாசிக்கிறேன். நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய வீட்டுக்கு, இந்த சிறு கட்டிடத்துக்கு வந்திருக்கிறோம். கட்டிடம் முக்கியம் வாய்ந்ததல்ல, இந்த கட்டிடத்துக்குள் வாசமாயிருக்கிற தேவனே முக்கியம் வாய்ந்தவர். உதாரணமாக எனக்குள்ளே; இந்த பழைய சரீரம் இந்நாட்களில் ஒன்றில் மடிந்து விழுந்து போகும். ஆனால் அதற்குள் வாசமாயிருக்கிற மனிதன் மடிந்து விழுந்து போவதில்லை. ஏனெனில் தேவனுடைய வல்லமை அதை பற்றிக் கொண்டிருக்கிறது. இன்று காலையில் நாங்கள் தொழுது கொள்ள வந்திருக்கிற இந்த கட்டிடம். அதை எவ்வளவு அழகாக நாங்கள் கட்டினாலும், என்றாகிலும் ஒரு நாள் அது அழிந்து போகும், ஆனால் அந்த கட்டிடத்துக்குள் வாசம் செய்யும் தேவனோ நித்தியமானவராயிருக்கிறார். பிதாவே, உம்மை சந்தித்து, உமக்கு நன்றியறிதலையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க நாங்கள் வந்திருக்கிறோம். ஜனங்களின் இருதயங்களிலிருந்த இந்த கேள்விகளை பார்க்கும்போது, அவர்கள் இதை செய்யலாமா அதை செய்யலாமா என்று வியந்து கொண்டிருந்ததாக நாம் காண்கிறோம். பிதாவே, ஒவ்வொரு கிறிஸ்தவனின் மிருதுவான இருதயத்திலும், அளிக்கப்பட்ட பதில்கள் ஏதாவதொரு வகையில், அவர்கள் சத்தியம் என்னவென்பதை அறிந்து கொள்ள உதவி செய்திருக்குமென்று நம்புகிறேன். கர்த்தாவே, அதை அருளும். நான் சரியான பதில் கூற தவறியிருந்தால், என்னை மன்னித்தருளும். நான் தவற வேண்டு மென்று நினைக்கவில்லை, ஏனெனில் இவர்கள் உம்முடைய பிள்ளைகள். இவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டனர். பிதாவே, நான் சொல்வதன் பேரில் என்னை நியாயந்தீர்ப்பதற்காக இங்கு நீர் நின்று கொண்டிருந்தீர் என்பது போல, எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அளிக்க விரும்பினேன். 111இப்பொழுதும், கர்த்தாவே, வியாதியஸ்தருக்காக உமது சமுகத்தில் வருகிறோம். நாம் விசுவாசிப்பதை மட்டுமே நாம் பெற்றுக் கொள்வோம் என்று வேதம் உரைக்கிறது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒரு சமயம், பிதாவே, இயேசு இவ்வுலகில் இருந்த போது, சீரோபோனிக்கியா தேசத்தாள் அவரிடம் வந்து, “கர்த்தாவே, என் மகள் மேல் இரங்கும், அவள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்றாள். அவர், “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று சொன்னதை நாங்கள் கேட்கிறோம். ஓ, தேவனே, அது எத்தகைய நேரடியான மறுத்தல்! அது மாத்திரமல்ல, அவளை நாய் என்றழைப்பது. அவள் அதைக் குறித்து கோபப்படுவதற்கு பதிலாக, அவள் இனிமையாயும் தாழ்மையாயும், அது உண்மை, ஆண்டவரே என்றாள். ஏனெனில் அது உண்மைதான். அது உண்மை , ஆண்டவரே. ஆனால் நாய்கள் எஜமானின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே“ என்றாள். அதுதான் இயேசு செயல்பட காரணமாயிருந்தது. அவள் பிள்ளைகளின் மேசையிலிருந்து விழும் துணிக்கைளை ஏற்றுக் கொள்ள சித்தம் கொண்டாள். தேவனே, இப்பொழுது அதுவே எங்கள் மனப்பான்மையும் கூட. பிதாவே, நீர் எங்களுக்கு செய்ய விரும்புகிற எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறோம். 112தரிசனங்களைக் காண்பித்து அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த பழைய ஏற்பாட்டின் தேவன் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். பழைய ஏற்பாட்டின் மக்கள் போக விரும்பின அதே பரலோகத்துக்கு என்றாகிலும் ஒரு நாள் தேவனுடைய கிருபையினால் நாங்களும் செல்வோம். ஏனெனில் அதே தேவன் நமது மத்தியில் தம்மை மாறாதவராகக் காண்பித்துக் கொண்டு வருகிறார். பிதாவே, எங்கள் மத்தியில் இன்று காலை வியாதியஸ்தர்களும் தேவையுள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் ஜெப வரிசையில் கடந்து வரப் போகின்றனர். அவர்கள் வந்து, “நீர் எனக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று சொல்லாதிருப்பார்களாக. கர்த்தாவே, அத்தகைய மனப்பான்மை இருக்க வேண்டாம். அவர்கள் “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று தேவன் உரைத்துள்ளதை நினைவுகூர்ந்து இங்கு வருவார்களாக. அதை நீர் வாக்களித்திருக்கிறீர், அவ்வாறு நீர் உரைத்திருக்கிறீர். அவர்கள் பரிசுத்தமான பயபக்தியுடன் வந்து, ஜெபம் ஏறெடுக்கப்பட்டு கைகள் அவர்கள் மேல் வைக்கப்பட்ட மாத்திரத்தில், இந்த சகோதரி, “பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரசன்னத்தினால் அவளை அதிகமாக அபிஷேகித்து அவளுடைய சரீரத்தை ஏறக்குறைய கொன்று போட்டார்” என்று அந்த கேள்வியை எழுதினது போல, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்குவார் என்று விசுவாசிப்பார்களாக. கர்த்தாவே, இன்று காலையில் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் அந்த பலன் கிடைப்பதாக. அதை அருளும். அவர்கள் சுகமடைவார்களாக. அதை நீர் வாக்களித்துள்ளீர் என்றும், நீர் பொய் சொல்ல முடியாது என்றும், வெளிச்சம் தோன்றும் மாத்திரத்தில், இருளும் சந்தேகமும் ஓடிப்போம் என்று சிறிது கூட சந்தேகமுமின்றி அவர்கள் வருவார்களாக. பிதாவே, இதை அருளும். அவர்களுக்காக இப்பொழுது நாங்கள் ஜெபிக்கையில், அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம், இயேசுவின் நாமத்தில். ஆமென். இந்தப் பக்கத்தில் முதலாவதாக ஜெபித்துக் கொள்ளப்பட விரும்புவோர், டெட்டி, மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார்' என்னும் பாடலை வாசிக்கும்போது, கட்டிடத்தில் வரிசையில் நில்லுங்கள். (ஜெபித்துக் கொள்ளப்படுகிறவர்களுக்கு சகோ. பிரான்ஹாம் வழிகாட்டுகிறார் - ஆசி). 113இப்போது, பெருமை கொள்ள விரும்புவோர், இந்தப் பக்கம் மார்பகம், அமெரிக்காவுக்கான டெட்டி இடத்தில் குனிந்து வரிசையாக நிற்கவும் “இப்போது பெரிய இயற்பியல் நெருங்கிவிட்டது.” 114அண்ணன் நெவில்லே... தொடருங்கள், வாருங்கள். நாங்கள் இங்கேயே நிற்போம். எல்லா தேவாலயங்களும் ஜெபிக்கட்டும். மேலும் சகோதரர் நெவில்லும் நானும் இங்கு ஒன்றாக இருப்போம்; அவன் அபிஷேகம் செய்வான்; உடம்பு சரியில்லாதவர்கள் மீது கை வைப்பேன், சரியா...?... இப்போது, அனைவரும் பிரார்த்தனையில் இருக்கிறார்கள்.இப்போது, நாம் என்ன செய்கிறோம்? நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அபிஷேகம் செய்யவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வருகிறோம். இப்போது, நான் உங்களுக்கு வேதத்தை மேற்கோள் காட்டுகிறேன். “உங்களில் யாராவது நோயாளிகள் இருந்தால், அவர்கள் தேவாலயத்தின் மூப்பர்களை வரவழைக்கட்டும், அவர்கள் அவர்களுக்கு எண்ணெய் தடவி, அவர்களுக்காக ஜெபிக்கட்டும். விசுவாச ஜெபம் நோயாளிகளைக் காப்பாற்றும், கடவுள் அவர்களை எழுப்புவார். எந்த பாவம் செய்தாலும் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். உங்கள் தவறுகளை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் குணமடைய ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். இப்போது இந்த பக்கத்தில் மீதமுள்ளவை, நீங்கள் விரும்பும் போது, அந்தக் கோட்டிற்கு கீழே, அந்த இடம், அந்த இடைகழி, நீங்கள் பின்னால் வந்துவிடுவீர்கள். இப்போது இங்கே தேவாலயத்தின் பெரியவர் அபிஷேகம் மற்றும் பிரார்த்தனை செய்வார். நான் பிரார்த்தனை செய்வேன், நோயாளிகள் மீது கைகளை வைப்பேன். இப்போது, நண்பர்களே, பிரார்த்தனை வரிசையில் நிற்கிறீர்களே, நீங்கள் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை நிரூபிக்கும் தருணம் இது. நீங்கள் நலம் பெற வேண்டும். நான் முழு மனதுடன் நம்புகிறேன், அதுதான் என் அம்மாவை இவ்வளவு நேரம் வைத்திருந்தது, (மற்றும் அவர் ஒரு வயதான பெண்) அதை நான் நம்புகிறேன். அவர் என்னிடம் சொல்லும் வரை... அவள் இறந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவன் என்னிடம் சொல்லும் வரை, அவள் இறக்கவில்லை என்று நான் நம்புகிறேன், பார். இப்போது, அவள் போக வேண்டும் என்று எனக்குத் தெரியும், அவள் செல்ல வயதாகிவிட்டாள், மேலும் செல்ல விரும்புகிறாள், செல்ல முயற்சிக்கிறாள். ஆனாலும் நான்-அவர் என்னிடம் சொல்வார் என்று நான் நம்புவேன். இப்போது அவர் என்னிடம் சொல்வார் என்று நான் நம்புகிறேன், பார். இப்போது அவர் இல்லாமல் இருக்கலாம். எனக்குத் தெரியாது, அவர் செய்வார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் செய்வார் என்று நான் நம்புகிறேன், பார். ஆனால் இதுவரை அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. நான் அதை நம்புகிறேன். மற்றும் நீங்கள் என்றால்...?... 115அவர் எனக்குக் காட்டும் அனைத்தையும் நான் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை, அது உங்களுக்குத் தெரியும். சரி, நேற்று நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தேன், என்ன செய்யப் போகிறது என்பதை நான் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன், அது உண்மை என்று கடவுளுக்குத் தெரியும், மேலும் இரண்டு அல்லது மூன்று பேருடன் சரியாக உட்கார்ந்துகொண்டார். ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகு, அது நடந்ததைப் பார்த்தேன். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன், எனக்குள் நடுங்கினேன், பார்? மே... நான் சொன்னேன், “ஒருவேளை அப்படித்தான் நடக்கும் என்று நான் அவர்களிடம் சொல்லியிருக்கலாம்.” ஆனால் நான், “சரி, அதை விடுங்கள். பார்க்கவா?” அதுவும் தினமும் நடக்கும். பார்க்கவா? ஏதோ நடக்கப் போகிறது; நான் தான் அனுமதித்தேன். அது உண்மை என்று கடவுளுக்குத் தெரியும். பார்க்கவா? ஏதோ நடக்கப் போகிறது, அதைக் காட்டுகிறது, சொல்கிறது. எனக்கு ஏதோ தோன்றி, “இந்த வார்த்தையை இப்படிச் சொல்லுங்கள், இது இங்கே நடக்கும்” என்று கூறுவார்கள். பின்னர் நான், “சரி, அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறுவேன். பிறகு நான் பார்க்கிறேன்; இங்கே அது இங்கே முடிந்துவிட்டது. பார்க்கவா? ஆம். சரி, அவரால் பொருள்கள், பொருள், உயிர் இல்லாத ஒன்றைச் செய்ய முடிந்தால், அவருடைய வார்த்தைக்கு நகர்த்தலாம், ஏனென்றால் நாம் அதைச் சொன்னோம், மேலும் அவர் உங்களையும் என்னையும் என்னுடன் இணைக்க முடியும். நீ என்னுடன் இருக்கிறாய்; நீங்கள் என்னுடையவர் - நீங்கள் நோய்வாய்ப்பட்ட என் சகோதரனும் சகோதரியும். “கடவுளின் சக்தி இவரைக் குணப்படுத்தட்டும்” என்று நாம் இந்த வார்த்தைகளைச் சொன்னால், அது ஏன் நடக்க வேண்டும். இப்போது, “இல்லை, எனக்கு சந்தேகம்” என்று சொல்ல முடியாது. அது முன்னோக்கிச் சென்று அதைச் செய்யும். ஆனால் நீங்கள், “சரி, நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று சொல்லலாம், அது நடக்காது. பார்க்கவா? ஆனால் நீங்கள் முன்னோக்கிச் சென்று, “நான் குணமடையப் போகிறேன்” என்ற உங்கள் எண்ணத்திற்கு இணங்கச் சென்றால். நீங்கள் அதை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதை நம்புகிறீர்களா? 116இப்போது அனைவரும் பிரார்த்தனை செய்வோம். எங்கள் பரலோகத் தகப்பன், இந்த இளம் பெண்ணின் மீது கைகளை வைக்கிறார், இந்த இளம் தாய், இந்த மோசமான குளிரால் அவதிப்படுகிறார். விடுங்கள்... எனவே இந்த கைக்குட்டைகள் மக்கள் மீது வைக்கப்படும் மக்களை நீங்கள் குணப்படுத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் கோரிக்கைகளை அவர்களுக்கு வழங்குங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். 117நீங்கள் தங்கியிருப்பதற்கும், இந்த நேரம் முழுவதும் தங்கியிருப்பதற்கும், நாங்கள் இருக்கும் போது தேவாலயத்தில் இப்படிக் காத்திருப்பதற்கும் உங்கள் விசுவாசத்திற்கு ஆழ்ந்த பாராட்டுக்கள். தேவாலயமா? எனக்கு ஒரு சிறந்த இடம் தெரியாது. மேலும் கடவுள், அவர் இப்போது இருப்பதில் நமக்கு இருக்கும் ஆறுதல். நாம் ஒரு கணம், அவர் எவ்வளவு பெரியவர், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்று சிந்திப்போம். அவர் இல்லாமல் நாம் என்ன செய்திருக்க முடியும்? நாம் அவரை எப்படிப் பார்த்தோம், ஒரு விஷயத்தை மட்டும் அவர் நமக்குச் சொல்லவில்லை... அவர் எனக்கு தரிசனங்களைக் கொடுத்தார். நான் இன்று காலை உங்களிடம் கேள்வி கேட்கிறேன், அவர் நிறைவேற்றியதைத் தவிர ஒன்றை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா? அவர் என்ன செய்வேன் என்று சொன்னாரோ, அதையே இந்த நேரத்தில் செய்ய வேண்டும். பிறகு அவர் கடவுள். அப்போது அவர் நம் தந்தை. அவர் நம்மை நேசிக்கிறார். மேலும் அவருடைய சொர்க்கம் எங்கிருந்தாலும், நாம் ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். என்பதை உணர்ந்து கொள்கிறோம். 118நாம் - நாம் பார்க்காத விஷயங்களைப் பார்க்கிறோம். இப்போது, உங்களில் பலர் ஜெபிக்கப்பட்டனர், மேலும் (பார்க்க?), அதற்கு முரணான எந்தவொரு விஷயத்தின் அறிகுறிகளையும் நாங்கள் மறுப்பதால்... பார்க்கிறீர்களா? கடவுள் வாக்களித்த எதையும்... பார், கிறிஸ்தவன் பார்ப்பதில்லை... நீ எப்படியும் உன் கண்ணால் பார்ப்பதில்லை. உனக்கு அது தெரியும். நீங்கள் உங்கள் கண்களால் பார்க்கவில்லை. நீங்கள் உங்கள் இதயத்தால் பார்க்கிறீர்கள். பார்க்கவா? “பார்த்தல்” என்றால், “புரிந்துகொள்வது.” நீங்கள் உங்கள் இதயத்தால் புரிந்துகொள்கிறீர்கள்; எனவே, நம் கண்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கிறோம். பார்க்கவா? கிறிஸ்தவ வாக்குமூலம், கிறிஸ்தவத்தின் முழு கவசம் அதை அடிப்படையாகக் கொண்டது. நாம் காணாதவற்றைப் பார்க்கிறோம், ஏனென்றால் ஆபிரகாம் கடவுளை நம்பியதால், இல்லாதவற்றைப் போல் அழைத்தார். பார்க்கவா? இப்போது நாம் என்ன செய்வது? இப்போது, நீங்கள் அப்படி ஜெபிக்கும்போது, கடவுள் உங்களைக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். இப்போது நீங்கள் வித்தியாசத்தை உணராமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும்... அது-அதுவே இல்லை. பார்க்கவா? நாங்கள் எப்படியும் நம்புகிறோம். 119உங்களுக்குத் தெரிந்திருந்தால், நான் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பிரசங்கத்திற்கு வருவேன், கூட்டத்திலிருந்து பாதி வழியில் செல்வேன் என்று நான் நினைக்கவில்லை. நான் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருந்தேன், எனக்கு காய்ச்சல் வருவது போல் உணர்ந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன், ஏனெனில் நான் சொன்னேன், “நான் கடவுளுக்குக் கட்டுப்பட்டவன். நான் கடவுளை நம்புகிறேன்.” மேலும் நான் அவருடன் சண்டையிட வேண்டியிருந்தது. இன்று காலை இங்கே இறங்க முயற்சித்ததில் அங்குள்ள என் மனைவியும் உன்னிடம் அதையே சொல்லலாம், நான் தொண்டையில் கரகரப்பாக இருந்தேன். நான், “நான் அதை எப்படி செய்ய முடியும்?” ஆனால், நேர்மையாக, நான் இப்போது அற்புதமாக உணர்கிறேன். மேலும் நான்-எனது உரையை எடுத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்று பிரசங்கிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அதுவும் நன்றாக உணர்கிறேன். ஆனால், நீங்கள் பார்க்கிறீர்கள், உங்கள் கண்களால் பார்க்காத விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் அதை உங்கள் இதயத்துடன் பார்க்கிறீர்கள். நீங்கள் அதை நம்புகிறீர்கள், நீங்கள் பார்க்காதவைகளுக்கு நீங்கள் சாட்சியமளிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எதை நம்புகிறீர்கள். ஏனென்றால் அது நம்பிக்கை. “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் சாராம்சம், காணப்படாதவைகளின் ஆதாரம்.” 120இன்று காலை, ஒரு இளம் கிறிஸ்தவர் எனக்கு முன்னால் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன், அந்த நபர் எடுத்த ஒரு முடிவை நான் அறிவேன். மற்றும் நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன். அது யார் என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் இந்த குறிப்பிட்ட கிறிஸ்தவர், ஒரு கூட்டாளியாக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, அவர்கள் நிலைத்திருக்க விரும்புகிற ஒரு முடிவை நான் பாராட்டுகிறேன். கிறிஸ்துவுக்கு விசுவாசமாக. பார்க்கவா? விசுவாசமாக இருப்பதன் மூலம் நீங்கள் அன்பானவரை வெல்வீர்கள். விசுவாசமாக இருப்பது அன்புக்குரியவர்களை வெல்லும் வழி. உங்கள் நம்பிக்கையில் இருங்கள். நீங்கள் கடவுளுடன் சரியாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் எப்போதும் அங்கேயே இருங்கள். அதனுடன் சரியாக இருங்கள். நீங்கள் சரியாக இருந்தால் எதுவும் உங்களை அதிலிருந்து நகர்த்த முடியாது. 121இப்போது நாம் அனைவரும் தவறு செய்யப் போகிறோம். ஞாபகம் வைத்துகொள். நீங்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது, மற்றவரின் தவறைப் பார்க்காதீர்கள். பார், அதைச் செய்யாதே, ஏனென்றால், நீங்களும் தவறு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இந்த நபரை வழிநடத்தும் கிறிஸ்துவைப் பாருங்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். அதுதான் - நாம் பழகுவோம் (பார்க்க?), பிரார்த்தனை. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வேறு ஒருவருக்காக ஜெபிக்கும்போது, அந்த வகையான பிழைத்திருத்தத்தில், நீங்கள் வேறொருவருக்காக ஜெபிக்கும்போது கடவுள் உங்களை மதிப்பார் மற்றும் குணப்படுத்துவார். அது சரி. ஒருவருக்கு ஒருவர் உதவுதல், ஒருவருக்காக ஒருவர் செய்தல், ஒருவருக்கு ஒருவர் இரக்கம் காட்டுதல், ஒருவரையொருவர் புரிந்துகொள்தல் போன்றவற்றின் அடிப்படையில் தான் கிறிஸ்தவம் உள்ளது. இப்போது, உங்கள் அண்டை வீட்டாரின் தவறைப் பார்த்தால், அவர்கள் எங்கே தவறு செய்தார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள், அவர்களுடன் தவறாகப் போகாதீர்கள், ஆனால் அவர்களுக்காக ஜெபிக்கவும். ஜெபித்துக் கொண்டே இருங்கள், கடவுள் அதைப் புரிந்துகொள்வார். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார். 122இப்போது, நான் நம்புகிறேன், அது இறைவனின் விருப்பமாக இருந்தால், பில்லிக்கு ஒரு அமைப்பு கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன், அவர் அனைவருக்கும் ஒரு அட்டையை அனுப்புகிறார். அம்மா இந்த வாரம் நன்றாக இருந்தால்; இப்போது எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த வாரம் அம்மா சரியாகிவிட்டால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் ஒரு நற்செய்தியைப் பற்றி பேச விரும்புகிறேன். அது சரி என்றால், எங்களுடைய விலைமதிப்பற்ற போதகருடன். உங்களால் முடிந்தால் நாங்கள் உங்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்... உங்களால் வர முடிந்தால், உங்களைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் அவரை முழு மனதுடன் நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் இல்லாமல் நாம் என்ன செய்ய முடியும்? இப்போது, நீங்கள் என்ன செய்ய முடியும்? பெரியதாக இருக்கும் எதையும் என்னிடம் சொல்ல முடியுமா? அதைவிட பெரியதை உன்னால் எனக்குக் காட்ட முடிந்தால், நான்-நான்-நான்-நான் பெற்றதை விற்றுவிடுவேன், இதைவிடப் பெரியதை நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும் என்று ஏங்குகிறேன். ஆமாம் ஐயா. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் தம்மைத்தாமே தாழ்த்தி, இறங்கிவந்து, நம்மிடையே குடியிருந்து, நமக்காகச் செய்வார் என்பதை, நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்ற உறுதியுடன் அறிந்துகொள்வது, நான் அறிந்த மிகப் பெரிய காரியம் இதுவே. 123இப்போது, நாம் சரியா இல்லையா என்பதை நாம் எப்படி அறிவோம் (பார்க்க?), ஏனென்றால், அந்த கிறிஸ்தவர்களுடன் அவர் ஆரம்பத்தில் செய்த காரியம், தேவாலயம், மிகவும் செயல்பாடு, பரிசுத்த ஆவியானவர் நகர்ந்த விதம், பிசாசு அவர்களுக்கு எதிராகப் போரிட்ட விதமும், அவர்கள் நின்ற விதமும், அதே அடையாளங்களோடு, அதே அற்புதங்களுடன், அதே கடவுள், அவரைப் பற்றிய தவறில்லாத சான்றாக, இங்கேயே நடக்கிறது. விஞ்ஞான வார்த்தையில் சொல்லுங்கள், அது நடக்கும் முன், வரும் ஆண்டுகளில் அல்லது காலங்களில் நடக்கும் ஒன்றை எப்படி யாராலும் முன்னறிவிக்க முடியும் என்பதை அறிவியல் வழியில் சொல்லுங்கள். சக்தியை எனக்குக் காட்டுங்கள், அது எங்கே இருக்கும், அது நடக்கும் முன் அதை முன்கூட்டியே அறியும். நீங்கள் விரும்பும் எதையும் பின்வாங்கக்கூடிய எந்த மனித மனதையும் என்னிடம் சொல்லுங்கள், மேலும் நீங்கள் எதையாவது பார்க்க முடியும் மற்றும் நடந்ததை முன்னறிவிக்கக்கூடிய எந்த வழியையும் எனக்குக் காட்டுங்கள்-அது நடக்கும். பார்க்கவா? இல்லை. 124எனவே, அவர் கடவுள். பார், அவர் கடவுள். மேலும் அவர் கடவுளாக இருப்பதால், அவருடைய கிருபையின் மூலம் அவர் நம்முடன் வந்து வாழ்கிறார், மேலும் அவர்களுடன் இந்த விஷயங்களை முன்னறிவித்த மனிதர்களைப் போலவே, அவர்கள் முன்னறிவித்தபடியே அவை ஒவ்வொன்றும் நடந்தன. இப்போது, அதே கடவுள் நம்முடன் இருக்கிறார், முன்னறிவித்து, அவர் அங்கு செய்த அதே விஷயங்களைக் காட்டுகிறார். ஏன், நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நாம் மேகத்திலிருந்து மேகத்திற்குச் செல்வது போல, விண்வெளியில் நடப்போம், கிட்டத்தட்ட, ஏனென்றால் அது நமக்குத் தெரியும். நாம் மரணத்திலிருந்து ஜீவனை அடைந்துவிட்டோம் என்பதை அறிவோம். நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறிவோம். நாம் பரலோகத்திற்குச் செல்கிறோம் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் கடவுள் வாக்குறுதியளித்தார், மேலும் இங்கே அவர் நம்முடன் சரியாகச் செல்கிறார் - நாம் அவரைப் பார்க்கும் விதத்தில். 125நாம் அவரை பார்க்கிறோம். நான் அவரை எப்படி பார்ப்பது? உன்னை பார்க்கும் போது. நீங்கள் அவரை என்னில் காண்கிறீர்கள்; நான் அவரை உன்னில் காண்கிறேன். பார், அவர் உங்களுக்காக என்ன செய்கிறார் என்பதை நான் காண்கிறேன். இப்போது, இங்கே அவர் எனக்கு வார்த்தையை வெளிப்படுத்துவதை நான் காண்கிறேன். நீங்கள், “என்னில் அவரை எப்படி பார்க்க முடியும்?” சரி, பார், அவர் இங்கே எனக்கு வார்த்தையை வெளிப்படுத்துகிறார். நான் அதை அங்கே பார்க்கிறேன், அவர் அதை உங்களுக்குக் கொடுக்கிறார், நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள். பார்க்கவா? பின்னர் நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள், “அவர் எப்படி இருந்தார், அது எப்படி வந்தது?” பிறகு நீங்கள் திரும்பி வாருங்கள், அது சரி என்று கண்டுபிடியுங்கள். பார்க்கவா? எனவே நீங்கள் அவரை என்னில் காண்கிறீர்கள்; நான் அவரை உன்னில் காண்கிறேன். மேலும் சூரிய உதயத்தில் அவரைக் காணலாம். சூரிய அஸ்தமனத்தில் நாம் அவரைக் காணலாம். பூக்களில் அவரைக் காணலாம். நாம் அவரைப் பார்க்க முடியும்... நாம் எங்கும் அவரைக் காணலாம், ஏனென்றால் நாம் இந்த பூமிக்குரிய நிலையின் கீழ் கூறுகளிலிருந்து, கடவுளின் மகிமையின் இந்த உயர்ந்த உறுப்புக்குள் கடந்துவிட்டோம், அதனால் அவருடைய அழகைக் காணலாம். சில நாட்களுக்கு முன்பு, நான் இந்தப் பயணத்தில் இருந்தபோது, அலாஸ்கன் நெடுஞ்சாலையில், நான் வேட்டையாடச் சென்றபோது, அங்கே திரும்பி வந்து, “ஏன்? ஏன்?” கடவுள் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இப்போது, எல்லா இடங்களிலும் நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆனால் கடவுளுக்குத் தெரியும். 126இப்போது, நாளை நான் புறப்பட வேண்டும், சகோதரர் ராய் அங்கேயே திரும்பிச் செல்கிறோம், நாங்கள் அனைவரும், நாளை கொலராடோவுக்குப் புறப்பட வேண்டும், எங்கள்... ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் வேட்டையாடப் போகிறோம். கூட்டங்கள், செல்ல. அம்மா, அம்மாவின் நிலை காரணமாக என்னால் போக முடியாது.இப்பொழுது, பரிசுத்த ஆவியின் இரக்கத்தைப் பாருங்கள். அது அவருக்கு வெகு காலத்திற்கு முன்பே தெரியும். அதனால் என்னைப் போக விடாமல், அவர் திரும்பி, எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, என்னை அங்கே அனுப்பினார், மேலும் கொலராடோவில் என்னால் செல்ல முடியாத வேட்டையாடும் பயணத்தில் ஒன்றை எனக்குக் கொடுத்தார் (பார்க்க?), ஏனெனில் அவை கொலராடோவில் இல்லை. அது போல. திரும்பி, கொலராடோவுக்கான இந்த பயணத்தில் அவர் என்னை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை அறிந்து, அதை ஒரு பார்வை மூலம் எனக்குக் கொடுத்தார். நன்மை மற்றும் கருணை பற்றி பேசுங்கள். பிறகு ஏன்? என் அம்மா கஷ்டப்படப் போகிறார் என்று நீண்ட காலத்திற்கு முன்பே அவருக்குத் தெரியும். என் அம்மா மருத்துவமனையில் இருப்பார் என்று அவருக்குத் தெரியும். அவர் அதை அனுமதித்தால், எனக்கு எதுவும் தெரியாத நல்ல நோக்கத்திற்காக அவர் அதைச் செய்கிறார். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்களுக்கு எல்லாமே நன்மைக்காக ஒன்றாக வேலை செய்வதை நான் அறிவேன்.நாம் எப்போதாவது ஒருமுறை நின்று, தேவாலயத்தில், நம் கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால்... உங்களை நிறுத்திவிட்டு, உங்கள் குழப்பங்களிலிருந்து விலகி, அவருடைய ஆவியின் பிரசன்னத்தில் சில நிமிடங்கள் நிற்கவும், அவர் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். எல்லா இடங்களிலும். அவர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள்? 127இப்போது, அம்மா அங்கே கிடக்கிறார்கள், நான் அவளைப் பற்றி ஆச்சரியப்படுகிறேன். அவளுக்கு பக்கவாதம் வந்தபோது அவன் ஏன் அவளை விடவில்லை? அவள் ஏன் அப்போதே இறக்கவில்லை? ஆனால், பார், அதை முன்னரே அறிந்திருந்தும், நான் உறுதியளித்தேன் என்று தெரிந்தும்... நான் கொலராடோவுக்குப் போகிறேன், அப்படிப்பட்ட காடுகளுக்குள் செல்வது எனக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து, அவர் திரும்பி வந்து எனக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். சிறந்த ஒன்று, என்னை அங்கு அனுப்பிவிட்டு, நான் என்ன பெறப் போகிறேன், அதைப் பற்றிய அனைத்தையும் என்னிடம் சொன்னேன், 'நான் கிளம்புவதற்கு முன்பே; மக்கள் எப்படி உடையணிந்து இருப்பார்கள், நாங்கள் என்ன செய்வோம், அதைப் பற்றி எல்லாம் சொன்னார். பிறகு வருகிறேன், எல்லாவற்றையும் சொன்னேன். பின்னர் அவர் மேலே சென்று அது நடப்பதைப் பார்க்கிறார், திரும்பி வாருங்கள், அது சரியாகவே இருக்கிறது. சரியாக, பாருங்கள், அம்மா வெளியே இருப்பார் என்று தெரிந்து, அவள்-அவள் இந்த நேரத்தில் உடைந்து போயிருப்பாள், என்னால் இந்த மற்ற பயணத்தை மேற்கொள்ள முடியாது. பார்க்கவா? நாங்கள் குறைய மாட்டோம்... அப்போது எனக்கே புரியவில்லை. ஆனால் நீங்கள் அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்து அவரைப் பார்த்தால், அவர் எல்லாவற்றையும் சரியாக வழிநடத்துகிறார். பார்க்கவா? அவர் எல்லாவற்றையும் சரியாக, படிப்படியாக வெளிவரச் செய்கிறார். 128மறுநாள் நான் ஒரு இளம் மந்திரியின் அருகில் நின்று கொண்டிருந்தேன், அவர் சில கனவுகளைக் கொண்டிருந்தார், அவர் கனவுகளை என்னிடம் கொண்டு வந்தார். விளக்கம் வந்ததும், நாங்கள் அங்கேயே நின்றோம், பில்லியும் நானும் இந்த அமைச்சரும் ஒன்றாக நின்றோம். அங்கே அது இருந்தது. ஏன், அது முடிந்தவரை சரியாக இருந்தது. அந்த மனிதன் எப்படி பிரமிப்புடன் அங்கே நின்றான், எப்படி பரிசுத்த ஆவியானவர் அந்த விஷயங்களை வெளிப்படுத்தினார், அவரை நேராக திரும்பி அழைத்து வந்து, அதைச் செய்ய வேண்டிய இடத்தில் சரியாகக் காட்ட முடியும். ஓ, நான் உங்களுக்கு சொல்கிறேன்; அவர் கடவுள். அவர் - அவர் வசிக்கிறார் ... அவர் கடவுள். 129உங்களில் பலர் தியாகம் செய்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் காதலன் அல்லது தோழிகளை விட்டுவிட்டீர்கள், நீங்கள் வீடுகளை விட்டுவிட்டீர்கள், மற்றும் பலவற்றை விட்டுவிட்டீர்கள், மேலும் உங்களில் பலர் நீண்ட காலமாக உங்களுக்குத் தெரிந்த கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள், விஷயங்கள் மற்றும் பழைய நண்பர்களிடமிருந்து வெளியே வர வேண்டியிருந்தது. , இறைவனின் வழியில் நடக்க வேண்டும். அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். அதைச் செய்வது அற்புதம் என்று நினைக்கிறேன். இப்போது, நீங்கள் சுவிசேஷ ஒளியைப் பார்த்திருப்பதால், அதுவே உண்மை, நீங்கள் - அந்த ஒளியில் நடப்பீர்கள். குழந்தைகளே, நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் எங்கு சென்றாலும், தீமையின் தோற்றத்தைத் தவிர்த்து, கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். நீங்கள் வாழும் வரை, அந்த சாலையில் சரியாக இருங்கள். அதிலிருந்து நகர வேண்டாம், அது நிச்சயமாக நல்ல பலனைத் தரும். அது நித்திய ஜீவன். 130நான் அம்மாவை எப்போது பார்க்கிறேன் - அவள் எப்போது... சில நிமிடங்களில் அவள் தன்னை அடைய முடியும். நான், “அம்மா, அம்மா, நீங்கள் சொல்வதைக் கேட்கிறீர்களா?” சில நேரங்களில் அவள் அங்கேயே படுத்திருக்கிறாள், அவள் மாட்டாள். சிறிது நேரம் கழித்து அவள், “உம்” என்று தலையை அப்படியே ஆட்டுவாள். நான் சொல்வேன், “நீ...” நான் மறுநாள் இரவு சொன்னேன்; நான், “அம்மா, என்னைத் தெரியுமா?” அவளுக்கு என்னைத் தெரியாது. நான், “இங்கே நிற்பவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்” என்றேன். இல்லை, அது அவளுக்குத் தெரியாது. நான், “அம்மா, உங்களுக்கு இயேசுவைத் தெரியுமா?” மற்றும்... ஓ, என். தன் குழந்தையை மறந்துவிடலாம், ஆனால் அவளால் இயேசுவை மறக்க முடியாது. அவ்வளவுதான். ஓ தம்பி.நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்திற்கு வரும் வரை, அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவரை அறிவதே வாழ்க்கை. அவரை அறிவதே இந்த வாழ்வின் ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, வானத்தைத் தாண்டி ஒரு வீடு கிடைத்ததை அறிந்த திருப்தி. அது என்ன, எனக்குத் தெரியாது. அது உங்களுக்கு எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, 'எனக்குத் தெரியாது, நானே. ஆனால் கடவுளின் கிருபையால் என்றாவது ஒரு நாள் நாம் அங்கு பயணிப்போம் என்பது எனக்குத் தெரியும். 131இந்த வாரம் எனக்காக ஜெபியுங்கள். எனக்கு அது தேவை. இப்பொழுது, நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நான் உங்களுக்காக ஜெபிப்பேன். இறைவன் சித்தமாக இருந்தால், அடுத்த ஞாயிறு உங்களை சந்திக்கிறேன். இன்றிரவு சேவையை நினைவில் கொள்க. சாத்தியம், இன்றிரவு அல்லது வேறு எதையும் அமைத்துவிட்டு, அம்மாவுடன் வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், நான் இன்றிரவு உங்களுடன் வருவேன்.இப்போது, சகோதரர் நெவில், எங்கள் மதிப்புமிக்க போதகர், இங்கே வாருங்கள். எப்படி நான் நிச்சயமாக... அங்கே—வீட்டுக்காரர்களைத் தவிர வேறு யாரும் இங்கு இல்லை, உங்களுக்குத் தெரியும். நாம் அனைவரும் வீட்டு மக்கள் என்று அழைக்கிறோம். இந்த நற்செய்தி சத்தியத்திற்கான சகோதரர் நெவில்லின் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். மக்கள் முன் அவரது விசுவாசத்தையும் நேர்மையையும் நான் பாராட்டுகிறேன். மறுநாள் அவர் பேசும்போது, நான் அதை ஒருபோதும் கவனிக்கவில்லை, ஆனால் அவர் தூண்டுதலின் கீழ், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் என்னை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்தார். அப்போது அவர் என்னை அழைக்கவில்லை, அதுதான் பரிசுத்த ஆவியானவர். அதனால் கடவுளுடன் ஆழமான ஆழம் மற்றும் உயர்ந்த உயரங்களை நகர்த்துவதற்கு எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. சகோதரர் நெவில், நான் உங்களைப் பாராட்டுகிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார். நான் உன்னை மீண்டும் பார்க்கும் வரை, கடவுள் உன்னுடன் இருப்பார்.